ரஜினி - நடிக்க முடியாமல் போன படம்

ராகவேந்திரர் வாழ்க்கையில் சுல்த்தான்பாய் என்கிற பாத்திரம் வித்தியாசமானது. ராகவேந்திரரை ஏமாற்றுவதற்காக அவர் ஒருமுறை மாமிச துண்டுகளை ஒரு பாத்திரத்தில் வைத்துவிட்டார். ராகவேந்திரர் அதனை தனது அசைக்கமுடியாத பக்தியால் புஷ்பமாக மாற்றி விடுவார்.


ராகவேந்திரரிடம் அப்போதே அவர் சிஷ்சியனாகிவிடுவார். கடைசியில் தான் மகா சமாதியாகும் இடத்தையும் சுல்தானே அமைத்துத் தரும்படி ராகவேந்திரர் கேட்டார். அதை அமைத்து முடித்து, சுவாமிகள் சமாதி ஆவதற்கு முன்பு சுல்தான், ராகவேந்திரர் காலில் விழுந்து கதறி அழுது,
"ஐயா, நீங்கள் போனபின்பு இது இந்துக்களின் புனித தளமாகிவிடுமே இஸ்லாமியரான என்னை அனுமதிக்காவிட்டால் நான் எப்படி இங்கே வந்து உங்களைத் தரிசிப்பேன்?"
என்று உருகி கேட்டார். உடனே ராகவேந்திரர்,
"என் சமாதிக்கு மேல் ஒரு மாடம் அமைத்துவிடு. நீ எங்கிருந்து எப்போது பார்த்தாலும் நான் உனக்கு காட்சி தருவேன்"
என்று சொல்லி மறைந்து விடுவார்.


இந்த நிகல்வைகொண்டு, ஒரு படம் எடுக்கவேண்டும் என்ற எண்ணம் நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தோணியது. விறுவிறுவென படமாக்கும் முயற்சிகள் ஆரமிக்கப்பட்டன.

அதில் ராகவேந்திரராக அவர் மனதில் வைத்திருந்தது சிவாஜி சாரை தான். சுல்த்தான் பாய் வேடத்தில் ரஜினி சார் நடிப்பதாக முடிவெடுத்துவிட்டார். இதனை அறிவிப்பாக வெளியிட இருந்த நேரத்தில், ரஜினியின் நண்பர் அதனை சில நாட்கள் கலைத்து வெளியிடலாம் என்றார்.

ஆனால், அது கடைசி வரை வெளியிடப்படவில்லை. சில நாட்களுக்கு பிறகு, புதிய காட்சிகளுடன் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் தயாரிக்கப் பட்ட கதையில் ரஜினியே ராகவேந்திரர் வேடத்தில் நடித்தார் - என்று பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்வை நம்முடன் பகிர்ந்துகொண்டவர் ரஜினியை வைத்து ஹீரோவாக பைரவி படத்தில் அறிமுகம் செய்த இயக்குனர் திரு.கலைஞானம் அவர்கள்.


டிஸ்கி:
இந்த சுத்தானை மனதில் கொண்டு தான் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா இயக்கிய அனிமேசன் படத்திற்கு "சுல்த்தான் தி வாரியார்" என்று பெயர் வைத்தாரோ?

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!'திருச்சியின் அழகிய கிழவர்' + லிங்கன்

உழைக்கத் தயாராக இருப்பவரிடம் ஒருபோதும் தோல்வி கிட்டே நெருக்குவதில்லை. முதுமை அவர்கள் உடலில் இடம் கேட்பதில்லை. 'திருச்சியின் அழகிய கிழவர்' பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா ?

அவர்தான் முத்தமிழ்க் காவலர் அமரர் கி.ஆ.பெ. விசுவநாதன். நெடிய உருவம். அழகிய உருவம். 80 வயதிலும் மிடுக்கான நடை. கம்பீரமான பிசிறில்லாத குரல். தடுமாற்றம் இல்லாத பேச்சு.

ஒரு விழாவுக்கு சென்னை வந்த அவரை, ரயில் நிலையத்திற்கு வந்து அழைத்துபோக வந்திருந்தார் ஒரு நண்பர். பயணக்களைப்பே இல்லாமல் ரயிலில் இருந்து வந்து இறங்கினார். கையில் ஒரு சிறிய பெட்டி. மரியாதை நிமிர்த்தமாக அதனை வாங்க நண்பர் கை நீட்டிய போது, " விடு ...பெட்டியை பிறரிடம் கொடுத்துத் தூக்க சொல்லுமளவு எனக்கு வயதாகவில்லை." என்று கூறிவிட்டு விடுவிடுவென நடந்தார். அப்போது அவருக்கு வயது 80.

80 வயதிலும் பிறர் உழைப்பை, உதவியை எதிர்பாக்காத பெருட்செல்வம் அவர் மனதில் இருந்தது. அதனால் தான் அவர் 'திருச்சியின் அழகிய கிழவர்' எனப் பெயர்பெற்றார்.
"பிறர் உழைப்பை எதிர்பாக்காதே" இது அவரது இளமையின் ரகசியம்.

அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் ஒரு நாள் நிதானமாக தமது ஷூவுக்கு பாலிஷ் போட்டு அதன் அழகை ரசித்துகொண்டிருந்தார். அவர்தான் வெளியில் போக இருந்த புகழ் பெற்ற பதவியாளர் ஒருவர் அங்கு வந்தார்.

லிங்களின் செயலை கண்டவர் அதிர்ச்சியானார். "என்ன மிஸ்டர் லிங்கன்...உங்கள் ஷூவுக்கு நீங்களே பாலிஷ் போடுறீங்க..? " என்று கேட்டார்.

"ஏன்... நீங்கள் வேறு யார் ஷூவுகாவது பாலிஷ் போடுவீங்களா ?" என்று கேலியாகக் கேட்டார் லிங்கன். வந்தவர் ஒருநிமிஷம் ஆடிபோனார்.

அப்போ உங்க இளமையின் ரகசியம் என்ன? இவரை போலவா? இல்லை ...

உடல் உழைப்பு கேவலமானது அல்ல. உழைக்க மறுப்பவர்கள் சோம்பேறிகள். பிறர் உதவியை எப்போதும் எதிர்பார்ப்பவர்கள் ஒருவகையில் பிட்சைகாரர்களே!

நன்றி : வெற்றி நிச்சயம்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!உலக சாதனை புரிந்தார் சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட்டில் இன்று உலக சாதனை புரிந்த சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.


ஒரு நாள் கிரிகெட் போட்டிகளில், 16 ஆண்டுகள் யாவரும் முறியடிக்க முடியாத பாகிஸ்தான் வீரர் சயத் அன்வரின் சாதனையான 194 ரன்களை முறியடித்து மேலும் ஒரு புதிய உலக சாதனையாக ஆட்டமிழக்காமல் 200 ரன்கள் எடுத்த 'கிரிகெட்டின் கடவுள்' சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.சமையல் குறிப்பு : கிரீன் மசாலா சப்பாத்தி

கண்ணுக்கு குளுமையான, பசுமையான நிறத்தில், வாய்க்கு ருசியான கிரீன் மசாலா சப்பாத்தி செய்வது எப்படி என்று தான் இன்றைய சமையல் குறிப்பில் பார்க்க இருக்கிறோம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 2 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
நெய் - எண்ணெய் கலவை - தேவையான அளவு

அரைக்க தேவையான பொருட்கள்:
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லித்தலை - 1 கைப்பிடி
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய் - 3
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :
 1. அரைக்க எடுத்துள்ள பொருட்களை எல்லாம் எடுத்து, அரைத்துகொள்ளுங்கள்.

 2. கோதுமை மாவுடன் அரைத்த விழுதுகளை சேருங்கள்

 3. அதனுடன், நெய், உப்பு தேவையான தண்ணீர் சேர்ந்தது நன்கு மென்மையாக
  பிசையுங்கள்.

 4. பிறகு, சிறு உருண்டைகளாக பிரித்து, அதனை சப்பாத்தி கட்டையால் உருட்டி கொள்ளுங்கள்.

 5. தோசை கல்லில்/ தவாவில் எண்ணெய் - நெய் கலவையை சேர்த்து வேகவிட்டு எடுங்கள்.

 6. கண்ணுக்கு குளுமையான பசுமையான நிறத்தில், வாய்க்கு ருசியான கிரீன் மசாலா சப்பாத்தி தயார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!ரஜினியை தேடிய லண்டன் போலீஸ்

விடுதலை படத்துக்காக சிவாஜிசார், ரஜினி, நான், விஷ்ணுவர்த்தன் எல்லோரும் லண்டன் போயிருந்தோம். சிவாஜிசாரை மட்டும் வேறொரு ஹோடலில் தங்க வச்சுட்டு, நாங்க மூணு பேரும் இன்னொரு ஹோட்டல தங்கியிருந்தோம். இருபது நாள் தொடர்ந்து லண்டன்ல ஷூட்டிங் நடந்துச்சு.

ஒவ்வொரு நாள் ராத்திரியும் நாங்க மூணுபேரும் ஹோடேலேயே இருக்கமாட்டோம். லண்டன்னோட இண்டு இடுக்கு சுத்தி பார்க்கிறது தான் எங்க வேலை ... இப்படியே இருபது நாளும் கழிந்தது.

கடைசியா ஷூட்டிங் முடிந்து ஊருக்கு கிளம்பு ஏர்போர்ட்டுக்கு வந்தோம். அப்பப் படத்தோட தயாரிப்பாளர் பாலாஜி சார் படபடப்போடு வந்து, "ஏம்பா ரஜினி... உன்னையும் விஜயகுமாரையும் விஷ்ணுவர்த்தனையும், லண்டன் போலீஸ் தேடுறதா பேப்பர்ல வந்திருக்கே... என்னப்பா தப்பு செய்தீங்க..?"னு கேட்டாரு. அதோடு பேப்பரையும் விரிச்சி காண்பித்தாறு.

முதல் பக்கத்துல, நாங்க மூணு பேரும் இருக்கிற மாதிரி, பெரிய போட்டோவும் போட்டு "இவர்களை லண்டன் போலீஸ் தேடி வருகிறார்கள்..." என்ற செய்தி வெளியிட்டு இருந்தாங்க. அதை பார்த்ததுமே ரஜினி திக்பிரமை பிடிச்ச மாதிரி ஆயிட்டாரு. எங்களுக்கும் அதே பிரமை தான்.

எங்களோட அதிர்ச்சியைப் பார்த்து கொஞ்ச நேரம் ரசித்த பாலாஜி சார், திடீர்ன்னு கட கடன்னு சிரிக்க ஆரம்மிசிடாறு. எங்க கையை பிடிச்சு ஏற்போர்டுல இருக்கிற பேப்பர் கடைக்கு அழைச்சிட்டு போனாரு. அங்கே உள்ள பேப்பர்ல
முதல் பக்கம் மட்டும் 'ப்ளாங்கா' இருக்க... மத்த பக்கத்துல நியூஸ் இருக்குமாம். பப்ளிக் யாரவது தங்களை பத்தி நியூஸ் வரணும்னு ஆசை பட்டு பணம் கொடுத்தா போதும் ... உடனே முதல் பக்கத்துல அவங்களை பற்றி நியூஸ் போட்டு, உடனே ப்ரிண்டும் பண்ணி தருவார்களாம்.

லண்டன்ல இருக்கிறவங்க தங்களை கிண்டல் பண்ணுவதற்காக ராணி எலிசபத் ராணியை சந்தித்த மாதிரி எல்லோரும் விளையாட்டா, படத்தோட நியூஸ் போட்டுக்குவாங்காலாம்.
அப்படிதான், எங்க போட்டோவை அந்த பேப்பர் கடையில கொடுத்து, பிரிண்ட் பண்ண வட்சிருக்கரு பாலாஜி சாரு.... அந்த திகில் காமெடியா இப்ப நினைத்தாலும் சிரிப்பாதான் இருக்கும்.." என்று நம்ப நாட்டாமை விஜயகுமார் நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி சொன்ன ஒரு தகவல் இது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!சமையல் குறிப்பு : அவல் தோசை

அவல் என்றதும் நம் எல்லோருடைய நினைவுக்கும் வருவது விநாயகர் சதுர்த்தி + ஆய்த சரஸ்வதி பூஜைகள் தான்.

இதனை அப்படியே சாப்பிடலாம். எங்கள் ஊரில், இதனை தாளித்து சாப்பிடுவார்கள். ஒரு சிலர் கோவில் பூஜை முடித்து, பக்தர்களுக்கு பிரசாதமாக இதனை தருவார்கள். உடலுக்கு தீங்கு விளைவிக்காத அதிக சத்துக்கள் கொண்ட ஒரு உணவு.

அந்த அவலை கொண்டு செய்வதற்கு மிக எளிமையான ஒரு சிறு உணவு தயாரிப்பதை தான் இங்கே நாம் பார்க்க இருக்கிறோம். அது தான் "அவல் தோசை".

தேவையான பொருட்கள் :
கெட்டி அவல் - ஒரு கப்
அரிசி மாவு - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
 1. அவலை 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்

 2. அதன் பிறகு, மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.

 3. அதனுடன், அரிசிமாவு + தேவையான உப்பையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு
  ஏற்ப நன்கு கலந்து கொள்ளவும்

 4. மிதக சூடேறிய தோசைகல்லில், இந்த மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி அது பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து பரிமாறலாம்.

 5. தேவையென்றால், சிறிது நெய் சேர்த்து தோசைகளை தயாரிக்கலாம். இன்னமும் கம கமவென்று சுவையாக இருக்கும்.
குறிப்பு :
இதற்கு, தேங்காய் சட்னி அல்லது மிளகாய் சட்னி மிக பொருத்தமான ஜோடிகள். இதனுடன் தொட்டு சாப்பிட்டால் ... அட அட... என்ன சுவை.... என்ன சுவை....!!!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!காதல் - பன்னிகுட்டி - பிரகாஷ் ராஜ்

நடந்த சம்பவம் - பன்னிகுட்டி சாட்சியாக..

என்னோட நெருங்கின நண்பர்கள் ரெண்டுபேரு காதலிச்சாங்க. பெத்தவங்க சம்மதத்தோட கல்யாணமும் பண்ணினாங்க.

அவ, அவனை 'டேய் பன்னி'நின்னு தான் செல்லமா கூப்பிடுவா. அவங்க கல்யாணத்துக்கு நண்பர்கள் நாங்க அழகான ஒரு பன்னிக் குட்டியைத்தான் 'கிப்டா' கொடுத்தோம். ஆசையா அவங்களும் வளர்த்தாங்க.

எங்க 'கேங்'ல ஒரு ரோல் மாடல் ஜோடி அவங்கதான்னு எல்லோரும் நினைச்சுகிட்டு இருந்தபோது, ஒரே வருசத்துல ரெண்டு பெரும் 'டைவர்ஸ் அப்பளை' பண்ணினாங்க.

ரெண்டு பேருகிட்டேயும் தனி தனியா பேசி பார்த்தோம். பேசின பிறகு, அவங்க சேர்ந்து வாழவே முடியாதுன்னு மட்டும் தோணலை. சேர்ந்து வாழவே கூடாதுன்னு தோணுச்சு.

என்னா, காதலிக்கும் வரை அவன் பார்த்த அவள் வேறு. அவள் பார்த்த அவன் வேற. ரெண்டு பெரும் தங்களோட மைனஸ் ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்ளவே இல்லை.

அவன் மாறிட்டான், அவன் காதலிக்கும்போது இருந்தவனே இல்லை. வாழ்நாளெல்லாம் காதலனாவே இருப்பான்னு நம்பி கல்யாணம் பண்ணினேன். கல்யாணத்திற்கு அப்புறம் 'புருசனாகிவிட்டான்'னு அவன் மேல இவ பெரிய புகார் பட்டியல வாசிக்கிறா.

அவ நான் நினைத்த பொண்ணே இல்லைடா. ஏமாந்துடேண்டா...னு உடைஞ்சு அழறான். அவளோட வியர்வை வாசனை இவனுக்கு பிடிக்கவில்லை.

இவனோட குறட்டை சத்தம் அவளை டிஸ்டர்ப் பண்ணியிருக்கு. காபி டம்ளரை உர்ர் உர்ர்-னு அவ உறிஞ்சி குடிக்கிறது இவனுக்கு பிடிக்கவே இல்லை.

இவன் அழுக்காவே திரியறது இவளுக்கு சுத்தமா பிடிக்கலை. இப்படி ஒவொரு விசயத்துக்கும் ஒருவரை ஒருவர் சகிச்சுக்கிட்டு இருக்க தயாராவே இல்லை.

"ஏய், என்னை 'பன்னி'-ன்னு இனிமே குப்பிடாதே"-ன்னு இவன் எரிச்சலா சொல்லிகிட் இருக்கிறான்.

'இவங்க காதலுக்கு சாட்சியாகிட்டோமே'ன்னு அந்தக் பன்னிக்குட்டி இன்னனும் 'திரு திரு'வென முழிச்சிக்கிட்டு இருந்தது.

இந்த உன்னை சம்பவத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டது நம்ப 'செல்லம்' பிரகாஷ் ராஜ்.

காதல் திருமணம் வரை இருந்திட கூடாது. அது திருமணத்திருக்கு பிறகு இருக்க வேண்டும். அது தான் உண்மையான காதல்.
காதல்
நட்பு என்பது
இரு இதயங்களுக்கு - இடையே ஏற்படும்
உணர்வு பரிமாற்றம்.

காதல் என்பது
இரு இதயங்களுக்கு - இடையே ஏற்படும்
உணர்ச்சி பரிமாற்றம்

நன்றி : திவ்யகிஷோர்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!சமையல் குறிப்பு : காஞ்சிபுரம் இட்லி

காஞ்சிபுரம் என்றாலே நம் எல்றோரோட நினைவுக்கும் வருவது "பட்டு சேலை" தான்.

அதை தவிர, நிறைய புராதான கோவில்களும் நிறைந்த இடம். அந்த ஊரின் பெருமையை மேலும் பறைட்சாற்றும் வகையில் வெகு பிரிசித்தம் அந்த ஊரு இட்லி.

அதனை செய்யத்தான் கொஞ்சம் கை பக்குவமும் பொறுமையும் தேவை. இந்த இடுக்கையில், "காஞ்சிபுரம் இட்லி" செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள் :

புழுங்கலரிசி - 1 கப்
உளுத்தம்பருப்பு - 1 கப்
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சுக்குத்தூள் - (1/4) கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஆப்ப சோடா - 1 சிட்டிகை


தாளிக்க தேவையான பொருட்கள் :

கடுகு - 1/2 (அரை) டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைபருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
பெருங்காயம் - 1/2 (அரை) டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு

செய்முறை :
 1. அரிசி, பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

 2. ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, அரிசி + பருப்பு கலவையை நன்கு கழுவி, சற்றே கர கரப்பாக அரைத்துகொள்ளுங்கள்.

 3. தேவையான உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்க வையுங்கள்.

 4. புளித்த மாவில், சுக்குத்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலந்துக்கொள்ளுங்கள்.

 5. நல்லெண்ணையையும் காய்ச்சி அதில் சேர்க்கவும்.

 6. கடாயில் எண்ணையைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு தாளித்து பொன்னிறமானதும் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்துக் அதோடு சேருங்கள்.

 7. இஞ்சியையும் துருவி சேருங்கள்.

 8. அதனுடன், கறிவேப்பில்லையும் சேர்த்து, வதக்கி மாவில் சேருங்கள்.

 9. எல்லாவற்றையும் நன்றாக கலந்து, மாவை சிறிய கிண்ணங்களில் நிரப்பி, ஆவியில் வேகவையுங்கள். காஞ்சிபுரம் இட்லி ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!தீராத விளையாட்டு பிள்ளை - விமர்சனம்

தோரணைக்கு பிறகு விசாலின் புதிய படம் தீராத விளையாட்டு பிள்ளை. இவரது அண்ணன் தான் தயாரிப்பாளர். சன் பிச்சர் இந்த படத்தை வாங்கியதால் ஒரே விளம்பரம் தான். இதுவே இந்த படத்தின் மீதான நம்பிக்கையை தகர்கிறது.


படத்தோட கதை என்னனா ...

வங்கியில் வேலை செய்யும் பெற்றோர்களின் செல்ல மகன் விஷால். ஒரு பக்கம் அவரை திட்டிக் கொண்டே இருக்கும் அம்மா சந்தியா, இன்னொரு பக்கம் அதை சரிகட்டிக் கொண்டேயிருக்கும் அப்பா மௌலி.

'ப்ளே-பாய்'யான விஷாலுக்கு சின்ன வயசில் இருந்து எதுவாக இருந்தாலும் மூன்றை தேர்வுசெய்து அதில் இருந்து பெஸ்ட் ஒன்றை முடிவுசெய்யும் இவர் தன் கல்யாணத்துக்கு மூணு பெண்ணை (நீது சந்திரா, சாரா ஜேன், தனுஸ்ரீ தத்தா) செலக்ட் பண்றாரு. அவர்களில் யாரை கைப்பிடிக்கிறார் என்பது தான் கதை.


படத்துல என்னை கவர்த்தவைகள் பல...

முதல் பாதியில் ஹீரோ, ஹீரோவின் நண்பர்கள் சந்தானம், மயில்சாமி, சத்யா மற்றும் முன்று கதாநாயகிகள் அறிமுகம் + காதலில் விழவைப்பது என்று நீள்கிறது. எப்படா இன்டர்வெல் வரும் என்று எதிர்ப்பார்த்தேன்.

முதல் பாதி ஹீரோ - சந்தானம். 'கவுன்டர்' கொடுத்தே தியேடரில் அலப்பறை செய்கிறார். துவும் கல்யாண மண்டபத்தில் அடிக்கும் லூட்டி செம... அவரே இல்லை என்றால்... முதல் பாதி ?

ரெண்டாவது பாதியில் தேவயில்லாமல் வரும் பாட்டுகள் வெறுப்பையே தருகிறது. காட்சிகள் + திருப்பங்கள் என் நகர்கிறது. கொஞ்சம் நமளாலும் உட்கார முடிகிறது.


பணக்காரப் பெண் நீத்து சந்திரா. பாவம் ரொம்ப குட்டி டிரஸ்-இல் தான் வராங்க. வயசு பசங்களுக்குள் ஒரே வித 'வைபரேசன்' வரத்தான் செய்கிறார். இரண்டாம் பாதியில், வில்லியாக மாறி நன்றாக நடித்து இருக்கிறார்.

ஆண்களை வெறுக்கும் பெண் + பிரகாஸ்ராஜின் தங்கை தனுஸ்ரீ தத்தா. முதல் பாதியில், இவரது அறிமுகம்... யப்பா... என்னமா ஓடி ... கண்ண கட்டுது.

வீட்டில் கல்யாண நெருக்கடியைச் சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கும் பெண் + விஷாலை நிஜமாகக் காதலிக்கும் பாத்திரத்தில் சாரா. நடிக்க பெருசா ஒன்னும் இல்லை.
சாராவின் முகத்தில் எப்போதும் ஒரே சோகம். ஏன்னு தெரியவில்லை.

முன்று கதாநாயகிகளும் தாங்கள் வாங்கிய காசுக்கு ஏற்ப உடலை காட்டி நடித்து இருகிறார்கள்.
கேமிராவின் உழைப்பு அருமை. சபாஸ் அரவிந்த்.

பிரகாஷ்ராஜ் கொஞ்ச நேரமே வந்தாலும் நிறைவாக செய்து இருக்கிறார். இவர் தோன்றியவுடன் மனதிற்கு சற்றே ஆறுதல்கிடைக்கிறது.

யுவன் இசை இரண்டாம் பாதியில் அதிகம் தேவைபடுகிறது. அவரின் 'சோலோ' பாடல் இடம் + விசாலின் நடிப்பும் அழகு. மூன்று பெண்களிடம் 'கொக்கி' போட்டுவிட்டு திரும்பி வரும் விசாலுக்கு பழைய ரஜினி பட 'தீம்' மியூசிக். Superb!.

விஜய் போன்றே விஷாலும் நடிகரேன்னு நினைத்து கொல்லாமல் கொள்கிறார். சில இடங்களில் ஒரே எரிச்சலை ஏற்படுத்துகிறார். இனி விசாலை வைத்து படு சீரியஸ்சா படம் செய்தாலே அது பெரியா காமெடி படமா வரும் போல இருக்கு..

தீராத விளையாட்டு பிள்ளை - இவன் குறும்பை ரசிக்க ஒருமுறை பார்க்கலாம்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!கவிதை காதலி

காதலர் தினத்தில் கவிதையை காதலிப்பவர்களுக்கு...

நீயின்றி நானில்லை
என்பதல்ல காதல்…
எது இல்லையென்றாலும்
நான் இருக்கிறேன்
என்பதுதான் காதல்!

நன்றி - பார்தீஇந்த உலகத்தில் நான்
யாரோ ஒருவன் இல்லை…
யாரோ ஒருத்திக்கு நானே
உலகமாய் இருக்கின்றேன்!

நன்றி - பார்தீநமக்கான இடைவெளியில்
காற்றோடு அன்பையும் விதைத்த உனக்கு
என்னிடமிருந்து
என்ன வேண்டும் என்றேன்...
எதுவுமே வேண்டாம் என்றாய்
என் அழகான திடுக்கிடலை
அன்பாக ரசித்தபடி...
பிறகுதான் சொன்னாய்.
உன்னைத்தவிர என்று!

நன்றி - மருதம் ஷ.ப.கஜலட்சுமி


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!தீராத விளையாட்டு பிள்ளை

'கத்தால கண்ணால குத்தாதே ...' பாடல் புகழ் 'திரு திரு' விழிகளுக்கு சொந்தகாரர் நம்ப பாண்டியராஜன் நடித்த "ஜாடிக்கேத்த மூடி" என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் வி.கி.ரெட்டி. பிறகு, வளர்ந்து வாலிபத்தை தொட்டவர் visual communication என்ற படிப்பை படித்து, டைரக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

இவரின் செயலை பார்த்த டைரக்டர் இவரை திரைக்கு பின்னல் இருப்பதை விட திரைக்கு உன்னால் வந்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தவர் தனது புதிய படத்துக்கு ஹீரோவாக அறிமுகபடுத்த... ஒரு புது முகம் என்ற உணர்வே தோன்றாத மாதிரி இவரது நடிப்பு இருக்கும். ரீமாசென், பரத் + நல்ல திரைக்கதையும் சேர்ந்த அந்த படம் சூப்பர் ஹிட். அது தான் "செல்லமே". அந்த குழந்தை தான் நம்ப கருப்பு தங்கம் விஷால்.


படம் ஓடியதை பார்த்த தயாரிப்பாளர்கள் இவரையே மீண்டும் ஒரு படம் செய்ய தூண்ட, இவரது 2-வது "சண்டைகோழி" படம் வெளிவந்தது. வேறு ஒரு மாஸ் ஹீரோவுக்கு எழுதிய இந்த படத்தின் கதையில் இவர் மிக சிறப்பாகவே செய்திருப்பார். அதுவும் நண்பா சேச்சி "மீராஜாஸ்மின்" நடிப்பில் பின்னி பெடலேடுத்திருப்பார். இந்த படமும் சூப்பர் ஹிட்.

அதன் பிறகு, இவரது டைரக்டர் கனவு மெல்ல வலுஇழந்து மீண்டும் ஒரு கமர்சியல் ஹீரோவாக வலம் வர, இவரது 3-வது படம் "திமிரு" கைகொடுத்தது. ஒரு சிறப்பான திரைகதையில் அலட்டிக்காமல் நடித்து நம்மை நெகிழ செய்திருப்பார். இந்த படமும் சூப்பர் ஹிட். தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை தந்தவர் என்ற பெருமையுடன் வலம்வந்தார் விஷால்.

திமிரு பட தலைப்புக்கு ஏற்ப இவர்க்கு சற்றே மாஸ் ஹீரோ ஆக வேண்டும் என்ற எண்ணம் உதிக்க இவரது அடுத்த 4-வது படமான "சிவப்பதிகாரம்"-தில் ஓவரா பேசி நடித்து முதல் பிளாப் படம் ஒன்றை தந்தார். படத்தின் பாடல்களை வீணடித்தார்கள் என்றே சொல்லவேண்டும்.


இவரது அடுத்த 5-வது படத்தை பிரபல டைரக்டர் ஹரி இயக்கத்தில் "தாமிரபரணி" வெளிவந்தது. நீண்ட நாளைக்கு பிறகு "நதியா" நடித்தார். உறவுகளை மையபடுத்தி வெளிவந்த இந்த படம் ஹிட். இதில் சற்றே அடக்கியே வாசித்திருப்பார்.

அடுத்த 6-வது படமாக வெளிவந்தது "மலைகோட்டை". பிரியாமணியுடன் ஜோடிசேர்ந்த இவருக்கு இந்த படம் எதிர்பார்த்த அளவு பெரிய வெற்றியை தரவில்லை. ஊர்வசி + ஆசிஸ் வித்யாதியின் காமெடி பேசப்பட்ட ஓன்று.

மீண்டும் ஒரு மாஸ் ஹீரோ எண்ணம் தோன்ற ஒரு போலீஸ் அதிகாரியாக 6 பேக் உடலமைப்புடன் வெளிவந்த இவரது 7-வது படம் "சத்யம்". நயன்தாரவுடன் ஜோடி சேர்ந்தவர் மீண்டும் ஒரு பிளாப் தந்தார்.

அதன் பிறகு, மீண்டும் தன்னை ஒரு வெற்றி நாயகனாக வெளிகாட்டவேண்டி அடுத்த படம் செய்ய சிறிது காலம் எடுத்துகொண்டார். அப்போது அவர் கையில் எடுத்த 8-வது படம் "தோரணை". சிரேயாவுடன் நடித்தார். சராசரியாக ஓடினாலும் படம் பிளாப் லிஸ்டில் சேர்ந்தது. காமெடி செய்வதா நினைத்து இவர்கள் இருவரும் ரசிகர்களை பதம் பார்த்திருப்பார்கள்.


இன்று வெளிவந்த 9-வது படம் "தீராத விளையாட்டு பிள்ளை". இதுவரை ஒரு கதாநாயகியுடன் மட்டுமே நடத்தவர் இந்த படத்தில் மூன்று நாயகிகள். நடிகர் ஜீவனை போல இவருக்கும் எங்கோ "அந்த மச்சம்" இருக்கு.

இதை படத்தை பற்றி நான் நாளை சொல்கிறேன். 9-இல் 6 படம் சூப்பர் ஹிட். அந்த வரிசையில் இந்த படமும் அமைய என வாழ்த்துக்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!சமையல் குறிப்பு : கொத்தமல்லி சேமியா

தினமும் ஒரே மாதிரி சமையல் செய்து அலுத்துகொள்ளவதை விட, நம்மிடம் இருக்கும் பொருக்களை கொண்டு ஒரு சில வித்தியாசமான முறையில் சமையல் செய்து வீட்டில் உள்ள அனைவரையும் சும்மா அசத்துங்க. அந்தவகையில், இன்றைய சமையல் குறிப்பு 'கொத்தமல்லி சேமியா'.


தேவையான பொருட்கள் :
சேமியா - 1 கப்
கொத்த மல்லித்தழை - 1 கட்டு
தேங்காய் துருவல் - கால் கப்
பச்சை மிளகாய் - 5
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
எலுமிச்சை பழசாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள் :
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைபருப்பு - 2 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை :
 1. நெய்யுடன் சேமியாவை கலந்து கடாயில் வறுத்து தனியே எடுத்துக்கொள்ளுங்கள்.

 2. 6 கப் தண்ணீரை காய வைத்து சேமியாவை சேர்த்து நன்கு வேகவிட்டு வடியுங்கள்.

 3. எண்ணையை காயவைத்து உளுத்தம்பருப்பு சேர்த்து, சிறிது வறுத்து அதில் கீறிய பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சுத்தம் செய்த கொத்தமல்லி தழை, புளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி ஆற விட்டு அரைத்துக்கொள்ளுங்கள்.

 4. கடாயில் நெய்யை காயவைத்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து, வறுத்து அரைத்த விழுதை சேருங்கள்.

 5. இந்த விழுதுடன் உப்பை தேவையான அளவு சேருங்கள். அதனுடன் வடித்து வைத்த சேமியாவை சேர்த்து நன்கு கலக்குங்கள். கொத்தமல்லி சேமியா ரெடி.

குறிப்பு :
எப்போதுமே சேமியாவை வேகவைக்கும் போது, தண்ணீர் நன்கு கொதித்தப் பின்னர் தான் சேமியாவை சேர்க்க வேண்டும். அப்போது தான் ஒன்றோடு ஓன்று ஒட்டாமல் நன்கு வேகும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!சூப்பர் ஸ்டார் தி கிரேட்!

எஸ்.பி.முத்துராமன் அவர்கள், கனிமுத்துப்பாப்பா படத்தில் டைரக்டர் ஆனார். பாலச்சந்தரின் கண்டுபிடிப்பான ரஜினி என்கிற நடிகனை முழுமையாக பயன்படுத்தி வியாபார ரீதியில் ரஜினி படங்களை வெற்றியடையவைத்த இயக்குனர் என்றால் இவர்தான்.அவர் ரஜினி பற்றி சொன்ன ஒரு தகவல் உங்களுடன் ...

அந்த காலத்துல சிகரட்டை தூக்கிப் போட்டு வாயில் புடிகிறது, தலைமுடியை கலைசிக்கிட்டு ஸ்டைல் காட்டறதுன்னு ரஜினி வில்லனவே பெர்பார்ம் பண்ணிக்கிட்டு இருந்தப்ப சிவகுமார் சார் தான் பெரிய ஹீரோ. அவர் நடிச்ச படமெல்லாம் அமோகமா போயிகிட்டிருந்தது. அப்போதான் எனக்கு ஒரு வினோதமான யோசனை வந்தது.

ஹீரோவா நடிக்கிற சிவகுமாரை வில்லனாவும் வில்லனா நடிச்சிக்கிட்டு இருக்கிற ரஜினியை ஹீரோவாவும் போட்ட எப்படி இருக்குனு -கிறது தான் அந்த யோசனை.

இது ஒரு அக்னி பரிட்சைதான் என்று தெரிந்தாலும் மனசுல அந்த எண்ணம் ஆணியடிச்ச மாதிரி நிலைத்து போச்சு. இந்த ஐடியாவுக்கு தோதா எழுத்தாளர் மகரிஷி எழுதிய புவனா ஒரு கேள்விக்குறி என்ற நாவல் நம்பிக்கை கொடுக்கவும், அதே தலைப்பில் அந்தக் கதையைப் படமா எடுத்தோம்.

இதே படத்துல ஒரு குருப் டான்ஸ்... இதை ஷூட் பண்ண சித்தூர் பக்கத்துல ஒரு குக்கிராமத்துக்கு போயிருந்தோம். ரஜினி நடிக்கிற சீனை எடுக்கிறப்பத்தான் பாட்டை ப்ளே-பேக் செய்ய மெசின் ரிப்பேராகின விஷயம் தெரிஞ்சது. அதை சரி பண்ணனுனா மறுபடி மெட்ராஸ் தான் போகணும். அதனால் ரஜினிகிடே 'மெட்ராஸ் போயி ரெஸ்ட் எடுத்துக்கிட்டு அடுத்த நாள் வாங்கனு சொன்னேன்.

"அதுவரைக்கும் இங்கே நீங்க என்ன செய்ய போறீங்க?"- னு திருப்பி கேட்டார். "நாங்க இங்கேயே எதையாவது சாப்பிட்டுகிட்டு எங்காவாவது படுத்துகிறோம்னு" சொன்னேன். ஆனா, ரஜினி அதுக்கு சம்மதிக்கவில்லை. எங்களோடவே அந்த கிராமத்துல தங்கினதோட, அங்கே இருந்த பெட்டி கடையில் பட்ஜியும் பிஸ்கட்டும் வாங்கிக் சாப்பிட்டுட்டு ஒரு குடிசையிலேயே படுத்துத் தூங்கிட்டாரு.

மறுநாள் எந்த பந்தாவும் பண்ணாம கிராமத்து இருந்த குளத்துல குளிச்சிட்டு ஸ்பாட்டுக்கு வந்துட்டாரு. இதை இப்போ நினைத்தாலும் எனக்கு ஆச்சரியமாத்தான் இருக்கு என்று ரஜினி பற்றி டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள் சொன்னது.

ரஜினின்னா ஸ்பீடா ஸ்டைலா மட்டுமில்ல சூப்பரா நடிக்கவும் முடியும்னு நிருபிச்ச படம் "புவனா ஒரு கேள்விக்குறி". ஆரம்பத்துல, "என்ன சார் டயலாக் எல்லாம் ரொம்ப பெருசா இருக்குனு" ரஜினி பயந்தாரு.... ஆனா, நான் கொடுத்த என்கரேஜ்மென்ட்டுல சும்மா பிச்சி எடுத்துடாரு.

"ராஜா என்பார் மந்திரி என்பார்..." பாட்டுல ரஜினி காமித்த ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பெர்பார்மன்ஸ் அவருக்குள்ளே இருக்கிற அற்புதமான நடிகனை வெளிக்கொண்டு வந்ததைப் பார்த்துட்டு நான் மட்டுமல்ல ... தமிழ் திரையுலகமே அசந்து போச்சு!

ஆரம்பம் முதலே தனக்கென ஒரு கொள்கையுடன் + லட்சியத்துடன் வாழ்ந்த நல்ல மனிதர் நம்ப சூப்பர் ஸ்டார் இன்றைய தலைமுறைக்கு ஒரு எடுத்துகாட்டு. இப்படியும் சில நல்ல உள்ளங்கள்!

சூப்பர் ஸ்டார் தி கிரேட்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!இலவச பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை

உங்களுக்கு தெரிந்தவர்கள் பலருக்கும் பிறந்த போதே சில உடல் குறைபாடுகள் இருக்கலாம். அவர்களால் போதிய பண வசதியிமையால் மேல்கொண்டு சிகிச்சை செய்யமுடியாமல் இருக்கலாம்.

அதே போல 'தீ' விபத்தில் தங்கள் உடலில் ஏற்பட்ட காயங்களை குணபடுத்தவும் + 'பிளாஸ்டிக்' அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து கொள்ள வரும் மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் ஏப்ரல் மாத 4-ம் தேதி வரை அனைத்து வசதிகளும் கூடிய இலவச கிச்சை தர இருகிறார்கள். பயன்படித்தி கொள்ளுங்கள்.இதற்காக நீங்கள் அணுகவேண்டிய முகவரி :
பாசம் ஹாஸ்பிடல்,
கொடைக்கானல்.
தொலைபேசி எண்கள்: 04542 – 240668, 245732
மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் ஏப்ரல் மாத 4-ம் தேதி வரை

Pasam Hospital,
KODAIKANAL
Contact: 04542 – 240668, 245732

நீங்கள் மனது வைத்தால் இந்த தகவலை பலருக்கும் பயனுள்ளதாக தெரிவிக்க முடியும். நம்பால் பண வசதி செய்துகொடுக்க முடியவில்லை என்றாலும் இந்த தவகளை உங்களுக்கு தெரிந்த / நண்பர்களுடன் தெரிவிக்க இது பலருக்கும் பயன்படும்.

தொடர்க உங்கள் சேவை.

இந்த தகவலை என்னுடம் பகிர்ந்துகொண்ட கவிதா அவர்களுக்கு என் நன்றிகள்.எங்கேடா அந்த 'துளசி'...?!

ஆஞ்சநேயர், பெருமாள் கோவில்களுக்கு சென்றால் துளசித் தீர்த்தம் கொடுப்பார்கள். நம்பில் பலரும் அதனை ஏதோ ஒரு பக்தி பொருளாய் தான் பார்க்கிறோம். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான். அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம்.எளிதாகக் கிடைக்கும் அந்த துளசியில்தான் எத்தனை எத்தனை மகத்துவங்கள். அவற்றில் ஒரு சில உங்களுக்காக.

1. துளசிச் செடியை ஆராக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.

2. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.

3. நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.

4. துளசி இலையை போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது.

5. கோடை காலம் வரப்போகிறது. வியரவை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதனை தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றமா...? உங்களிடமா? ஜோக் அடிக்காதீங்க.

6. தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரி இரண்டையும் துளசி இலையால் குணமைடயச் செய்ய முடியும். எப்படித் தெரியுமா ? துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை, சொரி இருந்த இடம் தெரியாமல் மறையும்.

7. சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று சாப்பிடலாம். இதனால் சர்க்கரைஅளவு கட்டுப்படும். மருந்து மாத்திரை மூலம் செய்ய முடியாதை இந்த அருமருந்தான துளசி செய்து விடும்.

8. சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடேவ உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்னை சரியாகும்.


துளசியில் கிருஷ்ண துளசி, நாய்த்துளசி, கருந்துளசி, காட்டுத்துளசி, இராம துளசி எனப் பல வகைகள் இருக்கின்றன.

நம் நாட்டில் 22 வகை துளசி இருக்கிறது. துளசி 22 விதம் இருப்பினும் நாம் அதிகமாக பயன்படுத்துவது 'இராம துளசி என்ற வெண்துளசியும், 'கிருஷ்ணதுளசி' என்ற நீலத்துளசியுமாகும்.


நம்ப வேதிகாவும் கூட இந்த துளசியின் பயன் தெரிந்து என்னமா பூஜை பண்றங்கோ...

இனி துளசியை கண்டால், விடாதீங்க...

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!Related Posts with Thumbnails
 
back to top