இன்று நாம் பார்க்க இருக்கும் சமையல் குறிப்பு ஒரு இனிப்பு வகையை சார்ந்தது. அதன் பெயர் கோதுமை பிரதமன்.
இதனை செய்வது மிக ஈஸி. மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் கோதுமை பிரதமன் - ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
Thanks : Maalaimalar & Dinakaran daily news paper.
இதனை செய்வது மிக ஈஸி. மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் கோதுமை பிரதமன் - ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
தேவையானப் பொருட்கள்:-
கோதுமை ரவை - கால் கப்
பொடித்த வெல்லம் - முக்கால் கப்
கெட்டியான தேங்காய்ப் பால் - 2 கப்
ஏலப்பொடி - கால் டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
முந்திரி - 10.
செய்முறை:-
- கோதுமை ரவையுடன், அரை கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைக்கவும்.
- ரவை வெந்ததும், வெல்லம் சேர்க்கவும். வெல்லம் கொதிக்கும் போது, தேங்காய்ப் பால், ஏலப்பொடி சேர்த்து, ஒரு கொதி வரும் போது அடுப்பை அணைக்கவும்.
- முந்திரிப் பருப்பை நெய்யில் சிவக்க வறுத்து, மேலாகத் தூவவும்.
- இறக்கும் போது தளர இருந்தாலும், ஆறியதும் கெட்டியாகி விடும்.
Thanks : Maalaimalar & Dinakaran daily news paper.
0 comments:
Post a Comment