வேட்டைக்காரன் - திரைப்பட விமர்சனம்

சும்மா சுட சுட வேட்டைக்காரன் படத்தோட திரை விமர்சனம் எழுதறேணுக.

படத்தோட கதை என்னனா :

12ஆவது பெயில் ஆகி படிக்கும் நம்ப ஹீரோ ரவி (விஜய் ) பெரிய போலீஸ் ஆபீசரா ஆகணும்னு ஆசை படறாரு. அவருக்கு ஒரு திறமையான போலீஸ்காரனை(ஸ்ரீஹரி) பார்த்து தன் திறமையை வளத்துகிறாரு.
நான் அடிச்சா தாங்கமட்டேநாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே

அவரைப்போலவே தானும் ஒரு போலீஸ் ஆகணும்னு படித்து 12ஆவது பாஸ் ஆகி காலேஜ் படிக்க வராரு. வரும் வழியில் ரயில்வே ஸ்டேசனில் நம்ப கதா நாயகி சுசிலா (அனுஷ்கா) சந்திக்கிறார். கண்டதும் காதல்.
கரிகாலன் காலப்போல கருத்திருக்குது குழலு
குழலிலை குழலிலை தாஜ்மகால் நிழலு


ஆட்டோ ஒட்டி கிடைக்கும் பணத்துல தான் காலேஜ் படிப்பேன்னு சொல்லி, தன்னுடன் படிக்கும் ஒரு பெண் தோழி(சஞ்சிதா படுகோனே ) மூலம் ஆட்டோ ஒட்டி, அந்த பெண்- அந்த ஏரியா ரௌடியிடம் (செல்லா) முறைத்து கொள்ள, ஹீரோ தட்டி கேட்கிறார். ரௌடியை சும்மா தும்சம் செய்துவிடுகிறார். இதனால் ஆவேசம் அடையும் வில்லனும் அவனது அப்பாவும்மான (சலீம்) தன் போலீஸ் (சாயாஜி) செல்வாக்கை பயன் படுத்தி என்கவுன்ட்டர் மூலம் ஹீரோவை போட்டு தள்ள ஏற்பாடாகி - அதிலிருந்து ஹீரோ தப்புகிறார்.
புலி உரும்புது புலி உரும்புது
இடி இடிக்குது இடி இடிக்குது


அவனை ஸ்ரீஹரி நண்பர்கள் காப்பாற்றி இனிமேல் வில்லனுடன் மோதவேண்டாம் என்று சொல்லி - தன் தலை மறைவு வாழ்க்கை பற்றி ஹீரோவிடம் சிறு பிளாஷ்பேக்கு. இருவரும் இணைகிறார்கள்.
ஒரு சின்ன தாமரை என் கண்ணை பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைகின்றதே


வில்லனின் அராசகத்தை நேரடியாக ஹீரோ தாட்டி கேட்கிறார். இவனது நண்பனை போட்டு தள்ள... ஹீரோ ஆவேசம் அடைந்து ...
என் உச்சுமண்டையில சுர்ருங்கிது...
உன்னை நான் பார்க்கையில் கிர்ருங்கிது....


ஹீரோ எப்படி வில்லனை வென்றார்? என்று மீதி கதையை முடிஞ்சா பார்த்து தெரிந்துகொள்க.

படத்துல என்னை கவர்த்தவைகள் பல...
  • வழக்கம் போல சூப்பர் டான்சு + சண்டை என விஜய் அசத்தியிருகாறு. பிரெஷ் ஆ இருகாரு படத்துல. வில்லுக்கு இந்த படம் ஓகே.
  • அனுஷ்கா - முதல் பாதியில் பல காட்சிகளை முடிந்த அளவு நடித்து + பாடி இருக்கார். டான்சு தன் ஆட முடியாமல் நடந்தே வாராரு. பாடல்களில் எதோ மிஸ்ஸிங்.
  • திரைகதையில், முதல் பாதி- போர். இரண்டாம் பாதி - ஓகே தான்.
    பல இடங்களில் எனக்கு சலிப்பு தட்டியது.
  • செல்லாவாக நடித்தவரின் நடிப்பு மிக அருமை. என்ன வில்லத்தனம். கண்கள் பேசுது.
  • பாடல் கட்சிகள் மிக அருமை. பின்னணி இசை - சுமார். சில இடங்களில் ஸ்ரீசாத்தும் + சத்தியனும் சிரிக்க வைகிறார்கள்.

வேட்டைக்காரன் - ஒருமுறை பார்கலாம்

நல்ல பதிவு பலரை சென்றடைய ஒரு வோட்டு போட்ட போதும் எனக்கு. நன்றி. மீண்டும் வருக!!!



28 comments:

Wind Sailor said...

hmmm ..seems to be nothing special in this movie. Intha mokka kathaiya oru mura kooda paarka koodathu ... being a big hero(sollikkaranga), didn't know to give gud entertainment movie ... ****

Unknown said...

நல்ல நேரத்தில் நல்ல வீமர்சனம்

Kannan said...

yes Anand. You are correct.

karuppaiah said...

padathoda perukum kathai kum koncham kuda samantham illa entha kathaiya pottu unga blogey keduthukuringa.........

வேலன். said...

நன்றாக இருந்தது நண்பரே....

வாழ்க வளமுடன்,
வேலன்.

Kolipaiyan said...

கருப்பையா & வேலன் தங்கள் வருகைக்கு நன்றி!

Kolipaiyan said...

கருப்பையா நீங்கள் நினைப்பது போல அவ்வளவு மோசம் இல்லை. நிச்சயம் ஒரு முறை படம் பார்க்கலாம்.

Unknown said...

"விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!".

அரைத்த மாவையே திரும்ப அரைக்கும் வேட்டைக்காரன் அட்டர் பிளாப்பு.

வில்லு,குருவி லிஸ்டுல வேட்டைக்காரன்.


விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
படமும் ஓட போவதில்லை.

டப்பா படம்.குப்பை படம்.

Unknown said...

I saw this film today morning. Film is quite entertaining. Enjoyed well with my friends. As usual Vijay's performance is good in dance and stunts scenes. Junior Vijay is rocking. when he come together and dance with Vijay, at that time everyone enjoyed in the theatre. Minimum punch dialogues and good message at the end. Totally another hit in vijay's career and biggest hit for Sun Pictures. Once the family audience start to see this film it will be block buster.

Vettaikaran - Makkal Manathil!

Regards,
Vijay

Kolipaiyan said...

செந்தில் ஏன் இந்த கொலைவெறி.

Kolipaiyan said...

After long back, vijay's comment in my post. Thanks for reading my post Vijay. Wait and see the other people's feedback on the same.

அத்திரி said...

உங்க விமர்சனம் தான் படிக்கிற மாதிரி........... நான் பார்த்த மற்ற விமரசனங்கள் விஜயை கேலி பண்ணியே எழுதப்பட்டிருக்கிறது

Anonymous said...

Looose.., where is the vimarsanam

Kolipaiyan said...

படத்தோட விமர்சனத்த நம்ப வலை நண்பர்கள் அடுத்த வாரம் முழுவது அலச போறாங்க. நான் தனியா வேற சொல்லவா ?

இட்ஸ் ஜஸ்ட் டைம் பாஸ் விமர்சம் நண்பா.

துபாய் ராஜா said...

நடுநிலையான விமர்சனம்.

Kolipaiyan said...

தங்கள் வருகைக்கு நன்றி துபாய் ராஜா.

Prathap Kumar S. said...

விஜய்க்கு மற்றொரு பிளாப்... ஏய் டண்டனக்கா....

வெற்றி said...

நடுநிலையான விமர்சனம் தல...

Kolipaiyan said...

வெற்றி & நாஞ்சில் பிரதாப் - தங்கள் வருகைக்கு நன்றி!

Kolipaiyan said...

கண்மூடித்தனமாக விஜய் படங்களை நிராகரிப்பது தவறு. நீங்கள் விரும்பும் நட்சத்திரம் நடித்த படம் மற்றவர்கள் தவறாக விமர்சனம் பண்ணும் பொது தான் அதன் வலி உங்களுக்கு தெரியும்.

நான் விஜய் ரசிகன் அல்ல. அதற்காக அவரை விமர்சனம் செய்வதில் ஒரு கட்டுப்பாடு வேண்டும்.

உங்களுக்கு பிடிக்காத படங்கள் மற்றவர்களுக்கு பிடிக்கும் அல்லவா.

யோசிப்பீர்களா வலை நண்பர்களே?

Mukundan said...

இதே விஜய்க்கு சென்னைல ஒரு காலத்துல ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கனும்னு ஒரு வெறியோட இருந்த ரசிகன் நான். ஆனால் மதுர படம் பார்து என்னுடைய என்னத்தை மாற்றினேன். அடுத்தடுத்து வந்த படங்களில் அவனுடைய கேவலமான நடிப்பு கதை தேர்வு இவைகளில் மெதுமெதுவாக விஜ்ய் ரசிகர் என்று சொல்வதை மிக மிக கேவலமாக எண்ணிணேன்.

ஆனால் எப்பொழுது காங்கிரஸில் போய் சேர்ந்தானோ அன்றிலிருந்து அவனுடைய போஸ்டரை பார்பதை கூட பாவமாக நினைத்து வாழ்ந்து வந்தேன்.

நண்பர்கள் வர்புருத்துகிறார்கள் என்று என் வாழ்கையில் நடந்தது அந்த துன்பச் சம்பவம். ஆம் வேட்டைகாரனை சிட்னியில் முதல் வரிசையில் அமர்ந்து பார்க்க என் நெஞ்சில் கொஞ்சம் கொஞ்சமாக ரத்தம் வழிய சபதம் இனிமேல் விஜய் படத்தை பார்காமல் இருப்பது மட்டும் அல்ல திருட்டு வீசீடி வாங்கி அனவருக்கும் கொடுப்பதை என் தொண்டாக செய்வேன். ஏனெனில் மறந்தும் இனி இவன் படத்துக்கு யாரும் திரையரங்கு சென்று பார்ககூடாது.

அடுத்த நாள் "அவதார்" AVATAR என்ற ஆங்கில படத்துக்கு சென்று இதை ஈடு கட்டி கொண்டேன். தயவு செய்து உங்கள் பணத்தை பார்து செலவு செய்யுங்கள்.

பின் குறிப்பு: நானும் ஒரு காலத்தில் அஜீத் ரசிகர்களுடன் போட்டியிட்ட முட்டாள்.

Please go to AVATAR movie and you will find your money and time worth.

Kannan said...

Is it...true Mr.Mukundan? If so, I am really happy see this kind of people. In karapakkam, Chennai, lot of people watching his movie day and night. Due to my friend request, I saw this movie. Otherwise I will avoid his movie to watch.

srmd21 said...

ya i agree..instead of seeing this film go to avatar..now i am going to see 'avatar' film...

Kolipaiyan said...

Welcome to my site Mr.SRMD21 and Kukundan. Thanks for your visit.

Sankaradoss S said...

Most of the reviews and most of the people say that the movie is not worth to watch.. But you are saying its worth to watch once.. I think you need to update your review for this movie.. I havent yet watched the movie..

chosenone said...

விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!".

அரைத்த மாவையே திரும்ப அரைக்கும் வேட்டைக்காரன் அட்டர் பிளாப்பு.

வில்லு,குருவி லிஸ்டுல வேட்டைக்காரன்.


விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
படமும் ஓட போவதில்லை.

டப்பா படம்.குப்பை படம்.
இனிமேல் விஜய் படத்தை பார்காமல் இருப்பது மட்டும் அல்ல திருட்டு வீசீடி வாங்கி அனவருக்கும் கொடுப்பதை என் தொண்டாக செய்வேன். ஏனெனில் மறந்தும் இனி இவன் படத்துக்கு யாரும் திரையரங்கு சென்று பார்ககூடாது.

Kolipaiyan said...

Thanks for your visit and your comments Mr.chosenone

svb barathwaj said...

IDHELLAM ORU PADAMNU NADICHA VIJAYA YEAN ELLARUM THITRINGA ENI PADAME NADIKKA KOODAADHUNU ADVICE PANNUNGA VIJAYA THITTADHEENGA

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top