உலகின் சிறந்த கால்பந்து வீரர் - மெஸ்சி உலக சாதனை!

சாதனை நாயகன்

உலகின் சிறந்த கால்பந்து வீரராக மெஸ்சி தேர்வு தொடர்ந்து 4–வது முறையாக விருதை வென்று சாதனை படைத்தார்!

தொடரும் புதிய சாதனை

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி, 'பிபா' சிறந்த வீரர் விருதை தொடர்ந்து நான்காவது முறையாக வென்று சாதனை படைத்தார்.

[படம் : இனியஸ்டா, மெஸ்சி, ரொனால்டோ]

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு(பிபா) சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர் விருது வழங்கப்படுகிறது. 2012ல் விருது பெறுபவர்களுக்கான இறுதிப்பட்டியலில்
  • பார்சிலோனா கிளப் அணியின் லயோனல் மெஸ்சி,
  • பார்சிலோனா கிளப் அணியின் இனியஸ்டா(ஸ்பெயின்),
  • ரியல் மாட்ரிட் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ(போர்ச்சுகல்)
ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த விருதுக்கான வீரர்களை தேர்வு செய்ய, பயிற்சியாளர்கள், சர்வதேச கால்பந்து அணியின் கேப்டன்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் ஓட்டளிப்பர். இதில்
  • மெஸ்சிக்கு - 41.60 %
  • ரொனால்டோ - 23.68 %
  • இனியஸ்டா - 10.91 %
சதவீத ஓட்டுகள் கிடைத்தன. இதனடிப்படையில் உலகின் சிறந்த வீரருக்கான விருதை மெஸ்சி தொடர்ந்து நான்காவது முறையாக தட்டிச் சென்றார். ஏற்கனவே இவ்விருதினை, 2009, 10, 11ம் ஆண்டுகளில் பெற்றார்.

அதிக கோல் அடித்தவர்

சென்ற ஆண்டு மெஸ்சிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. அதிக(91) கோல்கள் அடித்து, ஜெர்மனியின் (85)முல்லர் சாதனையை முறியடித்தார். "பிபா' விருது குறித்து மெஸ்சி கூறுகையில்,
"நான்காவது முறையாக விருது பெறுவது, வியப்பாக உள்ளது. இதனை, இனியஸ்டா உள்ளிட்ட பார்சிலோனா அணியின் சக வீரர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு ஓட்டளித்த பயிற்சியாளர்கள், கேப்டன்கள் ஆகியோருக்கு நன்றி," என்றார்.

அதிக முறை பிபா வென்று சாதனை

'பிபா' சார்பில் வழங்கப்படும், உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை அதிக முறை பெற்ற வீரர்கள் பட்டியலில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்சி, முன்னிலை வகிக்கிறார். இவர், தொடர்ந்து நான்கு முறை (2009, 10, 11, 12) இவ்விருதை வென்றார்.

இவரை அடுத்து, பிரான்சின் ஜிடேன் (1998, 2000, 2003), பிரேசிலின் ரொனால்டோ (1996, 97, 2002) தலா 3 முறை கைப்பற்றினர்.

அதிக கோல் அடித்த வீரர்கள்

'பிபா' கிளப் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை தொடரில், அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில், மெஸ்சி முதலிடத்தை, பிரேசிலின் டேனில்சன், எகிப்தின் முகமது அபோட்ரிகாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இவர்கள் மூவரும் தலா 4 கோல் அடித்துள்ளனர்.

அதிக முறை "ஹாட்ரிக்' கோல் அடித்த வீரர்

ஸ்பெயினில் நடக்கும் "லா லிகா' கால்பந்து தொடரின், ஒரு சீசனில் அதிக முறை "ஹாட்ரிக்' கோல் அடித்த வீரர்கள் வரிசையில் மெஸ்சி முன்னிலை வகிக்கிறார். இவர், 2011-12 சீசனில், 8 முறை இச்சாதனை படைத்தார்.


இவர், "லா-லிகா' தொடரில் இதுவரை 15 முறை "ஹாட்ரிக்' சாதனை படைத்துள்ளார்.

கிளப் போட்டிகளில் அதிக முறை "ஹாட்ரிக்' கோல் அடித்த வீரர்கள் வரிசையில் மெஸ்சி முதலிடத்தில் உள்ளார். இவர், 21 முறை இச்சாதனை படைத்துள்ளார்.

அதிக கோல் அடித்த அர்ஜென்டினா வீரர்கள்

கடந்த ஆண்டு அர்ஜென்டினா அணிக்காக 9 போட்டியில் விளையாடிய மெஸ்சி, 12 கோல் அடித்தார். இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிக கோல் அடித்த அர்ஜென்டினா வீரர்கள் வரிசையில் முதலிடத்தை கேப்ரியல் பாடிஸ்டுடாவுடன் (12 கோல்) பகிர்ந்து கொண்டார்.

ஒரு சீசனில் அதிக கோல் அடித்த வீரர்

ஒரு சீசனில் நடந்த ஒட்டுமொத்த தொடர்களில், அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் மெஸ்சி முன்னிலை வகிக்கிறார். இவர், 2011-12ல் விளையாடிய போட்டிகளில் 73 கோல் அடித்துள்ளார்.

ஒரு ஆண்டில் அதிக கோல் அடித்த வீரர்

ஒரு ஆண்டில்(2012) அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் மெஸ்சி முதலிடம் வகிக்கிறார். இவர், கடந்த ஆண்டு 91 கோல் அடித்தார். இதன்மூலம் ஜெர்மனியின் முன்னாள் வீரர் ஜெர்டு முல்லரின் சாதனையை முறியடித்தார். இவர், 1972ல் அதிகபட்சமாக 85 கோல் அடித்தார்.

பார்சிலோனா அணிக்காக அதிக கோல் அடித்த வீரர்

"லா லிகா', சாம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட கிளப் அணிகள் பங்கேற்கும் போட்டிகளில், பார்சிலோனா அணிக்காக அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் மெஸ்சி முன்னிலை வகிக்கிறார். இவர், 289 கோல் அடித்துள்ளார். இவரை அடுத்து, ஸ்பெயினின் சீசர் (232 கோல்), ஹங்கேரியின் குபாலா (194 கோல்) உள்ளனர்.

அறிமுகமான போட்டி

முதன் முதலில் 2003ல் சீனியர் பிரிவில் கிளப் போட்டிகளில் பங்கேற்ற மெஸ்சி, பார்சிலோனா "சி' மற்றும் "பி' அணிகளுக்காக (2003-05) மொத்தம் 32 போட்டியில் 11 கோல் அடித்தார்.

பார்சிலோனா அணிக்காக (2004-) 356 போட்டியில் 289 கோல் அடித்தார். சர்வதேச போட்டிகளில் அர்ஜென்டினா அணிக்காக 76 போட்டியில் 31 கோல் அடித்துள்ளார்.

அர்ஜென்டினா 20 மற்றும் 23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில், 13 கோல் அடித்துள்ளார்.

மொத்தம் அடித்த கோல்கள்

ஒட்டுமொத்தத்தில் இவர், 344 கோல் அடித்துள்ளார்.

இத்தனை சாதனை புரிந்த இந்த கால்பந்து வீரரை பாராட்டுவதில் மிக்க மகிழ்ச்சியே! வாங்க நீங்களும் உங்கள் வாழ்த்துக்களை இங்கே சொல்லுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : bbc.co.uk & dinamalar.com1 comments:

Easy (EZ) Editorial Calendar said...

உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top