ஷகீரா - A.R. ரஹ்மான்

உலக இசை கலைனர்களுக்கு இப்போது விருது வழக்கும் நேரம். வருடா வருடம் வழக்கப்படும் உலக புகழ் பெற்ற NRJ இசை விருது (NRJ award music) கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.


இந்த வருடம், அகில உலக சிறந்த பாடலுக்கான விருது (International Song of the Year) 2011- வருடம் 'வாக்கா வாக்கா புகழ் 'ஷகீராவுக்கு கிடைத்துள்ளது. மேலும், இவர் சிறந்த பெண் பாப்-பாடகியாகவும் (International Female Artist of the Year) தேர்வு செய்யப்பட்டு விருது வழக்கப்பட்டது.
கொலம்பியாவைச் சேர்ந்த இவர், பாடகி, பாடலாசிரியை, நடனக் கலைஞர் என பன்முகம் கொண்டவர். அவரது நடன அசைவுக்கும், குரல் இனிமைக்கும் எக்கச்சக்க ரசிகர்கள். மேலும் இவர், இடுப்பை, வளைத்து ஒடித்து ஆடிப் பாடலுக்கு உலகெங்கும் எக்கச்சக்க ரசிகர்கள்.

இவர், 2 முறை கிராமி விருது பெற்றவர். நடந்து முடிந்த 2010 தென் ஆப்பிரிக்க உலகக் கால்பந்துப் போட்டியின் தீம் (theme) மியூசிக்கான வாக்கா வாக்கா... பாடலை பாடி மேலும் பிரபலமானவர்.
குட்டி தகவல் :-
"காளி - தி வாரியர் காடஸ்" (Kaali- The Warrior Goddess) என்ற பெயரில் உருவாகும் படத்தில் 'காளி' வேடத்தில் நடிக்கப் போகிறார் ஷகீரா. ஹைகிரவுண்ட் என்டர்டெய்ன்மென்ட் (High Ground Entertainment Ltd) நிறுவனம் சார்பில் கரண் அரோரா இப்படத்தை தயாரிக்கிறார்.


இசை உலகில் தொடர்ந்து சாதனை படைத்துவரும் இசை அமைப்பாளர்களுக்கு வழக்கப்பட்டு வரும் விருது தான் கிறிஸ்டல் விருது


இந்த வருடம் அதனை பெறுபவர் வேறு யாருமில்லை A.R. ரஹ்மான் தான். உலக இசை மற்றும் கலையில் தொடர்ந்து சாதனைகள் நிகழ்த்தி வரும் நம்ப இசைப்புயலுக்கு கிறிஸ்டல் விருது வரும் 26-தேதி வழங்கப்படவுள்ளது.

சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார அமைப்புக் கூட்டத்தில் கிறிஸ்டல் விருது அளிக்கப்படவுள்ளது.

இந்த உயரிய விருது வாங்கும் நம்ப இசை கலைனர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

நீங்களும் மறக்காமல் ஒரு வோட்டு போட்டு உங்கள் வாழ்த்துக்களை இங்கே தெரிவிக்கலாம்.



இவர்களில் யார் மிக அழகு?!

இந்த வருஷம் பொங்கலுக்கு குறிப்பிட்டு சொல்லும்படி மூன்று படங்கள் வெளிவந்துள்ளது. அவை
படத்தை கிளிக் செய்து பெரிதாக பாருங்கள். மறக்காமல் உங்க பதிலை சொல்லுங்கள். வோட்(Vote) போட மறந்துடாதீங்க. இந்த அழகு பெண்கள் ரொம்ப கோவித்துக்கொல்வாங்க.
1. காவலன்

நம்ப 'பிளாப்' புகழ் விஜயும் அசினும் இணைந்து நடித்து வெளிவந்த படம். ஒரு மென்மையான காதல் கதையில் இருவரும் மிகவும் சிறப்பா செய்திருந்தார்கள்.





2. சிறுத்தை

நம்ப 'பருத்திவீரன்' கார்த்திக்குடன் தமன்னா நடித்த படம். தமிழில் ஒரு தெலுங்கு படத்தை அப்படியே டப் செய்யாமல் ரீமேக் என்ற போர்வையில் தந்திருகிறார்கள்.




3. ஆடுகளம்
நம்ப 'பைல்வான்' தனுசுடன் டாப்சீ நடித்து சூப்பரா ஓடிகொண்டிருக்கும் இந்த படமும் ஒரு மெல்லிய காதலுடன் கிராமத்து மனிதனை நான் வைத்திருகிறார்கள்.





இந்த பொங்கல் ரேசுல எந்த படம் , யாரோட படம் 'நல்லா' ?? இருக்குனு என்னால கணிக்க முடியல. நீங்களாவது எனக்கு உதவி பண்ணுங்களேன்.

உங்களுக்கு பிடித்த ? படத்தை பற்றி இங்கே சொல்லிட்டு போங்க.



தயிரின் 20 மருத்துவ குணங்கள்

நாம் அன்றாடம் நம் இல்லத்தில் பயன்படும் உணவு பண்டங்களின் தயிரும் ஒன்று. தயிரை ஆங்கிலத்தில் Yoghurt அல்லது (Yogurt) என்று அழைக்கப் படுகிறது.

ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல்நலத்தை பேணும் ஆதாயங்கள் கொண்டவை. அவற்றில் சில ...

தயிரின் பயன்கள்

1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.

4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.

5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும்.
ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை
தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.

10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் 'ரயித்தா' சாப்பிடுகிறோம்.

12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.

14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.

15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.


16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.

17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.

18. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.

19. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.

Picture : Google



காவலன் - விமர்சனம்

விஜய் பக்கம் பக்கமாக பன்ச் டயலாக் பேசி ஹீரோயிசம் காட்டாமல் நடித்திருப்பது தான் காவலன் படத்தின் பெரிய பலம்! இளமை துள்ளும் விஜய்யை பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு. வழக்கமான மசாலாக்களை விட்டு விட்டு நல்ல கதையை தேர்வு செய்ததற்கு விஜய்க்கு ஒரு பாராட்டு..
படத்தோட கதை என்னானா...

பிளாஷ்பக் கதையாக ஆரம்பமாகிறது...

அந்த ஏரியாவிலேயே ‌பெரிய மனிதர் ராஜ்கிரண். ஒருகாதலத்தில் அடிதடி வம்பு, வழக்கு என தாதாவாக வாழ்ந்த அவர், ஒரு நம்பி‌க்கை துரோகியை தீர்த்து கட்ட பக்கத்து ஊருக்கு வரும் பொழுது பிரசவலியால் துடிக்கும் ஒரு தாயையும், சேயையும் காபந்து செய்கிறார். அவராலேயே பெயர் சூட்டப்படும் அந்த சேய், வளர்ந்து பெரியவன் ஆனதும் ராஜ்கிரணுக்‌கே காவலுக்கு போகிறான். ராஜ்கிரணோ அவரது மகள் அசினுக்கு அந்த வாலிபனை காவலாக்குகிறார்.

அந்த காவலனே அசினின் காதலன் ஆவதும், அந்த காவல், காதலால் எழும் விளைவுகளும் தான் "காவலன்" படத்தில் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லப்பட்டிருக்கும் மீதிக்கதை!
ஓபனிங்க் பாக்சிங்க பைட்டுக்கு பாங்காங் போகிற மாதிரி காட்டிவிட்டு, விஜய் கை பட்ட 'பைட்டர்' எல்லாம் கீழே விழுந்து தோற்று போவது போல கட்டுவது கொஞ்சம்............. ஓவரா இல்ல ?
எனக்கு பிடித்த சில...

விஜய் நீண்ட நாட்களுக்கு பின்பு அற்புதமான காதல் கதையில் நடித்துள்ளார். முகமறியாத தன் காதலியை சந்திக்க இடத்தில் அசினுடன் பேசும் இடம் அட அட!!!. சூப்பர் ஆக்டிங் விஜய். விஜய் பல இடங்களில் தனது நடிப்பின் மூலம் கதைக்கு உயிர் ஊட்டியுள்ளார். கொஞ்சம் சதை போட்டு மேலும் அழகாக தெரிகிறார். அதும் கிளைமாக்ஸ் ஹேர் ஸ்டைல் அட்டகாசம்.
சண்டை காட்சிகள் ஒன்றும் சொல்லிகொல்லும்படி இல்லை.

வழக்கமாக விஜய் படத்தில் இருக்கும் துள்ளல் டான்ஸ் இந்த படத்தில் மிஸ்ஸிங்க்...
ராஜ்கிரண் அசினின் அப்பா. மிரட்டலான நடிப்பில் மிரளவைக்கிறார். ராஜ்கிரணின் ஜோடி ரோஜாவும் தன் பங்கிற்கு மிரட்டுகிறார்.

அசினுக்கு வெயிட்டான ரோல். ஒரு புறம் காதலியாய் விஜயிடம் உருகி மறுபுறம் தான் யாரென்று சொல்ல முடியாமல் விஜய் படும் கஷ்டங்களைப் பார்த்து கலங்கி அழகாய் செய்திருக்கிறார். பல காட்சிகளில் ஒடுங்கிய கன்னங்களோடு வருகிறார். Why ?

அசினின் தோழியாக 'சூர்யன் சட்டக் கல்லூரி' நாயகி மித்ரா. கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். அசினை காட்டிலும் இவள் மிக இயல்பாக நடிதிருகிறாள். விஜயை கைபிடிக்கும் இடம் கொஞ்சம் லாஜிக் மீறல். பட் ஓகே.
அம்மாவாசையாக வடிவேலு. அதற்கலம் பண்ணுகிறார். லேடீஸ் ஹாஸ்டலில் தான் அடிவாங்கிய சம்பவத்தை சொல்லும் இடத்தில் தியேடரே ஒரே சிரிப்போலிதான்.

தூங்கி வழியும் எம்.எஸ்.பாஸ்கர் உடல் மொழியால் சிரிக்கவைக்கிறார்.

வித்யாசாகரின் இசை + மெலடி பாடல்கள் ஓகே ரகம். யாரது யாரது சூப்பர் மெலோடி. ஸ்டெப் ஸ்டெப் பாடலும் & விண்ணைக்காப்பான் ஒருவன் பாடலும் தேவையில்லாத திணிப்புகள்.

நல்ல கதையை தேர்வு செய்துவிட்டு மோசமான திரைக்கதையில் சருக்கிவிட்டார் டைரக்டர் சித்திக். படத்தின் முதல் பாதியை கடக்க ரொம்பவும் பொறுமை தேவைப்படுகிறது. ஆனால் படத்தின் இரண்டாம் பாதியில் அந்த குறையை போக்கி ரசிகர்களை புத்துணர்ச்சி அடைய செய்திருக்கிறார் இயக்குநர் சித்திக்.

காவலன் - வித்தியாசமான விஜயை காண பார்க்கலாம்.

பொங்கல் கரிநாள் அன்று நான் பார்த்த தியடரில் காத்து வாங்கியது. என் அக்கா & அண்ணன் குழந்தைகளுடன் சென்று பார்த்தேன். நூறுபேர் தான் என்னுடன் சேர்ந்து படம் பார்த்தார்கள். பாடல் வரும்போதெல்லாம் ரசிகர்கள் வெளியே சென்றதை பார்க்க பார்க்க நானும் பாடலை ரசிக்க முடியவில்லை.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



ஒரு பக்க கதை - பிரசாதம் !

"ஏன் இப்படி இடிச்சிட்டு வரீங்க. அமைதியாய் நின்னு தரிசனம் பண்ணுங்களேன்." அவரின் குரல், மந்திர ஓலி, மணி ஓலியையும் மீறிக் கொண்டு கணீரென்று ஓலித்தது.
-
"வந்துட்டான்யா வலுத்த கிழவன்! இவன் மட்டும்தான் சாமியாக் கும்புடணுமோ? எங்கயும் இவனாலே இடைஞ்சல்தான்" என்றார் முதிய பெண்மணி ஒருவர்.
-
அனைவரின் கவனமும் அந்தக் கிழவரின் பக்கம் திரும்பியது. ரிஷிப வாகனம் வலம் முடிந்து இறங்கியது. தீபாராதனை ஆனதும் வாகனத்தை அலங்கரித்த மலர் பிரசாதம் பெற தள்ளுமுள்ளு! கிழவரும் பூ வாங்குவதற்கு முண்டியடித்தார்.

"கெழவனுக்கு ஏன்யா பூவு? பொம்பளைகளை வாங்கவிடாம குறுக்கே வர்றானே!" என்றார் அந்தப்பெண்மணி.
இதைச் சட்டையே பண்ணாமல் அவர் பூவை வாங்கிய பிறகே போனார். பெண்கள் பழிப்புக் காட்டினர். பூவுடன் வெளியே வந்த அவர், பிராகாரத் தூண்களில் சாய்ந்தபடி, நடக்க இயலாதவர்களாய் இருந்த வயோதிகப்பெண்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாய்ப் பூவைக் கொடுத்தார்.
-
பிரதோஷப் பிரசாதம் பெற்ற பூரிப்பு அவர்களின் முகத்தில், உதவிய சந்தோஷம் கிழவரிடத்தில்.

நன்றி: குமுதம்



உங்கள் சிந்தனைக்கு இந்த படம். இது யார் செய்த குற்றம் ?


இந்த படத்தை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளலாமே !



அழகோ அழகு... Six Useful Tips!

மனிதனின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்துவது அவனின் முகம்தான். உடலிலும், உள்ளத்திலும் குறை ஏதும் உண்டானால் அதன் வெளிப்பாடும் முகத்தில் தெரியவரும். இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு முகத்தையும், உடலையும் ஆரோக்கியம் பெறச் செய்யலாம்.


1. முகம் பொலிவு பெற...
தேன் – 1 ஸ்பூன்
ஆரஞ்சு பழச்சாறு – 1 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 2 ஸ்பூன்
இவற்றைக் கலந்து முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி 10 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகம் பட்டுபோல் ஜொலிக்கும்.


2. அழகான உதடுகளுக்கு...

பாலாடை, நெல்லிச்சாறு கலந்து உதட்டில் தடவி வந்தால் உதடு கருமை நீங்கி சிவப்பாகும்.

வெண்ணெய்யுடன் ஆரஞ்சு சாறு கலந்து உதட்டில் பூசி வந்தால் வெடிப்புகள் மாறி உதடு மென்மையாகும்.


3. வறண்ட சருமத்திற்கு...

வறண்ட சருமம் கொண்டவர்கள் கடல் உப்பை நீரில் கரைத்து முகத்தில் தேய்த்து இலேசாக மசாஜ் செய்து, பருத்தியினால் ஆன துணி கொண்டு முகத்தைத் துடைத்து, பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் வறண்ட சருமம் பொலிவு பெறும். 15 நாட்கள் இவ்வாறு செய்வது நல்லது.



4. உதடுகள் பொலிவு பெற...

உதடுகள் கறுப்பாக இருப்பவர்கள் சிறிதளவு வெண்ணெயை உதட்டில் தினமும் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதனால் உதட்டிலுள்ள கருமை நிங்க, இயற்கையான ரோஸ் நிறம் கிடைக்கும்.


5. கண்ணுக்குக் கீழ் உள்ள வீக்கம் குறைய...

கண்ணுக்குக் கீழ் உள்ள வீக்கம் குறைய - ஒரு டீஸ்பூன் பச்சை உருளைக் கிழங்கு சாறை அந்த இடத்தில் தடவவும். பத்து நிமிடம் வைத்திருந்து பின் கழுவவும்.


6. முகப்பரு நீங்க...
கொத்தமல்லி – 5 கிராம்
புதினா – 5 கிராம்
எடுத்து அரைத்து அதனுடன் பயத்த மாவு, கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காயவைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும்.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



AND SOON THE DARKNESS (2011) - ஹாலிவுட் பட விமர்சனம் (18+)

பிரெஞ்சு மொழியில் 70-களில் வெளிவந்த ஒரு திரிலர் படம் 'AND SOON THE DARKNESS' - இதே படத்தை ரீ-மேக் செய்து இப்போது ஹாலிவுட்டில் இதே பெயரில் எடுத்து வெளியிட்டுளர்கள். இரண்டு படங்களில் - கதை நடைபெறும் இடம் மற்றும் காட்சியமைப்புகள் மிகவும் வேருபட்டவைகள்.
படத்தோட கதை என்னானா...

படம் தொடக்கும் போதே, ஒரு அறையில் அரைகுறை உடைகளில் ஒரு பெண்ணில் கைகள் கட்டபட்டு முகமெங்கும் காயத்தில் வீக்கம் + அவளது தொடைகளில் சில இடங்களில் ரத்த காயங்கள். வழியால் துடிக்கிறாள். அப்போது வரும் ஒருவன், அவள் மீது ஒரு வாளி நீரை கொட்டி, மின்சாரத்தில் இணைக்கப்பட்ட அந்த ஒயரை எடுத்து அவளது தொடைகளில் வைக்க அந்த இடமே அவளது சப்தத்தில் அலற, அவள் மயக்கமாகிறாள்.

மூன்று மாதத்திக்கு பிறகு என்று மீண்டும் படம் தொடக்குகிறது.

ஸ்டெபானி மற்றும் எல்லி இருவரும் தோழிகள். இவர்கள் அமெரிக்காவில் இருந்து தங்கள் விடுமுறையை கழிக்க, சைக்கிள் மூலம் அர்ஜென்டினா வருகிறார்கள்.

அன்று மாலை, இரவு விருந்தில் சரக்கு அடிக்க, அந்த இடத்தில் எல்லியை உள்ளூர் வாசி ஒருவன் பார்வையால் கவர, அவனுக்கு கம்பெனி தர கிளம்பிவிடுகிறாள். தனிமையில் வெறுத்துப்போன ஸ்டெபானி - பார்வையை சுழற்ற, அங்கே அமெரிக்கன் மைகேல் சந்திக்கிறாள். எல்லி அந்த உள்ளூர்வாசியின் மயக்கத்தில் தன்னை இழக்கும் நிலையில் ஸ்டெபானி வந்து அவளை ஹோட்டல் ரூமுக்கு அழைத்து தூங்க செல்கிறாள்.

தூக்கத்தில், ஏதோ சப்தம் கேட்டு ஸ்டெபானி எழுத்து பார்க்க எல்லி படுக்கையில் இல்லை. தேடி பார்க்க, ரூமுக்கு வெளியே போதையில் எல்லி அந்த உள்ளூர் வாசியிடம் மிக நெருக்கமாக இருப்பதாய் கண்டவள் - சப்தமிட்டு எல்லியை வலுகட்டாயமாக ரூம்முக்கு அழைக்க, அவன் சப்தமிட, எதிர் ரூமில் இருந்து மைகேல் வந்து அந்த உள்ளுர்வாசியை தாக்க, ஹோட்டல் உரிமையாளர் வந்து பிரச்சனையை சரிசெய்கிறார்.

மறுநாள் காலை, சைக்கிள் மூலம் இருவரும் ஒரு மலை பகுதியை காண செல்கிறார்கள். அது ரொம்பவும் ஒதுக்குபுறமான - அமைதியான நீரோடை கொண்ட பகுதி. பிகினி உடையில் ஓய்வெடுக்க - சிலமணி நேரத்திற்குப்பின், ஸ்டெபானி எல்லியை ஹோட்டலுக்கு அழைக்க, எல்லி வர மறுக்கிறாள். சின்ன சண்டை வர - ஸ்டெபானி சைக்கிள் எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்கு திரும்ப, பாதி வழியில் மனசு வராமல் எல்லிக்கு போன் செய்கிறாள். அவளை வரும் வழியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் நிற்பதாக சொல்லி அந்த ஹோட்டலுக்கு செல்கிறாள். எல்லி வரவில்லை. அந்த ஹோட்டலுக்கு மைகேல் காரில் வருகிறான். உதவி தேவையா என கேட்கிறான். இவள் வேண்டாம் என மறுக்கிறாள். மீண்டும் சைக்கிள் எடுத்துகொண்டு இவர்கள் இருந்த இடம் செல்ல அங்கே எல்லியை காணவில்லை. அவள் சைக்கிளும் இல்லை.

மைக்கேலும் அங்கே வர, இருவரும் தேட, எல்லியின் உடைமைகள் அந்த நீரோடை அருகே சிதறிக்கிடக்க, போலீஸ் உதவியை நாடுகிறார்கள். போலீஸ் வந்து பார்த்துவிட்டு எல்லி காணாமல் போயிருக்க மாட்டாள் என்று கூறி, ஒரு புகார் வாங்கிகொள்கிறார். அவர் அதனை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை.

அந்த உள்ளூர் வாசி பைக்கில் செல்வதை ஸ்டெபானி பார்க்க, அவனை தொடர்ந்து செல்கிறாள். அங்கே, எல்லில்யை அவன் சித்தரவதை செய்வதை பார்க்கிறாள். அவனிடமிருந்து அவளை விடுவித்து தப்பித்து செல்லும் போது, உள்ளுர்வாசி தூரத்த, எதிரே மைகேல் + போலீஸ்காரர் காரில் வர, அங்கே எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நடக்கிறது. அப்படி என்ன நடந்தது? அந்த இரண்டு பெண்களும் என்ன ஆனார்கள் என்பதே மீதி கதை.
எனக்கு பிடித்த சில நடிகர்கள்...

எல்லியாக Odette Yustman. டைரக்டர் கொடுத்த காசுக்கு இவளை உரித்து பார்த்துவிடுகிறார். போதையில் இவர் செய்யும் சேட்டைகள் ரசிக்ககூடியவைகள். இவளால் ஏற்படும் பிரச்சனயே இந்த படத்தின் அடி நாதம்.

ஸ்டெபானியாக Stephanie. ரொம்ப அழகு. அறிமுக காட்சிகளில் இருதே நம்மை மயக்கி இவள் ஒரு வழி செய்துவிடுகிறாள். பல இடங்களில் மிக சிறப்பான நடிப்பு

மைகேல்லாக Karl Urban - இந்திய பட கதாநாயகன் போற்ற முக சாயல் + இயல்பான நடிப்பு. ஒரு கட்டத்தில் இவன் தான் எல்லியை கடத்தினானோ என்ற சந்தேகம் வரும் இடமும் அதற்கு முன் நடக்கும் சம்பவங்கள் மிக அருமை. கடைசியில் அநியாயமாக செத்துபோகிறான்.

அர்ஜென்டினாவின் அழகை படம் முழுவதும் காண முடிகிறதும். மிக சிறந்த ஒளிபதிவும் (Todd E. Miller) + மிக இதமான பின்னனி (Tomandandy) இசையும் படத்துக்கு பெரிய ப்ளஸ் பாயிண்ட்.

போலீஸ் காரர், அந்த உள்ளூர் வாசி, ஹோட்டல் மேனேஜர், அடிபும்பில் தண்ணீர் பிடிக்கும் அந்த மனிதர் என் அனைவரும் மிக இயல்பாக நடித்திருகிரார்கள்.

ஆர்ட் டைரக்டர் தான் ரொம்ப கஷ்டப்பட்டு செட் போட்டதா இல்லை அந்த இடமே அப்படி தானா என்று தெரியவில்லை... ரொம்பவே பயமுறுத்து இடங்கள்.

திர்ல்லர் வகை படங்களில் இருக்கும் அந்த ஈர்ப்பு இந்த படத்தில் மொஞ்சம் மிஸ்ஸிங்.

இந்த படம் நமக்கு சொல்லவருவது என்னன்னா... பழக்கமில்லாத வெளி இடங்களுக்கு சென்றால், சென்ற வேலையை மற்றும் பார்க்கணும் அதை விட்டுக்கு வேற ஏதாவது விசயத்தில் சென்றால் வரும் பிரச்சனைகளை அனுபவித்து தான் ஆகணும்.

AND SOON THE DARKNESS - முடிந்தால் பார்க்கலாம்.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



பதினாறு 2011 - பாடல் விமர்சனம்

'சுந்தர புருஷன்', 'விஐபி', 'புன்னைகை பூவே' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியிருக்கும் சபாபதி இயக்கியிருக்கும் இப்படத்தின் 'சென்னை 28' சிவா தான் ஹீரோ. இவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் மது ஷாலினி.

இந்த படத்திற்கு மற்றொரு ஹீரோவும் இருக்கிறார். அவர்தான் நம்ம யுவன். படத்தின் இசை வெளியீட்டிற்காகவும், படத்தின் விளம்பரத்திலும் யுவனின் புகைப்படத்தை மட்டும் அச்சிட்டு விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக கோடம்பாக்கத்தில் யுவனின் இசைக்கொடிதான் உயரப் பறந்தாலும், இப்படத்தின் மூலம் இன்னும் கொஞ்சம் அதிகமாவே பறக்கும் அளவிற்கு உள்ள இப்படத்தின் பாடல்கள்.

இலவசமாக பாடல் பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

1. அடடா என் மீது - பைலா சிண்டே, ஹரிஹரன்

ஆரம்பத்தில் பைலா சிண்டே குரல் மெதுவாக பயணிக்க தொடக்கி பின்னர் நம் மனதோடு ஒன்றிவிடுகிறது.

கார்த்திக் நேதா வரிகளை ஹரிஹரன் மிக அற்புதமாக பாடியிருக்கிறார். இந்த பாடலுக்கு இவரை தவிர வேறு ஒருவரை நினைத்து பார்க்க முடியாது. வசீகிற குரல் + தெளிவான உச்சரிப்பு.


2. காட்டு செடிக்கு - கார்த்திக் ராஜா

கார்த்திக் ராஜா குரலில் மிக மென்மையான சினேகன் பாடல். வழக்கமான குரல் தொனியில் இல்லாமல் சற்றே வேறுவிதமாக இருக்கு கார்த்திக் ராஜா குரல். மிக அருமையான ஆர்கெஸ்ட்ரா. பாடல் முடியும் போது ஒரு வித இதமான இசை கேட்ட திருப்தி மனதில் எழும்.


3. யார் சொல்லி காதல் - யுவன் ஷங்கர் ராஜா

சினேகன் பாடல் வரிகள். யுவனுக்கே உரிய ஒரு ஜீவனுள்ள பாடல். அதகேற்றார் போல இசை கோர்வை. யுவனின் முந்தைய பாடலில் இருக்கும் ஒரு வித ஈர்ப்பு இந்த பாடலிலும் உண்டு.


4. வானம் நமதே - ஷங்கர் மஹாதேவன்

மீண்டும் யுவன் இசையில் சங்கர் மகாதேவனின் கண்ணீர் குரலில் ஒரு பாடல். அனைவரயும் கவர்திழுக்கும் சினேகன் பாடல் வரிகளில் எனக்கு பிடித்த வரிகள்
யாரோ நடை போட்ட திசையில் - நாம் போகாமல்
நாம் போகும் திசை - நாளை வழியாகலாம்

5. Theme Music - யுவன் ஷங்கர் ராஜா

பெரிதாக சொல்லிகொள்ளும் படி இல்லை. ஆனால், படத்துடன் காணும்போது இந்த இசையின் வீரியம் இன்னும் வெளிவரும் என்பது என் கருத்து.

இலவசமாக பாடல் பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக.



பதினாறு - மொத்ததில் இயைய தலைமுறையை கவரக்கூடிய ரொமாண்டிக் மெலடி பாடல் கேட்க கேட்க பிடிக்கும் படி இருக்கு.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



தென்மேற்குப் பருவக்காற்று - திரை விமர்சனம்

தமிழ் கிராமத்தின் வாழ்க்கையை தத்ரூபமாக காட்டியுள்ள தென்மேற்குப் பருவக்காற்று படம்.
ஒரு குத்துப்பாட்டு + கவர்ச்சி இல்லை, யதார்த்தம் மீறிய காதல் காட்சிகள் இல்லை, டூயட் + பஞ்ச் வசனம் + பறந்து பறந்து அடிக்கும் சண்டைகள் இல்லை, பெரிய கதாநாயகன் + நாயகி இல்லை, காமெடிக்கு தனி ட்ராக் இல்லை. ஆனாலும் ஒரு தரமான படத்தை நமக்கு தந்திருக்கிறார் டைரக்டர் சீனு ராமசாமி.
படத்தோட கதை என்னானா...

வயல்பட்டியை சேர்ந்த வீராயி(சரண்யா) கணவனை இழந்தவள். ஒரே மகன் முருகனை(சேதுபதி) பாசமாய் வளர்க்கிறாள். அவன் ஆடுமேய்ப்பது, தாய் சம்பாதித்த காசை திருடி சாராயம் குடிப்பது என திரிகிறான்.

முருகன் ஆட்டு மந்தையில் நள்ளிரவு வயல்பட்டியை சேர்ந்த திருடர்கள் புகுகிறார்கள். ஆடுகளை களவாடி செல்கின்றனர். முருகன் பின்னால் விரட்டி முகமூடி அணிந்த ஒருத்தரை பிடித்து முகத்தை விலக்கி பார்த்த போது பெண் என்பதை கண்டு அதிர்கிறான்.

அவள் 'பேச்சி' (வசுந்தரா) என்பதும் குடும்ப தொழிலே 'களவு செய்தல்' என்றும் தெரிகிறது. தப்பி ஓடிய அவளை போலீசாருடன் தேடி அலைகிறான். தங்கையை அடையாளம் கண்ட முருகனை போட்டுத்தள்ள அண்ணன்மார் திட்டம் வகுக்கின்றனர். போலீசார் அவர்களை பிடித்து ஜெயிலில் அடைக்கின்றனர்.

அதன் பிறகு முருகனுக்கும் பேச்சிக்கும் காதல் மலர்கிறது. வீராயியோ வேறு பெண்ணை நிச்சயம் செய்கிறாள். பேச்சி அண்ணன்கள் காதலை எதிர்க்கின்றனர்.

அதன் பிறகு நடப்பவை உயிரை உருக்கும் கிளைமாக்ஸ்.
எனக்கு பிடித்த சில நடிகர்கள்...

முருகனாக விஜய் சேதுபதியும், பேச்சியாக வசுந்தராவும் கிராமத்து காதலில் கவிதையாய் பதிகிறார்கள். மிக எதார்த்தமான நடிப்பு இருவருக்கும்.

நாயகனுக்கு முதலில் நிச்சயிக்கப்பட்ட (கலைச்செல்வி) பெண்ணாக வருபவரும் அவரின் அப்பாவாக வருபவரும் வாழ்ந்திருக்கிறார்கள். "இனிமே இது என்கிட்ட இருக்கக் கூடாது மாமா.." என்று திரும்பிக் கொடுக்கும் இடத்தில் அவர் பேசும் வசனம் CLASSIC! அந்த முறைப்பெண் திரும்பி போகும் போது என்கண்ணில் கண்ணீர் திரண்டு நின்றது.

வீராயியாக வரும் சரண்யா தாயாய் வாழ்ந்துள்ளார். அதில் சில ...
  • ரத்ததான முகாமில் வந்து பிரச்சனை செய்துவிட்டு, அப்பனில்லாதவனுக்கு எல்லாம் ரத்தம் கொடுப்பாங்கன்னு சொன்னதும் ரத்தம் கொடுக்க போவது,

  • பையனுக்கு முடிவெட்ட ஓடிப்பிடித்து வெட்ட முயலும் காட்சி,

  • பையன் ஆட்டுக்கிடா போட்டியில் ஜெயித்த கப்பை தட்டி பறித்த எதிர்கோஷ்டியின் வீட்டிற்கே போய் அலப்பறை செய்துவிட்டு கப்பை வாங்கி வீட்டில் தூக்கியெறிந்துவிட்டு மகனை தேடுவது,

  • பையனுக்கு ஒரு கால்கட்டை போட பால்சங்கை வெத்தலைபாக்கை வைத்து தாம்பூலம் மாற்றும் காட்சி,

  • மகனுக்கு பெண் பார்ப்பது, மருமகளை ஊராரிடம் அறிமுகப்படுத்தி சந்தோஷப்படுவது

  • மகனை காதலிக்கும் வசுந்தராவிடம் அவர் ஊருக்கே போய் சண்டைக்கு நிற்பது

  • குத்துப்பட்ட வயிற்றில் துண்டைக் கட்டிக் கொண்டு பஸ்சேறி அட்மிட் ஆகும் காட்சி
ஏ.ஆர்.ரஹ்நந்தன் இசையில் வைரமுத்துவின் பாடல் வரிகள் ஜீவன் பாய்ச்சுகிறது. கள்ளிக்காட்டில் பிறந்த தாயே பாடல் நெஞ்சை நனைக்கிறது.

கிராமத்துத் தெருக்கள், ஆட்டு மந்தைகள், களவாணிகள், மினி பஸ்கள் பயணம் என மிக அற்புத ஒளிபதிவு. அடை மழையில் ஆடுதிருட வரும் காட்சியாகட்டும், புழுதிக்காட்டில் சண்டையிடும் காட்சியாகட்டும், நம்மை அங்கேயே கொண்டு போய் உட்கார வைத்துவிடுகிறார் டைரக்டர் சீனு ராமசாமி.

தென்மேற்கு பருவக்காற்று - கண்டீப்பாக தியேட்டரில் பார்த்து ரசிக்க வேண்டிய படம்.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



எனக்கு பிடித்த சில படங்கள் - 2010

இந்த வருடத்தில் எனக்கு பிடித்த சில படங்கள்.

1. அங்காடித் தெரு

வெயில் படத்தை இயக்கிய வசந்த பாலன் இயக்கத்தில் ஐங்காரன் தயாரிப்பில் மார்ச் மாத கடைசியில் அங்காடி தெரு திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் புதுமுகம் மகேஸ், அஞ்சலி நடித்திருந்தனர். விஜய் ஆன்ட்டனி மற்றும் ஜீவி பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தனர்.
துயரத்துக்கு வாழ்க்கைப்பட்டு அங்காடித் தெருக்களில் பல நூறு கால்களில் மிதிபட்டாலும், நம்பிக்கை என்ற சின்ன நூலையே கயிறாகக் கட்டி மேலே எழுந்து நிற்க முயலும் சாமானிய மக்களின் கதை இது.
மிக சிறந்த பாடல்கள் + உணர்வுபூரணமாக கதையம்சம் கொண்ட இந்த பாடல் என்னை வெகுவாக பாதித்தது.
எனக்கு பிடித்த சில பாடல்கள் :

1. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
2. உன் பேரை சொல்லும்

2. மைனா

பிரபு சாமலன் இயக்கத்தில் தீபாவளி அன்று மைனா வெளிவந்தது. உதயநிதி ஸ்டாலின் மற்றும் எஸ்.கல்பாத்தி அகோரம் இணைந்து வெளியிட்டனர். இப்படத்தில் புதுமுகம் வித்யார்த் மற்றும் அமலாபால் இணைந்து நடித்திருந்தனர். டி.இமான் இசையமைத்து இருந்தார்.

தான் உணர்ந்து, அனுபவித்த உணர்வுகளை பிரபு சாலமன் இம்மி பிசகாமல் படமாக்கியிருகிறார். படம் பார்த்த ஒவ்வொருவரையும் தன்னை போல் உணர வைத்ததே பிரபுக்கு கிடைத்த வெற்றியாகும்.
படம். வெறும் நான்கு கேரட்டர்களை கொண்டு இப்படி ஒரு படம் தரமுடியுமா என்ற கேள்வி தான் எழுகிறது நாமில் பலருக்கும். பாடல்கள் மிகபெரிய பலம் + கேமிரா மற்றும் துல்லிய ஒளிபதிவு. அழகான அமலா பால் இந்த படத்தில் மிக இயல்பான பொருத்தியதும் மிகபெரிய பலம்.
எனக்கு பிடித்த சில பாடல்கள் :

1. மைனா மைனா நெஞ்சுக்குள்ள
2. கைய புடி
3. நீயும் நானும்

3. எந்திரன்

சன் பிக்கர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் ஐஸ்வர்யாராய் நடிப்பில் எந்திரன் படம் அக்டோபர் மாதம் வெளியானது. இப்படத்திற்கு இசைபுயல் A.R.ரகுமான் இசையமைத்திருந்தார்.

ரோபோவை மையப்படுத்தி கதைகளம் அமைக்கப்பட்டிருந்தது. மிகபெரிய பட்ஜெட் கொண்ட இந்த படத்துல சூப்பர் ஸ்டார்ட் ரஜினியை ஓரகட்டிய இயக்குனர் சங்கரை தான் காண முடிந்தது. உலகம் முழுதும் வெளியான இப்படம் என்னைப் பொறுத்தவரை ஒரு இனிய அனுபவம்.
எனக்கு பிடித்த சில பாடல்கள் :

1. கிளிமஞ்சாரோ
2. காதல் அணுக்கள்
3. இரும்பில் ஒரு இதயம்

4. களவாணி

நஷீர் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில்; பசங்க படத்தில் நடித்த விமல், புதுமுகம் ஒவியா நடிப்பில், களவாணி படம் ஜுன் மாத இறுதியில் வெளிவந்தது. இப்படத்திற்கு குமரன் இசையமைத்து உள்ளார்.

ஒரு சாதாரண காதல் கதையை நகைச்சுவை முலாம் பூசி, கிராமத்துக்கலாச்சாரத்துடன் செலவே இல்லாமல் பிரமாதமான பிரசண்ட்டேஷனில் தந்திருக்கிறார் என்றால் அது டைரக்டரின் சாமார்த்தியமே.
கஞ்சா கருப்புவின் காமெடி + இயல்பான நடிப்பு என படம் பார்பர்வகளை இன்றினைதது இதன் பலம். காதல் மற்றும் நகைச்சுவை கலந்து வெளிவந்த இப்படம் ரசிகர்களின் பார்வைக்கு விருந்தாக அமைந்தது.
எனக்கு பிடித்த சில பாடல்கள் :

1. ஒருமுறை இருமுறை
2. பட பட படவென

5. மதராசபட்டினம்

இயக்குனர் விஜய் இயக்கத்தில், ஆர்யா மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் ஜுலையில் மதராசபட்டினம் வெளியானது. உதயாநிதி ஸ்டாலின் இந்தியாவில் இப்படத்தை வெளியிட்டிருந்தார்.
சுதந்திரத்துக்கு முன் தமிழ் இளைஞனுக்கும், வெள்ளைக்காரப் பெண்ணுக்கும் ஏற்பட்ட காதலும், அதனால் உருவான பிரச்சினைகளுமே கதை…
ஜி.வி. பிரகாஷ்குமார் இமையமைத்திருந்தார். இப்படத்தின் கதைகளம் 1947ஆம் ஆண்டு சுதந்திர வாங்கும் சமயத்தில் நடைபெறுவதாக அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு கால கட்டத்தில் நடப்பது போன்ற காட்சிகளும் அதன் பின்னணியும் மிக அழகு. கதைக்காக அந்தகால வாழ்வில் நடைமுறைக்கு ஏற்ப செட்டிங் போட்டு சிறப்பாக படம் எடுக்கப்பட்டிருந்தது.
எனக்கு பிடித்த சில பாடல்கள் :

1. பூக்கள் பூக்கும்
2. வாம்மா துரையம்மா
3. மேகமே மேகமே

6. நான் மகான் அல்ல

சுசிந்திரன் இயக்கத்தில், கார்த்தி மற்றும் காஜல்அகர்வால் நடிப்பில், ஆகஸ்ட் மாதம் நான் மகன் அல்ல திரைக்கு வந்தது. இப்படத்தை தயாநிதிஅழகிரி வெளியிட்டார்.

நா‌ள்‌ தோ‌றும்‌ செ‌ய்‌தா‌ள்‌களி‌ல்‌ நா‌ம்‌ படி‌க்‌கும்‌ கொ‌லை‌கள்‌ சம்‌பந்‌தமா‌ன செ‌ய்‌தி‌யு‌ம்‌ இருக்‌கும்‌. அதி‌லும் ஒருவரை‌ கொ‌ன்‌றுவி‌ட்‌டு அவரது உடல்‌களை‌ துண்‌டு, துண்‌டா‌க வெ‌ட்‌டி‌ வெ‌வ்‌வே‌று இடங்‌களி‌ல்‌ வீ‌சி‌வி‌ட்‌டு போ‌லீ‌சுக்‌கு தலை‌வலி‌யா‌க மா‌றி‌யவர்‌களை‌ பற்‌றி‌ படி‌த்‌தி‌ருக்‌கி‌றோ‌ம்‌. அந்‌த செ‌ய்‌தி‌ துண்‌டை‌ வே‌றொ‌ரு பா‌ணி‌யி‌ல தி‌ரை‌க்‌கதையா‌க்‌கி‌ அதற்‌கு நா‌ன்‌ மகா‌ன்‌ அல்‌ல என்‌ற பெ‌யரை‌ சூ‌ட்‌டி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌ சுசீ‌ந்‌தி‌ரன்‌
யுவன்சங்கர்ராஜா இசையமைத்திருந்தார். இளைஞர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி கதைக்களம் வித்தியாசமான முறையில் பின்னப்பட்டிருந்தது; திரைக்கதையும் பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
எனக்கு பிடித்த சில பாடல்கள் :

1. வா வா நிலவப்புடிச்சித்தரவா
2. இறகை போலே அலைகிறேனே

7. பாஸ்(எ)பாஸ்கரன்

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில், ஆர்யா, நயன்தாரா மற்றும் சந்தானம் நடிப்பில், செப்டம்பர் மாதம் பாஸ்(எ)பாஸ்கரன் வெளியானது.

பொறுப்பில்லாமல் வெட்டியாக சுற்றித்திரியும் இளைஞன் காதலுக்காக பொறுப்பு உள்ளவனாக மாறும் கதை. முழுக்க முழுக்க காமெடியை மட்டும் நம்பி இரண்டாவது முறையாக பாஸ்(எ)பாஸ்கரன் படத்தின் மூலம் இயக்குநர் பரிட்சையில் ஃபாஸ் பன்னியிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.
இப்படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்தார். இதில் வரும் 'நண்பேண்டா ...' வசனம் மிக பிரபலமானது. இப்படம் மக்களை மனம் விட்டு வயிறுகுலுங்க சிரிங்க வைத்த வெற்றி படமாகும்.
எனக்கு பிடித்த சில பாடல்கள் :

1. மாமா மாமா
2. யார் அந்த பொன்னுதான்

8. விண்ணைத்தாண்டி வருவாயா

கௌதவ்மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் பிப்ரவரியில் விண்ணைத்தாண்டி வருவாயா வெளிவந்தது. இப்படத்தை உதயாநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

உணர்வுகளை உசுப்பி விடும் ஒரு சில படங்களின் வரிசையில் சேர்ந்திருக்கிறது கௌதம் வாசு தேவ மேனனின் சொந்தக்கதை என்று கூறப்படும் விண்ணைத்தாண்டி வருவாயா . இன்னும் கொஞ்ச காலத்திற்கு இளைய உள்ளங்களின் காதல் பாடப்புத்தகமாக கட்டாயம் இருக்கும்
இப்படத்திற்கு இசைபுயல் A.R.ரகுமான் இசையமைத்திருந்தார். பாடலுக்காகவே இந்த படம் இளைனர்களை வெகுவாக கவர்ந்த இப்படத்தின் கதை காதல் மற்றும் ரொமான்டிக் கலந்து இருந்தது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
எனக்கு பிடித்த சில பாடல்கள் :

1. ஹோசானா
2. ஆரோமலே
3. ஓமனப் பெண்ணே

9. சிங்கம்

சன்பிர்க்கஸ் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் சூரியா மற்றும் அனுஷ்கா நடிப்பில் மே மாத இறுதியில் வெளிவந்தது. இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இமையமைத்திருந்தார்.

தாதாவை ஒடுக்கும் ஹுரோ, என்ற பழைய பார்முலாதான் என்றாலும், அதை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலமும், வித்தியாசமான காட்சி அமைப்புகளின் மூலமும் வெற்றிபடமாக பாய்ந்திருக்கிறது சிங்கம்.
காவல்துறை அதிகாரியான சூரியாவிற்கும், வில்லனாக வரும் பிரகாஷ்ராஜிற்கும் இடையே நடைபெறும் மோதல்கள் திரைக்கதையை விறுவிறுப்பாக்கி ரசிகர்களை கவர்ந்தது. சூப்பர் ஹிட் பாடல்கள் + சூர்யாவின் மீசை இப்பொழுது பலரது முகங்களிலும் காணலாம்.
எனக்கு பிடித்த சில பாடல்கள் :

1. காதல் வந்தாலே
2. என் இதயம்

10.பையா

லிங்குசாமி இயக்கத்தில் க்ளவ்ட் நயன் மூவீஸ் தயாரிப்பில் கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் படம் பையா ஏப்ரலில் வெளியானது.

ரன் மற்றும் சண்டைக்கோழி படங்களின் வெற்றியின் தாக்கத்தில் இருந்து வெளிவராத லிங்குசாமி, அதே மாதிரியான காதல், இளமை, திகட்டும் அளவு சண்டை என்று பக்கா கமர்ஷியல் பேக்கேஜ் உடன் பையாவில் களம் இறங்கி உள்ளார். அதில் ஒரளவு வெற்றியும் கண்டுள்ளார் என்பதும் உண்மை.
யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தின் கதை காரை கதைகளமாக கொண்டு அமைந்துள்ளது. சிறந்த பொழுது போக்கு படமாக மக்களால் பாராட்டப்பட்ட படமாகும்.
எனக்கு பிடித்த சில பாடல்கள் :

1. துள்ளி துள்ளி மழையாய்
2. அடடா மழைடா
3. சுத்துதே சுத்துதே




Happy New Year 2011

அன்பு வாசகர்களுக்கு, கோழிபையனின் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் !!

Dear visitors!

New year is an wonderful occasion, when we welcome a brand new year 2011 and say goodbye to year 2010. At this moment I only wanna say: Happy New Year everyone, wish you have more success and happier in 2011.

- Kolipaiyan



Related Posts with Thumbnails
 
back to top