சேவற்கொடி படத்தில் எனக்கு பிடித்த வைரமுத்துவின் பாடல்வரிகள்

நேற்று முன்தினம் வெளிவந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலின் வரிகளை உங்களுடன் கேட்டு ரசிப்பதில் மகிழ்ச்சியே.


கவினர் வைரமுத்துவின் இளமை துள்ளும் வரிகளும் அதற்கு ஏற்ப M.L.R.கார்த்திகேயன் குரலும் இந்த பாடலை மேலும் மேருகேட்டுகிறது.

நாயகியின் அழகை + அவளது செயல்களை வர்ணித்து பாடும் ஹீரோ பாடல் போல இருக்கு இது. நம்ம வைரமுத்து சார் சும்மா ஹீரோயின் அழகாய் மிக அழகாய் பாடலில் வர்ணித்து இருக்கிறார். அதனை நீங்களும் என்னுடன் சேர்ந்து ரசித்து கேளுங்கள்.

பாடல் வரிகளை சிதைக்காமல் மிக நேத்தியாய் இசை கோர்வை. பாடலில் அங்கங்கே 'சக்போன்' இசையை தூவி மேலும் அழகு சேர்த்திருக்கிறார் அறிமுக இசை அமைப்பாளர் C.சத்யா.

சத்யாவின் இசை மிகவும் தேர்ந்த இசை அமைப்பாளர் போல இருக்கு. வாழ்த்துக்கள் !!!!


பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

அந்த மெலடி பாடலின் வரிகள் இதோ...


கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு!
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு!
தூரத்தில் பார்த்த காதல் வராது!
பக்கத்துல பார்த்த காமம் வராது!
மானுமில்ல மயிலுமில்ல!
கூனுமில்ல குயிலுமில்ல!
இருந்தும் மனசு விழுந்து போயிசுது!

அவ மூக்குமேல வேர்வையாகனும்!
இல்லை நாக்கு மேல வார்தையாகனும்!
அவ மாத்தி உடுத்தும் ஆடையாகனும்!
இல்லை போர்த்தி படுக்கும் போர்வையகனும்!

அழுக்கு துணிய உடுத்தி அவ தளுக்கி நடக்கும் போதும்
சுளுக்கு பிடித்த மனசு அட சொக்குது சொக்குதுடா !
சுத்தமான தெருவில் அவ துப்பி செல்லும் போதும்
எச்சில் விழுந்த இடத்தில் மனம் நிக்குது நிக்குதுடா!

தூங்கி எழுந்தா பிள்ளை அழகு!
அவ சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு!
அவ சொல்லுக்கடங்கா முடியும் -
சுத்தி கசக்கிய மலரும்
என்னை இழுக்கும் கண்ணை மயக்கும்!
தேத்துபல்லும் கண்டு பித்து பிடிக்கும்!

அவ மூக்குமேல வேர்வையாகனும்!
இல்லை நாக்கு மேல வார்தையாகனும்!
அவ மாத்தி உடுத்தும் ஆடையாகனும் !
இல்லை போர்த்தி படுக்கும் போர்வையகனும் !

வெளக்கமாறு புடுச்சி அவ வீதி பேருக்கும் போது
வளைவு நெளிவு பார்த்து மனம் வலுக்க பார்க்கதடா!
குளிச்சி முடிச்சி வெளியில் அவ கூந்தல் துவட்டும் போது
தெரிச்சு விழுந்த துளியில் நெஞ்சு தெரிச்சு போகுதடா!

அவ வளவி ஒலிக்கும் வாசல் அழகு!
அவ பூசும் ஒலிக்கும் வீதி அழகு !
ஒரு விக்கல் எடுக்கிற தோதும்
தும்மி முடிக்கிற தோதும்
அவஸ்தையிலும் அவள் அழகு !
குத்தம்குறையிலும் மெத்த அழகு !

அவ மூக்குமேல வேர்வையாகனும்!
இல்லை நாக்கு மேல வார்தையாகனும்!
அவ மாத்தி உடுத்தும் ஆடையாகனும் !
இல்லை போர்த்தி படுக்கும் போர்வையகனும் !


பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



எத்தன் - விமர்சனம்

களவாணியை தயா‌ரித்த நசீ‌ரின் இரண்டாவது படைப்பு எத்தன். இப்படத்தில் ‘பசங்க’, ‘களவாணி’ படத்தின் மூலம் பிரபலமான விமல் + ‘ரேணிகுண்டா’ படத்தின் மூலம் பிரபலமான சனுஷா ஜோடி. இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், மனோபாலா, மயில்சாமி, சிங்கம் புலி, S.M.பாஸ்கர் நடித்துள்ளார்கள்.

படத்தோட கதை என்னானா...

தந்தையின் அறிவுரையை காது கொடுத்து கேட்காமல், கடன் வாங்கி தொழில் செய்து பெரிய நிலைமைக்கு வர துடிக்கும் இளைஞன் அந்த கடன்களாலேயே பாதிப்புக்கு உள்ளாகிறான்.

இதற்கிடையில், தன்னுடைய மாமன் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்லூரி மாணவி கேரக்டரில் சனுஷா. சனுஷாவின் தங்க செயினை விளையாட்டாக எடுத்து வைத்துக்கொண்டு கலாய்க்கும் விமல், அதை திருப்பி கொடுப்பதற்குள் ஏற்படும் விபரீதங்கள் + அதிலிருந்து மீண்டு லட்சியத்தை எப்படி அடைகிறான் என்பது கதை.


எனக்கு பிடித்த சில...

விமலுக்கு அப்பாவாக ஜெயப்பிரகாஷ். அவர் பாடி லாங்வேஜ் மற்றும் டயலாக் டெலிவரி அசத்தல். பையனை பற்றி பெருமையாக மனைவியிடம் பேசும் காட்சி + இரவில் திருட்டு தனமாக சாப்பிடும் மகனிடம் பேசிக் கொள்ளும் காட்சி மிக எதார்த்தம். ஒரு அப்பாவின் மனநிலை என்னவென்று மிக அழகாக நடித்திருப்பார்.

விமல் - பிஸ்னஸ் செய்கிறேன், மிமிக்ரிகாகவே தனியாக ஒரு லோக்கல் சேனல் ஆரம்பிக்க போகிறேன் பேர்வழி என்று ஊரெல்லாம் கடன் வாங்கிவிட்டு, கடன்காரன்கள் துரத்த ஓடிக்கொண்டே இருக்கும் கேரக்டர்.

யாரைப் பார்த்தாலும், தனது பார்வையாலேயே ஸ்கேன் செய்து அவரிடம் எவ்வளவு பணம் தேறும் என அவரிடமே சொல்வது...


கதாநாயகியாக வருகிறார் ரேணிகுண்டா சனுஷா அழகாய் இருக்கிறார். விமல், சனுஷா ஜோடி நன்றாக இருக்கிறது. சில இடங்களில் நடிக்க சான்சு கிடைத்திருக்கு. மற்றபடி தாவணி பாவாடையில் மிக அழகாக வலம்வருகிறார்.


காமெடிக்கு விமலுடன் சிங்கம்புலி கூட்டு சேர்ந்தும், சேராமலும் அட்டகாசம் செய்கிறார். இவர்களது காமெடியை வைத்தே பாதிப் படத்தை ஓட்டி விடுகிறார்கள். சில இடங்களில் ரசிக்க முடிகிறது. சில இடங்கள் மிஸ்ஸிங்....

பாங்கில் எப்படி பொதுமக்கள் அவதிபடுகிறார்கள் என்பதனை இதனைவிட அதிகம் எடுத்து சொன்ன படம் எனக்கு தெரிந்து நினைவில்லை. அதற்காகவே டைரக்டர் சுரேஷ்-ஐ பாராட்டலாம்.
மாப்ளே.. ரெண்டு அம்பது வெச்சிருக்கியா?’

‘ம்.. இந்தா..’

‘சரி ஒரு அம்பதைக்குடு.. நாளைக்கு தர்றேன்.. ‘

‘அடப்பாவி.. சேஞ்ச் தானே கேட்டே..?’

‘கடன்னு கேட்டா குடுத்திருக்கவா போறே?சரி சரி விடு. 50000 குடுத்தவனே சும்மா போறான்.. வெறூம் அம்பதை குடுத்துட்டு ஏன் முறைக்கிறே?
மழை உதிர் காலம்... பாடல் நம்மை தாளமிட வைக்கிறது. இப்பாடலை மிகவும் அட்டகாசமாக பதிவு செய்திருக்கிறார் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் .

தாஜ்நூரின் இசை முதல் பாதியில் பின்னணி இசை மகா சொதப்பல். இரண்டாம் பாதி ஓரளவுக்கு ஓகே ரகம்.


எத்தன் - கொஞ்சம் சிரித்து மகிழ ஒரு முறை பார்க்கலாம்.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



ஆனந்த தொல்லை - பாடல் விமர்சனம்

யார் யாருக்கோ பதிவு போடும் பொது ஏன் நம்ப பவர் ஸ்டாருக்கு ஒரு பதிவு போடா கூடாதுன்னு போட்டது தான் இந்த பதிவு.



அணைத்து தரப்பு மக்களுக்கும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு படம் ‘ஆனந்த தொல்லை’. இது ஒரு காம(நெ)டி + த்திர்லர் வகை படம்.

விஜய், தல அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு இவர்கள் வரிசையில் நம்ம ஆளு 'பவர் ஸ்டார்' டாக்டர் ஸ்ரீனிவாசன் உடன் பூந்தோட்ட காவல்காரன் பட புகழ் வாணி விஸ்வநாத் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் செந்தில், ஸ்ரீமன், அனுமோகன், வையாபுரி, சங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

படத்தை டைரக்டர் பாலு ஆனந்த் இயக்கியுள்ளார். அலி மிர்சா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கவிஞர் விவேகா ,கலைக்குமார், சாரதி, திரவியம் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளார்கள்.

படத்தோட பாட்டை கேட்டேனுங்க... கொஞ்சம் நல்ல தான் இருக்கு. சரி இதையே ஒரு பதிவா எழுதலாம்ன்னு தான் எழுதிபுட்டேன். படியுங்கள். படத்தோட பாடலை கேட்டு ரசியுங்கள்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

சாம் ஆண்டர்சனுக்கு செம போட்டியாக அண்ணன் சீனிவாசனோட அடுத்த டெர்ரர் ரிலீஸ் என்ன தெரியுமா ...?

மன்னவன், தேசிய நெடுஞ்சாலை என இரு படங்கள் இவரது தயா‌ரிப்பு, இயக்கம், நடிப்பில் வரவிருக்கின்றன.



1. செல்லபேயே வெள்ளை தீயே
கொள்ளைக்காரன் இங்கே நானே ...

- ஜெயதேவ் & பத்மலதா இணைத்து பாடியிருக்கும் ஒரு மெலடி காதல் பாடல். கிடார் + புலான்குழலின் இசை கோர்வை மிக நேர்த்தி. இதனை கேட்பதற்கு மிக நன்றாக இருக்கு. இந்த பாடலை எப்படி படம்பிடித்து இருப்பார்கள் என்று நினைக்கும்போதே ஒரு வித பயம் வருது.



2. வா வா முழு நிலவு காண்போம்
மூன்றாம் பிறை நாளிலே ...

- தீபா & மிரியம் பாடியிருக்கும் பாடல் ஒரு டுயட் இது. நன்றாக ரசித்து பாடியிருக்கிறார்கள். இதனை கேட்கும் போது வேறு ஒரு பாடல் நினைவுக்கு வருது. எந்த படம்னு தான் நினைவுக்கு சட்டுன்னு வரமாட்டேன்குது.



3. நீ என்பதே அழகு!
உன் பார்வையே நிலவு!

- வினிதா பாடிய இந்த பாடல் நம்ப ஹீரோவை பார்த்து ஹீரோயினி பாடும் பாடல் போல இருக்கு. 'டோலு டோலு தான்...' பாடல் இசையை சற்றே மாற்றி போடு இருகிறார்கள். பின்னணி இசை நன்றாகவே இருக்கு. பாடகி குரல் அழகாக இருக்கு. அய்ட்டம் பாடல்களுக்கு மிக அருகில் இந்த குரல்.



4. செய் செய் யாரோ
நெஞ்சில் தோன்றும் மின்னல் யாரோ

- பத்மலதா & கௌசிக் பாடியிருக்கும் ஒரு குத்து பாடல். ஒரு சராசரி பாடல்.



5. கண்ணாமூச்சி வாழ்க்கை
கண்ணில் தூவும் கனவை...

- பெல்லி ராஜ் & தீபா மிரியம் பாடியிர்க்கும் பாடல். ஹீரோயினுக்கு பாடலுக்கு இல்லை என்றால் விடுவார்களா என்ன ... போடுற ஒரு பாட்டை என்று சேர்த்துவிட்டார்கள். சும்மா சொல்ல கூடாது. பாடல் நன்றாக இருக்கு. வாழ்கையின் நிகழ்வுகளை அங்கங்கே சிறு கவிதை + தத்துவமாக சொல்லியிருகிறார்கள் இந்த பாடலில்.



6. வாடா மச்சி வாடா வாடா வாடா மச்சி
புட்ரா புடிடா அந்த கோவில் மாட்டை புடிடா ....

விஜய் , சைதவி & பானுமதி இணைந்து பாடியிருக்கும்ஒரு மசாலா பாடல்.



பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

Note: ஹீரோவை பார்த்து நீங்க பயந்தால் நாங்கள் பொறுப்பல்ல. மீண்டும் இவரை பற்றிய ஒரு பதிவுடன் சந்திக்கிறேன்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



தாய் மனம் - ஒரு பக்கக் கதை

அம்மா அழைத்தாள் என்பதற்காக, திருவிழாவிற்கு ஏன்தான் வந்தோமோ என்றாகி விட்டது வசந்திக்கு.

`சென்னையிலிருந்து வந்திருந்த தங்கை புவனா விடம் தான் அம்மா அதிக பாசத்தை பொழிந்து கொண்டிருக்கிறாள். எங்கே தன்னை கவனிக்காமல் விட்டால் மனம் வேதனைப்படுவாளே என்று அவ்வப்போது பாசமாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறாள்'

உள்ளுக்குள் புழுங்கினாள் வசந்தி.

கணவர் இறந்த பின், சமையல் வேலைகள் செய்து வசந்தி, புவனா இருவரையும் நன்றாக படிக்க வைத்து, வசந்தியை அருகிலிருக்கும் ஈரோட்டிற்கும், புவனாவை சென்னைக்கும் மாப்பிள்ளைகளை பார்த்து மணமுடித்து விட்டிருந்தாள் அம்மா.

ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா என்பதால், இருவருக்கும் அழைப்பு விடுத்திருந்தாள். மனைவிகளை அழைத்து வந்து ஒரு நாள் தங்கியிருந்து விருந்து சாப்பிட்டு விட்டு, மருமகன்கள் இருவரும் தங்களது வேலைகளை கவனிக்க கிளம்பி விட்டார்கள். மேலும் இரண்டு நாள் தங்கிவிட்டு வருவதாக இவர்கள் கூறிவிட்டனர். குழந்தைகளும் கூடவே இருந்து விட்டார்கள்.

வசந்தி குடும்பம் நடுத்தரமானது. அவள் கணவர் தனியார் மில்லில் வேலை பார்க்கிறார். சொற்ப சம்பளத்தில் குடும்பத்தை ஓட்டி வரும் நிலை. ஆண் குழந்தை, பெண் குழந்தை என இரண்டு வாரிசுகள்.

புவனாவின் குடும்பம் வசதிக்கு பஞ்சமில்லை. இவள் கணவருக்கு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை. கை நிறைய சம்பளம். ஒரு பெண் குழந்தை மட்டும்.

திருவிழாவிற்கென முதலில் வருகை தந்தவள் வசந்தி தான். வந்ததுமே, `இன்னும் புவனா வரலையாம்மா?' எனக்கேட்டு அவள் வருகைக்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்தவள் தான்..

புவனா குடும்பத்தோடு வந்ததும் நலம் விசாரிப்பதில் தொடங்கி, பழைய நினைவுகளைப்பேசி என பொழுது நன்றாகதான் கழிந்தது. ஆனால், அம்மாவின் பாசத்தில் ஓரவஞ்சனை இருப்பதாக நேற்றிலிருந்து தான் உணர்ந்தாள் வசந்தி.

`புவனா.. நல்லா சாப்பிடும்மா... ரொம்பவும் இளைச்சுப்போயிட்டே?'

`இல்லம்மா.. நார்மலா தான் இருக்கேன்.. ரொம்பநாள் பார்க்காமல் இருந்ததால் உனக்கு அப்படி தெரியுது'

தன்னைக் கேட்கவில்லையே என மனதுக்குள் சஞ்சலமானாள் வசந்தி. அவளைப்புரிந்து கொண்டது போல், `என்னம்மா வசந்தி.. நீயும் கூட இளைச்ச மாதிரி தான் தெரியறே..' எனக்கேட்டாள் அம்மா.

`எனக்கென்ன.. நல்லா தான் இருக்கேன்' என்றாள் வெடுக்கென. `அவள் வசதியாக இருக்கிறாள் என்பதற்காக முதலில் அவளைக் கேட்டு விட்டு, ஒப்புக்கு சப்பாணியாக என்னையும் கேட்கிறாள்' என நினைத்துக் கொண்டாள்..

`இந்த பாத்திரங்களை எல்லாம் கழுவி வைக்க, கொஞ்சம் ஒத்தாசை பண்ணு வசந்தி.

`வேலை செய்ய மட்டும் நான்.. அவளும் வந்து பாத்திரம் கழுவினால் தேய்ஞ்சா போயிடுவாள்' அம்மாவிடம் சொல்ல வாய் எழவில்லை மனப்புழுக்கம் அதிகரித்தது.

இதுபோல சின்னச்சின்ன செய்கைகள் வசந்தி மனதில் புகைச்சலை அதிகப்படுத்தியது.

`வசதி இருந்தால் ஒரு மாதிரியாகவும், இல்லாவிட்டால் ஒரு மாதிரியாகவும் நடந்து கொள்ளும் அம்மாவை புரிந்து கொண்டாயிற்று. இனி இங்கிருந்து என்ன செய்யப்போகிறோம்... கேட்டால், அவள் எப்போதாவது வருபவள்.. நீ அடிக்கடி வந்து போறவள்னு நியாயம் பேசுவாள்... ஏன் கேட்டு வருத்தப்பட செய்வானேன்...அவளையே கொஞ்சட்டும். நாம் கிளம்புவோம்' என்றெண்ணியவள் தாயிடம் கூறினாள்.

`அம்மா.. இன்னைக்கு மதியம் ஊருக்கு கிளம்பறேன்'

`என்ன அவசரம் வசந்தி.. மாப்பிள்ளையே இன்னும் நாலைஞ்சு நாள் இருந்துட்டு வாங்கன்னு சொல்லிட்டாரே.. அதுக்குள்ள கிளம்பாட்டி என்ன?'

`அவர் அப்படித்தாம்மா சொல்வாரு.. அங்கே தனியா இருந்து ரொம்பவும் சிரமப்படுவார்.. வீட்ல நான் இல்லைன்னா சரியா சாப்பிடவே மாட்டார்.. போதாதற்கு, தைக்கிறதுக்குனு வாங்கி வச்ச துணிகள் நிறைய சேர்ந்து கிடக்கு.. வர்றேம்மா... புவனா ஊருக்கு கிளம்பும் போது அப்படியே வீட்டுக்கு வந்துட்டு போ..'

`இருக்கா.. அம்மா நாளைக்கு கறி எடுக்கிறாங்களாம்.. சாப்பிட்டு ஒண்ணாவே கிளம்பலாம்..'

`இல்ல புவனா.. நீ சாப்பிடு.. நீ சாப்பிட்டா, நான் சாப்பிட்ட மாதிரி' என சிரித்துக்கொண்டே தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு விடைபெற்றாள் வசந்தி.

வெளித்தோற்றத்தில் தான் சிரித்தாளே தவிர, உள்ளுக்குள் பொருமல் இருந்தது.


``அக்காவை கண்டுக்காமல், அம்மா என்னை மட்டும் விழுந்து விழுந்து கவனிக்கும்போதே நினைச்சேங்க.. அம்மா எதையோ எதிர்பார்க்கிறாள்னு...'' போனில் கணவனிடம் கூறினாள் புவனா..

`என்ன கேட்டாங்க?'

`முன்ன மாதிரி சமையல் வேலை இல்லையாம்.. கஷ்டமா இருக்குதுன்னு புலம்பினாங்க.. அதனால, வச்சுக்கம்மான்னு சொல்லி ஐயாயிரம் ரூபாயை கையில் குடுத்துட்டு வந்தேன்.. இதுக்கு தான் அக்கா நைசா முதல்நாளே கிளம்பிட்டா போலிருக்கு..'

`பரவாயில்லை விடு புவனா.. அம்மாவுக்கு கொடுக்கிறதுல தப்பில்லை.. உங்கக்கா வீட்டுக்கு போகலையா?'

`நீங்க இல்லாம நான் மட்டும் போனா மரியாதையா இருக்காதுங்க.. அதனால, இன்னொரு நாள் குடும்பத்தோட வர்றேன்னு போன் பண்ணி சொல்லிட்டேன்..'...

இந்தா வசந்தி.. இதுல ஐயாயிரம் ரூபாய் இருக்கு.. இப்ப நீ கஷ்டத்துல இருக்கிறே.. வச்சுக்க' என வசந்தியிடம் கொடுத்தாள் அம்மா.

`ஏதும்மா?'

`நான் கஷ்டத்துல இருக்கேன்னு சொல்லி புவனா கிட்டே வாங்கினேன் வசந்தி.. உன்னை சரியா கண்டுக்கவே இல்லைன்னு வருத்தப்பட்டிருப்பே தானே.. அடிக்கடி உன்னை நேர்ல பார்த்து நலம் விசாரிக்க முடியும்மா.. ஆனா, அவளை எப்பவாவது விசேஷம்னா தானே பார்க்க முடியும்.. தவிர, பக்கத்துல இருக்கிறதால தான் அக்கா மேல பாசம் காட்டறாங்கன்னு அவள் மனசுல தப்பான எண்ணம் வந்துடக்கூடாது பாரு.. பொதுவா ரெண்டு பேர் கிட்டேயும் ஒரே மாதிரி தான் அன்பு காட்டினேன்.. நீ தான் மனசுக்குள்ளே சலனத்தை ஏற்படுத்திக்கிட்டு வெறுப்போட வந்துட்டே.. உன் கஷ்டம் தெரிஞ்சு தான் எனக்காக பணம் கேட்டேன்.. தங்கச்சி கிட்டே கஷ்டம்னு சொல்லி நீ கேட்டா கவுரவக் குறைச்சல் ஆகும் வசந்தி.. ஆனா, மக கிட்டே தாய் கேட்கறதிலே கவுரவம் குறைஞ்சிடாது..'

தாயை புரிந்து கொண்டவளாக, `என்னை மன்னிச்சுடும்மா.. நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்' என்றாள் வசந்தி.


இந்த சிறு கதை உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டுபோட்டு உங்கள் உணர்வுகளை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி : S.சுமதி



Related Posts with Thumbnails
 
back to top