2011-ல் கலக்கிய நடிகைகள்!!!

தமிழ் படங்களில் 2011-ல் இளம் நாயகிகள் ஆதிக்கம் பலமாக இருந்தது. முன்னணி நடிகைகளாக இருந்த நயன்தாரா, திரிஷா, சினேகா, ஸ்ரேயா, தமன்னா போன்றோர் பின்தங்கியுள்ளனர். நயன்தாரா திருமணத்துக்கு தயாராகி நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார்.

திரிஷா தெலுங்கில் கவனம் செலுத்துகிறார். அனுஷ்கா, அமலாபால், ஹன்சிகா, அஞ்சலி, காஜல் அகர்வால் என பல புது நாயகிகள் இவ்வாண்டில் கலக்கினார்கள்.


அனுஷ்கா வானம், தெய்வத்திருமகள் படங்களில் வந்தார். ரஜினி, கமலுக்கு ஜோடியாகும் வாய்ப்பும் இவரை நெருங்குகிறது. முன்னணி ஹீரோக்கள் அனுஷ்காவுடன் நடிக்க விரும்புகிறார்கள்.

சுராஜ் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாகவும், செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யா ஜோடியாகவும், தாண்டவம் படத்தில் விக்ரம் ஜோடியாகவும் தற்போது நடிக்கிறார்.

ஹன்சிகா மாப்பிள்ளை படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானார். பின்னர் ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம் படங்களில் நடித்து முன்னணி நடிகை பட்டியலில் இருக்கிறார்.

சிம்புவுடன் வேட்டை மன்னன், உதயநிதி ஸ்டாலினுடன் "ஒரு கல் ஒரு கண்ணாடி" படங்கள் கைவசம் உள்ளன. அமலாபாலுக்கு தெய்வத் திருமகள் படம் திருப்பு முனையாக அமைந்தது. மாதவன், ஆர்யாவுடன் வேட்டை, பழைய நடிகர் முரளியின் மகன் அதர்வாவுடன் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

டாப்ஸி, ஆடுகளம், வந்தான் வென்றான், என இருபடங்களில் வந்தார்.


காஜல் அகர்வாலுக்கு இவ்வாண்டில் படங்கள் இல்லை. ஆனாலும் பெரிய நடிகர்களான ஆர்யா ஜோடியாக மாற்றான், விஜய் ஜோடியாக துப்பாக்கி படங்களில் நடிக்கிறார்.

லட்சுமிராய், மெகா ஹிட்டான படங்களான காஞ்சனா, மங்காத்தா படங்களில் வந்தார்.

திரிஷாவும் மங்காத்தா படத்தில் இருந்தார். ஸ்ரேயாவுக்கு ரௌத்திரத்துக்கு பிறகு படங்கள் இல்லை.

சிறுத்தை, வேங்கை படங்களுக்கு பிறகு தமன்னாவிடம் தமிழ் படங்கள் இல்லை.


ஸ்ருதி, 7ஆம் அறிவு படம் மூலம் பேசப்பட்டார். தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக '3' படத்தில் நடிக்கிறார். அஞ்சலி, கார்த்திகா, அனன்யா, ரிச்சா, ஓவியா, 'கோ'வில் வந்த கார்த்திகா போன்றோரும் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்களாக இருந்தனர்.

வரும் 2012 ஆண்டில் இவர்கள் அனைவரது பங்களிப்பும் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே, இந்தப் புதிய நட்சத்திரங்களது எதிர்காலம் அமையும். அது ஒளிமயமானதாக இருக்க வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பும். கோலிவுட் உலகுக்கு இவர்கள் அனைவரையும் கைதட்டி வரவேற்போம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!2011 ம் ஆண்டு என்னை கவர்ந்த 10 கதாநாயகிகள்!

2011-ம் ஆண்டு வெளியான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில், ஏராளமான புதுமுகங்கள் அறிமுகமாகி இருந்த போதும், ஒரு சிலரே கவனம் ஈர்க்கும் வகையில் நடித்திருந்தனர். இந்த வருடம் மட்டும் தமிழில் 57 ஹீரோஸ் & 52 ஹீரோயின்ஸ் அறிமுகம் ஆனார்கள்.

52 பேர் ஹீரோயின்களில் என்னை கவர்ந்த சில கதாநாயகிகள்...

1. ரிச்சா கங்கோபாத்யாயா (மயக்கம் என்ன & ஒஸ்தி)


செல்வராகவனின் நாயகிகள் போலவே தைரியமான வலிமையான தீர்க்கமான கதாப்பாத்திரம். இரண்டாம் பாதியில் தனுஷோடு போட்டி போட்டிகிறார் நடிப்பில்.

2. ஸ்ருதி ஹாசன் (7ஆம் அறிவு)

கமல்ஹாசன் நிச்சயம் பெருமைபட்டு கொள்ளலாம்.


எதிர்பார்க்கவே இல்லை இத்தனை அழகாக நடிப்பார் என்று..! அதனை உணர்த்துவது போல் அழகான அளவான நடிப்பு. குளோஸப் காட்சிகளில் வாய்ஸ் மாடுலேஷன் சிறிதளவுகூட மாறாமல், சிந்தாமல், சிதறாமல் இருக்கிறது. Welcome Shuruthi!

3. டாப்ஸி (ஆடுகளம்)

ஆடுகளம் படத்தின் மூலம் வெள்ளாவிப் பெண்ணாக தமிழ்நாட்டு இளசுளை கலங்கடித்திருகிறார் டாப்ஸி.


டாப்ஸியின் கன்னங்களும் கவலைக்குரியதாக மாறும் போலிருக்கிறது இருக்கிற நிலைமையை பார்த்தால். கதையில் இவருக்கு அதிக நடிப்பு வேளையோ தனியே டுயட்டோ இல்லை இருந்தாலும் இவருடைய வேலையை கச்சிதமான நடித்திருக்கிறார்.

4. கார்த்திகா (கோ)

பழம்பெரும் நாயகியான ராதாவின் மகள்தான் கார்த்திகா.


நடிகையாக கார்த்திகா ஜஸ்ட் பாஸ் மார்க் பெறுகிறார் இந்தப் படத்தில். முகத்தில கொஞ்சம் கூட உணர்ச்சியே காட்டாமல் வந்துபோகிறார்.

5. பிரணீதா (உதயன்)

நல்ல முகபாவங்கள், நேர்த்தியான முகம், ஒல்லியான உடல்வாகு என்று செம கியூட்டாக தெரிந்தார் இவர். ஒரு துறுதுறுப்பான கல்லூரி பெண் பாத்திரத்தில் நன்றாக நடித்து இருந்தார். ஆகையால் இந்த படத்தில் இவரை பார்க்கவே சென்றேன்.


முதல் பார்வையிலே, தன் மனதை பறிகொடுத்துவிடுகிறார்! ஒல்லியான பெண்கள் தமிழில் நிலைப்பது அரிதே. ஆனால் இவர் திறமையான ஒரு நடிகை. அதே சமயம் 'தெறம' காட்டும் நடிகையும் கூட. பார்க்கலாம்.

6. நித்யா மேனன் (நூற்றெண்பது)

சித்தார்த் மீது நித்யா மேனனின் காதலும் மிகவும் யதார்த்தம். குறிப்பாக நித்யா மேனன் சித்தார்த்திடம் I Love You சொல்லும் போது ஏதோ நம்மைப் பார்த்து சொல்வது போன்ற ஒரு பிரமை. அந்த அளவிற்கு நித்யா மேனன் வெளிப்படுத்தியிருக்கும் உணர்வுகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.


நித்யா மேனனின் மலையாளம் கலந்த தமிழ் உச்சரிப்பு காரமும், இனிப்பும் கலந்த சேட்டு பலகாரம் போல இருக்கிறது. சேச்சி ஓடி வரும் போதெல்லாம் அவரோடு சேர்ந்து தியேட்டரும் குலுங்குகிறது!

7. பிந்து மாதவி (வெப்பம்)


அழகிய கண்ணும், பழகிய முகமும், எளிய உடையும், ஏஞ்சல் போல் உருவமும் போல ஒரு பெண் அறிமுகமானால், மழை கூட வெப்பமாக இருக்கும். அப்படி தான் "வெப்பம்" படத்தில் அறிமுகமான பிந்து மாதவி.

8. யாஸ்மின் (ஆரண்ய காண்டம்)


சுப்புவாக யாஸ்மின் பொன்னப்பா.. ஆரம்பத்தில் பார்க்கும் போது பரிதாபப்பட வைக்கிறார். சுப்புவுக்கும் சப்பைக்குமான திடீர் காதலும், காமமும் அதிர்ச்சியென்றால் பின்னால் நடக்கும் காட்சிகள் அட போட வைக்கின்றன.

9. ஜனனி அய்யர் (அவன் இவன்)


'அவன் இவன்’ படத்தில் போலீஸ் 'பேபி’யாக ஆர்யாவை முட்டிக்கு முட்டி தட்டியவர்! ஆசைப்பட்ட மாதிரியே சினிமாவில் என்ட்ரி கொடுத்து முதல் படத்திலேயே மோதிரக் கை ஆசியும் கிடைச்சிருச்சு.

10. இனியா (வாகை சூடவா )

சரண்யா பொன்.வண்ணனுக்கு தென்மேற்கு பருவக்காற்று, ப்ரியாமனிக்கு பருத்திவீரன், பார்வதிக்கு பூ…! தொடரும் இந்த வரிசையில் தற்போது இனியாவுக்கு வசப்பட்டிருக்கிறது வாகை சூடவா!


பெயரை மாற்றிக்கொண்ட நேரமோ என்னவோ, களவாணி இயக்குனர் சற்குணத்தின் இயக்கத்தில் உருவான வாகை சூடவா படத்தில் சோலோ ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க பாராட்டுகளை அள்ளியிருக்கிறார் இனியா. வாகை சூடவா படத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத குக்கிராமத்தில் டீக்கடை பெண்ணாக ‘மதி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.வரும் ஆண்டில் இவர்கள் அனைவரது பங்களிப்பும் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே, இந்தப் புதிய நட்சத்திரங்களது எதிர்காலம் அமையும். அது ஒளிமயமானதாக இருக்க வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பும். கோலிவுட் உலகுக்கு இவர்கள் அனைவரையும் கைதட்டி வரவேற்போம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!2011 ம் ஆண்டு வெளிவந்த திரை படங்கள்!

கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிக படங்கள் திரைக்கு வந்தன. எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாள டப்பிங் படங்களையும் சேர்த்து 190 படங்கள் ரிலீசாகி இருக்கின்றன. இவற்றில் கவனம் ஈர்த்த படங்கள் மிகச் சொற்பமே.

இங்கு வெளியாகியிருக்கும் படங்கள், தர வரிசையிலோ அல்லது ரிலீஸ் தேதியை அடிப்படையாகக் கொண்டதோ அல்ல.

நேரடி தமிழ் படங்கள் :-


1) தமிழ் தேசம்
 2) சிறுத்தை
 3) ஆடுகளம்
 4) சொல்லித்தரவா
 5) இளைஞன்
 6) காவலன்
 7) பதினாறு
 8) பழகியதே பிரிவதற்கா
 9) வாடா போடா நண்பர்கள்
10) யுத்தம் செய்
11) தூங்கா நகரம்
12) கருவறைப் பூக்கள்
13) வர்மம்
14) பயணம்
15) இது காதல் உதிரும் பருவம்
16) நந்தி
17) தம்பிக்கோட்டை
18) காதலர் குடியிருப்பு
19) ஆடுபுலி
20) மார்கழி 16
21) தப்பு
22) சீடன்
23) ஆரானின் காவல்
24) சிங்கம் புலி
25) பவானி
26) அய்யன்
27) ஐவர்
28) அவர்களும் இவர்களும்
29) மின்சாரம்
30) முத்துக்கு முத்தாக
31) லத்திகா
32) குமரா
33) சட்டப்படி குற்றம்
34) குள்ளநரி கூட்டம்
35) சிங்கையில் குருஷேத்திரம்
36) படைசூழ
37) அப்பாவி
38) இதயத்தில் ஒருவன்
39) தென்காசி பக்கத்துல
40) நஞ்சுபுரம்
41) பொன்னர் சங்கர்
42) தேவதாசியின் கதை
43) விகடகவி
44) கோ
45) காதல் மெய்ப்பட
46) வானம்
47) பூவா தலையா
48) பாசக்கார நண்பர்கள்
49) எங்கேயும் காதல்
50) நர்த்தகி
51) சங்கரன் கோவில்
52) அழகர்சாமியின் குதிரை
53) கண்டேன்
54) மைதானம்
55) சுட்டும் விழி சுடரே
56) சபாஷ் சரியான போட்டி
57) எத்தன்
58) ஒரு சந்திப்பில்
59) ஆண்மை தவறேல்
60) சாந்தி அப்புறம் நித்யா
61) ஒத்தையடி வீரன்
62) ஆரண்ய காண்டம்
63) அவன் இவன்
64) பிள்ளையார் தெரு கடைசி வீடு
65) இருளில் நான்
66) நூற்றெண்பது
67) அநாகரீகம்
68) உதயன்
69) திருட்டு புருஷன்
70) சின்னஞ்சிறுசுகள்
71) தேநீர் விடுதி
72) வேங்கை
73) தெய்வத்திருமகள்
74) காஞ்சனா
75) மார்கண்டேயன்
76) வெப்பம்
77) கருங்காலி
78) போடிநாயக்கனூர் கணேசன்
79) போட்டா போட்டி
80) ராமநாதபுரம்
81) டூ
82) சுசி அப்படித்தான்
83) ரௌத்திரம்
84) உயர் திரு 420
85) சகாக்கள்
86) கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை
87) வெங்காயம்
88) முதல் இடம்
89) மிட்டாய்
90) உன்னை கண் தேடுதே
91) புலிவேஷம்
92) யுவன் யுவதி
93) காசேதான் கடவுளடா
94) மதிகெட்டான் சாலை
95) எங்கேயும் எப்போதும்
96) வந்தான் வென்றான்
97) ஆயிரம் விளக்கு
98) வாகை சூட வா
99) வேலூர் மாவட்டம்
100) வர்ணம்
101) ரா ரா
102) சதுரங்கம்
103) முரண்
104) காதல் அல்ல அதையும் தாண்டி
105) உயிரின் எடை 21 அயிரி
106) கீழத்தெரு கிச்சா
107) 7ஆம் அறிவு
108) வேலாயுதம்
109) காதல் கொண்ட மனசு
110) ஆயுதப் போராட்டம்
111) திகட்டாத காதல்
112) தம்பி வெட்டோத்தி சுந்தரம்
113) நான் சிவனாகிறேன்
114) கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்
115) வித்தகன்
116) மருதவேலு
117) மயக்கம் என்ன
118) பாலை
119) ஒத்திகை
120) போராளி
121) குருசாமி
122) வெண்மணி
123) ஒஸ்தி
124) மம்பட்டியான்
125) உச்சிதனை முகர்ந்தால்
126) மௌனகுரு
127) ராஜபாட்டை
128) மங்காத்தா

மலையாளம் டூ தமிழ்

1) அன்வர்
2) தாரம்
3) அன்புள்ள கமல்
4) இது ஒரு காதல் கதை

தெலுங்கு டூ தமிழ்

1) ஊடல்
2) ராக்கி
3) ஓம் சக்தி
4) கவர்ச்சி பந்தயம்
5) காமேஸ்வரி
6) மாவீரன்
7) வம்பு
8) சிங்க கோட்டை
9) பத்ரா
10) 8ம் நம்பர் வீடு
11) டேஞ்சர்

ஆங்கிலம் டூ தமிழ்

1) அசுர வேகம் (ஸ்பீட் 2012)
2) பிளேடு ஆப் தி ரோஸ்
3) சீசர் ஆப் தி வேலஸ் (சூனியக்காரி)
4) மெக்கானிக்
5) டிரைவ் ஆங்கிள்
6) ஆயிரம் பூச்சிகள்
7) டிஸ்ட்ரிக்-9
8) 2011
9) வஜ்ர வீரன் ஓங்பேக்-3
10) டைட்டானிக்-3
11) உலோக மனிதன்
12) பாஸ்ட் அன்ட் பியூரியஸ்
13) பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்ஸ்
14) புயல் வீரன்( தி ஸ்டோர்ம் வாரியர்ஸ்)
15) லிட்டில் பிக் சோல்ஜர்
16) எக்ஸ்மேன் பர்ஸ்ட் கிளாஸ்
17) கிரீன் வார்னர்ஸ் மகா சக்திமான்
18) டிரான்ஸ்பார்மர்-3
19) ஹாரிபாட்டர்-7
20) கவ்பாய் ஏலியன்ஸ்
21) ரைஸ் ஆப் தி ஏப்ஸ்
22) மரண வேட்டை
23) சுட்டி உளவாளிகள்
24) ஏலியன்ஸ் வெர்சஸ் அவதார்
25) வேங்கையின் வேட்டை
26) மிட் நைட் மர்டர்
27) மூன்று மாவீரர்கள்
28) ரியல் ஸ்டீல்
29) சூப்பர்-8
30) பிளிட்ஸ்
31) அழிக்க முடியாதவர்கள்
32) ராஜநாகம்
33) மிஷன் இம்பாஸிபிள்
34) வேதாளம்-2
35) வாரியர்
36) தி கிரீன் ஹார்ட்

இந்தி டூ தமிழ்

1) மின்சார காதலி
2) அவன் அவள் அது
3) தோர்
4) அரங்கேற்ற நாள்
5) லவ் டாட் காம்
6) இது காதல்  கதை அல்ல
7) இளவரசி
8) டிவைன் லவ்வர்ஸ்
9) ஆசான்
10) ரா ஒன்
11) தி டர்ட்டி பிக்சர்ஸ்
12) டான் 2

Thanks : http://www.dinakaran.com
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!முட்டை சாப்பிடுங்க.. மூளை சுறுசுறுப்பாகும்!

மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக்குவதில் முட்டைக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பகல் நேரங்களில் குறிப்பாக அலுவலக வேலை நேரத்தில் தூக்கம் வருவதை தவிர்க்க காலை சிற்றுண்டிக்கு ப்ரெட் டோஸ்ட்டுடன் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து சாப்பிடலாம் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ஜாமுக்கு பதிலாக முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கொள்வது நல்லதாம்.


வெள்ளைக்கருவில் உள்ள புரதம், மூளை மற்றும் உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக்கும் என்பதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளைக்கருவில் உடலின் அதிக கலோரிகளை எரிக்க தேவையான மூலப்பொருள் உள்ளதால் உடல் எடை கூடும் என்ற பயமும் வேண்டாம்.

தூக்கம், சுறுசுறுப்பு இரண்டுக்கும் முக்கிய காரணம் ஓரெக்சான் என்ற செல்கள். இந்த செல்கள் மூளையில் ஓரெக்சின் அல்லது ஹைப்போக்ரெடின் என்ற சுரப்புக்கு காரணமாகிறது.

இதில் பாதிப்பு ஏற்படும்போது நார்கோலக்சி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உடல் பருமன் அதிகரிக்கும். இந்த பாதிப்பில் இருந்து முட்டையின் வெள்ளைக்கரு பாதுகாப்பு அளிக்கிறது.

இதில் உடலுக்கு அத்தியாவசிய தேவையான அமினோ அமிலங்கள் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை மூளையில் உள்ள ஓரெக்சின் செல்களுக்கு புத்துணர்வு அளிக்கிறது.

இதனால் இவற்றின் செயல்பாடுகள் சீராக இருக்கும். இதன்மூலம் மூளை மற்றும் உடல் செயல்பாட்டில் புத்துணர்ச்சி ஏற்படும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!2012 ஹாலிவுட் படங்கள் - Part 2

சாலையில் பயணிக்கும் போது சினிமா பட போஸ்டர் நம்கண்ணில் படும். ஒரு சில படங்களை பார்க்க அந்த போஸ்டரே தூண்டுகோலாக இருக்கும். ஒரு சில டைரக்டர்கள் மிகவும் வித்தியாசமான பட போஸ்டரை உருவாக்கி மக்களை பார்க்க தூண்டுவார்கள்.

அந்த வரிசையில், வரும் புத்தாண்டில் ரிலீஸ் ஆக உள்ள ஹோலிவூட் படப் போஸ்டரை நீங்கள் கீழே காணுங்கள். அதில் நீங்கள் எதிர்பார்க்கும் படங்களை பற்றி என்னுடன் ஷேர் செய்யலாம். சரி வாங்க படங்களை பார்கலாம்.

முதல் பாகத்தினை படிக்க இங்கே தொடுக (Part 1).

வரும் 2012 புத்தாண்டில் எதிர்பார்க்கும் சில முக்கிய ஹாலிவூட் படங்களின் போஸ்டர்கள் சில உங்கள் பார்வைக்கு....!!!


Ghost Rider: Spirit of Vengeance

This image is published on www.dailyinspiration.nl

 

John Carter

This image is published on www.dailyinspiration.nl

 

The Odds

This image is published on www.dailyinspiration.nl

 

Project X

This image is published on www.dailyinspiration.nl

 

Snow White and the Huntsman 

This image is published on www.dailyinspiration.nl

 

Haywire

This image is published on www.dailyinspiration.nl

 

The Baytown Disco

This image is published on www.dailyinspiration.nl

 

The Hobbit: An Unexpected Journey

This image is published on www.dailyinspiration.nl

 

Beneath the Darkness

This image is published on www.dailyinspiration.nl

 

Safe House

This image is published on www.dailyinspiration.nl

உங்களை போலவே நானும் மிகவும் எதிர்ப்பார்த்து கார்திருக்கேன். வரும் வருடம் மிக சிறந்த ஆண்டாக சினிமா துறைக்கும் அமையும் என்ற எதிர்ப்பார்ப்புடன்......

முதல் பாகத்தினை படிக்க இங்கே தொடுக (Part 1).

Thanks : http://dailyinspiration.nl
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!சிரிக்க சிந்திக்க ஓஷோ கதை

நானும் ஒரு விபச்சாரி

ஒரு முறை நடைபாதையில் லைசென்ஸ் இல்லாமல் நடை பாதையில் வியாபாரம் செய்ததற்க்காக முல்லா மாட்டிக்கொண்டார்-அவ்ர் அந்த ஊருக்கு புதிது அதனால் அங்கு நடைபாதையில் வியாபாரம் செய்ய உரிமம் தேவை என்பது தெரியாது.

அவர் நீதி மன்றத்திற்க்கு அழைத்து வரப்பட்டார்- அங்கு நீதிபதி முன் மூன்று பெண்களும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் உரிமம் இல்லாமல் விபச்சாரம் செய்ததல் கைது செய்து செய்யப்பட்டிருந்தனர். அந்த ஊரில் விபசாரம் செய்யவும் உரிமம் வழங்கப்படுகிறது-அவர்கள் அத்தகைய உரிமம் இல்லாததால் மாட்டிக்கொண்டனர்.

நீதிபதி முதல் பெண்ணிடம் கேட்டார் “ நீ யார் ,என்ன செய்து கொண்டிருந்தாய் ? இந்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா ?“

முதல் பெண் “ நான் ஒரு மாடல் , என்னை தவறாக கைது செய்துவிட்டனர்” என்று பொய் சொன்னாள்.

நிதிபதி “ 30 நாள் கடும் காவல் தண்டனை “ என்று சொல்லிவிட்டு இரண்டாம் பெண்ணை பார்த்து இதே கேள்விகளை கேட்டார்

இரண்டாம் பெண் “ நான் ஒரு நடிகை! இதற்க்கும் சிறிதளவும் சம்மந்தமில்லை “ எனச் சொன்னாள் ( பொய்தான் ) நீதிபதி “ உனக்கு 60 நாள் கடும் காவல் தண்டனை “ என்று சொல்லிவிட்டு முன்றாம் பெண்ணை பார்த்து இதே கேள்விகளை கேட்டார்

முன்றாம் பெண் “ ஐயா ! நான் ஒரு விபச்சாரி , உரிமம் பற்றி எனக்கு தெரியாது , எனக்கு வேறு தொழிலும் தெரியாது ! “ எனச்சொன்னாள்

இதைக் கேட்ட நீதிபதி “ நான் உன்னை பாராட்டுகிறேன் தண்டனை கிடைக்கும் எனத்தெரிந்தும் உண்மையை சொன்னதற்க்காக! நான் உண்னை விடுதலை செய்கிறேன் அதுமட்டுமல்ல உனக்கு உரிமம் வழங்கவும் உத்திரவிடுகிறேன்! “ எனதீர்ப்பு கூறினார்

இப்போது முல்லாவின் முறை, நீதிபதி தனது வழக்கமான கேள்விகளை முல்லாவிடம் கேட்டார் அதற்க்கு முல்லா” ஐயா ! நானும் ஒரு விபச்சாரி , உரிமம் பற்றி எனக்கு தெரியாது , எனக்கு வேறு தொழிலும் தெரியாது ! “ எனச்சொன்னார்

மறுமணம்

ஒரு பெரிய தொழிலதிபரின் மனைவி இறந்து விட்டாள்.அவளது ஈம சடங்குகள் ஒரு பெரிய பொது நிகழ்ச்சி போல நடந்து கொண்டிருந்தது.நகரிலுள்ள பெரிய மனிதர்களும் மற்றவர்களும் வந்து துக்கம் கொண்டாடினர்.

அவர்களிடையே ஒரு புதிய மனிதன் மற்றவர்களை விட கவலை கொண்டவனாக காணப்பட்டான்.சடங்குகள் முடியுமுன் தேம்பி அழ ஆரம்பித்து விட்டான்.

மனைவியை இழந்தவர் கேட்டார்.

தேம்பி தேம்பி அழும் அந்த புதியவன் யார்?

பக்கத்தில் நின்ற ஒருவர் சொன்னார்:

தெரியாதா உங்களுக்கு?இறந்து போன உங்கள் மனைவியின் காதலன் அவன்.

மனைவியை இழந்தவர் அவனிடம் சென்றார்.அவனது தோள்களை தட்டி கொடுத்தார்.பிறகு கூறினார்.

உற்சாகமாக இரு.ஒருவேளை நான் மறுமணம் செய்து கொள்ள கூடும்.

தழுவல் : ஓஷோ
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!வலையில் விழுந்த கவிதைகள்!!!

21-ம் நூற்றாண்டிலும் கண்ணன்கள்
ராதைகளைத் தான் தேடுகின்றனர்
பிருந்தாவனத்தில் அல்ல
பேஸ்புக்கில்...........!!!


உனக்கு என்னை பிடிக்கும் என
உன்னை நான் உணர்ந்தபோது...
உண்மையில்,
என்னையே எனக்கு பிடித்தது!!!பரமனுக்கு தெரியாதது
பாமரனுக்கு தெரிந்தது...
பசியின் வலி.இருட்டின் கழுத்தில்
வைர நெக்லஸ்
மின் மினிப் பூச்சிகள்!!!ஏதேதோ பேசிக்கொண்டு
கண்ணாடி முன் நின்று சரி செய்யும்
ஆடை எல்லாம்
வெட்கப் படுகிறது ...!கண்கள் செய்த தவம்
விழிகள் பெற்ற வரம்
என் மீது விழுந்த
அவள் பார்வை!!!!உயிர் பிரியும் கடைசி நேரத்தில்,
ஒவ்வொரு ஜீவனும் நினைக்கும்
நினைவுகள் யாவும், இரகசியமே...!!.அழகாய் இருக்கிறாய்
தொட்டு பார்க்க தூண்டுவாய்
தொலை தூர வண்ணமே
நான் இங்கு இருக்கிறேன் தினமுமே......!செடியில் வீற்றிருக்கும்
ரோஜா மலர் போல்
என்னவள்
என் இதயத்தில்
வீற்றிருக்கிறாள்
அதனால் தானோ என்
இதயத்தில்
இத்தனை வலிகள்!!!உன்னோடு வாழும்
காலம் யாவும்
என்னோடு வாழும்
காதல்.........இது ஒரு வித்தியாசமான முள்
பிரித்தால் வலிக்கும்
சேர்த்தால் இனிக்கும் .....
காதல்!வெள்ளை வானத்தில்
கருப்பு நிலவின்
வெளிச்சம்
உன் பார்வை!!!!காதலின் வெற்றி என்பது...
இருமனங்களின்
புரிதலில் உறுதிப்படுத்துவதே.........


Thanks : Facebook Friends
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க!

இன்று சனிப்பெயர்ச்சி. இந்நாளில் நளனின் சரித்திரத்தைப் படித்தால் சனியினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து மீளலாம் என சனிபகவானே அருளியிருக்கிறார்.

நளன் தமயந்தி கதை :-

ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கினான்.

தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள்.

சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள-தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான். நளனின் அழகைக் கண்ட பறவை, "உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்" என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.

இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர். தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்யமாட்டார். அதே நேரம், கடமையில் சிறுகுற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை.

ஒருமுறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. "இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?" என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.

இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி, குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான்.

பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான்.

அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான்.


திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்தபோது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். "சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது" என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார்.

நளன் கதை படித்த நீங்கள், உங்கள் கடமையைச் சரிவரச் செய்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறுவீர்கள்!!! சீரும் சிறப்பும் பெற்று வாழ்க வளமுடன்!!!

Thanks : Dinamalar
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!2012 ஹாலிவுட் படங்கள் - Part 1

சாலையில் பயணிக்கும் போது சினிமா பட போஸ்டர் நம்கண்ணில் படும். ஒரு சில படங்களை பார்க்க அந்த போஸ்டரே தூண்டுகோலாக இருக்கும். ஒரு சில டைரக்டர்கள் மிகவும் வித்தியாசமான பட போஸ்டரை உருவாக்கி மக்களை பார்க்க தூண்டுவார்கள்.

அந்த வரிசையில், வரும் புத்தாண்டில் ரிலீஸ் ஆக உள்ள ஹோலிவூட் படப் போஸ்டரை நீங்கள் கீழே காணுங்கள். அதில் நீங்கள் எதிர்பார்க்கும் படங்களை பற்றி என்னுடன் ஷேர் செய்யலாம். சரி வாங்க படங்களை பார்கலாம்.

வரும் 2012 புத்தாண்டில் எதிர்பார்க்கும் சில முக்கிய ஹாலிவூட் படங்களின் போஸ்டர்கள் சில உங்கள் பார்வைக்கு....!!!

Bloodwork

This image is published on www.dailyinspiration.nl

 

Contraband

This image is published on www.dailyinspiration.nl

 

This Means War

This image is published on www.dailyinspiration.nl

 

The Expendables 2

This image is published on www.dailyinspiration.nl

 

Prometheus

This image is published on www.dailyinspiration.nl

 

The Amazing Spider-Man

This image is published on www.dailyinspiration.nl

 

Intruders

This image is published on www.dailyinspiration.nl

 

The Dark Knight Rises

This image is published on www.dailyinspiration.nl

 

Battleship

This image is published on www.dailyinspiration.nl

 

The Cabin in the Woods

This image is published on www.dailyinspiration.nl

உங்களை போலவே நானும் மிகவும் எதிர்ப்பார்த்து கார்திருக்கேன். வரும் வருடம் மிக சிறந்த ஆண்டாக சினிமா துறைக்கும் அமையும் என்ற எதிர்ப்பார்ப்புடன்......

Thanks : http://dailyinspiration.nl
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!Related Posts with Thumbnails
 
back to top