மாயனின் லீலையில் மயங்குது உலகம் - இளையராஜா

கண்கள் சொல்கின்ற கவிதை - இளம் வயதில் எத்தனை கோடி?-ன்னு ஒத்தை வரியில் கண்ணனையும் காதலையும் ஒரு சேரக் காட்டியவர் இசைஞானி இளையராஜா! 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' என்னும் மனம் மயக்கும் பாட்டில்!

ரொம்ப ரொமான்டிக் ராகம்! ஆனா அவ்வளவு சீக்கிரம் டைல்யூட் பண்ணவே விடாது! ஸ்வர வரிசையும் ரொம்ப சிக்கலானது!


'கண்ணன் - ராதை’ பாடல் என்பதால் பாடல் முழுவதும் புல்லாங்குழலின் மயக்கும் பிரவாகம்!! இசை மேதைகள், அறிஞர்கள், கர்னாடக இசை ஜாம்பவான்கள், விமர்சகர்கள் அனைவரும் வியந்து கொண்டாடும் பாடல் இது என்பதாலும், இந்தப் பாடலில் உள்ள நுணுக்கங்களை அலசுவது ஒரு பக்கம் இருக்கட்டும், விளங்கிக் கொள்வது என்பது கூட என் புத்திக்கு எட்டாத விஷயம் என்பதாலும், ஒரு மேதை Compose செய்த பாடலைப் பாடியிருப்பது இன்னொரு மாமேதை என்பதாலும், பாடலைப் பற்றிய செய்திகளை மட்டும் கீழே காண்க!!

இந்தப் பாடலைக் குறித்து இசைஞானி இப்படிக் கூறுகிறார்:-

“தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் ‘கவிக்குயில்’ என்று ஒரு படம் எடுத்தார். அதில் கதாநாயகி தன் மனதில் ஒரு ராகம் இருப்பதாகவும், அதைக் கதாநாயகனால் இசைத்துக் காட்ட முடியுமா என்றும் சவால் விடுவார். நாயகனோ அந்த இசையைப் புல்லாங்குழலில் வாசித்துப், பிறகு பாட்டாகவும் பாடிக் காட்டி நாயகி மனதில் இடம் பிடிப்பான். இதற்கு ஒரு Tune compose செய்தேன். அதைக் கேட்ட பஞ்சு சார், ‘இதை பாலமுரளி கிருஷ்ணா போன்ற பெரிய பாடகர்கள் பாடினால் நன்றாக இருக்கும்’, என்று சொன்னார். தொடர்ந்து பாலமுரளி கிருஷ்ணாவிடமும் பேசி நிச்சயித்து விட்டார்கள்.

‘பாலமுரளி கிருஷ்ணா பாடப்போகிறார்’ என்று கேட்டது முதலே எனக்கு பயம். காரணம், அவருக்கு தெரிந்த அளவுக்கு இசை எனக்குத் தெரியாது. “இசை மேதையாக ரசிகர்கள் கொண்டாடும் பாலமுரளி கிருஷ்ணா எனது இசையில் பாடப்போகிற விஷயம் தெரிய வந்ததுமே எனக்குக் கொஞ்சம் கவலையாகிவிட்டது. எல்லாம் நல்லபடியாக நடந்து முடிய வேண்டுமே?"

ரிகர்சலுக்கு வந்தார். பயத்தோடு பாடலைச் சொன்னேன். அவர் எழுதிக்கொண்டார்.

‘என்ன டியூன்’? என்றார். பாடிக் காட்டினேன்.

ஸ்வரத்தை பாடலின் வரிகளின் மேல் எழுதிப் பாடினார். அதுதான் ‘சின்னக் கண்ணன்’ அழைக்கிறான் பாடல்.


பாடலைப் பாடியவர், 'இதுதான் புதிது! சரணத்தில் உச்சஸ்தாயியில் இரண்டாவது வரிக்கு அமைத்திருக்கும் இசையில் ‘ஸகரிக மரினி’ என்று ஆரோகணபரமான பிரயோகத்தை, அவரோகணத்தில் அமைத்திருக்கிறீர்களே? அதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

சாதாரணமாக கர்னாடக இசைக் கச்சேரிகளில் கூட வித்வான்கள் இந்த ராகத்தை நீண்ட நேரம் பாட மாட்டார்கள். அதை இவ்வளவு இனிமையான பாடலாக அமைத்து விட்டீர்களே!’ என்று மனம் விட்டுப் பாராட்டினார். என் இசைப் பயணத்தில் முக்கியமானதொரு ஊக்குவிப்பாக அமைந்து என்னை உற்சாகப் படுத்திய நிகழ்ச்சி இது!’ என்கிறார்.
ஜெயா டி.வியின் ‘ராகமாலிகா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் இசைஞானியைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, “எந்நூற்று சொச்சம் படங்கள்.. இனி மனித வரலாற்றில் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் யாராலும் முறியடிக்க முடியாத ஒரு சாதனை!

என்னுடைய ‘கண்கள் இரண்டால்’ (படம்: சுப்ரமணியபுரம்) வெளியில பிரபலமாக ஆரம்பித்த பொழுது, எந்தப் பத்திரிக்கையை எடுத்தாலும், சங்கீதம் படித்தவர்கள் படிக்காதவர்கள், யாரைக் கேட்டாலும் ‘இது சின்னக் கண்ணன் அழைக்கிறான் தானே?’ என்று கேட்டார்கள். அதை ‘Imitation is the best form of Flattery’ அப்டின்னு கூட எடுத்துக்கலாம்.

அவர் (இசைஞானி) கொடுத்திருந்த ரீதிகெளளையை நான் இன்னொரு விதமாகக் கொடுத்ததில் எனக்கு சந்தோஷம் தான்! அவர் மூலமாக எனக்குக் கிடைத்த இந்த அங்கீகாரத்தை நான் அவருக்கே சமர்ப்பிக்கிறேன்” என்றார்.
‘Cheeni Kum’ ஹிந்தி திரைப்படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னர், ‘Headlines Today’ தொலைக்காட்சியில் இசைஞானியைக் குறித்தும், அவர் அந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பது பற்றியும் ஒரு செய்தித் தொகுப்பு ஒன்றை ஒளிபரப்பினார்கள். அதில் ஒரு இசை விமர்சகர் (பெயர் மறந்து விட்டது) இவ்வாறு கூறியது நினைவில் உள்ளது.

“உலகத்தில் எந்த இசையமைப்பாளருக்கும் இல்லாத ஒரு பெருமை இசைஞானி இளையராஜாவுக்கு உண்டு. 1980-களில் இசைஞானி இசையமைத்த படத்தை விளம்பரப்படுத்தும் பொழுது ‘ராகதேவன் இளையராஜா இன்னிசையில் ________ (படத்தின் பெயர்)’ என்று விளம்பரப்படுத்துவார்கள்.

ஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குப் படத்தின் பெயரின் முன்னால், ஒரு இசையமைப்பாளரின் பெயரைப் போட்டு விளம்பரப்படுத்தப்பட்ட பெருமை உலகிலேயே இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு” என்று கூறினார். மேலும் அவர் கூறும்பொழுது, “Only a Maestro like Ilayaraja can compose a master piece like “சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்றார்.


கண்ணன்-ராதையின் காதலாக இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம், ஒரு மாஸ்டர் பீஸ் பாடலைக் கேட்கும் திருப்தி கிடைக்கும். இதே பாட்டை இன்னொரு வெர்ஷனாக, ஜானகி அதே படத்தில் பாடியிருப்பார். ஆனால் பாலமுரளி கிருஷ்ணா பாடியது தான் ஹிட்டோ ஹிட்!

இந்தக் கிளாசிக்கல் பாட்டில் வரும் வாத்திய இசைக்கு, ஐரோப்பிய Baraoque இசைப் பாரம்பரியத்தைப் பயன்படுத்தியதாகச் சொல்லுவார்கள்; ரீதிகெளளை ராகம் ஒரு பக்கம், Baraoque மறு பக்கம்! - ஆனால் ஒன்றை ஒன்று விழுங்காது! பாடல் வரிகளும் விழுங்காது வந்து விழும் இனிய இசை! ராஜாவின் இசை ஆய்வு (experiment) அப்போதே தொடங்கி விட்டது அல்லவா?

எல்லாம் சரி! பாடல் எதோ? - இதோ! மாயனின் லீலையில் மயங்குது உலகம்! நாமும் மயங்குவோம்! வாங்க!


இந்தப் பதிவிலேயே கேட்க play button-ஐச் சொடுக்கவும்!

கண்ணன் என்றாலே புல்லாங்குழல் தானே! பாடலின் ஓப்பனிங், Flute Bit-ஐ, Baroque-வோடு கேட்கத் தவறாதீர்கள்! :)

படம்: கவிக்குயில்
இசை: இளையராஜா
குரல்: பாலமுரளி கிருஷ்ணா
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
ராகம்: ரீதி கெளளை

கண்ணதாசனின் காதல் பாடல் வரிகள் ....
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
ராதையை, பூங் கோதையை,
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!

கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி?
என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை!
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை!
(சின்னக் கண்ணன்)

நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
உன் புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகே இளமை ரதமே!
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்!
(சின்னக் கண்ணன்)

சின்னக் கண்ணன் அழைக்கிறான் - காணொளி:Thanks : தினத்தந்தியின் ‘வரலாற்றுச் சுவடுகள்'
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!இன்டர்வியூ போகும் முன் இத படிக்க ஒரு முறை!

இண்டர்விக்கு போகும் முன் இத படிக்க ஒரு முறை.... வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

இன்டர்வியூவில் கேட்கப்படும் கேள்விகளின் வகைகள் !

ஒரு நேர்முகத் தேர்வு செயல்பாட்டைப் பொறுத்தவரை, கேள்வி-பதில் பகுதிதான், அனைத்திற்கும் தலையாய அம்சமாக விளங்கி, அந்த செயல்பாட்டிற்கே அர்த்தத்தைக் கொடுக்கிறது. பொதுவாக, எந்தமாதிரியான கேள்விகள், நேர்முகத்தேர்வில் கேட்கப்படும் என்பதை நீங்கள் தெரிந்துகொண்டால், நேர்முகத் தேர்வின்போது, அவற்றை எளிதாகப் புரிந்து, தெளிவாக பதிலளித்து வெற்றிபெற ஏதுவாக இருக்கும். பொதுவாக, 7 வகையான கேள்விகள் உங்களிடம் கேட்கப்படும். அவற்றின் விபரங்கள்:

வெளிப்படையான கேள்விகள்-

உங்களை இலகுவாக உணரவைத்து, ஊக்கப்படுத்தி பேச வைப்பதற்கே இத்தகைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. மேலும், உங்களை தீவிர சிந்தனைக்குள் தள்ளும் வாய்ப்பை அதிகப்படுத்தவும் இந்தவகை கேள்விகள் கேட்கப்படுகின்றன.
உதாரணமாக,
 1. உங்களைப் பற்றி சொல்லுங்கள்
 2. உங்களின் விருப்ப விஷயங்கள் மற்றும் செயல்பாடுகள் என்ன?
 3. உங்களுக்கு சமீபத்தில் ஏற்பட்ட நெருக்கடி சூழல் என்ன?
 4. கலப்பு பொருளாதாரத்தின் நன்மைகள் என்ன?
 5. இந்திய பொருளாதாரத்தில் பன்னாட்டு கம்பெனிகளின் தாக்கம் எப்படி?

Closed கேள்விகள் :-

இந்தப் பகுதியில் கேட்கப்படும் கேள்விகள், முந்தையப் பகுதி கேள்விகளிலிருந்து மாறுபட்டது. உதாரணமாக,
 1. உங்கள் படிப்பை எப்போது முடித்தீர்கள்?
 2. பட்டப்படிப்பில் உங்களது பாடப்பிரிவு என்ன?
 3. உங்களின் முதல் தொழில்முறைப் பயிற்சியை எங்கே பெற்றீர்கள்?
 4. உங்களுக்கு டேட்டா ப்ராசஸிங் தெரியுமா?

விசாரணைக் கேள்விகள் :-

இந்தவகை கேள்விகள், ஒரு தலைப்பு அல்லது விஷயம் பற்றி விரிவாகப் பேசும் பொருட்டு, உங்களை உற்சாகப்படுத்த கேட்கப்படுகின்றன.

Reflective கேள்விகள் :-

ஒரு இன்டர்வியூவில், நீங்கள் சொன்ன விஷயங்களை, நேர்முகத் தேர்வுகளை நடத்துபவர் புரிந்துகொண்டதை உறுதிசெய்ய இத்தகைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. உதாரணமாக,
 1. நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இந்தியாவிலுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும், தனியார்மயமாக்கிவிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
 2. இந்தியாவின் பொருளாதார சுதந்திரத்தை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன், சரியா?
 3. திரைப்படங்களில் வரும் வன்முறை காட்சிகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்றுதானே நீங்கள் கூறுகிறீர்கள்?

Loaded கேள்விகள் :-

ஒரு கடினமான அல்லது சிக்கலான சூழலை சமாளிக்கும் திறன் உங்களுக்கு இருக்கிறதா? என்று சோதித்து அறியும் பொருட்டு, இவ்வகை கேள்விகள் உங்களிடம் கேட்கப்படுகின்றன. உதாரணமாக,
 1. நீங்கள் மிகவும் குள்ளமாக இருக்கிறீர்கள், இதை ஒரு ஊனமாக நீங்கள் கருதவில்லையா?
 2. பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடத்திலேயே ராமர் கோயில் கட்டப்பட வேண்டுமா?

Hypothetical கேள்விகள் :-

இத்தகைய கேள்விகளும் Loaded கேள்விகளைப் போலத்தான். ஒரு செயற்கையான சூழ்நிலை உங்களுக்குத் தரப்பட்டு, அதற்கேற்ப நீங்கள் எவ்வாறு முடிவெடுக்கிறீர்கள் என்ற வகையில் உங்களது திறனை சோதிக்க இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன. உதாரணமாக,
 1. நிறுவனத்தின் லாரி மோதியதால் ஒரு தொழிலாளி காயமடைந்துள்ளார். இதனால் கொதிப்படைந்த இதர தொழிலாளர்கள், நிறுவனத்தின் இதர வாகனங்களை அடித்து நொறுக்க எத்தனிக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையை ஒரு மேலதிகாரி என்ற முறையில் எவ்வாறு கையாள்வீர்கள்?
 2. உங்கள் சக ஊழியர்களில் ஒருவர், நிறுவனத்திற்கு ஒவ்வாத ஒரு காரியத்தைப் பணத்திற்காக செய்வதை நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள். சிகிச்சைப் பெறும் தனது நோயாளி தாயாருக்காக அவர் இந்தத் தவறை செய்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியவருகிறது. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

Leading கேள்விகள் :-

உங்களிடமிருந்து சாதகமான பதில் வருகிறதா? என்பதை சோதிக்க இத்தகைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. உதாரணமாக,
 1. எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் நமது நிறுவனம் சந்தையில் முன்னனியில் இருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?
 2. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துகின்றன என்ற கருத்தில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?
 3. நமது நாட்டின் பொருளாதார அமைப்பில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

மேற்கூறிய கேள்வி வகைகளை கையாளும் முறைகள் :-

ஒரு கேள்விக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்கிறீர்கள் என்ற முறை, நீங்கள் அளிக்கும் பதிலைவிட முக்கியமானது. இதன்மூலம் உங்களது தகவல்தொடர்பு திறன் வெளிப்படுகிறது. கேள்விகளை கையாளும் முறை குறித்து சில விரிவான ஆலோசனைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

கவனித்தல் :-

ஒரு நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை சரியாக கவனிக்காத பட்சத்தில், சரியான பதில்களை வழங்க முடியாது. எனவே, கவனம் என்பது மிக முக்கியம். இன்டர்வியூ எடுப்பவர், பேசும்போதே நீங்கள் குறுக்கே பேசக்கூடாது. எதிலும் அவசரப்படக்கூடாது. அவர் முழுவதுமாக பேசி முடிக்கும்வரை பொறுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் ஆரம்ப கட்டத்திலேயே வெளியேற்றப்படுவீர்கள்.

நுட்பம் முக்கியம் :-

நீங்கள் அளிக்கும் பதிலானது, நுட்பமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். தேதி, நேரம், நபர், இடம் போன்ற விஷயங்களை தெளிவாக தெரிந்துகொண்டு, தவறின்றி பதிலளிக்க வேண்டும். உங்களுக்கு தேதி, நபர் போன்ற நுட்பமான விஷயங்கள் சரியாக தெரியவில்லை எனில், அவற்றை குறிப்பிட வேண்டாம். ஏனெனில், முழுமையற்ற மற்றும் தவறான பதில்கள் உங்களது வாய்ப்பினை குறைக்கலாம். இன்டர்வியூ நடத்துபவரை ஏமாற்ற நினைக்க வேண்டாம். அது உங்களுக்கே ஆபத்தாக முடியலாம். தவறான பதிலை தருவதைவிட, பதில் தெரியாது என்று ஒப்புக்கொள்வது நல்லது. அது உங்கள் மேல் ஒரு மரியாதையை ஏற்படுத்தும். ஏனெனில், அனைவருக்கும், அனைத்தும் தெரிந்திருக்காது. உங்கள் குறையை ஒப்புக்கொள்வதில் தவறில்லை.

சுருக்கமாக பதிலளித்தல் :-

என்ன கேள்வி கேட்கப்படுகிறதோ, அதற்கு ஏற்றவாறு சுருக்கமான, தெளிவான பதிலை கூறுங்கள். கேள்வியை நன்கு கவனித்தல் முக்கியம். நீளமான பதில் சிறப்பான பதில் என்று அர்த்தமல்ல. ஒரு கேள்விக்கு பதிலளிக்க 1 நிமிடத்திற்கு மேல் எடுக்க வேண்டாம், அது மிகவும் சிக்கலான கேள்வியாக இருந்தால் தவிர.

குறிப்பான பதில் :-

பலர், நேர்முகத் தேர்வில் பதிலளிக்கும்போது, கேள்விக்கு தொடர்பில்லாது விஷயங்களையும் சேர்த்துப் பேசுகின்றனர். இதன்மூலம் கேள்வி கேட்பவரை கவர முயல்கின்றனர். ஆனால் இது தவறு. கேள்விக்கான சரியான பதிலை அளிப்பதே, குறிப்பிட்ட வேலைக்கு நீங்கள் பொருத்தமானவர் என்ற எண்ணத்தை கேள்வி கேட்பவரிடம் விதைக்கும். சரியான, முறையான மற்றும் சிறப்பான வார்த்தைகளை பயன்படுத்துவது நல்லது. கேள்விக் கேட்பவரை குழப்பும் விதத்தில் பதிலளிக்க வேண்டாம்.

தெளிவான பதில் :-

நேர்முகத்தேர்வில் நீங்கள் கூறும் பதிலானது, தெளிவானதாகவும், நேரடியானதாகவும் இருக்க வேண்டும். "நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? இன்னொருமுறை சொல்ல முடியுமா? போன்ற கேள்விகளை இன்டர்வியூ நடத்துபவர்கள் கேட்காத வண்ணம் உங்களின் பதில் இருக்க வேண்டும். உங்களுடைய மொழித்திறன், உங்களின் தொழில்திறனை பிரதிபலிக்கிறது. எனவே, தெளிவாக பேசத் தெரிந்தவரே, இன்டர்வியூ நடத்துபவர்களை கவர முடியும்.

நேர்மறையாக பதிலளித்தல் :-

உங்களுக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை வெளிக்கொணர, வேண்டுமென்றே உங்களிடம் எதிர்மறை கேள்விகள் கேட்கப்படலாம். எனவே, நீங்கள் எதிர்மறை கேள்விகள் கேட்கப்பட்டாலும்கூட, நேர்மறையாகவே பதிலளிக்க வேண்டும். அப்போது, உங்களின் வாய்ப்புகளை நீங்கள் அதிகப்படுத்திக்கொள்ள முடியும்.

தர்க்கரீதியான பதில்கள் :-

உங்களின் தர்க்கரீதியிலான சிந்திக்கும் திறனை அளவிட, அதுதொடர்பான கேள்விகள் கேட்கப்படும். தர்க்கம் மற்றும் பகுத்தறிவற்ற பதில்கள், உங்களின் ஒருங்கிணைக்கப்படாத மற்றும் அமைப்பற்ற ஆளுமைத்திறனை வெளிப்படுத்தும். எனவே, பதிலளிக்கையில் இதுபோன்ற அம்சங்களில் மிகவும் கவனமாக இருக்கவும்.

வழக்கமான கேள்விகள் :-

ஏறக்குறைய, அனைத்து இன்டர்வியூக்களிலும், சில வழக்கமான கேள்விகள் எப்போதுமே கேட்கப்படும். எனவே, அதுபோன்ற கேள்விகளை அடையாளம் கண்டு, அதற்கேற்ப உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், உங்களின் நண்பர்களை வைத்து, ஒரு மாதிரி இன்டர்வியூ நிகழ்ச்சியையும் நடத்திப் பார்க்கலாம். இதன்மூலம் ஒரு நடைமுறைப் பயிற்சியை நீங்கள் பெறலாம்.

பொதுவாக அனைத்து இன்டர்வியூக்களிலும் கேட்கப்படும் சில கேள்விகள் :-

 1. உங்களைப் பற்றி சொல்லுங்கள்,
 2. உங்களின் விருப்பங்கள் மற்றும் அதுசார்ந்த நடவடிக்கைகள் என்னென்ன?
 3. பணி தொடர்பாக உங்களின் திட்டங்கள் என்னென்ன?
 4. நாங்கள் ஏன் உங்களை இந்தப் பணிக்கு அமர்த்துகிறோம்? அல்லது இந்தப் பணிக்கு நீங்கள் எவ்வாறு பொருத்தமானவர்?
 5. எங்கள் நிறுவனத்தில் சேர நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள்?
 6. உங்கள் பணி அனுபவம் குறித்து சொல்லுங்கள்.
 7. உங்களைப் பொறுத்தவரை, ஒரு சிறந்த நிறுவனத்தில் பணிக்கு சேர்வது என்றால் என்ன?
 8. படிப்பில் நீங்கள் செய்த சில சாதனைகளைப் பற்றி கூறுங்கள்
 9. இந்தப் பணியை நீங்கள் விரும்புவதற்கான காரணங்கள் என்ன?
 10. தற்போது நீங்கள் செய்துவரும் வேலையில் உங்களின் பொறுப்புகள் என்னென்ன?
 11. உங்களின் சாதக அம்சங்கள் என்னென்ன?
 12. நீங்கள் பணியில் சந்தித்த ஒரு சவாலான பிரச்சினை மற்றும் அதைத் தீர்க்க நீங்கள் கையாண்ட வழிமுறை ஆகியவற்றைப் பற்றி கூறுங்கள்.
 13. உங்கள் பலவீனம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?
 14. உங்களை நீங்கள் எவ்வாறு மதிப்பிட்டுக் கொள்கிறீர்கள்?
 15. நீங்கள் ஒரு வழிகாட்டியா? அல்லது வழிநடப்பவரா?
 16. எங்கள் நிறுவனத்தில் நீங்கள் எவ்வளவு நாட்கள் பணிபுரிய உத்தேசித்துள்ளீர்கள்?
 17. நீங்கள் விரும்புவது முழுநேரப் பணியா? அல்லது பகுதிநேரப் பணியா?
 18. சற்று கீழ்நிலைப் பணியாக இருந்தாலும், சிறிதுகாலத்திற்கு அதை ஒப்புக்கொள்வீர்களா?
 19. எங்களின் நிறுவனத்தில் எப்போது சேர விரும்புகிறீர்கள்?
இதுபோன்ற கேள்விகளுக்கு, நேர்மறையான, நம்பிக்கையான, சாதுர்யமான, தெளிவான, சுருக்கமான, எளிமையான முறையில் பதிலளிக்க பயிற்சி எடுக்க வேண்டும். பின்னர், வெற்றி தானாக உங்களைத் தேடிவரும்.
உலகை பார்த்து வாழ்பவன்
சராசரி மனிதன்!

உலகமே பார்க்க வாழ்பவன்
சாதனை மனிதன்!
நன்றி: கல்வி மலர்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!ஈமெயில் அனுப்புங்கப்பா ....!

தமிழக அரசு சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட M.L.A-கள் பலர் பொது மக்கள் தரும் மனுவை / கோரிக்கையை படிப்பதில்லை. அப்படியே அதனை தந்தாலும் அவரது சாகாக்கள் அதனை அவருடன் கொண்டு சேர்ப்பதில்லை. இதனால் பொது மக்களிடம் ஒரு தவறான கருத்து உருவாகிறது. அதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஈமெயில் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.


முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இந்த திட்டத்தை துவக்கி வைத்து ஒவ்வொரு தொகுதி M.L.A.க்கும் ஒரு E-Mail ID கொடுத்துள்ளார். இனிமேல் உங்கள் "நியாயமான" கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம்.

எல்லா M.L.A.க்கும் லேப்டாப் (Laptop) கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் உங்கள் கோரிக்கைகளுக்கு கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம்.


234 தொகுதி M.L.A.க்கும் தனி தனியே கொடுக்கப்பட்டுள்ளது.....

தொகுதி பெயர் - M.L.A ஈமெயில் ID

1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in
2 Alandur - mlaalandur@tn.gov.in
3 Alangudi - mlaalangudi@tn.gov.in
4 Alangulam - mlaalangulam@tn.gov.in
5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in
6 Anaicut -- mlaanaicut@tn.gov.in
7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in
8 Andimadam - mlaandimadam@tn.gov.in
9 Andipatti - mlaandipatti@tn.gov.in
10 AnnaNagar - mlaannanagar@tn.gov.in
11 Arakkonam - mlaarakkonam@tn.gov.in
12 Arantangi-- mlaarantangi@tn.gov.in
13 Aravakurichi - mlaaravakurichi@tn.gov.in
14 Arcot - mlaarcot@tn.gov.in
15 Ariyalur --mlaariyalur@tn.gov.in
16 Arni -- mlaarni@tn.gov.in
17 Aruppukottai - mlaaruppukottai@tn.gov.in
18 Athoor - mlaathoor@tn.gov.in
19 Attur - mlaattur@tn.gov.in
20 Avanashi - mlaavanashi@tn.gov.in
21 Bargur - mlabargur@tn.gov.in
22 Bhavani - mlabhavani@tn.gov.in
23 Bhavanisagar - mlabhavanisagar@tn.gov.in
24 Bhuvanagiri - mlabhuvanagiri@tn.gov.in
25 Bodinayakkanur - mlabodinayakkanur@tn.gov.in

26 Chengalpattu - mlachengalpattu@tn.gov.in
27 Chengam - mlachengam@tn.gov.in
28 Chepauk - mlachepauk@tn.gov.in
29 Cheranmahadevi - mlacheranmahadevi@tn.gov.in
30 Cheyyar - mlacheyyar@tn.gov.in
31 Chidambaram - mlachidambaram@tn.gov.in
32 Chinnasalem - mlachinnasalem@tn.gov.in
33 CoimbatoreEast - mlacoimbatoreeast@tn.gov.in
34 CoimbatoreWest - mlacoimbatorewest@tn.gov.in
35 Colachel - mlacolachel@tn.gov.in
36 Coonoor - mlacoonoor@tn.gov.in
37 Cuddalore - mlacuddalore@tn.gov.in
38 Cumbum - mlacumbum@tn.gov.in
39 Dharapuram - mladharapuram@tn.gov.in
40 Dharmapuri - mladharmapuri@tn.gov.in
41 Dindigul - mladindigul@tn.gov.in
42 Edapadi - mlaedapadi@tn.gov.in
43 Egmore - mlaegmore@tn.gov.in
44 Erode - mlaerode@tn.gov.in
45 Gingee - mlagingee@tn.gov.in
46 Gobichettipalayam - mlagobichettipalayam@tn.gov.in
47 Gudalur - mlagudalur@tn.gov.in
48 Gudiyatham - mlagudiyatham@tn.gov.in
49 Gummidipundi - mlagummidipundi@tn.gov.in
50 Harbour - mlaharbour@tn.gov.in

51 Harur - mlaharur@tn.gov.in
52 Hosur - mlahosur@tn.gov.in
53 Ilayangudi - mlailayangudi@tn.gov.in
54 Jayankondam - mlajayankondam@tn.gov.in
55 Kadaladi - mlakadaladi@tn.gov.in
56 Kadayanallur - mlakadayanallur@tn.gov.in
57 Kalasapakkam - mlakalasapakkam@tn.gov.in
58 Kancheepuram - mlakancheepuram@tn.gov.in
59 Kandamangalam - mlakandamangalam@tn.gov.in
60 Kangayam - mlakangayam@tn.gov.in
61 Kanniyakumari - mlakanniyakumari@tn.gov.in
62 Kapilamalai - mlakapilamalai@tn.gov.in
63 Karaikudi - mlakaraikudi@tn.gov.in
64 Karur - mlakarur@tn.gov.in
65 Katpadi - mlakatpadi@tn.gov.in
66 Kattumannarkoil - mlakattumannarkoil@tn.gov.in
67 Kaveripattinam - mlakaveripattinam@tn.gov.in
68 Killiyoor - mlakilliyoor@tn.gov.in
69 Kinathukadavu - mlakinathukadavu@tn.gov.in
70 Kolathur - mlakolathur@tn.gov.in
71 Kovilpatti - mlakovilpatti@tn.gov.in
72 Krishnagiri - mlakrishnagiri@tn.gov.in
73 Krishnarayapuram - mlakrishnarayapuram@tn.gov.in
74 Kulithalai - mlakulithalai@tn.gov.in
75 Kumbakonam - mlakumbakonam@tn.gov.in

76 Kurinjipadi - mlakurinjipadi@tn.gov.in
77 Kuttalam - mlakuttalam@tn.gov.in
78 Lalgudi - mlalalgudi@tn.gov.in
79 MaduraiCentral - mlamaduraicentral@tn.gov.in
80 MaduraiEast - mlamaduraieast@tn.gov.in
81 MaduraiWest - mlamaduraiwest@tn.gov.in
82 Maduranthakam - mlamaduranthakam@tn.gov.in
83 Manamadurai - mlamanamadurai@tn.gov.in
84 Mangalore - mlamangalore@tn.gov.in
85 Mannargudi - mlamannargudi@tn.gov.in
86 Marungapuri - mlamarungapuri@tn.gov.in
87 Mayiladuturai - mlamayiladuturai@tn.gov.in
88 Melmalaiyanur - mlamelmalaiyanur@tn.gov.in
89 Melur - mlamelur@tn.gov.in
90 Mettupalayam - mlamettupalayam@tn.gov.in
91 Mettur - mlamettur@tn.gov.in
92 Modakkurichi - mlamodakkurichi@tn.gov.in
93 Morappur - mlamorappur@tn.gov.in
94 Mudukulathur - mlamudukulathur@tn.gov.in
95 Mugaiyur - mlamugaiyur@tn.gov.in
96 Musiri - mlamusiri@tn.gov.in
97 Mylapore - mlamylapore@tn.gov.in
98 Nagapattinam - mlanagapattinam@tn.gov.in
99 Nagercoil - mlanagercoil@tn.gov.in
100 Namakkal - mlanamakkal@tn.gov.in

101 Nanguneri - mlananguneri@tn.gov.in
102 Nannilam - mlanannilam@tn.gov.in
103 Natham - mlanatham@tn.gov.in
104 Natrampalli - mlanatrampalli@tn.gov.in
105 Nellikkuppam - mlanellikkuppam@tn.gov.in
106 Nilakottai - mlanilakottai@tn.gov.in
107 Oddanchatram - mlaoddanchatram@tn.gov.in
108 Omalur - mlaomalur@tn.gov.in
109 Orathanad - mlaorathanad@tn.gov.in
110 Ottapidaram - mlaottapidaram@tn.gov.in
111 Padmanabhapuram - mlapadmanabhapuram@tn.gov.in
112 Palacode - mlapalacode@tn.gov.in
113 Palani - mlapalani@tn.gov.in
114 Palayamkottai - mlapalayamkottai@tn.gov.in
115 Palladam - mlapalladam@tn.gov.in
116 Pallipattu - mlapallipattu@tn.gov.in
117 Panamarathupatti - mlapanamarathupatti@tn.gov.in
118 Panruti - mlapanruti@tn.gov.in
119 Papanasam - mlapapanasam@tn.gov.in
120 Paramakudi - mlaparamakudi@tn.gov.in
121 ParkTown - mlaparktown@tn.gov.in
122 Pattukkottai - mlapattukkottai@tn.gov.in
123 Pennagaram - mlapennagaram@tn.gov.in
124 Perambalur - mlaperambalur@tn.gov.in
125 Perambur - mlaperambur@tn.gov.in

126 Peranamallur - mlaperanamallur@tn.gov.in
127 Peravurani - mlaperavurani@tn.gov.in
128 Periyakulam - mlaperiyakulam@tn.gov.in
129 Pernambut - mlapernambut@tn.gov.in
130 Perundurai - mlaperundurai@tn.gov.in
131 Perur - mlaperur@tn.gov.in
132 Pollachi - mlapollachi@tn.gov.in
133 Polur - mlapolur@tn.gov.in
134 Pongalur - mlapongalur@tn.gov.in
135 Ponneri - mlaponneri@tn.gov.in
136 Poompuhar - mlapoompuhar@tn.gov.in
137 Poonamallee - mlapoonamallee@tn.gov.in
138 Pudukkottai - mlapudukkottai@tn.gov.in
139 Purasawalkam - mlapurasawalkam@tn.gov.in
140 Radhapuram - mlaradhapuram@tn.gov.in
141 Rajapalayam - mlarajapalayam@tn.gov.in
142 Ramanathapuram - mlaramanathapuram@tn.gov.in
143 Ranipet - mlaranipet@tn.gov.in
144 Rasipuram - mlarasipuram@tn.gov.in
145 Rishivandiyam - mlarishivandiyam@tn.gov.in
146 Dr.RadhakrishnanNagar - mlarknagar@tn.gov.in
147 Royapuram - mlaroyapuram@tn.gov.in
148 Saidapet - mlasaidapet@tn.gov.in
149 Salem -I - mlasalem1@tn.gov.in
150 Salem-II - mlasalem2@tn.gov.in

151 Samayanallur - mlasamayanallur@tn.gov.in
152 Sankaranayanarkoi - mlasankaranayanarkoil@tn.gov.in
153 Sankarapuram - mlasankarapuram@tn.gov.in
154 Sankari - mlasankari@tn.gov.in
155 Sathyamangalam - mlasathyamangalam@tn.gov.in
156 Sattangulam - mlasattangulam@tn.gov.in
157 Sattur - mlasattur@tn.gov.in
158 Sedapatti - mlasedapatti@tn.gov.in
159 Sendamangalam - mlasendamangalam@tn.gov.in
160 Sholavandan - mlasholavandan@tn.gov.in
161 Sholinghur - mlasholinghur@tn.gov.in
162 Singanallur - mlasinganallur@tn.gov.in
163 Sirkazhi - mlasirkazhi@tn.gov.in
164 Sivaganga - mlasivaganga@tn.gov.in
165 Sivakasi - mlasivakasi@tn.gov.in
166 Sriperumbudur - mlasriperumbudur@tn.gov.in
167 Srirangam - mlasrirangam@tn.gov.in
168 Srivaikuntam - mlasrivaikuntam@tn.gov.in
169 Srivilliputhur - mlasrivilliputhur@tn.gov.in
170 Talavasal - mlatalavasal@tn.gov.in
171 Tambaram - mlatambaram@tn.gov.in
172 Taramangalam - mlataramangalam@tn.gov.in
173 Tenkasi - mlatenkasi@tn.gov.in
174 Thalli - mlathalli@tn.gov.in
175 Thandarambattu - mlathandarambattu@tn.gov.in

176 Thanjavur - mlathanjavur@tn.gov.in
177 Theni - mlatheni@tn.gov.in
178 Thirumangalam - mlathirumangalam@tn.gov.in
179 Thirumayam - mlathirumayam@tn.gov.in
180 Thirupparankundram - mlathirupparankundram@tn.gov.in
181 Thiruvattar - mlathiruvattar@tn.gov.in
182 Thiruverambur - mlathiruverambur@tn.gov.in
183 Thiruvidamarudur - mlathiruvidamarudur@tn.gov.in
184 Thiruvonam - mlathiruvonam@tn.gov.in
185 Thiruvottiyur - mlathiruvottiyur@tn.gov.in
186 Thondamuthur - mlathondamuthur@tn.gov.in
187 Thottiam - mlathottiam@tn.gov.in
188 Tindivanam - mlatindivanam@tn.gov.in
189 Tiruchendur - mlatiruchendur@tn.gov.in
190 Tiruchengode - mlatiruchengode@tn.gov.in
191 Tirunavalur - mlatirunavalur@tn.gov.in
192 Tirunelveli - mlatirunelveli@tn.gov.in
193 Tiruppattur-194 - mlatiruppattur194@tn.gov.in
194 Tiruppattur-41 - mlatiruppattur41@tn.gov.in
195 Tirupporur - mlatirupporur@tn.gov.in
196 Tiruppur - mlatiruppur@tn.gov.in
197 Tiruthuraipundi - mlatiruthuraipundi@tn.gov.in
198 Tiruttani - mlatiruttani@tn.gov.in
199 Tiruvadanai - mlatiruvadanai@tn.gov.in
200 Tiruvaiyaru - mlatiruvaiyaru@tn.gov.in

201 Tiruvallur - mlatiruvallur@tn.gov.in
202 Tiruvannamalai - mlatiruvannamalai@tn.gov.in
203 Tiruvarur - mlatiruvarur@tn.gov.in
204 TheagarayaNagar - mlatnagar@tn.gov.in
205 Tiruchirapalli-I - mlatrichy1@tn.gov.in
206 Tiruchirapalli-II - mlatrichy2@tn.gov.in
207 Triplicane - mlatriplicane@tn.gov.in
208 Tuticorin - mlatuticorin@tn.gov.in
209 Udagamandalam - mlaudagamandalam@tn.gov.in
210 Udumalpet - mlaudumalpet@tn.gov.in
211 Ulundurpet - mlaulundurpet@tn.gov.in
212 Uppiliyapuram - mlauppiliyapuram@tn.gov.in
213 Usilampatti - mlausilampatti@tn.gov.in
214 Uthiramerur - mlauthiramerur@tn.gov.in
215 Valangiman - mlavalangiman@tn.gov.in
216 Valparai - mlavalparai@tn.gov.in
217 Vandavasi - mlavandavasi@tn.gov.in
218 Vaniyambadi - mlavaniyambadi@tn.gov.in
219 Vanur - mlavanur@tn.gov.in
220 Varahur - mlavarahur@tn.gov.in
221 Vasudevanallur - mlavasudevanallur@tn.gov.in
222 Vedaranyam - mlavedaranyam@tn.gov.in
223 Vedasandur - mlavedasandur@tn.gov.in
224 Veerapandi - mlaveerapandi@tn.gov.in
225 Vellakoil - mlavellakoil@tn.gov.in

226 Vellore - mlavellore@tn.gov.in
227 Vilathikulam - mlavilathikulam@tn.gov.in
228 Vilavancode - mlavilavancode@tn.gov.in
229 Villivakkam - mlavillivakkam@tn.gov.in
230 Villupuram - mlavillupuram@tn.gov.in
231 Virudhunagar - mlavirudhunagar@tn.gov.in
232 Vridhachalam - mlavridhachalam@tn.gov.in
233 Yercaud - mlayercaud@tn.gov.in
234 ThousandLights - mlathousandlights@tn.gov.in


உங்கள் கோரிக்கையை ஈமெயில் மூலம் நேரிடையா M.L.A.வுக்கு அனுப்புங்க...!!!

நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ...!!!!

இந்த திட்டம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள் !

Thanks - Dinakaran News Paper
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!ஆணிவேர் - ஒரு பக்கக் கதை!

மதன்-மைதிலி திருமணம் பேசிமுடித்த நாளில் இருந்தே பிரச்சினை தான். பெண் வீட்டிலோ பையன் வீட்டிலோ யாராவது ஒருவர் உப்பு பெறாத விஷயத்துக்குக் கூட முட்டி மோதிக் கொண்டிருந்தனர்.

இதனால் எந்த நிமிடத்திலும் கல்யாண ஏற்பாடுகள் நின்று விடுமோ என்ற பயம்கூட இருவர் வீட்டிலும் நிலைகொண்டிருந்தது.

மைதிலியின் அப்பா திருமண பத்திரிகை அச்சடித்த கையோடு மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தார். அப்போது வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்து மாப்பிள்ளையின் பெரியப்பா பத்திரிகை படித்துக் கொண்டிருந்திருக்கிறார். அவர் மாப்பிள்ளையின் பெரியப்பா என்று அவர் நெற்றியில் எழுதியா ஒட்டியிருந்தது? அதனால் யாரோ வயசான பெரியவர் என்ற பட்டியலில் அவரை சேர்த்து விட்ட பெண்ணின் அப்பா அவரை கண்டு கொள்ளாமலே போய் விட்டார்.


அவர் போனாரோ இல்லையோ மாப்பிள்ளையின் பெரியப்பா இதையே ஒரு கொடும் குற்றமாக எடுத்துக்கொண்டு ஆகாயத்துக்கும் பூமிக்குமாக குதித்தார்.

"என்னை அவமானப்படுத்தியவன் வீட்டில் பொண்ணு எடுத்துத்தான் ஆகணுமா?" என்று அவர் போட்ட கூச்சலில் அந்தப்பக்கமாக போய்க்கொண்டிருந்த ஒரு தெருநாய் கூட வாலை சுருட்டியபடி ஓட்டம் பிடித்தது.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மாப்பிள்ளையின் அப்பா பராங்குசம், சீர்வரிசைப்பட்டியலில் கடைசியாக பைக்கையும் சேர்த்தார். பைக் கொடுக்கமுடியாவிட்டால் தன் அண்ணனின் ஆசையை நிறைவேற்றிய மாதிரிஆச்சு. பைக் கிடைத்துவிட்டால் அண்ணனின் காட்டுக்கத்தலுக்கு கிடைத்த போனசாக எடுத்துக்கொண்டால் ஆச்சு.

கையில், பையில் இருந்ததெல்லாவற்றையும் பெண்ணின் கல்யாணத்துக்கு வாரிவிட்ட பெண்ணின் அப்பா செங்கோடன் புதிதாக வந்த 'பைக்' திணிப்பில் நொந்து போய்விட்டார். பைக் பற்றி சொல்லிவிட்டுப்போக வந்த மாப்பிள்ளையின் தூரத்து சொந்தக்காரரிடம் 'குய்யோ முறையோ' என்று கத்த ஆரம்பித்து விட்டார்.

அதைப்பார்த்து பயந்துபோன அந்த மனிதர், தோளில் போட்டிருந்த துண்டு பறந்து போவதுகூட தெரியாமல் அப்போது எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த பஸ்சில் ஓட்டமாய் ஒடிப்போய் ஏறிக்கொண்டு விட்டார்.

அதிலிருந்து கடுகு வெடிக்க ஆரம்பித்தது.

எப்படியோ ஊர் பெரிசுகள் தலையிட்டதில் கல்யாணம் முடிந்து இதோ முதல் பந்தி ஆரம்பம்.

வீட்டு பெரிசுகள் இனி எப்படி முட்டிக்கொண்டாலும் மதனும் மைதிலியும் குடும்பத்தை ஓட்டியாகணுமே. ஆயிரம் காலத்துப் பயிராயிற்றே...

எல்லாம் முடிந்து மண்டபம் காலி செய்து மாப்பிள்ளை வீடு வந்தாயிற்று. பெண் வீட்டாரும் கொஞ்சப் பேர் உடன் வந்தார்கள். மாப்பிள்ளை தன் புது மனைவியிடம் "மைதிலி காபி கொண்டா" என்றான்.

மைதிலியும் காபி போட்டு எடுத்து வந்தாள். முதல் சேவகம் தானே... கணவனாகி விட்ட மதனிடம் காபியை நீட்ட, வாங்கிய மதன் கை நழுவ விட்டதில் காபி கொட்டி விட்டது. அதுவும் அவன் கல்யாண பேண்ட் மீது.


இந்த காட்சியை தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த இரு வீட்டாரும் 'ஆஹா கிடைத்து விட்டதடா பிரச்சினை' என்ற சந்தோஷத்தில் நெருங்கினார்கள்.

"கூறுகெட்ட பிள்ளை, முதல் முதலா காபி கொடுக்கிறா. ஒழுங்கா கொடுக்கத் தெரியுதா? எப்படித்தான் குப்ப கொட்டப் போறாளோ?"

"திமிர் பிடித்த பையன், எங்கேயோ பார்த்துக்கிட்டு காப்பிய வாங்கினா இப்படித்தான்"

வெறும் வாயை மென்று கொண்டிருந்த கூட்டம் பிரச்சினையைக் கிளப்ப...

மைதிலியும், மதனும் அதிர்ந்தார்கள். இதுவரை எப்படியோ... இப்போது தாலி கட்டியாயிற்று. இனி இவர்களின் கவுரவ பசிக்கு நாம் இரையாகி விடக்கூடாது.

முடிவுக்கு வந்த மாப்பிள்ளை கேட்டான். "மைதிலி, என்னம்மா ஆச்சு?"

"முதன் முதலாய் ஆசையா காபி போட்டுக் கொண்டு வந்தேன். என் கவனக் குறைவினாலே காப்பி கொட்டிப் போச்சு மாமா". பெண் சொன்னாள்.

"இல்லம்மா... ஆசைஆசையாய் நீ போட்டுக் கொண்டு வந்த காபியை அஜாக்கிரதையாய் நான் வாங்கியதால் வந்த வினை. தப்பு என் மேலே தான்".- இது மாப்பிள்ளை.

வார்த்தைகளில் தம்பதியர் விட்டுக்கொடுத்து பேசிக்கொண்டிருந்தது இரு வீட்டாருக்குள்ளும் அதிர்ச்சி கலந்த வெட்கத்தை ஏற்படுத்தி வைக்க,

புதமண தம்பதியரைப் பார்த்து வாயடைத்து நின்றன பெரிசுகள்.

மைதிலி அடுத்த காபி கொண்டுவரப் போனாள்.

-பி.எஸ்.ஜேம்ஸ்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!வேட்டை - விமர்சனம்

தமிழ் சினிமாவின் எவர் கீரின் ஃபார்மூலாவான அண்ணன் - தம்பி ஆல்மாரட்ட ஃபார்மூலாதான் என்றாலும், அதை சொல்லியிருக்கும் விதம் சுவராஸ்யமாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவும் அமைந்திருக்கும் படமாக இருக்கிறது 'வேட்டை'.

'பையா’ படத்தின் வரவேற்பை தொடர்ந்து, இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘வேட்டை’.

மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். லிங்குசாமியின் நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து இருக்கிறது.


சரி சரி படத்தோட கதை என்ன ....

பயந்தாங்கொள்ளி அண்ணன். ஆக்ரோஷமான தம்பிக்கு இடையிலான பாசமும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுமே கதை... மாதவனும் ஆர்யாவும் அண்ணன் தம்பிகள். மாதவனுக்கு சிறுவயதில் இருந்தே பயந்த சுபாவம்.

ஆர்யா அடிதடி பேர் வழி. போலீஸ் அதிகாரி தந்தை இறந்து போக அவர் வேலை மாதவனுக்கு கிடைக்கிறது. தூத்துக்குடி போலீஸ் நிலையத்தில் பொறுப்பு ஏற்கிறார். அங்கு இரு தாதா கோஷ்டிகள் கொலை, கள்ளக்கடத்தல் என தனி ராஜ்ஜியம் நடத்துகின்றனர்.

போலீசே அவர்களை கண்டு நடுங்குகிறது. ரவுடிகள் கடத்தும் குழந்தையை மீட்கும் பொறுப்பை மாதவனிடம் மேலதிகாரிகள் ஒப்படைக்கின்றனர். அவருக்கு பதில் ஆர்யா ரவுடிகளுடன் மோதி குழந்தையை மீட்டு கொடுக்கிறார்.

மாதவன்தான் மீட்டார் என நினைத்து சக போலீசார் அவரை கொண்டாடுகிறார்கள். கடத்தல் லாரிகளையும் ஆர்யா மடக்கி மாதவனுக்கு புகழ் சேர்க்கிறார். வெறியாகும் வில்லன்கள் மாதவனையும் ஆர்யாவையும் தீர்த்துக்கட்ட வியூகம் வகுக்கின்றனர். அவர்களுக்கு இருவரும் எப்படி பதிலடி கொடுக்கிறார்கள் என்பது கிளைமாக்ஸ்...

எனக்கு பிடித்த சில....

லிங்குசாமி, மாதவன், ஆர்யா கூட்டணியில் வந்துள்ள வீரியமான கமர்ஷியல் மசாலா. ஆர்யா ஆக்ஷனில் வெளுத்து கட்டுகிறார். முகத்தை மறைத்த தொப்பியுடன் குழந்தை கடத்தல்காரர்கள் ஏரியாவுக்குள் நுழைந்து அடித்து துவம்சம் செய்வது அனல்... ரவுடிகளால் அடிபட்டு குற்றுயிராக கிடக்கும் மாதவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு ரவுடி கும்பல் கூட்டத்தில் புகுந்து அவர்கள் அழிவுக்கு கெடு வைத்து திரும்புவது ஆரவாரம்.

மாதவன் `கோழை' போலீஸ் அதிகாரி கெட்டப்பில் கலகலப்பூட்டுகிறார். தம்பியின் சாகசங்களை தான் செய்ததாக நம்ப வைத்து பாராட்டுக்கள் பெற்று பூரிப்பாவது ரகளை. அடிபட்டு சக்கர நாற்காலியில் இருக்கும்போது தம்பி ஆர்யாவை தாக்கும் ரவுடிகள் மேல் ஆவேசப்பட்டு விழுந்து தடுமாறி எழுந்து நடக்கையில் பாசத்தை கொட்டுகிறார்.


சமீராரெட்டி, அமலாபால் அக்காள் தங்கையாக வருகின்றனர். சமீரா ஸ்கூட்டரை உடைத்து சண்டைக்காரராக ஆர்யா அவரோடு அறிமுகமாவதும் பிறகு அண்ணன் மாதவனுக்கு அப்பெண்ணே மனைவியாக வருவது உண்டு தவிப்பதும் ரசனையான பதிவுகள்.

அமலாபாலுக்கும் ஆர்யாவுக்குமான காதல் கவித்துவ தொகுப்பு. அமலாபாலை அமெரிக்க மாப்பிள்ளைக்கு சமீரா மணமுடிக்க முயற்சிப்பதும், அந்த மாப்பிள்ளையை ஆர்யா மடக்கி சொல்லாமல் கொள்ளாமல் ஓட வைத்து தானே மணமகனாவதும் குலுங்க வைக்கும் காமெடி. போலீஸ் அதிகாரி மனைவியாக சமீராரெட்டி மிடுக்கு காட்டுகிறார்.


வீட்டில் புகுந்த ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க போராடும் கிளைமாக்ஸ் பதட்டப்படுத்துகிறது. அமலாபால் கண்களால் வசிகரிக்கிறார். பாடலில் தாராள கவர்ச்சி. நாசர், தம்பிராமையா சிரிக்க வைக்கின்றனர். சகோதர பாசம், காதல், ஆக்ஷன் கலவையில் திரைக்கதையை விறு விறுப்பாக நகர்த்தி படத்தோடு ஒன்ற வைக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.

அமெரிக்க மாப்பிள்ளை சீன்கள் ஈர்க்க வில்லை. யுவன் சங்கர்ராஜாவின் பின்னணி இசை பலமாக இருந்தாலும் பாடல்கள் கவர வில்லை. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் பிரமாண்டம்.

ஆக்ஷன் படம் என்பதை மனதில் கொண்டு லாஜிக்குகளை யோசிக்க வைக்காமல் விறுவிறு என காட்சிகளை நகர்த்துகிறார் லிங்குசாமி. என்றாலும், அவரது பழைய படங்களின் சாயல் ஆங்காங்கே தலை தூக்குகிறது. குறிப்பாக ரன் படத்தின் பாடல் காட்சிகள் இங்கேயும் எட்டிப்பார்ககின்றன.
வேட்டை - ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!சுடச்சுட இட்லி மஞ்சூரியன் !

தமிழர்களின் அற்புதமான உணவு இட்லி. இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும்.

இட்லி மீந்தால் உப்புமா கிண்டவோ, வேறு என்ன செய்யலாம் என்றோ யோசிக்க வேண்டாம். இட்லியை கொண்டு செய்யப்படும் ஒரு உணவு தான் இட்லி மஞ்சூரியன். வாங்க சுடச்சுட இட்லி மஞ்சூரியன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்:-

 • இட்லி - 6
 • மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
 • கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
 • கார்ன் ப்ளோர் - 1 டேபிள்ஸ்பூன்

 • இஞ்சி - 1 துண்டு
 • பச்சை மிளகாய் - 5
 • பூண்டு - 5 பல்
 • முந்திரி - 10

 • டொமேட்டொசாஸ் - 1 ஸ்பூன்
 • உப்பு - தேவையான அளவு
 • எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:-

 • இட்லியை விரல் நீளத் துண்டுகளாக கட் செய்து வைத்துக்கொள்ளவும்.

 • ஒரு பேசினில் மைதா மாவு, கார்ன் ப்ளவர், கடலை மாவு மூன்றையும் எடுத்துக் கொள்ளவும்.

 • இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், முந்திரி அரைத்து மாவில் சேர்க்கவும்.

 • டொமேட்டோ சாஸ், உப்பு சேர்த்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.

 • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் இட்லித்துண்ட்களை கலவையில் முக்கி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

 • சுடச்சுட இட்லி மஞ்சூரியன் தயார்.

 • பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவியும் பரிமாறலாம். இட்லியை பொரிக்காது வதக்கியும் போடலாம்.
இட்லி மாவில் போதுமான அளவு உளுந்து இல்லையென்றால் இட்லி கெட்டியாக இருக்கும். அதுபோன்ற நேரங்களில் ஒரு கரண்டி நெய் அல்லது ஒரு கரண்டி நல்லெண்ணெயை சேர்த்து நன்கு கலந்து பிறகு ஊற்றுங்கள். இட்லி மிருதுவாக இருக்கும்.
Thanks : Image from en-iniyaillam.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!லப்... டப்..!

ஆரோக்கிய இதயம் !!!

 • நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்... இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.

 • உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

 • பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

 • மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள். உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

கிட்னியைக் கவனியுங்கள் !!!

 • கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

 • சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி - இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்... உஷார்!

 • நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.

 • காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, 'கிட்னியில் கல்' என்ற பயமே தேவையில்லை.
நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள் !!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!ஜில்லுனு ஒரு பொங்கல் வாழ்த்துக்கள்!

தமிழ்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்!

நம்மை உயிர்ப்போடு காத்துநிற்கும் இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழர் திருநாளாக தைமாதம் முதல்நாளை கொண்டாடுகிறோம்.

அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்... அனைவரது வாழ்விலும் சந்தோசங்கள் பொங்கட்டும்...!
நல்லவன் - கெட்டவன்
முடிந்தவன் - முடியாதவன்
இருப்பவன் - இல்லாதவன்
மேலோன் - கீழோன்
என எந்த வேறுபாடும் பார்க்காமல்
எல்லோருக்கும் ஒன்றாய்
மிகவும் நன்றாய்
அனைவரும் மகிழ்ச்சியாய்
கூடிக் கொண்டாட
இனிதே பொங்கு
பொங்கலோ பொங்கல் என்று.
பொங்கலோ பொங்கல்...!
உழவர்கள் நன்றி தெரிவிக்கும் பண்டிகைதான். உழவர்கள் ஆண்டு முழுவதும் தங்களுக்காக உழைத்த கால் நடைகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு நன்றி தெரிவித்து அவற்றை கும்பிட்டு பூஜை செய்யும் நாள் இது.

வீட்டிலுள்ள பசு, காளை மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அவற்றிற்கு மாலையிட்டு, மஞ்சள் குங்குமம் இட்டு அவற்றை பூஜைசெய்வர்.அன்று, காளை மாடுகளின் கொம்புகள் புதுப்பொலிவு பெறும்.

மாடுகள் அழகாக அலங்கரிக்கப்பட்டு அவற்றின் கழுத்தில் சலங்கைகள் கட்டப்பட்டு அவை ஊர்வலமாக அழைத்து வருவர். அவை தாள கதியுடன் ஜல்ஜல் என்ற ஒலியுடன் வருவது காணக் கிடைத்தற்கரிய காட்சியாகும்.


தமிழகத்தில் பல பகுதிகளில் கணு என்ற பெயரில் பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக பிராமணர் வீடுகளில் கணு கொண்டாடப்படும்.

முதல் நாள் செய்த பொங்கலுடன், சாதத்தில் குங்குமம், மஞ்சள் போன்றவை சேர்க்கப்பட்டு பல வண்ணங்களில் சாதம் செய்யப்பட்டு அவை பறவைகளுக்குபடைக்கப்படும்.

பெண்கள், தங்களது சகோதரர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இறைவனை பிரார்த்திக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.

பொங்கலுக்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு அரிசி, பருப்பு,பணம் ஆகியவற்றை பொங்கல் சீராக கொடுப்பதும் நடந்து வருகிறது. அக்காலத்தில் அறுவடை முடிந்த பின் தங்கள் சகோதரிகளுக்கு பிறந்த வீட்டு சீராக நிலத்தில் விளைந்த அரிசி, பருப்பு போன்றவற்றை கொடுத்து தங்கள் மகிழ்ச்சியைப கிர்ந்து கொண்டார்கள். இப்போதும் இந்த பழக்கம் இருந்து வருகிறது.


இனிய பொங்கல் நாளில்,
மகிழ்ச்சியும் மனஅமைதியும் பெருகட்டும்.
ஆரோக்கியமும் செல்வமும் பொங்கட்டும்.
எங்கும் சாந்தி நிலவட்டும்
பொங்கல் வாழ்த்துக்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!மெரினா - சூப்பர் ஹிட் பாடல்கள்!!!

பசங்க, வம்சம் என இரண்டே படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க, நம்பிக்கை தரும் படைப்பாளிகள் வரிசையில் இடம்பெற்றுள்ளவர் பாண்டிராஜ். இப்போது இவர் உருவாக்கியுள்ள புதிய படம் மெரினா. தலைப்பே சொல்லிவிடும் இந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை.


ஆம்… மெரினா கடற்கரையே வாழ்க்கை என அங்கே சுண்டல், டீ விற்றபடி திரியும் சிறுவர்கள், அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள லோக்கல் புரோக்கர்கள், மெரினாவில் காதல் வளர்க்கும் இளசுகள்… என நாம் பார்க்கும், ஆனால் விரிவாகத் தெரியாத இன்னொரு உலகம் பற்றித்தான் இந்தப் படத்தில் அவர் சொல்லியிருக்கிறாம்.

படத்தின் நாயகனாக 'விஜய் டி.வி.' புகழ் சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கும் ஜோடியாக 'களவாணி' புகழ் ஓவியா நடிக்கிறார். ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

கிரிஷ்.ஜி இசை அமைத்துள்ளார். நா.முத்துக்குமார், யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளனர்.

படத்தின் கதை என்ன...?

மெரினா கடற்கரையில், குழந்தைகளின் உலகம், காதலர்களின் உலகம், வயதானவர்களின் உலகம், இவற்றை யதார்த்தமாக, காமெடியாக, உணர்வுப்பூர்வமாகப் பேசும் படம் இது.

ப்ரோமோ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் காலையிலிருந்து இரவு வரை சென்னை எப்படியிருக்கும் என்று சொல்லும் பாடலை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். 'வணக்கம், வாழவைக்கும் சென்னை...' என்று தொடங்கும் இந்தப் பாடலில் விக்ரம், பிரகாஷ் ராஜ், இயக்குனர்கள் அமீர், சசிகுமார், சினேகா, விமல் ஆகியோர் நடித்துள்ளனர்.

அந்த பாடலை mp3 வடிவில் தரவிறக்கம் (download) செய்ய இங்கே தொடுக.

முதல் முறை கேட்டபோதே மிகவும் பிடித்து விட்டது....வெளிவந்த சில நிமிடங்களில் இந்த பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் இதோ அந்த பாடலின் வீடியோ ...


பாடல் வரிகள் :-
வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே..
மிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரடுதுதென்னை
இருந்தும் ஓட வில்லையே

வாங்க கடல் விட்டு விட்டு அலை அடிக்கும்
இங்கு வஞ்சர மீன் வாசத்துல வள விரிக்கும்
பர பர பரவென பரபரக்கும்
இங்கு பக்கத்து வீட்டுக்காரன் பேர் மறக்கும்

வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே..

பத்து பட்டி போல இங்கு வீடு இருக்கும்
தெரு சுத்தி எங்கும் Cøncrete காடு இருக்கும்
மூச்சு முட்ட நெரிசலில் Røad இருக்கும்
அதில் மாட்டு வண்டி தொட்டியில பூ சிரிக்கும்
எத்தனை கண்கள் இங்கு பசித்திரிக்கும்
இது அத்தனை கனவையும் நெரவேத்தும்..

வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே..

கட்சி கொடி கூட்டணியா கை அசைக்கும்
நமக்கு அரனாகொடிதான் மிச்சம் இருக்கும்
பச்சை மஞ்ச சிவபுலதான் Šignal இருக்கும்
அது விழுந்ததும் குழந்தை இங்க பிச்சை எடுக்கும்

மிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரடுதுதென்னை
இருந்தும் ஓட வில்லையே..

சிங்கார சென்னை என்று சொல்லுவோம்
ஊர் எங்கும் Pøster ஒட்டி கொள்ளுவோம்
சேரோடும் கூவம் எங்கும் கொசுக்களே
என்றாலும் விட்டு போக நினைகல..

இன்பம் துன்பம் ரெண்டும் உள்ள சென்னையடா
இது இளைப்பாற இடம் தரும் தின்னையடா
நாகரிகம் வளர்ந்திடும் தொட்டில்லடா
இந்த விழகிலே எத்தனையோ விட்டில்லடா
பல ஊரு சனம் வந்து வாழும் இடம்தான்
அட பத்து நாளில் சொந்த ஊரு இந்த இடம்தான்

எல்லாருக்கும் தனி தனியா தாய் இருப்பா
நம்ம ஒட்டு மொத்த தாயாக Chennai இருப்பா
இப்படி நீ திட்டும்போதும் உன்ன பொறுப்பா
அவ உன்னோடைய வளர்சிக்கு ஏணி கொடுப்பா
உலகத்தில் பல கோடி ஊர் இருக்கும்
இந்த ஊர் போல பன்முகம் எதில் இருக்கும்?

வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே..
மிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரடுதுதென்னை
இருந்தும் ஓட வில்லையே

நொறுக்க்ஸ்:-

சில காட்சிகளை மட்டும் ஸ்பெஷல் பர்மிசன் வாங்கி மெரினாவில் படமெடுத்த பாண்டிராஜ், மற்றி காட்சிகளை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரையை மெரினாவைப்போல் மாற்றி படம்பிடிக்கவுள்ளார்.

இந்தியில் வெளியாகி பெரும் வெற்றியும் விருதுகளும் குவித்த மீரா நாயரின் ‘சலாம் பாம்பே’ என்ற படத்தினை பார்த்துதான் இந்த படத்தின் கதையை தயார் செய்தாராம் பாண்டிராஜ்.


அந்த பாடலை mp3 வடிவில் தரவிறக்கம் (download) செய்ய இங்கே தொடுக.

நீங்களும் கேட்டு மகிழுங்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!27 பெண்கள் செய்த ஒரு கின்னஸ் சாதனை!

சிறிய ரக கார் எனப்படும் மினி காரில் 27 இளம் பெண்கள் உள்நுழைந்து சாதனைப் படைத்துள்ளனர். ஒரு மினிக் காரில் இத்தனை நபர்கள் ஏற முடியுமா என்ற சந்தேகம் இருந்த போதிலும் சந்தேகத்தைத் தீர்த்து இந்த இளம் பெண்கள் சாதனைப் படைத்துள்ளனர்.


இதற்கு முன்னர் மினி கார் ஒன்றில் 19 இளம் பெண்கள் உள்நுழைந்து சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை 2010ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது. எனினும் இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டு புதிய சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

அத்துடன், 30 செக்கன்களில் (seconds) 187 முறை தலையினால் பந்தைத் தட்டி மற்றுமொரு இளைஞர் சாதனைப் படைத்துள்ளார்.

2.89 மீற்றர் உயரத்திற்கு மரப் பலகைகளை அடுக்கி அந்தளவு தூரத்திற்கு சைக்கிளில் ஏறி சாதனைப் படைத்துள்ளார் ஒஸ்ரிய நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற வீரர் டொமேஸ் ஓலா.

இவ்வாறு இன்னும் சில சாதனைகளுடன் இறுதியாக புரியப்பட்ட கின்னஸ் தொகுப்பு வீடியோவே இதுவாகும்.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!வயிற்றுக்கான யோகாசனம்

5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை ஆகும். அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும்.

யோகம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். "யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்."

ஆசனம் என்ற சொல் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும்.

யோகாசனம்= யோகம் +ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலைபாயாமல் தடுப்பதற்கே பெரும்பாலான யோக உடற்பயிற்சிகளில் கண்களை மூடிக்கொள்கின்றனர். மேலும் யோகாசனங்கள் அனைத்தும் மானிட உடம்பில் உள்ள பருப்பொருள்களுக்காகவே (தசை, எலும்பு, ஈரல்) செய்யப்படுகின்றன.

பல யோகசனக்கள் உண்டு. அதில் வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் வயிற்றுக்கான யோகாசனம் பற்றி இன்று பார்ப்போம்.

 • முதலில் முழங்காலில் நின்று கொண்டு உடம்பை முன்புறமாக வளைத்து தரையில் கைகளை ஊன்ற வேண்டும்.

 • முழங்காலை சரியாக இடுப்புப் பகுதிக்குக் கீழாகவும் கைகளை சரியாக தோள்களுக்குக் கீழாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

 • மூச்சை வெளியில் விட்டபடி தலையைக் குனிந்து முதுகை மேலே உயர்த்தி அடிவயிற்றை உள்ளே இழுக்கவும்.

 • மூச்சை உள்ளிழுத்து மெதுவாக அடிவயிற்றைத் தளர்த்தி முதுகை சமப்படுத்தி தலையை நிமிர்ந்து மேலே
  பார்க்கவும்.

 • இவ்வாறு தொடர்ந்து 4 முதல் 5 முறை மாறி மாறி முடிந்தவரை செய்து பின் தளர்த்தவும். நாளடைவில் படிப்படியாக அதிக முறை செய்யவும்.

பயன்கள் :-

இந்த ஆசனம் வயிற்றுப் பகுதி, பின்புறம், முதுகு, தண்டுவடம் போன்ற பகுதிகளை உறுதிப்படுத்தக் கூடியது. இது ஜீரண சக்தியைத் தூண்டும். நரம்பு மண்டலம் மற்றும் தசைகளை வலுப்படுத்தவும் செய்கிறது.

ஆரோக்கியமாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள் !!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!நாணயம் - ஒரு பக்கக் கதை!

அந்த கிராமத்தின் கடைக்கோடியில் இருந்த அண்ணாச்சி கடை என்றால் தெரியாதவர்கள் இல்லை. நியாயத்துக்குக் கட்டுப்பட்டவர் அண்ணாச்சி. காலை, பகல் பொழுதை விட, மாலை வேளைகளில் தான் கடையில் கூட்டம் மிகுதியாக காணப்படும், ஊரில் பெரும்பாலும் கூலிப்பாட்டு மக்கள்தான்! மானம்பார்த்த தெக்கத்திச் சீமை மண்ணையே நம்பி வாழும் சனங்க.

உடல் உழைப்பையும், கூலிப்பாட்டையுமே நம்பி வாழும் கூட்டம், வேலை முடிந்து களைத்து வீடு திரும்பும்போது கூலிக்காசுக்கு அரிசி, பருப்பு, புளி என்று வாங்கிப் போய் உலை வைத்து பொங்கித் தின்று எட்டு மணிக்கெல்லாம் முடங்கி விடுவார்கள்.

காலையில் கூலிப்பாட்டுக்கு வெள்ளன எழும்பணுமே! அதனால் பலசரக்கு சாமான் வாங்க மாலைப் பொழுதில்தான் அண்ணாச்சி கடையில் கூட்டம் கூடும்.

"அண்ணாச்சி அரை கிலோ புழுங்கரிசி. நூறு மொளகாத் தூளு, நூறு பருப்பு, அம்பது புளி. வெரசா கட்டிக் குடுங்க!" முந்தானை முடிச்சிலிருந்து காசை எடுத்துப் பிரித்தபடியே சொன்னாள் பவுனம்மா.

பவுனம்மா அருகில் நின்றிருந்த காமாட்சி கேட்டாள். ``என்ன பவுனு இன்னிக்கென்ன வெறும் சாம்பாரு தானாக்கும், வெஞ்சனமில்லியா?''

"ஆமா தெனமும் நாலுவகை பொரியல் காய்கறிகளோட விருந்து சாப்பாடா சமைக்கிறேன்? கிடைக்கிற கூலிக்காசிலே அரிசிக்கே அரைவாசிப் பணம் போயிருது. இதுல வெஞ்சனத்துக்கு வேறு நாக்கு அலையுதாக்கும்? மோர் மொளவா பொரிச்சா போதும்'' என்றபடி காசைக் கொடுத்துவிட்டு சாமான்களை அள்ளிக்கொண்டு நடந்தாள்.

அப்போதுதான் கவனித்தார் அண்ணாச்சி. சனிக்கிழமை தோறும் கூலிப்பணம் வாங்கியதும் கொஞ்சமாக மளிகை சாமான் வாங்கும் தேவானை தயங்கி நிற்பது தெரிந்தது. கூட்டம் கலையட்டும் என்று காத்திருப்பது போலிருந்தது.


``என்னலே ஒதுங்கி நிக்கே, சட்டுபுட்டுனு சாமான்க வாங்கிப் போவியா.. இப்படி ஒத்தையிலே நிக்கியே? என்ன வேணும்?'' கேட்டார் அண்ணாச்சி. "அரைக்கிலோ அரிசி, கருப்பட்டி காக்கிலோ, காப்பித்தூளு அம்பது, புளி நூறு வேணும்.

``அறுபத்தேழாச்சு''.

``தப்பா நெனைச்சுக்கிடாதிய அண்ணாச்சி. காசு கம்மியாயிருக்கு. பதினைஞ்சு ரூவாதே இப்பம் இருக்கு. மிச்சத்தை கடன்லே எழுதிக்கிடுங்க'' என்றபடி தயக்கத்தோடு கையிலிருந்த காசைக் கொடுத்தாள்.

``இதுக்காவா சொணங்கி நின்னே? எப்பமும் வாங்குகிற ஆளுதானே நீ! அதனாலென்ன ஜாமான் வாங்கிப்போ. காசு வந்ததும் குடு'' என்றபடி பொட்டலங்களை பாலிதீன் பைகளில் போட்டுக் கொடுத்தார்.

``பிஞ்சு கத்தரிக்காயா வாங்கி சுள்ளுனு புளிக்கொழம்பு வைக்கணும். கையிலே அஞ்சு ரூவாதே மிச்சமிருக்கு!'' தனக்குத்தானே முனுமுணுத்தபடி நடந்தாள் தேவானை.

அவள் கணவன் தேனப்பனுக்கு சூளையில் கல்லடுக்குகிற வேலை. வேலை கிடைத்தால் கூலி. வானம் மப்புத்தட்டி மூடியிருந்தால் சூளையில் வேலை நடக்காது. மண்ணும் மிதிக்க மாட்டார்கள். இரண்டு பிள்ளைகள். கூலிப்பணம் இல்லையென்றால் கும்பி எப்படி நிறையும்? கோழிக்குஞ்சாய் தீனிக்கு பறக்கும் குழந்தைகளுக்கு அதெல்லாம் புரியுமா? பவலையில் கெவுருக் கூழைக் கரைத்துக் குடிச்சாலும் ராப்பொழுதுக்கு கொதிக்கக், கொதிக்க புளிக்குழம்போடு சோறு கிடைக்கும் என்று காத்திருக்கிற குஞ்சும், குலுவனுமாச்சே? புருஷனுக்கு கூலிப்பாடு இல்லாத நாட்களில் உடையார் ரைஸ் மில்லுக்குப் போய் அரிசி புடைப்பாள். கூலிக்காசோடு கொஞ்சம் அரிசிக் குருணையும் கிடைக்கும். அரிசி வாங்கக் காசில்லாத இக்கட்டான நேரங்களில் அந்த அரிசிக் குருணை கமகமக்கும் சுடுகஞ்சியாக மாறும்! தொட்டுக் கொள்ள தோதாய் பருப்புத் துவையல் அரைப்பாள் தேவானை.

அண்ணாச்சி கடையில் கூட்டம் கரைந்து கொண்டிருந்தது. பொழுதடையும் நேரத்தில் வேர்க்க, விறுவிறுக்க ஓலைக்கூடையோடு வந்தாள் வேலம்மா.

``அண்ணாச்சி சுள்ளிக்கட்டு வித்து வர்ற பணத்திலேதான் தெனத்திக்கும் அரிசி, பருப்பு வாங்குவேன். இட்லிக்காரம்மா இன்னிக்கி காசு தரலே. நாளைக்குத் தரம்னுட்டாவ! நாள் வந்து சோறாக்கித் தருவேன்னு வூட்லே புள்ளைவ பசியோட காத்துக் கெடக்குங்க. இன்னிக்கி மட்டும் அரிசி, பருப்பு, எண்ணெய் குடுங்க அண்ணாச்சி. நாளைக்கு சுள்ளிக்கட்டு வித்த பணத்த வாங்கித் தந்துடறேன்.'' கெஞ்சலோடு கேட்டாள் வேலம்மா.

அவளது புருஷன்காரன் அவளை கை விட்டு விட்டான். வேறொருத்தியோடு பக்கத்து ஊரில் குடித்தனம் நடத்துகிறான். ஓலைக்கூரை வேயும் வேலை செய்து சம்பாதிக்கிறான். ஆனால் குழந்தைகளுக்காகக் கூட பணம் தருவதுமில்லை. திரும்பிப் பார்ப்பதுமில்லை. அவனைப் பொறுத்தவரை இவர்கள் கை கழுவப்பட்டவர்கள் என்பதே சரி.

ஆனால்.......

ஒரு தாயால் பெற்றபிள்ளைகளை உதறித் தள்ள முடியுமா? அதிலும் வேலம்மா படிக்காத கைநாட்டுக்காரி. அன்னாடங்காய்ச்சி, புருஷன் கொண்டு வந்தால் ஆக்கிப் போடவும், துவைத்துப் போடவும், பாத்திரம் தேய்க்கவும் மட்டுமே தெரிந்த வீட்டுப் பறவை.

ஆனால் இப்போதோ? காடு கரை என்று திரிந்து சுள்ளி பொறுக்கி விறகு வெட்டி கட்டாக சுமந்து இட்லி கடைக்கும், ஓட்டல் கடைக்கும் போட்டு வயிற்றுப்பாட்டை கவனிக்கிறாள்.

``என்ன அண்ணாச்சி யோசிக்கிறிய, அப்ப நான் கௌம்பட்டா?'' என்றாள் வேலம்மா. "இந்தாப்பா முருகா! வேலம்மா கேட்ட சாமான்களை போட்டுக் கொடுத்தனுப்பு!'' என்ற அவரது உத்தரவைத் தொடர்ந்து பலசரக்குச் சாமான்கள் கைமாறின.

கிட்டத்தட்ட இதேநேரத்தில் வந்தான் சேகர். "அண்ணாச்சி, இந்த சாமானெல்லாம் போட்டுத்தாங்க'' என்றபடி துண்டுக் காகிதத்தை நீட்டினான்.

பட்டியலை வாங்கிப் பார்த்த அண்ணாச்சி நிமிர்ந்தார்.

``என்னப்பா 5 கிலோ அரிசி, பருப்பு, ஆயில்னு கிலோ கணக்கிலே லிஸ்ட் போட்டிருக்கே... மொத்தமாப் பார்த்தாக்கா எழுநூறு ரூபாய்க்கு மேலே ஆவும்போலிருக்கே? பணமிருக்கா?'' என்றார் அண்ணாச்சி.

"அடுத்த வாரம் தந்துடறேன் அண்ணாச்சி. இப்ப மளிகை சாமான்களைப் போட்டுத்தாங்க''. என்றான் சேகர்.

"ஏற்கனவே நீ சாமான் வாங்கிய கடன் மூன்னூத்தி இருபது நிக்கி. அதைத்தராம மேக்கொண்டு ஜாமான தர தோதுபடாது'' என்று அவன் கொடுத்த சீட்டைத் திருப்பிக் கொடுத்தார்.

``வீட்லே மளிகை சாமான் ஏதுமில்லே, இப்பக் கொடுங்க. அடுத்த வாரம் பணம் தர்றேன்.''

``இல்லப்பா. கடன் தர ஏலாது. பழைய பாக்கி நிக்கில்ல?'' கறாராக மறுத்தார் அண்ணாச்சி.

இவ்வளவு நேரமும் இறங்கிய குரலில் பேசியவன், கோபம் உசுப்பேற்ற, குரலை உசத்தினான். ``நான் கடனுக்கு ஜாமான் கேட்டாக்க தரமாட்டிய! மப்பும், மந்தாரமுமா பார்க்க கண்ணுக்கு லட்சணமா எள வயசுக்காரியா வேலம்மா போல பொம்பிளை கேட்டாக்கா மறுக்காம கடனுக்கு ஜாமாங்க தருவிய. சேலை கட்டினவளுக்கு ஒரு நாயம், மீசை வெச்சவனுக்கு ஒரு நாயம்'' ஆங்காரம் தொனித்தது அவனது குரலில்.

"நீ சம்பாதிக்கிறதையெல்லாம் குடியிலயும், சீட்டாட்டத்திலேயும் அழிக்கிறே அதனாலே ஒன்னோட பொண்டாட்டி புள்ளைவ, பசி, பட்டினினு கஷ்டப்படறாங்க. வேலம்மாவோ... புருஷன் கைவிட்டாலும், படிப்பறிவில்லாதவ. அவ சுள்ளி பொறுக்கியாச்சும் பெத்த புள்ளைகளைக் காப்பாத்துறா. அவ நாணயத்தை நம்பித்தான் கடன் குடுத்தேன். வியாபாரத்துல மட்டுமில்லே, வாடிக்கைக்காரர்களுக்கும் தேவை நாணயந்தே! நாளைக்கு இதே நேரம் இந்தக் கடைப்பக்கம் வந்து நின்னு வேடிக்கை பாரு. வேலம்மா சுள்ளி பொறுக்கறவதான். ஆனா சொன்ன சொல்லைக் காப்பாத்தறவ! நாளைக்கு காசைக் கொண்டுகிட்டு வருவா. அப்படிப்பட்டவளை தப்பாப் பேசிப்புட்டியே?'' அண்ணாச்சி சொன்னதைக் கேட்டு, அதிலுள்ள நியாயம் சாம்பலை உதிர்த்த தணலாய்ப் புரிபட, மனதிற்குள் உறுதிமொழி எடுத்தான் `குடியும், சீட்டும் இனிமேல் என் வாழ்க்கையில் இல்லே' என்று.

"மன்னிச்சிடுங்க அண்ணாச்சி கோபத்திலே பேசிப்புட்டேன். தரவேண்டிய பணத்தை அடுத்த வாரம் கண்டிப்பா தந்துடறேன்'' என்றபடி திரும்பி நடந்தான். திருந்திய மனத்தோடு சேகர்.

ஞான விடியலுக்கு போதி மரம் தேவையில்லை. அண்ணாச்சியின் பலசரக்கு கடையும் போதி மரம் தான்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!ஆரோக்கியமாக வாழ சில டிப்ஸ்! (must read)

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ சில எளிய டிப்ஸ்!

சளிகட்டு நீங்க:

தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை, கண்டங்கத்தரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும்.

சளித்தொல்லை நீங்க:

1. ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டு புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித்தொல்லை நீங்கும்.

2. மாதுளம் பழச்சாறு, எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் சளி தொல்லை குணமாகும்.

3. தூதுவளை செடியில் ரசம் வைத்து, சாப்பிட குணமாகும்.

4. அருகம்புல் சாறு பருகிவர சளித்தொல்லை நீங்கும். (2) காய்ச்சிய பாலில் சிறிதளவு மஞ்சள் தூளைப் போட்டுக் கலக்கினால் நெஞ்சுச் சளி அகலும்.

சளிகபம் ஏற்படாமல் தடுக்க:

சுண்டைக்காயை வத்தல் செய்து மைய அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரணகுணம் கிடைக்கும்.

சளி, இருமல், இளைப்பு நோய்கள் வராமல் தடுக்க:

நத்தை சூரி விதைகளை வறுத்து பொடியாக்கி சம அளவு கல்கண்டு அல்லது பனங்கல் கண்டு சேர்த்து 5 கிராம் வீதம் காலை மாலை சாப்பிட, சளி இருமல் வராமல் தடுக்கலாம்.

மார்புசளி நீங்க:

ஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச்சளி குணமாகும்.

சளி மூக்கடைப்பு தீர:

கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு குணமாகும்.

மழைக்காலங்களில் வரும் சளி, இருமல் குணமாக:

முசுமுசுக்கை இலையை சாப்பிட்டு வர சளி, இருமல் வராமல் தடுக்க முடியும்.

ஜலதோஷம்:

ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

தும்மல் நிற்க:

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்.

இருமல், சளியுடன் வரும் இரத்தத்தை நிறுத்த:ஆடாதோடா இலையை பொடி செய்து 5 கிராம் தேன் கலந்து சாப்பிட்டு வர 3 நாளில் குணமாகும்.

ஜலதோஷம்:

மாதுளம்பழம் சாப்பிட ஜலதோஷம் குணமாகும்.

ஜலதோஷம் பிடிக்காமல் இருக்க :

காய்ச்சல்விட்டதும் முதலில் தலைக்கு நீர்விட்டுகொள்பவர்கள் ஓமத்தை அரைத்து தலைக்கு தேய்த்தால் ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கும்.

ஆரோக்கியமாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள் !!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!காளான் பனீர் கறி

பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவாக காளான்கள் உள்ளது. காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது.

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.

இவளவு பயன்கள் கொண்ட அந்த காளான்கள் கொண்டு அப்படி சுவையான காளான் பனீர் கறி செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.


தேவையானப் பொருட்கள்:
 • மொட்டுக் காளான் – 3 பாக்கெட்
 • கட்டித்தயிர் – 1 1/2 கப்
 • முந்திரிப்பருப்பு – 10
 • எண்ணெய்
 • பொடியாக அரிந்த வெங்காயம் – 1 கப்
 • அரிந்த தக்காளி – 1 1/2 கப்
 • முந்திரிப் பருப்பு – 10
 • பெரிய வெங்காயம் – 2
 • தக்காளி – 3
 • இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
 • பச்சை மிளகாய் – 3
 • பனீர் – 2 லிட்டர் பாலில் தயார் செய்தது
 • மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
 • சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
 • கரம்மசாலாத்தூள் – 1 /2 தேக்கரண்டி
செய்முறை:
 • வெங்காயம், தக்காளியை பொடியாகவும், பச்சை மிளகாயை நீளமாகவும் அரிந்து கொள்ளவும்.
 • காளான்களை நன்கு கழுவி ஈரம்போக துடைத்து அரியவும்.
 • பனீரை சதுரத் துண்டுகளாக்கவும்.
 • ஒரு பெரிய வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் முந்திரிப் பருப்பு, பச்சை, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது இவற்றைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
 • பின்பு தக்காளியையும், காளான்களையும் சேர்த்து சில நிமிடங்கள் கிளறிவிடவும்.
 • இத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.
 • இக்கலவையுடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
 • கட்டித் தயிரை கடைந்து அதில் ஊற்றி, எண்ணெய் தனியே பிரிந்து வரும்வரை வதக்கவும்.
 • கடைசியாக பனீர் கட்டிகளை மெதுவாக அதில் போட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
 • கொத்தமல்லித்தழையை மேலே தூவி சூடாகப் பூரி, நான் அல்லது குல்ச்சாவுடன் பரிமாறவும்.
Tips :-

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!2011 ஆண்டின் 'ஹாட்டஸ்ட்' அழகி!

2011 ஆண்டின் சூப்பர் மாடல் அழகியாக இங்கிலாந்து நடிகை, மாடல் அழகி ரோசி ஹன்டிங்டன் ஒயிட்லி (Rosie Huntington Whiteley) -யை நேயர்கள், ரசிகர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.


உலகம் முழுவதும் வெளிவரும் F.H.M இதழ் 'கவர்ச்சியான பெண் யார் ?' என்று போட்டி நடத்தியது. இதில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று நம்பர் ஒன் அழகியாக ரோசி தேர்வாகியுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள நடிகைகள், மாடல் அழகிகளை அலசி ஆராய்ந்து 'ஹாட் அழகிகள்' என்ற பட்டியலை மேக்சிம் இதழ் வெளியிட்டுள்ளது. அதிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார் ரோசி.

"என் உதடுகள் பெரிதாக இருக்கும். படிக்கும் காலத்தில் இதை சொல்லி தோழிகள் கிண்டல் செய்வார்கள். அதுதான் எனக்கு தற்போது அழகி பட்டத்தை பெற்று தந்திருக்கிறது" என்கிறார் ரோசி.


பள்ளி படிப்பை முடிப்பதற்கு முன்பே மாடலிங் தொழிலுக்கு வந்தவர். உள்ளாடை தயாரிப்பில் உலகப் புகழ் பெற்ற விக்டோரியாஸ் சீக்ரட் நிறுவனம், ஆடைகள், சென்ட் தயாரிக்கும் பர்பரி நிறுவனம் ஆகியவற்றில் இவர் தான் நம்பர் ஒன் மாடல் அழகி.

சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். 'டிரான்ஸ்பார்மர்கள்' என்ற வரிசையில் ஹாலிவுட் படங்கள் 2007-ம் ஆண்டு முதல் வெளியாகி வருகின்றன. இந்த வரிசையின் 3-வது படமான 'டார்க் ஆப் த மூன்' ('Transformers: Dark of the Moon') கடந்த 2011 ஜூன் 29-ம் தேதி வெளியானது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!Related Posts with Thumbnails
 
back to top