புத்தாண்டு வாழ்த்துக்கள்

வருகைதரும் புத்தாண்டே
வளமையுடன் தோன்று - உன்
வரவினில் எம் நம்பிக்கை
விழுதுகளை ஊன்று!
இருகரங்கள் நீட்டியுனை
வரவேற்றோம் ...



எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்



என் அம்மாவுக்கு சமர்பிக்கிறேன்

இந்த வருடத்தின் கடைசி இடுக்கையை என் அம்மாவுக்கு சமர்பிக்கிறேன்.

உலகிலேயே...
மிகவும் அழகானது பூ
மிகவும் அதிசயமானது தாஜ்மஹால்
மிகவும் பிரகாசமானது சூரியன்
மிகவும் குளுமையானது நிலவு
மிகவும் தெளிவானது நதி
மிகவும் இனிமையானது தென்றல்
ஆனாலும்...
இவை எதுவும் ஈடு இல்லை
எனது அம்மாவின்
எல்லாம் வல்ல அன்பிற்கு!


நன்றி - உணர்வுகள்


என் விரலில் பட்ட
காயத்திற்கு
மருந்துவைத்து கட்டும்போது
தெரிகிறது...
அம்மாவின் முகத்தில்
வலி

நன்றி - நிலா

முகம் தெரியாதான் இந்த நண்பனின் அம்மா கவிதையை பிரசுரம் செய்வதில் எனக்கும் பெருமையே.



திரு திரு துரு துரு - திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் தொழில் நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்கு வெகு குறைவே. சமீபத்தில் வெளிவந்த ஒரு படம். திரு திரு துரு துரு. இதனை இயக்கியவர் ஒரு பெண், நந்தினி. சத்யம் சினிமா தியேடர்காரங்க தயாரித்த இந்த படம், சினிமா ரசிகர்களின் ரசனைக்கேற்ப தந்திருகிறார்கள்.

படத்தோட கதை என்னனா :

இயக்குநர் மௌலியின் விளம்பர கம்பனியில் வேலை பார்க்கும் நமது ஹீரோ அஜ்மல். மெளலிக்கு பிள்ளைகள் இல்லாததால் செல்லப் பிள்ளையாய் அஜ்மல் இருக்கிறார். அவனுடன் வேலை பார்க்கும் பெண் நம்ப ஹீரோயினி ரூபா. ஹீரோவின் அஜாக்ரதையினால் ஒரு பெரிய ப்ராஜெக்ட் கை நழுவி போக - அதை இழுத்து பிடிக்க இருவரும் முயற்சிகிறார்கள்.


அது ஒரு குழந்தைகளுக்கான ப்ராஜெக்ட். இவர்கள் தேர்வு செய்த குழந்தை உடல் நலம் சரியில்லாத காரணத்தால் வேறு ஒரு குழந்தையை இவர்கள் உடனடியாக ஏற்பாடு செய்ய ஹீரோ தேடும் போது ஒரு அழகான குழந்தையை பார்க்கிறான். அந்த குழந்தையின் தாயிடம் அனுமதி கேட்டு... துரத்த... அவள் ஒரு ஆட்டோவில் அடிபட்டு மயக்கமாக - ஹாஸ்பிடலில் சேர்த்து - குழந்தையுடன் ஷூட்டிங் வந்துவிட்டு திரும்பி சென்று பார்க்க - அவள் இல்லை. அதன் பிறகு குழந்தை ஹீரோவிடம்.

மௌலியிடம் சொல்லாமல் குழந்தையை இவனுடன் வைத்திருந்த விஷயம் நாயகியிடம் சொல்ல - உதவிக்கு இவளும் இவனுடன் தங்கி - ஷூட்டிங் தொடர்கிறார்கள். குழந்தையின் பெற்றோர் அக்ரீமென்ட் பேப்பரில் கையெழுத்து போட்டு தரவேண்டும் என்று விளம்பர கம்பெனிகாரர்கள் கேட்ட - அதன் பின்னர் கதை வேறு ஒரு பாதையில் பயணிக்கிறது.

குழந்தையின் பெற்றோரை தேடி பிடிக்க இருவரும் குழந்தையுடன் பயணிகிரார்கள். இதனிடையில் இவர்கள் இருவர்க்கும் இடையில் மெல்லிய காதல் வளர ஆரம்பிகிறது.

காணாமல் போனவள் குழந்தையை திருடிவிற்கும் பெண் என்று தெரிய வர - இன்னொரு பக்கம் அந்த குழந்தையின் உண்மையான பெற்றோர் தேடி அலைய - ஹீரோவின் தேடுதல் அறிந்த திருட்டு கும்பல் - அவனிடம் இருந்து குழந்தையை கடத்த முயற்சிக்க - இவர்களிடம் இந்த குழந்தை என்ன ஆனது? ஹீரோ அந்த ப்ரொஜெக்டை சக்சஸ் ஆகினரா என்பது தான் மீதி கதை.

படத்துல என்னை கவர்த்தவைகள் பல...

  • ஒளிப்பதிவாளர் சுதிர் பாராட்ட பட வேண்டியவர். துல்லியமான ஒளிப்பதிவு + கலர்.

  • படத்தின் மிக பெரிய பிளஸ் இதன் டைரக்டர் நந்தினி. ரசிக்கும்படியான நல்ல ஒரு காமெடி படத்தை எடுத்த இவருக்கு என் பாராட்டுக்கள்.

  • குழந்தை - குழந்தையை பார்த்து தான் படத்துக்கு பெயர் வைத்தார்களோ ..? அவளவு அழகு.

  • அஜ்மல் - பொறுப்பில்லாத இளைஞனாய் அலட்டிகொள்ளாமல் நடித்துள்ளார். காமெடியும் நன்றாக வருகிறது. ரூபாவுடன் அவர் செய்யும் செயல்கள் யாவுமே அருமை.

  • ரூபா - முதலில் ஒரு மாதிரி இருக்கிறார். படம் போக போக நம்மையும் அவர் மேல் காதல் கொள்ள வைக்கிறாள்.

  • மெளலி - ஒரு அற்புதமான நடிகர் என்பதை இன்னொரு முறை நிரூபித்துள்ளார். அவரது கம்பெனி வேலையாட்களின் பெயர்களை மாற்றி சொல்லி சொல்லி நம்மை சிரிக்க வைக்கிறார். டென்ஷனான நேரத்திலும் ஜோக்கடித்து கொண்டே, முகத்தில் மட்டும் டென்ஷனை காட்டும் காட்சிகள் அருமையான நடிப்பு.

  • இசை மணி ஷர்மா - சுமார். தீம் மியூசிக் - படத்தோடு பார்க்க நன்றாக உள்ளது.

திரு திரு துரு துரு - குடும்பத்தோடு பார்க்க கூடிய படம்

நல்ல பதிவு பலரை சென்றடைய ஒரு வோட்டு போட்ட போதும் எனக்கு. நன்றி. மீண்டும் வருக!!!



VERTIGE - ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்

நண்பர்கள் கூட இருக்கும் போது சில நேரங்களில் நாம் துணிந்து எந்த செயலையும் செல்வோம். வித்தியாசமா ஏதாவது செய்வது அல்லது திரில்லா ஏதாவது செய்வது என நம்மில் பலருக்கும் சில நேரங்களில் தோணுவது உண்டு. அதனால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள் பற்றி அப்போது யோசிக்காமல் அதன் பிறகுதான் யோசிப்போம்.

நான் நேற்று இரவு பார்த்த ஒரு பிரெஞ்சு படமும் இந்தவகையில் வருவதே. படத்தின்பெயர் வேர்டிஷ் "VERTIGE". ஹை லேன் (High Lane) என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியானது.
நிறைய திரில் + கொஞ்சம் ஆக்சன் + கொடூரம் நிறைந்த படம் இது.

படத்தோட கதை என்னனா :

இதுவரை காணாத இடத்திற்கு நண்பர்களுடன் ஒருநாள் பயணம். இது தான் கதையின் கரு. ஐந்து நண்பர்கள் தங்கள் விடுமுறைக்கு வெளிசுலா நாட்டில் இருக்கும் ஒரு மலை பிரதேசத்திற்கு செல்கிறார்கள்.

மலை அடிவாரம் சென்று, பாறைகள் வழியாக, ஏறி தொங்கும் பாலாம் வழியாக இரண்டு மலைகளுக்கும் இடையில் கடந்து வருவது. காலையில் சென்று மாலை திரும்பி வருவது இவர்களின் பிளான்.

இவர்களில் முன்னால் காதல் ஜோடிகள் ஓன்று வில்லியம்(Raphael Lenglet) & சலோ (Fanny Valette). பயந்த சுபாவம் உடையவன் ஒருவன் லுகே(Johan Libereau). இவர்களை வழி நடத்தி செல்லும் துணிச்சலான நண்பன் பிரெட்(Nicolas Giraud). இவர்களுடன் கரின் (Maud Wyler) என்பவளும் வருகிறாள்.

பிரெட்டின் அசத்திய துணிச்சலால், இவர்கள் ஐவரும் அரசால் தடை செய்யப்பட்ட அந்த மலைக்கு பாதைக்கு வருகிறார்கள். மலையில் ஏறும் போது, இவர்களுக்கு பாதிவழியில் தான் புரிகிறது - இவர்கள் வந்த வழி தவறு என்று. அதிலிருந்து அவர்களுக்கு பிரச்சனைகள் ஆரம்பிகிறது.

என்ன பாதிரியான பிரட்சனைகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்? அதில் இருந்து அவர்கள் எப்படி சமாளிகிறார்கள் என்பது தான் படத்தின் கதை.

படத்துல என்னை கவர்த்தவைகள் பல...

ஒரு சிறிய கதையை தன் சிறப்பான திரைக்கதையால் மிரட்டியிருக்கிறார் டைரக்டர் அபெல் பெர்ரி (Abel Ferry). முதல் ஒருமணி நேரம் நம்மை இருக்கையில் கட்டிபோட்டுவிடுகிறார்கள்.

வெனிசுலாவின் மலை அழகும் நகர்ந்து செல்லும் பனி + இரவு நேர மழை காட்சிகள் + மேகங்களும்... கொள்ளை அழகு. சபாஸ்! அட அட ... என்னமா கேமிரா புகுந்து விளையாடியிருகிறது...! கேமிரா மேனுக்கு ஒரு சலாம்!

அந்த பெரிய தொங்கும் பாலத்தின் மீது நடக்கும் காட்சிகள் நம்மை ஒரு வழி செய்யும் என்பதில் ஐயமில்லை.

பயந்து பயந்து வெளியே காட்டிகொள்ளாமல் வரும் லுகே - அவனின் நடிப்பும் ஆஹா. அதுவும் பாறைகளில் ஏறும்போது அவனுடன் சேர்ந்து (நாம்) நானும் பயணித்தேன், அதே உணர்வுடன்.

பின்னணி இசை பற்றி இங்கே குறிப்பா சொல்லியே ஆகணும். தனியே இந்த படத்த பார்த்த போது சான்றே பயந்து போனேன். அற்புதமான பின்னணி இசை சேர்ப்பு.

ஆன்டன் (Justin Blanckaert) கதையில் வரும்போது படத்தின் நிறம் மாறுவது அருமை. என்ன ஒரு கொடுரம்!?

ஹை லேன் - பார்க்க வேண்டிய திரில் படம்.


யூ டுயுபில் ட்ரைலர் பார்க்க இங்கே தொடுக.

நல்ல பதிவு பலரை சென்றடைய ஒரு வோட்டு போட்ட போதும் எனக்கு. நன்றி. மீண்டும் வருக!!!



வேட்டைகாரனிடம் சில கேள்விகள்

தவமாய் தவம் இருக்கும் தமிழ் திரை துறையில் தங்களுகென்று ஒரு இடம் கிடைக்க இரவு பகல் பாராமல் உழைக்கும் எத்தனையோ பல நல்ல கலைநர்கள் தங்களுக்கு என்று ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று இருக்கும் நிலையில் கிடைத்த நல்ல வார்ப்பை கோட்டைவிட்ட வேட்டைக்காரன் டீமிடம் நான் கேட்ட விரும்பும் சில தகவல்கள்ல். கேள்வியில் குறை இருப்பின் மன்னிக்க.

நடிகர் விஜய்க்கு ஒரு சில கேள்விகள் :
  • ஏம்பா தம்பி, வில்லு படம் பிளாப் ஆனதும், அடுத்த படம் பத்தி கேட்ட போது சொன்னது நாபகம் இருக்கா?
    "குருவி, வில்லு படம் போல இல்லாமல் ஒரு வித்தியாசமான கதையை செலக்ட் செய்து நடிக்க இருக்கேன். கதை விவாதம் நடக்குது. பல கதைகள் பல டைரக்டர் கிட்டே இருந்து கேட்டுள்ளேன். எனக்கு பிடிச்ச கதை கிடைக்கும் போது அதை செலக்ட் செய்து நடிப்பேன்னு சொல்லிட்டு வந்தே..".
    இதுவும் ஒரு கதை தானா ? இந்த கதைக்கு தான் நீங்க அவளவு பில்ட் அப்ப செய்தீரா?

  • அரைத்த மாவையே திரும்ப திரும்ப அரைத்து சாப்பிட உங்களுக்கு பிடிசிருக்குனா பேசாம நீங்க நடிச்ச பழைய (வில்லு, குருவி, thirupaatchi, sivagasi) படங்களையே போட்டு பாருங்க. அதையும் மீறி அதே மாதிதான் நடிப்பேனா உங்களை திருத்த தமிழ் மக்கள் ரெடியா இருகாங்க.

  • மனசாட்சி தொட்டு சொல்லுங்க... இந்த படம் உங்களுக்கு பிடிச்சிருக்கா?

சன் பிக்சருக்கு சில பல கேள்விகள் :
  • மணிக்கு நாலு விளம்பரம் போட்டு காட்டி, சும்மா இருந்த பாமர மக்களையும் உசுப்பேத்தி - தியேடர் வரவச்சு - ஒட்டு மொத்த மக்களையும் முடுட்சிலாம்னு நினைத்த உங்க பெருந்தன்மை யாருக்கு வரும்? ஏன்னா, இவங்க இருந்த தானே அடுத்த விஜய் படம் பார்க்க வருவாங்க அப்படின்னு நினைசீன்களா ?

  • ராகுல்காந்தி விஜயை சந்தித்து காங்கிரசில் சேர சொன்னதும் பயந்து பொய் - விஜயின் பெயரை டரியல் ஆக்க தான் ஓவர் பில்ட்அப் செய்து இவரை கவுத்த இப்படி ஒரு திரை மறைவு வேலையா?

  • விஜய்க்கு ப்ரிவிவு ஷோ காட்ட முடியாது சொன்னபோதே நீங்கள் அந்த படத்த பார்த்துட்டு எவளவு பீல் பண்ணிரிகீங்கனு எங்களால் யூகிக்க முடியாமல் போயிடுச்சு. தயவு செய்து சுராவை வேறுபக்கம் அனுப்பி தமிழ் நாடு & தமிழ் மக்களை பார்த்துக்குங்க. செய்வீர்களா?

  • குருவிதான் உங்களை விட்டு பறந்து போச்சே அப்பரம் ஏன் இந்த பேராசை? ஒ... விட்ட காசை விட்ட இடத்துலயே எடுக்க வந்தீங்களோ ? திறமையான பல டைரக்டர்கள் வெளியே கார்த்துகொண்டிருன்கினர். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தர கூடாதா?

பாபுசிவன் உங்ககிட்டே சில கேள்விகள் :
  • எம்.ஜி.ஆர் நடித்து பெரும் வெற்றிபெற்ற படத்தின் பெயரை இந்த படத்துக்கு வைத்து அவரையும் அசிங்கபடுத்திய உங்களை என்ன செய்யா?

  • முதல் படம் செய்யற உங்களுக்கு உங்கள் கதை மீது நம்பிக்கை இல்லாமல் போனது எங்களுக்கு மிக வருத்தமே. கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டுவிட்டீர்கள். தொடர்ந்து உங்கள் குருவுக்கு கூஜா தூக்குங்க.

  • ஒருமுறை கதாநாயகியை சந்தித்த ஹீரோ, அவரது வீட்டுக்குள் நுழைந்து அவளது பாட்டியுடன் நீண்ட நாள் பழகியது போல இருக்கும் காட்சிகள். நடைமுறையில் சாதியமா? இன்னும் பல ஓட்டைகள். வலை மக்கள் விளக்கமா சொல்லிட்டு தான் இருகாங்க.

  • கிட்டத்தட்ட 60-70 அடி உயரம் உள்ள அருவியில் இருந்து விழும் ஹீரோ, சிறு அடி கூட படாமல் எழுந்து வருவது - விஜய் ஒருவர் மட்டுமே செய்ய கூடிய செயல். என்னதான் பெரிய ஹீரோ ஆனாலும் இப்படியா? இது என்ன உங்க பாஸ் கிட்டே இருந்து திருடியாதா? (குருவி - ரயில் - பறந்துவருதல்) இல்லை

  • அருவியில் இருந்து விழுதல் - அப்போகளிப்டோ படத்து இருந்து திருடப்பட்டதா ?

  • ஒரே பாடலில் பெரிய தாத்தா ஆகிவிடும் சிறப்பு - விக்ரமன் படங்களில் மட்டுமே அதிகம் இருக்கும். அந்த காட்சிகளை இங்கும் வைத்தான் பொருள் என்னவோ?

  • இந்த படத்துல அனுஷ்கா ஹீரோவா இருந்தா எப்படி டான்ஸ் ஆடுவாள் அன்று பார்க்க தான் ஆண் வேடம் இட்டு பார்த்தீரோ?

  • அதேபோல, விஜய் ஹீரோவா நடிச்சா ஓட மாட்டேன்குதுன்னு அவரை பெண்வேடம் போட்டு நாயகியா நடிகவட்ச உங்களுக்கு ரொம்ப தில்லுதான்.

விஜய் அன்டனி உங்ககிட்டே ஒரு கேள்வி:
  • பாடல்கள் மட்டுமே ஹிட் ஆனா போது விஜய் படத்துக்கு பின்னி இசை எப்படிவேனாலும் போடலாம் னு நீங்களே நினச்கிடா எப்படி ராசா?

அனுஷ்கா உங்ககிட்டே ஒரு கேள்வி:
  • அருந்ததி படம் பார்த்த பின்னர் உங்கள் மீது ஒரு மரியாதை வந்தது உண்மை தான். இப்படி டான்ஸ் மட்டுமே ஆடி பேருவாங்கும் நடிகரிடம் எல்லாம் மாட்டி நீங்க ஏன் தான் உங்க பேரை அசிகபடுத்திகிறீங்கலோ. உங்களுக்காகவே பலரும் இந்த படத்தை பார்க்க வந்தார்கள். வருவார்கள். இந்த படத்துல உங்க பங்கு என்ன? முதல் பாதி கொஞ்சம் ஓகே. பிறகு ?

இது எல்லாம் என் ஆதங்கம். மற்றவரை குறைசொல்வது என் நோக்கமல்ல.

குறிப்பு :
சிட்னியில் இருந்து எனக்கு ஒரு வாசகர் முகுந்தன் என் பதிவில் பின்னுட்டம் இட்டிருந்தார்.
இதே விஜய்க்கு சென்னைல ஒரு காலத்துல ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கனும்னு ஒரு வெறியோட இருந்த ரசிகன் நான். ஆனால் மதுர படம் பார்து என்னுடைய என்னத்தை மாற்றினேன். அடுத்தடுத்து வந்த படங்களில் அவனுடைய கேவலமான நடிப்பு கதை தேர்வு இவைகளில் மெதுமெதுவாக விஜ்ய் ரசிகர் என்று சொல்வதை மிக மிக கேவலமாக எண்ணிணேன்.

ஆனால் எப்பொழுது காங்கிரஸில் போய் சேர்ந்தானோ அன்றிலிருந்து அவனுடைய போஸ்டரை பார்பதை கூட பாவமாக நினைத்து வாழ்ந்து வந்தேன்.

நண்பர்கள் வர்புருத்துகிறார்கள் என்று என் வாழ்கையில் நடந்தது அந்த துன்பச் சம்பவம். ஆம் வேட்டைகாரனை சிட்னியில் முதல் வரிசையில் அமர்ந்து பார்க்க என் நெஞ்சில் கொஞ்சம் கொஞ்சமாக ரத்தம் வழிய சபதம் இனிமேல் விஜய் படத்தை பார்காமல் இருப்பது மட்டும் அல்ல திருட்டு வீசீடி வாங்கி அனவருக்கும் கொடுப்பதை என் தொண்டாக செய்வேன். ஏனெனில் மறந்தும் இனி இவன் படத்துக்கு யாரும் திரையரங்கு சென்று பார்ககூடாது.

அடுத்த நாள் "அவதார்" AVATAR என்ற ஆங்கில படத்துக்கு சென்று இதை ஈடு கட்டி கொண்டேன். தயவு செய்து உங்கள் பணத்தை பார்து செலவு செய்யுங்கள்.

பின் குறிப்பு: நானும் ஒரு காலத்தில் அஜீத் ரசிகர்களுடன் போட்டியிட்ட முட்டாள்.

மறக்காமல் ஒரு வோட்டை போட்டுவிட்டு உங்கள் மேலான விமர்சனத்தையும் எழுதுங்க. நன்றி! மீண்டும் வருக!



அட... இப்படியும் கூட படங்கள் வரைய முடியுமா ?

வேட்டைக்காரன் விமர்சனம் + விஜயை வலை (வாணலியில்) வருத்துகொண்டிருக்கும் எம் வலை நண்பர்களே உங்களுக்குகாக இங்கே சில ஓவிய படங்கள் வெளியிடுளேன். பார்பதற்கு ஒரு உருவம் தெரியும். ஆனால், அதே படத்தினை கிளிக் செய்யும் போது அது எதனால் உருவாக்க பட்டது என்பது பிறகுதான் தெரியும்.

மதுபான பாட்டில்களில் உள்ள முத்திரையில் அல்லது அதனை கொண்டு ஒரு ஓவியம் வரைந்தால் - நீங்களே கிளிக் செய்து பாருங்களேன்.
இதே போல சார்லி சாப்ளினை வரைந்தால்
கணினில் உபயோக படுத்தும் சில குறுஞ்செய்திகளில் உபயோக படுத்தும் சில சிறு ஐகான் கொண்டு ஒரு கிருஸ்துமஸ் தாத்தா - கிளிக் செய்து பாருங்களேன்
இதேபோல சுதந்திர தேவியின் உருவமும் வரையபட்டால்
பல விலங்குகளின் போட்டோவை கொண்டு இந்த பூனையாரை வரைந்தால்

என்ன நண்பர்களே ரசித்தீர்களா ?

மறக்காமல் ஒரு வோட்டை போட்டுவிட்டு உங்கள் மேலான விமர்சனத்தையும் எழுதுங்க. நன்றி! மீண்டும் வருக!



வேட்டைக்காரன் - திரைப்பட விமர்சனம்

சும்மா சுட சுட வேட்டைக்காரன் படத்தோட திரை விமர்சனம் எழுதறேணுக.

படத்தோட கதை என்னனா :

12ஆவது பெயில் ஆகி படிக்கும் நம்ப ஹீரோ ரவி (விஜய் ) பெரிய போலீஸ் ஆபீசரா ஆகணும்னு ஆசை படறாரு. அவருக்கு ஒரு திறமையான போலீஸ்காரனை(ஸ்ரீஹரி) பார்த்து தன் திறமையை வளத்துகிறாரு.
நான் அடிச்சா தாங்கமட்டேநாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே

அவரைப்போலவே தானும் ஒரு போலீஸ் ஆகணும்னு படித்து 12ஆவது பாஸ் ஆகி காலேஜ் படிக்க வராரு. வரும் வழியில் ரயில்வே ஸ்டேசனில் நம்ப கதா நாயகி சுசிலா (அனுஷ்கா) சந்திக்கிறார். கண்டதும் காதல்.
கரிகாலன் காலப்போல கருத்திருக்குது குழலு
குழலிலை குழலிலை தாஜ்மகால் நிழலு


ஆட்டோ ஒட்டி கிடைக்கும் பணத்துல தான் காலேஜ் படிப்பேன்னு சொல்லி, தன்னுடன் படிக்கும் ஒரு பெண் தோழி(சஞ்சிதா படுகோனே ) மூலம் ஆட்டோ ஒட்டி, அந்த பெண்- அந்த ஏரியா ரௌடியிடம் (செல்லா) முறைத்து கொள்ள, ஹீரோ தட்டி கேட்கிறார். ரௌடியை சும்மா தும்சம் செய்துவிடுகிறார். இதனால் ஆவேசம் அடையும் வில்லனும் அவனது அப்பாவும்மான (சலீம்) தன் போலீஸ் (சாயாஜி) செல்வாக்கை பயன் படுத்தி என்கவுன்ட்டர் மூலம் ஹீரோவை போட்டு தள்ள ஏற்பாடாகி - அதிலிருந்து ஹீரோ தப்புகிறார்.
புலி உரும்புது புலி உரும்புது
இடி இடிக்குது இடி இடிக்குது


அவனை ஸ்ரீஹரி நண்பர்கள் காப்பாற்றி இனிமேல் வில்லனுடன் மோதவேண்டாம் என்று சொல்லி - தன் தலை மறைவு வாழ்க்கை பற்றி ஹீரோவிடம் சிறு பிளாஷ்பேக்கு. இருவரும் இணைகிறார்கள்.
ஒரு சின்ன தாமரை என் கண்ணை பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைகின்றதே


வில்லனின் அராசகத்தை நேரடியாக ஹீரோ தாட்டி கேட்கிறார். இவனது நண்பனை போட்டு தள்ள... ஹீரோ ஆவேசம் அடைந்து ...
என் உச்சுமண்டையில சுர்ருங்கிது...
உன்னை நான் பார்க்கையில் கிர்ருங்கிது....


ஹீரோ எப்படி வில்லனை வென்றார்? என்று மீதி கதையை முடிஞ்சா பார்த்து தெரிந்துகொள்க.

படத்துல என்னை கவர்த்தவைகள் பல...
  • வழக்கம் போல சூப்பர் டான்சு + சண்டை என விஜய் அசத்தியிருகாறு. பிரெஷ் ஆ இருகாரு படத்துல. வில்லுக்கு இந்த படம் ஓகே.
  • அனுஷ்கா - முதல் பாதியில் பல காட்சிகளை முடிந்த அளவு நடித்து + பாடி இருக்கார். டான்சு தன் ஆட முடியாமல் நடந்தே வாராரு. பாடல்களில் எதோ மிஸ்ஸிங்.
  • திரைகதையில், முதல் பாதி- போர். இரண்டாம் பாதி - ஓகே தான்.
    பல இடங்களில் எனக்கு சலிப்பு தட்டியது.
  • செல்லாவாக நடித்தவரின் நடிப்பு மிக அருமை. என்ன வில்லத்தனம். கண்கள் பேசுது.
  • பாடல் கட்சிகள் மிக அருமை. பின்னணி இசை - சுமார். சில இடங்களில் ஸ்ரீசாத்தும் + சத்தியனும் சிரிக்க வைகிறார்கள்.

வேட்டைக்காரன் - ஒருமுறை பார்கலாம்

நல்ல பதிவு பலரை சென்றடைய ஒரு வோட்டு போட்ட போதும் எனக்கு. நன்றி. மீண்டும் வருக!!!



வேட்டைக்காரன் 'ஜுரம்' ஆரம்பம்


இன்று மாலை, காப்பி குடிக்க நண்பர்களுடன் காரபக்கம் அரவிந்த் தியேடர் அருகில் உள்ள உடுப்பி ஹோட்டல் வந்தேன். வரும் வழியில் ரோட்டின் ஓரத்தில் நிறைய பேர் வேலை செய்துகொண்டிருந்தார்கள். ஒரே கும்பல்.

என்னவென்று அருகில் சென்று பார்த்தா கட் அவுட் மற்றும் பேனர் கட்டும் வேளையில் விஜயின் ரசிகர்கள்.


நார்மலாவே, அந்த தியேடரில் காத்து(?) வாங்கும். எதாவது புது படம் ரிலீஸ் ஆனா கொஞ்சம் கூட்டம் இருக்கும். இன்று மாலை, ஒரே இளைனர் பட்டாளம் தான். எதோ தங்கள் வீட்டு கல்யாண வைபோகம் போலவும், கோவில் திருவிழா போல ஒரே அமர்களம் தான். எங்கும் ஒரே அலங்கார அமைப்பு. தியேடர் முன் பக்கம் முழுவது மூடு அளவு பேனரும் கட் அவுட்டும்.

ஒரு சிலர், தங்கள் உயிரை பணயம் வைத்து சரியான பாதுகாப்பு இல்லாமல் தியேடர் உச்சிவரை சென்று தோரணம் கட்டிகொண்டிருன்தனர்.

எதாவது அசம்பாவிதம் நடந்தால், யாரவது உதவிக்கு வருவார்களா..? இதற்கு அந்த தியேடர் நிர்வாகம் தான் பொறுப்பு எடுத்து கொள்ளுமா ? இல்லை அந்த விஜய் தான் உதவிக்கு வருவாரா? இல்லை உடன் இருந்து ஜால்டிரா போடும் கும்பல் தான் வருவார்களா? என் இந்த ஆர்பாட்டம்? இதனால் அவர்கள் அடையும் நன்மை தான் என்ன? யோசிப்பார்களா?


கிரிகெட் ஜுரம் அப்பபோ வருவது போல இப்போ சில நாட்களாக வேட்டைக்காரன் ஜுரம் ஆரம்பம் ஆகிவிட்டது. விஜயை ஒரு வழியாக பேசி, வறுத்து எடுத்தவர்கள் அடங்கும் முன்னரே இவரது படம் நாளை வெளியாகிறது. சொல்லவா வேணும் நான் வலையுலக நண்பர்களுக்கு. இனி அடுத்த சில வாரங்களுக்கு வேட்டைக்காரன் தான் ஊறுகாய்.

இதையெல்லாம் ஒரு பதிவா போட இவன் வந்துதானே என்று நீங்கள் நினைப்பது புரியுது. என்ன செய்ய?. கண்ணில் பட்ட இந்த அவலங்களை சகித்து கொள்ள முடியவில்லை. நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் ஒரு வோட்டு போடுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



Creative Love Tips

Romance, you see, is the expression of love. Romance brings love alive in the world. Without romance, love is a sweet but empty concept.

A small creative love tips ...

Give your lover a dozen roses (12) —and do it with a creative twist. Give eleven (11) red roses and one (1) white rose. Attach a note that reads:

"In every bunch there’s one who stands out —
and you are that one."

One Love Servey :
1. Seventy-four (74%) percent of American men have never received flowers from a woman.

2. Eighty-two (82%)percent of them say they would appreciate the gesture.

Happy Lovely day!

'Thank You' would be nice!



திரும்பிபார்கிறேன் : மாயா பஜார் - விமர்சனம்

புது படங்களை பார்த்து போரடிச்சு போச்சுன்னு நேற்று இரவு பழைய இதிகாச படவரிசையில் ஏதாவது படம் பார்கலாம் என்று பார்க்க நினைகையில் எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது "மாயாபஜார்". மகாபாரத கிளைகதையில் பீமன் மகன் கடோத்கனனின் பெருமையை சொல்லும் காவியம் இந்த படம்.

படத்தோட கதை என்னனா ...

துவாரகை. பலராமன் - ரேவதி தம்பதியரின் மகள் வத்சலாவின் குடும்ப நிகழ்ச்சியில் இவளின் சித்தப்பா ஸ்ரீ கிருஷ்ண பகவான் (என்.டி.ராமாராவ்) - ருக்மணி தேவியார் முன்னிலையில் இவளின் அத்தை சுபத்ரா (அர்ஜுனனின் மனைவி) அவரது மகன் அபிமன்யுடன் கலந்துகொண்டு சிறபிக்கிறார். அபிமன்யுவிக்கு வத்சலாவை திருமணம் செய்து தருவதாக வாக்கும் தருகிறார் பலராமன்.
பம்பரமா ஆடலாம் கும்பலாக பாடலாம்
பாட்டு பாடும் குயிலினமே ...
பாடல் முடியும் முன்பே வளர்ந்து பெரியவள் ஆகிறாள் வத்சலா (சாவித்திரி).

இந்திர சபையில் பாண்டவர்களை சந்தித்துவிட்டு துவாரகை திரும்பும் கிருஷ்ணன், அங்கு அவர் கண்ட காட்சிகளை ஓவியத்தில் விளக்குகிறார் அவரது அண்ணன் பலராமன் தம்பதியிடம். அவர்களுக்கு பரிசாக உண்மையை சொல்லவைக்கும் பீடம் தருகிறார். வட்சலாவிற்கு நினைத்ததை காட்டும் பிரியதர்சினி பெட்டியை தருகிறார். இவள் திறந்து பார்க்க அதில் அபிமன்யுவின் பின்மம் (ஜெமினிகணேசன்) தெரிகிறார். உடனே ஒரு டுயட் பாடல்.
நீதானே என்னை நினைத்தது
நீதானே என்னை அழைத்தது
தியோதணன், கர்ணன், சகுனி, துர்சாதணன் நால்வரும் திருவ்பதை அவமான படுத்தியதை பேசி பாண்டவர்களை பழிவாங்க சகுனியின் மந்திர பேச்சால் சூதாட அலைகிறார்கள். பாண்டவர்கள் தோற்க - கட்டிய உடையுடன் காடு செல்ல - இத்தனை கிருஷ்ணர் மூலம் தெரிந்து கொண்ட பலராமன், தன் சிஷ்யன் தியோதணனை இது பற்றி விசாரிக்க அஸ்தினாபுரம் வருகிறார்.

பலராம் இவர்களது உபசரிபாலும், பேச்சிலும் மயக்கி, திரியோதனன் மகன் லகுனா குமாரன் (தங்கவேல்) இவரது மகளை திருமணம் செய்துவைக்க வாக்கு தருகிறார்.

இந்நிலையில், அபிமன்யு - வத்சலா காதலில் திளைக்க
கண்ணுடன் கலந்திடும் சுபதினமே
கண்ணனே உணகேன் கலவரமே
- சுபத்ரா தன் அண்ணன் பலராமனிடம் அபிமன்யு திருமண பற்றி கேட்க - ரேவதி, இவர்களின் பொருளாதார சூழ்நிலையை காரணம் காட்டி மறுக்க - அவிமன்யு - வத்சலா சந்திப்பு திருடு தனமாக நடக்க.. அப்போ ஒரு பாடல்.
ஆகா இன்ப நிலாவினிலே
ஓகோ ஜெகமே ஆடிடுதே
சகுனி துவாரகை வந்து பலராமனையும் கிருஷனனையும் சந்தித்து லகுனகுமாரன் - வத்சலா திருமண ஏற்பாட்டை தொடங்குகிறார். கிருஷ்ணன் இத்தனை தலைமை ஏற்கிறார். சுபத்ரா இந்தனை காண முடியாமல் அங்கிருந்து மகன் அபிமன்யுடன் கடோத்கஜன் (ரங்காராவ்) ஆசிரமம் செல்கிறார். வழியில் ...
பலே பலே பலே தேவா
பாரோர் அறியா உன் மாயா
அத்து மீறி யாரோ தன் கோட்டைக்குல் புகுந்தவிட்டதை உணர்த்து, தன் படைகளை அனுப்பி அவர்களை கொண்டுவர சொல்ல - அபிமன்யு முறியடிக்க - கடோட்கஜனே (பீமனும் மகன்) நேரில் சண்டைக்கு வர - பிறகு தான் அபிமன்யு இவனுக்கு தம்பி என்று தெரிகிறது.
***
கிருஷ்ணர் சொல்லி - வத்சலாவை திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க - லகுனா குமாரன் திருமண ஏற்பாடு ஆரம்பிகிறது.

இந்நிலையில், கடோத்கஜன் - அபிமன்யுவின் காதல் கதை தெரிந்த்துகொண்டு பழிவாங்க புறப்பட - சுபத்ரா தடுக்க - பிறகு கிருஷன்ரின் உதவியுடன் திரியோதணனை பழிவாக்கும் படலம் ஆரம்பிகிறது.

கடோத்கஜன், வத்சலாவை இவனது ஆசிரமம் கொண்டுவந்து - தன் தாயிடம் அபிமன்யு -வத்சலா திருமண குறிப்பிட நேரத்தில் நடத்துங்கள் என்று சொல்லிவிட்டு - தன் சகாவை அழைத்து- திருமண விழாவிற்கு ஒரு மாய மாளிகள் காட்டி தியோதனை குடுபத்தை கவர்கிறான். வத்சலாவாக மாறி மீண்டும் துவாரகை வந்து - திருமணத்தில் கலந்து கொள்கிறான். தோழிகளுடன் ...
டும் டும் டும் கல்யாணம்
டும் டும் டும் கல்யாணம்
லகுனகுமாரனின் வேண்டுகோளுகிணங்க வத்சலா இவனை சந்திக்கிறாள். அங்கே ஒரே கலாட்டா தான். இவளது அழகில் மயக்கியா அவன்
தங்கமே உன்போல தங்க பதுமையைதேடிலும் எங்குமில்லை

- என பாடுகிறான். இவனது சகாக்கள் சாப்பாடு கூடத்தில் பிரச்சனை பண்ண - எங்கு வரும் கடோத்கஜன் சாப்பாட்டை கண்டதும்
கல்யாண சமையல் சாதம்
காய் கறிகளும் பிரமாதம்
- சாப்பிடு காலி செய்துவிட - மீண்டும் தன் சிஷ்யர்கள் உருவாக்கி திருமண நிகழ்ச்சி நடக்கிறது.

வத்சலா - லகுனகுமாரன் கலாட்டா திருமண நிகழ்வு எப்படி இருந்தது? வத்சலா - அபிமன்யு திருமணம் எப்படி நடக்கிறது என்பது தான் மீதி கதை.

படத்துல .... என்னை கவர்த்தவைகள் பல...

  • படத்துல கிருஷனராக என்.டி.ஆரும், கடோத்கஜனாக ரங்காராவும், சகுனியாக நம்பியாரும் வாழ்த்திருபார்கள். என்ன ஒரு கம்பீரமான நடிப்பு. பட இடங்களில் உடல் சிலிர்க்கும், ரசித்து பார்பவர்களுக்கு இது புரியும். என்.டி.ஆரை இப்போது பார்க்கும் போதும் எனக்குள் ஒருவித தெய்வீக உணர்வே வருகிறது.
  • சாவித்திரி - சாதாரண வத்சலாவாகவும், கடோத்கஜன் வட்சலாவாக மாறிய பின் என இரண்டு விதமான நடிப்பு இந்த படத்தில்.
  • தங்கவேல், கா.கருணாநிதியின் டைமிங் காமெடி மிக அற்புதம். அதுவும் "தசமதியர்..." விளக்கமும், "ஒய் ஒய் தலைவா " என்ற கோசமும் அற்புதம்.
  • முகஸ்துதி பாடி பரிசு பெறும் இருவரிடம் நடக்கும் "கிண்கிணி, கிம்பளம்.." கலாட்ட ரசிக்க கூடியவைகள்.
  • இசை. கண்டசாலா. காலத்தை கடந்தி நிற்கும் பாடல்கள் + பின்னனி இசை என இரண்டிலும் மனுசர் பின்னி எடுத்திருப்பார். பல காதல் இன்று ஒலிக்க கேட்கலாம்.
  • டைரக்டர் ரெட்டி. இவர் மாயஜால படங்கள் எடுப்பதில் சிறந்தவர். இதில் அதிகம் மாயஜால நிகழ்வுகள் இடம் பெறவில்லை என்றாலும் படத்தில் 'கல்யாண சமையல் சாதம் ..' பாடலை மனுசர் மிரட்டியிருப்பார்.
  • இளம் வயது ஜெமினி கணேசன். முகத்தில் விடலை பருவம் தெரியும். நடிக்க வாய்ப்பு அதிகம் இல்லை.

மாயாபஜார் - கலாட்டா கல்யாணம்


நல்ல பதிவு பலரை சென்றடைய ஒரு வோட்டு போட்ட போதும் எனக்கு. நன்றி. மீண்டும் வருக!!!



10 romantic Do’s & Don’ts


Love may make the world go 'round, but it's romantic love that makes the ride worthwhile. We need love, but we crave romance. It's romantic love that allows you to say emphatically "I'm in love with you," instead of merely, "I love you."

"Love Don’t
Cost a Thing," - Jennifer Lopez
Everyone wants passion and romance in his or her life. But, they failed in few things. This post will describes few of that.

Idea # 1 : Outing
Don’t go to the beach on crowded weekends—
Do go mid-week.

Idea # 2 : Gift
Don’t give him a birthday present—
Do give him seven gifts, one for each day of his birthday week.

Idea # 3 : Express your love
Don’t make love the same way every time—
Do eliminate distractions for two to three hours.

Idea # 4 : Feel your love
Don’t rush through lovemaking—
Do slow down! You’ll both enjoy yourselves, and each other,
more.

Idea # 5 : Special Partner
Don’t try to change your partner—
Do accept him or her for the special, unique person he or she is.
An "infinite" love note:
I love you,
And you love me;
This is as it ought to be.
Ask me why
And I’ll reply—
I love you,
And you love me…
Idea # 6 : Be Kid
Don’t act your age—
Do wacky things; express your quirkiness;
be creative.

Idea # 7 : Celebration
Don’t buy gifts at the last minute.
Do plan ahead. (Less stress for you, more joy for your partner)

Idea # 8 : Time
Don’t leave lovemaking until just before sleeping—
Do schedule more time for foreplay.

Idea # 9 : News with love
Don’t read the newspaper at the breakfast table—
Do talk with one another over breakfast.

Idea # 10 : Specal Flowers
Don’t buy roses for Valentine’s Day—
Do buy flowers that begin with the first letter of her name.

Be romantive hero and enjoy with your love, every day!

Thanks : 1001 ways to be romantic.

Share your thoughts with me and a 'Thank You' would be nice!



இது என்ன கவிதைகள் !?

இரண்டு நாட்களுக்கு முன்பு சில கவிதை தொகுப்புகளை படிக்க நேர்த்தது. பல கவிதைகள் படித்தாலும் சில மற்றும் மனதில் ஏதே செய்வது போல இருந்தது. கடவுளை மையமாக வைத்து பல கவிதைகளை படித்துள்ளேன். அதில் எனக்கு மிகவும் பிடித்த சில உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியே.

திரு பி.மணிகண்டன் அவர்கள் எழுதிய "முரண்" என்ற தலைப்பில் வெளியான ஒரு சிறு கவிதை என்னை வெகுவாக கவர்ந்தது. இதோ...
முரண்டு பிடிக்கும் ஆட்டை
அடிக்க முயன்ற
என்னைத்
தடுத்தவாறு சொன்னால்
அம்மா
"அடிக்காதே பா
அது
கருப்புசாமிக்கு நேர்ந்துவிட்டது"
திரு எம்.மாரியப்பன் எழுதிய ஒரு கவிதை "நடைபாதை ஓவியன்". நடைபாதையில் அன்றாடம் நாம் காணும் சில மரிதர்களின் நிலை பாடை இவ்வளவு அழகாக சொல்லமுடியாது.
கோவர்த்தன மலையை
குடையென ஆக்கி
மக்களைக் காக்கும்
கண்ணனை
வயிற்று பசியுடன்
வரைந்து முடித்து
நிமிர்ந்து பார்க்க
வந்தது மழை
குடையுடன்
கடவுள்
அழிந்து கொண்டிருந்தார்.

திரு மாசிலா விநாயகமூர்த்தி எழுதிய ஒரு கவிதையில் எனக்கு மிகவும் பிடித்தது "பக்தி". நம்மையே கேள்வி கேட்டும் இந்த கவிதை...
நவக்கிரகங்களை வழிபடுகையில்
சுற்றுகளை எண்ணுவதிலேயே
சுற்றிக்கொண்டிருகிறது மனது
எதை வேண்டி
எதை பெறுவது?
திரு புன்னை சேது அவர்கள் எழுதிய "மாற்றங்கள்" என்ற தலைப்பில் ஒரு கவிதை படித்தேன். பல சிந்தனைகள் மனதில் கேள்விகளாக... இதோ அந்த கவிதை உங்களுக்காக....
பிரகாரம் நுழைந்தவுடன்
கனியாகி விடுகிறது
எலுமிச்சை...
தீர்த்தமாகி விடுகிறது
தண்ணீர்...
பிரசாதமாகி விடுகிறது
திருநீறும் பொட்டும்...
எந்த மாற்றம்மின்றி
வெளியேறுகிறான்
பக்தன்.
குறிப்பு : இங்கே வெளியான கமல் - கடவுள் கவிதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படியானு நீங்க கேட்பது தெரியுது. என்ன செய்ய.... !?

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு ஒரு வோட்டு போடுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



நான் அவன் இல்லை 2 - திரை விமர்சனம்

நேற்று பார்க்க இருந்த 'நான் அவன் இல்லை 2' படத்த இன்னைக்கு தான் பார்த்தேன். இந்த படத்தையும் விட்டு வைக்க மாட்டியாடானு நீங்க கேக்கிறது புரியுது. என்ன செய்யா....? ஒரு டைம் பாஸ்சு தான் ஹி..ஹி...ஹீ.

படத்தோட கதை என்னனா ...

நான் அவன் இல்லை முதல் பாகத்தின் சில காட்சிகளோடு தொடங்குது படம். இரண்டாம் பாகம் படம் ஆரம்பிக்கும் போதே ஒரு பெண் சாமியார் (ரக்ஷனா) பேட்டி கொடுக்கிறாள். அவள் கையில் நம்ப ஹீரோ(ஜீவன்) படம்.

பத்திரிக்கையில் வெளியான பெண்சாமியாரின் பேட்டி + ஹீரோ போட்டோவை பார்த்த மூன்று பெண்கள் அவளை தேடிவரும் போது அவர்கள் வாழ்வில் நடந்தவைகளை பிளாஷ்பேக்கு கொண்டு விளக்குகிறார் டைரக்டர் செல்வா.

* ஹேமமாலினி - தனக்கு வரப்போகும் கணவன் நாய்க்குட்டி மாதிரி தன் காலைச் சுற்றிக் கிடக்க வேண்டும் என விரும்பும் பெண். அவளை ஈசியாக ஏமாற்றுகிறார் நம்ப ஹீரோ.

* ஸ்வேதா மேனன் - கல்யாணம் ஆன ஆண்களை மயக்கி கட்டிலுக்கு வரவழைத்து, அவனிடம் இருக்கும் பணம் மற்றும் வைரங்களை அபகரிக்கும் பெண். இவளையும் நம்ப ஹீரோ...அதே தான்.

* லட்சுமி ராய் - சினிமா நடிகை. இவளுக்கு உலகத்தின் அத்தனை நாடுகளிலும் தனக்கு சொத்து இருக்க வேண்டும் என்ற ஆசை. இவளை நம்ப ஹீரோ பெரிய பணக்கார் போன்று நடித்து ....

இவர்களது கதையை கேட்ட பெண் சாமியாரும் தன் பங்குக்கு ஒரு பிளாஷ்பேக் சொல்கிறாள்.

* ரக்ஷனா - திருட்டு கேஸ், வழிப்பறி, வைரங்களைக் கொள்ளையடிக்கும் பெண். இவளிடம் நம்ப ஹீரோ, பாடலாசிரியர் வாலி வேஷம் + 'மார்பாலஜி' செய்து .... (நம்ப ஹீரோவுக்கு மச்சம் தான்) அதே தான்.

இவர்களை ஏமாற்றும் ஹீரோ என்ன செய்கிறார் ? அதுக்குனே ஐந்தாவதாக ஒரு பெண் இருகாங்க. அவங்க தான் நம்ப சங்கீதா.

* சங்கீதா - கணவனை இழந்த இலங்கை வாழ் தமிழர். இவளுக்கு நம்ப ஹீரோவுக்கும் இடையில் நடப்பது தான் கதையின் உயிர் நாடி. அதனை படத்த பார்த்து தெரிஞ்சுக்குங்க.

படத்துல எனக்கு பிடித்த சில ..
  • நான்கு நாயகிகளும் குறைவில்லாமல் கவர்ச்சி காட்டியிருக்கிறார்கள். ஐந்தாவது நாயகியாக வரும் சங்கீதாவுக்கு பெரிதாக வேலையில்லை. சென்சார் பல இடங்களில் தூங்கி விட்டார்கள் போல தெரிகிறது. செம கவர்ச்சிடா சாமி.
  • மயில்சாமி - கிடைக்கிற 'கேப்'பிலெல்லாம் புகுந்து விளையாடுகிறார் மனிதர். குறிப்பாக ரக்ஷனாவை ஏமாற்ற ஜீவன் வாலியாகவும், மயில் அவருக்கு சிஷ்யராகவும் வரும் காட்சிகளில் தேயேடரே அதிர்கிறது. சபாஸ் மயில்!
  • படம் முழுவது ஜீவன் வந்தாலும் சொல்லிக்கிற மாதிரி எதுவும் இல்லை. இவரின் கிளைமாக்ஸ் காட்சிகளில் பேராயர் உடையில் நம்மை பதம் பார்க்கிறார்.
  • செல்வாவின் திரைக்கதை சொதப்பல். இதில் பாடல் காட்சிள் + இயற்கை வெகு அருமை.
  • வெளிநாடுகளில் போலீஸ் + சட்டம் போன்ற சமாச்சாரங்கள் இருப்பதற்கான அறிகுறியே இந்தப் படத்தில் இல்லை.
  • இமானின் பின்னணி இசை பற்றி நான் என்ன சொல்ல? அட போங்கப்பா. மனுஷன் கையில கிடச்ச வாத்தியத்தை எல்லாம் வாசித்திருக்கார். ஒரே இரைசல்.
குறிப்பு: இந்த பாகமே கதை இல்லாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பி எடுத்த இந்த டீம் அடுத்த பாகம் பற்றி ஒரு குறிப்பும் இந்த படத்துல காட்டுறாங்க. ஜாக்கிரதை!

நான் அவனில்லை 2 - 'கவர்ச்சி' டைம் பா(ம்)ஸ்.

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு ஒரு வோட்டு போடுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



"Before I Self Destruct:" - திரைபட விமர்சனம்.

நேற்று இரவு, படம் பார்க்க போக இருந்தோம். வேலை முடியாததால், வீட்டில் வங்கி வைத்த ஹாலிவுட் படம் பார்கலாமுனு பார்த்த படம் தான் இந்த "Before I Self Destruct" படத்த பார்த்தேன். இதே பெயரில் விரைவில் ஒரு ஆங்கில இசை ஆல்பமும் வெளிவர இருக்கிறது. இத்தனை இயக்கியவர் "50 Cent".


படத்தோட கதை என்னனா ...

கிளாரேன்ஸ் ஒரு கூடைபந்து வீரர். இவனுக்கு, விளையாட்டுதான் உயிர் மூச்சு. கால் முட்டி வலி காரணமாக விளையடமுடியாமல் போகிறது.

விளையாட முடியாமல் ரொம்பவே தவிக்கும் இவன் வேலைக்கு சேருகிறான். நிலைக்க முடியவில்லை. இவனுக்கு உதவியாக இருப்பது - இவனது தாய். இவனுக்கு ஒரு தம்பி. பெயர் சொக்கா (Elijah Williams). படிப்பில் படு சுட்டி.

ஒருநாள், இவனது தாய் படுகொலை செய்யப்பட, வெகுண்டு எழும் ஹீரோ கொலை செய்தவனை (டினி) பழிவாங்குகிறான். இந்நிலையில், சின்-ஐ சந்திக்கிறான். இவன் தான் டினி -ஐ அனுப்பியவன். தவறுதலாக தன் தாய் கொல்லப்பட்டதும் தெரிந்து, பிறகு அவனிமே வேலைக்கு சேருகிறான். டினி இருந்த இடத்தில் இப்போ நம்ப ஹீரோ. பணம் பஞ்சமில்லை. வாழ்க்கையை அனுபவிக்கிறான். கொலைக்கு மேல் கொலை செய்கிறான் பணத்திற்காக.

இடையில் (?), நாயகியை சந்திக்கிறான், ஒரு கிளப்பில். அவளுடன் சந்தோசமாக (?) இருக்கிறான். இவளின் பாசம் தம்பியின் படிப்பு என் வாழ்க்கை போகும் வழியில், நாயகியின் முன்னால் காதலன் வர- கதையில் திருப்பம். மீதி நடந்தது என்ன ? என்று முடிச்ச, டிவிடி வாங்கி பாருங்க.
படத்துல எனக்கு பிடித்த/பிடிக்காத சில ..
  • சொக்கவாக நடித்திருக்கும் சிறுவன் சும்மா நடிப்பில் பின்னுகிறான். ரொம்ப அசால்டா நடித்துள்ளான். சபாஸ்!
  • கதையின் ஜீவன் நம்ப ஹீரோ. நல்ல நடிப்பு.
  • கதையும் அதன் காலமும் நகரங்களின் வீதிகளில் நடப்பதும் அதன் அழகை மிக அருமையாக படம் பிடித்த கேமெராமேன் பாராட்ட படவேண்டியவர்.
  • ஹீரோயின் ஒருத்தியை அறிமுக படுத்தி - ஒரு கிளுகிளுப்பான காட்சியை வச்சு இளவயசு பசங்கள ஒரு வழி பண்ணிட்டார் இயக்குனர்.
  • படத்தில் அங்கங்கே ஒலிக்கும் "Before I Self Destruct" இசை ஆல்பம் - அருமை!!!
  • ஹீரோ பேசறது ஒன்னும் விளங்கவில்லை. ரொம்ப கூர்மையா கேட்டால் மட்டுமே அவன் பேசுவது கேட்கிறது.
  • இசை ஆல்பம் + ஹீரோ (Curtis Jackson) என பல அவதாரம் அடுத்திருக்கார் இந்த படத்துல.
வாழ்க்கையில் ஒருவன் தவறான பாதையில் நடக்கும் போது அவனுக்கும் நிகழும் சம்பவங்களும் முடிவுகளும் தவறாக அமையும் என்ற தத்துவத்தை சொல்லும் படம்.

Before I Self Destruct: ஒருமுறை பார்க்கலாம்.

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு ஒரு வோட்டு போடுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



ஐயப்பன் வரலாறும் 'பள்ளிக்கட்டு' பாடல் வரியும்


இது சபரி மலை சீசன். சபரிமலை ஐயப்பன் வரலாறு பற்றி நாமும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே...

ஐயப்பன் வரலாறு :

கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார். அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர் தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற, சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணுவுக்கும்)ஐயப்பன் பிறந்தார்.

குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும். தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம் உண்டல்லவா? பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர்.

வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும் தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டான். "ஆண்டாவா! என் குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா" என மகிழ்ந்து அந்தகுழந்தையை அரண்மனை கொண்டு சென்றான்.

அரசியும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். குழந்தையை கண்ட அனைவரும் சொக்கிப் போனார்கள். ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு 'மணிகண்டன்' என்று பெயரிடலாம் என்று முடிவு செய்து மணிகண்டன் என பெயரிட்டு அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும் குழந்தை பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர்.

ஆனால் எங்குமே நல் மனதைக் கெடுக்கும் புல்லுருவிகள் இருக்குமல்லவா? ஐயப்பன் உங்களுக்கு பிறந்த மகன் அல்ல. ஆனால் அவனையே தலைப்பிள்ளை போல் சீராட்டி வளர்க்கிறீர்கள். அதனால் அடுத்த மன்னனாக அவன் வரவே வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க வேறுயாரோ எப்படி அரசனாவது என அரசியின் மனதில் நஞ்சைக் கலந்தனர் சிலர்.

தீயபோதனைகளால் அரசியும் மனம் மாறினாள். தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். அரசவை வைத்தியரை 'புலிப்பால்' குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள்.

ஐயப்பன் அறிய மாட்டானா உண்மையை!?. தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான். வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுத்தாள். வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷியை. அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலியாக புடை சூழ புலிமேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன்.

புலிமேல் வந்த மணிகண்டனைக் கண்டு பதறிப் போனாள் அரசி. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினாள். ஐயப்பனும் அவ்வாறே செய்து அருளினார்.

மேலும் தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன்.

இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக் கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது.
ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு மூறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதைசெய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்டபோது அந்தஅங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றேஎழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.
இப்போது எங்கு பார்த்தாலும் ஐய்யப்பன் பக்தி பாடல்கள். எனக்கு கி.வீரமணி அவர்கள் பாடிய "பள்ளிக்கட்டு சபரி மலைக்கு" என்ற பாடல் மிகவும் பிடிக்கும்.
Show <--- இங்கே அந்த பாடல் வரிகளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியே.

Thanks : Thatstamil
நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு ஒரு வோட்டு போடுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



2022 - திரை விமர்சனம்

நேற்று இரவு பார்த்த 2022 படத்த பத்தி தான் இங்கே பேச வந்திருக்கேன். நிறைய நண்பர்கள் 2012 படத்த பத்தி சொல்லிடதால ...நான் இந்த 2022 படத்த பத்தி பதிவு போட்டுடேன்.

படத்தோட கதை என்னனா ...

பாங்காக் நாட்டில் அறிவியல் வல்லுனர்கள் மற்றும் ஆராயட்சியாளர்கள் மூலம் அறியும் சுனாமி ஆய்வுகளை வெளியிட்டு மக்களை முன் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வலியுறுத்த....சுனாமி வரவில்லை. இதே போல மூன்று முறை ... எதுவும் நிகழவில்லை.

இதனால், அறிவியல் ஆராச்சியாளர்கள் திறமை அற்றவர்கள் என்முடிவு செய்கின்றனர் அந்நாட்டு குடிமக்களும் அரசாங்க உயர்அதிகாரிகளும் ஆனால், அவர்களது தகவல்களை மக்கள் மீதும், நாட்டின் மீது மிகுந்த மாரியாதை கொண்ட (?) பிரதம மந்திரி மட்டும் நம்புகிறார்.
(இவரு தான் பிரதமரா நடிசவரு...)

அவர் எப்போதும் வானிலை வல்லுனர்கள் மீதும் அவர்களது ஆய்வுகள் மீதும் எப்போதும் நம்பிக்கை கொண்டவர். மேலும், வானிலை எச்சரிக்கை தகவல்கள் எப்போதும் பொய்யாவதில்லை என்று அவர் நம்புகிறவர்.

அந்நாட்டு அரசியல் தலைவர்கள், இவரை முட்டாள் என்றும், தவறான முடிவுகளால் நாட்டு மக்களையும் அவர்களது பொன்னான நேரத்தையும் வீண் அடிப்பதோடு தேவையில்லாத பயத்தை உண்டுபண்ணுகிறார் என்று சொல்லி அடுத்த பிரதம மந்திரியை தேர்வு செய்ய தாயாராகிரார்கள்.
(கடல்ல ஆராச்சி செய்யற நம்ப படத்தோட நாயகி இவங்க தான் ...)

இந்நிலையில், கடல், காடு, மலை பகுதியில் ஆராட்சி செய்து - தலைமை வானிலை ஆய்வகத்திலிருந்து ஒரு தகவல் - அடுத்த மூணு நாளில் பாங்காக் முழுவது பாதிக்கும் வகையில் ஒரு பெரிய சுனாமி வரும் என்று முன் எச்சரிக்கை செய்கிறது.

வழக்கம் போல நாட்டு மக்கள் அந்த தகவலை உதாசீனம் படுத்த... பிரதமர் மட்டும் சில முன் எச்சரிக்கை நடவடிக்கையில் இறங்குகிறார். மூன்றாவது நாளில்... நடந்தது என்ன ...? என்று பெரிய திரையில் தயவு செய்து பார்க்காதீர்கள்.... என்னை போல....!

(மலை + காடுகளில் ஆராய்ச்சி செய்யும் ஹீரோ இவரு தாங்க ...)

படத்துல எனக்கு பிடித்த/பிடிக்காத சில ..
  • பிரதமர் இந்த படத்துல சும்மா ஆத்து ஆத்துன்னு சொற்பொழிவு பண்ணுகிறார். தாங்க முடியல. சும்மா விஜயகாந்து கணக்கா சுனாமியின் போது இவர் செய்கிற சாகசம்....யப்பா முடியல.
  • புத்தர் வந்து கடைசியா சுனாமியில் இருந்து காப்பாத்துற காட்சியில் - என் கை கால் முடிகள் நட்டுகிச்சு போங்க... முடியல சாமி
  • காடு, மலை பகுதியில் ஆராச்சி செய்யும் அந்த ஹீரோ + அவனுடன் வரும் சிம்பன்சி குரங்கும் அதன் சேட்டைகளும் ரசனை.
  • குப்பத்து காரன் ஒருவனின் வீரமும் அவனது நடிப்பும் - அழகு
  • பழைய கார்டூன் படங்களை போன்ற கிராபிக் காட்சிகள் - வேஸ்டு
  • இசையும் + கடல் காட்சிகளும் ஒரே போர்.
வேற ஒன்னும் சொல்ல மாதிரி படத்துல இல்லைங்கோ... பெரிய மொக்கை படம் இது. இதுக்கு போயி இவளவு பெரிய போஸ்டானு கேக்கிறது புரியுது. என்னங்க பண்றது என்னை மாதிரி வேற யாரும் இத பாத்துட வேண்டுனு தான் சொல்லறேன்.

படத்தில் போது என் பின்னால் இருந்தவர்களில் ....
கோரை பாய் வாங்க வைத்த பணத்துல இப்படியாடா ஒரு படம் அமையனும் ... இச்சே-னு இருவரின் புலம்பல்.
தியேடர் கேட்டை இண்டர்வல் அப்ப தான் திறப்பானாம் - அதுவரை இந்த அருவியை பார்க்கலாம் டா
அறை பிளேட்டு பிரியாணி தின்னிருக்கலாம் போச்சே ... 40 ரூபாய்
2022 - பெரிய மொக்கை படம்.

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு ஒரு வோட்டு போடுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



அறிவுமதி கவிதைகள் - 'வலி'

கவிதை எழுத்தாளர் அறிவுமதி அவர்களின் கவிதை தொகுப்பை படித்தேன், நேற்று இரவு. 'வலி' என்ற தலைப்பில் ஈழத் தமிழர்களின் உள்ள குமுறலையும் அவர்களது நிலைபாடுகளையும் தனது கவிதை வாயிலாக அவர் சொல்லும் போதே நமது மனது சேர்த்து வலிக்கத்தான் செய்கிறது.

புலம்பெயர்ந்த மக்களின் ஒட்டு மொத்த குரலாக - ஆயிரம் கதைகளை சொல்லும் இவரது கவிதை இங்கே...
முகாமிக்கு
அருகில் உள்ள
பள்ளியிலிருந்து
கேட்கிறது
"யாதும் ஊரே
யாவரும் கேளிர்"

வறுமை, இன்றைய ஈழ தமிழர்களின் நிலை, அவர்களது வாழ்வாதாரம் பற்றி நிலைப்பாடுகளை கவினர் இப்படி சொல்லுகிறார் தனது கவிதையில்...
படகில் ஏறினோம்
படகுகளை
விற்று!

*

இராமேஷ்வரத்தில்
எல்லோரும்
குளித்துக்
கரையேறுகிறார்கள்!
நாங்கள்
குதித்து
கரையேறுகிறோம்!
உயிருடன் இருக்கும் போது தான் காசு, பணம், வீடு என் அலையும் மனிதர்களுக்கு இவாறு சொல்கிறார்.
பிறந்த குழந்தையின்
நெற்றியில்
வைக்கிறாள்...
பிடி மண்ணாய்
கொண்டுவந்த
தாய் மண்!
தினம் தினம் மரண செய்திகளை படிக்கும் நமக்கே தாங்கிகொள்ளமுடியவில்லையே ... தம் குடுப்பத்தை இழந்த- ஈழ தமிழர்கள் நிலையை அவர்கள் நிலையிலிருந்து பார்த்தால் தான் புரியும், உண்மை நிலையும் அதன் வலி தெரியும்.
இலங்கை
வானொலியிலிருந்து
நீங்கள் பிறந்த நாள் வாழ்த்து
கேட்கிறீங்கள்!
நாங்கள்
மரண அறிவித்தல்
கேட்கிறோம் !

நன்றி : அறிவுமதி

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு ஒரு வோட்டு போடுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



1 மணி நேர சம்பளம் ரூ.82,000 வாங்கும் சிறுவன்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவர் செரியனா அலியாஸ். இவரது மகன் ஆதி புத்ர அப்துல் கனி. வயது 10. செரியானா 2 நிறுவனங்களைத் தொடங்கி ஆதி என்ற பெயரில் விட்டமின் மாத்திரைகளை விற்பனை செய்து வருகிறார்.

அப்துல் கனி, 3ம் வகுப்பு வரை படித்தான். ஆனால், தனது பாடத் திட்டத்துக்கு மீறி, இயற்பியல், வேதியியல், கணிதம், புவியியல், உயிரியல் ஆகிய பிரிவுகளில் அடுக்கடுக்கான அறிவை வெளிப்படுத்தினான். இன்டர்நெட்டில் புகுந்து எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தான்.அறிவுத் தேடலுக்கு இடையே, அன்னையின் பிசினசையும் கவனித்துக் கொள்ளத் தொடங்கினான்.

இப்போது 2 நிறுவனங்களின் செயல்பாட்டையும் ஏறக்குறைய தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளான் அப்துல் கனி. அதனால், அந்த கம்பெனிகளின் தலைமைச் செயல் அதிகாரி என அவனை அழைக்கின்றனர்.

பல பாடப் பிரிவுகளில் அவனுக்கு உள்ள அபார ஞானத்தை அறிந்த மலேசிய கல்லூரிகள், அவனை பகுதி நேர விரிவுரையாளராக அழைக்கின்றன.அம்மாவின் கம்பெனி நிர்வாகத்தைக் கவனிப்பதுடன், கல்லூரிகளில் விரிவுரை ஆற்றுவது, இன்டர்நெட்டில் மூழ்குவது என இருக்கிறான் அப்துல் கனி. ஒரு மணி நேர விரிவுரைக்கு ரூ.82,300 ஊதியம் பெறுகிறான்.

நம்ப வருமானம் வருசத்துக்கு ரூ.80,000 கூட கிடைக்களைனு நீங்க சொல்லறது புரியுது. அட விடுங்க பாஸ்.... இருக்கிறதை வைத்து சிறப்பா வாழ்வோம்!

நன்றி : தினகரன்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் ஒரு வோட்டு போடுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை இன்று நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் 1908ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பிறந்தவர் உக்கிரபாண்டி முத்துராமலிங்கத் தேவர்.

மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான முத்துராமலிங்கத் தேவர், அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவராக இருந்தவர். தேசியவாதி, அரசியலையும், ஆன்மீகத்தையும் தனது இரு கண்களாக பாவித்தவர். பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவராக இரு்நதவர். மூன்று முறை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மிகப் பெரும் நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தவர் தேவர். உக்கிரபாண்டித் தேவர், இந்திராணி தம்பதிக்கு ஒரே மகன். இவருக்கு ஜானகி என்ற சகோதரியும் இருந்தார்.

தேவர் பிறந்த சில காலத்திலேயே அவரது தாயார் மரணமடைந்தார். அவரது சித்தியும் அடுத்த ஆண்டு மரணமடைந்தார்.

1910ம் ஆண்டு முதல் தனது பாட்டி பார்வதியம்மாள் பராமரிப்பில் கள்ளுப்பட்டி கிராமத்தில் வளர்ந்தார் தேவர். தேவரின் தந்தைக்கு மிகவும் நெருங்கிய நண்பரான குழந்தைச்சாமி பிள்ளை, முத்துராமலிங்கத் தேவரை வளர்த்ததில் முக்கியப் பங்கு வகித்தார். பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தார். கமுதியில் உள்ள அமெரிக்கன் மிஷனரி பள்ளியில் படித்தார் தேவர். பின்னர் மதுரை திருப்பரங்குன்றம் பசுமலை உயர் நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் மதுரை யூனியன் கிறிஸ்டியன் உயர் நிலைப் பள்ளியில் படித்தார்.

இருப்பினும் 1924ம் ஆண்டு பிளேக் நோய் தாக்கியதால் பள்ளி இறுதியாண்டுத் தேர்வை எழுத முடியாமல் போனது. இந்த நிலையில் பசும்பொன் கிராமத்தில் தனது பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதால் அங்கு திரும்பினார் முத்துராமலிங்கத் தேவர். 1927ம் ஆண்டு அந்த வழக்கு தேவருக்கு சாதகமாக முடிந்தது.

அந்த சமயத்தில் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் குற்ற பரம்பரைச் சட்டம் அமலில் இருந்து வந்தது. இது தேவரை பெரும் வேதனை அடையச் செய்தது. இந்த நிலையில் அவர் அரசியலில் குதித்தார். இந்த சட்டத்தை நீக்குவதற்காக அவர் ஆதரவு திரட்டத் தொடங்கினார். கிராமம் கிராமமாக சென்று கூட்டங்களை நடத்தினார்.

இந்த நிலையில் 1929ம் ஆண்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 19 கிராமங்களைச் சேர்ந்த மறவர் சமுதாயத்தினரை இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வந்தனர். இதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தினார் தேவர். இந்த சட்டத்திற்கு மறவர் சமுதாயத்தினர் யாரும் அடிபணிய வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அவர்களும் போராட்டத்தில் குதிக்க அந்த சட்டத்தை பகுதியாக விலக்கிக் கொண்டது அப்போதைய சென்னை மாகாண அரசு.

தேவரின் தொடர் முயற்சிகளால் 2000 கிராமங்கள் இந்த சட்டத்தின் கீழ் இருந்த நிலை மாறி 341 ஆக குறைந்தது.

தனித்துப் போராடினால் வெற்றி பெற முடியாது, காங்கிரஸுடன் இணைந்து போராடுவது என தீர்மானித்தார் தேவர். இதையடுத்து 1936ம் ஆண்டு அவர் பர்மாவிலிருந்து திரும்பியதும், தென் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார்.

இந்த சமயத்தில் நடந்த மாவட்ட போர்டு தேர்தலில், முதுகுளத்தோர் தொகுதியில் போட்டியிட்டு நீதிக் கட்சி வேட்பாளரை வீழ்த்தினார். இதுதான் அவர் அரசியலில் பெற்ற முதல் வெற்றி.

1937ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார் தேவர். இதில் பெரும் வெற்றி பெற்றார். ராமநாதபுரம் மன்னரை இந்தத் தேர்தலில் தோற்கடித்தார் தேவர்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் ஆட்சி வந்ததால், குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கும் என நம்பினார் தேவர். ஆனால் முதல்வராகப் பதவியேற்ற ராஜாஜி அதை நிறைவேற்றத் தவறினார்.

இந்த நிலையில், 1946ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு போட்டியின்றி வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலுக்குப் பின்னர் குற்றப் பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்டது.

1955ம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார் பார்வர்ட் பிளாக். தனது மரணம் வரை அவரே இந்தப் பொறுப்பில் இருந்தார்.

1963ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி தனது 55வது பிறந்த நாளின்போது மரணமடைந்தார் தேவர்.

அவரது பிறந்த நாளும், இறந்த நாளும் ஒரே நாளில் வருவதால் அதை குருபூஜையாக முக்குலத்தோர் இனத்தவர் அனுசரித்து பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

நன்றி : Thatstamil

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் ஒரு வோட்டு போடுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top