ஜில்லுனு சில அழகு குறிப்புக்கள்!

நம் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும், சருமத்தை அழகூட்டவும் 2 தானிய வகைகளை எவ்வாறு உபயோகப்படுத்தலாம் எனப் பார்க்கலாம்.

1. கடலைப்பருப்பு

கடலைப்பருப்பும் இதிலிருந்து மாவாகும் கடலைமாவும் சமையலறையில் அதிகமாகப் பயன்படுத்தக்கூடியது. ஆபத்தபாந்தவன் மாதிரி அநேக சந்தர்ப்பங்களில் கை கொடுக்கக் கூடியது இந்த கடலை மாவு தான். இது உணவுப் பொருளாக மட்டுமல்லாது, சிறந்த அழகு சாதானமாகவும் கருதப்படுகிறது.

எளிய, செலவில்லாத முகத்திற்குப் போடக் கூடிய பேக், கடலை மாவுதான். இது தோலை இறுக்கச் செய்யும். இறந்த செல்களை அகற்றக்கூடியது. நல்ல நிறமாக வர வேண்டுமென்பவர்கள் கடலை மாவை உபயோகித்தால் சருமம் பளிச்சென்று இருக்கும்.

கடலை மாவு ஒரு சிலருக்கு அலர்ஜியாவதுண்டு. அவர்கள் கடலை மாவுடன், பன்னீர், தேன், பால் தயிர், இவைகளில் ஏதாவது ஒன்றை சிறிதளவு கலந்து முகத்தில் பேக்காகப் போடலாம்.

2. பச்சைப் பயறு

பொதுவாகவே எல்லோருடைய சருமத்திற்கும் பொருந்தக் கூடிய தானிய வகை பச்சைப் பயறு. இது பித்தத்தைப் போக்கக் கூடியது. புரதச் சத்து அதிகமாக இருக்கும். இதில் ஒட்டும் தன்மை (பசைத் தன்மை) அதிகம்.

நமது சருமம் புரதத்தால் ஆனது. உணவாகச் சாப்பிடும் போதும் புரதம் நமக்குத் தேவையான ஒன்று. அதே சமயம் புரதத்தை வெளிப் புறத்தில் கொடுக்கும் பொழுது, சருமம் மென்மையாக மாறுகிறது. முளை கட்டின பச்சைப் பயறில் ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கின்றன.

பயத்தம் மாவுடன் பால், தேன், பன்னீர் கலந்து சருமத்திற்குச் பூச உபயோகப்படுத்தலாம். அல்லது வெள்ளரிச்சாற்றை பயத்தம் மாவுடன் கலந்து பேக்காகப் பயன்படுத்தலாம்.

எண்ணெய் குளியல் எடுக்கும்பொழுது சிலருக்கு சிகைக்காய் தேயத்துக் குளிப்பது, அலர்ஜியாக இருக்கும். கண் எரிச்சலைக் கொடுக்கும். அவர்களும் சரி, சிறு குழந்தைகளுக்கு எண்ணெய் குளியலின் போது சரி பயத்தம் மாவு தேய்த்துக் குளிக்கலாம்.

உலர்ந்த சரும வகைக்கு பால் ஏடுடன் பயத்தம் மாவையும், எண்ணெய் சருமத்திற்கு பயத்தம் மாவுடன் ஆரஞ்சு சாற்றையும் கலந்து உபயோகப்படுத்தலாம்.

இதைத் தவிர வெள்ளரிச்சாறு, பன்னீர், இளநீர் இவைகளில் ஏதாவதொன்றைச் சேர்ப்பது சருமத்திற்கு எந்தவித தீங்கும் செய்யாது.

Thanks : senthilvayalமன்மதன் அம்பு - சினிமா விமர்சனம்

அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம் ஆகிய படங்களைத் தொடர்ந்து கமல்ஹாசன் – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவாகி வெளிவந்த புதிய படம் தான் (மன்)னார்-(மதன)கோபால்- (அம்பு)ஜாஸ்ரீ = மன்மதன்அம்பு.
படத்தோட கதை என்னானா ...

நடிகையான த்ரிஷாவை அவரது ரசிகரான மாதவன் காதலிக்கிறார். த்ரிஷா நடிக்கும் படமொன்றின் ஷூட்டிங்கை பார்க்கப்போன இடத்தில் படத்தில் த்ரிஷாவுடன் ஜோடியாக நடிக்கிறார் சூர்யா. இருவரும் ஒய்யாலே... பாட்டுக்கு ஆட்டம் போடுகிறார்கள்.

சூர்யாவுடன் த்ரிஷாவை சந்தேகம் கொள்ள ஆரம்பித்து... இருவருக்குமான வாய்த்தகராரில் கார் 'ஆக்ஸிடென்ட்' ஆகிறது. பிறகு, போலீஸுக்கு கப்பம் கட்டிவிட்டு தப்பிக்கிறார் மாதவன். மாதவன்-த்ரிஷாவுக்கிடையில் இடைவெளி விழுகிறது.

மூன்றாண்டுகளுக்கு பின் ஜெர்மனிக்கு தன் தோழி சங்கீதாவுடன் பிரமாண்ட கப்பலில் சுற்றுளா செல்கிறார் த்ரிஷா. அப்போதுதான் அசத்தலாக 'என்ட்ரி' கொடுக்கிறார் உலக நாயகன். மேஜரான கமல் தன் நண்பனின் (ரமேஷ் அரவிந்த்) ஆபரேஷனுக்காக, த்ரிஷாவை வேவு பார்க்கும் 'டிடக்டிவ்'வாக மாதவனால் நியமிக்கப்படுகிறார்.

ஒருகட்டத்தில் த்ரிஷாவிற்கு நல்ல பொண்ணு என்று மாதவனிடம் 'சர்ட்டிபிகேட்' கொடுக்கிறார் கமல். இந்நிலையில்… நீங்கதான் எதுவுமே கண்டுபிடிக்கலையே… அப்புறம் எப்படி உங்களுக்கு பணம் கொடுக்க முடியும் என மாதவன் மறுக்க… தன் நண்பனுக்காக மாதவனிடன் பணம் கறப்பதற்காக களத்திலிறருங்குகிறார் கமல். அப்போது வரும் தகிடுத்தத்தோம்.. பாடலில் தூள் கிளப்புகிறார் கமல். தியேட்டரில் விசில் சத்தம்

இந்தக் காதல் கடைசியில் என்ன ஆனது... கமலும் த்ரிஷாவும் என்ன ஆகிறார்கள் என்பது மீதிக் கதை.

எனக்கு பிடித்த சில நடிகர்கள்:

கமல் - அசத்தலான அறிமுகக் காட்சியில் ஆரம்பித்து, அவர் வரும் அத்தனைக் காட்சிகளிலும் பார்வையாளர்களை வசப்படுத்திவிடுகிறார். குறிப்பாக அந்த 'பிளாஷ்பேக்' காட்சியில் பிரமிக்க வைக்கிறார் கமல். தன் வயதிற்கேற்ற கேரக்டரை தேர்ந்தெடுப்பதற்கு கமலுக்கு பாராட்டுகள். எக்ஸ்-ஆர்மி மேனாக கனகச்சிதமாகப் பொருந்துகிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் - 'நீலவானம்...' பாடல் பாடல் முழுக்க வாயசைப்பு 'ஃபார்வர்டில்' இருக்க, காட்சிகள் 'ரிவர்ஸில்' வருவது மிகவும் அழகு. superb sir!

த்ரிஷாவுக்கு வெகு அழகாகப் பொருந்துகிறது இந்த வேடம். 'விண்ணைத் தாண்டி வருவாயா'வில் பார்த்ததை விட இன்னும் அழகான த்ரிஷா.
த்ரிஷாவிடன் சங்கீதா பேசிக்கொண்டிருக்கும்போது தன் பையன் தூங்குவதாக பாவ்லா காட்டுவதை அறிந்த சங்கீதா, "பசங்க தூங்கறாங்கலா, இல்லையாங்கிறது அம்மாவுக்கு மட்டும்தான் தெரியும், பசங்க தூங்கும்போது கால் கட்டவிரலை ஆட்டிக்கிட்டேதான் தூங்குவாங்க" என்று சொன்னவுடன், அந்த சுட்டிப்பயன் கால்விரலை ஆட்டுவது super!
ரமேஷ் அரவிந்த் - அடையாளமே தெரியாம வர்றார். ஆனா நல்லா நடிச்சிருக்கார். ஊர்வசி அவரோட மனைவியா வர்றாங்க.

மாதவன் சற்று வில்லத்தனம் கலந்த ரோல். சில காட்சிகளைத்தவிர படம் முழுக்க 'சரக்கு' பாட்டிலோடவே சுற்றுகிறார். இருந்தாலும் அந்த கேரக்டரை வெளுத்து வாங்குகிறார் மனுஷன். மாதவனோட முறைப்பொண்ணா - 'களவானி' ஓவியா

சங்கீதா - இரண்டு குழந்தைகளுக்கு தாய், ஆனால் விவாகரத்தான இளம் மனைவி... இந்த ரோலை இவரை விட தத்ரூபமாக வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள்.

தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை நல்லாருக்கு. பாட்டெல்லாம் படத்தோட திரைக்கதையோட ஒட்டியே வர்றதால எதுவும் தனியா பிரிச்சு பாக்க முடியாதபடி நல்லாருக்கு பாக்கறதுக்கு.

மனுஷ் நந்தனின் கேமரா, சொகுசுக் கப்பலான 'MSC Cruise' ஐ திரையில் அழகாகக் காட்டுகிறது.

மன்மதன் அம்பு - ரொமான்டிக் காமெடிபடம்
.


ஈசன் - பாடல் விமர்சனம்

'சுப்ரமணியபுரம்' வெற்றிக் கூட்டணி சசிகுமார், சமுத்திரக்கனி, ஜேம்ஸ் வசந்தன் மீண்டும் இணைந்திருக்கும் படம் 'ஈசன்’.

சுப்ரமணியபுரத்தில் மதுரை மண்ணின் மனத்தை பரவிட்ட இயக்குனர், இப்போது ஈசனில் நகரத்து வாசனையை உணரும்படி, அதற்கேற்றார் போல ஜேம்ஸ் இசையும் மிக அருமையாக வந்துள்ளது.

நா.முத்துக்குமார், யுகபாரதி, மோகன்ராஜன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளார்.

ஜெரார்ட் தாம்ப்சன், சுக்விந்தர் சிங், மால்குடி சுபா, பென்னி தயால், K.S.சித்ரா, பத்மநாபன், தஞ்சை செல்வி, சுனந்தன் ஆகியோர் குரல்களை ஜேம்ஸ் வசந்தன் சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

இலவசமாக பாடல் பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக.1. ஜில்லாவிட்டு ஜில்லாவந்த...

'மதுர குலுங்க' என்ற பாடலை போலவே இந்த பாடலும் ஒரு கிராமிய 'குத்து' பாடல். மோகன்ராஜன் எழுதிய பாடலை இந்த FOLK பாடலை கிராமத்து இசை கருவிகளுடன் தஞ்சை செல்வி பாடி பட்டையை கிளப்பியிருக்கிறார். ரொம்ப வித்தியாசமான குரல் வளம். கிராமத்து திருவிழாக்களில் நிச்சயம் இந்த படம் இது.


2. கண்ணில் அன்பை சொல்வாளோ...

புல்லாங்குழலின் மென்மையான குரலும், பத்மநாபனின் 'கணீர்' குரலும் செவிகளுக்கு இனிமை சேர்க்கிறது. நா.முத்துகுமாரின் சிறப்பு வார்த்தைகளும் பாடலுக்கு பலம் சேர்க்கின்றன. இப்பாடலை முதன்முதலில் கேட்க்கும் போதே பிடித்து போகிறது.


3. மெய்யான இன்பம்...

ஒரு நகரத்தின் பிஸியான இரவு நேர வாழ்க்கையை வரிகள் பிரதிபலிக்கின்றன. ஜேம்ஸ் வசந்தன் இசையை குறைத்து, வரிகளை பதித்திருக்கிறார். வாழ்த்துக்கள். நா.முத்துக்குமாரின் உணர்ச்சிப்பூர்வமான வரிகளை, சுனந்தன் மென்மையாக பாடலாக்கியுள்ளார்.

4. சுகவாசி சுகவாசி...

பெண்கள் பாடியிருக்கும் பெண்மைக்கான பாடல். அனுபவம் வாய்ந்த மால்குடி சுபாவும், அருமையான குரலை கொண்ட KS சித்ராவும் யுகபாரதியின் வரிகளை, வசந்தனின் இசையோடு சரியாக கலந்து பாடியிருக்கிறார்கள்.

கிட்டார் இசை வசீகரிக்கிறது. இசையமைப்பாளரையும், பாடகர்களையும் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். இப்பாடல் 'ஹிட்' வரிசையில் இடம்பெறும்.

5. Get Ready...

ஓர் வெஸ்டர்ன் பாடல். ஜெரார்ட் தாம்ப்சன் மற்றும் பென்னி தயால் குரல்கள் வெஸ்டர்ன் பாடலுக்கு ஏற்றவாறு கிடார் இசையோடு விரவி வருகிறது. பாடலின் இசையை முணுமுணுத்தாலும், வரிகளை முணுமுணுப்பது கடினமே.

கதையின் தேவையினை உணர்ந்தும் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருக்கிறார்.


இலவசமாக பாடல் பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

ஈசன் - பாடலை கேட்டு மகிழலாம்.
ரத்த சரித்திரம் - சினிமா விமர்சனம்

பழி தீர்த்தல் மனிதனின் உன்னத உணர்வு - இந்த ரத்த சரித்திரம் படத்தின் தாரக மந்திரம்.

ஆந்திர மாநிலத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கொண்டு எடுக்க பட்ட படம் இது. ஹிந்தி, ஆந்திர மாநிலத்தில் இரண்டு பாகமாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் ஒரே பாகமாக வெளியானது. முதல் பாகத்தில் நடத்த காட்சிகளை முதல் அரை மணி நேரத்தில் காட்டிவிடுகிறார்கள்.

இளகிய மனம் + குழந்தைகள் + ரத்தம் பார்த்தா அலர்ஜி போன்றவர்கள் இந்த படத்தை பார்க்காமல் தவிர்ப்பது மிக நன்று.
படத்தோட கதை என்னானா ...
அனந்தபுரத்து பிரதாப்ரவி (விவேக்ஓபராய்)யின் அப்பா ஒரு அரசியல்வாதி. அவரின் கட்சி தலைவர் கிட்டி தனக்கு எதிராக ஜாதி ஓட்டுக்களை சேர்க்கின்றார் என்ற காரணத்தினால் ரவியின் அப்பாவை பக்கத்தில் இருக்கும் நண்பர்களை வைத்தே கொலை செய்து விடுகின்றார்கள்.

தன் அப்பாவை கொலை செய்தவர்களை பழி வாங்கும் விதமாக எதிரிகளை கொல்கின்றான். அனந்தபுரத்தில் தேர்தலில் நின்று மந்திரி ஆகின்றான். ஒரு action team அமைத்து தனக்கு எதிரான அத்தனை பேரையும் கொல்ல சொல்கின்றான். இதில் பல அப்பாவிகளும் அடக்கம்.

அவனை எதிர்க்க யாருமே இல்லை என்ற நிலையில், அவன் மீது சூர்யா, ஒரு கொவை முயற்சி நடக்கின்றான். அவன் ஏன் பிரதாப்ரவியை கொலை செய்யதுடிக்கின்றான். அதன் பின்னணி என்ன? ரவியை கொன்றானா ? என்பது தான் கதை.
எனக்கு பிடித்த சில நடிகர்கள்:
1. ராதிகா ஆப்தே
என்ன அழகுடா !!!. எல்லோரையும் ரசிக்க வைக்கும் அழகு அப்படி ஒரு அழகி.!! அவளை மிக அழகாக காட்டியிருக்கிறான். ராம் கோபால் வர்மா ரொம்ப ரசனைக்காரர். வாழ்க! விவேக் ஓபராய் மனைவியாக வருகிறாள்.

ஒரு காட்சியில் விவேக் ஓபராய் அவளை கட்டிப்பிடிப்பது போன்று வரும்... என்னை என்னை சுற்றி ஒரே புகை. (ஏன்னு உங்களுக்கு தெரியாதா என்ன ?!)

வன்முறையை காட்டிலும் அன்பு பெரியது என்று சொல்வதும், சூர்யாவை என்ன வேண்டும் என்றாலும் செய்யுங்க அவன் பொண்டாடியை ஒன்னும் செய்யாதீங்க என்பதும், அரசியம் வாதியின் மனைவி எப்படி மற்றவர்களை பற்றி நினைகிறார்கள், அவர்களின் மன போராட்டம் பற்றி மிக அழகாக சொல்லியிருகிறார் ராம்.

2. ராம்கோபால் வர்மா
முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக எடுக்க முடிவு செய்து விட்டார். படம் முழுக்க சண்டை + ரத்தம் தான். பெரும்பான்மையான தவறுகள் சந்தர்ப்பவசத்தால் நடக்கின்றன என்பதை காட்சிகளால் ஒரு உண்மை சம்பவம் கொண்டு சொல்ல வருகிறார் இயக்குனர். படத்துல வசனங்கள் சும்மா.. நறுக்.. நறுக்!
நான் ரசித்த 7 வசனங்கள் :

1. ரத்தம் சிந்த ஆரம்பிச்சாச்சு, அது நிக்காது.அது தான் ரத்தத்தோட குணம்.

2. நான் சாவைக்கண்டு பயப்படலை, அவனை சாவடிக்காமலேயே செத்துடுவேனோன்னு பயப்படறேன்.

3. உனக்கு பயமா இல்லையா?
இல்லை. சந்தோஷமா வாழறப்பதான் பயம் வரும். இப்போ என் கிட்டே மிச்சம் மீதி இருக்கறது பழி வாங்கனும்கற வெறி மட்டும்தான்.

4. என்னைக் கொல்ல சூர்யாவுக்கு 1000 காரணம் இருக்கலாம். ஆனா எந்தக்காரணத்தை முன்னிட்டும் நான் அவனை கொல்ல மாட்டேன். (தியேடரில் செம கை தட்டு )

5. இப்படியே நீ கனவு கண்டுட்டே இரு, என்னை உன்னால கொல்ல முடியாது.
அப்படியா? முடிஞ்சா நீ தூங்கு பார்ப்போம்!

6. வாழ்க்கைல யாராலயும், எதையும் நிச்சயமா சொல்ல முடியாது.

7. நெனச்சத சாதிச்சிட்டே. வாழ்த்துகள்! ஆனா பிரதாப்பும் உன்ன மாதிரிதான் பழிவாங்குறதுல ஆரம்பிச்சான். அப்புறம் அரசியலுக்கு போனான். நீயும் இன்னொரு பிரதாப்பா ஆகிடுவென்னு நெனக்கறேன்.
3. விவேக் ஓபராய்
பிரதாப் ரவி என்ற கதாபாத்திரமாக வாழ்த்திருகிறார். ஒரு இடத்தில் கூட விவேக் ஓப்ராய் தெரியவே இல்லை. நம் மனதில் பிரம்மாண்டமாய் நிற்கிறார்

வெளியே நடக்கும் அரசியல் போராட்டம், அவர் மனதிற்குள் நடக்கும் போராட்டத்தையும் நம் கண்முன்னே கொண்டுவருவது அவரது நடிப்புக்கு ஒரு சான்று.

பலவிதமான நடிப்பில் நம்மை கவர்கிறார். முதல் பாதியில் ஒரு வெறிகொண்ட மனிதனாக இரண்டாம் பாதியில் ஒரு அரசியல் தலைவனாக, தன் மனசாட்சிக்கு பயப்படும் மனிதனாக, ஒரு ரௌடியாக, நல்ல கணவனாக, வாழ்க்கையில் ஒரு நல்லவன் காலத்தின் கோலத்தில், எப்படி கெட்டவனாக மாறுகிறான் என்பதை பல வித உணர்வுகளை வெளிகொண்டுவண்டு அவரது பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.

4. சூர்யா
நந்தா பட பாதிப்பு தெரிகிறது. கட்டுமஸ்தான உடலுடன், சண்டைக்காட்சிகளில் பிரமாதப்படுத்துகிறார். கோபப்படும் போது, வில்லனிடம் தோற்கும் போதும், அவனை வெற்றி கொண்ட பின் ஜெயித்துவிடேன் என்று நினைக்கும் போது அவரது முகத்தில் உணர்வுகளை கண்ணிமை, கன்னம், தாடை - எல்லாம் சும்மா துடிக்கிறது + நடிப்பில் மிரட்டியுள்ளார்.

கோர்ட் வளாகத்திலேயே சூர்யா வில்லனின் ஆளை போட்டுத்தள்ளும் இடம் செம திரில்லிங்க்.

5. போலீஸ் அதிகாரி
மிக ஸ்டைலா அடிகடி சிகரட் பிடிப்பதும் + சூர்யாவை கைது செய்ய போகும் இடத்தில் நடக்கும் சம்பவம் என பல இடங்களில் தன் முத்திரையை பதிக்கிறார்.
6. ஒளிபதிவாளர் அமோல் ராத்தோர்
காமிரா இப்படத்திற்கு பெரிய பலம். பல விதமான கேமரா கோணங்கள் + பல குளோசப் ஷாட்டுகளும் என மனுஷன் புகுந்து விளையாடியிருகார். தலைகீழ் காட்சிகள் + 360 டிகிரியில் சுற்றும் காட்சி - சில இடங்களை கடுப்பை கிளப்பின.

7. பிரியாமணி சாரியில் சூர்யாவின் மனைவியாக வந்து போகின்றார். சொல்லிகொள்ளும்படி நடிக்க இதில் ஒன்றும் இல்லை.

இன்னும் பல நச்சத்திர பட்டாளமே நடித்து இருக்கு இந்த படத்துல. இசை - படு மோசம். பின்னணியில் சும்மா கத்திகிட்டே இருக்கும்.

ரத்த சரித்திரம் - பார்க்கலாம் - ரத்தமும் கொலைகளும் பிடிக்குமானால்....மன்மதன் அம்பு - பாடல் அறிமுகம்

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் கமலஹாசன் + திரிசா நடிப்பில் K.S.ரவிகுமார் இயக்கத்தில் வெளிவர இருக்கும் புதிய படம் மன்மதன் அம்பு. பாடல்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமா + இளமையோடு இருக்கு. முதல் முறை கேட்டும் போதே அனைத்து பாடல்களும் பிடித்துவிடுவது கூடுதல் சிறப்பு.

கமலின் சேஷ்டைகளை காண ஆவலுடன் கார்திருக்கிறேன். கூட திரிஷா குட்டி வேற இருக்கும் போது கமலுக்கு சொல்லவா வேண்டும்!....

இலவசமாக பாடல் பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

1. ஒய்யால...

இரு இளம் காதலர்கள் தங்களின் காதலை கொஞ்சம் காமம் கலந்து பாடும் ஒரு பாடல். காதல் வரிகளை விவேகா எழுத மகேஷ், சுசித்ரா & கார்த்திக்குமார் பாடியிருக்கும் அந்த பாடல். இதில் எனக்கு பிடித்த வரிகள்
சூடப் பூவத்தருவே
சூட ஆச தருவ
பாரு மொகப் பருவ
இத்தனைக்கும் காரணம் - நீதானே!

2. கண்ணோடு கண்ணை ...

கமலின் தன்னிகரில்லாத கவிதை வரிகள். கமலும் திரிசாவும் பாடியிருக்கும் அந்த கவிதை வரிகளில் இலக்கியம் + காதல் + குறும்பு + கிண்டல் + பகுத்தறிவு + சமய சாடல் என்று ஒரு கதம்மாய் குலைத்து தந்துள்ளார்.

ஆளவந்தாளின் எழுதிய 'கடவும் பாதி மிருகம் பாதி' போல இதுவும் தனித்துவம் மிக்கதாக இருக்கு. மெல்லிய இசை கோர்வை + இருவரும் பேசியபடியே கவிதையை வாசிப்பது என்று கேட்க கேட்க ரசிக்கும்படி இருக்கு. இதில் எனக்கு பிடித்த வரிகள்
பொடி நாடிய போட்டே இடை மெலியவேனக்
கடற்கரை தோறும் காலையும் மாலையும்
தொந்தி கணபதிகள் திருவது கண்டேன்
முற்றும் துறந்த மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்.

3. நீல வானம் நீயும் நானும் ...

அழகான மெலடி. கமல் எழுதி பாட பின்னணியில் பிரியா ஹிமேஷ் ராகமாய் காற்றில் ஒலிகிறது.

தெளிவான வார்த்தை உச்சரிப்பு + மிருதங்கள் + ஜல் ஜல் என்று அந்த சப்தம் பாடலுக்கு மேலும் அழகு செய்கிறது. இந்த பாடம் மாதவனும் அமைந்தது போல இருக்கு. புதுமணத் தம்பதிகள் மனம் விட்டு பாடும் பாடல் போல இருக்கு. இதில் எனக்கு பிடித்த வரிகள்
நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு சான்றாவது
இன்னொரு உயிர்தானடி


4. போனா போவுதூன்னு விட்டீன்னா ...

முதலாளித்துவம் வேலைகேற்ற ஊதியம் பற்றி நண்பர்களும் கிடல் செய்து பேசி பாடும் ஒரு பாடல். அன்பே சிவம் படத்தில் பற்றி ஒரு பாடல் இருக்கும். அது போலவே இங்கேயும் ஒரு பாடல். எழுதியது பாடியது நம்ப கமல் தான். இதில் எனக்கு பிடித்த வரிகள்
காம தான பேத தண்டம்
நாலும் தோத்து போகும் போது
தகுடு தத்தோம் - செய்
தகுடு தத்தோம்

5. Who's The Hero ...

இரண்டு நாயகிகள் பாடும் பாடல் போல இருக்கு. ஒருவர் ஆங்கிலத்தில் மற்றொருவர் தமிழில் பாடும் படி இருக்கு. ஆண்ட்ரியாவின் குரலில் இன்னும் பெருகேருகிறது. பாடலை எழுதியவர் கமலஹாசன்.


6. மன்மதன் அம்பு...

அறிமுக பாடல் போல இருக்கு. அதற்கலம் பண்ணும் பாடல். பஞ்சாபி பாடல்களை வருவது போல டோலக்கு + ட்ரம்ஸ் பட்டை கிளப்பும் பாடல்

கமலஹாசன் எழுதிய வரிகளை DSP பாடியிருக்கிறார். இந்த பாடலை கேட்கும் போது சிங்கம் படத்துல வந்து "சிங்கம் சிங்கம் " என்ற பாடல் தான நினைவுக்கு வருது.

கவிதை வரிகளை சிதைக்காமல் நல்ல உச்சரிப்புடன் பாடியிருப்பது இந்த பாடல்கள் நீண்ட நாட்கள் உயிருடன் இருக்கும். மொத்தத்தில் மன்மதன் அம்பு பாடல்கள் - காதல் திருவிழா

இலவசமாக பாடல் பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக.வல்லக்கோட்டை - படவிமர்சனம்

மசாலா இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் அர்ஜுன் + ஹரிப்ரியா இணைத்து நடித்து வெளிவந்த திரைப்படம் வல்லக்கோட்டை.

நேற்று இரவு தானுங்க இந்த வல்லக்கோட்டை படத்த பார்த்தேன். 90-கலீல் வெளிவந்திருந்தால் இந்த படம் மிக பெரிய வெற்றியை கண்டிருக்கும். ஆனால் இப்போ தியாடரை விட்டு ....
கதை என்னனா ...

சிறையில் இருக்கும் முத்‌து(அர்ஜூன்), அங்கு சந்திக்கும் ஒரு கைதியின் (பிரேம்) தம்பிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பணம் புரட்டித்தர ஒப்புக் கொள்கிறார். அதன்படி அதிர்ஷ்டவசமாக சிறையில் இருந்து வெளியே வருகிறார்.

வல்‌லக்‌கோ‌ட்‌டை‌ ஜமீ‌ன்‌ ஈஸ்‌வர பா‌ண்‌டி‌யனை‌(சுரே‌ஷ்), போ‌ட்‌டு தள்‌ளி‌ தனக்‌கு தொ‌ழி‌ல்‌ போ‌ட்‌டி‌க்‌கு ஆள்‌ இருக்‌க கூடா‌து என்‌று நி‌னை‌க்‌கி‌றா‌ர்‌ நா‌ச்‌சி‌யா‌ர்(ஆசி‌ஷ்‌ வி‌த்‌யா‌ர்‌த்‌தி‌).

பணத்திற்காக அர்ஜுன் செய்யாத கொலையை, செய்ததாக ஒப்புக்கொண்டால் அதிகமான பணம் தறுவதாக ஆஷிஷ் வித்யார்த்தி கூற, இதனை ஒப்புக்கொள்ளும் அர்ஜுன் கொலை பழியை ஏற்பதற்காக வல்லக்கோட்டைக்கு செல்கிறார்.

வந்‌த இடத்‌தி‌ல அவரை‌யு‌ம்‌, ஜமீ‌னி‌ன்‌ கணக்‌குப்‌பி‌ள்‌ளை‌ மகள்‌ அஞ்‌சலி‌யை‌யு‌ம்‌ (ஹரி‌ப்‌பி‌ரி‌யா‌) இணை‌த்‌து கதை‌ கட்‌டி‌‌ வி‌டுகி‌ன்‌றனர்‌. அதே‌ போ‌ல அஞ்‌சலி‌யி‌ன்‌ தங்‌கை‌யை‌ கவரி‌ங்‌ நகை‌ அடகு வை‌க்‌க வந்‌தா‌ர்‌ என்‌று போ‌லீ‌சி‌ல்‌ மா‌ட்‌டி‌வி‌டுகி‌றா‌ர்‌ வில்லன் வி‌ன்‌செ‌ன்‌ட்‌ அசோ‌கன்‌.

இப்‌படி‌ அப்‌பா‌வி‌களை‌ அசி‌ங்‌கப்‌படுத்‌துவதை‌ பொ‌றுக்‌க முடி‌யா‌த முத்‌து, வாயுபுத்ரன் என்‌கி‌ற பெ‌யரி‌ல் எதிரிகளை தும்சம் செய்கிறார். வல்லக்கோட்டை மக்களிடையே வாயுபுத்ரன் பரபரப்பாக பேசப்பட ஊரே அவரை சூப்பர் மேனாக கருதப்படுகிறது.

யாருமே பார்க்காத வாயுபுத்ரனை பார்க்க அனைவருமே ஆவலோடு இருக்க, போலி வாயுபுத்ரனாக அந்த ஊருக்கு வருகிறார் அர்ஜுனின் சிறை நண்பரான பிரேம். வில்லன்களோடு சேர்ந்து சுரேஷை கொலை பிரேம் போடும் சதி திட்டங்களை முறியடித்து எப்படி நாயகியுடன் இணைகிறார் என்பதுதான் படத்தின் முடிவு.

நான் ரசித்த சின்ன சின்ன காட்சிகள் :
 • தளபதி தினேஷின் சண்டை பயிற்சியும் அனல் தெறிக்கிறது. நிறைய காட்சிகள் ரிஸ்க் எடுத்து செய்துள்ளார்.
 • தினா இசையில் எஸ்‌.பி‌.பி‌. – ஜா‌னகி‌ இணை‌ந்‌து பா‌டி‌ய 'செம்மொழியே' பாடல் இதமாய் இருக்கிறது.
 • ஆஞ்சநேயலுவின் ஒளிப்பதிவு அருமை. ஆற்றகரை அதன் சுற்றுபுறங்களை அள்ளிவந்து தந்திருக்கிறார்.
 • கஞ்சா கருப்புவின் காமெடி சில இடங்களில் சிரிக்கலாம்.
 • ஹரிபிரியா வழக்கமான மசாலா ஹுரோயினாகவே வலம் வருகிறார். சாரியில் அழகாக இருக்கிறார்.
 • 'Action King' என்ற பட்டபெயருக்கு ஏற்ப படத்தின் ஒரே ஆக்ஷன் தான். அதை குறையில்லாமல் அர்ஜூன் செய்திருக்கிறார்.
கடுப்பை கிளப்பின சில இடங்கள்
 • அர்ஜுன் போடும் கெட்டப்புகள் நாயகன், கிரிஸ், பைரட்ஸ் ஆப் தி கரிபியன் உட்பல நமக்கு அ‌டையாளம் தெரிவதும், வில்லன்களுக்கு தெரியாமல் போவது
 • படம் முழுக்க அர்ஜூனை 'வாயுபுத்ரன்' என்று கூறி நம்மையும் சேர்த்து முட்டாளாக்க பார்கிறார் இயக்குனர்.
 • அர்ஜூனுக்கு வயசாகி போனது பல காட்சிகளை பார்க்க முடியல.
 • வழக்கமான டம்மி வில்லன்கள் பட்டாளம். ஒரே இரைசல் தான்.
வல்லக்கோட்டை - சுமார்...immm முடித்தால் பாருங்க.மைனா - நான் ரசித்த சில விஷயங்கள்

அழகா‌ன கதை‌க்‌களம், இயல்‌பா‌ன & ஆழமா‌ன அழகா‌ன கதை‌, கதை‌க்‌குள்‌ நகை‌ச்‌சுவை‌ என மி‌க யதா‌ர்‌த்‌தமா‌ன ஒரு காதல் கதை‌யை‌ "மை‌னா" என்ற பெயரில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருகிறது. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்க்க சென்றேன்.

கதை என்னனா ...

ஆதரவு‌க்‌கு யா‌ரும்‌ இல்‌லா‌மல்‌ சி‌றுமி‌ மை‌னா‌வு‌ம்‌(அமலா) அவளது அம்‌மா‌வு‌ம்‌ கடன்‌கா‌ரனா‌ல்‌ வீ‌ட்‌டை‌ வி‌ட்‌டு வி‌ரட்‌டப்‌படுகி‌ன்‌றனர்‌. சி‌றுவன்‌ சுருளி (விதார்த்)‌ மை‌னா‌வை‌யு‌ம்‌ அவளது அம்‌மா‌வை‌யு‌ம்‌ தனது ஊருக்‌கு கூட்‌டி‌ச்‌செ‌ன்‌று தனக்‌கு தெ‌ரி‌ந்‌த பா‌ட்‌டி‌ வீ‌ட்‌டி‌ல்‌ தங்‌க வை‌க்‌கி‌றா‌ன்‌.

குழி பணியாரம் கடை‌ போ‌ட்‌டு பி‌ழை‌ப்‌பு‌ நடத்‌துகி‌றா‌ள்‌ மை‌னா‌வி‌ன்‌ தா‌யா‌ர்‌. மை‌னா‌வை‌ பள்‌ளி‌க்‌கூடத்‌தி‌ல்‌ வி‌டுவது, கூட்‌டி‌ வருவது என அவளுக்காக தன்னையே அற்பணிகிறான். இவனுக்கோ படி‌ப்‌பு‌ ஏறா‌ததா‌ல்‌ கி‌டை‌த்‌த வே‌லை‌யை‌ செ‌ய்‌கி‌றா‌ன்‌.
மை‌னா‌ 'வயசு'க்‌கு வருகி‌றா‌ள்‌. கூடவே‌ இருந்‌து தன்‌ கா‌சி‌ல்‌ எல்‌லா‌வற்‌றை‌யு‌ம்‌ செ‌ய்‌கி‌றா‌ன்‌ சுருளி‌. இருவருக்குள்ளும் காதல் மெல்ல மெல்ல வளர்ந்து ஒரு கட்டத்தில் மைனா அம்மாவுக்கு அது தெரிய வந்து அவள் வேறு ஒரு மாப்பிள்ளையை பார்க்க அதன் பின்னர் கதை ஓட்டம் எடுக்கிறது.

மைனாவின் அம்மாவை சுருளி அடித்து துவைக்க அவனை போலீஸ் கைது செய்து 15 நாள் ரிமாண்டில் வைக்கப்படும் சுருளி ஒரு நாள் முன்னதாகவே ஜெயிலில் இருந்து தப்பிக்கிறான். அவனை பிடிக்க சிறை துறை & துணை அதிகாரிகள் இருவர் கிளம்பி சென்று சுருளியை கைது செய்து கொண்டு வரும்போது வழியில் நடக்கும் கதை தான் மீதி.
நான் ரசித்த சின்ன சின்ன காட்சிகள் :
 • மைனா படி‌ப்‌பதற்‌கா‌க மி‌ன்‌மி‌னி‌ப்‌ பூ‌ச்‌சி‌களை‌ பா‌ட்‌டி‌லி‌ல்‌ அடை‌த்‌து கொ‌ண்‌டு வரும்‌ கா‌தலன்.

 • அந்‌தப்‌ மி‌ன்‌மி‌னி‌ப்‌ பூ‌ச்‌சி உடை‌ந்‌து மி‌ன்‌மி‌னி‌ப்‌பூ‌ச்‌சி‌கள்‌ பறக்‌கும் வெ‌ளி‌ச்‌சத்‌தி‌ல்‌ கா‌தலர்‌கள்‌ பி‌ணை‌ந்‌தி‌ருக்‌கும்‌ கா‌ட்‌சி. சுட சுட ‌மைனா தரும் அந்த முதல் முத்தம். அட அட.... என்னத்த சொல்ல ...

 • சைக்கிள் டைனமோ ஒளியில் மைனா தேர்வுக்கு படிக்கும் காட்சியில் தியேடரே அதற்கலம் தான்.

 • தொட்டாசிணுங்கி இலையை மைனா தன் கண்விழியால் தொடும் இடம் - கவிதை.

 • தம்‌பி‌ ரா‌மை‌யா‌ மனைவியிடம் இருத்து வரும் கால் அதற்கு அவர் கொடுக்கும் முகபாவனைகள் அற்புதம். "மாமா நீங்க எங்க இருந்கிறீங்க " என்ற ரின்க் டோன் அழகு.

 • செவ்வாளை ராஜூவின் காது திருகல் அதற்கு வாத்தியாராக வருபரின் நடிப்பும் செம!

 • மலையிலிருந்து பேருந்து தவறி விழும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது. பஸ் விபத்து - நம் மனதை ஏதோ செய்கிறது. அந்த காட்சியை என்னால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. அதுதான் அந்த டைரக்டர் கிடைத்த வெற்றி என நினைகிறேன்.
ரசித்த கதாபாத்திரங்கள் :-

'மைனா' கதாபாத்திரத்திற்கு அமலா கச்சிதமாக மிக பொருந்தியிருக்கிறார். கண்களாலே பட இடங்களில் பேசுகிறாள். ஒளிபதிவாளர் இவளை கண்களாலே காதலிதாரோ ? க்ளைமாக்ஸில் அவருக்கு நிகழும் கொடுமைகள் பார்பவரை அழவைக்கும்.

அழுக்கு லுங்கி, பட்டன் போடாத சட்டை என இயல்பான கிராமத்து மனிதனாக சுருளி பாத்திரத்தில் விதார்த் வாழ்த்திருகிறார்.

தம்‌பி‌ ரா‌மை‌யா குணச்‌சி‌த்‌தி‌ர நடி‌கரா‌க, நகை‌ச்‌சுவை‌ நடி‌கரா‌க தன் பங்கிற்கு பலம் செய்துள்ளார். இயல்பான நடிப்பு.

போலீஸ் கேரக்டர்களில் வரும் சேது - சோகம், கோபம், ஆற்றாமை, பாசம் என் பன்முக நடிப்பு. அனைத்தும் நிறைவு. அவரது மனைவியா நடித்திருக்கும் அந்த பெண் நிச்சயம் பல பேரின் சாபத்தினை வாங்கிகொண்டிருப்பார். அப்படி ஒரு தேர்ந்த நடிப்பு. இப்படி ஒரு மனைவி கிடைத்துவிட்டால் வாழ்க்கை அவளவு தான் டா சாமீ !

உயரமான மலைகள்,பயமுறுத்தும் குன்றுகள், செங்குத்தான பாறைகள், குறுகிய ஓடைகள், நீர்நிலைகள், பசுமையான பிரதேசங்கள் அவற்றை ஊடுருவி செல்லும் சாலைகள் என அனைத்தையும் சுகுமார் அழகுற படமாக்கியிருக்கிறார்.

இமானின் இசையில் "ஜிங்கி ஜிங்கி, கைய புடி & நீ‌யு‌ம்‌ நா‌னும்‌" பா‌டல்‌கள்‌ நம்‌மை‌யு‌ம்‌ மீ‌றி‌ முணுமுணுக்‌க வை‌க்‌கி‌ன்‌றன.

மேலே சொன்ன அனைத்து விசயங்களை ஒருகிரனைத்து யாருமே யோசிக்காத கோணத்தில் ஒரு காதல் காவியத்தை படைதிருக்கும் டைரக்டர் பிரபு சாலமன்வை பாராட்டவேண்டியவர்.

மைனா - வித்தியாசமான் ஒரு காதல் கதை.

தற்போது தமிழ் திரை யுலகிற்கு நல்லகாலம் போல... பல நல்ல படங்கள் தொடர்ந்து வெளிவருகிறது.எந்திரன் - விமர்சனம் அல்ல.

நம்ப சூப்பர் ஸ்டார்ட் எந்திரன் படம் முதல் நாள் ... முதல் ஷோ... பார்க்காம இருந்தா எப்படி....? சுட சுட படத்த பார்த்து இதை எழுதறேனுகோ.

ஒரு வழியா முட்டி மோதி டிக்கெட் வாங்கி படத்த பார்த்த பிறகு கிடைக்கும் திருப்தி இருக்கே... அட அட..... ரஜினி ரஜினி தான். வயசானாலும் அவருடைய ஸ்டைலே தனி தான். இன்னும் எத்தனை வரும் ஆனாலும் அவரை மிஞ்ச வேறு யாரும் இல்லை என்பது நிஜம்.


படத்தின் கதையை சொல்லிவிட்டால் சுவாரிசியம் இருக்காது. படத்த பார்த்துவிட்டு நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.

'பிரமாண்ட இயக்குனர்' சங்கர் - கனவு படத்தை எடுத்த திருப்தி + வெற்றிகரமாக ஓடவைத்து இருக்கிறார். திரைகதையை கையாண்ட விதம் மிக அருமை. ரஜினி என்ற நடிகரை தனது இயக்கத்தில் முற்றிலும் மறைத்து கதையின் நாயகனாக உலா விட்டிருப்பது சிறப்பு. நல்ல வேலை.... ரஜினிக்கு ஒபெனிங் சாங் வைக்காமல் புண்ணியம் செய்துகொண்டார். கடைசி 30 நிமிஷம் நன்மை கட்டிபோடுகிறார். படம் முழுவதும் கிராபிக்ஸ் மிரட்டல்.

'சூப்பர் ஸ்டார்' ரஜினி - இரட்டை வேடத்தில் மனுசர் சும்மா நடிப்பில் மிரட்டியிருக்கிறார். என்திரனாக அவரது நடிப்பும் இடைவேளை வரும்போது மானும் அவரது முகபாவனைகள்.... நடிப்பில் சும்மா சென்சுரி அடிக்கிறார். ரஜினியின் பஞ்ச் டயலாக், மிரட்டல் சண்டைகள் இல்லாமல் இருப்பது கொஞ்சம் ....
'இரட்டை ஆஸ்கார் நாயகன்' ஏ.ஆர்.ரகுமான் - சங்கரை போலவே படம் முழுவதும் இவரது இசை ஒரு ஹாலிவுட் படம் பார்த்த திருதியை தருவதை நம்பால் நிச்சயம் உணர முடியும். காதல் அணுக்கள் & கிளிமஞ்சாரோ பாடல்கள் முனு முணுக்க வைக்கிறது. மற்றவைகள்...சுமார் தான். இறுதியில் SBP சார் படம் ஒரு குறும் பாடல் அழகு. ரகுமானை தொடர்ந்து விரைவில் சங்கரும் ஹாலிவுட் சென்றுவிடுவார்.

'தயாரிப்பு' சன் பிச்சர் - சங்கரின் கனவை நினைவாகிய பெருமை இவர்களையே சாரும். இந்த படத்தை இவர்களை தவிர வேறு யாரும் எடுக்க முடியாது என்பதே நிஜம். சாதாரண படத்தையே நிச்சயம் அனைத்து ரசிகர்களையும் பார்க்க வைத்துவிடுவார்கள். என்திரனை சொல்லவா வேண்டும்? படமும் சூப்பர் ஹிட். சன் இனி துணித்து பல படங்களை எடுக்க வருவார்கள். நாள் படங்களை எடுத்தால் நன்று. வாழ்த்துக்கள்.

'முன்னால் உலக அழகி' ஐஸ்வர்யா ராய் - ஜீன்ஸில் பார்த்த ஐஸ் இதில் மிஸ்ஸிங்... முடித்த வரை கதையின் ஓட்டத்தில் வருகிறார். ரஜினிக்கு பல முத்தங்களை தந்து அவ்போது நம்மையும் சூடேற்றுகிறார். முகத்தில் வயதான தோற்றம் நன்கு தெரியுது.

சந்தானம், கருணாஸ், மறைந்த ஹனிபா - சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.

ரசுல்குட்டியும் இரண்டாம் பாதியில் மிக அதிகமாக வேலை செய்துள்ளார். சபாஸ்.


ரொம்ப ரசித்தது
 • கிளிமஞ்சாரோ பாடல்
 • ரோபோ ஒரு கைக்குழந்தையுடன் விளையாடும் இடமும்

 • ராகவ் வரும் காட்சியில் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். அந்த ரயில் சண்டை.... யம்மாடி.... சான்சே இல்ல.

 • ஹனிபாவுடன் போட்டிபோட்டு பேசும் இடம்.... ஹைலைட்.

 • எஜமான் படத்துல பட்டம் பூச்சி பிடிப்பது போல இங்கே கொசுவை தேடி போவதும் அதன் பிறகு நடப்பது ரசிக்க கூடியவைகள்.

 • காதல் காட்சியில் 'ஐஸை' முத்தம் திருப்பி தர கேட்டு மடக்கும் காட்சியில் ரஜினி - மாஸ் தான்.

முதல் பாதி - சிரிப்பு வெடி
இரண்டாம் பாதி - கிராபிக்ஸ் மிரட்டல்

எந்திரன் = கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

தற்போது தமிழ் திரை யுலகிற்கு நல்லகாலம் போல... பல நல்ல படங்கள் தொடர்ந்து வெளிவருகிறது.புரட்டாசி தேங்காய் பால் சாதம்

புரட்டாசி மாதம் வார வாரம் சனிக்கிழமைகளில் ஒரே பூஜையும் அன்னதானம் தொடர்ந்து 4 அல்லது 5 வாரம் நடக்கும். அதில் ஒரு வித்தியாசமான பிரசாதம் புரட்டாசி தேங்காய் பால் சாதம் தந்து உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் குசிபடுத்துங்கள்.

தே‌ங்காயை வறு‌த்து அதனுட‌ன் சாத‌த்தை கொ‌ட்டி ‌கிளறுவது எ‌ளிதானதுதா‌ன். ஆனா‌ல் தே‌ங்கா‌ய் பா‌‌லிலேயே சாத‌த்தை வேகவை‌த்து செ‌ய்யு‌ம் தே‌ங்கா‌ய் பா‌ல் சாத‌த்‌தி‌ன் சுவையை ஒரு முறை பா‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் ‌மீ‌ண்டு‌ம் ‌மீ‌ண்டு‌ம் கே‌ட்கு‌‌ம்.

இனி புரட்டாசி தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :-
சீராக சம்பா அரிசி - 2 கப்
தேங்காய் துருவல் - தேவைகேற்ப

பிரியாணி இலை - 1
பட்டை - 1
கிராம்பு -2

ஏலக்காய் - 2
முந்திரி - 10
திராட்சை - 10

நெய் - தேவைகேற்ப
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
செய்முறை:-
 1. அரிசிய கழுவி நிமிடம் ஊறவைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

 2. குக்கரில் கொஞ்சம் நெய்விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை, பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.

 3. இதனுடன் தேங்காய்ப்பால் கப் சேர்த்து கொதிக்க விடவும்.

 4. பிறகு அரிசி சேர்த்து தேவையான அளவு உப்பு, சர்க்கரை கலந்து குறைந்த தீயில் வேகவைத்து எடுக்கவும்.

 5. இதில் வதக்கிய தேங்காய் துருவல் தூவி பரிமாறவும். புரட்டாசி சனிக்கிழமை அன்று பிரசாதமாப் படிக்கலாம்.
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!சருமத்தை அழகாக்கும் உணவுகள்

செயற்கையாக தயாரிக்கப்பட்ட கிரீம்களைக் கொண்டுதான் சருமத்தை அழகாக்க வேண்டும் என்பது இல்லை. இயற்கையில் கிடைக்கும் உணவு வகைகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தாலே சருமத்தை அழகாக வைத்துக்கொள்ளலாம். எப்படி என்கிறீர்களா ?

அதற்கு சில டிப்ஸ் :

கீரைகளில் இல்லாத சத்துக்களே கிடையாது. உடலின் வெளி அழகுக்கும், உள் ஆரோக்கியத்துக்கு அது மிகவும் முக்கியமாகிறது. அதனால் எல்லா வகை கீரைகளையும் ஒரு பிடி பிடிக்கலாம்.

குறிப்பாக, வெந்தயக்கீரை, பசலைக்கீரை, முருங்கை கீரைகளில் அதிகமாக இரும்பு மற்றும் துத்தநாகச் சத்து இருக்கிறது.

இந்த கீரைகளுடன் விட்டமின் – சி சத்துள்ள உணவுகளை சேர்த்து சாப்பிடும்போது இன்னும் அதிகமான சத்துக்கள் கிடைக்கும்.

இதன் முலம் கண்களில் கருவளையம் ஏற்படுவதை தவிர்க்கலாம். முகத்தில் பருக்கள் வருவதும் குறையும். அதிகமாக வறண்ட சருமம் கொண்டவர்கள், உணவில் கொழுப்புச்சத்து நிறைந்த ஆலீவ் ஆயில், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், நெய் உணவுகளை உடல் நலனுக்கு ஏற்ற வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் தக்காளியில் 'ஆண்டி ஆக்ஸிடெண்ட்'களான வைட்டமின் – ஏ மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. உணவில் தக்காளியை அடிக்கடி சேர்த்து வந்தால் தோல் மினுமினுப்பாவதுடன், சருமம் கருப்பாவதையும் தடுக்கலாம்.

முதுமை தோற்றம் தவிர்க்க : -
சிலருக்கு இளமையிலேயே முதுமை தோற்றம் வந்து விடுகிறது. இதை தவிர்க்க விரும்புபவர்கள், ஒரு கைபிடியளவு 'ஸ்ட்ராபெர்ரி' பழங்களையோ அல்லது 3 நெல்லிக்காயையோ தொடர்ந்து சாப்பிடவும். இதன் முலம் இளமை அழகுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். இளமை அழகையும் தக்க வைத்துக்கொள்ளலாம்.
தோல் பளபளப்பாக :-
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி,
பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும்
இருக்கும்.
தோல் சுருக்கம் நீங்க :-
தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
தோல் சொர சொரப்பு நீங்க :-
சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் தேன் கலந்து வாரம் ஒரு முறை உடல்
முழுவதும் பூசினால் தோல் சொர சொரப்பு தானாகப் போகும்.
கூடுதல் செய்தி :

தாடி 'முடி' தான் வேகமாக வளரக்கூடிய முடியாகும். இந்த முடியை 'ஷேவிங்' செய்யாமல் விட்டு விட்டால் 30 அடி நீளம் வரை வளருமாம்.

தினமும் குளிக்கும்போதும், தலை சீவும்போதும் மனிதன் சராசரியாக 40 முடிகளை இழக்கிறான்.தோல் குறித்த அபூர்வ செய்திகள் - Must Read


மனித தோல் பற்றிய சில சுவையான 5 செய்திகள்...
 1. நமது உடலிலேயே மிகப்பெரிய உறுப்பு தோல் தான்.

 2. மனிதத் தோலின் ஒவொரு அங்குலத்திலும் 20 அடி நீள அளவில் ரத்த குழாய்கள் இருக்கும்.

 3. மனித தோலில் உள்ள நரம்புகளை ஒன்றாக சேர்த்தால் அவை சுமார் 45 மைல் தூரம் வரை இருக்குமாம். அதாவது 72 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாக இருக்குமாம்.

 4. நமது உடலில் உள்ள தோல் மொத்தம் 2 மீட்டர் அளவு கொண்டதாம்.

 5. மனிதனுடைய தோல் செல்கள் ஒவொரு மாதமும் பழைய செல்களை இழந்து புதிதாக
  உருவாகிறது. ஒருமணி நேரத்தில் மனிதன் தினமும் 6,00,000 நுண் தோல் பொருட்களை இழக்கிறான். இவ்வாறு இழக்கும் ஒருவர் வாழ் நாளில் 102 பவுண்ட் எடையை இழந்து விடுகிறான்.
தோல் வங்கி :-
பணம் சேமிக்க மட்டும்தான் வங்கி என்று நினைக்கிறீர்களா?. இல்லை, அறிவியல் யுகத்தில் மனித உறுப்புகளும் வங்கிப்படுத்தப்பட்டு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ரத்தவங்கி அனேக இடங்களில் இயங்குகிறது.

ஆனால் தோல் வங்கி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?... இது விலங்குகளின் தோல் விற்பனை செ‌ய்யு‌ம் சந்தை அல்ல. மனித தோல் சேமிப்பு வங்கி.

தோல் உடலை பாதுகாக்கும் கவசம் போன்றது. அதன் முக்கியத்துவம் உணர்ந்துதான் தோல் சேமித்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்தகைய வங்கி இந்தியாவில் மும்பையில் மட்டுமே இயங்குகிறது.

நெருப்புக் காயம் பட்டவர்களும், விபரீத விபத்துகளால் தோல் சேதம் அடைபவர்களும் இங்கிருந்து தோலை பெற்று பயன் அடையலாம்.
உறு‌ப்பு தான‌ம் த‌ற்போது இ‌ந்‌தியா‌வி‌ல் அ‌திக ‌வி‌ழி‌ப்புண‌ர்வை அடை‌ந்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், இனி வரும் காலங்களில் மனித உறுப்பு சேமிப்பு வங்கிகளும் பெருகி மனித சமுதாயத்தை கா‌க்க வ‌ழி வ‌கு‌க்கு‌ம் எ‌ன்று ந‌ம்பலா‌ம்.
Thanks : 1x.comசுவர்ணலதா - ஈடு இணையற்ற பாடகி

கேட்ட உடன் தெரிந்துகொள்ளக் கூடிய வித்யாசமான குரலுக்கு சொந்தக்காரர் சுவர்ணலதா. அவரை பற்றிய சில தகவல்கள்.

அறிமுகம் :
1973 -இல் கேரளா மாநிலம் பாலகோடில் பிறந்தவர். இவரது தந்தை கே.சி.செருக்குட்டி ஹார்மோனியம் வாசிப்பவர், பாடகர். தாய் கல்யாணியும் இசையில் நாட்டமுடையவர். சுவர்ணலதா சிறு வயதிலேயே ஆர்மோனியம், கீ போர்டு வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர்.

1982 ல் வெளிவந்த நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் இசைஞானி இளையராஜாவால் "சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா" என்ற பாரதியாரின் பாடலைப் பாடவைத்து அறிமுகபடுத்தப்பட்டவர்.

P.சுசிலா அம்மாவுக்கு அடுத்தபடி ஜீவனுள்ள குரல் ஸ்வர்ணலதா என்பது என் கருத்து. ரொம்ப அமைதியானவர்.


பாடிய மொழிகள் :

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உருது மற்றும் படகா மொழிகளில் பாடிய பெருமை இவரை சாரும். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், உச்சரிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது இவரிடம்.

இளையராஜா, ரஹ்மான், தேவா, சிற்பி, பரத்வாஜ், வித்யாசாகர் & ஹாரிஸ் ஜெயராஜ் என்று முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையமைப்பில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

முதல் ஹிட் பாடல் :

"கேப்டன் பிரபாகரன்" படத்தில் இவர் பாடிய "ஆட்டமா தேரோட்டமா" பாடல் தான் இவரை பிரபலபடுத்தியதென்றால் மிகையாகாது.விருதுகள் :

"சின்னத்தம்பி" படத்தின் "போவோமா ஊர்கோலத்திற்காக" தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை பெற்று தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் பல படங்களுக்கு பாடும் வாய்ப்பை பெற்றுவந்தார்.

"கருத்தம்மா" படத்தில் இடம்பெற்ற "போறாளே பொன்னுத்தாயி" பாடலுக்குகாக தேசிய விருது பெற்று தொடர்ந்து ரஹ்மானின் இசையில் பாடும் வாய்ப்பை பெற்றுவந்தார். ஆஸ்த்தான பாடகி என்று சொல்லுமளவிற்கு அவரின் இசையில் தொடர்ந்து பல படங்களில் பாடியிருக்கிறார்.பிடித்த பாடல்கள் :
இளையராஜாவின் இசையில் சத்ரியன் என்ற படத்தில் "மாலையில் யாரோ மனதோடு பேச" என்ற பாடல் மூலம் தனது அருமையான குரல் வளத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பட்டித் தொட்டிகளிலெல்லாம் முழங்கியது தளபதி படத்தில் இவர் பாடிய 'அடி ராக்கம்மா கையத்தட்டு'. தேவர் மகனில் இடம்பெற்ற 'மணமகளே, மருமகளே' என்ற அருமையான பாடலுக்கு சொந்தமானவரும் சுவர்ணலதாவே என்பது குறிப்பிடத்தக்கது.

அலைபாயுதே படத்தில் பாடிய 'எவனோ ஒருவன்", பாம்பே திரைப்படத்தில் பாடிய குச்சி குச்சி ராக்கம்மா, ஜென்டில்மேன் படத்தில் பாடிய 'உசிலம் பட்டி பெண்குட்டி' காதலன் படத்தில் முகாபலா முகாபலா ஆகிய பாடல்கள் தமிழ் நாட்டில் அடிரடி ஹிட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஆதங்கம் :

ஆரம்பத்தில் பயன்படுத்திக் கொண்டதைப் போல் பின்னாட்களில் இளையராஜா & ரஹ்மான் இவரை முழுமையாக பயன்படுத்தவில்லை என்ற குறை என்னை போற்ற பலருக்கும் ஒரு ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது.

காற்றில் கலந்த பாடகி :

இன்று (12-SEP-2010) மரணம் தழுவிய செய்தியை கேட்ட போது மனம் நம்ப மறுத்தது. அவர் நம்மை விட்டு சென்றாலும் அவரது குரல் என்றும் காற்றில் வாசித்துக்கொண்டு தான் இருக்கிறது. இருக்கும்.

'பிரியாத வரம் வேண்டும்' படத்தில் 'விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணமிது...' அவர் பாடிய பாடலே நினைவுக்கு வருகிறது.

அவரது ஆத்மா இசை இறைவனடி சாந்தியடையட்டும்.ஆயிரம் விளக்கு - விமர்சனம்

மதுரையை பின்னணியாக கொண்டு சத்யராஜ், சாந்தனு, சனா கான், சுமன், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்து இயக்குனர் ஹோசிமின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் 'ஆயிரம் விளக்கு'.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இனி...

தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக Download


1. கே.பீ.சுந்தராம்பாள் பாடிய ஒரு பக்தி பாடலின் வழிகளில் தொடங்கி பிறகு ஒரு குத்து பாடலா மாணிக் விநாயகம் குரலில் இந்த பாடல் மலர்கிறது.
நான் மதுர மதுர
நீ மதுர மதுர
நான் நீ மதுரையில கண்ணுமுழிட்சோம்
மதுரையின் சிறப்புகளை அங்கங்கே தூவிவிட்டு பாடலுக்கு மெருகேற்றி மதுரையை சிறப்பித்திருக்கிறார் கவினர்.

மதுர மதுர என்று என்தனை மதுர இந்த பாடலில் வருகிறது என்று ஒரு போட்டி வைத்து பரிசளிக்கலாம்.

2. மதுரை மண்ணின் மனம் வீசும் வரிகளுடன் கிராமத்தின் சிறப்பை பற்றியும் பறைசாற்றும் வரிகளுடன் ஒரு பாடல். கேட்டவுடனே எனக்கு பிடித்துப்போன பாடல்.
பாப்பாவுக்கு ஒரு ஜிஹார்தண்டா கொடுப்பா
பாப்பாவுக்கு அதை எச்சம் வச்சு கொடுப்பா
இவள் தளுக்கு கொஞ்சம் மினுக்கு
என்று தொடங்கும் ஒரு கேலியும் கிண்டலும் நிறைந்த பாடல். கார்த்திக்கும் ரீட்டாவும் இணைந்து பாடியிருக்கும் பாடல்.


3.யேசுதாஸ் குரலில் ஒரு பாடல்.
உத்தம புத்திரனே
உயிர் தந்த சித்திரனே
தேன்மதுர பாடியனே
எனத்தொடங்கும் ஒரு சிறு சோகப்பாடல். தந்தையும் தனயனும் பிரிந்து சென்ற நேரத்தில் பாடும் பாடல் போல இருக்கு.

4. அடுத்து ஒரு காதல் மெலடி பாடல். ஹரிஷ் ராகவேந்திரா + சின்மயி குரல்களில் இதமாக ஒளிகிறது.
ரதியே என் ரதியே என் அகிலம் நீயடி
சகியே என் சகியே உன் சகலம் நானடி
வரிகளை சிதைக்காத இசை கோர்வை. கேட்ட கேட்ட சுகமா இருக்கு. ஒரு வித புது குரலில் சின்மயி பாடியிருப்பது அழகு.

5. கார்த்திக் குரலில் தன்னம்பிக்கை + சுய முயற்சி பற்றி சொல்லும் ஒரு அதிரடி பாடல்.
ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி ஆளுடா
அசந்துபுட்ட கொட்டப்போற தேளுடா
என்று அதிரடியாய் தொடங்கும் ஒரு பாடல்.

சண்டைக்கு துணிந்துவிட்டால் - எனக்கு
சாப்பாடே அடிதடிதான்

என்று கவினர் தன் வீரத்தையும் மண்ணின் வாசத்தையும் கலந்து கொடுத்துள்ளார்.6. மீண்டும் ஒரு யேசுதாஸ் பாடிய மெலடி பாடல்.
என்ன தவம் செய்தேன் என்னைபெத்த மகனே
கல்லுக்குள்ளே ஈரம் காண செய்த மகனே
சந்தோஷ நிமிடங்களில் ஒரு தந்தை தன் மகனின் பெருமை பற்றி குடும்பத்தில் ஆடி பாடி பாடும் ஒரு பாடல்.

என்விரல் நடுவே இடைவெளி எதற்கு
உன்விரல் கோர்த்து உறவாடத்தான்
வலிகளெல்லாம் மறந்து விளையாடதான்

சத்தியராஜ் பாடும் பாடல் போல இருக்கு. சற்றேண்டு கேட்டல் இது எஸ்.எ.ராஜ்குமார் பாடல் போல தோண்டும்.

7. காதல் ஏக்கப் பாடல்
போறாளே நெஞ்ச கிள்ளிக்கிட்டு கிள்ளிக்கிட்டு போறாளே
வாராளே நெஞ்ச அள்ளிக்கிட்டு அள்ளிக்கிட்டு வாராளே
எனத்தொடங்கும் ஒரு காதல் பாடல். கார்த்திக் குரலில் அழகால் ஒலிகிறது.

உன்னைப்போல என்னக்கொல்
அரளி விதை தேவையில்லை

என்று கவினர் காதலின் தவிப்பை மிக அழகாக கவி வரைந்திருக்கிறார்.


ஆயிரம் விளக்கு - பிரகாசமாய் ஒலிகிறது! நீங்களும் கேட்டு மகிழுங்கள்!!

சக்கரகட்டிக்கு இந்த ஆயிரம் விளக்குல ஒரு விளக்காவது ஒளி ஏத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!சென்னை நகர்வலம் - ஒரு ஜாலி டூர்

பிஞ்சுகளின் மனதில் - இன்றே
நஞ்சை வளர்க்கும் - என்
இந்திய சினிமா !

அவன் வீட்டு உலை
கொதிக்கவில்லை -
மாறாக
அவன் வீட்டு - அவள்
உயிர் கொதிக்கின்றது....
அரசை மட்டும்
வாழவைக்கும்
மதுக்கடை வாழ்க.

மறந்து போன
என் கிராமத்து
பள்ளி விளையாட்டு

ஜோராக தெரிந்தது
என் வீட்டு டிவி
சிம்னி விளக்கில் !

டிவி தந்தாச்சு
வீட்டில் கரண்டு இல்லை.
வாழ்க!
இலவசம்!
இவவசம்!!
இலவசம் !!!

உணவு
உடை
உறக்கம்
வேறென்ன வேண்டும் எனக்கு
ஏன்னா - நான்
தனிக்காட்டு ராஜா.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!சீரகத்தின் 15 மருத்துவ குணங்கள்

நாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். சீர் + அகம் = சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.

கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:-
 1. மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

 2. சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

 3. கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம்.

 4. ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

 5. சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.

 6. மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

 7. சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

 8. சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

 9. கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

 10. பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்செச்ரிச்சல் தீர சீரகம் + கொத்தமல்லி+ சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம்.

 11. வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம் + சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.

 12. சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

 13. சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.

 14. "ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு மருந்து"

 15. தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும்.
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!சமையல் குறிப்பு : இனிக்க இனிக்க அதிரசம்

காலம் காலமாக பண்டிகைகளில் (தீபாவளி போன்ற) செய்யப்படும் பலகாரங்களில் மிக முக்கியமானது இந்த அதிரசம். நீண்ட நாட்கள் வைத்திருந்து சாப்பிடக் கூடிய ஒரு பலகாரம் இது. விரைவில் கெட்டு போகாது.

சீனி, வெல்லம் இரண்டைக் கொண்டும் அதிரசம் செய்யலாம். வெல்லத்தைக் கொண்டு இனிக்க இனிக்க அதிரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 1 கிலோ
வெல்லம் - 750 கிராம்
ஏலக்காய்த்தூள் - 5 கிராம்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
நெய் - 20 மி.லி
செய்முறை:
 • பச்சரிசியை நன்றாக ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரை வடித்து விட்டு நிழலில் உலர்த்தவும்.

 • உலர்த்திய அரிசியை அரைத்து மாவை சலித்து வைக்கவும்.

 • ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, சிறிது நீர் கலந்து அடுப்பில் வைத்துப் பாகு போல் காய்ச்சவும்.

 • வெல்லப்பாகு கம்பிப் பாகு போல் வரும் போது மாவைச் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.

 • கையில் நெய் தடவி மாவைத் தொட்டால் மாவில் கையில் ஒட்டாமலிருந்தால் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

 • மாவின் மீது நெய் தடவி ஆறியபின்பு மூடி வைத்து விடவும்.

 • இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கனமாகத் தட்டவும்.

 • ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தட்டிய அதிரசங்களைப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சில குறிப்புகள் :-
 1. கிளறிய மாவு கெட்டியாக இருக்கனும், தண்ணியாக இருந்தால் மீண்டும் அரிசியை ஊறவைத்து அரைத்து போடவும்.

 2. அதிரசத்திற்க்கு ஈரமாவு தான் பயன்படுத்த வேண்டும்.

 3. மாவை கிளறி உடனே சுடுவதை விட 2 நாள் கழித்து சுட்டால் நன்றாக இருக்கும்.

 4. அதிரசத்தை எண்ணெயிலிருந்து பொரித்ததும் ஒரு கிண்ணத்தை வைத்து அழுத்தி எடுத்தால் எண்ணெய் வந்து விடும். ஆறியதும் மெத் மெத்தென்று இருக்கும்.
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!பச்சை என்கிற காத்து - விமர்சனம்

புதுமுக இயக்குனர் கீரா இயக்கத்தில் சாபி எழுதிய பாடல்களை அரிபாபு இசை அமைத்து வெளிவர இருக்கும் புதிய படம் பச்சை என்கிற காத்து.

கதை என்னானா ..

ஒரு மரணத்தின் வாசலில் துவங்குகிறது பச்சையின் வாழ்க்கை . மரண வீட்டில் குழுமியிருக்கும் மனித்ர்களின் முகங்களில் வருத்தமோ, துயரமோ ஏதும் இல்லை. வாழ்க்கையை ஆரம்பிக்கிற 27ம் வயதில் பச்சை இறந்திருக்கிறான் என்கிற சிறு ஆதங்கம் கூட அவர்களிடம் இல்லை. மரண வீட்டில் சந்தோஷ நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. கட்டிய மனைவியே மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

அப்படியென்ன கொடுமையானவனா பச்சை? அவனது முகம் தான் என்ன.? அவன் யார்..? யாருக்கும் பிடிபடாத ஒருவனின் அசாத்திய வாழ்க்கையை அவன் எரிகிற சிதையை பார்த்தபடியே அவன் உடன் சுற்றிய மனிதர்கள் விளக்குவதே "அ" திரை வழங்கும் "பச்சை என்கிற காத்து " படத்தி்ன் கரு, கதை, களம் எல்லாம்.
ஊரு திரண்டுருச்சு ஒத்துமையா ஆயிடுச்சு
நாடு திரண்டுருச்சு கட்டா கட்டழகி - அங்கே
வேல்முருகன், ரோஷினி, இந்துமதி மூவரும் இணைந்து பாடியிருக்கும் ஒரு ஆட்டம் போட வைக்கும் கும்மக்குத்து பாடல். மெல்ல ஆரமித்து பின்னர் செம ஸ்பீடில் முடியும் பாடல் இது.

கருவாபயலே ....
மீசை இல்லை சூரப்புலி மாட்டிகிச்சு மாட்டிகிச்சு
ஆசைகளை நெஞ்சுக்குள்ளே பூட்டிகிச்சு பூட்டிகிச்சு
இந்த ஆல்பத்தில் எனக்கு பிடித்த முதல் பாடல். மகேஷ், மதுமிதா, அரவிந்த் பாடியிருக்கும் இந்த பாடலில் அருமையான இசை கோர்வையை நீங்கள் ரசிக்கலாம். அழகான போக் சாங் + குத்து பாடல்.

நான் உன்னைப்பார்தேன்
நீ என்னைப் பார்த்தே
எனக்கு பிடித்த அடுத்த பாடல். மகேஷ், பானுமதி, ஹரிபாபு இணைந்து பாடிய இந்த பாடலின் மெட்டமைப்பு வேறு எங்கேயோ கேட்டது போல இருக்கு. ஆனா சட்டுன்னு ஞாபகம் வரல. உங்களுக்கு வந்தா சொல்லுங்கள்.

தீயே தீயே என்னை தீண்டிவிட்டு போனாய்
வலியே வலியே என்னை கொன்றுவிட்டு போனாய்

என்ற மதுமிதா பாடிய இந்த பாடலை காதலில் விழுந்து அடிபட்ட கதாநாயகி பாடுவது போல இருக்கு. அருமையான சோக மெலடி பாடல்.

சிரிக்கிறாளே சிரிக்கிறாளே - என்னை
கிறுக்கனாக்கி சிரிக்கிறாளே
என்ற காதல் தோல்வி பாடலை நிகில், மதுமிதா இருவரும் பாடியிருகிறார்கள். காதல் தோல்வி ஆனவர்களுக்கு கிடைத்த வரபிரசாதம் இந்த பாடல்.

நான் வளர்த்த பச்சை ... ஆ
இன்னிக்கு பாசமாறு ......
எனத் தொடங்கும் பறவை சிலம்பாயி பாடும் ஒப்பாரி பாடலை இனி எங்கும் நாம் கேட்கலாம். (மரணம் நிகழ்ந்த இடங்களில் இந்த பாடல் இனிமேல் நிச்சயம் இடம்பெறும்).

பச்சை என்கிற காத்து - ரசிக்கலாம்.

தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக Download Songs

இயக்குநர் கீரா பேசுகையில் 'இந்தப் படம் இயக்குநரின் படம் அல்ல. இதன் வெற்றி, படத்திற்காக உழைத்த கடைசி மனிதனுக்கும் போய்ச் சேரும். வலி இருக்கிற படம் வெற்றி பெறவில்லையென்றால் நான் சினிமாவை விட்டே போய்விடுவேன்' என்றார்.

இவளவு நம்பிக்கையுடன் சொல்லும் இந்த இயக்குனரின் படைப்பை ஆவலுடன் எதிர்பார்த்து .....

Thanks : cinema.dinamalar
என்ன இந்த தகவல் பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!நந்தி - படப்பாடல் விமர்சனம்


சில படப்பாடல்கள் முதல் முறை கேட்டும்போதே பிடிக்கும். ஒரு சில கேட்க கேட்க பிடிக்கும். ஒரு சில எத்தனை முறை கேட்டாலும் பிடிக்காது.

முத்துவிஜயன் பாடல் வரிகளில் பரத்வாஜ் இசையில் தமிழ்வாணன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் புதியபடம் "நந்தி".

நந்தி படப் பாடல்கள் முதல் ரகத்தை சார்ந்தவை. முதல் முறை கேட்டவுடனே பிடித்து போனது.


1. காதல் வயப்படும் போது பாடப்படும் பாடல் போல இருக்கு. எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது.
இது தான் காதல் என்பதா
இதயம் மாறிச் செல்வதா
சுகமான மெலடி. அதனை பிரசன்னா குரலில் குரலில் கேட்கும் போது ரொம்பவே இதமா, இனிமையா இருக்கு.

இதே பாடலை ஹரிஹரன் குரலிலும் கேட்டும் போது இன்னமும் சுவையாக இருக்கு.

பாடல் வரிகளை தெளிவாக கேட்குபடியான இசை கோர்வை. புல்லாங்குழலும் மிருதங்கமும் இசை ஜாலம் நடத்தியுள்ளன இந்த பாடலில்.

2. அடுத்து ஒரு குத்து பாடல்.
சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்
பிடித்திருந்த ஆசை பேய்
லொங்கு லொங்குன்னு ஓடிச்சாம்
சின்னபொண்ணு & ராஜாமணி இணைந்து பாடி பிரட்டியிருக்கும் ஆட்டம்போட வைக்கும் ஒரு நாட்டுப்புற குத்துப் பாடல்.

3. அடுத்து கொஞ்சம் இரட்டை அர்த்தம் பொதிந்த ஒரு டூயட் பாடல்.
தண்ணிக்குள்ள தீப் படித்தது என்னவோ
இந்த தாமரைக்கு வேறு குளம் வெட்டவோ
கார்த்திக் & ஜனனி இணைந்து பாடியிருக்கும் பாடல். உருமியை சப்தம் கொஞ்சம் இதமாதான் இருக்கு.

சில இடங்களில் போக்கிரியில் கேட்ட "டோலு டோலுதான் " பாடலை நினைவு படுத்தும் இசை. பாடலை கேட்டும் போது கொஞ்சம் கிக் ஏறத்தான் செய்கிறது.

4. ஒரு தெய்வீக ராகத்தில் ஆரமித்து ஒரு குத்து பாடலாக பட்டையை கிளப்பும் பாடல்.
வேத கோசம் முழங்கவே
தேவ தேவர் மகிழவே
எனத் தொடங்கும் கர்நாடி பாடல் மெல்ல சூடு பிடித்து தெம்மாக்கு பாடலாக உரு மாறுகிறது.
இந்த பாடலை பாடியிருப்பவர்கள் : ஆனந்து, கார்த்திகேயன் , முகேஷ் , பரத்வாஜ் , கற்பகம் & சுர்முகி

5. மீண்டும் ஒரு சுகமான காதல் டூயட் பாடல். எனக்கு ரொம்ப பிடித்த அடுத்த பாடல்.
மயங்கினேன் மயங்கினேன்- உன்
மடியில் விழுந்து நொறுங்கினேன்
முகேஷ் & பிரியதர்ஷினி இருவரும் ரசித்து பாடியிருக்கும் பாடல்.

பிரியதர்ஷினி குரல் சில இடங்களில் சித்ரா அம்மாவின் குரலோடு ஒன்றுகிறது. கேட்ட கேட்ட மிகவும் பிடிக்கும் ரகம்.

ஆனந்தம் படத்தில் வந்த 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்' பாடலை நினைவு படுத்துகிறது,


நந்தி - படப்பாடல்கள் அனைத்தும் முதல் முறையில் கேட்ட போது எனக்கு ரொம்பவே பிடித்துபோகிறது. உங்களுக்கும் பிடிக்கும். மறக்காமல் கேட்டு பாருங்கள்.

தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக Download Songs

Thanks : 365 for Picture.

என்ன இந்த தகவல் பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!ஏழாம் அறிவு - 01 அப்படியா!?

ரொம்ப சந்தோகம். நன்றி மக்கா!!!

இந்த கோழி பிறந்து ஒரு வருஷம் முடிந்தது. போதும்னு நினைத்து என்னை சூப்பு வைத்துவிடாதீர்கள்! ஆதரவு தாருங்கள். இன்னும் சிறப்பாக நல்ல விசயங்களை எழுத்து முற்படுகிறேன்.

என் எழுத்தையும் ரசிக்கும் நண்பர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். நல்லதை படியுங்கள். ஆதரவு தாருங்கள். உங்கள் ஆசியுடன் இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்.

இன்று ஏழு டைம் பாஸ் செய்திகள் பற்றி பார்ப்போம்.

1. படம் சொல்லும் பாடம்

வாத்தியார் ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு கேள்வி ஒன்றை கேட்டா அதற்கு உரிய பதிலை தெரியாத மாணவன் இப்படி சாமர்த்தியமா பதில் எழுத அதற்கு அந்த வாத்தியாரும் சாமர்த்தியமா எப்படி மார்க் போட்டதை நீங்களும் நன்கு போட்டோவை பெரிது படுத்தி பாருங்கள்.


2. தீப்புண் விரைவில் குணமாக...

தீப்பட்ட இடத்தில் பீட்ருட் சாற்றைத் தடவ தீப்புண் கொப்பளமாகாமல் விரைவில் ஆறும்.

தேங்காய் எண்ணையுடன் பீட்ருட் சாரை கலந்து தடவி வர விரைவில் தீப்புண் குணமாகும்.

3. சர்க்கரை நோயைக் குணப்படுத்த...

தினமும் காலையில் வெருவயிருடன் தண்ணீரை குடித்துவந்தால் சர்க்கரை நோயைக் எளிதில் கட்டுப்படுத்தலாம்.

4. முதல் நாணயம்

தற்போதுள்ள துருக்கி நாட்டை 600-610 ஆம் ஆண்டு ஆண்டுவந்த Alyattes என்ற அரசனால் முதல் முறையாக நாணயம் முறை உருவாக்கப்படாது. 13x10x4 மி.மீ உருவம் & 4.71 கிராம் எடை கொண்டது. தங்கம் + வெள்ளியால் வேலைபாடு செய்யப்பட்டது இந்த நாணயம்.

5. முகம் அழகாக...

தண்ணீர் அதிகமாக குடித்தால் முகப்பருக்கள் நீங்கி, முகம் பளப்பளப்பாக தொளிக்கும்.


6.இன்றைய கண்டுபிடிப்பு

உலகின் முதல் நிலத்திலும் நீரிலும் நீந்தும் கார் (sQuba, world's first swimming CAR).
7. காதல் தத்துவம்

காதல் என்பது கார் மாதிரி
சிலருக்கு கிஃப்டா கிடைக்கும்
சிலருக்கு லிஃப்டா கிடைக்கும்!


என்ன இந்த தகவல் பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய விலை குறைவான பழம் 'ஏழைகளின் ஆப்பிள்' Mr.பப்பாளி. பப்பாளியின் அறிவியல் பெயர் - Carica papaya. இதன் பூர்வீகம் மெக்சிக்கோ.

பப்பாளி மரம் பூக்க ஐந்து ஆண்டுகளாகும். இதிலே ஆண்மரம், பெண்மரம் என உள்ளது. ஆண்மரம் பூத்தும் பலன் ஏதும் இல்லை. பெண் மரம் பூத்தால் தான் அது காயாகி கனியாகும். பப்பாளி மரத்தின் இலை, காய், பழம், பால் எல்லாமே மருத்துவ பயன்கள் உடையது.

இதன் பயன்கள் மிக மிக அதிகம். மிக மலிவான விலையில் கிடைக்கும் மிக சத்துவாய்ந்த இந்த கனியானது தன் தகுதிக்கேற்ற இடஒதுக்கீட்டைப் பெறவில்லை என்பது தான் சோகம்.

பப்பாளி பல மருத்துவ குணங்களைக் கொண்டது. அவற்றில் ஒரு சில ...


பப்பாளிபழத்தில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் நேரடியாக கலப்பதில்லை. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கூட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
மருத்துவர்களுக்கு சவாலான வியாதிகளில் புற்றுநோயும் ஒன்று. இதற்கு சாதாரண பப்பாளி இலைச் சாற்றில் எதிர்ப்பு மருந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.
பொதுவாக குழந்தைகளுக்கும் இந்த பப்பாளிப்பழத்தைக் கொடுத்தால், உடல் வளர்ச்சிக்கு உதவுவதுடன் பல், எலும்பு என்பன வலுவடையவும் உதவும். குழந்தை பெற்ற பெண்கள் பப்பாளி சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்குமாம்.

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது.

பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.
பப்பாளி பழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு.

பப்பாளி பழத்தை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும்.
பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும்.

பப்பாளியின் இலைகளும் வேர்களும் சிறுநீர் பெருக்கியாகவும், பழமானது மூலநோய்க்கும் பயன்படுத்தப்படுகிறது.
நரம்புகள் பலப் படவும், பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
நரம்புகள் பலப் படவும் பித்தத்தைப் போக்கி இதயத்திற்கு வலுசேர்க்கிறது.

தேள் கொட்டினால் அவ்விடத்தில் இதன் விதையை அரைத்துப் பூசினால் விஷம் முறிந்துவிடும்.
பப்பாளி இலையை கசக்கிச் சாறுபிழிந்து அதை தினமும் படர் தாமரையின் மேல் தடவி சிறிது நேரம் வைத்திருந்து கழுவி வர படர்தாமரை குணமாகும்.
பப்பாளியை தினமும் சேர்த்துக் கொண்டால் நோயின்றி வாழ உதவும்.

என்ன இந்த தகவல் பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!பதிவர் வண்ணத்துபூச்சியார் + தமிழ் + மருத்துவக் குறிப்பு

ஜெயா டிவியில் பதிவர் வண்ணத்துபூச்சியார் பேட்டி

நண்ப பதிவர் வண்ணத்துபூச்சியார் @ சூர்யா சுரேஷ், ஜெயா டிவியில் இன்று காலை மலர் நிகழ்ச்சியில் வந்து சும்மா ஒரு கலக்கு கலக்கினார்.

பேட்டியின் பொது கையைக்கட்டிக்கொண்டு ஒரு பள்ளி மாணவனைப் போல மிகவும் பவ்வியமாக பேட்டிக்கொடுத்தார். நான் மிகவும் ரசித்து பார்த்தேன். உலக சினிமாவை பற்றி அவரது கருத்துக்களை மிகவும் தெளிவாக அதே சமயம் நம் நாட்டு திரை துறையினர் பற்றுயும் விட்டு கொடுக்காமல் பேசியது நன்றாக இருந்தது.

அதிக நேரம் ஈரானிய திரைப்படங்கள் பற்றியும் அதில் உள்ள மிக சிறந்த தொழில்நுட்பப கலைனர்கள் பற்றியும் தனது பார்வையில் மிக அழகாக சொன்ன விதம் அருமை. 120 அவார்ட்s பெற்ற 'மெக்கல்' திரை குடும்பத்தை பற்றி சொன்ன போது வியந்து போன்றேன்.

அவரது உலக பார்வை மிகவும் வித்தியாசமான அதே சமயம் தினமும் ஒரு திரைப் படம் பார்ப்பேன் என்று சொன்ன போது மலைத்து நின்றேன். தினமும் ஒரு படமா ? எவ்வாறு இது சத்தியம்? புரியவில்லை. (சூர்யா சார் நீங்களே இதருக்கு விளக்கம் தாரும்!)

உலக சினிமாவை பற்றி ஒரு புத்தகம் எழுதி வருவதாகவும், வரும் புத்தக விழாவில் அதனை வெளியிட இருப்பதாக சொன்னார்.

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

எங்கும் தமிழ்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நிவாக நடவடிக்கை அனைத்தும் தமிழ் மொழியிலேயே மேற்கொள்ளவேண்டும். ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் தமிழிலேயே மையோப்பம் இட வேண்டும் என்று துணைவேந்தர் திரு. தங்கராசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த மாதம் நடந்த இந்தப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் நடைபுரைகள் அனைத்தும் தமிழிலேயே நடைபெற்றன என்பது குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.

வாழ்க தமிழ்!

மருத்துவக் குறிப்பு - அல்சர்

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சு பொருள்களும் அறிப்பதனால் குடல் புண் என்கின்ற அல்சர் வருகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவந்தால் இந்த பாதிப்பில் இருந்து மீளலாம்.

நலமுடன் வாழ் வாழ்த்துக்கள்!

சிந்தனை

மகரிஷி ரமணர் அருளிய ஒரு சிந்தனை
"மனிதன், எல்லாவற்றையும் தானே செய்வதாக எண்ணிக்கொள்கிறான். நம்மை மீறிய ஒரு சக்தியால் நாம் இயக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து கொண்டால் எல்லாப் தொல்லைகளில் இருந்தும் விடுபட்டுவிடுவோம்"

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!சுடச்சுட நான்கு தகவல்கள்

சுட சுட இன்றைய செய்திகள் நான்கு.

1. இந்திய நாணயம் இப்போது புதிய வடிவில் வெளிவர இருக்கிறது. அதன் மாதிரி வடிவம் இதோ.


2. மனோதத்துவ புத்தம் ஒன்றில் "மனதை தொட்ட ஆறு மூக்கியமான பாயிண்ட்" இதோ.
 1. தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கிலோமீட்டர் ஓடுங்கள்.

 2. பதினைந்து நிமிடம் சிரசாசனம் செய்யுங்கள்.

 3. பகலில் இரண்டுமணி நேரம் தூங்குங்கள்

 4. தினசரி பேபரை ஒரு வரி விடாமல் படியுங்கள்.

 5. தினமும் நண்பர்களுடன், காலையில் மூன்று மணி நேரமும் , மாலையும் மூன்று மணி நிறமும் மனம் விட்டு பேசுங்கள்

 6. ஒரு நாள் விட்டு ஒரு நாள், சினிமாவுக்கு போங்கள்.

இந்தனையும் செய்ய உங்களுக்கு நேரமிருந்தால், நீங்கள் வேலை வேட்டியில்லாதவர், உபயோகமான வேலை ஒன்றை தேடிக் கொள்ளுங்கள்.

3. இன்றைய தத்துவம் - வில்லியம் மார்டின்
மனோவலிமை இல்லாதவர்கள் சந்தர்ப்பங்களுக்காக கார்திருக்கின்றனர்.

4. ஒரு நகைச்சுவை - இன்றைய அரசியல்வாதிகளுக்கு இது பொருந்துமோ ....?!
எதிர்க்கட்சிக்காரங்க சொல்றதைவிட ரெண்டு மடங்கா சொல்லன்னும்கிரத்துக்காக தலைவர் இப்படியா உளர்றது ?

அப்படி என்ன சொன்னாரு ?

எதிர்க்கட்சிக்காரங்க 2011-ல் ஆட்சியைப் பிடிப்போம்னு சொன்னதுக்கு, நாங்க ஆட்சியைப் 4022-ல் பிடிப்போம்னு தலைவர் பதிலடி கொடுத்திருக்காரே!?
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!Related Posts with Thumbnails
 
back to top