ரஜினி சொன்ன சில குட்டி கதைகள்

'சூப்பர் ஸ்டார்' ரஜினி அவர்கள் பொதுமேடைகளில் அவ்வபோது சிறு சிறு கதைகளை சொல்வது வழக்கம். அதில் எனக்கு பிடித்தவைகள் சில அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்...


பக்காவா பிளான் பண்ணனும்... இல்லைனா ..?!

ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும், 5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்பபடுவார், அங்குவுள்ள மிருகங்களுக்கு இறையாக நேரிடும். அதனால் யாரும் 5 வருஷம் ஆட்சி செய்யமாட்டாங்க. 1 வருஷம் இல்ல 2, 3 வருஷத்துல காட்டுக்கு போகணும்னு நினைச்சி உடம்பு சரியில்லாம இறந்துடுவாங்க.

ஒருத்தர் மட்டும் சந்தோஷமா 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு, 5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும், எல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க, அப்போ அந்த ராஜா "என்னை ராஜா மாதிரியே அந்த காட்டுல விட்டுடுங்கன்னு" சொன்னாரு.

போகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து நீங்க மட்டும் எப்டி சந்தோஷமா இருகிங்கனு கேட்டாரு. அதற்கு ராஜா "நான் ஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன். இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன். இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன். இப்போ நான் தான் அங்க ராஜா."

பயந்தா ஜெயிக்கிறது எப்படி…!

மூணு தவளைகள் இருந்ததாம். ஒரு மலைக்கு முன்னால் மூன்றும் ஒன்று கூடியதாம்.

மலைக்கு மேல இருக்கற கோயிலுக்குப் போக முடிவெடுத்ததாம். ஆனா, அது ரொம்ப ஆபத்தான மலை. பாம்பு, மிருகங்கள் என்று கொடூர ஜந்துக்கள் உலவும் இடம். போதாக்குறைக்கு, தவளைகள் மலைக்கு மேல் போய்விடக்கூடாது என்று வேறு சில சக்திகளும் முடிவு செய்தது.

முதலில் ஒரு தவளை மலை மேல் ஏற ஆரம்பித்த உடனேயே, ‘போகாதே போகாதே செத்துடுவே… பின்னால் பார்… பாம்பு படமெடுக்குது’ என்று குரல் கேட்டது. தவளை திரும்பி வந்துவிட்டது. அடுத்த தவளை ஏறியது.

அதே குரல், ஆனா தவளை கண்டுக்கவில்லை. தொடர்ந்து பயமுறுத்தல் குரல் கேட்டுக்கொண்டேதான் இருந்தது. ஒரு கட்டத்தில் ரெண்டாம் தவளையும் கீழே வந்துவிட்டது. இப்போது மூன்றாம் தவளை ஏற ஆரம்பித்தது.

அதே மிரட்டல் குரல்கள்… இப்போது சில மிருகங் களின் சத்தங்களும் கேட்க ஆரம்பித்தது. ஆனால் தவளை எதற்குமே ரியாக்ட் பண்ணவில்லை. நேராக மலை உச்சியில் இருந்த கோயிலை அடைந்த பிறகுதான் நின்றது!

இந்தக் கதையைச் சொல்லி நிறுத்திய ரஜினி. ‘அந்த மூணாவது தவளை மட்டும் இதை சாதிக்க என்ன காரணம் தெரியுமா? அதுக்குக் காது கேட்காது. அதனால் எந்த பயமுறுத்தலும் காதில் விழாமல், தன் லட்சியம் மட்டுமே மனதில் இருக்க… அது சாதிக்க முடிந்தது.

நாமளும் அப்படித்தான்… பக்தியாகட்டும், எடுத்த காரியமாகட்டும்! மனசுல ஒரு முடிவு எடுத்த பிறகு வேண்டாத மிரட்டல்களை காதுல போட்டுக்கவே கூடாது. காது கேட்காத தவளைகளாகவே முன்னேறணும். பயந்தா ஜெயிக்கிறது எப்படி?,’ என்றார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!வாழைப்பூ பக்கோடா

'அடடா மழைடா... அடைமழைடா'னு பாடற காலம் இது. சாயங்காலம் ஆகிட்டா... குளிர்கூட அடிக்கத்தான் செய்யுது. காரசாரமா... மொறுமொறுனு ஏதாச்சும் இருந்தா... சூப்பராத்தான் இருக்கும்'' என்று தோன்றுகிறது தானே..!

இதோ... அசத்தலான, அருமையான வாழைப்பூ பக்கோடா எப்படி செய்வது என்று பார்ப்போம்...


தேவையான பொருட்கள் :-
 • வாழைப்பூ - 1,
 • பெரிய வெங்காயம் - 2,
 • கடலை மாவு - 2 கோப்பை,
 • மிளகாய்த் தூள் -1 தேக்கரண்டி,
 • சோள மாவு - 2 தேக்கரண்டி,
 • கறிவேப்பிலை - 3 கொத்து,
 • எண்ணெய் - 200 கிராம்,
 • உப்பு - தேவையான அளவு
செய்முறை :-

 • வாழைப்பூவை பொடிப்பொடியாக நறுக்கி சிறிது மோர் கலந்த தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

 • அடுத்து வெங்காயத்தையும், கருவேப்பிலையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

 • பிறகு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு அதில் கடலைமாவு, சோளமாவு, மிளகாய்த்தூள், உப்பு போட்டு லேசாக தண்ணீர் விட்டு நன்றாக பிசறிக் கொள்ளவும்.

 • வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசிறி வைத்துள்ள கலவையை பரவலாகப் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். சூடான, சுவையான, சத்தான வாழைப்பூ பக்கோடா ரெடி.

குறிப்பு :-

1. வாழைப்பூவை அரியும் போது கைகளில் சிறிதளவு எண்ணெயை தடவிக் கொண்டால் கைகளில் கறை படியாது.

2. மசாலா வாசனை வேண்டுமென்றால் சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது, சிறிது சோம்புத்தூள் ஆகியவை சேர்த்தும் செய்யலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!அழகு உங்கள் கையில்..!

அழகு குறைந்தாலோ, தலைமுடி பொலிவிழந்தாலோ வயதாகு முன் சீக்கிரமே தலைமுடி நரைத்து விட்டாலோ, தன்னம்பிக்கையே போய்விடும். நம்மை நாமே அழகுபடுத்திக் கொள்வதன் மூலமும், சிற்சில குறைகளைத் திருத்துவதன் மூலமும் தன்னம்பிக்கையை, அழகை அதிகரித்துக் கொள்ளலாம்.

நம்மில் உருவ அமைப்பு வேறுபடுவது மாதிரிதான் தலைமுடியும். சரும வகையும் வேறுபடும். அதன் அடிப்படையைத் தெரிந்துகொண்டு பிரச்சினைகளுக்குத் தகுந்தவாறு தீர்வு காண்பதே நல்லது.


தலையை, தலைமுடியைப் பொறுத்தவரை ஆண், பெண் இருபாலாருக்குமே நிறைப் பிரச்சனைகள் இருக்கின்றன. பேன், பொடுகு, நரைமுடி, பிசுபிசுப்பு, முடி கொட்டுதல், பிளவுபடுதல், இளவயதில் வழுக்கை விழுதல் இப்படிப் பல.

பொதுவாக வீட்டில் இருப்பவர்களை விட வெளியில் அலைபவர்களைத்தான் இந்தப் பிரச்சினைகள் மிகவும் பாதிக்கிறது. இவற்றிற்கு என்ன காரணம்? அவற்றை எப்படி தீர்க்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

கீழ் கண்டவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டோ இருக்கலாம்.
 • பரம்பரை
 • மாசு
 • டென்ஷன்
 • அதிகமான உடல் உஷ்ணம்
 • வைட்டமின் ஏ, இ, இரும்பு, புரோட்டீன் இவற்றில் ஏதாவது ஒரு சத்து குறைபாடு
 • பேன், பொடுகு தொல்லை
 • சரியான முறையில் தலை முடியைச் சுத்தமாகப் பராமரிக்காதது
 • தரமில்லாத சோப்பு, ஷாம்பூவை உபயோகிப்பது
 • ஹார்மோன் குறைபாடுகள்
 • டைபாய்டு ஜுரத்தால் பாதிக்கப்படுதல்
 • வேர்க்கால்கள் பலவீனமடைதல்
 • தண்ணீர் சரியாக இல்லாதது
 • அடிக்கடி ஹேர் டிரையர் உபயோகிப்பது
 • ஏதாவது ஒரு நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்ளும்போது ஏற்படும் பக்க விளைவு.
 • பெண்களுக்குப் பிரசவத்திற்கு பின்
இந்த முடிப் பிரச்சினைக்குத் தீர்வே இல்லையா? என்று கவலைப்படாதீர்கள். கட்டாயம் உண்டு. சராசரியாக தினம் 50-லிருந்து 100 முடிகள் உதிர்வது சகஜம். அதற்கு மேல் கொட்டினால் தான் கவலைப்பட வேண்டும்.கீழ்க்கண்ட டிப்ஸ்களை கடைப்பிடித்தாலே, பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

தலைமுடியின் ஆராக்கியத்திற்கு நாம் உண்ணும் உணவு முறையும் ஒரு காரணம். இன்றைய இளம் தலைமுறையினருக்கு உணவு விஷயத்தில் அக்கறையே இல்லை. ஆரோக்கியமான தலைமுடியைப் பெற ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்வது முக்கியம்.

எண்ணெய், கொழுப்பு மிகுந்த உணவுப் பதார்த்தங்களைத் தவிருங்கள். காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளைத் தினமும் உணவில் அதிகமாகச் சேருங்கள்.


வாரம் ஒருமுறை 'ஹாட் ஆயில் மசாஜ்' செய்து கூந்தலை அலசுங்கள்.

மேலே உள்ள முடியை மட்டம் அலசுவதால் எந்தப் பயனுமில்லை. வாரம் இரு முறையாவது இயற்கைப் பொருட்கள் கலந்த பொடி அல்லது மூலிகை கலந்த ஷாம்பூ உபயோகிக்க வேண்டும். அப்படி உபயோகிக்கும் போது, மயிர்கால்களில் உள்ள அழுக்குப் போகும்படி முடியை நன்கு அலச வேண்டும்.

தலைக்குக் குளித்தவுடன் சுத்தமான துவாலையால் ஈரத்தை துடைக்க வேண்டும்.


அவசரத்திற்கு அடிக்கடி ஹேர் டிரையர் உபயோகப்படுத்தினால், முடி பலவீனமடைந்து கொட்ட ஆரம்பிக்கும். எனவே, கூடுமானவரை ஹேர் டிரையர் உபயோகிப்பதைத் தவிருங்கள். அதுவும் வறண்ட கூந்தல் உடையவர்கள் கண்டிப்பாக ஹேர் டிரையர் உபயோகிக்கக் கூடாது.

எப்பொழுதும் தலைமுடியைக் காய்ந்த பிறகே வார வேண்டும். ஈரத்தோடு தலை வாரினால் பலமிழந்த முடிகள் கையோடு வந்து விடும்.

கூடுமானவரை சீப்பு, சோப்பு, டவலை தனியாக உபயோகியுங்கள்.


டூ வீலரில் செல்பவர்கள் ஹெல்மெட் போட்டால், முடி கொட்டுகிறது என்று நினைப்பார்கள். அதற்கு தலையில் ஒரு மெலிதான துணி அல்லது ஸ்கார்ஃப் போட்டு அதன் மேல் ஹெல்மெட் அணியலாம்.

முடி குட்டையாக இருந்தால் 4 டீஸ்பூன் விட்டமின் ஈ எண்ணெயை முதல் நாள் இரவு தலைமுடியில் தடவி அடுத்த நாள் காலை அலசுங்கள்.

நன்றி :தினகரன்

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!


என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன் - ஒரு பக்கக் கதை

சிரிக்க... சிந்திக்க... ஒரு சிறு முல்லா கதை இதோ...


என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன்...?

முல்லா தான் மிகவும் குண்டாக இருப்பதை நினைத்து மிகுந்த வருத்தத்தில் இருந்தார், அப்போது நாளிதழில் வந்த ஒரு(கீழ்க்கண்ட) விளம்பரம் கண்ணை கவர்ந்தது

மிகவும் கவர்ச்சிகரமான முறையில் உடம்பு இளைக்க ஒரு வாய்ப்பு !

1) உடல் இளைக்க (சாதாரணம்) – Rs 1,000/- ஒரு மணி நேரம் ( 2 முதல் 5 கிலோ வரை )

2) சூப்பர் ட்ரிம்மர் - Rs 2,000/- இரண்டு மணி நேரம் ( 6 முதல் 10 கிலோ வரை )

3) ஹெவி ட்ரிம்மர் - Rs 3,000/- மூன்று மணி நேரம்( 11 முதல் 15 கிலோ வரை )

4) அல்டிமேட் ட்ரிம்மர் - Rs 10,000/- கால வரையரை இல்லை ( எடை வரையரை இல்லை )

முன்பதிவிற்கு முந்துங்கள்...
முல்லா இந்த விளம்பரத்தைப் பார்த்ததும் அதை முயற்சி செய்து பார்த்துவிடுவது என முடிவெடுத்தார். ஆனாலும், சாதாரண முறையில் முதலில் பரீட்சிக்க விரும்பி அதற்கான பணத்தை கட்டினார். அவர் ஒரு காலியான அறையில் விடப்பட்டார்.

அந்த அறை பதினாறுக்கு பதினாறு என்ற அளவில் இருந்தது. அதன் மூலையில் ஒரு பெண் அமர்ந்திருந்தார் அவளுடைய கையில் ஒரு அட்டை அதில் "ஒரு மணி நேரத்திற்க்குள் என்னை துரத்திப் பிடித்தால் என்னுடன் ஜாலியாக இருக்கலாம்" என்று எழுதியிருந்தது. முல்லா அந்த பெண்னை துரத்த ஆரம்பித்தார்–அவருக்கு எல்லாம் நல்ல படியாகவே முடிந்தது–அவர் துரத்திய துரத்தலில் அவருடைய எடையும் கனிசமாக குறைந்தது.

முழு திருப்தியுடன் அதற்கு அடுத்த முறையை பரிச்சிக்க விரும்பினார் இந்த முறையில் கொஞ்சம் வித்தியாசம். அறையின் அளவு நாற்பதுக்கு நாற்பது, சாதாரண முறையை விட நல்ல அழகான பெண், கால அவகாசம் இரண்டு மணி நேரம் அவ்வளவு தான், மற்றபடி, முறை ஒன்றுதான். இதிலும் முல்லாவிற்கு முழுதிருப்தி.

மிகவும் மகிழ்ச்சியுடன் அடுத்த முறையை தேர்ந்தெடுத்தார் இதிலும் கொஞ்சம் வித்தியாசம். அறையின் அளவு எழுபத்தைந்துக்கு எழுபத்தைந்து, மிக மிக அழகான பெண், கால அவகாசம் மூன்று மணி நேரம். முல்லா கணிசமாக எடை குறைந்திருந்தார். அவருக்கு, எல்லா முறைகளிலும் தான் சிறப்பாக செய்ததை எண்ணி அளவில்லா ஆனந்தம், கடைசியாக அல்டிமேட் ட்ரிம்மர் முறையிலும் கலந்து கொள்வது என்று முடிவெடுத்தார், அதற்க்கான பணத்தையும் கட்டினார்.

வரவேர்ப்பாளர் அவரிடம் பதினாறாவது மாடிக்கு நடந்து செல்லும் படி சொன்னார். முல்லாவும் தான் அடையப்போகும் சந்தோஷத்தை எண்ணியவரே கஷ்டப்பட்டு பதினாறாவது மாடியை அடைந்தார். அங்கு அவர் 42-வது மாடிக்கு பதினைந்து நிமிடத்திற்குள் ஓடி வந்து சேர வேண்டும். அப்படி வந்தால் தான் பயிற்சி உண்டு என தெரிவிக்கப்பட்டது.

முல்லாவிற்கு வேறு வழியும் இல்லை. தான் காணப்போகும் மிக மிக அற்புதமான அனுபவத்தை நினைத்தவாறு உயிரைக் கொடுத்து ஓடி மாடியை 13 நிமிடத்தில் அடைந்தார். அது மிகப்பரந்த ஒரு மொட்டை மாடி அதன் அளவு சுமார் 500x500 அடி பரப்பளவு இருக்கும். அதன் மூலையில் ஒரு பெரிய அறை அவ்வளவுதான்.

அவர் மொட்டை மாடியை அடைந்ததும் அவருக்குப்பின் கதவு மூடப்பட்டது. முல்லா மூச்சு வாங்கியவாரே அந்த அறையை நோக்கி நடந்தார் அங்கே! "நான் உன்னை துரத்திப் பிடித்தால், என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன்" என்ற வாசகம் எழுதிய அட்டையுடன் அமைதியாக ஒரு பெரிய மனிதக்குரங்கு அமர்ந்திருந்தது.

முல்லா 'னே' என விழித்தார். பின்னர் அந்த நிகழ்வை நினைத்து முல்லா சிரிக்க...

முற்றும்.

நன்றி: ஓஷோ


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!காதலிக்க நேரமுண்டு - ஒரு பக்கக் கதை

ஒரு நிமிஷம் அபியென மெல்லிய தாய் ஒலித்த குரல் கேட்டு திரும்பினாள் அபி.

அவளின் முகம் பார்த்த நிலையில் அடுத்த வார்த்தை வராதவனாய் அப்படியே ஸ்தம்பித்து மௌனமாய் சில நொடிகள் நின்றான் சத்யா!


ஏன் அபி, என்னை நீ என்னைக்கும் புரிஞ்சுக்க மாட்டியா, நா . உன்னை உண்மையிலே நா மனசார விரும்புறேன். என் மனசு எல்லாம் நீ தானியிருக்கிறாய்.

நீ மட்டும் எனக்கு கிடைக்கலைன்னா நா கண்டிப்பா சூசைட் பண்ணிக்குவேன் அதில எந்தவித மாற்றமும் இல்லையென அவன் பேசியதில் கண்களில் ஒருவித வெறி தெரிந்தது.

ஒரு நிமிடம் அபி ஆடி போய் விட்டாள். உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்காயென்னா? இப்படி கண்டபடி பேசற.

நீ நல்ல பையன் தான். அழகாகவும் அடக்கமாகவும் தானிருக்கிற. ஆனா, நீ சின்ன கிராமத்துல பொறந்தாலும் பல மைல் தூரமுள்ள பக்கத்து ஊருக்கு கஷ்டப்பட்டு பல நாட்கள் நடந்தே ஸ்கூலுக்குப் போயி நல்லபடியா 12 வது வகுப்பு வரை விடாத முயற்சியோடு படிச்சு முதல் மாணவனா எக்ஸாம்ல வெற்றி பெற்று வந்திருக்கிற.

உன்னுடைய கஷ்டத்தோட பலனா நல்ல மார்க்குபெற்று காலேஜ் அட்மிஷன் கிடைச்சிருச்சு என்ன, என்னை அப்படி ஆச்சர்யமா பாக்குற. எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்ன்னு யோசிக்கிற அப்படித்தானே அவளின் கேள்விக்கு அவன் தலையசைத்தான் ஆமாம்யென்பது போல்.

பற்கள் பளிச்சிட அவள் சிரித்தாள். இதெல்லாம் பர்ஸ்ட் டே நாம காலேஜ×க்கு வந்தன்னைக்கு நாம நம்மளை அறிமுகப்படுத்திக்கிட்டப்போ நீ சொன்னது. இதுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் இருக்குன்னு யோசிக்கிறியா, இருக்கு? உன்னுடைய குடும்பம் ஏழைக் குடும்பமாயிருந்தாலும் உன்னை எப்படியாவது ஒரு பட்டதாரியா ஆக்கிடணும்னு உங்கப்பாவும் அம்மாவும் வயக்காட்ல வெயில் மழைன்னு பாக்காம உடம்பை கூட சரியா கவனிச்சுக்காம உழைச்சு ஓடாய் ஒவ்வொரு நாளும் தேஞ்சுக்கிட்டு இருக்காங்க.

ஒண்ணுக்கு பத்தா வட்டிக்கு கடன் வாங்கியாவது உனக்கு எப்படியாவது ஒரு நல்ல வாழ்க்கைப்பாதையை அமைக்க தங்களோட சுய கவுரவத்தை யும், உயிருக்கும் மேலான குடும்ப மானத்தையும் அடமானம் வைக்கிறாங்க.

அண்ணன் படிச்சு வந்து நல்ல வேலைக்கு போயி கைநிறைய சம்பாரிச்சு தனக்காக வரன் தேடி தன்னை வாழ வைப்பான்னு கல்யாணக் கனவு கண்டுக்கொண்டிருப்பாள் உன் தங்கை. இப்படிப்பட்ட ஆசைகளை அழிக்கப் போகும். இந்த காதலை நான் ஏற்கவா சொல்லு சத்யா...

நாம இப்பதான் காலேஜ் வாசலை அடியெடுத்து வச்சிருக்கிறோம். அதுக்குள்ள நமக்கு இந்த காதல் தேவையா? காதல் வேண்டாம்ன்னு சொல்லலை ஆனா அது இப்ப வேணாம். உன்னை பெத்தவங்களுடைய ஆசையையும் எதிர்பார்ப்பையும் இந்த காதலால இழந்து விடாதே! திரும்ப பெற முடியாது.

கடமையை நிறைவேற்ற நல்லா படி சத்யா. நல்ல மார்க். வாங்கி ரேங்க் ஹோல்டரா வா. அப்புறம் நல்ல வேலையை தேடிக்கிட்டு எல்லா கடமையையும் நிறைவேத்திட்டு வா! அப்ப நம்ம காதல் பற்றி பேசுவோம் என இத்தனை நாள் மனதில் பூட்டி வைத்திருந்த எண்ணத்தை வெளிப்படுத்திய நிறைவோடு தோளிலிருந்து இறங்க காத்திருந்த துப்பட்டாவை புத்தகங்களை பிடித்திருந்த இரு கரங்களின் ஒன்றில் அதனை தோளுக்கே உயர்த்தி அவனுடைய பதிலுக்கு காத்திராமல் நடை போட்டாள் அவள்.

சத்யா கிளாஸை விட்டு வெளியேறிய புரொபசரை நோக்கி நடையில் வேகத்தை கூட்டினான். நடையில் மட்டுமல்ல மனதிலும். தவற விட்ட முன் பீரியடை பற்றிய குறிப்பு வாங்க!

நன்றி : ஆர்.விஜயலட்சுமி


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!வைரமுத்து - கவிதை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், கவிபேரரசு வைரமுத்து. சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றவர்.


நேற்று இரவு இவரது கவிதை தொகுப்பினை படிக்க நேரம் கிடைத்தது. அதில் எனக்கு பிடித்த ஒரு கவிதை உங்கள் பார்வைக்கு...

வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்...

உன் வெள்ளிக்கொலுசொலி
வீதியில் கேட்டால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்!

உன் பார்வை
கொஞ்சம்
விலகிவிட்டால்
ஆயிரம் கண்கள் துளைக்கும்!

உன் எச்சில் சோற்றை
காகம் தின்றால்
சாபம் பட்டே இறக்கும்!

நீ செதுக்கிப் போட்ட
பென்சில் துகள்கள்
கவிதையை விட
இனிக்கும்!

உன் வீட்டுப் பூனை
இங்கு வந்தால் என்
தட்டுச் சோறு கிடைக்கும்!

ஒட்டுப்பொட்டை
தவறவிட்டாய்
என் புத்தகம் தேடு
இருக்கும்!

நீ
மருதாணியை
பூசிக்கொண்டால்
மருதாணிச் செடி
சிவக்கும்!

நீ
மொட்டை மாடிக்கு
வந்து நின்றால்
எங்கும்
தலைகள் முளைக்கும்!

நீ அழகிப் போட்டியில்
கலந்துகொண்டால்
அழகே தோற்றுப் போகும்!

நீ முடி விலக்கும்
நளினம் கண்டு
மேகம் விலகிப் போகும்!

நீ சூடிய பூவை
மீண்டும் விற்கும்
பூக்கடைகளில்
கூட்டம்!

நிலவை நீயும்
கேட்டுக்கொண்டால்
நிதமும் பிறையாய்ப்
போகும்!

உன் வீட்டுக்கதவு
திறந்திருந்தால்
வைகுண்ட ஏகாதசி!

உன் முகத்தைக்
கூந்தல் மறைத்ததனால்
பகலில் நடுநிசி!

நன்றி : கவிபேரரசு வைரமுத்து

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!மேத்தி புலாவ்

புலாவ் வகைகள் வடநாட்டில் புகழ் பெற்றது. குழந்தைகளுக்கு ஏற்ற, விரும்பி உண்ணக் கூடிய சத்தான உணவு. அவர்களுக்கு மேத்தி புலாவ் போன்று சுவையாக புலாவ் செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். நமக்கும் சத்துள்ளதை தந்தோம் என்ற திருப்தி இருக்கும்.

ஒரே விதமாக சாப்பிட்டு சலிப்படைந்தவர்கள் இந்த புலாவ் வகையை முயற்சிக்கலாம்.

மேத்தி புலாவ் தானே... எல்லாரும் செய்யறது தானே என்று எண்ணுகிறீர்களா? அதிலும் பல நுணுக்கங்கள் - படித்துப் பாருங்கள், புரியும்!

தேவையானப் பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 3 டம்ளர் அரை மணி நேரம் ஊற வைத்தது

நல்லெண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
விளக்கெண்ணய்-2 டேபிள் ஸ்பூன்
சூரிய காந்தி எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
மக்காச்சோள எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 2
பச்சை மிளகாய் (கீறியது) - 3
வெந்தயம் - 10 டீஸ்பூன்

பட்டை - 1
பூண்டு - 2

கறிவேப்பில்லை - 1 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
 • குக்கர் சூடானவுடன் ஆயிலை ஊற்றி பட்டை, வெந்தயம், பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை நன்றாக வதக்கவும்

 • வதக்கியதும் 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கும் பொழுது ஊற வைத்த அரிசியை போடவும்.3/4 விசில் விடவும்.

 • இப்போது மருத்துவ குணம் நிறைந்த மேத்தி புலாவ் ரெடி. இதனை ரைத்தாவுடன் பரிமாறலாம்.

குறிப்பு :
பல எண்ணெய் சேர்ப்பதால் அனைத்து சத்துக்களும் கிடைக்கும். இது வெந்தயச்சோறு என்றும் பல எண்ணெய் சோறு என்றும் அழைப்பார்கள்,.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!தனுஷின் '3' பட பாடல் 'Why this kolaveri...'

நடிகர் தனுஷின் புதிய படத்தின் பெயர் மூணு '3'. அதில் அவர் எழுதி பாடிய ஒரு பாடல் வெளிவந்துள்ளது.


முதல் முறை கேட்டபோதே மனசுக்கு மிக அருகில் வந்து உக்கார்ந்துகொண்டது. தேவையான இசை.... பாடலின் நடு நடுவே பேசிய படி தனுஷின் குரலில் ஒலிக்கும் அந்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

அந்த பாடலை mp3 வடிவில் தரவிறக்கம் (download) செய்ய இங்கே தொடுக.பாடல் வரிகள் கீழே ஆங்கிலத்தில்....
Oh boys...I am singing song
Soup song...
Flop song...

Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri..... di

Distance la moon-u moon-u
Moon-u color-u white-u
White background night-u nigth-u
Night-u color-u black-u

Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di

White skin girl-u girl-u
Girl-u heart-u black-u
Eyes eyes meet-u meet-u
My future dark

Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di

Maama notes eduthuko
Apdiye kaila saxss eduthuko

Super maama ready
Ready 1 2 3 4

Wat a change over maama

Ok maama now tune change

Hmmmmmmmmm
Kaila glass
Only english..

Hand la glass
Glass la scotch
Eyes fulla tear-u

Empty life
Girl come
Life reverse gear-u

Lovu lovu
Oh my love
You show to me pov

Cow cow holy cow
I want u here now
God i m dying now
She is happy how

This song pass to boys
We dont have choice...

Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di

Flop song...

அந்த பாடலை mp3 வடிவில் தரவிறக்கம் (download) செய்ய இங்கே தொடுக.

பாடல் இடம் பெற்ற படம் : 3
பாடலை எழுதியவர் : நடிகர் தனுஷ்
இசை அமைத்தவர் : அனிருத்
பாடலை பாடியவர் : நடிகர் தனுஷ்


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் காதல் வரிகள் !!!

எனக்கு ரொம்ப பிடித்த சில பாடல்களின் இந்த 'நான் மலரோடு...' பாடல் மிக அதிகம் பிடிக்கும். இசை + பாடல் வரிகள் + பாடியவர்களின் குரல் என அனைத்தும் மிக அற்புதமாக அமைந்த பாடல்.

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் இரு வல்லவர்கள். 1966 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எல்.விஜயலக்ஷ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கண்ணதாசனின் காதல் வரிகள் எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும். அவரின் ரசனையோ தனி தான் ...!!!!

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக..
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற..


அடுத்து இரண்டு வரிகளில் ஒரே கிலுகிலுப்பை தரவல்ல காதல் ரசம் சொட்டும் வரிகள்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்


இது போன்ற காதல் வரிகளை மயக்கும் குரல்களில் பாடியவர்கள் 'சிங்க குரல்'
டி.எம்.சௌந்திரராஜன் & 'குரல் அரசி' பி. சிசீலா.நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்...


காதிற்கு தேனாய் இனிக்கும் இசை வேதா.

தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக Download Songs
உதவி - ஒரு பக்கக் கதை

கழுதை ஒன்று, நிறைய பொதி சுமந்து கொண்டு சென்றது.அதன் பின்னால் கழுதையின் எஜமானரும், அவர் வளர்க்கும் நாயும் வந்து கொண்டிருந்தனர்.

செல்லும் வழியில் புல் தரையைப் பார்த்ததும், கழுதையை அங்கு மேயவிட்டு மரத்தின் நிழலில் படுத்துத் தூங்கினார் எஜமானர்.


கழுதை அங்கிருந்த புற்களை நன்கு மேய்ந்தது. ஆனால், நாய்க்குத் தின்பதற்கு எதுவுமில்லை. பசி, அதன் வயிற்றைப் பிடுங்கியது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நாய், கடைசியாக கழுதையைப் பார்த்து, "நண்பனே, என்னால் பசி தாங்க முடியவில்லை. எஜமானரோ தூங்குகிறார். கொஞ்சம் கீழே படு. உன் பொதியில் உள்ள உணவில் கொஞ்சம் எடுத்துக் கொள்கிறேன்''என்று கெஞ்சியது.

நாயின் கெஞ்சலை கழுதை பொருட்படுத்தவில்லை. அது ஆனந்தமாகப் புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. நாயும் விடாமல் கெஞ்சிக் கொண்டிருந்தது.

நாயின் தொந்தரவு தாங்காத கழுதை, "என்னப்பா அவசரம்? எஜமானர் எழுந்திரிக்கட்டும். அவர் சாப்பிடும்போது உனக்கும் தான் கொடுப்பாரே" என்றது. வேறு வழியில்லாமல் நாய் சோர்ந்து போய் படுத்துக் கொண்டது.

அப்போது ஓநாய் ஒன்று மேய்ந்து கொண்டிருந்த கழுதை மீது பாய்ந்தது. பயத்தால் அலறிய கழுதை, "நண்பா, சீக்கிரம் ஓடிவந்து என்னைக் காப்பாற்று" என நாயைப் பார்த்து கதறியது.

படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்திரிக்காமல்,"ஏன் அவசரப்படுகிறாய்? கொஞ்சம் பொறுமையாக இரு, எஜமானர் விழிக்கட்டும். அவர் தான் கட்டாயம் உனக்கு உதவி செய்வாரே" என்றது நாய்.கதையின் நீதி: நாம் மற்றவர்களுக்கு உதவினால் தான், மற்றவர்கள் நமக்கு உதவி செய்வார்கள்.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!வைரமுத்து - ரஜினி - கவிதை - பாடல்

வாழ்க்கையை மிக சுருக்கமாகவும், எளிமையாகவும் விளக்கிய பாடல் “ரா ரா ரா ராமய்யா, எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா” என்ற பாடல்.

1995 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து, சுரேஷ் கிருஷ்ணா இயக்கி, R.M.வீரப்பன் சத்யா மூவிஸ் பேனரில் தயாரித்து வெளிவந்து, மெகா ஹிட் ஆன படம் "பாட்சா" என்பதை உலகறியும்.

ரஜினியின் திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான ஒரு இடம் "பாட்சா" படத்திற்கு உண்டு.

இந்த “ரா ரா ரா ராமய்யா..." பாடலுக்கு தேவையான கருத்துகளை தனது கவிதையிலேயே எடுத்து புதுப்பித்த அல்லது அதன் ஆதி மூலமாய் அமைந்த வைரமுத்துவின் கவிதை இதோ...


அந்தந்த வயதுகளில்..!

இருபதுகளில்...

எழு உன் கால்களுக்கு சுயமாய் நிற்கச் சொல்லிக்கொடு...
ஜன்னல்களை திறந்து வை...
படி.. எதையும் படி...
வாத்சாயனம் கூடக் காமம் அல்ல - கல்வி தான் படி...
உன் சட்டைப் பொத்தான் கடிகாரம்
காதல் சிற்றுண்டி சிற்றின்பம் எல்லாம்
விஞ்ஞானத்தின் மடியில் விழுந்து விட்டதால் எந்திர அறிவுக் கொள்...
சப்தங்கள் படி
சூழ்ச்சிகள் அறி
பூமியில் நின்று வானத்தைப் பார்...
வானத்தில் நின்று பூமியைப் பார்...
உன் திசையை தெரிவு செய் நுரைக்க நுரைக்கக் காதலி
காதலை சுகி காதலில் அழு...
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில் மணம்புரி
வாழ்க்கை என்பது உழைப்பும் துய்ப்பும் என்று உணர்

முப்பதுகளில்....

சுருசுருப்பில் தேனீயாய் இரு நிதானத்தில் ஞானியாய் இரு...
உறங்குதல் சுருக்கு உழை நித்தம் கலவிகொள்
உட்கார முடியாத ஒருவன்
உன் நாற்காலியை ஒழித்து வைத்திருப்பான்... கைப்பற்று...
ஆயுதம் தயாரி பயன்படுத்தாதே...
எதிரிகளை பேசவிடு.. சிறுநீர் கழிக்கையில் சிரி...
வேர்களை இடிப் பிழக்காத ஆழத்துக்கு அனுப்பு...
கிளைகளை சூரியனுக்கு நிழழ் கொடுக்கும் உயரத்திற்கு பரப்பு...
நிலைகொள்.

நாற்பதுகளில்...

இனிமேல்தான் வாழ்க்கை ஆரம்பம்
செல்வத்தில் பாதியை அறிவில் முழுமையை செலவழி
எதிரிகளை ஒழி..
ஆயுதங்களை மண்டை ஓடுகளில் தீட்டு
பொருள் சேர்
இரு கையால் ஈட்டு ஒரு கையாலேனும் கொடு
பகல் தூக்கம் போடு
கவனம்... இன்னொருக் காதல் வரும்..
புன்னகை வரைப் போ... புடவை தொடாதே...
இதுவரை இலட்சியம்தானே உனது இலக்கு...
இனிமேல் இலட்சியத்திற்கு நீதான் இலக்கு...

ஐம்பதுகளில்...

வாழ்க்கை - வழுக்கை இரண்டையும் ரசி
கொழுப்பை குறை... முட்டையின் வெண்கரு
காய்கறி கீரைகொள்
கணக்குப்பார்
நீ மனிதனா என்று வாழ்கையைக் கேள்..

அறுபதுகளில்....

இதுவரை வாழ்க்கைதானே உனை வாழ்ந்தது...
இனியேனும் வாழ்க்கையை நீ வாழ்...
விதிக்கப்பட்ட வாழ்க்கையை விழக்கி விடு...
மனிதர்கள் போதும்
முயல்கள் வளர்த்துப் பார் நாயோடு தூங்கு கிளியோடு பேசு
மனைவிக்குப் பேன்பார்
பழைய டைரி எடு... இப்போதாவது உண்மை எழுது...

எழுபதுகளில்...

இந்தியாவில் இது உபரி...
சுடுகாடுவரை நடந்து போகச் சக்தி இருக்கும்போதே செத்துப்போ
ஜன கண மன..!!!இந்த கவிதையை ரஜினிக்கு தகுந்தார் போல மாற்றி ஒரு தத்துவ பாடலாக உருவாக்கிய வைரமுத்து என்னவென்று சொல்ல....!!!
ரா ரா ரா ராமய்யா....
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா...
இக்கட ரா ரா ரா ராமய்யா....
அதை புட்டு புட்டு வைக்கபோறேன் பாரய்யா ....

எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா
அதை புத்திக்கு எட்டும் படி சொல்லப்போறேன் கேளய்யா
இக்கட ரா ரா ரா ராமையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா

என்று தொடங்கும் அந்த பாடல், பின் வரும் 8, 8 ஆக வாழ்க்கையை பிரிக்கும் விஷயங்களை உள்ளடக்கியது....

முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல

மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
நான்காம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல

ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல

ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமல்ல
எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்ல


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!மீல் மேக்கர் கத்திரிக்காய் குழம்பு

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். அதே போல, கத்திரியுடன் மீல் மேக்கர் சேர்த்தால் அதன் ருசியே தனி தான்.

சரி... வாங்க மீல் மேக்கர் கத்திரிக்காய் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்...

தேவையானப் பொருள்கள்:
மீல் மேக்கர் - 20
வெள்ளை கத்திரிக்காய் - 3
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 1
சிறியது மிளகாய் - 2

தேங்காய் - 1 கப் (துருவியது)
புளி, பூண்டு - தேவையான அளவு
சிறிய நெல்லிக்காய், அளவு மாங்காய் - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்.
மல்லி இலை - 1 கொத்து.


தாளிக்க:-

கடுகு, உ.பருப்பு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணைய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
 • மீல் மேக்கரை சுடு நீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

 • கத்தரிக்காய், மாங்காய், தக்காளி, வெங்காயம் இவற்றை நறுக்கி கொள்ளவும். புளியை ஊற வைக்கவும்.

 • சிறிது வெங்காயம், தக்காளி, மிளகாய், தேங்காய் இவற்றை தனியே மிக்சியில் அரைத்து கொள்ளவும். மீதி தேங்காயை, சிறிது சீரகம் சேர்த்து அரைக்கவும்.

 • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, உ.பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு தாளிக்கவும்.

 • பின்னர் மஞ்சள் தூள் சேர்க்கவும். அதன் பிறகு, கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.

 • புளி கரைத்து ஊற்றவும். இதனுடன் மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும். அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.

 • சிறிது நீர் சேர்த்து மீல் மேக்கரை போடவும்.

 • அவை வெந்ததும் அரைத்த தேங்காயை போடவும். நன்கு கொதித்ததும் மல்லி இலை போடவும்.
மீல் மேக்கர் கத்திரிக்காய் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும் அதை நீங்களும் செய்து பாருங்கள். பின்னர் அதன் சுவை பற்றி என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!நான் ரசித்த மூன்று கவிதைகள்!!!

சில நாட்களுக்கு முன்னர் வலையில் உலா வந்த போது என் கண்ணில் சிக்கிய சில கவிதைகள் உங்களால் பார்வைக்கு.....
அல்லது - பெண்!

கருவில் சுமந்து
உயிர் கொடுத்த தாயாக!
அல்லது,
அவளே என்னைப் படைத்த
கடவுளாக!

கைப் பிடித்து
கொஞ்சி விளையாடும் சகோதரியா!
அல்லது,
அவளே எனக்கு பாசவலையிட்ட
உயிராக!

உணர்வை பகிர்ந்து
இறுதிவரை தோள்கொடுத்த தோழியாக!
அல்லது,
அவளே என்னை உற்சாகமூட்டவந்த
தேவதையாக!

மனதை திருடி
உயிருடன் கலந்த காதலியாக!
அல்லது,
அவளே எனக்கென்று பிறந்த
அழகியாக!

மாலையிட்டு மணக்கோலத்துடன்
வாழ்க்கையை பகிரவந்த மனைவியாக!
அல்லது,
அவளே எனக்கு மற்றுமொரு
தாயாக!

கொஞ்சும் மொழியில்
என்னை மறக்கசெய்யும் மகளாக!
அல்லது,
அவளே எனக்கு இறைவனளித்த
பரிசாக!

இந்த உலகை
சொர்க்கமாக்க வந்த பெண்களாக!
அல்லது,
இவர்கள் இல்லா உலகம்
சூன்னியமாக!

- sipi


வானத்துக்கு மேலே...

மரத்தடியில் நிற்காமல்
மரமாகவே நின்றுகொண்டும்

பூக்களையெல்லாம் பறிக்காமல்
பூக்களாகவே சிரித்துக்கொண்டும்

வண்டுகளை விரட்டாமல்
வண்டாக தேனுறிஞ்சிக்கொண்டும்

மழையில் நனையாமல்
மழையாகவே நனைந்துகொண்டும்

பறவைகளை வீழ்த்தாமல்
பறவையாகவே சிறகுவிரித்துக்கொண்டும்

சரித்தரங்களை படிக்காமல்
சரித்தரம் படைத்துக்கொண்டும்

வானம்பாடிகளை தேடாமல்
வானம்பாடியாக பாடிக்கொண்டும்

சங்கீதம் கேட்காமல்
சுரங்களாகவே மாறிக்கொண்டும்

ரத்தசத்தங்கள் இல்லாமல்
மாந்தர் கண்படாமல்

மந்திரஉலகம் இருக்குமா?
வானத்துக்கு மேலே?

-மோ.அபிலாஷ்


இமயம் வேண்டாம்...

எனக்கு இமயம் வேண்டாம்
குன்று போதும்
அல்லது
ஒரு கல்துண்டு மட்டும்!

எனக்கு கங்கை வேண்டாம்
நீரோடை போதும்
அல்லது
இலையில் ஓர் துளி மட்டும்!

எனக்கு வானம் வேண்டாம்
மேகம் போதும்
அல்லது
ஒரு நட்சத்திரம் மட்டும்!

எனக்கு ஆழ்கடல் வேண்டாம்
அலைகள் போதும்
அல்லது
அதன் சிதறல் மட்டும்!

எனக்கு பெருமழை வேண்டாம்
தூறல் போதும்
அல்லது
மண்வாசம் மட்டும்!

எனக்கு வைரம் வேண்டாம்
பவளம் போதும்
அல்லது
ஒரு முத்து மட்டும்!

எனக்கு நூலகம் வேண்டாம்
புத்தகம் போதும்
அல்லது
ஒரு தாள் மட்டும்!

எனக்கு மதங்கள் வேண்டாம்
கடவுள் போதும்
அல்லது
மந்திரச்சொல் மட்டும்!

எனக்கு சூரியன் வேண்டாம்
நிலவு போதும்
அல்லது
ஒரு மின்மினி மட்டும்!

எனக்கு காதல் வேண்டாம
நினைவுகள் போதும்
அல்லது
ஒரு முத்தம் மட்டும்!

எனக்கு சரித்திரம் வேண்டாம்
சம்பவங்கள் போதும்
அல்லது
ஒரு சாகசம் மட்டும்!

எனக்கு மெத்தைகள் வேண்டாம்
தாய்மடி போதும்
அல்லது
ஆறடி பூமி மட்டும!

இவை எல்லாம் நடக்க வேண்டாம்
எல்லோரும் நினைக்கவாவது வேண்டும்
அல்லது
இப்படி நிழல்களில் மட்டும்!

-அபிலாஷ்


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!


சூர்யாவின் ஏழாம் அறிவு - விமர்சனம்

'ஈ & தசாவதாரம்' போன்ற படங்களின் வாயிலாக நான் முதன்முதலாக 'பயோ வார்' பற்றிய விசயங்களை கொஞ்சம் தெரிந்துகொண்டேன். அதன் பிறகு இப்போ... ஏழாம்அறிவு படத்தில்...

A.R.முருகதாஸ் கடந்தகால வரலாற்றையும் நிகழ்கால வரலாற்றையும் பயோவாருடன் தொடர்பு படுத்திய விதம், அவரை ஒரு தேர்ந்த தேடல் கொண்ட திரைக்கதையாளராக அடையாளம் காட்டுகிறது.

தமி‌ழனி‌ன்‌ வீ‌ரம்‌‌, மருத்‌துவ‌ம்‌, தற்‌கா‌ப்‌பு‌ கலை‌களை‌யு‌ம்‌ உலகம்‌ வி‌யக்‌கும்‌ வண்‌ணம்‌ நி‌னை‌வு‌ படுத்‌தி‌யதற்‌கா‌க இயக்‌குநரை‌ மனதார பாராட்டலாம்!

சரி சரி படத்தோட கதை என்ன ....

முதல் அரைமணி நேரத்தில் சொல்லப்படும் கதை - fentastic! அது தமிழர் போதிதருமர் பற்றியது...

தற்காப்புக் கலை, மருத்துவம், கலைகள் என அனைத்திலும் நிபுணத்துவம் மிக்கவனான பல்லவ மன்னர் குல இளவரசன் போதிதர்மனை அவனது ராஜமாதா சீனாவுக்குப் போகும்படி கட்டளையிடுகிறார். மூன்றாண்டு தரைவழிப் பயணமாக இமயத்தைக் கடந்து சீன கிராமம் ஒன்றில் கால் பதிக்கும் போதி தர்மனை, சீனர்கள் ஒரு ஆபத்தின் அடையாளமாகப் பார்க்கிறார்கள்.

ஆனால் ஆபத்து 'கொள்ளை நோய்' உருவில் அந்த கிராமத்தைத் தாக்க, நோய் பாதிக்கப்பட்ட முதல் குழந்தையை உயிரோடு துணியில் சுருட்டி காட்டில் தூக்கிப் போட, அந்த குழந்தையை போதிதர்மன் தன் மருத்துவத் திறமையாமல் மீண்டும் உயிர்ப்பித்துத் தருகிறார். அப்போதுதான் போதி தர்மனின் மகத்துவம் அவர்களுக்குப் புரிகிறது. அந்தக் கிராமம் முழுவதுமே அப்போது நோயில் வீழ, போதிதர்மன் அந்த மக்களை நோயிலிருந்து மீட்கிறார். சீனாவின் பிற பகுதி மக்களுக்கும் அந்த நோய் சிகிச்சை முறைகளை கற்பிக்கிறார். கொள்ளை நோயே இல்லாமல் போகிறது.

அடுத்த சில நாட்களில் ஒரு கொள்ளைக் கூட்டம் அந்த கிராமத்தைத் தாக்க, அதிலிருந்து அந்த மக்களை தனது அரிய தற்காப்புக் கலை மூலம் காப்பாற்றுகிறார் போதிதர்மன். அந்த கலையை தங்களுக்கும் கற்பித்துத் தரச் சொல்லி சீனர்கள் கேட்க, அவர்கள் அனைவருக்கும் களறிப் பயட்டு, நோக்கு வர்மம் போன்ற தற்காப்புக் கலைகளை கற்றுத் தருகிறார்.

சீனர்களுக்கு செய்த சேவையில் திருப்தியுற்ற போதிதர்மன் மீண்டும் காஞ்சிபுரம் திரும்ப முடிவு செய்கிறார். ஆனால் அந்த சீனர்களோ, போதி இறந்து அவரது உடல் சீனாவில் புதைக்கப்பட்டால் நாடு செழிப்பாகவும் அச்சமின்றியும் இருக்கும் என நம்புகிறார்கள். எனவே போதிக்கு விஷம் கலந்த உணவைக் கொடுக்க, அது விஷ உணவு எனத் தெரிந்தும், அவர்களுக்காக உண்டு இறந்து சீனாவுக்கு உரமாகிறார் போதிதர்மன்.


மீதி கதை என்னாபா... ?

நிகழ்காலத்தில் சென்னையில் ... என மீதி படம் தொடர்கிறது....

தமி‌ழ்‌ நா‌ட்‌டி‌ல்‌ ஆரா‌ய்‌ச்‌சியி‌ல்‌ ஈடுபடும்‌‌ மா‌ணவி‌ சுபா‌, போ‌தி‌தர்‌மனி‌ன்‌ வரலா‌ற்‌றை‌ ஆரா‌ய்‌ந்‌து வி‌யக்‌கி‌றா‌ர்‌. அவன்‌ வா‌ழ்‌ந்‌த பகுதி‌யி‌ல்‌ செ‌ன்‌று அவனது வம்‌சா‌வழி‌‌ ரத்தத்தை சோ‌தி‌த்‌து அதே‌ மரபனு உள்‌ள ஒரு இளை‌ஞனை‌ கண்‌டு பி‌டி‌க்‌கி‌றா‌ள்‌. அவர் தான் சர்க்கஸ் கலைஞர் சூர்யா. அவனை‌ கா‌தலி‌ப்‌பது போ‌ல நடி‌த்‌து, அவனது ஆரா‌ய்‌ச்‌சி‌க்‌கு பயன்‌ படுத்‌த முயற்‌சி‌க்‌கி‌றாள்‌‌.

இந்‌தி‌ய நா‌ட்‌டி‌ல்‌ கொ‌டி‌ய வி‌யா‌தி‌யை‌ உருவா‌க்‌கி‌, அதற்‌கு மருந்‌து தே‌டி‌ தன்‌ நா‌ட்‌டி‌டம்‌ கை‌யே‌ந்‌த வை‌க்‌கவு‌ம்‌, அதன்‌ மூ‌லம்‌ இந்‌தி‌யா‌வை‌ அடி‌மை‌யா‌க்‌க நி‌னை‌க்‌கும்‌ சீ‌னா‌, போ‌தி‌தர்‌மன்‌ பற்‌றி‌ய DNA ஆரா‌ய்‌ச்‌சி‌ செ‌ய்‌யு‌ம்‌ மா‌ணவி‌யை‌(சுருதி) ஒழி‌த்‌து கட்‌டவு‌ம்‌‌, எல்‌லா‌ தி‌றமை‌யை‌யு‌ம்‌ கொ‌ண்‌ட ஒரு இளை‌ஞனை‌(Johnny Tri Nguyen) இந்‌தி‌யா‌வு‌க்‌கு அனுப்‌பு‌கி‌றது.

இதனிடையில் காதலில் விழும் ஹீரோவுக்கு அவனில் தேடல் பற்றிய விஷயம் தெரியவர... இவர்களை அழிக்க வில்லன் சென்னை வருகிறான். வில்லன், சுருதியை கொன்றானா? அவன் போட்ட திட்டம் நிறைவேறியதா? நம்ப ஹீரோ காதல் என்னவானது? என்பதை தியேடரில் மட்டும் சென்று பாருங்க.


எனக்கு பிடித்த சில....

போதிதர்மன் & சர்க்கஸ் கலைஞர் என இரண்டு வேடங்களில் நடித்து இருக்கிறார் சூ‌ர்‌யா‌. போ‌தி‌தர்‌மனா‌க அறி‌முகமா‌கி‌ற கா‌ட்‌சி‌யி‌ல்‌ வி‌யக்‌க வை‌க்‌கி‌றா‌ர் சூ‌ர்‌யா‌. முறுக்‌கே‌றி‌ய உடம்‌பு‌, மி‌ரள வை‌க்‌கும்‌ பா‌ர்‌வை‌, பதறவை‌க்‌கும்‌ சண்டை என அபா‌ரமா‌ன தி‌றமை‌களை‌ வெ‌ளி‌ப்‌படுத்‌தி‌ அந்‌தப்‌‌ பா‌த்‌தி‌ரத்‌துக்‌கு வலி‌மை‌ சே‌ர்‌க்‌கி‌றா‌ர்‌.

அதே‌ போ‌ல சர்‌கஸ்‌ கலை‌ஞனா‌க ஆடி‌ப்‌பா‌டி‌, கா‌தல்‌ கொ‌ண்‌டு... வி‌ளை‌யா‌ட்‌டு பி‌ள்‌ளை‌யா‌கவு‌ம்‌ கலக்‌குகி‌றா‌ர்‌. பி‌றகு வி‌ல்‌லனை‌ கண்‌டு அதி‌ர்‌ந்‌து, அவனை‌ கண்‌டு ஓடும்‌ போ‌து சரா‌சரி‌ இளை‌ஞனா‌க பளி‌ச்‌சி‌டுகி‌றா‌ர்‌. 'தி‌ருப்‌பி‌ அடி‌ப்‌பே‌ன்‌' என்‌று உரக்‌க பே‌சுகி‌ற போ‌து உரமே‌ற்‌றுகி‌றா‌ர்‌.‌ சண்‌டை‌க்‌ககாட்‌சி‌யி‌லும்‌, நடனத்‌தி‌லும்‌ அவரை‌ அடி‌ச்‌சுக்‌க முடி‌யா‌து என்‌கி‌ற அளவு‌க்‌கு அவரது தி‌றமை‌ பளி‌ச்‌சி‌டுகி‌றது. Well done & good Job Surya!!!

ஆரா‌ய்‌ச்‌சி‌ மா‌ணவி‌ சுபா‌வா‌க அறிமுக நாயகியாக ஸ்ருதி கமல்ஹாசன்... தமிழில்தான் இது இவருக்கு முதல் படம். எதிர்பார்க்கவே இல்லை இத்தனை அழகாக நடிப்பார் என்று..! அதனை உணர்த்துவது போல் அழகான அளவான நடிப்பு. கமல்ஹாசன் நிச்சயம் பெருமைபட்டு கொள்ளலாம். குளோஸப் காட்சிகளில் வாய்ஸ் மாடுலேஷன் சிறிதளவுகூட மாறாமல், சிந்தாமல், சிதறாமல் இருக்கிறது. Welcome Shuruthi!

வில்லன் நடிகரான அந்த டோங் லீ. நல்ல தேர்வுதான். அடே‌ங்‌கப்‌பா‌... அதி‌ரடி‌ மி‌ரட்‌டல்‌!
ஆனால், அவர் அளவுக்கு சூர்யாவுக்கு குங்பூ தெரியாத்தால் ஹீரோவுக்காக கொஞ்சம் அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறார். Good opening as Villan!!!

ஒபனிக் சாங் + யம்மா யம்மா பாடல் படு அபத்தம். பின்னணி இசை பரவாயில்லை. ஹாரிஸ் கைதட்டல் வாங்கும் இடம் முதல் அரை மணி நேரத்தில் தான். பிறகு கிளைமாக்ஸ் பாடலில்.
எனக்கு பிடித்த வசனம்...
ஏய் எதுக்கு குப்பைத்தொட்டியை தேடற ...?

ஒரு மனுசனைப் பற்றி நல்ல விஷயம் தெரியனுன அவன் படிக்கிற புக்கை பாரு.... கேட்ட விஷயம் தெரியனுனா அவன் வீட்டு குப்பைத் தொட்டியை பாரு.....

எனக்கு அவன் மேல லவ் எல்லாம் இல்ல.... ஆனா அவன் கூட இருந்தா ஒரு சந்தோசம்... தைரியம் எல்லாம் கிடைக்குது.

வீரம் வீரம்னு சொல்லி நாம் இலங்கை சண்டையில தோத்துத்தானே போனோம்.?

அது துரோகம்.... வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் தெரியாம வாழ்த்திட்டு இருக்கோம். ஈழத்துல நாம தோத்ததர்க்கு துரோகம் தான் காரணம்.
சபாஸ் டைரக்டர்

இப்படத்துகாக A.Rமுருகதாஸ் கடுமையாக உழைத்திருக்கிறார்... பல்வேறு இடங்களில் ஏராளமான தகவல்களை திரட்டியிருக்கிறார்... அவை எல்லாவற்றையும் வீணாக்காமல் செய்திருக்கிறார். அதில் ஓன்று ...
1. யானை மீது ஏறி வரும் ஹீரோ நம்ப ஹீரோயினிக்கு லிப்ட் தருவது புதுமை.

2. நாயிடமிருந்து எவ்வாறு மனிதர்களுக்கு ​நோய் பரவுகிறது... ஒரு மனிதரிடமிருந்து இன்​னொரு மனிதருக்கு எவ்வாறு ​நோய் பரவுகிறது என ​நோய் பரவுவது குறித்த காட்சிப்படுத்தல்கள் குழந்​தைகளுக்கும் புரிய​வைக்கும் விதத்தில் நன்கு படமாக்கப்பட்டிருப்பது நல்ல முயற்சி.
சண்டைக்காட்சிகள்

பீட்டர் ஹெயினின் சண்டைக்காட்சிகள் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.மிக விளக்கமாகவும் விவரணையோடும் பல விஷயங்களைச் சொல்லியிருந்தாலும் சில சில இடங்களிள் ஏன்... எதற்கு... எப்படி..? என்ற கேள்வி எழுகின்றது.

வில்லனாக வரும் டோங் லீ நடிகர் யப்பா....?! சண்டை காட்சிகளில் அப்படி ஒரு ஆக்ரோஷம். சண்டை கட்சிகள் உயிரோட்டமாக அமைந்ததற்கு இவருடைய பங்களிப்பு ஒரு முக்கியகாரணம். Congratz!!!

ரவி K.சந்திரனின் ஒளிப்பதிவைப் பற்றி நிறைய பேசலாம். பிரம்மாண்டம் என்பதை உணரவைக்கும் நேர்த்தி. சில இடங்களில் அது மிஸ்ஸிங் ...

படத்துல குறை இல்லையா...?

ஏன் இல்லை.... நிறைய இருக்கு. நீங்கள் சொல்லுங்க ...குறை இல்லாத மனுஷன் இந்த உலகத்துல இருக்கானா ..?!


மிக நல்ல தொடக்கத்திற்கு பாதை அமைத்து, தமிழரின் கலை, பண்பாடு குறித்த வாழ்வியலை வடித்திருக்கும் இயக்குனர் A.R.முருகதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மொத்தத்தில்... அனைத்து தமிழ் மக்களும் பார்த்து பரவசம் அடைய வேண்டிய ஒரு அருமையான படம்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!Related Posts with Thumbnails
 
back to top