எனக்கு பிடித்த கமல் பாடிய 10 பாடல்கள்.

தமிழ் படத்துல சொந்த குரலில் பேசி நடிப்பதே சற்று கடினமான விஷயமா இருக்கு. இந்த நிலையில், ஹீரோவே சொந்த குரலில் பாடினால் எப்படி இருக்கும் ?! அவ்வாறு சொந்த குரலில் பாடும் (இப்போதைய) பல தமிழ் நடிகர்களில் முதன்மையானவர் கமலஹாசன்.


நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது பரிசோதனை முயற்சிகளை அவர் தொடர்ந்து செய்துகொண்டுவருகிறவர். அந்த முயற்சியில் தான் சொந்த குரலில் பாடல்களை பாடுவது என்பது. அதில் மிகபெரிய வெற்றியையும் பெரியவர் இவர்.

பல பாடல்களை தனது சொந்த குரலில் பாடியிருந்தாலும் எனக்கு பிடித்து சிறந்த பத்து பாடல்கள் + காணொளியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியே.1. சிகப்பு ரோஜாக்கள் (1978)
நெகடிவ் ரோல்
பெரிய மூக்கு கண்ணாடி
பெல்பாட்டம் பேன்ட்
பூனை
ரோஜா செடி
பிடித்த பாடல் : நினைவோ ஒரு பறவை


அழகான காதல் பாடலில் இவரது குரலும் மிக இனிமையாக இருக்கும். கோரஸில் வரும் அந்த குரலும் நம்மை வசிகரிக்கும்.2. விக்ரம் (1986) -
எழுத்தாளர் சுஜாதா
எலிகுகை
அறிவியல் சார்ந்த கிரைம்
தகடு தகடு
டிம்பிள் கபாடிய

பிடித்த பாடல் : கண்ணே தொட்டுக்கவா


அந்த காலகட்டத்தில் SPB அளவுக்கு பாடிய பாடல் இது. ரொம்ப இளமை ததும்பும் குரலில் இந்த காதல் டுயட் பாடல் ரொம்ப பிடிக்கும்.3. அபூர்வ சகோதரர்கள் (1989) -
இரட்டை வேடம்
அப்பு கமல்
சார் நீங்க எங்கோயோ போயிடீங்க
பாடலில் கிராபிக்ஸ் முகம்
நாகேஷ் வில்லனாக நடித்து
கெளதமி

பிடித்த பாடல் : ராஜா கைய வச்சாபாஸ்ட் பீட் சாங். சும்மா பட்டையை கிளப்பும் பாடல் இது. காரையும் பெண்ணையும் ஒப்பிட்டு வரும் வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். வாலி சார்....நீங்க இன்றும் என்றும் வாலிப கவினனே.4. மைக்கேல் மதன காமராஜன் (1990) -
நான்கு விதமான குரல் + நடிப்பு + உடல் மொழி
காமேஸ்வரா
பீம் பாய் பீம் பாய்
வரதகுட்டி நான் இந்த சமையல்கட்டு
திருபு திருபு

பிடித்த பாடல் : சுந்தரி நீயும்மெலடி பாடல். கேட்க கேட்க என்ன சுகமா இருக்கும்!5. தேவர் மகன் (1992) -
சிவாஜி சார்
'பங்க'+ அந்த மீசையும்.
குடும்ப பகை

பிடித்த பாடல் : இஞ்சி இடுப்பழகிதாளம் போடா வைக்கும் ஜோடி பாடல். வார்த்தை உச்சரிப்புகள் அவ்வளவு தெளிவு.6. சதிலீலாவதி (1995)
கோவை சரளா
சக்திவேல் கவுண்டர் கமலஹாசன் + காமெடி

பிடித்த பாடல் : மாறுகோ மாறுகோமூடு வரவைக்கும் பாடல். என்னமா தலைவரு பாடியிருபாரு! அட அட... கிக் ஏறுதே பாடலை கேட்கும் போதே....7. ஹேராம் (2000)
முத்த காட்சி
சாருக்கான்
காந்தி தத்தா
சரித்திர கால பின்னணி
நீண்ட தலைமுடியுடன் கூடிய கமலின் போடோ

பிடித்த பாடல் : நீ பார்த்தபியானோவின் இசையோடு கமலின் இனிய குரல் கரையும் இடமெல்லாம் மிக இனிமை.8. அன்பே சிவம் (2003) - இது வரை நான் பார்த்த படங்களில் என் மனதிலிருந்து நீங்காத இடம் பிடித்த திரைப்படம் "அன்பே சிவம்". தமிழ் திரையுலகில் இந்த படம் தவிர்க்க முடியாதவை. இந்த படத்தை பிடிக்காதவர் யார் இருக்க முடியும்?
யாரும் தொட தயங்கக் கூடிய ஒரு கதை
வித்தியாசமான தையல் முகம்
மாதவனின் காமெடி

பிடித்த பாடல் : யார் யார் சிவம்இதுவும் ஒரு வகை மெலடி பாடல். பாடலை கேட்ட கேட்ட நம்மையறியாமல் ஒருவித அமைதியான நிலைக்கு வரவைக்கும். இந்த பாடலை பற்றி இன்னும் இறைய சொல்லலாம். எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்.9. விருமாண்டி (2004)
தூக்குத் தண்டனை
சட்ட மீறல்கள்
திரைகதையை இரண்டு விதமாக சொல்ல்வது
சண்டியர்
ஜல்லிக்கட்டு

பிடித்த பாடல் : உன்னை விடஸ்ரேயா கோசலுடன் பாடியிரும் ஒரு காதல் மெலடி பாடல். கவிதையாய் படம் பிடித்திருப்பார்கள்.10. வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் (2004) - ஆம் ஆண்டு வெளிவந்த சரண் இயக்கத்தில் வெளிவந்த கலகலப்பான காமெடி படம். ஒரு ரவுடி டாக்டரானா என்னவாகும்? படத்த பாருங்க வாய்விட்டு சிரியுங்கள்.
கிரேசி மோகன்
கட்டிபுடி வைத்தியம்
பாப்பு
ரவுடி vs டாக்டர்

பிடித்த பாடல் : கலக்கப் போவது யாருகுஷியான பாடல். நாம்மையும் ஆடவைபார் இந்த பாடலில். அவ்வளவு புத்துணர்ச்சி இருக்கும் இவரது குரலில்.இவர் பாடிய பெரும்பாலும் படக்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா தான்.
எனக்கு பிடித்த இந்த பாடல்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!பாடம் - ஒரு பக்கக் கதை

வீட்டுப்பாடம் எழுத அமர்ந்த பாலன்,தனது புத்தகப்பையைத் தலைகீழாகக் கவிழ்த்து கீழே கொட்டினான். அதிலிருந்து ஏராளமான பென்சில்கள், ரப்பர்கள், பேனாக்கள் கீழே விழுந்தன.

அவதைப் பார்த்த பாலனின் அம்மா,"ஏதுடா இதெல்லாம்" என்று கேட்டார்.


"இது கோபிகிட்ட அடிச்சது. இது சுரேசு கிட்ட அடிச்சது" என்று பெருமையுடன் வரிசையாக சொல்லிக்கொண்டே சென்றான்.

தன் மகன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அவருக்குப் பிடிக்கவில்லை. அன்று இரவே பாலனின் தந்தையிடம் இந்த விஷயத்தைச் சொன்னார்.

"இவனுக்கு வீட்டுல என்ன குறைச்சல்? நம்ம மானத்தை வாங்கணுமின்னே பிறந்திருக்கான். வாங்குற சம்பளத்துல பாதிய இவனுக்குத்தானே செலவழிக்குறோம். இவனால ஸ்கூல்ல எனக்குத் தான் கெட்டப்பெயர் வரப் போகுது" என்று கோபப்பட்டார் ஆசிரியரான பாலனின் தந்தை.


மறுநாள் பாலனும், அவன் தந்தையும் அவசர அவசரமாக பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.

"என்னங்க, நம்ம தெருவில நடக்குற கோலப் போட்டியில சேர்ந்திருக்கேன். ஸ்கூல் விட்டு வரும்போது ஸ்கூல்ல இருந்து கலர் சாக்பீஸ் டப்பாவ எடுத்துக்கிட்ட வாங்க" என்றார் பாலனின் தாய்.

பாலன் அம்மாவை ஏறிட்டுப் பார்த்தான். அவர் தலைகுனிந்து கொண்டார்.

நன்றி :ஜேம்ஸ்சீடன் - விமர்சனம்

திருடா திருடி கூட்டணியான சுப்பிரமணிய சிவா + தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் தினாவின் (50th) மற்றுமொரு படம் 'சீடன்'.


படத்தோட கதை என்னானா...

பழனியில் வசிக்கும் பெரிய பணக்கார வீட்டில் தங்கம் (சுஹாசினி) வேலைக்காரியாக இருக்கும் மஹாலக்ஷ்மி (அனன்யா) ஒரு முருக பக்தை. ஆனால், அவர் பழனி முருகனை ஒரு முறை கூட தரிசித்ததில்லை. கனவில் ஒருவனை மணப்பது போல கனவு காண, அந்த அவனே (கிருஷ்ணா) நேரில் வருகிறான். அவ்வீட்டின் எஜமானியின் பேரன் கிருஷ்ணாவை கண்டதும் காதல் தொற்றிக்கொள்ள உருவாகிறது பிரச்சினை.

அந்தப் பிரச்சினைகளில் இருந்து காக்கும் வேடத்தில் நம் தனுஷ் - சமையல்காரராக வருகிறார். உண்மையான காதலை புரிந்து கொண்ட அவர் எப்படி அவர்களது காதலை சேர்த்து வைக்க பாடு படுகிறார். இறுதியில் இவர்களை எப்படி ஒன்று சேர்க்கிறார் என்பது தான் மீதிக் கதை.


எனக்கு பிடித்த சில...

முதல் பாதியில் ஒரே பாடல் மாயம். 5 TV சீரியலை மொத்தமா பார்த்தா வரும் கண்ணீரை ஒரு மணி நேரத்தில் வரவைத்த புண்ணியம் இயக்குனரை சேரும்.

இரண்டாம் பாதியில் தனுஷ் வந்த பிறகாவது படம் சூடு பிடிக்கும்னு பார்த்த நமக்கு தான் கிறுக்கு பிடிக்குது. எப்படா படம் முடின்னு தோனுச்சு அடிகடி. என்னுடன் படம் பார்த்த 47 பேரில் 12 பேரு இடைவேளையில் கிளம்பிவிட்டர்கள். மீதி பெரும் பொறுமையா இருக்க காரணம் நம்ப தனுஷ் - வந்து படத்த ஓட்டுவாருனு பார்த்தா... ஊகும் நகரவே படம் இல்லை.

ரொம்ப ரசித்த காட்சிகள்

முன் பனிக்காலம் பாடல் + டைட்டில் போடறப்ப வரும் இனிய மெலோடி மியூசிக்கும் + ஓவியம் டிசைன் + தனுஷ் மயில் தோகை மூலம் செய்யும் அந்த டிசைன்

கௌரவ வேடம் ஏற்ற தனுஷை பாராட்ட வேண்டும். இடைவெளிக்கு முத்தின காட்சியில் வந்து இடைவேளை கார்டு போடுகிறார்கள். அவர் பேசும் வசனக்கள் சுருக். நறுக். ஆனால் அவரை பழனி மலை முருக கடவுளாகி பார்த்த அந்த இயக்குனரை என்ன சொல்ல? ! முடியல... வலிக்குது.

அனன்யா நன்றாகவே நடித்திருக்கிறார். படம் முழுவதும் வரும் வலுவான அழுத கேரக்டரை அனாயசமாகத் தாங்குகிறார். தோற்றத்திலும் இளைத்து இருப்பது ஆச்சரியமான மாறுதல்.


மயில்சாமியின் செல்ஃபோனை திருடி வாயில் வைத்துகொண்டு விவேக் பாடு படும் சீன் மட்டும் தான் படத்தில் உள்ள ஒரே ஒரு காமெடி. இன்னும் சில இருக்கு. ரசிக்க தான் முடியல. விவேக்கு காமெடி பஞ்சம் வந்துவிட்டதோ?

மனதில் நின்ற / பிடித்த சில வசனம்

இனி உன் சோகம் எல்லாம் என்னுடையது.. என் சந்தோஷம் எல்லாம் உன்னுடையது.

சமையல்ல இருக்கற மகத்துவத்தைக்கண்டு பிடிச்சுட்டா உணவே மருந்துதான்.

பெரிய வாழ்க்கையைக் கொடுக்கறதுக்கு முன்னே கடவுள் பெரிய கஷ்டத்தை கொடுப்பாரு.

வெந்த சோற்றைப்பதம் பார்க்கத்தெரியாத வயசுல எங்கம்மா அப்பாவுக்கு கொள்ளி வெச்சேன்

குறை இல்லாத மனுஷன் ஏது? ஓட்டை இல்லாத ஜட்டி ஏது?

சுஹாசினி மணிரத்னம், ஷீலா, இளவரசன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சொல்லி கொள்ளும்படி யாருடைய நடிப்பும் இல்ல. எல்லாமே நாடகம் பார்ப்பது போலதான் இருக்கு.

சீடன் - படு மொக்கை படம்.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!அன்பே சிவம் - ஒரு பக்கக் கதை

"ரித்தீஷ்... இன்னிக்கு பிரதோஷ நாள். இந்த பாலைக் கொண்டு போய் ஈஸ்வரன் கோயிலில் சுப்ரமணிய அய்யரிடம் கொடு. அவரு நந்திக்கு பாலாபிஷேகம் செய்வார்", என்று அம்மா என்னிடம் பால் தூக்குப் பாத்திரத்தைக் கொடுத்தாள்.


நான் அதை வாங்கிக் கொண்டு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு பஸ் நிலையம். அங்கே பயணிகள் அமர்வதற்கான சிமெண்ட் இருக்கையின் கீழே நான்கு நாய்க் குட்டிகள். அதன் தாய் எங்கே போயிற்று என்று தெரியவில்லை. குட்டிகள் "க்யோம்..க்யோம்' என்று கத்தியவாறே அந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்தன. பாவம் பசி போல. எனக்கு பரிதாபமாக இருந்தது.

பால் தூக்கின் மேல் மூடியைத் திறந்தேன். அதை குட்டிகளின் அருகே வைத்தேன். மூடியில் பாலை ஊற்றினேன். முதலில் தயங்கிய குட்டிகள் சற்று தைரியம் வந்து மூடியைச் சுற்றிலும் நின்றுகொண்டு பாலைக் குடிக்க ஆரம்பித்தன.

இதற்குள் குட்டிகளின் தாயும் வந்தது. அது முதலில் என்னை முறைத்துப் பார்த்தது. பின்னர் அதுவும் பாலைக் குடிக்க ஆரம்பித்தது. நான் மிகவும் ஆர்வத்துடன் மொத்தப் பாலையும் நாய்களுக்கு ஊற்றினேன்.

எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. வீட்டுக்குத் திரும்பினேன். "பாலைக் கொடுத்துட்டியாடா?" என்றாள் அம்மா.

"ஆமாம்மா..." என்று சொல்லிவிட்டு டியூஷன் போவதற்காக பாடப் புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தேன்.

"சரி... சரி... இந்த நூடுல்ûஸ சாப்பிட்டு டியூஷன் போ" என்றாள் அம்மா.டியூஷன் முடித்துவிட்டு 8 மணிக்கு வீடு திரும்பினேன். அம்மா கையில் நீண்ட பிரம்பு.

"என்னம்மா..குரங்கு கூட்டம் வந்ததா?" என்றேன்.

ஏனென்றால் எங்கள் திண்டிவனத்தில் குரங்குகள் அவ்வப்போது கூட்டம் கூட்டமாக வந்து தொல்லைக் கொடுத்துவிட்டு போகும். அதனால் நீண்ட கழிகளை எப்போதும் வைத்திருப்பார்கள்.

நான் வீட்டுக்குள்ளே நுழைந்து புத்தகப் பையை வைப்பதற்குள்... எதிர்பாராத வகையில் "சுளீர்... சுளீர்..." என்று பிரம்பால் அம்மா என்னை விளாசு விளாசு என விளாசினாள்.

"அஞ்சாவது தான் படிக்கற... 10 வயசு கூட ஆகல்ல. அதுக்குள்ள பொய்யா சொல்றே. நீ பிரதோஷத்துக்கான அபிஷேக பாலைக் கொண்டு போய் கொடுக்கவே இல்லைன்னு சுப்ரமணிய அய்யர் சொன்னாரே... பாலை என்னடா செஞ்சே... வித்துட்டு ஏதாவது வாங்கித் தின்னியா..?"

"இல்லம்மா... பஸ் ஸ்டாண்டில் நாய்க்குட்டிகளுக்கு..."

"என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கே... சாமிக்கு வச்சிருந்த பாலை... நாய்க்கு... ஊத்தினியா...? " - மேலும் "சுளீர்... சுளீர்..." என்று விளாசினாள்.

அதற்குள் அப்பா வந்தார். அம்மாவைத் தடுத்தார்.

அம்மா புகார் காண்டம் படித்தாள்.

நான் விசும்பலுடன் உள் அறையில் புத்தகப் பையுடன் நின்று கொண்டிருந்தேன். அப்பா சட்டையைக் கழற்றி கோட் ஸ்டாண்டில் மாட்டியவாறே என்னை வாஞ்சையுடன் பார்த்தார்.
"அப்பா நான் செஞ்சது தப்பா...?"

"தப்புதான்.."

"நல்லதுதானேப்பா செஞ்சேன்...!"

"நல்லது தான் செஞ்சே..."

"பின்னே என்னப்பா?"

"பொய் சொன்ன பாரு..அதுதான் தப்பு..." என்றவாறே என்னருகே வந்து காயம்பட்ட என் முதுகைத் தடவிக் கொடுத்தார்.

எனக்கு அம்மா அடித்த வலியே தெரியவில்லை.
காளான் புலாவ்

சுவையான காளான் புலாவ் செய்வதற்கான எளிய சமையல் குறிப்பு.

தேவையானப் பொருள்கள்:
பச்சரிசி (அ) பாசுமதி அரிசி - ஒரு கப்
காளான் - 15
பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் - 5

இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு - 2 பற்கள்
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2

ஏலக்காய் - 1
முந்திரி - 5

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை:
 1. அரிசியைத் தண்ணீரில் ஒரு 10 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடித்துவிடவும்.

 2. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் விட்டு சூடேறியதும் அரிசியைப் போட்டு வதக்க வேண்டும். ஈரப்பசை நீங்கி அரிசி நிறம் மாறும் சமயம் அடுப்பை நிறுத்திவிடவும்.

 3. பச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊறவைத்து எடுத்துக்கொள்.

 4. காளானை விருப்பமான‌ வடிவத்தில் நறுக்கிக்கொள்.

 5. வெங்காயம் நறுக்கி வைக்கவும்.

 6. இஞ்சி,பூண்டைத் தட்டி வைக்கவும்.

 7. ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.

 8. தாளிப்பு முடிந்ததும் வெங்காயத்தை முதலில் சேர்த்து வதக்கவும்.

 9. அடுத்து காளான்,பட்டாணி சேர்த்து வதக்கவும்.

 10. இவை வதங்கும்போதே மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.

 11. எல்லாம் நன்றாக வதங்கியபிறகு தண்ணீர் ஊற்றி உப்பு,காரம் சரிபார்த்து கலக்கி மூடி வைக்கவும்.
  பாசுமதி அரிசியானால் ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீரும்,பச்சை அரிசியானால் ஒன்றுக்கு இரண்டரை பங்கு தண்ணீரும் தேவை.
 12. தண்ணீர் நன்றாக சூடேறி ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறிவிட்டு மீண்டும் மூடி வைக்கவும்.

 13. மீண்டும் கொதி வரும்போது மூடியைத் திறந்து எலுமிச்சை சாறு விட்டு லேசாகக் கிளறிவிட்டு மிதமானத் தீயில் ஒரு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

  இப்பொழுது அடுப்பை நிறுத்திவிட்டு ஒரு தோசைத் திருப்பி(அ)முள் கரண்டியால் சாதத்தைக் கிளறிவிட்டு மூடி வைக்கவும்.
இப்பொழுது சுவையான காளான் புலாவ் தயார். இதற்கு தயிர்,வெங்காயப் பச்சடி நன்றாகப் பொருந்தும்.
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!நம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்

கோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். கோபத்தை கட்டுபடுத்துவதைவிட, சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிக் கையாளத் தெரியாவிட்டால் நமது தொழில், உறவுகள், வாழ்க்கை என அனைத்தைம் சீரழித்துவிடும்.


உங்களுக்கு கோபம் வந்தால் எப்படிக் கையாள வேண்டும் என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

1. தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறையும்.

2. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.

3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்

4. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.

5. கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும்.

6. பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.

7. கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.

8. கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.

9. கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.

10. வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போடலாம்.

11. நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.

12. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.

13. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.

ஒரு நொடி கோபப்பட்டால் 60 விநாடிகள் சந்தோஷத்தை இழக்கிறோம் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எனவே, பிறரின் மேல் நம்பிக்கை வைத்து கோபத்தை வெற்றி கொள்ளுங்கள். பிறருடன் நட்பாய் இருங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள்.பயணம் 2011 - விமர்சனம்

அழகிய தீயே, மொழி & அபியும் நானும் என குடும்ப படங்களை மட்டுமே இயக்கிவந்த ராதா மோகன் இயக்குனரின் புதிய அவதாரம் படைப்பு தான் பயணம்.

படத்தோட கதை என்னானா...

சென்னையிலிருந்து டெல்லிக்குச் செல்லும் பயணிகள் விமானம் கடத்தப்படுகிறது. பாகிஸ்தானுக்குப் பறக்குமாறு தீவிரவாதி கட்டளை இட விமானி மறுக்க, துப்பாக்கி குண்டு பாய்ந்து விமானத்தில் கோளாறு ஏற்பட்டு அவசரவசரமாக திருப்பதி ஏர்போட்டில் தரையிறக்கப்படுகிறது.

பிரகாஷ்ராஜ் உட்பட உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட கமோண்டோ படைத்தலைவர் நாகார்ஜுனாவும் அழைக்கப்படுகிறார்.

100 பயணிகளையும் விமானத்தையும் காப்பாற்ற வேண்டுமானால் பாகிஸ்தான் தீவிரவாதி யூசுப்கானை விடுவிக்க வேண்டும் என்று தீவிரவாதிகள் நிபந்தனை விதிக்கிறார்கள்.
தீவிரவாதியை விடுவித்தார்களா ? பயணிகள் என்ன ஆனார்கள் ? என்பதே மீதி கதை.

எனக்கு பிடித்த சில நடிகர்கள்...

நாகார்ஜுனா - ரொம்பவும் யதார்த்தமான + அலட்டல் இல்லாத கமேண்டோ வேடம். கமேண்டோ உடையில் அழகாக இருக்கிறார். இவரது அறிமுக காட்சியில் ஒரே விசில் தான்.
லடாக்கில் நாகார்ஜுனா + சேது ஆகியோர் சேர்ந்து தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி யூசுப்கானை அரெஸ்ட் செய்யும் ஆக்‌ஷன் காட்சிகள் மிகவும் அருமை.

தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமிடத்தில் உள்துறை செயலாளராக வரும் பிரகாஷ்ராஜ் - கோபம், ஆற்றாமை என் பன்முக நடிப்பில் பட்டைய கிளப்புகிறார்.

'சைனிங் ஸ்டார்' சந்திரகாந்த் ரோலில் வரும் பப்லுவை காமெடி நடிகர் சாம்ஸ் நக்கல் அடிக்கும் வசனங்கள் + சினிமா ஹீரோக்களை சும்மா வசனத்தில் கிழிதெரிகிறார். அதில் சில
1. ரத்தத்துல வேணா பல குரூப் இருக்கலாம். ஆனா மனுஷங்க எல்லாம் ஒரே குரூப்தான்!

2. தாய்க்கு ஒரு ஆபத்துன்னா ஆம்புலன்சுக்கு phone பண்ணுவேன். ஆனா, தாய் நாட்டுக்கு ஒரு ஆபத்துன்னா நானே ஓடிப்போய் காப்பாத்துவேன்.

3. நீங்க பார்க்கத்தான் சைலண்ட்.. ஆனா வயலண்ட்..போய் அட்டாக் பண்ணுங்க.

இரண்டாம் பாதியில் இயக்குனராக வரும் பிரம்மானந்தம் + ரங்கநாதன் காட்சிகள் சிரித்து சிரித்து நம் வயிற்றை பதம் பார்க்கும்.

விமான பணிப்பெண் விமலா - நிறைவான நடிப்பு + அழகு!

விமான சக பயணிகளில் ஒருவராக இருந்து சாகசம் செய்ய காத்திருக்கும் மாஜி மிலிட்டரி மேஜர் தலைவாசல் விஜய் + டாக்டராக வரும் ரிஷி + பாதிரியாராக ஜெபிக்கும் M.S.பாஸ்கர் என ஒவ்வொருவரும் கடத்தப்பட்ட விமானத்தின் பயணிகளாகவே வாழ்ந்திருப்பது படத்தின் வெற்றிக்கு பெரும் பங்குவகிகிறார்கள்.

மணி அடிக்கும் போது கயிறு அறுந்தவுடன் சமயோசிதமாகச் செயல்பட்டு மனிதக் கோபுரம் அமைத்து ஏறி மணியை அடிக்கும் காட்சி மனதில் பசுமையாக நிற்கும்.

கே.வி.குகனின் கேமரா + கதிரின் எடிட்டிங் + பிரவீன் மணியின் பின்னணி இசை மூன்றும் இயக்குனருக்கு பக்க பலமாக இருக்கின்றன.


பயணம் - குடும்பத்துடன் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.தலை முடிஉதிர்வை & வழுக்கையை தவிர்க்கும் முறைகள்

வழுக்கை விழ ஆரம்பித்ததும் உடனேயே அதனை சரிப்படுத்து வதற்கான வழிகளைக் கையாள வேண்டும். இல்லாவிடில் அதனைக் குணப்படுத்துவது கடினம்.

உடலில் அதிக உஷ்ணம், மன அமைதியின்மை போன்றவற்றாலும் வழுக்கை ஏற்படுவது உண்டு. சிலருக்கு பரம்பரை காரணமாகவும் வழுக்கை ஏற்படுவது உண்டு.

வழுக்கையை சரிப்படுத்த சில வழிமுறைகள்:
 • இலந்தை இலையை அரைத்து அதன் சாற்றை வழுக்கை உள்ள இடத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 • தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெயில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு அன்றாடம் உப யோகித்து வந்தால் வழுக்கை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

 • வழுக்கை விழுவதற்கான காரணங்களில் புழுவெட்டும் ஒன்று. இதற்கு சோற்றுக் கற்றாழையை எடுத்து அதனுள் இருக்கும் வழு வழுப்பான 'ஜெல்' போன்ற திரவத்தை எடுத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கை விழுவதை தடுக்கலாம்.

 • அரளிச் செடியினை கீறி பால் எடுத்து தடவி வர புழுவெட்டினால் ஏற்படும் வழுக்கைக்கு நல்ல பயன் கிட்டும்.

 • சிறிய வெங்காயத்தை அரைத்து மயிர்க்கால்களில் நன்கு அழுத்தி தடவி ஊற வைத்து தலையை அலசினால் புழுவெட்டினால் ஏற்படும் வழுக்கைக்கு நல்ல பலன் கிடைக் கும்.

 • அதிமதுரத்தை எருமைப்பாலில் அரைத்து வாரத்திற்கு மூன்று முறை தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

 • பூண்டை உலர்த்திப் பொடி செய்து அதைத் தேனில் கலந்து வழுக்கையின் மீது பூசி வந் தால் முடி வளரும்.
கூந்தல் மிக அதிகமாக உதிரும்போது, வெந்தயக்கீரையை அரைத்துத் தலையில் தடவிக் கொண்டு கொஞ்ச நேரம் கழித்துக் கூந்தலைத் தண்ணீரால் அலசினால் முடி உதிருவது நிற்கும்.

ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் ஒரு முட்டையை நன்கு கலக்கி அதை தலையில் தேய்த்துக்கொண்டு அரை மணிநேரம் ஊறவிடவும். பிறகு குளிர்ந்த இருந்த நீரில் தலையை நன்றாக அலசி ஷாம்பூ போட்டுக் குளிக்கவும். இதனால் தலைமுடிக்கு நல்ல ஊட்டம் கிடைப்பதுடன் கூந்தல் மிருதுவாகவும் ஆகும்.

தேநீர் வடிகட்டிய பின் மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்துவிட்டு தலையில் தேய்த்துக் குளித்தால் தலைமுடி பளபளப்படையும். 10-15 செம்பருத்தி இலைகளைப் பறித்து அம்மியில் வைத்து விழுதாக அரைத்து ஓரே ஒரு மேசைக் கரண்டி சீய்க்காய்த்தூளைக் கலந்து நீராடினால் தலைமுடி பளபளக்கும்.

இளநரை வராமல் தடுக்க மருதாணித் தைலம், அரைகீரைத் தைலம், பொன்னங்கண்ணி தைலம், கரிசாலங்கண்ணி தைலம், செய்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தரும்.
நன்றி :தினகரன்வாழ நினைக்கிறன் - ஒருபக்க கதை

சிவப்பிரகாசத்துக்கு வலது கை தூக்க முடியாமல் போனபோதே புரிந்து போனது. பக்கவாதம். வயது எழுபத்தைந்து ஆகிறது. மனைவி போய்ச் சேர்ந்துவிட்டாள். பசங்க நான்கு பேரும் நான்கு ஊர்களில் வசதியாக இருக்கிறார்கள். பெண் அமெரிக்காவில்.

"சொல்றேன்னு தப்பா நினைக்காத சிவா, இந்த நிலையில் நீ உன் சொத்துக்களை பிரிச்சி எழுதிக் கொடுத்திட்டின்னா உன்னை நடுவீதியில் விட்டுருவாங்க பசங்க" என்றார் வக்கீல்
செந்தில்நாயகம்.

"எல்லாம் ஒரு லாஜிக்தான் செந்தில்"

"என்ன?"


"நான் சொத்துக்களை பிரிச்சிக் கொடுக்கலைன்னா எப்படா கிழம் மண்டையைப் போடும்னு என்னோட சாவைப் பத்தியே நினைச்சிட்டு இருப்பாங்க. நான் பிரிச்சிக் கொடுத்திட்டா என்னை காப்பாத்தாம மறந்துருவாங்கதான். ஆனா நான் சாகணும்னு நினைக்கமாட்டாங்களே. நான் பாட்டுக்கு ஒரு ஓரத்தில் எங்காவது கிடந்துட்டுப் போறேன்.

நான் மீதி இருக்கிற நாளை வாழ நினக்கறேன் சார். நான் சாகணும்னு யாரும் நினைக்கக்கூடாது."

- சூர்யகுமாரன்தலை முடி உதிர்கிறதா ?

கூந்தலை வளர்ப்பது பெரிதல்ல. அதை பராமரிப்பதுதான் மிகவும் கஷ்டமான விஷயம். சிலர் முடி உதிர்வதால் பெரிதும் மனவேதனைக்கு ஆளாகியிருக்கின்றனர்.


தலை முடி உதிர்வை சரிப்படுத்த சில வழிமுறைகள்:
 • கூந்தல் மிக அதிகமாக உதிரும்போது, வெந்தயக்கீரையை அரைத்துத் தலையில் தடவிக் கொண்டு கொஞ்ச நேரம் கழித்துக் கூந்தலைத் தண்ணீரால் அலசினால் முடி உதிருவது நிற்கும்.

 • ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் ஒரு முட்டையை நன்கு கலக்கி அதை தலையில் தேய்த்துக்கொண்டு அரை மணிநேரம் ஊறவிடவும். பிறகு குளிர்ந்த இருந்த நீரில் தலையை நன்றாக அலசி ஷாம்பூ போட்டுக் குளிக்கவும். இதனால் தலைமுடிக்கு நல்ல ஊட்டம் கிடைப்பதுடன் கூந்தல் மிருதுவாகவும் ஆகும்.


 • தேநீர் வடிகட்டிய பின் மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்துவிட்டு தலையில் தேய்த்துக் குளித்தால் தலைமுடி பளபளப்படையும். 10-15 செம்பருத்தி இலைகளைப் பறித்து அம்மியில் வைத்து விழுதாக அரைத்து ஓரே ஒரு மேசைக் கரண்டி சீய்க்காய்த்தூளைக் கலந்து நீராடினால் தலைமுடி பளபளக்கும்.

 • இளநரை வராமல் தடுக்க மருதாணித் தைலம், அரைகீரைத் தைலம், பொன்னங்கண்ணி தைலம், கரிசாலங்கண்ணி தைலம், செய்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தரும்.
நன்றி :தினகரன்Related Posts with Thumbnails
 
back to top