முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை இன்று நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் 1908ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பிறந்தவர் உக்கிரபாண்டி முத்துராமலிங்கத் தேவர்.

மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான முத்துராமலிங்கத் தேவர், அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவராக இருந்தவர். தேசியவாதி, அரசியலையும், ஆன்மீகத்தையும் தனது இரு கண்களாக பாவித்தவர். பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவராக இரு்நதவர். மூன்று முறை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மிகப் பெரும் நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தவர் தேவர். உக்கிரபாண்டித் தேவர், இந்திராணி தம்பதிக்கு ஒரே மகன். இவருக்கு ஜானகி என்ற சகோதரியும் இருந்தார்.

தேவர் பிறந்த சில காலத்திலேயே அவரது தாயார் மரணமடைந்தார். அவரது சித்தியும் அடுத்த ஆண்டு மரணமடைந்தார்.

1910ம் ஆண்டு முதல் தனது பாட்டி பார்வதியம்மாள் பராமரிப்பில் கள்ளுப்பட்டி கிராமத்தில் வளர்ந்தார் தேவர். தேவரின் தந்தைக்கு மிகவும் நெருங்கிய நண்பரான குழந்தைச்சாமி பிள்ளை, முத்துராமலிங்கத் தேவரை வளர்த்ததில் முக்கியப் பங்கு வகித்தார். பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தார். கமுதியில் உள்ள அமெரிக்கன் மிஷனரி பள்ளியில் படித்தார் தேவர். பின்னர் மதுரை திருப்பரங்குன்றம் பசுமலை உயர் நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் மதுரை யூனியன் கிறிஸ்டியன் உயர் நிலைப் பள்ளியில் படித்தார்.

இருப்பினும் 1924ம் ஆண்டு பிளேக் நோய் தாக்கியதால் பள்ளி இறுதியாண்டுத் தேர்வை எழுத முடியாமல் போனது. இந்த நிலையில் பசும்பொன் கிராமத்தில் தனது பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதால் அங்கு திரும்பினார் முத்துராமலிங்கத் தேவர். 1927ம் ஆண்டு அந்த வழக்கு தேவருக்கு சாதகமாக முடிந்தது.

அந்த சமயத்தில் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் குற்ற பரம்பரைச் சட்டம் அமலில் இருந்து வந்தது. இது தேவரை பெரும் வேதனை அடையச் செய்தது. இந்த நிலையில் அவர் அரசியலில் குதித்தார். இந்த சட்டத்தை நீக்குவதற்காக அவர் ஆதரவு திரட்டத் தொடங்கினார். கிராமம் கிராமமாக சென்று கூட்டங்களை நடத்தினார்.

இந்த நிலையில் 1929ம் ஆண்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 19 கிராமங்களைச் சேர்ந்த மறவர் சமுதாயத்தினரை இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வந்தனர். இதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தினார் தேவர். இந்த சட்டத்திற்கு மறவர் சமுதாயத்தினர் யாரும் அடிபணிய வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அவர்களும் போராட்டத்தில் குதிக்க அந்த சட்டத்தை பகுதியாக விலக்கிக் கொண்டது அப்போதைய சென்னை மாகாண அரசு.

தேவரின் தொடர் முயற்சிகளால் 2000 கிராமங்கள் இந்த சட்டத்தின் கீழ் இருந்த நிலை மாறி 341 ஆக குறைந்தது.

தனித்துப் போராடினால் வெற்றி பெற முடியாது, காங்கிரஸுடன் இணைந்து போராடுவது என தீர்மானித்தார் தேவர். இதையடுத்து 1936ம் ஆண்டு அவர் பர்மாவிலிருந்து திரும்பியதும், தென் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார்.

இந்த சமயத்தில் நடந்த மாவட்ட போர்டு தேர்தலில், முதுகுளத்தோர் தொகுதியில் போட்டியிட்டு நீதிக் கட்சி வேட்பாளரை வீழ்த்தினார். இதுதான் அவர் அரசியலில் பெற்ற முதல் வெற்றி.

1937ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார் தேவர். இதில் பெரும் வெற்றி பெற்றார். ராமநாதபுரம் மன்னரை இந்தத் தேர்தலில் தோற்கடித்தார் தேவர்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் ஆட்சி வந்ததால், குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கும் என நம்பினார் தேவர். ஆனால் முதல்வராகப் பதவியேற்ற ராஜாஜி அதை நிறைவேற்றத் தவறினார்.

இந்த நிலையில், 1946ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு போட்டியின்றி வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலுக்குப் பின்னர் குற்றப் பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்டது.

1955ம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார் பார்வர்ட் பிளாக். தனது மரணம் வரை அவரே இந்தப் பொறுப்பில் இருந்தார்.

1963ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி தனது 55வது பிறந்த நாளின்போது மரணமடைந்தார் தேவர்.

அவரது பிறந்த நாளும், இறந்த நாளும் ஒரே நாளில் வருவதால் அதை குருபூஜையாக முக்குலத்தோர் இனத்தவர் அனுசரித்து பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

நன்றி : Thatstamil

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் ஒரு வோட்டு போடுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!



ஒரு தாயின் முதல் கவிதை - 'வேதனை'

இன்று காலை எனக்கு ஒரு கடிதம் ஒற்றை கொடுத்தாள், என் தோழி ஒருவள். அதில், 'வேதனை' என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதபட்டிருந்தது. அது அவளது தாயார், வீட்டு வேலைகள் முடித்த பின்னை கிடைக்கும் சில நேரங்களில் மனதிற்கு தோன்றும் சில எண்ணக்களை கவிதையாக எழுதும் வழக்கம் உள்ளதாகவும், எழுதப்படும் கவிதைகளை முறைப்படி சேகரிக்கவில்லை எனவும், கடந்த வாரம் எழுதிய கவிதை ஒற்றை எடுத்துவந்துவிட்டதாக சொன்னாள்.

மேலும், படித்து பாருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ப்ளொக்கில்(blog) பதிவிடுங்கள் என்று கேட்டுகொள்ள - நானும் ஒரு தாயின் கவிதை, சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசை பட்டு இங்கே பிரசவிக்கிறேன்.

நீங்களும் படித்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை மறக்காமல் இங்கே தெரிவிக்கவும். அவைகள் இந்த கவிதை எழுதிய தாயிடம் சென்று சேரும் இந்த பதிவின் வழியாக...

வேதனை

நிழல்படமாய் என் வீட்டு சுவற்றில்
நினைத்து பார்க்க முடியவில்லை - உன் பிரிவை
நிற்கதியானேன் ! நினைவிழந்து போனேன்
நீயே என் நிதி! இனி யார் என் கத்தி ?...

கணவன் அமைவது கடவுள்
கொடுத்த வரமெனில் - அன்பே
நீ எனக்கு வரம்
கொடுத்தவனுக்கு இரக்கமே இல்லையா ?
என்னில் உன்னை எடுத்து சென்றான்...

வாழ்ந்தது சில மாதங்களே
வருடமும் ஆகவில்லை
வாழ்விழந்து போனதேன்!
வஞ்சி நான் செய்த வினைதானென்ன?...

என்னுயிரை எடுத்து சென்றாய்
நடை பிணமானேன்...
பின்னும் வாழ்கிறேன் - ஏன்
உன்னுயிர் என் கருவுக்குள் ...

இனியவனே அன்று உன் அணைப்பில்
என்னை மறந்தேன் - மன்னவா!
மீண்டும் வா என் மகனாய்
என் அணைப்பில் உன்னை இறுக்கிக் கொள்ள...
நன்றி : கடிதம் கொண்டு வந்து சேர்த்த சிவதர்ஷினி அவர்களுக்கு என் நன்றிகள். உங்கள் அன்னையின் கவிதை பயணம் தொடர என் வாழ்த்துகள்!

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் ஒரு வோட்டு போடுங்க.

நன்றி! மீண்டும் வருக!!!



ஆதவன் - திரை விமர்சனம்

நேற்று தான் இந்த படத்த பார்த்தேன் காரபக்கம் அரவிந்த் தியேடரில். கூட்டம் நிறைத்து இருத்து. விசில் சப்தம் காதை கிழிக்கும் அளவு... ரசிகர்கள் உற்சாகத்தில்... அவர்களுடன் நானும் ஒருவனாய்.... அமர்திருந்தேன்.

படத்தோட கதை என்னனா ...

அப்பா சாயாஷி ஷிண்டே மற்றும் அண்ணன் ஆனந்த்பாபு உடன் கடத்தல், கொள்ளை, கொலை என்று தப்பான வளர்ப்பால் உருவாகிறார் ஹீரோ ஆதவன்(சூர்யா).

கொல்கத்தாவில் குழந்தைகளின் உடலுறுப்புக்களைத் திருடி விற்கும் ஒரு கும்பலைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பு நேர்மையான நீதிபதி (பரத்முரளி)யிடம் வருகிறது. நீதிபதியைக் கொலை செய்ய வில்லனால் விலை பேசப்படும் சூர்யா, பரத்முரளியின் மீது வைத்த குறி தப்ப, வில்லன் கூட்டம் சூர்யாவின் கூட்டத்தை மிரட்டுகிறது.

பொங்கி எழும் சூர்யா, அடுத்த 10 நாட்களில் அந்த நீதிபதியைக் கொல்வேன் என்று சபதம் செய்கிறார். பின்னர், பானர்ஜீ (வடிவேலு)வின் துணையோடு நீதிபதியின் குடும்பத்துக்குள் சென்று - வேலை செய்ய வந்தது போல நடித்து - அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்.

அங்கே இருக்கும் பெண்கள் (சரோஜா தேவி & co), குழந்தைகளிடம் நல்லவனாக நடிக்கிறான். எல்லோருக்கும் அவனை பிடிக்கிறது. அனைவரும் சூர்யாவிடம் அன்பு மழை பொழிய - நீதிபதி தங்கை மகள் தாரா (நயன்தாரா) அவன் மேல் காதல் வயப்படுகிறாள்.

இதனிடையே நம்ப ஹீரோ வந்த வேலையை ஜோரா செய்ய - காருக்கு அடியில் வெடிகுண்டு பொருத்துகிறான். அதில் நீதிபதி தப்புகிறார். பிறகு கிட்டாருக்குள் டைம்பாம் வைத்து கார் டிக்கியில் பொருத்தி வெடிக்க வைக்கிறான். அதிலும் நீதிபதி சாகவில்லை. வில்லன் கூட்டம் நீதிபதியை கொல்ல நேரடியாய் களம் இறங்குகிறது.

இந்நிலையில், சூர்யாவுக்கு ஓர் உண்மை தெரிகிறது. அது என்ன உண்மை ...? பரத்முரளியைச் சூர்யா கொன்றாரா ? வில்லன் கூட்டம் நீதிபதியை என்ன செய்தார்கள் என்று மீதி கதையை திரையில் காண்க.

படத்துல எனக்கு பிடித்த/பிடிக்காத சில ..

  • வடிவேல் தான் படத்தின் நிஜமான நாயகன். படத்திற்குப் பலமே நகைச்சுவைக் காட்சிகள் தான். இவரு ரொம்ப நாள் கழிச்சு இந்த படத்துல தான் அடி வாங்காத மாதிரி நடிசிருக்காரு. பானர்ஜீயோட பெயர்க்காரணம்,பொறம்போக்கு - புது விளக்கம், ஜிகர்தண்டா தூத் குடிச்சுட்டு உளறும் காட்சி, பாம் வெச்ச பஸ்ல ஏறிட்டு படாத பாடுபடுறது... இப்படி படம் பூரா மின்னிருக்காரு. மேலும் இவரு, சரோஜாதேவியின் மேக்கப்பை கிண்டல் செய்யும் போதெல்லாம் சி‌ரிப்பில் திரையரங்கு கதிகலங்குது. 'கைப்புள்ளை', 'நாய் சேகர்' வரிசையில் கண்டிப்பா இந்த 'பானர்ஜீ'க்கும் இடம் உண்டு.

  • "சுட்ட பிறகு தலை எனக்குதான்" என்ற ஒரு டயலாக்கை சொல்லி சொல்லியே தியேட்டரை உலுக்கி எடுக்கிறார் மனேபாலா.

  • பத்து வயது கெட்டப்பில் ரொம்ப மெனக்கெட்டு நடித்திருக்கிறார் சூர்யா. மற்றபடி அயனில் பார்த்த அதே சூர்யவை தான் இந்த படதில்லும் பார்க்கமுடிகிறது. பெருசா நடிக்க சொல்ல ஒன்னும் இல்ல.

  • மறைந்த மலையாள நடிகர் பரத்முரளியின் நடிப்பு நிறைவு. வழக்கமான சினிமா அப்பாவாக அவரை வீணடித்திருக்கிறார்கள்.

  • நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் சரோஜா தேவியும், ஆனந்த் பாபுவும். சரோஜாதேவி - 'அன்று வந்ததும் அதே நிலா' பாட்டுக்கு அவர் காட்டும் அபிநயம் ... அழகு! 'ஓல்ட் இஸ் கோல்ட்'. ஆனந்த் பாபு - ரொம்ப தான் ஆள் நோடிஞ்சு போய் இருக்கார். அப்பா நாகேஷ் மறைந்த துக்கம் இன்னும் விலகலபோல தெரியுது.

  • நயன்தாரா - அவருக்கு இந்தப் படத்தில் என்ன வேலை என்று புரியவில்லை. பாட‌ல்க‌ளில் க‌ல‌ர்கல‌ராக‌ வ‌ரும் ந‌ய‌ன்தாராவுக்கு வேலையே இல்லை. மேக்க‌ப்பும் அவ‌ரும்... ச‌கிக்கலை. இவரை போலவே, ரமேஷ் கண்ணா. எதற்காக வருகிறார்..?

  • இசை ஹாரிஸ் ஜெய‌ராஜ். பாட‌ல்க‌ள் அதே மெட்டு தான் என்றாலும், கேட்ப‌த‌ற்கு ஓகே. ஆனால், பின்னணி இசை கொடுமை. ஒரே இரைச்சல் தான். அரைச்ச மாவையே சும்மா அரைத்துகிட்டு இருந்தா எப்படி சார்...?

  • ஒளிப்பதிவாளர் கணேஷ்-ன் ஒளிப்ப‌திவு சூப்ப‌ர்! சண்டைப் பயிற்சியாளர் பிரான்ஸ் ஆகியோர் தங்களது பணியைத் திறம்பட செய்திருக்கிறார்கள்.

  • கமலை 10 அவதாரம் எடுத்த டைரக்டர் கே எஸ் ர‌விக்குமார் - மீண்டும் ஒரு 'மின்சார கண்ணா' மாதிரி படத்த எடுத்து செய்த தவறையே மீண்டும் செய்துள்ளார்.


ஆதவன் - மசாலா படம்!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் ஒரு வோட்டு போடுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!



தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

தீபாவளி கொண்டாலாமா வேண்டாமா-னு பட்டிமன்றம் நடக்கும் மானிடகர்கள் மத்தியில் மனிதர்களாக, உறவுகளுடன் ஒரு நாள்...

சந்திப்பு
புது உடை
இனிப்புகள்
கொண்டாட்டம்
விருந்து
கேளிக்கை
ஆட்டம் பாட்டம்
என் மகிழ்ந்து சந்தோசமாக இருப்போம் இன்று போல் என்றும்.

இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்!!!


வாழ்த்துகளுடன்,
கோழிபையன்


திரும்பிபார்கிறேன் : நான் பாடும் பாடல் - விமர்சனம்

விடியற்காலை, திடீரெண்டு முழிப்பு வர, மேற்கொண்டு என்னால் படுக்க தூங்கமுடியவில்லை. அப்போது தான் நாபகம் வந்தது கடந்த சனி அன்று வாங்கி வந்த DVD. அது, ஆர். சுந்தராஜன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நான் பாடும் பாடல். தூக்கம் வரும்வரை இந்த படத்தை பார்கலாமுனு பார்க்க ஆரமிச்சேன். படம் முடியும் வரை அதனை நிறுத்த மனம் வரவில்லை.

விதவைத் திருமணத்துக்கு ஆதரவான கருத்து வேகமாகப் பரவத் தொடங்கிய காலத்தில், அதற்கு எதிராக இப்படி ஒரு படமா என விமர்சனம் கிளம்பினாலும், படம் பெரிய வெற்றியைப் பெற்றது. காரணம், இளையராஜாவின் அற்புதமான இசை மற்றும் கவுண்டரின் அதிர்வேட்டு நகைச்சுவை.

படத்தோட கதை என்னனா ...
கன்னியாகுமாரி. பத்து குடித்தனம் இருக்கும் ஒரு காம்பவுண்டு. அங்கே நடக்கும் ஒரு கதை தான் இந்த படம். அம்பிகா, பாண்டியன், கவுண்டமணி இன்னும் சிலர் அந்த பத்து குடும்பத்தில் அடங்குவர்.

மூன்று நாளில் கணவனை இழந்த பெண் அம்பிகா. இவள் அவளது கணவர் குடுபத்துடன் வசிப்பவர், ஆசிரியர் பணியில் இருந்தவாறு. புத்தகம் இவளது நண்பர். அதுவும் அழுத்திய புக் என்றால் 'சால இஸ்டம்' படிப்பதற்கு. இவளது கணவர் தங்கையை காதலிப்பவர் பாண்டியன். இவனது உறவுகார மாமா சிவக்குமார், ஒரு கதை ஆசிரியர். தனது அடுத்த கதையை எழுத தன்னை தாயார் செய்துகொள்ள அங்கே வருகிறார். வரும்போதே அம்பிகாவால் அடி உதை வாங்கி - இவர் மீது அனுதாபம் வருகிறது அம்பிகாவுக்கு.

இந்நிலையில், இவளை காதலிக்கும் இரண்டு ஜீவன்கள்: ஒருவர் பணக்காரர், சரத்பாபு. மற்றொருவர் பஸ் கண்டக்டர் சுரேஷ். இருவரும் மாறி மாறி அன்பை வெளிபடுத்த இவள் அவர்களை ஒதுக்க - ஒரு நாள் பஸ்சில் "பாடவா உன் பாடலை என் வாழ்விலோ ஓர் பொன்வீணை ..." ஒலிக்க இவளது முகம் வியத்து பஸ்ஸை விட்டு இரங்கி நடந்து வருகிறாள் வீட்டிருக்கு.
வை கறையில் வைகை கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்....
காய்சல். படுக்கையில் அம்பிகா. வெளியே, எழுத்தாளர் சிவக்குமார் வானொலில் நேயர் பாடலை கேட்டுகொண்டிருக்கும் போது, மீண்டும் ஒலிக்கிறது அதே பாடல்."பாடவா உன் பாடலை என் வாழ்விலோ ஓர் பொன்வீணை ...". மெல்ல வெளியே வந்து முடியாமல் பாடலை நிறுத்துகிறாள். புரியாமல் நிற்கிறார் சிவகுமார்.
மறுநாள், மாலை நேரம்,
பாடவா உன் பாடலை பாடவா உன் பாடலை
என் வாழ்விலோ ஓர் பொன்வீணை....
அதே பாடலை அம்பிகா - தனிமையான இடத்தில் பாடிகொண்டிருபதை சிவகுமார் பார்த்துவிட - கவுண்டமானியின் மனைவியிடம் விசாரிக்கையில்.... ஒரு பிளாஷ்பேக்.
*****
சென்னை. டாக்டர் மோகனை ஒரு கல்யாண நிகழ்ச்சியில் சந்திக்கிறார், அம்பிகா. கண்டதும் காதல் மோகனுக்கு. ஒரு பாடல் வேற பாடிவிடுகிறார் அந்த கல்யாண மேடையில்...
தேவன் கோவில் தீபம் ஓன்று
ராகம் பாடும் நேரம் இன்று.......
பிறகு இருவரும் சில இடங்களில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க, மனம் இடம் மாற - பெரியவர்கள் முநிலையில் - திருமணம் நடக்கிறது.
மூன்றாவது நாள், இவளுக்கு ஒரு படத்தில் பாட வாய்ப்பு கிடைக்க, அம்பிகாவும் மோகனும் ரெகார்டிங் தியேடர் செல்லும் முன்பு ஒரு அழைப்பு மணி(போன்). நளினி தனது கணவருக்கு ஆபரேஷன் செய்ய வருமாறு மோகனை அழைக்க, ஒருவழியாக மருத்துவமனை வருகிறார். ஆபரேஷன் முடித்து காரில் கிளம்பி வரும்போது, அங்கே...ரெகார்டிங் தியேடர் -ல்...
பாடவா உன் பாடலை பாடவா உன் பாடலை
என் வாழ்விலோ ஓர் பொன்வீணை....
பாடல் முடிவில்... விபத்து.
******
அம்பிகாவுக்கு, தன் கைப்பட ஒரு கடிதம் எழுதுகிறார் கதை ஆசிரியர் சிவக்குமார். அவளை ஒரு கோவிலில் சந்திப்பதாக சொல்லி. இவளும் செல்கிறாள்..
"பாடும் வானம்பாடி ஹா... பாடும் வானம்பாடி
மார்கழி மாதமோ பார்வைகள் ஈரமோ ..."
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை, சிவகுமார் தான் இவள் நேசிக்கும் எழுத்தாளர் என்று. இவள் எழுதிய கடிதம் ஓன்று அம்பிகா குடும்பத்தில் கிடைக்க பெற, இவள் மீது சந்தேகம் வர - ஒரு கட்டத்தில் சிவகுமார் தான் CRS என தெரிந்ததும் - சிவகுமாருக்கு அம்பிகாவை மறுமணம் தயாராகிறார். இந்நிலையில், பாண்டியனின் காதலும் வளர்கிறது...
"மட்சானே வட்சுகடி முந்தானை முடிசுலதான்
உன்மேலே ஆசைவட்சேன் ....."
அம்பிகாவின் மாற்றத்தை உணர்ந்த மாமனார் - மாமியாரும் சேர்ந்து சிவகுமாருக்கு அம்பிகாவை திருமணம் முடிவெடுக்கிறார்கள்.
"சீர் கொண்டு வா வெண்மேகமே
இது இனிய வசந்த காலம் ...."

பிறகு என்ன நடந்தது...?
அம்பிகா - சிவகுமார் திருமணம் நடந்ததா ?
சுரேஷ், சரத்து பாபுவின் நிலை என்ன?
பாண்டியன் காதல் என்ன ஆச்சு?
... மீதியை வெள்ளித்திரையில் காண்க அல்லது நாலா DVD வாங்கி பாருங்க.

படத்துல .... என்னை கவர்த்தவைகள் பல...
  • விதவை திருமணம் பற்றி மிக அழகாக பதிவு செய்த டைரக்டர் சுந்தரராஜனை மனதார பாராட்டலாம்.
  • தெளிவான திரைக்கதையும் கதாபாத்திர படைப்புகளும்.
  • அருமையான எழு பாடல்கள் + மிரட்டும் பின்னணி இசை சேர்ப்பும். இளைய ராஜா... ராஜா தான் பின்னணியில். அதுவும் கடைசி அந்து நிமிஷம் ... இசையால் பல உணர்வுகளை வெளிகொனர்வார் பாருங்க... அட அட... சபாஸ் சார்.
  • நட்சத்திர பட்டாளமே இதன் ஒரு பெரிய + பாயிண்ட். ஒவொருவரும் சிறப்பாக தங்கள் கடிப்பை காட்டியிருபத் கூடுதல் சிறப்பு.
  • கவுண்டமையின் டைமிங் காமெடி. ஆஹா.
பாடும் வானம் பாடி - இன்னும் ஒலித்துகொண்டே இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரை சென்றடைய ஒரு வோட்டு போட்ட போதும் எனக்கு. நன்றி. மீண்டும் வருக!!!



மாப்பு... மாப்பு... 5 ரூபாயில வட்சுடாண்டா... பெரிய ஆப்பு!!!

....வரும் செல்லும் அடுத்த மின்சார தொடர் வண்டி இன்னும் சில நிமிடங்களில் ஒன்னாவது நடைமேடையில் இருந்து புறப்படும்.
...
...
கொஞ்ச நேரத்தில்....
...
...
...
சார்... டீ... காபீ... காபீ... சாயி.... இந்த சத்தத்தை கேட்டாமல் ரயில் பயணம் இல்லை.
...
...

நீங்கள் இந்தியன் ரயில்வேயில் பயணம் செய்ய ரொம்ப விருபுவரா ? அப்படியானால் உங்ககிட்டே ஒரு கேள்வி. நீங்கள் பயணத்தின் போது வழியில் டீ, காபீ போன்றவற்றை வாங்கி குடிபவரானால், ஒரு நிமிஷம் கீழே வரும் தகவலை படிச்சுட்டு போங்க.

சுத்தம் சுகாதாரம் பத்தி நாம ரொம்ப வாதாடுவோம் நாம் சொன்றுள் சாப்பிடும் ஹோட்டல், விடுதி போன்ற இடங்களில். அதுவும் அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் நலன் கருதி சற்றே அதிக கவனம் செலுத்தி, நாம் உபயோக படுத்தும் பொருள்களின் சுத்தத்தை பாராமரிப்பார்கள். அங்கேயே, நாம டிஸ்ஸு பேப்பர் கொண்டு இன்னும் கொஞ்சம் சுத்தம் செய்வோம். கேட்டால் எனக்கு அப்பாவும் சுத்தமா இருந்தா தான் பிடிக்குனும் ஒரு பக்க வசனம் பேசுவோம்.

ஆனால், வெளியிடங்களுக்கு செல்லும் நேரத்தில் இத்தனை மூட்டைகட்டி பரணில் போட்டுவிடுவதும் உண்டு.
......
ரயில் பயணம் செய்யும் போது இந்த சத்தத்தை நாம் கேட்க முடியும். உடனே, எனக்கும் ஒரு டீ கொடுப்பா. இந்த ரூபாய்னு கொடுத்த நாட்கள் நாபகம் இருக்கு உங்களுக்கு?

பாத்ரூம் போற வரவங்களுக்குனு ஒரு தண்ணீர் குழாய் இருக்கு பார்த்து உண்டா? அந்த தண்ணியை கொஞ்சம் கையில் பிடித்து பாருங்க. அவளவு அசுத்தமா இருக்கும். நாம் பாத்ரூம் சென்றுவிட்டு வரும்போது பயன்படுத்து தண்ணீரும், ரயில்களில் தாயாரிக்க படும்
டீ, காப்பீ போன்ற உணவு பொருள்களுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரும் ஒன்றே.

டீ, காப்பீ போன்ற பொருள்கள் தயாரிக்க ரயிலில் இவர்களுக்கு என்று ஒதுக்க பட்ட இடம் பாத்ரூம்க்கு அருகில் இருக்கும் அறை. அதன் சுத்தம் சுதாதாரத்தை பத்தி சொல்லவே வேண்டாம்.

இதைவிட கொஞ்சம் ஓவரு... அடுத்த மேட்டர். நாம வீட்டில் தண்ணீர் காயவைக்க உபயோகபடுத்துவமே மின்சார ஹீட்டர், அதைக்கொண்டு தான் இவர்கள், டீ, காப்பி போன்றவைகளை தாயாரிக்க / சூடுசெய்ய செய்ய இவர்கள் உபயோக படுத்துகிறார்கள்.

இப்படி தரமில்லாத உங்களை சாபிடாமல் தவிப்பது நமக்கு நாமே நன்மை செய்ததுபோலகும்.

இதயெல்லாம் பார்க்கும்போது எனக்கு வடிவேலு சந்திரமுகியில் சொல்லும் ஒரு வசனம் நாபகம் வருது.
"மாப்பு... மாப்பு... 5 ரூபாயில வட்சுடாண்டா... பெரிய ஆப்பு....!!!"

நான் இங்கே குறிபிடுவது தரமாக தயாரிக்கப்படும் உணவு பொருகளை பற்றி அல்ல. புகார் பெட்டியில் வந்த தகவல் இது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு போங்க.
நல்ல பதிவு பலரையும் சென்றடைய ஒரு வோட்டு மட்டும் போட்ட போதும் எனக்கு.



நவீன தாலாட்டு - கவியரசு வைரமுத்து


இந்தியாவுக்கு ஒரு ஆகத்து 15 வந்து விட்டது. இந்திய பெண்களுக்கு ஆகத்து 15 எப்போது?. பொருளாதார உதவி கிடைத்துவிட்டதால் பூட்டியிருந்த விலங்கு நொறுங்கி விடும் என்று கருதினர், போன நுற்றாண்டு பெண்.

ஆனால், பொருளாதார விடுதலை கூட கூட சில புதிய விலங்குகளை பூட்டியிருந்தது என்று இனம் கண்டு கொண்டவள் இந்த நுற்றாண்டு பெண். சிறகு இருந்தும் பறக்க முடியவில்லை என்று விமியவன் வீட்டுக்குள் இருந்த பெண்.

பறப்பதற்கு இரண்டு சிறகுகள் போதவில்லை என்று விசுபுகிறவள் வேலைக்கு போகிற பெண்.

வேலைக்கு போகும் பெண்ண தன் வாழ்க்கைக்கு கொடுக்கும் விலை கொஞ்சம் நஞ்சமில்லை. போன ௧0 ஆண்டில் ஒரு காலும் இந்த நுற்றாண்டில் ஒரு காலும் பதித்து கொண்டு அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் திசையிழந்த பெண்மை திரிசங்கு சொர்கத்தில் திவிகிறாள்.

அலுவலகம் செல்லும் ஒரு பெண்ணின் அவசர தாலாட்டு தான் கவியரசு வைரமுத்து சொல்லும் இந்த கவிதை.

இந்த அவசர நுற்றாண்டில் இருதயம் துடிக்கும் இயந்திரங்களாய் மாறிவிட்டது. மனிதன் நெருப்பில் உட்கார்ந்து கொண்டு வயலின் வாசிக்கிறான். அடுப்பில் உட்கார்ந்துகொண்டு காதலிக்கிறான். கணவனும் மனைவியும் இண்டர்போளில்தாம்பத்தியம் நடுத்துகிறார்கள்.
குழந்தைக்கு முத்தம் தபாலில் வருகிறது. காதலிக்கு வாங்கிய மல்லிகை பூ டீசல் புகையில் கருபாகிவிடுகிறது. இப்படி நிறம் மாறும் ஒரு வாழ்க்கையில் தாய் பாடும் ஒரு தாலாட்டு மட்டும் தடம் மாறிபோகாமல் இருக்குமா என்ன? எனவே தான் ஒரு குழந்தைக்கு முன்னிரவில் பாட பட வேண்டிய தாலாட்டு முற்பகலில் பாடும் தாலாட்டாய் முகம் மாறிவிடுகிறது.

வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில் அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது.

சோலைக்கு பிறந்தவளே!
சுத்தமுள்ள தாமரையே!
வேலைக்கு போகின்றேன் - வெண்ணிலவே கண்ணுறங்கு!

அலுவலகம் விட்டு -
அம்மா வரும் வரைக்கும் -
கேசட்டில் தாலாட்டு - கேட்டபடி கண்ணுறங்கு!

ஒரு மணிக்கு ஒரு பாடல்
ஒளிபரப்பும் வானொலியில்
விளம்பரங்கள் மத்தியில் - விழி சாத்தி நீயுறங்கு!

9 மணி ஆனால் உன் அப்பா சொந்தமில்லை -
9:30 மணி ஆனால் உன் அம்மா சொந்தமில்லை -
ஆயவும் தொலைக்காட்சியும் அசதியில் தூங்கிவிட்டால் -
தூக்கத்தை தவிர துணைக்கு வர யாருமில்லை!

20-ம் நூற்றாண்டில் என் கருவில் வந்தவளே!
இது தான் கதியென்று - இன்னமுதே கண்ணுறங்கு!

தூரத்தில் இருந்தாலும் தூயவளே -
உன் தொட்டில் ஓரத்தில் -
என் நினைவு - ஓடிவரும் கண்ணுறங்கு!

பேருந்தில் நசுங்கி, பிதுங்கி போகிற வேளையிலும்
எடை கொஞ்சம் இழந்து இறங்குகின்ற வேளையிலும்
பூப்பூவாய் உனது புகம் புறப்பட்டு வரும் கண்ணே!

தந்தை வந்து கொஞ்சுவதாய் -
தங்க மடியில் தூங்குவதாய் -
கண்ணனே கண்மணியே - கனவு கண்டு - நீயுறங்கு!

புட்டிபால் குறையவில்லை -
பொம்மைக்கும் பஞ்சமில்லை -
தாய்ப்பாலும் தாயும் இன்றி -
தங்க மகனுக்கு என்ன குறை?

மாலையிலே ஓடி வந்து
மல்லிகையே உன்னை அணைத்தால்
சுரக்காத மார்பும் சுரக்குமடி- கண்ணுறங்கு!

தாலாட்டு பாட்டில் தளிரே - நீ
தூங்கிவிட்டால கோலாட்டம் ஆட
கொண்டவனுக்கும் ஆசை வரும்!

உறவுக்கு தடையாக
'ஒ' என்று அலறாமல் -
இரவ்க்கும் மிச்சம் வைத்து
இப்போது - நீ உறங்கு!

தாயென்று காட்டுவதற்கும்
தாவி எடுப்பதற்கும்
ஞாயிற்றுகிழமை வரும் - நல்லவளே கண்ணுறங்கு!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிட்டு போங்க.

நல்ல பதிவு பலரையும்  சென்றடைய ஒரு வோட்டு மட்டும் போட்ட போதும் எனக்கு.



Related Posts with Thumbnails
 
back to top