நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே!

வாய்ப்புகள் இரண்டுவகை.
1. மீண்டும் வாக்கும் வாய்ப்பு.
2. ஒரே ஒரு முறை மட்டும் வாய்க்கும் வாய்ப்பு.

வாய்ப்புகளை இப்படி பிரித்து அறிந்து இனம் காணத் தெரியாதவர்கள் எல்லாவற்றையும் ஓன்று போல எண்ணி, அரிய வாய்ப்பினை நழுவவிட்டுப் பின்னர் வருத்தப்படுகிறார்கள்.

விடியற்காலை எழவேண்டிய அவசியம் சில தினங்களில் நமக்கு ஏற்படுவது உண்டு. ரயில் பிடிக்க, முதல் முகூர்த்ததில் கலந்து கொள்ள, தேர்வுக்கு படிக்க என்று பலருக்கும் அவசியங்கள் பல விதம்.

இவற்றுள் பெருபாலானவை மறுபடி வைக்காத வாய்ப்புகள். விட்டால் கை விட்டது தான் என்ற ரகங்கள்.

அலாரம் வைத்து எழ நினைக்கிறவர்கள், அலாரம் அடித்ததும் அதன் தலைமேல் ஏதோ நம்மீது உட்கார்ந்த கொசுவைத் தூக்கத்தில் அடிப்பது போல பட்டெண்டு அடித்துவிட்டு மறுபடி தூங்க ஆரமித்து விடுகிறார்கள்.


அலாரத்தை படுக்கை அறையின் வெகுமூலை வையுங்கள். அலாரம் அடிப்பதை உணர்த்து சோம்பல் முறித்து, தட்டுத் தடுமாறி எழுந்து, நடந்து பொய் அதை அணைக்க ஆகும் கால இடைவெளி சுமார் ஓர் நிமிடம். இந்த ஒரு நிமிடம் மிக முக்கியமானது. மனதை உடல் கெஞ்சும். படிப்பாவது கிடிப்பாவது ? கடைமையாவது மண்ணாவது ? எல்லாமே தூக்க அரக்கனின் அடிமைகள்.

மறுபடி வந்து படுத்து, "இதோ! ஒரு நிமிடத்தில் எழுதுடறேன்!" என்று உடல் + மனமும் இதற்கு உடன்படும். ஒரு நிமிடமாவது.. ? கண் திறந்தால், வழக்கமான நேரத்தை விடத் தாமதமான கண் விழிப்பு. "ஐயோ!, பல மணி நேரம் போச்சே! போச்சே!" என்று மனம் பதிக்க வேண்டியது தான்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஓன்று தான். இரவில் என்ன நோக்கத்திற்காக அலாரம் வைக்கிறோமோ அதனால் ஏற்படும் பலன்களை பற்றி கற்பனை செய்துவிட்டு, அலாரம் நேரம் எழுந்தே தீருவேன் என்று மனதில் பதிக்கவேண்டும்.

இரவு நேர வைராக்கியத்தால் உடலை முறுக்கேற்ற வேண்டும். உலகை வெல்லும் முனைப்பில் இருப்பதால்ம் தூக்க அரக்கனே! உனக்கு நான் மசிய மாட்டேன். கண்ணில் கண்ட காட்சிகளை கையகப் படுத்துவேன் என்று மனத்திற்குள் உறுதி பூண வேண்டும். இந்த ஒரு நிமிட உறுதி தான் உங்கள் வெற்றியின் விலாசங்களை அடியாளம் காட்டப் போகிறது.

இனி நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே!

நன்றி :லேனா

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



சமையல் குறிப்பு : வாழைப்பூ வடை

இயற்கையின் படைப்புகளில் வாழைப்பூ மிகவும் அற்புதமானது. எண்ணற்ற மருத்துவக் குணங்களை கொண்ட இந்த வாழைப்பூ கொண்டு மிகவும் வித்தியாசமான வாழைப்பூ வடை செய்வது எப்படி என்று தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.


தேவையான பொருட்கள் :
வாழைப்பூ - 2 கைப்பிடி அளவு
பெரிய வெங்காயம் - 1
துவரம்பருப்பு - அரை கப்
காய்ந்த மிளகாய் - 12
சோம்பு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
மல்லித்தழை சிறிது - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
  1. வாழைப்பூவை நரம்பை எடுத்து சுத்தம் செய்யவும்.
  2. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. துவரம் பருப்பை ஊறவைத்துப் அரைகுறையாக அரைத்துக் கொள்ளவும்.
  4. காய்ந்த மிளகாய் + சோம்பு + சீரகம் + உப்பு ஆகியவற்றை லேசாக தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்கவும்.
  5. வாழைப்பூவை அம்மியில் வைத்து, ஒன்றிரண்டாக அரைத்து, அதன் துவர்ப்பு போக, நன்றாகப் பிழிந்துவிடவும்.
  6. அத்துடன் அரைத்த விழுது + பருப்புக் கலவையைக் கலந்து வெங்காயம் + பொடியாக நறுக்கிய மல்லித்தழை + கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்துப் பிசையவும்.
  7. வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பிசைந்த மாவை சிறு வடைகளாகத் தட்டி, பொன்னிறமாக வேகவைக்கவும். ருசியான வாழைப்பூ வடை ரெடி.
குறிப்பு
சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்க்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



சமையல் குறிப்பு : முருங்கைகீரை கஞ்சி

இரும்பு சத்து நிறைந்த முருங்கைகீரை + புரத சத்து நிறைந்த பச்சைப் பயிரை + வாயுவை நீக்கும் சுக்கை கொண்டு மிகவும் வித்தியாசமான முருங்கைகீரை கஞ்சி செய்வது எப்படி என்று தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.


தேவையான பொருட்கள் :

பச்சரிசி நொய் - 1 கப்
பச்சைப் பயிறு (முழுப் பயிறு) - 1 கப்
முருங்கைக்கீரை - தேவையான அளவு
சுக்கு - 1 துண்டு
தேங்காய் துருவல் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
  1. பச்சைப் பயிரை அரை மணி நேரத்திற்கு முன்பு தண்ணீரில் ஊறவைக்கவும்.
  2. கழுவி சுத்தம் செய்யப்பட்ட அரிசியை எட்டுக் கப் தண்ணீரில் நன்கு வேகவையுங்கள்.
  3. இதனுடன் ஊறவைத்த பச்சை பயிரையும் சேர்த்து வேகவையுங்கள்.
  4. சுக்கை நன்கு அரைத்து / பொடியாக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
  5. அரிசி நன்கு வெந்தப்பின் முருங்கைகீரை + உப்பு + சுக்கை சேருங்கள்.
  6. பச்சைப் பயிறு நன்கு வெடித்து மலரும் வரை வேகவிடுங்கள் + அரிசியும் நன்கு வெந்துள்ளதா என்று பார்த்து பின்பு இறக்குங்கள்.

குறிப்பு :-
பச்சரிசி பயன் படுத்தாதவர்கள் புழுங்கலரிசி பயன்படுத்துகள். வாரத்திற்கு ஒரு நாள் இதனை செய்து சாப்பிடலாம்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



'பனிக்குழையம்' பற்றி கேள்விப் பட்டதுண்டா?

கொஞ்சம் சிரிக்க

'குளு குளு கூழ்'-னு சொல்லி நம்ப கவுண்டமணி சார் லக்கிமேன் படத்துல சில்க் சுமிதா + செந்திலுடன் அடித்த அந்த நகைசுவை காட்சி யாராலும் மறக்கமுடியாதவை. அதனை நீங்களும் ரசிக்க சில நிமிடம் ஒதுக்குங்கள் இப்போதே. பிறகு 'பனிக்குழையம்' என்றால் என்னவென்று பார்ப்போம்.



தகவல் நேரம்

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு சென்னையில் வணிக நிறுவனம் பெயர் பலகைகளில் தமிழில் மாற்ற உத்திரவிட்ட மேயரை பாராட்டலாம்.

மைலாப்பூர் தெற்குமாட வீதில் இருக்கும் ஒரு ஐஸ் கிரீம் கடைக்கு வைத்துள்ள தமிழ் பெயர் பலகை தான் இது. கோன் ஐஸ் கிரீம் ஆங்கில வார்த்தைக்கு சமமான தமிழ் வார்த்தை தான் இந்த 'பனிக்குழையம்'.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



முட்டாள் யார் ?

அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்ற ஒரு தத்துவ ஞானி முல்லாவை சந்திக்க விரும்பி அவரை எப்போது சந்தக்க முடியும் என்று கேட்டு அனுப்பியிருந்தார்.

ஒரு குறிப்பிட நேரத்தில் வந்ததால் தம்மை சந்தக்க வசதியாக இருக்கும் என்று முல்லா மறுமொழி அனுப்பியிருந்தார்.

அந்தக் குறிப்பிட நேரத்தில் தத்துவ ஞானி முல்லாவின் வீட்டு வந்தார். ஆனால் தவிக்க முடியாத ஓர் அலுவல் காரணமாக அந்த நேரத்தில் முல்லாவினால் வீட்டில் இருக்க முடியாமல் போய்விட்டது.

தம்மை வரச்சொல்லிவிட்டு முல்லா வீட்டில் இல்லாமல் போனது அவர் வேண்டுமென்றே தம்மை இழிவுபடுத்தப் போட்ட திட்டம் என்று தவறாகக் கருதி கடும்கோபம் கொண்ட தத்துவ ஞானி ஒரு சுண்ணாம்புக் கட்டியை எடுத்து முல்லாவின் வீட்டுக் கதவில் 'முட்டாள் கழுதை' என்று எழுதிவிட்டு சென்றார்.

சற்று நேரம்கழித்து வீடு திரும்பிய முல்லா தன வீட்டுக் கதவில் எழுதப்பட்டிருந்த சொல்லைப் பார்த்து விட்டு அவர் மனைவியிடம் விசாரித்தார்.

நடத்த நிகழ்ச்சியை மனைவி அவரிடம் விளக்கி சொன்னார். உடனே முல்லா அநதத் தத்துவ ஞானியின் வீட்டுக்கு சென்றார்.

முல்லாவைக் கண்டதும் தத்துவ ஞானிக்கு அச்சமாக இருந்தது. அவரைப் பற்றி முட்டாள் கழுதை என்று அவர் வீட்டுக் கதவில் எழுதியது கண்டு கோபம் கொண்டு முல்லா தம்மிடம் சண்டை போட வந்திருக்கிறாரோ என்று எண்ணினார்.

ஆனால் முல்லவோ, ஞானியைப் பணிவுடன் வணக்கி, "அறினர் பெருமானே, என் வீட்டுக் கதவில் தங்கள் பெயரை தாங்கள் எழுதிவிட்டு வந்திருப்பதைக் கண்டு தாங்கள் வந்து சென்ற விசயத்தை அறிந்துகொண்டேன். மன்னிக்கவேண்டும். எதிபாராமல் அலுவல் காரணமாக தாங்கள் வந்து சமயம் வீட்டில் இருக்க முடியாமல் போய்விட்டது" என்றார்.

தன்னையே முட்டாள் கழுதை ஆக்கிவிட்ட முல்லாவின் அறிவு சாதுரியத்தைக் கண்டு தத்துவ ஞானி வாயடைத்துப் போய்விட்டார்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



ஹலோ - ஒரு நிமிடம் !

தொலைப்பேசியில் அழைத்து நம்மை சாமானியத்தில் விடாமல், பிடிபிடி என்று பிடித்து விழிப்பிதுங்க வைப்பவர்கள் உண்டு. இருபது நிமிடங்களுக்குக் குறைந்து முடிக்க மாட்டார்கள். வளவள என்று சம்பந்தமில்லாத விசயங்களை விவரிப்பார்கள். மேடைப் பிரசங்கம் போல அரைமணி நேரம் தங்களது சொந்தப் கதையை சொல்லி சோகத்தை பிழிபவர்கள் உண்டு.

அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் சிலர் கூட நம் அவசரம் அவதியும் புரியாமல் எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டு நம் நேரத்தை விழுங்குவது உண்டு. இவர்களையெல்லாம் எப்படி சமாளிப்பது ? 'ஒரு நிமிட' உத்திதான்.


நல விசாரிப்புகளை முடித்துக்கொள்ள தான் அந்த ஒரு நிமிடம். தொலைபேசி என்றால், 'ஏதும் அவசரமா? நான் அழைக்கவா?' என்று கேட்டு, சம்மதம் பெற்றுத் தொலைப்பேசி தொடர்பைக் கையோடு துண்டிக்க வேண்டும்.

'நாம் தொலைப்பேசியில் அழைத்தால் நமக்கல்லவா செலவு ?' என்று கேட்பவர்களுக்கு ஒரு வார்த்தை. நாம் பணத்தை சம்பாதிக்கலாம். நேரத்தை மட்டும் இழந்தால் இழந்தது தான். நாம் தேடிப்போகும் போதும், நாம் தொலைப்பேசியில் அழைக்கும்போதும் அந்த சந்திப்போ, எவளவு நேரம் இடம் பெற வேண்டும் என்று தீர்மானிக்கிற உரிமை நமக்கு வந்து விடுகிறது.

'சரி சுருக்கமா சொல்லுங்கள். எனக்கு நிறைய வேலைகள் பாக்கி இருகின்றன' என்று உரிமையுடன் சொல்லலாம். ஆனால், அவர்கள் தொலைபேசியில் அழைத்து விடும்போதோ இதை நாம் அத்துணை சுலபமாக சொல்லிவிட முடியாது.

நாம் பேசும் அந்த ஒரு நிமிடம் மிக இயல்பாக இருக்க வேண்டும். எதிராளியின் மனம் புண்படாதபடி குழைவாகக் கேட்ட வேண்டும். நாம் எடுத்துவிட்ட தீர்மானத்தை நாம் அவர்களின் அனுமதியோடு எப்படியும் செயல்படுத்துவது என்கிற உறுதியும் மிக அவசியம்.

இந்த ஒரு நிமிடத்தை சரிவரப் பயன்படுத்தாததால் நம்முடைய எத்துணையோ முக்கிய நிமிடங்களை இந்தக் கூட்டம் விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகிறது.

ஒரு சிரிப்பு நினைவுக்கு வருது.

வீடு தீ பிடித்த போது தீயணைப்பு நிலையத்துக்கு மிஸ்டு கால் கொடுத்தாராம் ஒரு மகா கஞ்ச பிரபு.
நன்றி : லேனா

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



ரஜினி மந்திரம்

பிரபல நடிகர்கள் பலரும் தெய்வ நம்பிக்கையுடன் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் இருவர். ஓன்று நடிகர் அர்ஜுன். இவர் ஆஞ்சநேயர் மீது மிகுந்த ஈடு பாடு உடையவர். அடுத்து நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினி சார். இவர் ராகவேந்திரர் பக்தர்.


கீழே வரம் மந்திரத்தை மெல்ல படியுங்கள். அந்த அர்த்தம் ஏதேனும் புரிகிறாதா என்று பாருங்கள்.

ஓம் ஸஹனா வவது ஸஹநெள புனக்நு

ஸஹவீர்யம் கரவாவஹை

தேஜஸ்வினா வதீதவஸ்துமா

வித்விஷாவஹை

ஓம் சாந்தி... சாந்தி... சாந்தி...


இது தான் நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினி தினமும் பூஜையறையில் தவறாமல் உச்சரிக்கும் மந்திரம்.

இதன் அர்த்தம் என்னானா...
பிரம்மம் நம்மை பாதுகாக்கட்டும். பிரம்மம் நம்மிடம் கருணை செலுத்தட்டும். நாம் இணைந்து செயல்படுவோம். நமக்கு ஞானம் பிறக்கட்டும். நாம் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துவோம்.
நீங்களும் இந்த மந்திரத்தை செல்லி பிராத்தனை செய்யுங்கள். அந்த பரம்பொருளின் அருள் பூரணமா கிடைக்கட்டும். நாமும் இந்த மத்திரத்தை நம்பிகையுடன் சொல்லி வழிபட்டு ரஜினி சாருக்கு போட்டியா நாமும் வாழ்கையில் வளம்பெறுவோம்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



மருதாணியின் மகிமை


பெண்களின் அழகு சாதனைகளில் தவிர்க்க முடியாத ஓன்று இந்த மருதாணி. மருதாணியை மறுதோன்றி, அழவணம், ஐவணம் மற்றும் மெகந்தி என்றும் பெயரிட்டு அழைப்பார்கள். மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது.

குழந்தை முதல் கிழவி வரை இந்த மருதாணி கை மற்றும் கால்களில் பூசுவதை இன்றும் நீங்கள் கிராமங்களில் பார்க்கலாம். அதன் பயன்கள் என்னவென்று தெரியாமலே அவர்கள் இதனை பறித்து அரைத்து உபயோகித்துக்வருகிறார்கள். இதுவே பவுடராக இன்று நகரத்து பெண்களிடம்...

இந்த மருதாணியில் நிறைய மருத்துவ குணக்கள் நிறைத்துள்ளது. அதை பற்றி ஒரு பார்வை.


மருத்துவப் பயன்கள்:

மருதாணி இலை கிருமி நாசினி. கண்ணுக்குப் புலப்படாத பல கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.


உறக்கமின்மை : தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். பைத்தியம் பிடிக்க வைக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

கால் ஆணி : இதன் வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும்.

முடிவளர : இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

புண்கள் : ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.


இங்கே சுட்டி காட்டியுள்ளது சில மருத்துவ பயன்களே. இன்னும் எண்ணற்ற பயன்கள் இதில் அடங்கியுள்ளது.

பவுடராக வரும் இந்த மருதாணியில், எந்த அளவு அதன் மருத்துவ குணக்கள் அழிக்கபடாமல் வரும் என்பது கேள்விக்குறியே. முடிந்த அளவு மருதாணி தலைகளை பறித்து உபயோகப்படுத்த பாருங்கள்.

Source : மூலிகைவளம்

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



இவர்கள் - பயணங்கள் முடிவதில்லை

படம் பார்த்து கதையை தெரிந்து கொள்க.





உதவி:தினமலர்

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



கார் பயணத்தில் ஏன் சீட் பெல்ட் அணியவேண்டும் ?

தலைகவசம் எப்படி இருசக்கர வாகன பயணத்தின் போது முக்கியமோ அதுபோல தான் கார் பயணத்தின் போது மிகவும் முக்கியம் சீட் பெல்டு அணிவது. அதனை வலியுறுத்தும் ஒரு நிமிட வீடியோ சில உங்கள் பார்வைக்கு.

1.அன்பும் அரவணைப்பும் ...



2.மாண்டவள் கட்டளை



3.இறந்தும் எழுந்தான்



4.தேடிவரும் மரணம்



என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

Thanks : Shini.



Related Posts with Thumbnails
 
back to top