ரசிக்க.. ருசிக்க.. கீரை பிரைடு ரைஸ்

பிரைடு ரைஸ் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும்.

நண்பர் கீரை பிரைடு ரைஸ் மிகவும் சுவையாக இருக்கும் அதை நீங்களும் செய்து பாருங்கள் என்று சமைக்க தேவையான பொருட்களையும், செய்முறை விளக்கத்தையும் எளிமையான முறையில் தொகுத்தளித்துள்ளார்.

ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.


தேவையானப் பொருட்கள்:-

 • பாஸ்மதி அரிசி - 250 கிராம்
 • முளைக்கீரை - 1 கட்டு

 • பட்டை - ஒரு டீஸ்பூன்
 • கிராம்பு - ஒரு டீஸ்பூன்
 • ஏலக்காய் - ஒரு டீஸ்பூன்

 • கொத்தமல்லி - ஒரு டீஸ்பூன்
 • கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 • உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 • நெய் - 50 கிராம்
 • கடுகு & உளுத்தம்பருப்பு - தேவையான அளவு
 • பச்சை மிளகாய் - 2
 • வரமிளகாய் - 2

 • பூண்டு - 5
 • துவரம்பருப்பு - ஒரு கப்
 • உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

 • முளைக்கீரை ஒரு கட்டு பொடியாக நறுக்கி வைக்கவும்.

 • பாஸ்மதி அரிசி 200 கிராம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

 • பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் எடுத்து வாணலியில் வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

 • குக்கரில் 50 கிராம் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

 • பச்சை மிளகாய், வரமிளகாய், பூண்டு சேர்க்கவும். இத்துடன் அரைத்த பொடிகள் சேர்த்து வதக்கி கீரை சேர்க்கவும்.

 • வேகவைத்த துவரம்பருப்பு ஒரு கப் சேர்த்து ஊற வைத்த அரிசியை சேர்த்து இரண்டு மடங்கு தண்ணீர் விட்டு, உப்பு போட்டு குக்கரை மூடி ஒரு விசில் விடவும்.
Source : http://www.dinakaran.com
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் ? சிரிக்க சிந்திக்க !

காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.


சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!".

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!ரசித்த சில நகைசுவைகள்..!

சமீபத்தில் நான் ரசித்த சில நகைசுவைகள்....


"தலைவர் எதுக்காக எடை பார்க்கும் மிஷினை பக்கத்துலயே வச்சிருக்காரு?"

"அவரைத் தேடி வர்றவங்க கிட்டே அவரோட ‘வெயிட்’டை காண்பிக்கவாம்!"
"பல் செட்டை எடுத்து எதுக்காக அடிக்கடி என்கிட்டே காட்டறீங்க?"

"அடிக்கடி பல்லைக் காட்டினா உங்ககிட்டே காரியம் நடக்கும்னு வெளியே பேசிக்கிட்டாங்க!"
டாக்டர் : ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டுவந்திருந்தா, பேஷண்டை காப்பாத்தி இருக்கலாம் !

மற்றவர்: ஆக்ஸிடண்ட் ஆகியே அரை மணி நேரந்தான் ஆச்சு டாக்டர்.

டாக்டர் :.????
"என்ன கபாலி... மாப்பிள்ளை கோலத்தில திருட வந்திருக்கே?"

"தாலி கட்டியதும் தொழிலுக்கு வந்துட்டேன் சார்!"
"என்னய்யா இது... அமலாபாலுக்காக வட இந்தியாவுல யாரோ உண்ணாவிரம் இருக்காங்களாமே..?"
"தலைவரே, அவங்க உண்ணாவிரதம் இருக்கிறது அமலா பாலுக்காக இல்லை... லோக் பாலுக்காக!"
"காலம் ரொம்ப கெட்டுப்போச்சுனு எப்படிச் சொல்ற?"

"பின்ன, பால்கடை வாசல்ல 'இங்கு சுத்தீகரிக்கப்பட்ட சுகாதாரமான தண்ணீர் கலந்த பால் கிடைக்கும்'னு எழுதியிருக்காங்களே!"
"அந்த கட்சிக்குள்ள ஏகப்பட்ட கோஷ்டிங்க இருக்குன்னு எப்படிச் சொல்றே..? "

"ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த தலைவரை, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லி ஒரு கோஷ்டி போராடுதே..."
பயங்கர ஸ்பீடா சைக்கிள்ல வந்த ஒருத்தர் தன் நண்பன்கிட்ட சொன்னார்... "நேத்து என் மனைவிக்கும் எனக்கும் பயங்கர சண்டை. கோவத்துல இப்பதான் மிதிமிதின்னு மிதிச்சிட்டு வர்றேன்."

"உன்னோட மனைவியையா?" என்று ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தார் நண்பர்.

"இல்ல சைக்கிள.." என்றார் சொன்னவர்!
"அந்த சாமியார் ஏன் தன்னோட சீடனை வேலையை விட்டு நீக்கிட்டாரு..?"

"கேமரா செல்போன் வச்சிருந்தானாம்..!"
"எங்க ஆபீஸ்ல புதுசா வேலைக்குச் சேர்ந்தவர், என்ன செய்யறதுன்னே தெரியாம திருதிருன்னு முழிச்சிக்கிட்டு இருந்தார்..."

"அப்புறம்..?"

"நான்தான் தட்டிக் கொடுத்து தூங்க வச்சேன்..!"
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!சச்சினுக்கு பூஸ்ட் கொடுக்கிறார் தனுஷ்...!

இணையத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெகுவாக தேடப்பட்ட பாடல் என்ற பெருமையை தனுஷ் சச்சினுக்கு பாடிய "பூஸ்ட்" பாடல் தான். கிட்டத்தட்ட அவர் இதற்கு முன்னர் பாடிய "கொலைவெறி" பாடல் போன்றே இந்த பாடலும் மிக இயல்பாக அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கு. அந்த பாடல் உருக்க இருந்த காரணம் இதோ....


சச்சினை உற்சாகப்படுத்துவதற்காக ஒரு வீடியோ ஆல்பத்தை உருவாக்குகிறார் 'கொலவெறி' புகழ் நடிகர் தனுஷ். சச்சின் 'பிராண்ட் அம்பாசடராக' உள்ள பூஸ்ட்(Boost) நிறுவனம் தான் இந்த ஆல்பத்தைத் தயாரிக்கிறது.

பூஸ்ட் நிறுவனத்தின் 25 ஆண்டு கால பிராண்ட் அம்பாசடர் சச்சின். இதைக் கொண்டாடவும், சச்சினின் சாதனைகளைப் பாடவும் ஒரு பாடலை உருவாக்க திட்டமிட்ட நிறுவனம், அந்த வேலையை தனுஷிடம் ஒப்படைத்துள்ளது.


கிட்டத்தட்ட கொலவெறி பாட்டு மாதிரியே இந்த பூஸ்ட் பாட்டும் அமைந்துள்ளது.

"One plus one two-u two-u, if not Sachin who-u who-u!!!" என்று ஆரம்பிக்கிறது இந்தப் பாட்டு. கொலவெறிப் பாட்டுக்கு இசையமைத்த அதே அனிருத்தான் இந்தப் பாடலுக்கும் இசை தந்துள்ளார். நடிகை அனுஷ்காவும் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளார்.

இதுகுறித்து தனுஷ் கூறுகைாயில், "இந்தப் பாட்டை சச்சினுக்கு ஒரு மரியாதையாக, ஒரு மாஸ் ஹீரோவுக்கான ஓபனிங் பாட்டு மாதிரி செய்துள்ளோம். ஹைதராபாத் ராமோஜிராவ் சிட்டியில் படப்பிடிப்பு நடக்கிறது," என்றார்.
தனுசின் பேட்டியும் பாடல் ஒளிபதிவு வீடியோ காட்சியும் உங்களுக்காக...அறிமுக பாடல் வரிகள் இதோ உங்களுக்காக...
Yo boys let’s sing song

Cricket song

Sachin song

One plus one two-u two-u

If not Sachin who-u who-u

28 States clue-u clue-u

Nothing else to prove-u prove-u

Hey you are our pride-u

Roller coaster ride-u

Every place

Hey hit-u maama..super maama

Hey come on maama

Hit-u maama

Super maama

One day test..t 20

Entertainment guarantee

89 your entry

Bringing honor to our country

Hey every bowler-u beer-u beer-u

Darling of the mass

Little master

Master blaster

You are our boost-u

தனுஷுக்கு ரொம்ப பிடித்த பாடல் வரி "டார்லிக் ஆப் தி மாஸ்".

அறிமுக பாடல் வெளிவந்த சில மணி நேரத்தில் பல ஆயிரம் பேர் அதனை கேட்டு, பார்த்து ரசித்துள்ளனர். இந்த பாடலும் நிச்சயம் தனுஷுக்கு ஒரு நல்ல பெயரை உலக அளவில் வாங்கி தரும் என்பதில் ஐயமில்லை.

Thanks : Dinamalar
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!ரஜினி சொன்ன குட்டி கதைகள் - 2

'சூப்பர் ஸ்டார்' ரஜினி அவர்கள் பொதுமேடைகளில் அவ்வபோது சிறு சிறு கதைகளை சொல்வது வழக்கம். அதில் எனக்கு பிடித்தவைகள் சில அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்...

ஏன் இங்கே இருக்கோம் ...?!

ஒரு தாய் ஒட்டகத்தை பார்த்து குட்டி ஒட்டகம் "அம்மா எமக்கு அதற்காக நீண்ட கால்கள் உள்ளன" என்று கேட்டது. அதற்கு தாய் ஒட்டகம் "நாம் பாலைவனத்தில் மணல்களுக்குள் நடப்பதற்கு இலகுவாக கால்கள் நீளமாக படைக்கப்பட்டுள்ளது" என்று கூறியது.

"சரி எதற்காக நமது உதடுகள் இவ்வளவு சொரசொரப்பாக உள்ளன" என்ற குட்டி ஒட்டகத்தின் கேள்விக்கு "பாலைவனத்தில் வெப்பம் அதிகம் என்பதாலும் பாலைவனத்தில் கிடைக்கும் உணவுகள் உலர்ந்ததாகவும் மெல்ல முடியாமலும் இருக்கும் என்பதாலும் அதற்கேற்றால் போல உதடுகள் படைக்கப்பட்டுள்ளது" என தாய் ஒட்டகம் கூறியது.

"அப்படியானால் எதற்கு எமக்கு பெரிய கழுத்துக்கள் உள்ளது" என்ற குட்டி ஒட்டகத்தின் கேள்விக்கு "பாலைவனத்தில் உணவு, நீர் என்பன கிடைப்பது அரிது என்பதால் கிடைக்கும் உணவு, நீர் என்பவற்றை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்கவே பெரிய கழுத்துக்கள் படைக்கப்பட்டன" என தாய் ஒட்டகம் பதில் கூறியது.


"அதெல்லாம் சரி பின்னர் எதற்காக நாம் இருவரையும் இங்கு அடைத்து வைத்துள்ளனர்" என்று விலங்கு காட்சிசாலையில் இருந்த அந்த குட்டி ஒட்டகம் தன் தாயை பார்த்து கேட்டது.

இந்தக்கதையின் தாக்கம் என்மனதில் பல கேள்விகளை உண்டாக்கியது, உங்களுக்கும் இந்த கதை ஒரு தாக்கத்தை உருவாக்கும் என்று நினைக்கிறேன் என்றார் ரஜினி. இவர் எதனை சொல்ல வருகிறார் என்பது உங்களுக்கும் புரிதிருக்கும் என்று நினைக்கிறன்.

நேரம் நல்லாயிருந்தா…!!!!

ஒரு ஊரில் ஒரு சம்சாரி. எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தால் அதிக ஆண்டுகள் வாழலாம் என்கிற கேள்வி அவன் மனதை அரித்துக்கொண்டிருந்தது. நூறாண்டு வாழ்ந்த ஒருவரைப் பார்த்தான். ‘இத்தனை ஆண்டுகள் வாழ்ந்துவிட்டீர்கலே எப்படி! எப்படி?’ என்று கேட்டான்.

அதற்க்கு அவர், “நான் மாமிசம் சாப்பிடமேட்டேன். தண்ணி அடிக்க மேட்டேன். அதனால் தான்!” என்று பதிலளித்தார்.

லேசான இருமல் சத்தம் கேட்டது. இருமுவது யார்? என்று கேட்டார் சம்சாரி.

“எங்கள் அண்ணன்” என்றார் அந்த நூறாண்டு மனிதர். “உங்களுக்கே வயது நூறாகிறது. உங்களுக்கு ஒரு அண்ணனா? அவரை நான் பார்க்கவேண்டுமே” என்றார் சம்சாரி.


அவரை பார்த்தார். “எப்படி இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். “நான் தினமும் மாமிசம் சாப்பிடுவேன், தண்ணி அடிப்பேன்” என்றார் நூறாண்டு மனிதரின் அண்ணன். நமக்கு நல்ல நேரம் என்றால் விஷம் சாப்பிட்டாலும் தப்பித்துவிடுவோம். கெட்ட நேரம் என்றால் பாலும் விஷமாகலாம்.”

குறிப்பு: ரஜினியே எதிர்த்திருந்தாலும், நேரம் நல்லாயிருந்துனால ஒருத்தரு போன லோக்சபா தேர்தல்ல அசால்ட்டா எல்லா சீட்டும் ஜெயிச்சாரு. அதே நேரம் இப்போ சரியில்லை எனும்போது – ஒரு பெரிய கூட்டணியில இருந்து கூட – அவரால ஒரு சீட் கூட ஜெயிக்க முடியலே…

ஸோ, எல்லாத்துக்கும் நேரம் ரொம்ப முக்கியம்…..!!

Thanks : Eegarai & Eppoodi
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!தமிழக "ஜேம்ஸ்பாண்ட்" ஜெய்சங்கர்

தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட் :

மேல்நாட்டு "ஜேம்ஸ்பாண்ட் 007" பாணி படங்களில் சிறப்பாக நடித்ததால், "தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட்" என்று அழைக்கப்பட்டவர் நடிகர் ஜெய்சங்கர். குறுகிய காலத்தில் 300-க்கு மேற்பட்ட படங்களில் நடித்தார்.

சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் பெயரை முன்சேர்த்து ஜெய்சங்கர் என்று அழைக்கப்பட்டார்.

முதல் அறிமுகம் :

சென்னையைச் சேர்ந்த ஜெய்சங்கர், விவேகானந்தா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது கல்லூரி யூனியன் செயலாளராக இருந்தார். அப்போது கல்லூரியில் கலை நிகழ்ச்சி, கரகாட்டம் போன்றவைகளுக்கு ஏற்பாடு செய்து திறம்பட நடத்தினார்.

பின்னர் முதன் முதலாக 'மேக்-அப்' போட்டு "காதலுக்கு மருந்து" என்ற நாடகத்தின் மூலம் மேடை ஏறினார். இது எழும்பூர் மியூசியம் தியேட்டரில் நடைபெற்றது.

முதல் வெற்றி திரைப்படம் - இரவும் பகலும் :

அந்த காலகட்டத்தில் டைரக்டர் ஜோசப் தளியத் தன்னுடைய புதிய படத்திற்காக புது முகங்களை தேடிக்கொண்டிருந்தார். இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பா. இவரை (ஜெய்சங்கர்) தளியத்திடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர் எடுத்த எடுப்பிலேயே ஜெய்சங்கருக்கு கதாநாயகன் வேடம் கொடுத்தார். "இரவும் பகலும்" என்ற படத்தின் மூலம் ஜெய்சங்கர் திரை உலகில் அறிமுகம் ஆனார். இந்தப் படம் 1965-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளிவந்தது.
ஜெய்சங்கர் ஜோடி வசந்தா. முதல் படமே ஜெய்சங்கருக்கு பெயர் சொல்லும்படி அமைந்தது.

இரவும் பகலும் படத்தை தொடர்ந்து "நீ", "எங்க வீட்டுப் பெண்", "பஞ்சவர்ணக்கிளி" (இதில் ஜெய்சங்கர் இரு வேடங்களில் நடித்தார்). "குழந்தையும் தெய்வமும்" ஆகிய படங்கள் வெளிவந்தன.

ஜெயலிதாவுடன் நடித்த ஜெய்சங்கர் :

"நீ" படத்தில் ஜெயலலிதாவும், "குழந்தையும் தெய்வமும்" படத்தில் ஜமுனாவும் கதாநாயகிகள். ஏவி.எம். நிறுவனம் தயாரித்த "குழந்தையும் தெய்வமும்" 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படம்.

திரை உலகில் காலடி எடுத்து வைத்த முதல் ஆண்டிலேயே ஜெய்சங்கருக்கு அதிர்ஷ்ட சக்கரம் சுழல ஆரம்பித்தது. மேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜேம்ஸ்பாண்ட் படங்களின் பாணியில், 1966-ல் "மாடர்ன் தியேட்டர்ஸ்" தயாரித்த "இரு வல்லவர்கள்", "வல்லவன் ஒருவன்" ஆகிய படங்களில் ஜெய்சங்கர் சிறப்பாக நடித்தார். அதனால், தமிழ்நாட்டு ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்பட்டார்.

இதே ஆண்டில், "காதல் படுத்தும் பாடு", "கவுரி கல்யாணம்", "நாம் மூவர்", "யார் நீ" (பி.எஸ்.வீரப்பா தயாரித்தது) ஆகிய படங்களிலும் ஜெய்சங்கர் நடித்தார்.

அதற்கு அடுத்த ஆண்டில், ஜெய்சங்கர் நடித்து 9 படங்கள் வெளிவந்தன. "காதலித்தால் போதுமா", "சபாஷ் தம்பி", "நான் யார் தெரியுமா?", "பட்டணத்தில் பூதம்", "பவானி", "பெண்ணே நீ வாழ்க", "பேசும் தெய்வம்", "பொன்னான வாழ்வு", "முகூர்த்த நாள்" ஆகியவை அவை.

ஜெய்சங்கருடன் கே.ஆர்.விஜயா இணைந்து நடித்த "பட்டணத்தில் பூதம்" பெரிய வெற்றி படமாகும். ஜாவர் சீதாராமன் இப்படத்திற்கு வசனம் எழுதியதுடன் "பூதம்" வேடத்திலும் தோன்றினார்.
1968-ம் ஆண்டில் "அன்புவழி", "உயிரா மானமா", "சிரித்த முகம்", "டீச்சரம்மா", "தெய்வீக உறவு", "நீலகிரி எக்ஸ்பிரஸ்", "நேர்வழி", "பால்மனம்", "புத்திசாலிகள்", "பொம்மலாட்டம்", "முத்துசிப்பி", "ஜீவனாம்சம்" ஆகிய 12 படங்கள் ஜெய்சங்கர் நடித்து வெளிவந்தன.

15 படங்களில் நடித்து சாதனை :

தொடர்ந்து சில ஆண்டுகள் வருடத்துக்கு முக்கால் டஜன் படங்களை தந்த ஜெய்சங்கர் 1972-ம் ஆண்டில் மட்டும் 15 படங்களில் நடித்து சாதனை படைத்தார். குறுகிய காலத்திலேயே நூறு படங்களை கடந்தார்.

சிவாஜிகணேசனுடன் ஜெய்சங்கர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். எம்.ஜி.ஆருடனும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மலர்ந்தது. ஆனால் அந்த படம் வளரவில்லை.

இவரது சமகால நடிகர்களான முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோருடனும் இவர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

நூறு படங்களுக்கும் மேல் தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்த ஜெய்சங்கர் பிறகு வில்லன் வேடத்தையும் ஏற்று அதனை சிறப்பாக செய்தார்.

வெள்ளிக்கிழமை நாயகர் :

ஜெய்சங்கர் சண்டைப் படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், குடும்பக்கதைகளிலும் அதிகம் நடித்து பெயர் வாங்கினார். பல திரைப்படங்களில் துப்பறிபவராகவும், காவலராகவும் வேடம் ஏற்று நடித்ததால் இவரை தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் எனவும் தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் எனவும் ரசிகர்கள் அழைத்தனர்.

இவர் பற்பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால், இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததன் காரணமாக இவர் 'Friday hero' (வெள்ளிக்கிழமை நாயகர்) எனவும் அழைக்கப்பட்டார்.

முதல் வில்லன் வேடம் :

அந்த வேடத்தில் தோன்றிய முதல் படம் "முரட்டுக்காளை". குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த "முரட்டுக்காளை", "பாயும்புலி", "துடிக்கும் கரங்கள்" போன்ற படங்களில் ஜெய்சங்கர் வில்லன் வேடம் ஏற்றார்.

குணசித்திர வேடம் :

ஏராளமான படங்களில் குணசித்திர வேடங்களை ஏற்றும் நடித்தார். மொத்தத்தில் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் ஜெய்சங்கர்.

உடல் நலம் குறைவு :

62-ஆம் வயதில் நடிகர் ஜெய்சங்கர் 2000-ம் ஆண்டு மே மாதம் குவைத் சென்றிருந்தார். அங்கு அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். உடல் நலம் தேறி ஒரு வாரத்தில் வீடு திரும்பினார்.

நடிகர் மறைவு :

மீண்டும் அவருக்கு ரத்த அழுத்தம் குறையவே நினைவு இழந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜெய்சங்கர் 3-6-2000 அன்று இரவு மரணம் அடைந்தார்.
முதல்- அமைச்சர் கருணாநிதி, த.மா.கா. தலைவர் மூப்பனார், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், குமரி அனந்தன், திருநாவுக்கரசர், நடிகர்கள் சிவாஜிகணேசன், கமலஹாசன், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், சிவகுமார், நெப்போலியன் உள்பட நடிகர், நடிகைகள், பட அதிபர்கள் ஜெய்சங்கர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

ஜெய்சங்கர் உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

ஜெய்சங்கர் குடுப்பம் :

ஜெய்சங்கரின் மனைவி பெயர் கீதா. சஞ்சய், விஜய் என்ற 2 மகன்கள். சங்கீதா என்ற மகள். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

Thanks : Maalaimalar
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!தூங்கப் போறீங்களா ...? (Must read)

தூக்கத்திற்கும் உடல் நலத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. இதுபற்றி பல்வேறு ஆய்வுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, 'சரியாக தூங்காதவர்களே பிரச்சினைகளில் ஈடுபடுகிறார்கள்' என்று கூறுகிறது.

சரியாக தூங்குவது என்றால் எப்படி? தூங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்பது பற்றி இங்கே...

 • தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச்சி பெறும். வலுவுண்டாகும். தூங்குவதற்கும் சில விதிமுறைகள் இருக்கிறது. அதில் முதன்மையானது நேரந்தவறாமை.

 • தினமும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும். அதேபோல குறிப்பிட்ட நேரம் தூங்குவதும் அவசியம். குறைந்தபட்சம் தினமும் 6 முதல் 8 மணி நேரமாவது உறங்க வேண்டும்.

 • எந்த திசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும் என்பது பற்றியும் விதி இருக்கிறது. "கிழக்கு சிறந்தது; மேற்கு பரவாயில்லை; தெற்கு ஆயுள் பெருகும்; வடக்கு ஆகாது" என்பது மருத்துவர்கள் சொல்லும் குறிப்பு.

  வடக்கில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அதனால் மூளையின் ஓய்வுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் வடக்கே தலை வைக்கக்கூடாது என்பார்கள்.

 • தூங்குவதற்கு ஏற்ற படுக்கை பஞ்சு மெத்தைதான். `இலவம் பஞ்சில் துயில்' என்று நம் முன்னோர் கூறியிருக்கிறார்கள்.

 • படுக்கும்போது, இடது பக்கமாகப் படுக்க வேண்டும். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது காலை நீட்டி இடது கால் மேல் வைத்து, வலது கையை நீட்டி, வலது கால் மீது வைத்துக் கொண்டு தூங்க வேண்டும்.


 • இடது புறமாக ஒருக்களித்து தூங்கும்போது, வலதுபுற நாசி வழியாக மூச்சுக்காற்று இயங்கும். இது நல்ல தூக்கத்தை தரும். உடம்புக்குத் தேவையான வெப்பம் கிடைக்கும். இப்படிப் படுப்பதால் நோய் விரைவில் குணமாவதாக கூறுவார்கள்.

 • கவிழ்ந்து படுப்பது கூடாது. பல மணி நேரம் அசைவில்லாமல் உறங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை திரண்டு சிறுநீரக கற்கள் உருவாவதாக தெரிய வந்துள்ளது.

  குப்புறப் படுக்கும் போதே அதிகமாக சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 • எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகல் தூக்கம் வாதத்தை வரவழைக்கலாம். இரவு தூக்கம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.
நிம்மதியா உறங்குங்கள்!

Thanks : http://www.maalaimalar.com
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!Related Posts with Thumbnails
 
back to top