மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் கேரட் - சீஸ் - வெங்காய ஊத்தப்பம் ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
அரைப்பதற்கு தேவையானப் பொருட்கள்:-
புழுங்கல் அரிசி - 4 கப்
முழு உளுந்து - 1 கப்
துவரம் பருப்பு - கால் கப்
வெந்தயம் - 4 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கேற்ப
ஊத்தப்பத்துக்கு தேவையானப் பொருட்கள்:-
பொடியாக நறுக்கிய வெங்காயம் -3
பச்சை மிளகாய் -2
இஞ்சி - தேவைக்கேற்ப
பூண்டு - 5
கொத்தமல்லி - - தேவைக்கேற்ப
துருவிய கேரட் - 2
துருவிய சீஸ் - - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:-
- அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைத்து, தோசை மாவு பதத்துக்கு முதல் நாளே அரைத்து வைக்கவும்.
- தேவையான உப்புக் கலந்து, புளிக்க விடவும். தோசைக் கல்லை சூடாக்கி, ஒரு குழிக் கரண்டியால் கனமாக தோசை வார்த்து, மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கேரட் தூவி, 1 டீஸ்பூன் எண்ணெயைச் சுற்றிலும் விட்டு, மூடி வைத்து, குறைந்த தணலில் வேக விடவும்.
- ஜாக்கிரதையாக திருப்பிப் போட்டு, தேவையானால் இன்னொரு டடீஸ்பூன் எண்ணெய் விட்டு, பரிமாறுவதற்கு முன், சீஸ் துருவல் சேர்த்துக் கொடுக்கவும்.
- கேரட் - சீஸ் - வெங்காய ஊத்தப்பம் ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
0 comments:
Post a Comment