மங்காத்தா - விமர்சனம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாநிதி அழகிரியின் தயாரிப்பில் அஜித்குமாரின் 50-வது படமான ‘மங்காத்தா’வில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, லட்சுமிராய், அஞ்சலி உள்ளிட்ட மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இது நகைசுவை கலந்த அதிரடி ஆக்ஷன் படம்.


படத்தோட கதை என்னானா...

IPL பைனல் மேட்ச் பிக்ஸ்க்காக மும்பையில் 500 கோடி வருவதை அறிந்த நான்கு பேர் கொள்ளை அடிக்க திட்டம் போட, இடையில் சஸ்பென்ஷனில் இருக்கும் போலீஸ் அஜித்தும் திட்டத்தில் சேர்ந்துக் கொள்கிறார். இந்த சூதாட்டத் தொகை பற்றி கேள்விப்படும் போலீஸ் (அர்ஜுன் ) அதை கைப்பற்ற ஒரு குழுவோடு அலைகிறார். ஐந்து பேரும் கொள்ளை அடித்த பணத்தை பிரித்துக் கொண்டார்களா ? அர்ஜூன் அவர்களை கைது செய்தாரா ? என்பது தான் கதை.

எனக்கு பிடித்த சில...

1. அஜித் :
எத்தனை நாள் ஆகிவிட்டது தலையை இவ்வளவு ஆக்டிவாக திரையில் பார்த்து! மாஸ் ஓபனிங் சாங், ரசிகர்கள், இமேஜ் என எதைப்பற்றியும் யோசிக்காமல் ஒரு பக்கா நெகடிவ் கதாபாத்திரத்தை செய்திருப்பது அஜித் மேல் உள்ள மரியாதையை ரசிகர்களுக்கு நிச்சயம் அதிகரிக்கும். கதாநாயகியை ஏமாற்றாதது, கெட்ட வார்த்தைகளை தவிர்ப்பது, உண்மையான வயதை மறைப்பது என மாஸ் ஹீரோக்களுக்குண்டான அத்தனை இலக்கண விதிகளையும் துணிச்சலாக உடைத்து மங்காத்தா விளையாடி இருக்கிறார் அஜித்.
அஜித் தோன்றும் காட்சிகளில் வழங்கப்படும் பின்னணி இசை ப்ரேம்ஜியுடன் தண்ணீர் அடித்துவிட்டு அஜித் பண்ணும் அலம்பல் தீயேட்டரை அதிரவைகிறது
2. நான்கு நாயகிகள் :
காரசேவ் 'த்ரிஷா'வுக்கு படத்தில் பெரிய வேலையில்லை. தண்ணீ அடித்துவிட்டு அவள் செய்யும் சேட்டைகள். செல்லக் குறும்பு.

குலோப்ஜாமுன் 'அஞ்சலி' கொஞ்சம் அழகு + கொஞ்சம் நடிப்பு.

பச்சைமிளகா 'அண்டிரினா' வில்லன்கள் மிரட்ட பயன்பட்டிருக்கிறார்கள்.

ரசகுல்லா 'லஷ்மி ராய்' கொஞ்சம் கவர்ச்சி + ஆட்டம் என ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார்.

3. சக்தி சரவணின் ஒளிப்பதிவு :
பாடல் காட்சிகள் அவளவு அழகான ஒளிப்பதிவு + விறுவிறுப்பான சண்டை காட்சிகள் என் புகுந்து புகுந்த ஒளிபதிவு செய்திரிருகிறார். முழு படத்தையே கலர்ஃபுல் திருவிழாவாக ஆக்குகிறது அவர் ஒளிப்பதிவு.


4. அர்ஜூன் :
தான் எப்போதும் ஒரு 'ஆக்சன் கிங்' என்று நிரூபிக்கிறார். சண்டைக்காட்சிகளில் அதே வேகம். அஜித்திற்கு இணையாக கதையில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர். இருவரும் மோதும் காட்சி அமர்க்களம்.

5. யுவன் :
படத்தின் பெரிய பலம் பின்னணி இசை. யுவன் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார்.

'விளையாடு மங்காத்தா, பல்லேலக்கா, மற்றும் இவன் அம்பானி பரம்பரைடா' பாடல்கள் தியாட்டரை கலக்குகிறது.

ஆடாமல் ஜெயிச்சோமடா.. என்று அஜித் ஆடும் போது ரசிகர்களால் அமைதிகாக்க முடியவில்லை. நானும் சீட்டில் இருந்தபடியே ஆடினேன்.

6. வெங்கட்பிரபு :
வெங்கட்பிரபு படங்களில் வழக்கம் போல் இடம்பெறும் அந்த குரூப் இந்த படத்திலும் என்ட்ரி. பிரேம்ஜி, வைபவ், ஆகாஷ் போன்ற நடிகர்கள் இந்த திரைப்படத்திலும் வலம் வருகின்றனர். அனைவரும் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கின்றனர்.
'The Italian Job' படத்தின் சில காட்சிகள் மனதுக்குள் வருவதை தவிர்க்கமுடியவில்லை.
நினைவுக்கு வந்த சில டயலாக்...
இந்த மே வந்தா 40 வயசு ஆகுது.

எத்தனை நாளுக்குதான் நான் நல்லவனா நடிப்பது.

ஆணோ பெண்ணோ தண்ணி அடிச்சா எப்படி இந்த மாதிரி மொக்க ஜோக்கா சொல்ல முடியுது?

அதென்னவோ தெரியல ... மப்பானலே இளையராஜா பாட்டெல்லாம் நாபகம் வந்துடுது.

நான் சீட்டு கட்டுல ராஜாவா இருக்க ஆசைபடுறேன், ஜோக்கரா இல்ல.

செஸ் போர்டின் முன் உட்கார்ந்து கொண்டு பேசும் காட்சிகளூம் அனைத்தும்.

வாழ்கையே ஒரு சூதாட்டம், எப்ப ஜெய்போம், எப்ப தோர்ப்போம் என யாருக்கும் தெரியாது.

பசங்க சும்மா இருந்தாலும் இந்த பொண்ணுங்க சும்மா இருக்க விட மாட்டாங்களே

கரன்ஸி வந்தால் காதலும் வரும், கருமாதியும் வரும்

பிரேம் : எனக்கு எந்த பிகர் வேணாம்.
அஜீத் : நீயே நினைத்தாலும் அது உனக்கு செட் ஆகாது. நீ அதுக்கு லாயக்கில்லை.

மங்காத்தா - ஒருமுறை பார்க்கலாம்.

தல நீ பாசாயிடே!தல நீ பாசாயிடே!

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top