போஸ்டர்ர்ர்...

ரொம்ப நல்லவங்க...

தவித்த வாய்க்கு தண்ணீர் தருவதற்காக, யாரோ ஒரு புண்ணியவான், சென்னை செங்குன்றம் பகுதியில் தண்ணீர் தருவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். சில நாட்கள் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. நிறைய பேர் தண்ணீர் குடித்து தாகம் தீர்ந்து சென்றனர்.

திடீரென யாரோ ஒரு புண்ணியவான் தண்ணீர் பிடித்துக் குடிக்க பயன்பட்டுக் கொண்டிருந்த, சங்கிலியால் கட்டப்பட்டிருந்த டம்ளரையும், தண்ணீர் வரும் குழாயையும் திருடிச் சென்றுவிட்டார். ரெண்டையும் விற்றால் அதிகபட்சம் கால் கிலோ பேரீச்சம்பழம் தான் கிடைத்திருக்கும். ஆனால் அவர் செய்த இந்த நல்ல காரியத்தால் இப்போது அங்கு தண்ணீர் தர்மம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கான காரணம் எழுதிப்போடப்பட்டுள்ளது.

உள்ளத்தில் நல்ல உள்ளம்...

சரியான நேரத்தில் ரத்தம் கிடைக்காததால் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரத்தம் கிடைக்காததால் தள்ளிப்போகும் அறுவை சிகிச்சைகள் அநேகம். ரத்த தானம் குறித்து, பிரச்சாரம் மேற்கொண்ட போதும், அதிக விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லவேண்டும். இந்த நிலையில் எப்போது கேட்டாலும் நான் ரத்தம் கொடுக்க தயார். எனது ரத்தம் இந்த குரூப் என்று டி. வடிவேல் என்பவர் தனது மோட்டார் பைக்கில் எழுதிப்போட்டுள்ளார். கட்டாயம் இவரைப் பாராட்ட வேண்டும்.

என்னமா படிச்சிருக்காங்க...

எதையுமே ஜாலியாக எடுத்துக் கொள்ளும் மணமக்கள் போலும் இவர்கள். மணமேடையில் உள்ள இவர்களது பெயர்களுக்கு பின்னால் ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்கள் அனைத்தையும் பிச்சுப்போட்டு ஒட்டி வைச்சுருக்காங்க... பார்க்கிறவங்க மணமக்கள் ஏதோ நிறைய படிச்சுருக்காங்கன்னு நினைப்பாங்க தானே...

பொருத்தமில்லாத படம் போடலாமா?

எத்தனை ஆண்டுகளானாலும் மறக்க முடியாத சோகத்தை சுமந்து கொண்டிருப்பது தான் சுனாமி. எட்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளன்று சுனாமியால் பலியான பல்வேறு உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் இன்று (26/12/12) நடைபெற்றது.
அம்மாவின் ஆணைக்கிணங்க இந்த நிகழ்ச்சியை நடத்துவதாக பேனர் கட்டிய அதிமுகவினர், பேனரில் முதல்வர் ஜெயலலிதாவின் சிரித்த முகத்தை போட்டதற்கு பதிலாக, சாதாரணமான படத்தை போட்டு இருக்கலாம், அல்லது படமே போடாமல் கூட விட்டிருக்கலாம். இந்த சிரிப்பு சோகத்தின் கனத்தை குறைத்து மதிப்பிடும் என்பதை இனியாவது உணர்வார்களா.?

அழுவதா...சிரிப்பதா...

இன்றைய தலைமுறை ஒரு பக்கம் கல்வியிலும்,தொழில்நுட்பத்திலும் கலக்கிக்கொண்டு இருக்கின்றது. இன்னொரு பக்கம் எதற்கும் கவலையில்லாமல் இருக்கிறது. ஒரு பொது இடத்தில் காதலிக்க ஆட்கள் தேவை என்றும், இப்போதைக்கு காதல் செய்ய தயராக உள்ளவர்கள் என்று ஏழு பேர் பெயரையும் எழுதி போட்டுள்ளனர். இதை யார் எப்படி எடுத்துக்கொண்டாலும் இவர்களைப் பெற்றவர்கள் நிச்சயமாக சந்தோஷமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Dinamalar.com



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top