உழைக்கும் மக்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

மே 1 உழைப்பாளர் தினம்.

நாளைக்கு உழைப்பாளர் தினம். உழைக்கும் மக்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.


பிறர் கையை ஏந்தாமல் நித்தம் உழைத்து உண்ணும் அனைத்து கைகளையும் குலுக்கி உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

உழைப்பாளர் தினத்தன்றும் உழைத்தால் தான் உணவு கிடைக்கும் என்ற இழிநிலை மாற வேண்டும். மாறும் என்ற நம்பிக்கையில் 101-ஆவது பதிவில் அடிஎடுத்து வைக்கிறேன்.



சுடச்சுட சுறா - திரை விமர்சனம்

.
நானும் 'சதம்' அடித்துவிட்டேன்.....!!!!

நானும் எழுத வந்து ஒன்பது மாதம் இன்றோடு முடிவடைகிறது. காலம் கடந்து செல்வது உணர முடியவில்லை. இதுவரை 99 பதிவுகள் எழுதிவிட்டேன். எனக்கே ரொம்ப ஆச்சரியம் + அதிர்ச்சி. என்னாளும் தொடந்து எழுத முடிகிறது என்று!

என்னோட பதிவையும் ரசித்து படித்து + கருத்து சொல்லி + வோட் போட்டு நல்ல பதிவை அங்கிகரித்த உங்களுக்கு என் சிரம் தாழ்த்த நன்றிகள். ஏதேனும் குறை இருப்பின் மன்னிக்க.

இதோ என்னோட 100வது பதிவு. உங்கள் ஊக்கமும் கருத்துகளும் வரவேற்கிறேன். மீண்டும் என் நன்றிகள்.

நட்புடன்
கோழிபையன்.



விஜயின் 50வது படம் சுறா. தமன்னாவுடன் விஜய் நடிக்கும் முதல் படம். சன் பிச்சர் வாங்கி வெளியிடும் விஜயின் 2-வது படம். ஏற்கனேவே சுறா பாடல்களை நிமிசத்திற்கு ரெண்டு தடவை ஒலிபரப்பு செய்து வெற்றி பெற வைத்த சன் நெட்வொர்க் வாழ்க. இன்று சுறா படம் பார்த்தேன். அதன் விமர்சனம் சுடச்சுட இதோ....


படத்தோட கதை என்னனா ...

மீனவ குப்பத்தை காலிசெய்து அதில் தீம் பார்க் ஒன்றை கட்ட நினைக்கும் 'ரவுடி' மந்திரி குப்பத்தை தீவைத்து கொளுத்த அதில் ஹீரோவை சிக்கவைத்து இறந்துவிட்டதாக நம்பவைத்து குப்பத்து மக்களை வேறிடம் சென்று தங்க ஏற்பாடு செய்யும் வேளையில் தீயிலிருந்து ஹீரோ வெளிவருகிறார்.

அதன் பிறகு வில்லனுடன் நேரடியாக நேரிடியாக ஹீரோ மொத ... வில்லன் செய்யும் சின்ன சின்ன சித்துவேலைகளை ஹீரோ எப்படி அதிரடியாய் முறியடித்து வெற்றிகொல்கிறார் என்பது தான் சுராவின் கதை.



படத்துல என்னை பதம் பார்த்தவைகளில் சில...

  • ஒளிபதிவு மிக அருமை. மனுசர் ரொம்ப மேனகேட்டிருக்கிறார்.

  • சண்டை காட்சிகள் அருமை. சபாஸ் கனல் கண்ணன். நீங்கள் தான் படத்தின் ஹீரோ.

  • ஹீரோ அறிமுகம் இதுவரை எந்த படத்திலும் வராத மாதிரி அமைத்திருகிறார்கள். எப்படி..?

    கடலுக்கு மீன் பிடிக்க சென்ற படகுகள் ஐந்து நாளாகியும் கரை திரும்பவில்லை. குப்பத்து மக்களும் போலீஸும் அதிகாரிகளும் ஒரே டெண்சினா இருக்க தூரத்தில் படகில் மீனவர்கள் வர மொத்த குப்பமும் சந்தோசத்தில். ஆனால், ஒருவன் மட்டும் வரவில்லை. அவன் தான் ஹீரோ 'சுறா'. அதிகாரிகள் செய்வதறியாமல் திகைக்க தூரத்தில் நடுகடலில் இருந்து டைவ் அடித்து ஹீரோ வெளிவந்து அறிமுகம் செய்கிறார்.

  • முதல் பாதியில் ஏழை குப்பத்து மீனவானா வரும் ஹீரோ இரண்டாம் பாதியில் வில்லனின் கடத்தல் சரக்கை ஹீரோ விற்று காரில் வந்து வில்லனுடன் மோதுகிறார். முதல் பாதியில் விறு விறுப்பு கொஞ்சம் குறைவு. இரண்டாம் பாதி ஓகே ரகம்.

  • பாடல்களில் ரசிகர்கள் வெளியே சென்ற வர இருந்தார்கள். பின்னணி இசை பரவாயில்லை. சில இடங்களில் ஒரே தலைவலி.

  • திரும்ப திரும்ப ஒரே மாதிரியான கதையை விஜயிடம் பார்த்து பார்த்து அலுத்து போச்சு. சன் பிச்சர் படம்னாவே இனி குவாலிட்டி இருக்காது என்பதற்கு இந்த சுறா படமும் ஒரு உதாரணம்.

  • பெருசா சொல்லிகிறமாதிரி திரைகதை இல்லை. இந்த உங்க லிஸ்டில் படம் படத்தோட பதினொன்னு அவளவு தான். சாரி டைரக்டர் சார். கதையை மட்டும் இனி நம்பி பெரிய திரைக்கு வாங்க. ஹீரோ + ஹீரோயினி நண்பி இனியும் தமிழ் சினிமா நகர ரெடியா இல்லை.

  • வழக்கமான விஜய், பாடல்களில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார். டான்சில் பட்டையை கிளப்புகிறார். மற்றபடி ஓவர் பில்ட் அப் தான். அரசியலுக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள ரெடியாகிவிட்டார். ஒரே செண்டிமெண்ட் டயலாக் பேசியே படுத்துகிறார். விஜய் புதுசா ஏதாவது செய்யுங்கள்.

  • தமன்னாவுக்கு இந்த படத்தில் ஒன்றுமே வேலை இல்லை. ஆனா இவள் தான் ஹீரோயினி. என்ன கொடுமை சார் இது. நாய் காணாத போனதால் தற்கொலை செய்ய கடலுக்கு வரும் பணக்கார பெண். ஹீரோ காப்பாத்துகிறார். காதலும் வந்துவிடுகிறது. பாடல்களில் குட்டை குட்டை டவுசரு போட்டு பாப்பா கொஞ்சம் ஆடியிருக்கு. வேறு சொல்லும் படி ஒண்ணுமில்லை.

  • வடிவேலு தான் முதல் பாதி ஹீரோ. சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். மற்ற இடங்களில் கடுப்பை கிளப்புகிறார். மனுசருக்கு உடம்பு போட்டு பார்க்கவே பயமா இருக்கார்.


சுறா - பார்க்க போறவங்க அதுக்கு இரை.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



'மல்லிகா...' பாட்டை நீங்கள் கேட்டீரா ?

நேற்று இரவு ஐவர் பட பாடலை கேட்ட நேரம் கிடைத்தது. முதல் முறை கேட்டும் போதே மனதில் பசக்கேற்று ஒட்டிக்கொண்டது. கவி பெரியதம்பி எழுதிய "மல்லிகா..." என்று ஒரு பாடலை திப்பு அவர்கள் மிக அழகாக பாடியிருக்கிறார். இப்படத்திற்கு இசை கவி பெரியதம்பி.

நீங்களும் கேட்டு மகிழுங்கள் கீழ் வரும் பாடல் வரிகளை படித்து ரசித்த படியே.

இந்த படத்தின் பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

இவள் தான் அந்த மல்லிகா ....?!



மல்லிகா ....
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா

தனிமையிலே தொட்டிருக்கேன்
அந்த மச்சம் பார்த்திருக்கேன் மல்லிகா - அங்கே
அழகு மிச்சம் பார்த்திருக்கேன் மல்லிகா

அந்த நினைப்பு மாறவில்லை மல்லிகா
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா


உன் பேரின் முதல் எழுத்தும்
என் பேரின் ஓர் எழுத்தும்
ரெண்டு பேர சேர்த்துவச்சு மல்லிகா - நெஞ்சில்
பட்சக் குத்தி பார்த்து வச்சேன் மல்லிகா

அந்த பேரு மாறில்லை மல்லிகா
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா

எனக்குள்ளே நீ என்று
உனக்குள்ளே நான் என்று
நீ தானே சொல்லி வச்சே மல்லிகா - நானும்
அதையெல்லாம் நம்பி வச்சேன் மல்லிகா

நான் இன்னும் மாறில்லை மல்லிகா
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா

மல்லிகா ... மல்லிகா... மல்லிகா... ஓ... ஓ... ஓ... மல்லிகா

ஊரு உறங்கும் நேரத்தில்
என்னோட செல் போனில்
மிஸ்டு கால் கொடுத்து வச்சே மல்லிகா - நானும்
பில்லு கட்டி சொத்தை அழித்தேன் மல்லிகா

செல் போன் மாறவில்லை மல்லிகா
நீ மட்டும் மாறிட்டே அடி மல்லிகா ...

இந்த படத்தின் பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

ஐவர் - படப்பாடல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



என்னமா யோசித்து படம் எடுக்கிறாங்க.!

கீழே வரும் சில விடியோவை பாருங்கள். என்ன ஒரு கிரியேட்டிவிட்டி! விசுவல்.. மிக அழகு. பார்த்து ரசித்து மகிழுங்கள்.

Frito Lay Dips

“And Then There Was Salsa” from Frito Lay Dips on Vimeo.




Pop Up

Lexus "Pop Up" from a52 on Vimeo.



Travelers

Travelers "Drifters" from a52 on Vimeo.




சமையல் குறிப்பு - ஆந்திரா கோசம்பரி

கோசம்பரி என்னும் பருப்பு மசியல் வகை உணவு தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகாவில் மிகவும் பிரசித்தம். இந்த கோசம்பரி ஆந்திரா மாநிலத்தில் சற்றே வித்தியாசமாக செய்வார்கள். கொஞ்சம் காரம் தூக்கலாக இந்த கோசம்பரி செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு சுவையுடன் இருக்கும். இந்த கோசம்பரி செய்வது எப்படி என்று இனி பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :
வெள்ளைக்கொண்டை கடலை - ஒரு கப்
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன்

தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்

கொத்தமல்லித் தலை - சிறிதளவு
கடுகு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ற அளவு

செய்முறை :
  • கொண்டைகடலையை நன்கு கவுவி முதல் நாள் இரவே ஊறவைக்கவேண்டும்.

  • தேங்காய் துருவலை மிக்ஸ்சியில் தண்ணீர் சேர்க்காமல் தூளாக்கவும்.

  • ஊறவைத்த கொண்டைகடலை + பச்சை மிளகாய் + இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.

  • பிறகு உப்பு + எழுமிட்சைபழசாறு + தேங்காய் துருவல் சேர்க்கவும்.

  • கொஞ்சம் எண்ணையில் கடுகு போட்டு தாளித்து அதில் அரைத்த கலவையை கொட்டி நிமிடம் கொதிக்க விடவும்.

  • காரம் அதிகமாக தேவைப்பட்டால் காய்ந்த மிளகாய் சேர்க்கலாம்.

  • அதன் பின்னர் கொத்தமல்லி தலையை சேர்த்து பரிமாறலாம்.

ஒரு வேண்டுகோள்...!
என்ன உடனே செய்துப்பார்க்க தயாராகிவிட்டீர்களா ...? சபாஸ்!

செய்து பார்த்து ருசித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்தை இங்கே தெரிவித்தால் அது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



சமுத்திரம் அம்பானியில் வைரமுத்துவின் வைரவரிகள்


நிஜ வாழ்க்கையில் நடிகர் கருணாஸ் ஒரு இசையமைப்பாளராகவேண்டும் என்ற கனவில் சினிமாவில் காலடி வைத்தார். ஆனால் காலம் அவரை இசைத் துறைக்கு பதில் நடிப்புத் துறைக்கு தள்ளியது. இருந்தாலும் தனது கனவை இப்போது நனவாக்கியுள்ளார் கருணாஸ். ஆம்! ராஜாதி ராஜா படத்தை தொடர்ந்து அம்பாசமுத்திரம் அம்பானி படத்திற்கும் இசை நடிகர் கருணாஸ் தான்.


இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். அதில் ஒரு பாடலை பற்றி தான் இங்கே நாம் பார்க்க இருக்கிறோம்.


ராகுல் நம்பியார் & கென் கருணாஸ் இணைந்து பாடியிருக்கும் ஒரு பாடல் "தண்ட தண்ட பாணி". இந்த பாடலை எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து. வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒரு இளைனனுக்கு எழுதிய பாடல். இதில் எனக்கு ரொம்ப பிடித்த வரிகள்...
மூளையுள்ள பிள்ளைக்கு
ஒரு மூலதனம் தேவையில்லை
பத்துவிறலே மூலதனம் அல்லவா

வேலை போல தெய்வம் இல்லை
வியர்வை போல தீர்த்தம் இல்லை
உன் தேகம் உனதானால்
அதுபோல நண்பன் இல்லை
உண்மை ஒரு கண்ணு
உழைப்பு ஒரு கண்ணு
ஓடியாடித் தேடு
உனக்கு தாண்டா விண்ணு

இந்த படத்தின் பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

Thanks : cinema news



இந்தியா கடன்கார நாடு ?!

இந்தியா கடன்கார நாடு என்று தயவுசெய்து இனி சொல்லவேண்டாம். கடன்கார நாட்டில் வெளிச்சத்திற்கு வரும் லஞ்சம் பற்றி ஒரு தகவல் தான் இது.

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.,)அங்கீகாரம் வழங்கி வருகிறது. மருத்துவக் கல்லூரியில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், மருத்துவமனை வசதிகள், அங்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை, பேராசிரியர்கள் எண்ணிக்கை ஆய்வு நடத்தப்பட்டு எம்.சி.ஐ., அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

எம்.சி.ஐ., தலைவராக இருப்பவர் கேதன் தேசாய். இவர், கடந்த சில ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்து வருகிறார். தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கேதன் தேசாயை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். லஞ்சம் வாங்கியதற்காக நாட்டின் மிக உயர்ந்த அமைப்பின் தலைவர் கைதாவது இதுவே முதல்முறை.

அந்த உத்தமனை தான் கீழே நீங்கள் பார்ப்பது. அவன் முகத்தை பாருங்களேன்.... இஞ்சி தின்ன குரங்கு மாதிரி. டேய் மவனே .... (sensored)


தனியார் கல்லூரிகளிடம், கேதன் தேசாய் தனக்கென சில எம்.பி.பி.எஸ்.(MBBS), இடங்களை கேட்டுப் பெற்றுள்ளார். அந்த இடங்களை ஆண்டு தோறும் விலை பேசி விற்று அதன் மூலமாகவும் பல கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார்.

கேதன் தேசாய் வீடுகளில் இருந்து, ரூ.1801 கோடி ரொக்கம் (Cash) மற்றும் 1500 கிலோ(1.5 டன்) தங்க நகைளை (Gold) சி.பி.ஐ., அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு தனி மனிதன் லஞ்சம் வாங்கியே இத்தனை ஆயிரம் கோடிகள் வைத்திருப்பான் என்றால், நம் நாட்டு அரசியல்வாதிகளிடம் எத்தனை லட்சம் கோடிகள் கள்ள பணம் இருக்கும்?!.

கையாலாகாத இந்திய அரசியல்வாதிகள் + சட்ட அமைப்பு + அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றால் அவர்கள் இஸ்டத்துக்கு லஞ்சம் வாங்கி குவிப்பது. மாட்டிக்கொண்டால் ஒரு சில வாரத்தில் விடுதலை ஆவது.

இது போன்ற லஞ்ச பேய்களை நடுரோட்டில் நிற்கவைத்து சுட்டுத்தள்ளனும். சட்டங்கள் மிக மிக கடுமையாக்கப் படவேண்டும். அப்போது தான் வேறு எந்த ஒருவனும் இது போல செய்ய யோசிக்கணும். இது போல அரசியல் அமைப்பை கொண்டுவர இந்திய அரசியல்வாதிகள் தயாரா?.



ரெட்டச்சுழி - திரை விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்க்க நினைத்துக்கொண்டிருந்த எனக்கு ரெட்டைச்சுழி படம் ரிலீஸ் என்றதும் பார்க்க முதல் நாளே தூண்டியது. இமயமும் சிகரமும் இணைந்து நடிக்கும் படம் ஆயிற்றே + டைரக்டர் சங்கர் தயாரிப்பு என்ற பெரும் எதிர்பார்ப்புடன் சென்றேன். பிறகுதான் தெரிந்தது கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டோமோ என்று.

நாற்பது வருட பகையுடன் ஊரையே கலக்கும் இரண்டு தாத்தாக்கள்: சிங்காரவேலன்(பாரதிராஜா) & ராமசாமி (பாலச்சந்தர்) பற்றிய கதையில் ஒரு காதலை கொண்டு படம் சொல்லவந்திருக்கிறார் இயக்குனர் தாமிரா.


படத்தோட கதை என்னனா ...

இந்த தாத்தாக்களின் பகை வளர்ந்து.... இவர்களின் மகன், பேரன், கொள்ளுபேரன் என கடைக்குட்டி வாரிசுகள் வரை தொடர்கிறது.

முன்னதாக ஒரு பிளாஷ்பேக்கில்... பாரதிராஜா, அனாதையாக்கப்பட்ட ஒரு பெண் (அஞ்சலி), ஒரு ஆண்(புதுமுகம்) குழந்தையை வளர்க்கிறார். வளரும் அந்த குழந்தைகளிடையே 'குழந்தை'காதல் மலருகிறது. அதை பாரதிராஜா கண்டிக்கிறார். அந்த பையன் அங்கிருந்து பாலச்சந்தர் வீடு வருகிறான்.

இவள் வளர்ந்து, அதோ ஊரில் இருக்கும் பள்ளிக்கு ஆரிரியை ஆகிறாள். அவன் வளர்ந்து, மிலிடரியில் சேர்ந்து, ட்ரைனிங் எடுக்க அந்த ஊருக்கு வருகிறான். அஞ்சலியுடன் அவன் காதலை சொல்ல முயல்கிறான். முடியவில்லை. இதை தெரிந்த இரண்டு வீட்டு குட்டி பசங்கள், ஒன்று சேர்ந்து காதலர்களை சேர்த்து வைக்க முயற்சிக்கிறார்கள்.

காதலர்கள் ஓன்று சேர்ந்தார்களா? பெரிசுகளிடையே இருந்த பகை என்னவாகிறது ? என்பதனை திரையில் கண்டு களிக்கவும்.


படத்துல என்னை கவர்த்தவைகள் பல...

  • அஞ்சலி டீச்சருடன் வரும் அந்த சின்னபையன் பாராதிராஜவுடன் சரிக்கு சமமாக தோழர் என்று அழைத்து நடித்து பேசியபடி நடக்கும் அந்த சின்னபையன் சும்மா பட்டை கிளப்புகிறான். என்னமா நடித்திருக்கு இந்த வயசிலே..!

  • படத்தின் பெரிய பலம் காமிரா தான். மிஸ்டர் செழியன்... யு ஆர் தி பெஸ்ட். கிராமம் + பச்சை வயல் + நதி + மழையில் நனைத்து.. அஞ்சலி பாடும் பாடல் + பொக்கை வாய் ஹீரோக்கள் + பஞ்சாயத்து ஆலமரம் + விடியற்காலை ஆற்றங்கரை + மண்பாதை என் மனுசரின் திறமையை சொல்லிகிட்டே போகலாம்.

  • பாரதிராஜா அஞ்சலியிடம் மனம் மாறி பேசும் காட்சி + கே.பி சாரை சந்தித்து பேசும் காட்சி இரண்டும்... மனதில் நிற்கிறார். GREAT Sir!

  • நமீதாவின் போஸ்டர் + மொட்டை அடித்து காதுகுத்துவது + போனில் கல்யாணத்தை நடத்துவது .... என நிறைய இடங்களை சொல்லலாம் கே.பி சாரை பற்றி சொல்ல.

  • கருணாஸ் சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார். பல நேரங்களில் காணாமல் போகிறார். சிரிப்பு போலீசா வராரு ..!

  • அஞ்சலி பாப்பாவை பற்றி அடுத்த படத்துல சொல்றேன். இதுல ஒன்னும் பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்லைகோ...கோ..கோ..!

  • முதல் பாதியில் என்னத்த சொல்ல வராங்க என்று புரிய மாட்டேன்குது. இரண்டாம் பாதி படம் எனக்கு பிடித்திருக்கு. கே.பீ சார் பேசும் சில இடங்கள் கடுப்பை தான் கிளப்புகிறார்.

  • இரண்டு டஜன் குழந்தைகளைக் நடிக்கவைத்து + இரண்டு மாபெரும் ஜாம்பவான்கள் ஒரு திரைக்கதையில் ஓன்று சேர்த்து படம் எடுத்த இயக்குனர் பாராட்ட படவேண்டியவர். குஷ்பு பற்றி சொல்லும் இடமெல்லாம் ஏதோ ஒரு உள்குத்து தெரிகிறது.

  • மிக அருமையான பின்னனி இசை தந்திருக்கலாம்... தரவில்லை. பாடல்களும் ஒன்றும் சுகமில்லை. கார்த்திக் ராஜா என்னாச்சு ?



ரெட்டச்சுழி - பசங்களுக்காக ஒருமுறை முடிந்தால் பார்க்கலாம்!

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



அறியவகை இரட்டை தலை பாம்புகள்


பாம்பை கண்டாலே படையும் நடுக்கும் என்பது பழமொழி. சில வாரங்களுக்கு முன்பு எனக்கு ஒரு மெயில் வந்தது. அதில் ஐந்து தலை நாகம் கர்நாடகா மாநிலத்தில் இருப்பதாகவும் அதன் போடோ சிலவும் இருந்தன. அது உண்மையோ பொய்யோ ... தெரியாது. இப்போது இரண்டு தலை நாகம் சில கண்டுபித்துள்ளர்னர் அறிவியல் அறினர்கள்.

அறியவகை இரண்டு தலைகள் கொண்ட பாம்பை ஸ்பெயின் நாட்டில் அலிகான்ட்(Alicante) என்ற கிராமத்தில் கண்டுபிடித்துள்ளார்கள்.

மேலும் இது போற்ற பாம்புகள் போன்ற அமெரிக்கா, ஸ்ரீலங்கா மற்றும் அர்ஜென்டினா நாடுகளிலும் கண்டுபிக்கபட்டுளது குறிப்பிட தக்கது.

சான் டீகோ ஜூவில் (San Diego Zoo) இந்த பாம்பு பார்வையாளர்கள் கண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கே எடுக்கப்பட்ட சில படங்கள்.










இதே போல இன்னும் சில பாம்புகள் ஏற்கனவே பிடிபட்டுள்ளது. சில வீடியோ காட்சிகள் உங்களுக்காக...



Source : www.wackyarchives.com

என்ன.. தகவல் பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



சமையல் குறிப்பு : பிரெட் அல்வா

அமைதி படை படம் பார்த்திருப்பீர்கள் என்றால் சற்றேண்டு நினைவுக்கு வருவது அம்மாவாசை தாயம்மாவுக்கு "அல்வா" தரும் சம்பவம். இந்த கதை நமக்கு எதற்கு...

இன்று ஆபீசில், எனது நண்பி பிரெட் அல்வா செய்து எடுத்து வந்து தந்தாள். சும்மா செம taste!. சும்மா நெய் சொட்ட... சொட்ட ...நானே பாதி பாக்ஸ் காலிசெய்தேன். சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் இந்த "பிரெட் அல்வா" செய்வது எப்படி என்று தான் பார்க்க இருக்கிறோம்.


தேவையான பொருட்கள் :
நெய் - 1 கப்

பிரெட் - 1 பக்கெட்

ஏலக்காய் - 6

பாதாம் - 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்

பால் - 1 லிட்டர்

சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை :
  • பிரெட்டின் நான்கு ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு மீதி இருக்கும் பகுதியை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்..

  • முக்கால் கப் நெய்யை எடுத்து வாணலியில் சூடுசெய்யவும். அதில் நறுக்கி வைத்திருக்கும் பிரெட்டை செய்தது பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.

  • ஏலக்காய் எடுத்து ஓன்று இரண்டாக உடைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

  • பாலை சூடுசெய்து அதனுடன் சர்க்கரை செய்தது நன்கு கலக்குங்கள். பால் நன்கு கொதித்து பாகு நிலை வரும் வரை சூடு செய்யுங்கள்.

  • அதனுடன் சர்க்கரையை சேர்த்து கலக்குங்கள். மிதமான சூட்டில் இதனை செய்யவேண்டும்.

  • இந்த பால் பாகுடன் கொஞ்சம் பாதாம் + முந்திரி சேர்த்து வறுத்து வைத்த பிரெட்டை கலந்து கிளறுங்கள்.

  • மீதம் இருக்கும் நெய்யை இதனுடன் சேர்த்து கிளறுங்கள். மிதமான சூட்டில் இந்த கலவையை நன்கு அல்வா பதம் வரும் வரை கிளறுங்கள்.

  • அல்வா பதம் வந்தவுடன் அதனை இறக்கி வைத்து, அதன் மேல் பாதாம் + முந்திரி கொண்டு அலங்காரம் செய்யவும். இதனை உடனேவும் பரிமாறலாம் அல்லது பிரிஜில் வைத்தும் பரிமாறலாம்.

குறிப்பு :-
சூடான நிலையிலும் சரி ஆறின நிலையிலும் இந்த பிரெட் அல்வா மிக மிக சுவையாக இருக்கும்.

ஒரு வேண்டுகோள்...!
என்ன உடனே செய்துப்பார்க்க தயாராகிவிட்டீர்களா ...? சபாஸ்!

செய்து பார்த்து ருசித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்தை இங்கே தெரிவித்தால் அது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



நெருப்பு ( பாடல்கள் + கவிதைகள் + படங்கள் )

தீ (அ) நெருப்புக்கும் தமிழ் திரைப்பட பாடலுக்கும் கொஞ்சம் நெருக்கம் அதிகம்தான். நிறைய பாடல்கள் நெருப்பை (அ) தீயைக் கருவாக கொண்டு வெளிவந்துள்ளது. அவற்றில் ஒரு சில...

ஒரு தீக்குச்சி பற்றவைக்கும் போது அது ஏற்ப்படுத்தும் வண்ண ஜாலங்கள் எண்ணிலடங்கா.

உறங்கும் வரை
அமைதி..
உரசிவிட்டால்
அய்யோ - தீ


சற்றென்று நினைவுக்கு வந்தது : தனுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை" பட பாடல்

நெருப்பு கூத்தடிக்குது
காத்தும் கூத்தடிக்குது...


முத்தமிட்ட காரணத்தால்
இதழ் கருகியது
தீக்குச்சி!
- வினுதா


சற்றென்று நினைவுக்கு வந்தது : ஆரியா நடித்த "அறிந்தும் அறியாமலும்" பட பாடல்

தீப் பிடிக்க தீப் பிடிக்க
முத்தம் கொடுடா...


உன்னால் தீபங்கள்
எரியும் என்றால்
நீ
தீக்குச்சியாய் இருப்பதில்
ஆனந்தப்படு!!!
- வாணி நாதன்


சற்றென்று நினைவுக்கு வந்தது : அஜித் நடித்த "வரலாறு" பட பாடல்

தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா...


நீ...
எரிந்து
விரியும் சுடரில்
புரியும் உன்
தியாகம்...
-சந்தான சங்கர்


சற்றென்று நினைவுக்கு வந்தது : அஜித் நடித்த "தீனா" பட பாடல்

வத்திகுச்சி பத்திக்காதுடா
யாரும் வந்து உரசர வரைக்கும்...



இருட்டை நீக்க
தீப்பந்தம் தேவையென
கேட்கும் உன் மனதிற்கு..
தீக்குச்சி இருப்பதை
சொல்லிக்கொடு.....
-இரா.சம்பத்


சற்றென்று நினைவுக்கு வந்தது : பரத் நடித்த "வெயில்" பட பாடல்

காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும்...



தலைக்கனம் இருந்தால்
அழிவு நிச்சயம்
அறிவுறுத்தும் ஆசான்
தீக்குச்சி..
- லக்கி ஷாஜஹான்


சற்றென்று நினைவுக்கு வந்தது : அர்ஜுன் நடித்த "ரிதம்" பட பாடல்

ஐயோ பத்திகிச்சி பத்திகிச்சி
நெஞ்சோ சிக்கிகிச்சி சிக்கிகிச்சி...


நண்பரே பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள்.



இரண்டு குட்டிகதைகள்

சிரிக்க சிந்திக்க படிக்க சலிக்காத‌ முல்லாவின் கதைகள்.

1. முல்லாவின் திருமணம்

முல்லா தான் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணின் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார்

"ஐயா ! நான் உங்களது மகளை திருமணம் செய்துகொள்ளவிரும்புகிறேன்"

அந்தப் பெண்ணின் தந்தை அவனைப் பார்த்து கேட்டார் "இது நிமித்தமாக எனது மனைவியை பார்த்தாயா ? "

"பார்த்தேன் ஐயா ! ஆனாலும் எனக்கு உங்களின் மகளைத் தான் அதிகம் பிடித்திருக்கிறது" என்றார் முல்லா.

பெண்ணின் தந்தை : ???????????



2. ஒரு நல்ல செய்தி

அந்த ஊரில் ஒரு வழக்கம் உண்டு யாராவது ஒருவர் நல்ல செய்தி ஒன்றை சொன்னால் அதற்காக அவர்களுக்கு பணம் வசூலித்து அன்பளிப்பாகக் கொடுப்பார்கள்.

அந்த வழக்கம் ஒருவிதமான மூடநம்பிக்கை என்பது அவரின் கருத்து. அந்த மக்களுக்குப் புத்தி கற்பிக்க வேண்டும் என்று அவர் கருதினார்.

ஒருநாள், அவர் சந்தைகூடும் இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த ஓர் இடத்தில் நின்றுக்கொண்டு "அன்பார்ந்த பொதுமக்களே, உங்களுக்கு சொல்வதற்காக அருமையான நல்ல செய்தி ஒன்றை வைத்திருக்கிறேன். எனக்குப் பரிசு தருவதற்காக உடனே பணம் வசூலியுங்கள்" என்று கூச்சல் போட்டார்.

முல்லா ஒரு செய்தியினை சொல்கிறார் என்றால் உண்மையிலேயே அது நல்ல செய்தியாகத் தான் இருக்கும் என்று நம்பிய மக்கள் அவசர அவசரமாக பணம் வசூலித்து ஒரு கணிசமான தொகையை அவரிடம் கொடுத்தார்கள்.

அந்த அன்பளிப்புத் தொகையை வாங்கி எண்ணி சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்ட முல்லா மக்களை நோக்கி "அன்பார்ந்த பொதுமக்களே, நான் கூற இருக்கும் நல்ல செய்தி இதுதான் இந்த முல்லாவாகியா நான் ஒரு மகனுக்குத் தந்தையாகியிருக்கிறேன்" என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

Source : முல்லாவின் கதைகள்



சமையல் குறிப்பு : பூண்டு புதினா தோசை

இனி குழந்தைகளுக்கு விடுமுறை காலம் தான். அவர்களுக்கு சற்றே வித்தியாசமான சமையலை செய்து அசத்துங்கள்.

இன்று மருத்துவ குணம் நிறைந்த பூண்டு, புதினாவைக் கொண்டு ஒரு வித்தியாசமான பூண்டு புதினா தோசை செய்வது எப்படி என்று தான் இன்றைய சமையல் குறிப்பில் பார்க்க இருக்கிறோம்.


தேவையான பொருட்கள் :
ஆளு தோசை மாவு - 2 கப்
பூண்டு - 20 பற்கள்

புதினா தலை பொடியாக நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :
  • பூண்டுப் பார்க்கலை தோலுரித்து, நீளவாக்கில் இரண்டாக நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

  • மிளகாயை மோடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

  • டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டை அரைப்பதமாக வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

  • டீஸ்பூன் எண்ணெய் விட்டு புதினாவை லேசாக வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

  • மாவை ஊத்தப்பமாக ஊற்றி அதில் சீரகம் சிறிது தேய்த்துப் போட்டு, அதன் மீது வதக்கிய பூண்டு + புதினாவை பதியவிடுங்கள்.

  • ஒவொரு ஊத்தாப்பத்திர்க்கும் 5-லிருந்து 7 துண்டு பூண்டு பதிக்கலாம்.

  • எண்ணெய் விட்டு வேகவைத்து, பின் திருப்பிப் போட்டு மேலும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு :-
தக்காளித் சட்னி இந்த பூண்டு புதினா தோசைக்கு மிக சரியான ஜோடி.

இந்த 'காம்பினேசனில்' சாப்பிட்டு பாருங்கள்... அட அட என்ன சுவை சுவை! நினைத்தாலே நாவில் எச்சில் ஊறுதே ...!

ஒரு வேண்டுகோள்...!
என்ன உடனே செய்துப்பார்க்க தயாராகிவிட்டீர்களா ...? சபாஸ்!

செய்து பார்த்து ருசித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்தை இங்கே தெரிவித்தால் அது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



சாதனைகள் தொடர்வதற்கு ஒரு வழி!

கொழும்பு நகரில் ஒரு மையமான இடத்தில் ஒரு கடைத்தெரு. அது ஒரு மின் பொருள்களுக்கான கடை. ஓரளவு கூட்டம். கல்லாவில் முதலாளி. எதிர் இருக்கையில் நான். கடை உரிமையாளர் என் நண்பர் என்பதால் காணப் போயிருந்தேன்.

ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது.
"ஹலோ"

சட்ரெண்டு சூடான நண்பர் "ஏய், வைடி போனை வியாபார நேரத்தில் கொஞ்சரா பெருசா .." பட்ரெண்டு போனை சாத்தினார்.

என்ன பேசியிருப்பார் என்பது நமக்கு பிடிபடாவிட்டாலும் கூட, யார் பேசினார்கள் என்பது பச்சைக் குழந்தைக்கும் புரிந்திருக்கும். திரைப்பட 'ஷூட்டிங்' மாதிரி கற்பனை செய்து கொள்ளுங்கள். காட்சி கட்.

அடுத்த காட்சிக்களம். அதே மின்பொருள் விற்பனையாளரின் வீடு. நாள் ஞாயிறு. மதியம் ஒரு மணி இருக்கும். அங்கேயும் நான். நண்பர் லுங்கியில்.. மதிய உணவு உன்ன வந்த விருந்தினர்களான நான்... அடுப்படியிலிருந்து சொதியின் குருமா மணம்.

இங்கும் ஒரு தொலைப்பேசி அழைப்பு. நண்பர் எடுக்கிறார். "யார் பேசுறீங்க ?"

"வைக்க சார் போனை. ஞாயிற்று கிழமை கூடவா பிசினஸ் பேசணும்? மனுசனை நிமதியா இருக்க விடுங்க சார்"

"சார் எவளவு பெரிய பிசினசா வேணுன்னாலும் இருக்கட்டும். நாளைக்குப் பேசுங்க. இன்னைக்கு வேணாம்" நண்பர் பட்ரெண்டு சாத்தினார் தொலைப்பேசியை.

தொழில் செய்யும் நேரத்தில் இவரால் ஒரு சிறந்த வியாபாரியாக இருக்க முடிந்ததே தவிர, ஒரு நல்ல கணவராக இருக்க முடியவில்லை.

அதேபோல், குடும்பத் தலைவராக இருக்கும் நேரத்தில் ஒரு நல்ல வியாபாரியாக இருக்க முடியவில்லை. அந்ததந்த நேரத்தில் அது அது முக்கியம் என்கிற இவரது கொள்கை வரவேற்க்கதக்கதே! ஆனால் இந்த விசயத்தில் இப்படி ஒரு உறுதிப்பாடு தேவையா என்ன?

என் நண்பரின் மனைவி, தம் கணவரைப்பற்றி இப்படி சொல்வார். "அவர் உடுப்பை (காவல் துறை)மாட்டிவிட்டால் ரொம்பக் கண்டிப்பான மனுசனா ஆகிடுவார். எனக்கே பயம்மாயிடும்னா என் புள்ளைங்களைப் பத்திக் கேட்கவே வேண்டாம்.?" ஏனையா காவல்துறை நண்பரே, உடுப்பை மாட்டிகிட்டா கணவன், தந்தைக்கிற உறவை ஊதாசினப்படுத்தனுமா என்ன?

வாழ்வில் பலருக்கும் பலவிதப் பொறுப்புகள் உண்டு. ஒன்றை ஏற்றால் மற்றவை உதறிவிட வேண்டும் என்பதில்லை. எந்தப் பொறுப்பை ஏற்றிருந்தாலும் ஒரு நிமிடமாவது உங்களுக்குள் உள்ள அந்த மாற்றுப் பொறுப்பையும் சரிவர எண்ணிப் பார்த்து, அந்த உலகத்திற்கு சென்று, சூழ்நிலை உணர்ந்து கடமையாற்றுங்கள்.

உங்கள் சாதனைகள் தொடர்வதற்கு இதுவும் ஒரு வழிதான்!.

source : லேனா



சமையல் குறிப்பு : தயிர் உருளை

இனி குழந்தைகளுக்கு விடுமுறை காலம் தான். அவர்களுக்கு சற்றே வித்தியாசமான சமையலை செய்து அசத்துங்கள்.

இன்று உருளைக்கிழங்கைக் கொண்டு ஒரு வித்தியாசமான தயிர் உருளை சைடிஷ் செய்வது எப்படி என்று தான் இன்றைய சமையல் குறிப்பில் பார்க்க இருக்கிறோம்.


தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - அரைக்கிலோ
பெரிய வெங்காயம் - 2

சற்றே புளித்த தயிர் - அரை கப்
இஞ்சி + பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கரம்மசாலா - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
  • உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்துக் கொள்ளுங்கள்.

  • பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

  • வாணலியில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்குங்கள்.

  • அதனுடன், மிளகாய்த்தூள் + மஞ்சள்தூள் + மிளகுத்தூள் சேர்த்து வதக்குங்கள்.

  • பின்னர், உப்பு + உருளைக்கிளங்கு சேர்த்து சிறு தீயில் 10 நிமிடம் நன்கு வதக்குங்கள்.

  • அதன் பின்னர், தயிர் + கரம்மசாலா சேர்த்துக் சுருளக் கிளறி இறக்குங்கள்.

குறிப்பு :-
பூரி (அ) சப்பாத்தி (அ) பிரேட்க்கு சூப்பரான சைடிஷ் இந்த தயிர் உருளை.

ஒரு வேண்டுகோள்...!
என்ன உடனே செய்துப்பார்க்க தயாராகிவிட்டீர்களா ...? சபாஸ்!

செய்து பார்த்து ருசித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்தை இங்கே தெரிவித்தால் அது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top