அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
2012-இல் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் எனக்குப்பிடித்த 10 படங்கள்.
1. துப்பாக்கி - விஜயின் கலக்கல் நடிப்பில் அசத்திய படம். எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றிய படம். பாடல்கள் தான் குறை.
2. நடுவுல கொஞ்சம் கக்கத்த காணோம் - குறித்த கதா பத்திரம் - நிறைவான நடிப்பு. என் குடுபத்தார் அனைவரும் விரும்பி அடிகடி பார்த்த படம் இது. படம் முழுவது சிரிப்பு தான். கூடவே கொஞ்சம் மிரட்டல்.
3. நான் ஈ - அசால்ட்ட மிகபெரிய வெற்றி பெற்ற படம். குழந்தை முதல் பெரியவர் வரை திரைக்கு வந்து பார்க்க வைத்த படம். சுதிப்பின் மிரட்டல் நடிப்பு + ஈ இன் பழிவாங்கல் அனைவரையும் ரசிக்கவைத்தது.
4. சுந்தரபுருஷன் - குடுப்பதுடன் பார்த்த படம். பெண்களை கவரகூடியவகையில் திரைகதை. கலகலப்பா போகும் கதையில் இறுதியில் பல திருப்பங்கள். பாடல்கள் மிரபெரிய பலம்.
5. பீட்சா - இப்படியும் படம் எடுக்கலாம் என்று பெரிய இயக்குனர்களுக்கு சவால் விட்ட படம். படம் முழுவது நம்மையறியாமல் கதையுடனே பயணிப்பது இதன் சிறப்பு. அருமையான சஸ்பென்ஸ் படம்.
6. கலகலப்பு - சுந்தர் சி சொல்லி அடித்த காமடி படையல். சந்தானம் ஒரு ஹீரோ போல இதில் தொலித்திருப்பார். வயிறு குலுங்க சிரிக்க இந்த படம் 100% கியாரண்டி .
7. கும்கி - பட குழுவினரின் உழைப்பு தெரிந்துகொள்ள இந்த படம் ஒரு சாம்பிள். இயற்கையின் அழகாய் + அழகான இசையுடன் பார்க்கும்போது வரும் மனமகிழ்ச்சியே தனிதான். வித்தியாசமான கதை காலத்தில் சொல்லி அடித்த வெற்றி படம்.
8. ஒரு கல் ஒரு கண்ணாடி - உதயநிதி கதாநாயனாக அறிமுகமான படம். சந்தானம் தான் இதில் ஹீரோ. முழு நீள காமெடி படம். பாடல்கள் பெரிய பலம்.
9. நான் - விஜய் அன்டனி கதாநாயனாக அறிமுகமான படம். நல்ல சஸ்பென்ஸ் படம். வித்தியாசமான திரைகதை.
10. வழக்கு என்ன : 18/9 - பாலாஜி சக்திவேல் தன்னை மீண்டும் ஒரு நல்ல படைப்பாளி என்று நிருபித்த படம். பலருக்கும் இந்த படம் பிடிக்காமல் போனது ஏன்னு தெரியல. ஆனால் எனக்கும் ரொம்ப படித்த படம்.
இந்த படங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்தை இங்கே சொல்லிட்டு போங்க. மீண்டும் உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Special Thanks to Ranker.com.
0 comments:
Post a Comment