Exam (2009)- விமர்சனம்


ரொம்ப வித்தியாசமான படம் பார்க்கனும்னு ஆசை இருக்கா...? நீங்க ஒரு அறிவு ஜீவியா...? படம் பார்க்கும்போது ரொம்ப சஸ்பென்ஸ் வேண்டுமா ? அப்ப வாங்க நாம 'எக்ஸாம்' (Exam) -ன்னு ஒரு ஹாலிவூட் படம் பார்க்கலாம்.

படத்தோட கதை என்னனா ...

மிகவும் திறமை வாய்ந்த எட்டு நபர்களை இறுதி தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

ஜன்னல்கள் இல்லாத ஒரு அறை. அவர்களை அந்த அறையில் தனித்தனி டேபிளில் அமர்த்தி அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பேப்பர் கொடுக்கப்படுகிறது. அதில், ஒவ்வொரு நபருக்கும் ஒரு எண் எழுதப்பட்டிருக்கிறது.

எட்டுபேரும் சென்று அமர்ந்தபின், உள்ளே ஒரு செக்யூரிட்டி வந்து காவல் நிற்கிறார். அவருடம் ஒரு துப்பாக்கி இருக்கிறது.

அதன் பிறகு தேர்வு கண்காணிப்பாளர் சாலமன், தேர்வு பற்றிய விதிமுறைகளை விளக்குகிறார்.

அவர்களுக்கு கொடுக்கப்படும் நேரம் 80 நிமிடங்கள்.

விடை அளிக்கவேண்டியது ஒரே ஒரு கேள்விக்கு.

அவர்கள் மூன்று விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் அல்லது அவர்கள் அந்த தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்

  1. கண்காணிப்பாளரிடமோ அல்லது செக்யூரிட்டியிடமோ பேச முயற்சித்தால் தேர்வெழுதும் தகுதியை இழக்க நேரிடும்.

  2. அந்த அறையை விட்டு வெளியே சென்றாலும் தகுதி போய்விடும்.

  3. எக்ஸாம் பேப்பரை பாழ் செய்பவர்கள் வெளியே அனுப்பப்படுவார்கள். (ஆனால் பாழ் செய்தல் என்பது என்ன என்று விளக்கப்படுவதில்லை)

கண்காணிப்பாளர் சுவரில் இருக்கும் கடிகாரத்தை ஆன் செய்து விட்டு வெளியே சென்றுவிடுகிறார்.


கொடுக்கப்பட்ட பேப்பரில் ஒரு எண் தவிர வேறு ஏதும் எழுதப்படவில்லை. பேப்பரை திருப்பிப்பார்த்தால் அதில் ஒன்றுமில்லை. கண்முன் இருக்கும் வெள்ளைத்தாளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பது யாருக்கும் புரிவதில்லை.

கேள்வி எங்கே?

கேள்வி தெரிந்தால் தானே விடையைப் பற்றி யோசிக்கமுடியும்?

ஆரம்பக்கட்ட குழப்பத்தில் ஒருவர் கொடுக்கப்பட்ட பேப்பரில் 'I believe I deserve...' என்று எழுத அவர் அந்த அறையை விற்று வெளியேற்றப்படுகிறார்.

பாத்திரப்படைப்புகள்

அனைவரதும் பாத்திரப்படைப்புகள் பலவற்றை சொல்வது போல உணர்ந்தேன். நுணுக்கமான உணர்வுகள், குணாம்சங்களை கொண்ட பாத்திரங்கள்.
Luke Mably as White
Adar Beck as Dark
Chris Carey as Guard
Gemma Chan as Chinese Girl
Nathalie Cox as Blonde
John Lloyd Fillingham as Deaf
Chukwudi Iwuji as Black (credited as “Chuk Iwuji”)
Pollyanna McIntosh as Brunette
Jimi Mistry as Brown
Colin Salmon as Invigilator

Director: Stuart Hazeldine
Writers: Stuart Hazeldine, Simon Garrity (story)

கிளைமாக்ஸ் வரை எடுத்துகொண்டு போகும் விறுவிறுப்பு தான் படத்தின் பெரிய பிளஸ்.
நம் யோசிக்கும் சில விசயங்களும் படத்தில் வருவதால் இன்னும் சுவாரஸ்யம்.

செக்யூரிட்டி வைச்சிருக்கற துப்பாக்கியை.. ஒரு கேரக்டர் எடுக்கற சீன் செம.. ஒவ்வொரு சீனும்.. நம்முடைய எதிர்பார்ப்பையும்.. பிரஷரையும் அதிகரிக்குது..

ரொம்ப லோ பட்ஜெட்டில் எடுத்த படம்...ஒரு ஹால் அவ்வளவுதான்...அந்த அறையில் சுவாரஸ்யத்தை நுழைப்பது இயக்குனரிள் அறிவுத்திறைமைக்கு சான்று!

ஒரு அறைதானே... ஒளிப்பதிவாளருக்கு என்ன பெரிய வேலை என்று நினைக்காதீர்கள். படம் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும்!


நான் சில முக்கிய காட்சிகளை மட்டுமே இங்கு உங்களூக்காக சொல்லியுள்ளேன். இன்னும் பல் சுவாரஸ்யங்கள் இப்படத்தில் அடங்கியுள்ளது.

படம் ஓடின ஒன்னரை மணிநேரமும் ஒரே ரூமுக்குள்ள நடக்குது.. செக்யூரிட்டி, டெஸ்ட் நடத்தறவரை சேர்த்து பத்தே கேரக்டர்.. படம் தீயா ஓடுது.. படம் ஆரம்பிச்ச 10வது நிமிசத்துல இருந்து.. அங்கே 9வது ஆளா நாமலும் உட்கார்ந்துட்டு கொஸ்டின் யோசிச்சுட்டு இருக்கறமாதிரி ஃபீலிங்..

அப்பாடா.. ஒரு வழியா என்ன கேள்வி கேட்டானுங்கன்னு எனக்குத் தெரிஞ்சிடுச்சு..

நீங்களும் கெஸ் பண்ணுங்களேன்.. அவங்களுக்கு கேட்கப்பட்ட கேள்வி என்ன?

பின்னூட்டத்துல சொல்லுங்க.. :-)

கோழி இடும் முட்டைகள் :
Exam - வித்யாசமான படம். ரசித்து பார்த்தால் ருசி அதிகம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். ஒரே ஒரு வோட்டு ப்ளீஸ். நன்றி!!!
Thanks : Karundhel & Jackiesekar who inspired me to see this movie.



1 comments:

Unknown said...

இரண்டு வருடம் முன்பே ஒரு பதிவில் இந்த விமர்சனத்தை படித்து விட்டேன்.இருந்தாலும் மற்றவர்களின் ஏங்குதலுக்காக முடிவை விட்டு விடுகிறேன்.படத்தை நம்மூர் மொழியில் பார்க்க காத்து இருக்கிறேன்.பதிவுக்கு நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top