Colombiana (2011) - விமர்சனம்

'தி ரெட் சிரேன், டாக்சி மற்றும் ட்ரான்ஸ்போர்டர் 3' போன்ற ஆக்க்ஷன் படங்களை இயக்கிய 'Olivier Megaton' - இன் அடுத்த ஆக்க்ஷன் படைப்பு இந்த கொலம்பியானா(Colombiana).

'டேக்கன்' படத்துக்கு திரைக்கதை எழுதிய Luc Besson தான் இந்த படத்துக்கும் திரைக்கதை அமைத்துள்ளார்.

'அவதார், ஸ்டார் ட்ரிக்' போன்ற படங்களில் நடித்த சல்டானா (Zoe Saldana) தான் இந்த படத்தின் நாயகி + ஹீரோ.

'பழிவாங்கல் மிக அழகானது!' என்ற தாரக மந்திரத்தை சொல்லும் கொலம்பியானா படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.

படத்தோட கதை என்னானா...

கொலம்பியாவில் போதை பொருள் கடத்தும் பாபியோ (Jordi Mollà) மற்றும் மார்கோ(Jesse போர்றேகோ) இருவருக்கும் இடையே இருந்த தொழில் பகையால், பாபியோ குடும்பத்தை கொன்றுவிடும்படி உத்தரவு போடுகிறான் மார்கோ.

அவனது கும்பல், பாபியோ வீட்டிற்குள் புகுந்துவிட, அவனது குடும்பத்தை எப்படியாவது காப்பாற்றவேண்டி நடக்கும் போராட்டத்தில் அவனையும் அவனது மனைவியையும் கொன்று விடுகிறார்கள். அந்த இடத்தில் வேறுயாராவது இருகிறார்களா என்று தேடும்போது..அவனது ஒன்பது வயது பெண் குழத்தை கேதலியா அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடுகிறாள்.

அவளது தந்தை ஒரு லாக்கெட் + அமெரிக்கா அட்ரெஸ் ஒன்றை கொடுத்து அந்த குறிப்பிட இடத்திற்கு சென்றால் அவளை கவனித்துகொல்வார்கள் என்று சொன்னது நினைவுக்கு வருது.

சென்ற இடத்தில் அவளுக்கு எதிர்பார்த்த உதவியும் கிடைக்கிறது. எங்கே இவளையும் கொன்றுவிடுவார்களோ என்று பயந்து, பள்ளிக்கு அனுப்பபடுகிறாள். ஆனால், அவளால் படிக்கத் தான் முடியவில்லை. காரணம் கேட்க, பெற்றோரை கொன்ற குப்பலை தான் கொல்ல வேண்டும் என்று சொல்ல, அவளது உறுதியை கண்ட தந்தையின் நண்பர், அவளுக்கு உதவுகிறார். ஆளும் வளர்கிறாள் கொலைவெறியுடன்...


15 வருடம் கழித்து... தான் ஒரு சிறந்த 'தொழில்முறை கொலைகாரி' வளர்திருப்பதை நிருபிக்கும் தருணத்தை எதிர்பார்த்து இருபவளுக்கு, தன் தந்தையின் எதிரிகள் இருக்கும் இடம் தெரியவர, அவர்களை அழிக்கும் படலம் ஆரமிகிறாள். மொத்தம் 22 கொலைகள்!!!

இந்த கொலைகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு ரோஸ்(Lennie James) என்பவனிடம் வருகிறது. இறுதியில் மார்கோ....வை கொன்று தன் நினைத்ததை சாதித்தாளா...? FBI போலீஸ் அவளை கைது செய்ததா...? என்பது தான் மீதி கதை.


படத்துல நான் ரசித்த சில ...

தான் என்னவாக வர வேண்டும் என்று ஒரு குழந்தை நினைகிறதோ அதே போல அவர்களால் வர முடியும் என்று ஆணித்தனமாக சொல்லும் படம் இது.

ஜெயிலில் இறுதி தப்பித்து அவள் நடத்தும் முதல் பழிவாங்கல். அற்புதமான காட்சியமைப்பு. கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவு.

இவள் செய்யும் ஒவ்வொரு கொலைகளுக்கும், செத்துப்போனவர்களின் மார்பு பகுதியல் இருக்கும் புல்லட்டின் வடிவத்தை வைத்து அது கேதலிய பூவின் உருவம் என்று FBI கண்டுபிடிப்பதும் அதிலிருந்து FBI போலீஸ் தேடும் காட்சிகள் ரசிக்ககூடியவைகள்.

படத்தில் காட்டாலியாவை பிடிக்க துடிக்கும் இன்ஸ்பெக்ட்ர் கேரக்டர் டாப்பு!!

Zoë Saldana - அவதார் படத்தின் நாயகி கேரக்டருக்கு வீடியோ கிராபிக்ஸ் உருவத்துக்கு பொருந்தி போனவர் இவர் தான்.

Colombiana (2011)- ஆக்க்ஷன் விருந்து!

கோழி இடும் முட்டைகள் :
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top