படம் பார்த்த அனுபவம்

வெள்ளிகிழமை இரவு, 9 மணிக்கு ஆபீஸ்-இல் இருந்து கிளம்பி படம் பார்க்க சென்றேன் நண்பர்கள் மூவருடன் (விஜய், நிவாஸ், நந்தா). செம கூட்டம். தியேடர், நிரம்பி வழிந்த நின்றது. இந்த தியடரில் இவளவு கூட்டம் பார்த்ததில்லை!!. டிக்கெட் வாங்க எங்களுக்கு வேறு வழியில்லாமல் அருகிலுள்ள டீ கடையில் வேலை செய்யும் ஒருவரிடம் ரூபாய் கொடுத்து 4 டிக்கெட் வாங்கிவர சொன்னோம். டிக்கெட்டுக்காக கார்த்திருந்தோம்.

மணி 10:00. படம் போட்டாச்சு. விசில் சப்தம். வெளியே கேட்குது. போலீஸ் - அங்கும் இங்குமாக நடந்து கூட்டத்தை சமாளித்துகொண்டிருந்தார். மனசு அடிச்சுக்குது... படம் போட்டாச்சு. டிக்கெட் வாங்க போனவேன் என்னாச்சு...? இன்னும் வரலியே...? நிலை கொள்ளாமல் டிக்கெட் தரும் இடம் நோக்கி நடக்க ஆரமித்தோம். ஹவுஸ் புல்!. டிக்கெட் இல்லைன்னு சொல்லி போலீஸ் ஒருவர் எங்களையும் சேர்த்து வெளியே செல்லுமாறு கூறினார்.

என்னடா இது...? இதுநாள் வரை படம் பார்க்க வந்துட்டு, பார்க்காமல் வெளியே வருவது இது தான் முதல் முறை எனக்கு!. இந்த நிகழ்வுகளில், டிக்கெட் வாங்க சென்றவன் எங்கே என்று மீண்டும், டீ கடைக்கு சென்றால்... அங்கே நாங்கள் டிக்கெட் வாங்க சொன்னவன் மும்முரமாக டீ சப்ளை செய்துகொண்டிருந்தான்.

நாங்கள் திடுக்கிட்டு... அவனிடம் கேட்டதற்கு, "எனக்கு வேலையிருக்குன்னு என் அண்ணனை டிக்கெட் வாங்க அனுப்பினேன். அவன் டிக்கெட் தரலையா?" என்று திருப்பி கேட்டான். பிறகு, அவனிடம் போன் செய்து பேசியபோது, அவன் படம் பார்த்துகொண்டிருபதாக சொன்னான். திடுக்கிட்டு... எங்கள் டிக்கெட் எங்க..? என்று கேட்டதற்கு அவன், "வாங்கவில்லை.." என்று கூலா பதில் சொன்னான். நாங்கள் டிக்கெட்டுக்கு தந்த பணத்தை அவன் மறந்துவிட்டதாக சொன்னான்.

"பேசாம நாமலே கீவுல நின்னிருந்தால் கூட டிக்கெட் கிடைத்திருக்கும். நிற்க சங்கடப்பட்டு இப்ப பாரு.. படமே பார்காமல் போறோம் ..." என்றான் ஒரு நண்பன்.

நேரம் 10:47. இப்படி படம் பார்காமல் சொல்ல தான் என்னை தாம்பரத்திலிருந்து காரப்பாக்கம் வரசொன்னியாடா... தியடருக்கு முன்னாடி ஒரு மணி நேரம் நின்று ....", கடுப்பாகி பல்லை கடித்தான்.

எங்களுக்கு என்ன சொல்லறதுன்னு தெரியல. கடுப்பாகி, அவரவர் ரூமுக்கு போனோம். வழியில்...நண்பர்கள் உதிர்த்து...

"இனிமேல் இந்த மாதிரி பசங்கல நம்பக்கூடாது.."

"நாளைக்கு காலையில் இந்த படத்த பார்க்கிறோம்.."

"நைட் வேற ஏதாவது படம் பார்க்கலாம்.." என்று ஐடியா தந்தான் ஒருவன்.

தாம்பரம் போக இருந்தவனை ரூமுக்கு அழைத்து வந்து, ஹிந்தி படம் பார்த்தோம். படத்துல... 3 வசனம் பேசின உடனே ஒரு பாடு வருது. நாங்களும் தியேடரில் நடந்ததை மறக்க நினைத்து படம் பார்கலாம் நினைத்தால் படம் எங்களை வெகுவாக சோதித்தது. "கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்கு ஆடிச்சாம்!" கிராமத்தில் சொல்லும் பழமொழிதான் நினைவுக்கு வந்தது.
படம் ஒருவழியா 02:40 முடிந்தது. நாங்கள் மீண்டும் பேசிவிட்டு படுக்க 4:10 மணி ஆனாது.

மறுநாள் காலை 10:30 கிளப்பி படம் பார்க்க, மீண்டும் தியேடர் சென்று - நாங்களே டிக்கெட் வாங்கி - படம் பார்க்க சென்றோம். நாங்கள் செல்லும் முன்னரே படம் ஓடிகொண்டிருந்தது. என்னடா இது வழக்கமா படம் 11:30 தான் போடுவான். இன்னைக்கு 10:40 கே வந்துட்டோம். படம் போட்டாச்சா...? புரியாமல் உள்ளே சென்றோம். சில இருக்கைகள் காலி. அருகில் இருந்தவரிடம் "படம் போட்டு எவளவு நேரமாச்சு-ன்னு கேட்டோம். 15 நிமிஷம் ஆச்சுன்னு சொன்னார். 15 நிமிஷம் "

ஒருவழியா படம் மதியம் 2:30 முடிந்தது. வெளியே வந்தோம். நண்பன் நிவாஸ், மெடிகல்ஸ் நோக்கி வேகமா நடந்தான். நண்பர்கள் முகத்தில் ஒருவித கோபமும் பிரமிப்பும் இருந்தது. அடுத்து சாப்பிடபோலாம்-ன்னு சொல்லி நண்பர்களை அழைத்து ஹோட்டல் இன்சுவை சென்றேன். நாங்கள் பார்த்த அந்த படம் எது? ஹோட்டல்-இல் நடந்தது என்ன..? அடுத்த பதிவில்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.



இன்றைய நகைச்சுவை துணுக்குகள்

சிரிப்பும் ஒரு வகை வைத்தியமே. நான் படித்து, ரசித்து, சிரித்த சில நகைசுவை ஜோக்குகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சியே!. எனக்கு சரியாக ஞாபகமில்லை எந்த வார இதழ்லில் படித்தேன் என்று.

நோயாளி : எனக்கு எப்ப உடம்புக்கு சரியில்லாமல் போனாலும் நான் உங்ககிட்டே தான் டாக்டர் வருவேன்!

டாக்டர் : காரணம் ...!

நோயாளி : உங்களுக்கு வர்ற ஒரே ஒரு பேஷண்டையும் அவளவு சீக்கிரம் சாகடிக்க மாடீங்கக்கிற நம்பிக்கையால் தான் !


நண்பர் 1: என்ன சார் தலை கொழுக்கட்டை மாதிரி வீங்கியிருக்கு ?

நண்பர் 2: இனிமே 'அடிக்கவே மாட்டேனு' என் மனைவி தலையில் அடிச்சு சத்தியம் பண்ணினா!


மனைவி : என்னங்க இது, நாம காஷ்மீருக்கு போறதுக்கு ஒரே ஒரு டிக்கெட் வாங்கிட்டு வந்திருன்கீங்க ?

புருஷன் : அடடே! சந்தோசத்துல என்னையே மறந்துடேன்!


நண்பர் : நீங்க போன பந்தியிலேயே உட்கார்ந்த மாதிரி தெரிஞ்சுதே ?

மற்றவர் : என்ன பண்றது ... பொண்ணு, மாப்பிளை ரெண்டு வீட்டுக்கும் நான் தெரிஞ்சவனா போயிட்டேன் !


காதலன் : ஒரு நாளைக்கு நான் ஒரு பொய் தான் சொல்லுவேன்

காதலி : அப்படியா...அப்ப இன்னிக்கு கோட்டா முடிச்சு போச்சு ..!?


காதலி : நம் பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்! இல்லையேல் தற்கொலை! சரிதானே அத்தான் ?

காதலன் : ரெண்டும் ஓன்று தான் !

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.



வாழ்த்துக்கள் கமல் சார்!!!

இதே நாள் ஆகத்து 12, 1959, AVM என்னும் மிக பெரிய தமிழ் திரைப்பட தயாரிப்பு ஸ்தாபனத்தில் இருந்து ஐந்து வயது குழந்தை ontru தமிழ் திரையுலகில் தடம்பதித்த நாள். காதல் மன்னன் ஜெமினியும் சாவித்திரியும் இணைத்து நடித்த படத்தை பிரபல டைரக்டர் பீம்சிங் இயக்கி கொண்டிருக்க, அந்த படத்தில், ஐந்து வயது பிஞ்சு குழந்தை சும்மா நடிப்பில் மிரட்ட, அன்றைய பல பிரபலக்கள் சற்றே பிரண்டு தான் போயிருந்தார்கள். இவர் நடிப்புக்கு கிடைத்த முதல் பரிசு அந்த வருட "நேஷனல் அவார்ட்." இன்றும் நீங்கள் அந்த பாடத்தை பார்த்தால் அந்த குழந்தையின் நடிப்பில் கரைந்தே போவீர்கள். அட படத்தோட பெற சொல்ல மறந்துடேன், "களத்தூர் கண்ணம்மா". அந்த குழந்தை வேற யார் நம்ப உலக நாயகன் "கமலஹாசன்" தான்.

"ருசி கண்ட பூனை சும்மா இருகிறது" என்பார்கள். அதுபோல, 5 வயதில் வாங்கிய பரிசை மீண்டும் இவர், மூன்றாம் பிறை (1982), நாயகன் (1987), இந்தியன் (1996) படத்தில் மிக சிறப்பாக நடித்ததற்கு வாங்கினார். இந்த பட்டியல் இன்னும் நீளும்

இன்றோடு, கமல் தமிழ் திரை உலகிற்கு வந்து 50 வருடங்கள் ஓடிவிடாது. அவரது ரசிகர்கள் அவர் நடித்த "என்னை போல் ஒருவன்" படத்தினை வெளியிடவேண்டி கேட்டுகொண்டார்கள். சில காரணங்களால் படம் வெளியாவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அவரது ரசிகர்களில் ஒருவன் என்ற முறையில் நானும் அவரை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சியே. நீங்களும் என்னுடம் சேர்ந்து உங்கள் வாழ்த்துக்களை சொல்லாமே.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.



பத்தில் உனக்கு தெரிந்தது எத்தனை ...?

இது பெண்களுக்கான விஷயம் மட்டுமல்ல. ஆண்களும் சற்றே தெரிந்து கொள்ளவேண்டிய விசயமும் தான்.

ஒரு பெண் தான் கருவுற்ற நாளில் இருந்து குழந்தையை பிரசவிக்கும் நாள் வரை அந்த பெண்ணின் கருவறையில் நிகழும் கரு உருமாற்றம் பற்றி ஒரு சில குறிப்புகள்.

பெண்ணானவள் தனது கருவறையில் நிகழும் மாற்றங்களை நன்கு உணர முடியும். அதனை ஆண்கள் படித்து தெரிந்துகொள்ளவதில் தவறே இல்லை. அட...சும்மா வாங்க, அந்த பத்து மாதங்களில் அப்படி என்ன தான் நடக்குதுன்னு கேட்போம்.

ஒன்றாம் மாதம்
பதியமாகும் கரு, கருப்பை சுவர்களில் பற்றி பிடித்து வளரும். சிசு மூன்று பாகங்களாக தெரியும்.

முதல் பாகம் : மூளை, நரம்பு மண்டலம், சருமம், கண், காது போன்றவகைளாக மாறியது.

இரண்டாம் பாகம் : சுவாச கட்டமைப்பு, வயிறு வளர்ச்சியடைய தொடங்கியது. மூன்றாம் பாகம் : இருதயம், ரத்தம், தசை, எலும்பாக மாறியது.

இரண்டாம் மாதம்
சிசுவின் முகம் உருவாகிறது. கண் பகுதியில் குழி தோன்றுகிறது. மூளை, இருதயம், சுவாச பகுதி, கிட்னி போன்ற உள் உறுப்புகளின் வளர்ச்சி தொடங்கும். இருதயம் மெல்ல செயல்பட தொடங்கும்.

மூன்றாம் மாதம்
உடலைவிட இப்போது தலை பெரிதாக இருக்கும். நெஞ்சு பகுதி மெல்ல துடித்துகொண்டிருக்கும். அல்ட்ரா சவுண்ட் கருவி கொண்டு சப்தத்தை கேட்கலாம்.

நான்காம் மாதம்
தலைமுடி, புருவம் போன்றவைகள் லேசாக வளர்த்திருக்கும். கண்கள் மூடியிருக்கும்.

ஐத்தாம் மாதம்
சிசுவின் அசைவை தாய் முதல் முறையாக உணர்வார். 'லாலுனுகூ' என்ற மென்மையான ரோமங்களால் சிசுவின் உடல் மூடியிருக்கும். பிரசவத்திற்கு முன்பு அந்த ரோம கட்டமைப்பு மறைத்து போய்விடும்.

ஆறாம் மாதம்
சிசுவின் உடல் கிட்டதட்ட முழுமையடைந்து குழந்தையாக உருவாகும். சருமம் கெட்டியாகும். வெள்ளை கிரீஸ் போலத் தோன்றும் 'வெர் நிக்கஸ்' குழந்தையை பாதுகாப்பாய் மூடியிருக்கும். 'ஆம்நீயாடிக்' திரவத்தில் இருந்து குழந்தை தனக்கு தேவையான சத்துக்களை பெரும். குழந்தையின் விக்களை அம்மாவால் அறிந்து கொள்ள முடியும்.

ஏழாம் மாதம்
குழந்தை கண் திறக்கும். எடை கிட்டதட்ட ஒரு கிலோ இருக்கும்.

எட்டாம் மாதம்
நகம் வளரும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கருப்பை வாயில் நோக்கி தலைகீழாக குழந்தை செல்லும்.

ஒன்பதாம் மாதம்
ஈரல், கிட்னி போன்றவை வேகமாக செயல்படும். எட்டு முதல் பத்து தடவை குழந்தையின் அசைவு தெரியும்.

பத்தாம் மாதம்
பிரசவத்திக்கு தயாராகும் நிலை உருவாக்கும்.

நன்றி : டாக்டர். கே.எஸ். ஜெயராணி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.



என் தாய்க்கு ஒரு கவிதை


தாயை இழந்த (என்னை போல) வாடும் இதயக்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கவிதைகளின் ஒரு தொகுப்பு "கொஞ்சம் தேநீர் நிறைய வானம்". இவர் செதுக்கிய இந்த தொகுப்பில் எனக்கு பிடித்த கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள (அல்லது) நினைவூட்ட எனக்கு கிடைத்த ஒரு சந்தர்பமாக இத்தனை நினைக்கிறேன்.


பெற்ற தாயின் அருமை, அருகில் இருக்கும்போது நமக்கு விளங்குவதில்லை. சுயநலமற்ற தாயின் சேவையை விட ஒரு சிறந்த சேவையை நாம் எவ்வளவு காசு கொடுத்தும் பெறமுடியாது.

அன்னையை பற்றி ஒரு கவிதை "முதன் முதலாய் அம்மாவுக்கு... " என்ற கவிதையை படிக்கும்போது என் இதயம் கனத்தது. என்னையும் அறியாமல் என் கண்களில் நீர்த்திவலைகள். இதோ

முதன்முதலாய் அம்மாவுக்கு...

ஆயிரந்தான் கவி சொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரும
ஒத்தவரி சொல்லலையே
காத்தெல்லாம் மகன் பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி எழுதலையே!
எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமாப் போனேனோ?

பொன்னையாத் தேவன் பெத்த பொன்னே!
குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்பு வலி பொறுத்தவளே!
வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில் நீ சுமந்ததில்ல ...
வயித்தில் நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு!

கண்ணு காது மூக்கோட
கறுப்பா ஒரு பிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?
கத்தி எடுப்பவனோ?
களவாணப் பிறந்தவனோ?
தரணி ஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?
இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்த ஒன்ன
நெனச்சா அழுக வரும் ...

கதகதன்னு களி கிண்டி
களிக்குள்ள குழி வெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே
தொண்டையில் அது எறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா...

கொத்தமல்லி வறுத்து வச்சுக்
குறுமொளகா ரெண்டு வச்சு
சீரகமும் சிறு மொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு
கும்மி அரச்சு நீ
கொழ கொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்...

திக்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்
கோழிக் கொழம்பு மேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சி ஊறும் ...

வறுமையில நாம பட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்..
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!
பாசமுள்ள வேளையில
காசு பணம் கூடலையே!
காசு வந்த வேளையிலே
பாசம் வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்த அப்பன் சென்னை வந்து
சொத்தெழுதிப் போன பின்னே
அஞ்சாறு வருசம் உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளை மனம் பித்தாச்சே
பெத்த மனம் கல்லாச்சே...

படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்ச மகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!
பாசம் கண்ணீரு
பழைய கதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே!
....(மௌனம்)
....
வைகையில ஊர் முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டி வந்து
கரைசேத்து விட்டவளே!
எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?

- வைரமுத்து

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.



மலை மலை - திரை விமர்சனம்

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் - மலை மலை.

கதை :
பழனிக்குப் பக்கத்து ஊரில் வாழும் பாசமான அண்ணன்-தம்பி நம்ப அருண் விஜய்யும், பிரபுவும். இவர்களின் ஊருக்கு சென்னையிலிருந்து வருகிற நம்ப ஹீரோயின் வேதிகா பார்த்ததும் காதல். ஆனால் வெளியே சொல்லிகொள்ளவில்லை இருவரும். அண்ணனுக்கு பெண் தேடுகிறார் தேடுகிறார், அருண். திருவிழா கம்பு சண்டையில் கஸ்தூரி-யை பார்கிறார் பிரபு. இவரையே திருமண பெண்பார்க்க அழைத்து செல்கிறார் அருண்.

வேதிகாவைத் தேடி சென்னைக்கு வருகிற அருண் ஒரு கூரியர் கம்பனியில் டிரைவராகிறார். பிரகாஷ்ராஜை தற்செயலாக சென்னை வந்ததும் சந்திக்கிறார். போலீஸ் இவரை என்கவுண்டர் செய்ய கார்த்திரும் நிலையில், M.L.A கனவோடு பிரகாஷ்ராஜ் நடத்தும் ஊர்வலத்தில், தெரியாமல் அவரை அடித்து விடுகிறார் அருண். M.L.A சீட் பறிபோன அவமானத்தில் பிரகாஷ் ராஜ் கொலைவெறியோடு அலைகிறார்.

தம்பியை தேடி சென்னை வரும் பிரபு தற்செயலாக கோவிலில் பிரகாஷ் ராஜை சந்திக்கிறார். பிறகு தான் தெரிகிறது இருவரும் சின்ன வயது தோழர்கள் என்று. அருண்-பிரபு உறவு வில்லனுக்கு தெரியவில்லை. அதே போல பிரபு-வில்லன் உறவு ஹீரோவுக்கு தெரியவில்லை.

வில்லன்-ஹீரோ என்ன ஆனார்கள், பிரபு-கஸ்தூரி, அருண்-வேதிகா திருமணம் என்ன ஆனது என்பது தான் மீதி கதை.

இந்த கதை ஒன்றும் புதிது அல்ல. ஏற்கெனவே பலமுறை பார்த்த அதே காதல், மோதல், சென்டிமென்ட், சுபம் கதை தான். ஆனால் சொன்ன விதம், படமாக்கப்பட்ட விதம் விறு விறுப்பு.

படத்தில் எனக்கு பிடித்த,பிடிக்காத சில...
  • சந்தாம் - கஞ்சா கருப்பு - ஆர்த்தி - மனோகர் கூட்டணி சிரிப்பால் நம் வயிற்றை பதம் பார்கிறார்கள்.

  • ஹீரோ அருண், இந்த படத்தில் சண்டை காட்சிகளில் பட்டையை கிளப்புகிறார்.

  • டான்ஸ் - சும்மா பின்னி எடுத்துள்ளார். முன்பு பார்த்த அருணை இதில் பார்க்க முடியாது. நன்றாக உழைத்துள்ளார். பலன் உண்டு.

  • பிரபு - கதைகேற்ற நடிப்பை காட்டியுள்ளார். மனுஷன் இதே மாதி இன்னும் எத்தனை படங்களில் தான் நடிப்பாரோ தெரியல?. அவரது மீசையை பார்க்கும்போது அவர் சந்திரமுகியில் சொன்ன வசனம் தான் நினைவுக்கு வந்தது. "என்ன கொடும சார் இது ...!" பெரிய திரையில் பாதி இவரே நிற்கிறார். அவளவு பெரிய உடம்பு. சும்மா புசு புசுனு பார்க்க பயங்கரமா இருக்கிறார்.

  • கேமிரா சும்மா புகுந்து விளையாடியுள்ளது

  • வேதிகா - அதிகம் நடிப்புக்கு வாய்ப்பு இல்லாத இந்த கதையில் அழகா, ஆடி பாடி நடித்துள்ளார்.

  • மணிசர்மாவின் பாடல்கள் - சுமார் ரகம்.

  • பிரகாஷ் ராஜ் - அதே வில்லன் வேஷம் + கூட கொஞ்சம் அடிஆட்கள் + ஒரு துப்பாக்கி + கார். பார்க்க அலுப்பு தட்டுகிறது.

  • சண்டைக் காட்சிகளில் சைக்கிளில் ஜீப்பைத் துரத்துவதும், வெறுங்காலோடு ஓடி பல மாடி கட்டிடங்களைத் தாவுவதும், பறந்து பறந்து எதிரிகளை தும்சம் செய்வது என ஒரு தெலுகு படம் பார்த்த உணர்வை தருகிறார். குருவி படத்தை நினைவுக்கு வந்தது.

எந்த எதிபார்ப்பும் இல்லாமல் போன எனக்கு இந்த படம் மன நிறைவை தந்தது. ஒருமுறை பார்கலாம்.

மலை மலை - மசாலா படம்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.



Related Posts with Thumbnails
 
back to top