பெண்கள் உலக கோப்பை கிரிகெட்!
10-வது பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி நேற்று மும்பையில் துவங்கியது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.நேற்று நடந்த "ஏ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. நேற்றைய லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 105 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
தமிழக வீராங்கனை காமினி சதம் அடித்து அசத்தினார். சர்வதேச ஒரு நாள் அரங்கில் முதல் சதம் அடித்த காமினி (146 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார்.
உலக கோப்பை தொடரை இந்திய அணி வெற்றிகரமாக துவக்கியது.
வெளுத்து கட்டிய காமினி !
நேற்று ஒரு நாள் போட்டி அரங்கில், தனது முதல் சதத்தை பதிவு செய்தார் தமிழகத்தின் திருஷ் காமினி முருகேசன்(22).அரைசதத்தை கடக்க 93 பந்துகளை எடுத்துக் கொண்ட போதிலும், அதன் பிறகு துரிதமான ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் பிறகு அடி வெளுத்து கட்டினார். அபாரமாக ஆடிய அவர் தனது முதலாவது ஒரு நாள் போட்டி சதத்தை பூர்த்தி செய்தவுடன் ரன்–அவுட் ஆகி போனார். அவர் 100 ரன்களுடன் (146 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார்.
காமினி வாழ்க்கை
கடந்த 1990ல் சென்னையில் பிறந்தார். ஒன்பது வயதில், தந்தையுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட துவங்கினார்.தனது 16ம் வயதில் ஜெய்ப்பூரில் நடந்த, ஆசிய கோப்பை போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 19 ரன்கள் மட்டும் கொடுத்து, 3 விக்கெட் கைப்பற்றினார். இத்தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது. இதில் பவுலிங்கில் அசத்திய காமினி 8 விக்கெட்டுகள் வீழ்த்த, தொடர் நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
இடது கை ஆட்டக்காரரான காமினி, இதுவரை 22 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, 382 ரன்கள் எடுத்துள்ளார்.
பவுலிங்கில் 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார். தவிர, ஒரு "டுவென்டி-20 போட்டியிலும் பங்கேற்றுள்ளார்.
மேலும் பல சதம் அடிக்க வாழ்த்துக்கள் காமினி!
இந்தியாவின் முதல் சதம்
முந்தைய 9 உலக கோப்பை தொடரில் மொத்தம் 34 சதங்கள் அடிக்கப்பட்ட போதிலும், இந்திய வீராங்கனைகள் யாரும் செஞ்சுரி அடிக்கவில்லையே? என்ற நீண்ட கால ஏக்கத்தை இந்திய வீராங்கனை காமினி நேற்று போக்கினார்.வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் அவர் 100 ரன்கள் எடுத்து பிரமாதப்படுத்தினார். 22 வயதான காமினி சென்னையில் பிறந்தவர். 40 ஆண்டு கால பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற அரிய பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
முதல் விக்கெட்டு அதிகபட்ச ரன்குவிப்பு சாதனை
இந்த ஆட்டத்தில் காமினி–பூனம் ரவுத் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது. உலக கோப்பை போட்டியில் இந்திய ஜோடி ஒன்றின் அதிகபட்ச ரன்குவிப்பு இதுவாகும்.இதற்கு முன்பு 2000–ம் ஆண்டு உலக கோப்பையில் இலங்கைக்கு எதிராக இந்தியாவின் அஞ்சும் சோப்ரா–சந்திரகாந்தா கவுல் ஆகியோர் 3–வது விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.
இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா நேற்று எடுத்த 284 ரன்களே உலக கோப்பையில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராவும் பதிவாகியிருக்கிறது. இதற்கு முன்பு 2000–ம் ஆண்டு உலக கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக 4 விக்கெட்டுக்கு 275 ரன்கள் எடுத்ததே இந்தியாவின் அதிக ரன்களாக இருந்தது.உலக கோப்பையை நமது பெண்கள் கிரிகெட் டீம் வாங்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
0 comments:
Post a Comment