I Spit on Your Grave (2010) - விமர்சனம்

பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்னும் மாறாதது மனிதனின் அரக்க குணம் தான். அறிவியலோடு சேர்ந்து அதுவும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் சுருங்கக் கூறினால் அறிவியலின் துணை கொண்டு அது பரிணாம வளர்ச்சியையும் அடைந்துள்ளது என்றே தோன்றுகிறது. சந்தேகம் இருந்தால் I spit on your grave படத்தை ஒரு முறை பார்த்து விடுங்கள்.

I SPIT ON YOUR GRAVE படம் ஒரு ரீமேக் படம். படம் த்ரில்லர் அல்லது ஹாரர் வகையை சேர்ந்தது. அதனால் மென்மையான, மிகவும் இளகிய மனம் படைத்தவர்கள் தவிர்ப்பது நல்லது. 1978-ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படம் மீண்டும் 2010-ல் புதிதாக எடுக்கப்பட்டு வெளியாகியது.


படத்தோட கதை என்னனா ...

ஜெனீஃபர் ஹில்ஸ் ஒரு நாவலாசிரியை. தான் அடுத்து எழுதப் போகும் கதைக்காக தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்குகிறாள். அந்த வீடு இருக்கும் பகுதி, நகரத்திலிருந்து சற்றே தனிமையானது. காடு என்றும் சொல்லலாம். அந்த தனிமையான இடத்தில், தான் மட்டும் தனியாக இல்லை என்று அவள் உணருகிறாள்.

அந்த சமயத்தில், அந்த வீட்டில் தண்ணீர் குழாய் பழுதடைந்து விடுகிறது. அதை சரிசெய்ய மேட்டீவ்ஸ் என்கிற குழந்தைத்தனமான முக அமைப்பு கொண்ட இளைஞன் வருகிறான். அவன் சிறிது நேரத்தில் போராடி குழாயை சரி செய்கிறான். அவனை கவனித்துக் கொண்டிருந்த ஹில்ஸ் சந்தோசத்தில் அவனுக்கு முத்தம் தந்து விடுகிறாள். மேட்டீவ்ஸும் கூச்சத்தில் பணம் வாங்காமலேயே ஓடி விடுகிறான்.

அந்தப் பகுதியில் அவனுக்கு மூன்று நண்பர்கள் உண்டு. ஜானி, ஸ்டேன்லி மற்றும் ஆண்டி. அவர்கள் மூவரும் விளையாட்டாக துஷ்ட காரியங்களை நிகழ்த்துபவர்கள். அவர்கள்தான் ஹில்ஸ் தனிமையில் இருக்கும் பொழுது, அவளை மறைந்திருந்து படம் பிடித்து அவளுக்குத் தொல்லை தருபவர்கள். அவர்களிடம் மேட்டீவ்ஸ், ஹில்ஸின் முத்தத்தைப் பற்றிக் கூறவும் அவளை அடைய சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் ஜானிக்கு அவள் மேல் கோபம் பொங்குகிறது.


அன்று இரவு நால்வரும் அவளின் வீட்டை சுற்றி வளைக்கிறார்கள். ஆரம்பித்தில் அவளை பயமுறுத்த வேண்டும் என்று தான் அவர்கள் அவளை நெருங்குகின்றனர். ஆனால், அவளின் தனிமையும், அப்பாவித்தனமும், என்ன செய்துவிட முடியும் ? பெண் தானே? என்கிற இருமாப்பும் அவர்களை மிருகமாக்கி, அவர்கள் தின்னும் இறைச்சியாய் அவளை கொடுமைப்படுத்த ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் கொடுமை எல்லை மீறுகிறது. மேட்டீவ்சை அவளோடு பலவந்தமாக உடலுறவு கொள்ளச் செய்கிறார்கள். ஸ்டேன்லி அதனை படமெடுக்கிறான்.

கிடைத்த ஒரு சிறு சந்தர்ப்பத்தில் அவர்களிடமிருந்து தப்பிச் செல்கிறாள். ஒரு காவல் துறை அதிகாரியை வழியில் சந்தித்து முறையிடுகிறாள். அவர் அந்தப் பகுதியின் ஷெரீஃப் ஸ்டார்ச். அவர் அவளுக்கு உதவ முன்வருகிறார்.

அவளது மர வீட்டை ஸ்டார்ச் சோதனையிடுகிறார். அங்கே ஒரு சிகரெட் துண்டினைக் கண்டெடுக்கிறார் ஸ்டார்ச், ஹில்ஸிடம் அதைப் பற்றி விசாரிக்கிறார். உண்மையில் அந்த சிகரெட் துண்டு அவளுடையதுதான். அவள் நால்வரில் ஒருவர் விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்று தான் சந்தேகிப்பதாகக் கூறுகிறாள்.

அந்த நால்வரையும் அந்த வீட்டுக்குள் அழைக்கிறார். விசாரிக்கிறார். பிறகு தான் தெரிகிறது இந்த ஸ்டார்ச்சும் அவர்களில் ஒருவன் எப்பது. மீண்டும் அடுத்த கொடுமை அவளுக்கும் ஆரம்மிகிறது.ஹில்ஸை காட்டுக்குள் இழுத்துச் சென்று அடித்து நிர்வாணப்படுத்துகிறார்கள். மயக்கத்தில் ஹில்ஸ் தாகமாக இருப்பதாக முணகுகிறாள். அவளின் தலை மயிறைப் பிடித்து சேற்று நீரில் அவளின் முகத்தை அமுக்கி குடிக்க வைத்து விட்டு கற்பழிக்கிறார்கள்.

சிலமணி நேரம் கழித்து ஹில்ஸ் கண் விழிக்கிறாள். எழுந்து நடக்க முடியாமல் நடக்கிறாள் ஆடைகள் எதுவுமின்றி. ஸ்டார்ச் அவளைக் கொன்றுவிடும் நோக்கத்துடன் தனது துப்பாக்கியால் குறி பார்க்கிறார். ஹில்ஸ் பாலத்தின் மேலிருந்து இரு கைகளையும் விரித்து ஆற்றுக்குள் தன் உடலைச் செலுத்தி மறைகிறாள்.

அவளின் மறைவு அவர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அவளின் பிணம் கரை ஒதுங்கும் முன் அதனைக் கண்டுபிடித்து யார் கண்ணிலும் படாமல் எரித்து விட வேண்டும் என்று ஸ்டார்ச் நால்வருக்கும் எச்சரிக்கிறார். ஹில்ஸ் தங்கி இருந்ததற்கான தடயங்களை அழித்து விடுகிறார்கள்.

சில நாட்களில் மேட்டீவ்ஸ் காணாமல் போகிறான். ஜானியின் வீட்டு வாசலில் இரவில் குருவி இறந்து கிடக்கிறது. அப்புறப்படுத்தி விட்டு மீண்டும் உள்ளே சென்றால், மீண்டும் வாசலில் குருவி கிடக்கிறது. இது போல சில நிகழ்வுகள் அந்த ஐந்துபேருக்கும் நடக்கிறது.

மெல்ல மெல்ல தன் பழிவாங்கும் படலம் தொடக்குகிறாள். கொடுரமாக கற்பழித்தவர்களை எப்படி பழி வாங்குகின்றாள் என்பதே மீதிக்கதை.


படத்துல எனக்கு பிடித்த சில ....

ஜெனீஃபர் ஹில்ஸாக சாரா பட்லரின் நடிப்பு. பரிதாபத்தை வரவழைக்கிறது. மிகவும் துணிச்சலான பெண். மற்றவர்கள் பழி வாங்கப்படும் போது நமக்கு உண்மையிலேயே அருவருப்பு தட்டவில்லை. அது தவறுக்கான தண்டனையாக மட்டுமே கருதப் படுவதால்.

படத்தின் டைரக்டர் ஒரு மிகச் சிறந்த கற்பனைவாதி என்பதை படத்தில் அந்த பெண் கொலை செய்ய வித்தியாசமான வழிகளை கையாள்வதில் தெரிகிறது!
தனியாக மாட்டிக் கொண்ட பெண்ணிடம் தவறாக நடந்துக் கொள்ளும் நமது ஆண் வர்க்கத்திற்கு இந்த படம் ஒரு அபாய மணி. தனிமையும், தப்பு செய்ய ஒரு சந்தர்ப்பமும் கிடைக்காதவரை நீங்களும் நானும் உத்தமர்கள்தான்.
படத்தின் முதல் பாதியை பார்க்கும் வரை, ஹில்ஸுக்கு நிகழ்ந்த கொடூரத்தை விட உலகில் மோசமானது எதுவும் இல்லை என்று தோன்றும். ஆனால், பிற்பாதியில் அவர்கள் நால்வரின் சாவு, கொடூரத்தின் உச்சம்.

படத்தில் கற்பழிக்க பட்ட பெண் கொடுக்கும் தண்டனைகள் மிகவும் குரூரம். ஆனால் இந்த தண்டனைகள் பார்க்கும் போது நீங்கள் ரசிப்பீர்கள் காரணம். கற்பழிக்கபட்ட பெண்கள் இந்த படத்தை பார்த்தால் முக்கியமாக பிற்பகுதியை பார்த்தால் மிகவும் சந்தோஷம் அடைவார்கள்.

அழுத்தமான காட்சிகள் மற்றும் எதிர்பாராத திகில் திருப்பங்களால் மனம் கனமாவதை உணர முடிகிறது.

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
I Spit on Your Grave - ஒரு முறை பார்க்கலாம். இது ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks to nammapakkam & jackie sekar who's blog inspired me to see this movie.ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் (2013) - விமர்சனம்

தமிழில் நடனத்தை மையப்படுத்தி சில திரைப்படங்கள் வந்துள்ளன. சமீபத்தில் வெளிவந்த போடா போடி-யும் கூட நடனத்தை மையப்படுத்தியதே. ஆனாலும் ஹலிவுட்டில் வெளிவந்திருக்கும் "ஸ்ட்‌ரிட் டான்ஸ், ஸ்டெப் அப்" போன்ற முழுக்க நடனம், நடனம் அன்றி வேறில்லை என படங்கள் இந்திய அளவில் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

இந்தக் குறையை போக்கும் விதமாக பிரபுதேவா நடித்திருக்கும் படம் ஏபிசிடி. "எனிபடி கேன் டான்ஸ்" என்பதன் சுருக்கம். ஸ்டெப் அப் திரைப்படத்தைப் போல இந்த ஏபிசிடி யும் 3D யில் தயாராகியுள்ளது. அந்தவகையில் 3D-யில் தயாரான முதல் இந்திய நடனத் திரைப்படம் என இதனை சொல்லலாம்.

இந்தியில் பெரிய இயக்குனராக பெயரெடுத்து விட்ட நம்மூர் நடன இயக்குனர் + நாயகர் பிரபுதேவா, ரெமோ டிசோசா எனும் வட இந்திய இயக்குனரின் இயக்கத்தில், நாயகராக நடித்து தமிழிலும், இந்தியிலும் வெளிவந்திருக்கும் 3D படம் தான் "ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்!"

படத்தோட கதை என்னனா ...

மும்பையில் நண்பர்களான KK மேனனும், பிரபுதேவாவும் இணைந்து நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்கள். மும்பையில் நடக்கும் நடனப்போட்டிகள் அனைத்தும் இவர்கள் பள்ளிதான் முதலிடத்தை பிடித்து வருகிறது. இதனால் இந்தப் பள்ளியில் நடனம் கற்றுக்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில், பிரபுதேவாவுக்கும் KK மேனனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிய நேரிடுகிறது. பிரபுதேவாவிற்கு தனது நடனப் பள்ளியில் எந்தப் பங்கும் இல்லை என்று KK மேனன் சொல்லி அவரை பள்ளியிலிருந்து வெளியேற்றுகிறார்.

மனமுடைந்த பிரபுதேவா தனது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல முடிவெடுக்கிறார். இந்நிலையில் இவரது மற்றொரு நண்பரான கணேஷ் ஆச்சர்யாவை சந்திக்கிறார். அவரிடம் நடந்ததை விவரிக்கிறார்.

உடனே, புதிய நடனப்பள்ளி தொடங்க பிரபுதேவாவுக்கு கணேஷ் ஆச்சர்யா ஆலோசனை கூறுகிறார். மேலும், சொந்த ஊருக்கு திரும்பும் முடிவை கைவிடுமாறு ஆச்சர்யா பிரபுதேவாவிடம் கூறுகிறார்.

தன்னை ஏமாற்றிய நண்பனின் நடனப் பள்ளியைவிட மிகச்சிறந்த நடனப்பள்ளியை உருவாக்கி வெற்றிபெற வேண்டும் என்ற லட்சியத்தோடு பிரபுதேவாவும், ஆச்சர்யாவும் இணைந்து புதிய நடன பள்ளியை துவங்குகிறார்கள்.

அதன்படி, கணேஷ் ஆச்சர்யா வசிக்கும் குடியிருப்பு பகுதியின் இளைஞர்களுக்கு நடனத்தின் மீது இருக்கும் ஈடுபாட்டை கண்டு, அவர்களுக்கு நடனம் கற்றுக் கொடுக்க முன்வருகிறார் பிரபுதேவா. இதற்காக அவர்களை ஒன்று திரட்டி, அவர்களுக்கு இலவசமாக நடனம் கற்றுத் தருகிறார்.

ஆனால், அவர்களிடையே ஒற்றுமை இல்லாமல் இரு குழுவாக பிரிந்து மோதிக்கொள்கிறார்கள். இவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் பிரபுதேவா களமிறங்குகிறார்.

இந்த தடைகளை தாண்டி பிரபுதேவா தனது லட்சியத்தில் வெற்றி பெற்றாரா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

பிரபுதேவா
நடனத்தைப் பற்றிய கதை என்பதால் பிரபுதேவா ஒரு பக்குவப்பட்ட நடன இயக்குனராக தனது கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளார்.

நட்பு, நம்பிக்கை, துரோகம் என சாந்த சொரூபமாக நடிப்பில் நம்மை வியக்க வைக்கிறார். ஆனால் நடனம் என்று வந்துவிட்டால் வெளுத்து கட்டுகிறார். படத்தில் இவரைத் தவிர மற்ற அனைவரும் தெரியாத முகங்களே.

குறிப்பாக, இந்த படத்தில் இவர் ஆடும் சோலோ நடனம், நடனப் பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவரையும் கவரக்கூடிய விதமாக இருந்தது சிறப்புக்குரியது.

பிரபுதேவாவின் நடனத்தை பார்ப்பதற்காகவே காத்திருக்கும் கண்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாக இந்த நடனம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.


கணேஷ் ஆச்சர்யா & KK மேனன்
பிரபுதேவாவின் நல்ல நண்பராக வரும் கணேஷ் ஆச்சர்யா அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக்கொண்டு கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தியது நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.

KK மேனன்
மெல்லிய புன்சிரிப்புடன் வலம் வரும் KK மேனன், கேரக்டருக்கு அப்படி பொருந்துகிறார். வில்லத்தனம் காட்டுவதில் தனது பங்களிப்பை முழுமையாக செய்திருக்கிறார்.

"இங்கே எல்லாத்தையும் தீர்மானிக்கிறது ஆடியன்ஸ்தான். நடக்குறது போட்டியில்லை. ஷோ" என்று பேசி வில்லத்தனமாக காய் நகர்த்து வதும், கிளைமாக்சில் பிரபுதேவாவிடம் தோற்றதும் அதே வில்லச் சிரிப்புடன் ஏற்றுக் கொள்வதும் நச்!.


எதிர்பாராத திருப்பம்
கிளைமாக்ஸ் காட்சியில், நடனப்போட்டியில் தனது குழுவின் கான்செப்ட் களவாடப்பட்டதும், மும்பை நகரில் விநாயகர் ஊர்வலங்களில் ஆடப்படும் நடனத்தை விறுவிறுப்பாக செய்து காட்டி நடனப்போட்டியில் பிரபுதேவா குழு வெற்றி பெறுவது எதிர்பாராத திருப்பம்.

இயக்குனர் ரெமோ டிசோசா
ரீலுக்கு ஒரு டான்ஸ், ஒரு திருப்பம், ஒரு சென்டிமெண்ட் என படத்தை விறுவிறுப்பாகச் கொண்டு சென்றிருக்கிறார்கள். எதிர்பாராத திருப்பங்களை படத்தில் ஆங்காங்கே வைத்து, ஆரம்பம் முதலே ரசிகர்களை இருக்கைகளில் கட்டிப்போடுகிறார் இயக்குனர் ரெமோ டிசோசா.

இசை & ஒளிப்பதிவாளர் விஜய்குமார்
சச்சின் ஜிகாரின் பிரமாண்ட இசையும், விஜய்குமார் அரோராவின் பிரமாதமான ஒளிப்பதிவும் படத்தை மொழி பேதம் கடந்து தூக்கி நிறுத்துகின்றன. ஒவ்வொரு நடன கலைஞர்களும் உயிரைக் கொடுத்து ஆடியிருக்கிறார்கள், அதனை அதன் உயிர்ப்பு குலையாமல் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய்குமார் அரோரா.

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
எத்தனையோ குப்பை படங்களுக்கு நல்ல ஒப்பனிங் குடுத்து காப்பாற்றும் ரசிகர்கள் இது போன்ற தரமான படத்தை ஆதரிக்காமல் இருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

ஏபிசிடி - ஒரு முறை பார்க்கலாம் பாய்ஸ்.!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks to maalaimalar new paper which inspired me to see this movie.கண்ணதாசனின் குட்டிக்கதைகள்

கண்ணதாசனின் குட்டிக்கதை - குறக்குளி இழுத்தல்

சுடுகாட்டில் அந்த சடலம் கொண்டு வந்து வைக்கப்பட்டது.

சிதைக்குத் தீ மூட்டியதும், சடலம் சூடுபட்டு நரம்புகள் முறுக்கேறி, பிரேதம் எழுந்து உட்காரும். இதை, "குறக்குளி இழுத்தல்" என்பர். அப்படி பிரேதம் எழுந்ததும், வெட்டியான்கள், அந்த உடலைத் தடியால் அடித்து, மீண்டும் படுக்கையில் கிடத்துவர்.

ஒருமுறை, வட்டிக்காரனின் பிரேதம், தீ மூட்டப்பட்டது. பிரேதம் சூடு கண்டதும், குறக்குளி இழுத்து, எழுந்து உட்கார்ந்தது. உடனே வெட்டியான், "வட்டி எல்லாம் வசூலாகி விட்டது!" என்றான்.

மீண்டும் படுத்துக் கொண்டது பிரேதம், நிம்மதியுடன்!


கண்ணதாசனின் குட்டிக்கதை - மகா ஞானி

ராஜா பர்த்ரூஹரி ஒரு நாள் இரவு திடீரென்று விழித்துக் கொண்டு விட்டார். பக்கத்தில் மனைவியைக் காணவில்லை.

அரண்மனை நந்தவனத்தில் வந்து பார்த்தார் அங்கே குதிரைக்காரனோடு அவள் கூடிக் கொண்டிருந்தாள். மருநாள் ராஜா பர்த்ரூஹரி சந்நியாசியாகி விட்டார்.

மனைவியிடம் விடை பெறப் போனார்.

மனைவி சொன்னாள் "எனக்கு மிக்க மகிழ்ச்சி! ஒரு மகாராஜாவை மகா ஞானியாக்கியது நான் தானே !"

"நீயல்ல, குதிரைக் காரன்"

ராணி அலட்சியமாகப் பார்த்துவிட்டு உள்ளே போவதற்காகத் திரும்பினாள்.

"நில்..! அவனை எப்போது ஞானியாக்கப் போகிறாய் ? !"


கண்ணதாசனின் குட்டிக்கதை - விதி வலியது

ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் வாழ்ந்து வந்தான்.அவன் ஒவொரு வீட்டு வாசலிலும் சென்று பிச்சை கேட்கும் பொழுது , "அம்மா பார்வதி பிச்சை போடு" என்று கேட்பது அவன் வழக்கம்.

இவன் குரல் ஒரு முறை கைலாயத்தில் இருந்த பார்வதி தேவி காதுகளில் சென்றடைந்தது. அவளும் இறக்கமுற்றாள். சிவனிடம் பார்வதிதேவி பிச்சைக்காரனிடம் இரக்கம் காட்டும்படி வேண்டினாள்.

சிவபெருமான் இப்பிறவியில் பிச்சையெடுப்பது அவன் பிராப்தம் என்றும், அவன் விதியை தம்மால் மாற்றமுடியாது என்று எவ்வுளவோ சொல்லியும் அவன் மேல் செலுத்திய கருனையை மாற்றிகொள்ள பார்வதி தேவி தயாராக இல்லை. தாய் அல்லவா ?

"முடிந்தால் அவன் விதியை மாற்றி கொள்" என்று சிவபிறான் கூறி விடுகிறர்.

"நான் அவனை மிக பெரிய கோடீஸ்வரனாக மாற்றி அவன் விதியை நான் மாற்றி காட்டிகிறேன்" என்று ஈசனிடம் சவால் விடுகிறாள் பார்வதி தேவி.

ஈசன் மனதுக்குள் சிரித்து கொள்கிறார்.

ஒரு வீடு முடிந்து அடுத்த வீட்டுக்கு வரும் வழியில் மூன்று மூடைகள் தங்க கட்டிகளை அவன் வரும் வழியில் போடுகிறாள் பார்வதி.

அந்த நேரம் பார்த்து பிச்சைகாரனுக்கு திடீரென "ஒரு வேளை தான் குருடாகி விட்டால் என்ன செய்வது ?" என்ற எண்ணம் வருகிறது.

கையில் கிடைத்த ஒரு கம்பை எடுத்துகொண்டு, இரு கண்களையும் மூடிக்கொண்டு பக்கத்து வீடிற்கு செல்கிறான் பிச்சை காரன். வழியில் பார்வதி தேவி போட்டிருந்த பொற்காசு மூட்டைகள் காலில் இடறுகிறது.

பிச்சைகாரனோ, கண்களை மூடிகொண்டு இருப்பதால் அந்த பொற்காசு மூடைகளை கல் எண்று நினைத்து, கால்களால் உதைத்துவிட்டு, அடுத்த வீட்டிற்கு சென்றடைகிறான்.

அடுத்த வீட்டிற்க்கு சென்ற பின் கையில் வைத்திருந்த கம்பை தூக்கி எறிந்து விட்டு, மூடிய கண்களையும் திறந்து கொண்டு, குருடாகி விட்டாலும்கூட தன்னால் தொடர்ந்து பிச்சை எடுக்க முடியும் என்று தனக்குள் திருப்தியடைந்துகொண்டு, அடுத்த வீட்டு வாசலில் நின்றுகொண்டு வழக்கம்போல, "அம்மா பார்வதி பிச்சை போடு" என்று வழக்கம்போல் கூவுகிறான்.

விதி வலியது. அதை யாரும் வெல்லமுடியாது...! என்பது இக் கதையின் நோக்கம்.

கொசுறு செய்தி

திருவையாறு பெயர் காரணம் ..?
சிதம்பரம் நடராஜர் கோவிலின் விமானத்தின் கூரையில், 21 ஆயிரம் பொன் ஓடுகளை, 72 ஆயிரம் பொன் ஆணிகளால் அடித்துப் பொருத்தி இருக்கின்றனர். நாம் தினம் 21 ஆயிரம் தடவை மூச்சு விடுவதாகவும், நம்முடைய உடம்பில், 72 ஆயிரம் நரம்புகள் இருப்பதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி ஆகிய ஐந்து ஆறுகள் இங்கே பிரிவதால், இவ்வூர் திரு+ஐ(ஐந்து)+ஆறு என்றாகி, அது திருவையாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் நாத பிரம்மம் தியாகராஜர் சமாதி உள்ளது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!வெற்றிப்பட நாயகன் - விஜய் சேதுபதி

வெற்றிப்பட நாயகன்

2012-ல் சத்தமில்லாமல் நுழைந்து வெற்றிப்படங்களில் நடித்து தனது பெயரை ஆணித்தரமாக பதிய வைத்த நாயகன் விஜய் சேதுபதி. அது என்னவோ விஜய் என்று பெயர் வைத்தாலே ஜெயம் தான் போல.

விஜய் சேதுபதி, பல நல்ல நல்ல கதையம்சம் கொண்ட குறும்படங்களில் நடித்தவர். இவர் நடித்த குறும்படங்களில் சில துரு, பெட்டி கேஸ் ஆகியவை. இந்த நடிப்பும் இவருக்கு நல்ல அடித்தளத்தை உருவாகியது.

அறிமுகம்

தேசிய விருது பெற்ற தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நாயகனாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி.கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்று நடிகனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். முதல் படத்தில் நாயகன், பின்பு ஒரு சாதாரண கதாப்பாத்திரத்தில் நடித்தார், அடுத்த படத்தில் வில்லன் மீண்டும் இரண்டு படங்களில் நாயகன் என்று வித்தியாசத்தை காட்டும் நடிகன்.


2012ல் வெளிவந்த சுந்தரபாண்டியன், பிட்சா, நடவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களில் நடித்து படமும் வெற்றி பெற்றதால் குறைந்த பட்ஜெட்டில் படமெடுப்பவர்களை கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்துள்ளார் விஜய் சேதுபதியின். மேலும் இந்த வெற்றிகள் புதுமுக இயக்குனர்களையும் ஊக்கப்படுதியிருக்கிறது. அதன் பலனாக கை மேல் படங்கள்.இதையடுத்து 2013ல் கைவசம் உள்ள படங்கள் புதுமுக இயக்குனர் நளன் இயக்கத்தில் "சூது கவ்வும்", புதுமுக இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் "பண்ணையாரும் பத்மினியும்" மற்றும் புதுமுக இயக்குனர் கே.பாலகிருஷ்ணன் இயக்கத்தில் "ரம்மி".

பண்ணையாரும் பத்மினியும்

மேஜிக்பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர். கணேஷ் தயாரிக்கும் படம் பண்ணை யாரும் பத்மினியும். இதில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். ஜெயப்பிரகாஷ் மற்றும் முன்னணி நடிகர், நடிகைகள் பலர் நடிக்கின்றனர்.

நாயகி தேர்வு நடக்கிறது. இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.டி. அருண்குமார் இயக்குகிறார். இவர் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். யதார்த்தமான கிராமத்து கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது.

பண்ணையார் ஒருவர் கார் வாங்குகிறார். ஆனால் அவருக்கு அதை ஓட்ட தெரியாது. எனவே டிராக்டர் ஓட்டும் முருகேசனை அழைத்து டிரைவராக வைத்துக் கொள்கிறார். அவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களே கதை. காமெடி, படமாக தயாராகிறது.

சென்டிமென்ட் இருக்கும். இந்த படத்தில் பத்மினி கார் ஒன்று முக்கிய கேரக்டரில் வருகிறது. இவ்வகை கார்களை வைத்து ஊர்வலம் நடத்துவது வழக்கம். இந்த படம் வந்த பிறகு பத்மினி கார் வைத்திருப்பவர்கள் பேசப்படுவர்.

இசை: ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு: கோகுல் பெனாஸ். எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத்.


ரம்மி

ரம்மி தமிழ்தானா? இந்தப் படத்தை முந்தையப் படங்களைப் போலவே அறிமுக இயக்குனர் ஒருவர்தான் இயக்குகிறார். பெயர் பாலகிருஷ்ணன் கே. முந்தையப் படங்களுக்கு மாறாக இதுவொரு கிராமத்து சப்ஜெக்ட். பிரேம்குமார் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

விமல் களவாணி என்ற ஒரே படத்தில் உச்சாணிக்கு சென்றது போல் சேதுபதியின் கேரியர் அவ்வளவாக சூடு பிடிக்கவில்லை. அவரது பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்கள் ஸ்கிரிப்ட் ஓரியண்ட் என்பதால் இருக்கலாம்.

ரம்மியும் ஸ்கிரிப்டுக்கு முக்கியத்துவம் தந்து உருவாக்கப்படுகிறது. டி.இமான் இசையமைக்கிறார்.

வெற்றி மீது வெற்றி குவிந்து வரும் விஜய் சேதுபதிக்கு 2013ம் வருடம் ஒரு வெற்றி வருடமாக அமைய வாழ்த்துக்கள்!.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!ஹரிதாஸ் (2013) - விமர்சனம்

வெளிநாட்டுவாழ் இந்தியர் டாக்டர் வி.ராமதாஸின் தயாரிப்பில், அவருக்கும் அவரது மருத்துவ தொழிலுக்கும் பெருமை சேர்க்கும்படி வெளிவந்திருக்கும் வெற்றிப்படம் தான் "ஹரிதாஸ்"!

திரைப்படம் மிக மிக அருமையாக உள்ளது. ஆனால் திரைஅரங்குகளில் மக்கள் கூட்டம் இல்லை. இது போன்ற நல்ல படத்தை மீடியாக்கள் விளம்பரபடுத்த வேண்டும். எத்தனையோ குப்பை படங்களுக்கு நல்ல ஒப்பனிங் குடுத்து காப்பாற்றும் ரசிகர்கள் இது போன்ற தரமான படத்தை ஆதரிக்காமல் இருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

கவிதை போல மிக அழகான படம் ... கண்ணின் ஓரம் இரம் கசிவது உறுதி...

படத்தோட கதை என்னனா ...

'ஆட்டிசம்' நோயால் பாதிக்கப்பட்டு வாய் பேசாமல் இருக்கும் தனது மகனை வயதான அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு, ஒரு பொறுப்பான போலீஸ் அதிகாரியாக சென்னையில் வேலை பார்த்து வருகிறார் கிஷோர். சென்னையில் அவருக்கு பிரபல ரௌடியை என்கவுன்டரில் சுட்டுத் தள்ளவேண்டும் என்ற பொறுப்பு கொடுக்கப்படுகிறது. இதற்காக தனது மகனை கூட வைத்திருக்காமல் தன்னுடைய அம்மாவுடன் சொந்த கிராமத்தில் வைத்து வளர்த்து வருகிறார்.

ஆனால், வயதான அம்மா இறந்த செய்தி சென்னையில் இருக்கும் கிஷோருக்கு தொலைபேசி மூலமாக தெரிய வருகிறது. அதன்பின்னர் சொந்த ஊர் திரும்பும் கிஷோர் தனிமைப்படுத்தப்பட்ட தன் மகனுக்கு இனி தான் தான் எல்லாம் என்ற சூழ்நிலையில் கிராமத்திலிருந்து அவனை சென்னைக்கு அழைத்து வருகிறார்.

எதையுமே உணர்ந்து கொள்ளமுடியாத மனநிலையில் இருக்கும் அவனை டாக்டர் யூகி சேதுவிடம் கொண்டு போகிறார். அவரோ, உங்கள் மகனுடைய உடலில் எந்த பிரச்சினையும் இல்லை, மனதில்தான் பிரச்சினை இருக்கிறது. அதற்கு ஒரே வழி அவனை இந்த உலகத்துக்கு கொண்டு வர முயற்சிப்பதைவிட, நீங்கள் அவனுடைய உலகத்துக்குள் செல்லுங்கள் என்று அறிவுரை கூறுகிறார்.

அவர் சொன்னபடியே தன் மகனுக்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணிக்க முடிவு செய்கிறார் கிஷோர். இதற்காக தான் ஏற்றிருந்த என்கவுன்டர் வேலையை தனது நண்பருக்கு சிபாரிசு செய்துவிட்டு மகனை கவனிக்க புறப்படுகிறார்.

அவனை பள்ளியில் சேர்க்கும் கிஷோர், மகன் பக்கத்திலேயே அமர்ந்து அவனுக்கு பணிவிடை செய்கிறார். அங்கு டீச்சராக வரும் சினேகா, கிஷோரின் மகன் மேல் இறக்கப்பட்டு அவனை தான் இனி பார்த்துக் கொள்வதாக உறுதி கூறுகிறார். ஒரு கட்டத்தில் கிஷோரின் மகனை தனது மகனாகக்கூட ஆக்கிக் கொள்ள முடிவு எடுக்கிறார். ஆனால், சினேகாவின் தாய்க்கு இதில் துளியும் சம்மதமில்லை.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட கிஷோர் மகன் என்னவானான்?
மகனாக ஏற்றுக்கொள்ளத் துணிந்த சினேகாவுக்கு அது நிறைவேறியதா?
என்பதே மீதிக்கதை.


படத்துல எனக்கு பிடித்த சில ....

கிஷோர்
மிடுக்கான போலீஸ் அதிகாரி + பாசக்கார தந்தை என்று இருவேறு பரிமாணங்களில் மிரட்டி இருக்கிறார் கிஷோர்.

கம்பீரமான போலீஸ் அதிகாரியகட்டும், பாசமான, பொறுப்பான அப்பாவாகட்டும் அவரை தவிர அந்த வேடத்தில் வேறு யாரையும் பொருத்தி பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு அபாரமான இயல்புத்தனம் மாறாத நடிப்பு.

தொழிலா, குறைபாடுள்ள மகனா? எனும் நிலையில், இருதலைகொள்ளி எறும்பாக தவித்து, பின் மகனுக்கு சரியானதொரு எதிர்காலத்திற்கு வித்திட்டுவிட்டு, தொழில் எதிரிகளையும் தீர்த்துகட்டி, தானும் மடிந்துபோகும் பாத்திரத்தில் கிஷோர் செம ஜோர்!

சினேகா
கதாநாயகியாக சினேகா, கதாநாயகி என்று சொல்வதைவிட டீச்சர் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவு கதாபாத்திரத்தோடு ஒன்றிவிட்டார். படத்தில் இவருக்கு டூயட் இல்லை, காதல் காட்சிகள் இல்லை, முழுவதும் டீச்சராகத்தான் வருகிறார்.

மாநகராட்சி பள்ளி ஆசிரியையாக சினேகா அசத்தலான தேர்வு!

கிஷோரின் ஆட்டிசம் பாதித்த மகனுக்காக கிஷோரையே திருமணம் செய்து கொள்ள துணிந்து, பின் அப்பாவையும் இழந்த அந்த குழந்தையின் எதிர்காலத்திற்காக தன் எதிர்காலத்தையும் தியாகம் செய்து நம்மையும் உருக வைத்து விடுகிறார் அம்மணி! பலே, பலே!!
பிருத்விராஜ் தாஸ்
மேற்படி இருவரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறான் படத்தின் ரியல் ஹீரோ சிறுவன் ஹரியாக வரும் பிருத்விராஜ் தாஸ். ஆட்டிசம் பாதித்த சிறுவனாகவே வாழ்ந்திருக்கிறான் பிருத்வி என்றால் மிகையல்ல!

பொடியன் ஏகப்பட்ட விருதுகளுக்கு வீட்டில் இப்பொழுதே இடத்தை காலி செய்து வைத்துக் கொள்ளலாம்!

பரோட்‌டா சூரி
காமெடிக்கு என்று ‘பரோட்டோ’ சூரியை வைத்திருக்கிறார். ஒரு சில இடங்களில் ரசித்து சிரிக்க முடிகிறது. பல இடங்களில் சலிப்பே மேலோங்கி இருக்கிறது.

ஒளிப்பதிவு vs இசை
ரத்னவேலுவின் ஒளிப்பதிவு கதையோட்டத்துக்கு பக்கபலமாக இருக்கிறது. காட்சிக் கோர்வைகளை சிறப்பாக அமைத்திருக்கிறார். விஜய் ஆண்டனியின் பின்னணி இசை நம்மை படத்தோடு பயணிக்க உதவியிருக்கிறது.


இயக்குனர் குமரவேலன்
தான் எடுக்க நினைத்த விஷயத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் அப்படியே எடுத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் முதல் காட்சியிலேயே நம்மை இருக்கையோடு கட்டிப் போட்டு விடுகிறார். இதற்காக அவருக்கு பாராட்டுக்கள்.

இதுபோன்ற சிறந்த படங்களைத் தரவேண்டிய கடமை ஒவ்வொரு படைப்பாளிகளுக்கும் உண்டு என்பதை நீரூபித்துக் காட்டியுள்ளார் இயக்குனர் ஜி.ஆர்.குமரவேலன்.

ஆட்டிச சிறுவனின் கதையில் அழுத்தமா ஆக்ஷ்ன் கதையையும் கலந்துகட்டி, ஆர்ட் படத்தை கமர்ஷியல் படமாக தந்திருக்கும் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலின் சாமர்த்தியம்.!

கோழி இடும் முட்டைகள் : 4 / 5
எத்தனையோ குப்பை படங்களுக்கு நல்ல ஒப்பனிங் குடுத்து காப்பாற்றும் ரசிகர்கள் இது போன்ற தரமான படத்தை ஆதரிக்காமல் இருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

ஹரிதாஸ் - ஹிட்பாஸ்! திரைப்படம் மிக மிக அருமை!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks to maalaimalar new paper which inspired me to see this movie.ஜொள்ளு vs லொள்ளு

சத்யராஜ் vs மணிவண்ணன்

சத்யராஜ் - மணிவண்ணன் காம்பினேசன் என்றாலே அந்த படத்தில் ஒரு பரபரப்பு இருக்கும். இன்னார் என்று பாராமல் கலாய்க்கும் அரசியல் காமடி சிரிக்கவைத்து விலா எலும்புகளை பதம் பார்க்கும். மொத்தத்தில் இந்த காம்பினேசன் பெரிய ஹிட் கொடுத்த படங்கள் ஏராளம்.வாழ்க்கை சக்கரம், நூறாவது நாள், புதுமனிதன், மாமன் மகள் போன்ற படங்கள் உதாரணம். சத்யராஜ் நடித்த சட்டையர் படங்கள் பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாகராஜ சோழன் எம்.ஏ எம்.எல்.ஏ

நாகராஜ சோழனின் சிறப்பம்சம் மணிவண்ணனின் இயக்கத்தில் உருவாகும் 50வது படம். தவிர, சத்யராஜின் நடிப்பில் வெளிவரும் 200வது படம்.மணிவண்ணன் தான் இயக்கும் 50 வது படத்திற்கு நாகராஜ சோழன் எம்.ஏ எம்.எல்.ஏ என பெயரிட்டுள்ளார். இதில், சத்யராஜ், சீமான் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கின்றனர்.

1994 ல் வெளிவந்து அரசியல் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய அமைதிப்படையின் இரண்டாம் பாகம் தான் இந்தப் படம்.

ஜொள்ளு vs லொள்ளு

பழைய அமைதிப்படையை போன்றே அதே நூறு சதவீத லொள்லோடும், ஜொள்லோடும் இன்றைய இளைஞர்களைக் கவரும் வண்ணம் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில், மணிவண்ணன், ரகு மணிவண்ணன், கோமல் ஷர்மா, வர்ஷா, வையாபுரி,
எம் எஸ் பாஸ்கர், மிருதுளா, அன்சிபா, கிருஷ்ணமூர்த்தி என்ற மிகப்பெரிய நடிப்பு பட்டாளம் நடிக்கிறார்க்ள.ஒளிப்பதிவை மணிவண்ணனுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றிய டி.சங்கர் கவனிக்க, ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார். ஒரே ஷெட்யூலில் கோவை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்க உள்ளனர். வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில் எஸ்.ரவிச்சந்திரன், கே சுரேஷ் ஆகியேர் இணைந்து தயாரிக்கின்றனர்.

மணிவண்ணன் இயக்கத்தில் புரட்சித்தமிழன் சத்யராஜ் நடிக்கும் நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ படத்திற்கான டீசர் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.

படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு: லைப் ஆப் பைக்கு 4 விருதுகள்!!

சினிமா துறையில் உயர்ந்த விருதுகாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி மாநிலத்தை கதை தழுவலை கொண்டு எடுக்கப்பட்ட ஹாலிவுட் படமான லைப் ஆப் பை படத்திற்கு 4 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன.


சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், இசையமைப்பாளர் மற்றும் பாடகர்களுக்கு, ஆண்டு தோறும், "ஆஸ்கர் விருது" வழங்கப்படுகிறது. இதன்படி, 85-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஹாலிவுட்டில் நகரில் கோலாகலமாக நடந்தது. இவ்விழாவில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்படங்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன.

இந்தியாவில், புதுச்சேரி மாநிலத்தை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட ஹாலிவுட் படமான லைப் ஆப் பை படம் 11 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தன. அதுமட்டுமல்லாது பிரபல பின்னணி பாடகி பாம்பே ‌ஜெயஸ்ரீயும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தார்.

லைப் ஆப் பை-க்கு 4 ஆஸ்கர் :-

ஹாலிவுட் டைரக்டர் ஆங் லீ இயக்கிய "லைப் ஆப் பை" படத்திற்கு 4 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன.
  • சிறந்த இசை
  • சிறந்த ஒளிப்பதிவு
  • சிறந்த விஷூவல் எபக்ட்ஸ்
  • சிறந்த இயக்குனர்
ஆகிய 4 பிரிவுகளில் விருது கிடைத்துள்ளன.

பாம்பே ‌ஜெயஸ்ரீ ஏமாற்றம் :-

'லைப் ஆப் பை' படத்தில் குழந்தையை தலாட்டுவது போன்ற, பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த பாடலை, பிரபல கர்நாடக இசைப் பாடகியான, பாம்பே ஜெயஸ்ரீ, பாடியிருந்ததுடன், அவரே அந்த பாடலை எழுதியுமிருந்தார்.

ஒரு தாய், தன் குழந்தையின் அழகையும், சிறப்பையும் புகழ்ந்து பாடுவது போல், அந்த பாடல் எழுதப்பட்டிருந்தது. இந்த பாடலும், ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை. மாறாக பிரபல பாப் இசை பாடகி அடிலி-க்கு விருது வழங்கப்பட்டது.


டேனியல் டே லூயிஸ் சாதனை :-

லிங்கன் படத்துக்காக சிறந்த நடிகர் விருது பெற்ற டேனியல் டே லூயிஸ் 3-வது முறையாக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 1989ம் ஆண்டு மை லைப்ட் புட் என்ற படத்துக்காகவும், 2007ம் ஆண்டு தெர் வில் பி பிளட் என்ற படத்துக்காகவும் விருது பெற்றுள்ளார்.

ஆமோர் சிறந்த வெளிநாட்டு படம் :

ஆஸ்திரிய திரைப்படமான ஆமோர் திரைப்படத்திற்கு சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருது கிடைத்துள்ளது.

விருதுகள் விபரம் :

* சிறந்த நடிகர் : டேனியல் டே லூயிஸ் (லிங்கன்)

* சிறந்த நடிகை : ஜெனிபர் லாரன்ஸ் (சில்வர் லிங்கின் ப்ளேபுக்ஸ்)

* சிறந்த படம் : அர்கோ

* சிறந்த டைரக்டர் : ஆங் லீ (லைப் ஆப் பை)

* சிறந்த ஒளிப்பதிவு : க்ளவுடியா மிராண்டா (லைப் ஆஃப் பை)

* சிறந்த இசை : மைக்கேல் டன்னா (லைப் ஆப் பை)

* சிறந்த விசுவல் எபைக்ட்ஸ் : பில் வெஸ்டன்கோபர், ‌டொணால்டு ஆர்.எல்லியாட், எரிக் ஜான் டி போர், குலாமி ரொகன் (லைப் ஆஃப் பை)

* சிறந்த துணை நடிகர் : கிறிஸ்டோபர் வாட்ஸ் (ஜன்கோ அன்செயிண்டு)

* சிறந்த துணை நடிகை : அன்னா ஹாத்வே (லெஸ் மிஸரபல்ஸ்)

* சிறந்த படத்தொகுப்பு : வில்லியம் கோல்டன்பர்க் (அர்கோ)

* சிறந்த வேற்று மொழி படம் : அமோர்

* சிறந்த அனிமேஷன் குறும்படம் : பேப்பர் மேன்

* சிறந்த அனிமேஷன் படம் : பிரேவ்

* சிறந்த ஆடை வடிவமைப்பு: அன்னா கரீனினா

* சிறந்த மேக் ஆப் : லிசா வெஸ்ட்கோட்

* சிறந்த சிகை அலங்காரம் : ஜூலி டார்ட்னெல்

* சிறந்த நேரடி ஆக்ஷன் குறும்படம் : கர்ஃப்யூ

* சிறந்த ஆவண குறும்படம் : இனோசென்ட்

* சிறந்த குறும்படம் : சர்ச்சிங் ஃபார் சுகர் மேன்

* சிறந்த பாடல் : அடிலி அட்கின்ஸ் மற்றும் பால் எப்வொர்த் (ஸ்கைபால்)

* சிறந்த சவுண்ட் மிக்சிங் : லேஸ் மிசெரபில்ஸ் படம்

* சிறந்த சவுண்ட் எடிட்டிங் : ஜீரோ டார்க் தர்ட்டி மற்றும் ஸ்கைஃபால் படங்கள்

* சிறந்த புரோடெக்ஷன் டிசைன் : லிங்கன்

* சிறந்த திரைக்கதை : குயின்டின் டரான்டினோ (ஜன்கோ அன்செயிண்டு)

* சிறந்த மாற்று திரைக்கதை : கிறிஸ் டெரியோ (அர்கோ)
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Source :ந.பரணிகுமார் & Dinakaran news paperஇயற்கை வயாகரா பற்றி தெரியுமா...?!

வயகரா! வயகரா! வயகரா!!! இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த பிரபலாமான வார்த்தை.

திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு மருந்தின் பெயர் தான் வயாகரா. இவ்வயகரா மாத்திரைக்கு எவ்வளவு அதிக வேகமும், அதிக சக்தியும் உள்ளதோ அவ்வளவு வேகமாக மனிதனின் ஆரோக்கியத்தை அழிக்கும் சக்தியும் உண்டு என்பதும் உண்மை.

வருங்காலத்தில் மருத்துவ உலகம் ஆராய்ந்து, அனுபவித்த பின் வயகராவிற்குத் தடை விதிக்காமல் இருக்க முடியாது என்பதும் உண்மை.

இயற்கை வயாகரா - முருங்கை

முருங்கையும், மூலிகையும் வயகராவை விட இரண்டு மடங்கோ 100 மடங்கோ, இல்லை ஆயிரம் மடங்கு சிறந்தவை ஆகும். முருங்கையின் அனைத்து உறுப்புகள் மற்ற மருந்துப் பொருளோடு சேர்ந்தால் வயகராவை விட பன்மடங்கு பயனளிக்கிறது. உறவில் முருங்கையின் பங்களிப்பு மகத்தானது.

ஆண்மை அதிகரிக்க...

முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டையும் சம அளவில் சேர்த்து, சிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும். விறைப்பு நீடிக்கும், வேகமும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண்தன்மை வந்து துள்ளும், கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக்கலாம்.

விந்து விருத்தியாக...

முருங்கைப் பூ 10, சுத்தமான பசும்பாலில் சேர்த்து, காய்ச்சி இரவு படுக்கும்போது குடிக்க, விந்து விருத்தியாகும், தேகம் பலம் பெறும், அத்துடன் பேரீச்சம்பழம் சேர்த்துச் சாப்பிட, விந்து விருத்தியாவது மட்டுமின்றி விந்து கெட்டியாகும். விந்து சீக்கிரம் முந்தாமலும் இருக்கும். தெவிட்டாத தேன் உண்டது போல், தீராத தாகம் தீர்ந்தது போல், ஆனந்தக் கடலில் ஆண், பெண் மூழ்கலாம்.

காமம் பெருக...

முருங்கைப் பூவை உணவாகவோ, மருந்துகளில் சேர்த்தோ, பச்சையாகவோ எந்த விதத்தில், எந்த மாதிரி உபயோகப்படுத்தினாலும், உண்டபின் உடலில் காமத்தைப் பெருக்கும். இச்சையைத் தூண்டும்.

பச்சையாக நான்கு பூவை தினம் இருவேளை மென்று திண்ணலாம். அரைக்கீரையுடன் அரை பங்கு முருங்கை பூ சேர்த்துக்கடைந்து, சோற்றுடன் சாப்பிடலாம். காமம் பெருகும், வயகரா உண்டால், காமஉணர்ச்சி வந்து, உடன் போய்விடும். ஆனால் இந்த இயற்கை வயகரா உண்டால், அணையில் நீர்த்தேக்கம் போல் காம உணர்ச்சி அப்படியே அலைமோதி நிற்கும். வயகரா உண்டவருக்கு ஒருவித மின்சாரம் தாக்கியது போன்ற காம வலிப்பு வந்து போய்விடும். ஆனால் இந்த முருங்கை வயகரா உண்டால் உடலிலுள்ள 72,000 நரம்புகளிலும் இன்பக் களிப்பு ஏகாந்த நடனமிடும்.

உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க...

முருங்கையின் இளம் பிஞ்சுக் காயைக் கொண்டு வந்து அனலில் காட்டி, சாறு பிழிந்து குடிக்க, காம உணர்வு பெருகும், மனையாளுக்கு பெருமகிழ்ச்சி அளிக்குமளவு உடலுறவில் இன்புறல் நீடிக்கும். சிலருக்கு மனைவியோடு எவ்வளவு நேரம் பேசிக் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்தாலும் உடலுறவில் ஈடுபட்டால் ஒரு நிமிடத்தில் விந்து வெளியாகி விடும். இதனால் அவர்கள் மிகுந்த வேதனைப்படுவர். இப்படிப்பட்டவர்களுக்கு இம்முறை சிறந்த பலனளிக்கும்.

உறவில் பரவசம் பெருக...

முருங்கைக் கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு, பொரித்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித்துண்ண ஆண்கள் பாலுறவில் பரவசமடைவர். ஆண்மை அதிகரித்து ஆனந்தம் அடைவர். இல்லாள் கணவன்மீது ஈடில்லா பாசமும், மதிப்பும் கொள்வாள். இல்லற சுகத்தில் இருவரும் ஒரு நிலையில் உல்லாசம் காண்பர்.

வயதானோரும் வாலிப சுகம் அடைய...

முருங்கையின் மிகவும் பூப்போன்ற இளம்பிஞ்சு எடுத்து வந்து, பட்டாணி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, லேசாக உப்பு, மிளகு தூவி, பச்சையாகவே உண்டால், கிழவனுக்கும் காளையைப் போல் காம இச்சை ஏற்படும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Source : Dinakaran News Paperசாப விமோசன தலங்கள் - ஒரு பார்வை!

1. திருக்கைச் சின்னம் :-

திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்கைச் சின்னம் என்ற திருக்கச்சனத்திலுள்ள கைச்சின்ன நாதரை வழிபட்டு இந்திரன் தன் சாபம் நீங்கினான். இங்கே ஈசனோடு திருமாலும் திருவருள் புரிகிறார்.

குற்றம் புரிந்தோர் மனமுருகி வழிபட்டால் இத்தல ஈசன் அவர்களை மன்னித்து அருள்கிறான்.

2. குறுமாணக்குடி :-

கும்பகோணம், வைத்தீஸ்வரன் கோயிலுக்கருகே உள்ள குறுமாணக்குடி கண்ணாயிரநாதரை வழிபட்டு கௌதம முனிவர் இட்ட சாபத்தை, இங்கே தீர்த்தம் நிறுவி அதில் நீராடி, இந்திரன் நீங்கப்பெற்றான்.

கண்நோய்களைத் தீர்ப்பதிலும் குழந்தை வரம் தருவதிலும் இத்தல ஈசன் நிகரற்றவர்.


3. திருமீயச்சூர் :-

மேகங்களுக்கு அதிபதியான இந்திரனுடன் புஷ்பகம், ஆவணி, புஷ்பக தரணி, சலநிதி, சலாநிதி, நீலம், சலவாரிணி ஆகிய மேகங்களும் வழிபட்டு பேறுபெற்ற ஈசன், திருமீயச்சூரில் மேகநாதராக அருள்கிறார்.

இத்தலம் சூரியதோஷ பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது.

4. மதுரை :-

மதுரை சொக்கநாதப் பெருமானை இந்திரன் சித்ரா பௌர்ணமியன்று பூஜை செய்வதாக ஐதீகம். இங்கு அஷ்டதிக்பாலகர்களுள் ஒருவனாக இந்திரனை தரிசிக்கலாம். சித்திரை திருவிழாவின் நிறைவு நாளில் சொக்கநாதர் இந்திரனுக்கு அருளும் லீலை வைபவத்தில் அவருடன் இந்திரன் உலா வருகிறான்.

இங்குள்ள தியான பிராகாரத்தில் அமர்ந்து தியானம் செய்ய, மனம் ஒருமைப்படும்.

5. மயிலாடுதுறை கறிப்பறியலூர் :-

மயிலாடுதுறையை அடுத்த கறிப்பறியலூர் தலத்தில் இந்திரனின் கர்வத்தை அழித்த, 'குற்றம் பொருத்தருளிய நாதர்' எனும் ஈசன் ஆலயம் கொண்டுள்ளார்.

நாம் அறியாமல் செய்த தவறுகளை மன்னிக்கும் ஈசன் இவர்.

6. சுசீந்திரம் :-

சுசீந்திரம் தாணுமாலயனை இந்திரன் தினமும் அர்த்தஜாம பூஜை செய்து வழிபடுவதாக ஐதீகம். இத்தல விநாயகரும் இந்திர விநாயகர் என்றே வணங்கப்படுகிறார். மும்மூர்த்திகளும் ஓருருவில் அருள்வதால் இத்தலம் அனைத்து வித பிரார்த்தனைகளையும் நிறைவேற்றும் தலமாக போற்றப்படுகிறது.

7. காஞ்சிபுரம் :-

காஞ்சிபுரம் ஜ்வரஹரேஸ்வரர் சந்நதியின் பின்புறம் தேவர்களுக்கு ஏற்பட்ட ஜ்வரத்தை (காய்ச்சலை) போக்க இந்திரன் வழிபடும் சிற்பம் உள்ளது. விஷ ஜ்வரங்களிலிருந்து பக்தர்களைக் காப்பவராக இவர் போற்றப்படுகிறார்.

8. திருவாரூர் :-

திருவாரூர் தியாகராஜர், இந்திரனால் வழிபடப்பட்டவர். முசுகுந்த சக்ரவர்த்தியின் தவத்தின் பயனாக அவர் பூலோகம் எழுந்தருளியது வரலாறு. மனிதர்களுக்கு மறுபிறவியைத் தவிர மற்ற வரங்களை வாரி வழங்கும் கருணாமூர்த்தி இவர்.

காணாமல் போன தன் ஐராவதம் யானையை கும்பகோணம், தாராசுரத்தில் சிவனருளால் கண்டுபிடித்த இந்திரன், இந்திர விமானம் அமைத்து ஐராவதேஸ்வரரை பூஜித்து பேறு பெற்றிருக்கிறான்.

காணாமல் போன பொருட்களை இவரிடம் வேண்டிக்கொண்டால் அவை மீண்டும் கிடைக்கின்றனவாம். இத்தல இறைவியின் துவாரபாலகிகளாக கங்கையும் யமுனையும் உள்ளது சிறப்புத் தகவல்.

9. காஞ்சிபுரம் :-

காஞ்சிபுரத்தில் உள்ள கச்சிநெறிக்காரைக்காட்டில் இந்திரன் தீர்த்தம் நிறுவி, இத்தல ஈசனான சத்திய விரதநாதரை வழிபட்டு வளங்கள் பெற்றான்.

இத்தல ஈசனை புதன் கிழமைகளில் வணங்க புத தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம்.

10. ஓமாம்புலியூர் :-

ஓமாம்புலியூருக்கு அருகே உள்ள திருக்கடம்பூர் எனும் கரக்கோயிலில் அருளும் அமிர்தகடேசுவரரை இந்திரன் வழிபட்டிருக்கிறான்.

இத்தல ஈசன், பக்தர்களுக்கு அமிர்தம் போன்ற இனிமையான வாழ்வை அருள்பவர்.

11. பூம்புகார் :-

பூம்புகாரில் உள்ள திருச்சாய்க்காடு எனும் சாயாவனத்தில் உள்ள ஈசனை பூஜித்து இந்திரன் பல வரங்கள் பெற்றான்.

நிழல் போல் நம்மை தொடரும் துன்பங்கள் இத்தல ஈசனை வணங்கிட விலகுகின்றன.


12. மதுராந்தகம் :-

மதுராந்தகத்திற்கு அருகிலுள்ள கருங்குழியிலிருந்து சற்றே உள்ளடங்கிய கிணாரில் அருளும் வீரவனநாதரை இந்திரனும் அவன் வாகனமான ஐராவதமும் வழிபட்டு வரங்கள் பல பெற்றுள்ளனர்.

இத்தல ஈசன் வாழ்வில் ஏற்படும் பயங்களை அழித்து நம்மைக் காப்பதாக ஐதீகம்.

13. கீழ்வேளூர் :-

கீழ்வேளூர் தலத்தில் இந்திரன் சித்திரகூடகிரி எனும் கட்டுமலை அமைத்து ஈசனை நோக்கி தவம் புரிந்து அரிய வரங்களைப் பெற்றான். இத்தல கேடிலியப்பரை அப்பரடிகள் "கீழ்வேளூர் ஆளுங்கோவைக் கேடிலியை நாடுபவர் கேடிலாரே" என்று ஓரடியில் அழுத்தமாகத் தெரிவிக்கிறார்.

14. சிதம்பரம் :-

சிதம்பரம் கிழக்கு ரத வீதியில் தேர் முட்டுக்கு அருகில் இந்திரபுவனேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்திரன் நிறுவி வழிபட்ட ஈசன் இவர்.

இவரை வழிபட, இந்திரன் போன்றே சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.

15. மருதாடு :-

மேல்மருவத்தூர்-வந்தவாசி சாலையில் உள்ள மருதாடு எனும் தலத்தில் இந்திரனின் வேறு பெயரான புரந்தரன் பெயரில் புரந்தரேஸ்வரர் அருள்கிறார். இத்தல அம்பிகை இந்திரப் பிரசாத வல்லியாகத் திகழ்கிறாள்.

இத்தல அம்பிகை திருமண வரம் தருபவள்.

16. கருங்குயில் நாதன் பேட்டை :-

மயிலாடுதுறைக்கு அருகே உள்ள கருங்குயில் நாதன் பேட்டை ஈசனை, தட்ச யாகத்தில் கலந்து கொண்ட தேவர்களை அழிக்க வந்த வீரபத்திரனுக்கு அஞ்சி குயில் வடிவில் இந்திரன் பூஜித்தான் என்கிறது தலபுராணம்.

இத்தல ஈசனை வழிபட குயில் போன்ற குரல் வளம் கிட்டும்.

17. கொள்ளிடம் மகேந்திரபள்ளி :-

சிதம்பரம்-மயிலாடுதுறை பாதையில் உள்ள கொள்ளிடத்திற்கு சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள மகேந்திரபள்ளியில் இந்திரன் வழிபட்ட ஈசன் அவனின் மற்றொரு பெயரான மகேந்திரநாதராக அருள்கிறார்.

கல்வி வளம் சிறக்க இத்தல ஈசன் அருள்கிறார்.

18. பொன்னேரி ஆங்காடு :-

பொன்னேரியை அடுத்த ஆங்காட்டில் இந்திரன் நிறுவி வழிபட்ட சிவலிங்கம் இந்திரேஸ்வரராக அருள்கிறது. ஆகண்டலன் எனும் இந்திரன் அசுரர்களுக்கு அஞ்சி மறைந்திருந்து வழிபட்ட இடம் ஆகண்டலன்காடு என்றிருந்து பின் மறுவி ஆங்காடு ஆனது.

பகைவர்களின் தொல்லையிலிருந்து இத்தல ஈசன் பக்தர்களைக் காக்கிறார்.

19. திருவாய்மூர் :-

சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றான திருவாய்மூரில் இந்திரன் வழிபட்ட நீலக்கல் லிங்கமூர்த்தி அருளாட்சி செய்கிறார்.

நீலக்கல் சனிபகவானுக்குரியதால் இத்தல ஈசனை வழிபட சனி தோஷங்கள் அகல்கின்றன.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Source :ந.பரணிகுமார் & Dinakaran news paperராஜமௌலியின் அடுத்த மிரட்டல் 'பாஜூ பாலி'

சினிமா நடிகர்கள் பற்றியும், நடிகைகள் பற்றியும் கொண்டாடும் மீடியாக்கள் இன்றைக்கு கொண்டாடுவது இயக்குநரை. எஸ்.எஸ்.ஆர் என்று அன்போடு அழைக்கப்படும் S.S.ராஜமௌலி இன்றைக்கு தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாது தென்னிந்திய திரை உலகத்தின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர்.

இவ‌ரின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று ஒவ்வொரு ஹீரோவும் ஏங்குகிறார்கள். ஈ-யை வைத்து மெகா ஹிட் கொடுத்தவர் நம்மை வைத்து அட்லீஸ்ட் ஹிட் தரமாட்டாரா என்ற நம்பிக்கை.ஜூனியர் N.T.R ஐ வைத்து ஸ்டூடன்ட் நம்பர் 1 இயக்கியது தொடங்கி சாதாரண யை கதைக் கருவாக வைத்து மிரட்டியது வரை ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டினார்கள். நான் ஈ படம் பார்த்துவிட்டு யார் இந்த ராஜமௌலி என்று யோசித்த ரசிகர்கள் ராஜமௌலி என்றால் பணி ராட்சஷன் என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள். அப்படித்தான் செல்லமாய் அவர் அழைக்கப்படுகிறார். எந்த செயலானாலும் கடுமையாய் உழைத்து வெற்றியை ருசித்தபின்னர்தான் வேறு வேலையைப் பார்ப்பாராம்

நான் ஈ வெளிவந்ததும் கூடவே சில ஈ-‌களும் வந்தன. முதல் ஈ ராஜமௌலியின் அடுத்தப்பட ஹீரோ ர‌ஜினி என்றது. இரண்டாவது ஈ-யின் சாய்ஸ் அ‌‌‌ஜீத். ஆனால் அவைகள் போலி ஈ-கள் என்று ராஜமௌலி தெ‌ளிவுப்படுத்தியிருக்கிறார். இவ‌ரின் அடுத்தப்பட ஹீரோ பிரபாஸ்.

அடுத்த படத்தோட பேரு என்னப்பா .... ?

100 கோடியில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் விஸ்வரூபம் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட இந்தியாவின் அனைத்து பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்களிலும் சாதனை படைத்து வருகிறது! அதேபோல வெளிநாடுகளிலும் விஸ்வரூபம் முதல் இரண்டு வார முடிவில் நல்ல லாபம் ஈட்டிக் கொடுத்திருக்கிறது!

விஸ்வரூபத்துக்கு முன்பு அனைத்து இந்தியா முழுவதும் கலக்கிய மற்றொரு படம் ‘நான் ஈ’ இந்தியா முழுவதும் 125 கோடி வசூல் செய்தது இந்தப் படம். நான் ஈக்குப் பிறகு கொஞ்சம் கூட ஓய்வு எடுத்துக் கொள்ளாத ராஜாமௌலி தனது அடுத்த படத்தை 50 கோடியில் பட்ஜெட்டில் தொடங்கிவிட்டார்!


பாஜூ பாலி

ஆறடி உயரம் கொண்ட பிரபாஸ் முதன்மைக் கதாநாயகனாகவும், இவருக்கு நிகரான நெட்டை ஹீரோக்களான ராணாவும், கோபிச்சந்தும் வில்லன்களாகவும் நடிக்கிறார்கள். படத்துக்கு ‘பாஜூ பாலி’ என தலைப்பு வைத்திருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஆந்திராவையே கலக்கிக் கொண்டிருக்கிறது!

காரணம்... பாஹூ பாலி கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபாஸ், மலைபோல் குவிந்து கிடக்கும் மண்டை ஓடுகளின் மீது போரில் வென்ற செருக்குடன் நிர்க்கும் காட்சி, இந்திய சினிமாவுகே புதிதாக இருக்கிறது!

படத்தின் கதை ... ?

இந்தப் படத்தின் கதை இராமயணக் காலத்தில் வாழ்ந்ததாக கூறப்படும், இந்திரனுக்கும் அருணாவுக்கும் பிறந்த மாவீரன் பாலியின் கதையா, அல்லது ஜைன மத்தின் தீர்த்தங்கரர்களில் ஒருவராக இந்தியாவில் வழிபடப்படப்படும் ரிஷப தேவரின் மகன் ‘பஹூ பாலி’ யின் வாழ்க்கைக் கதையா என்பது பற்றி இதுவரை வாய்திறக்கவில்லை ராஜாமௌலி.தனக்கு நெருக்கமான ஊடக நண்பர்களிடம் மட்டும் படத்தின் ஒருவரிக்தையை சொல்லியிருகிறாராம். அதன்படி ‘ இரண்டு பெரிய தேசங்களின் இளம் ராஜாக்களாக இருக்கும் பிரபாஸ், ராணா இருவரும், மற்றொரு நாட்டின் இளவரசியான அனுஷ்காவுக்கா சண்டையிட்டு பல ஆயிரம் ஊயிர்களை பலிகொள்வதுதான் கதை’ என்று கூறியிருக்கிறார்.

எப்படியோ சிக்கனமான பட்ஜெட்டில் மிகபிரமாண்டமான கற்பனை கலந்த வரலாற்றுப் படங்களை எடுப்பதில் ராஜமௌலியின் ராஜங்கமே தனிதான்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!Malena (2000) - விமர்சனம் (கண்டிப்பாக 18+)

இன்று நாம் பார்க்க இருக்கும் ஹாலிவூட் படம் Malena. இது இத்தாலி நாட்டு படம். படத்தை இயக்கியவர் Giuseppe Tornatore. இவர் 'Cinema Paradiso' என்ற படத்தை எடுத்து பெரும் புகழ் பெற்றவர்.

ஒரு பள்ளி மாணவனில் பருக்காதலை மிக அழகாக சொன்ன படம். மேலும், ஒரு பெண்ணால் ஆண்துணையின்றி தனித்து வாழ்வதென்பது எப்போதுமே பெரும் சவாலாகவே இருக்குமா? அதிலும் மிக அழகான ஒரு பெண் விதவையாகவும் இருந்துவிட்டால் என்னென்ன சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்? என்பதை மிக தெளிவாக திரைமொழியில் சொன்னப் படம் இது.

படத்தோட கதை என்னனா ...

1941 ஆம் ஆண்டு இத்தாலி, இரண்டாம் உலகப்போரின் மத்தியில், சிசிலி (Sicily - இந்த இடம் படத்தின் இயக்குனர் பிறந்த இடம்) என்ற இடத்திலிருந்து படம் தொடக்குகின்றது. போரில் கலந்து கொள்ள கணவனை (Nino Scordia) அனுப்பிவிட்டு, சிசிலி நகரில் தனியே வாழும் பேரழகி மெலீனா, கதையின் நாயகி.

கணவனுக்காகவே காத்திருக்கும் அவள் ஊரில் உள்ள ஆண்கள் அனைவராலும் வயது வேறுபாடின்றி ரசிக்கப்படும் + பெண் பொறாமைப்படும் பேரழகி. அவள் யாரையும் கவனிப்பதில்லை.

இந்த நேரத்தில், 12 வயது ரெனாட்டோவுக்கு (Renato) தந்தையிடமிருந்து ஒரு புதிய சைக்கிள் கிடைக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியுடன், வேகமாக ஓட்டிச் செல்கிறான். ஒரு கட்டைச் சுவரில் பள்ளிச்சீருடையில் அவனைவிட வயது கூடிய மாணவர்கள் சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் ரெனாட்டோ தனது சைக்கிளைக் காட்டி, தானும் இப்போது பெரியவனாகிவிட்டேன். உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் எனக்கூற, அவர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.

சற்றுத் தொலைவிலுள்ள வீட்டைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒருவன் விசிலடித்து சிக்னல் கொடுக்கிறான். எல்லோரும் அவசரமாக ஓடிவந்து உட்கார்ந்து கொள்ள, கூடவே ரெனாட்டோவும் அவர்களுடன்! அமைதியாக, மிகுந்த எதிர்பார்ப்புடன் அப்படி யாருடைய வருகைக்காகக் காத்திருகிறார்கள்?

மெலீனா!
மெலீனா!
மெலீனா!


அவன் சம வயதுடைய நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு தினமும் Melena-வை ரசிக்க ஆரமிகிறான். அவள் தெருவை கடந்து சென்றதும் சிறுவர்கள் மீண்டும் தமது சைக்கிள்களில் விரைவாக ஓடிச்சென்று இன்னொரு வீதியில் அவளுக்காகக் காத்திருக்கிறார்கள்.

அவளின் நடை மற்றும் பொறுமை Renato-வை ரொம்பவும் ரசிக்க வைக்கிறது. அதுவே மெல்ல மெல்ல அவன் மனதில் ஒரு வித காதல் உணர்வை தர தொடக்குகிறது. அவளை தன் காதலி என்று .....

பிரான்ஸ் இத்தாலி மீதான போர் நடவடிக்கையை நிறுத்திக்கொள்வதாக ரேடியோ மூலம் தகவல் வருகிறது. போரில் மெலீனாவின் கணவன் இறந்துவிட்டதாக செய்தி, அவள் மீதான ஒரு பொய்யான ஜோடிப்பு வழக்கு, அவளது செலவுகளுக்குப் பணம் தந்துகொண்டிருந்த அவளது தந்தையின் இறப்பு எனத்தொடரும் நிகழ்வுகளால் அவளது வாழ்க்கை என்னவாகிறது? என்பதை ரெனாட்டோவின் பார்வையில் சொல்கிறது படம்.

படத்துல எனக்கு பிடித்த சில ....

இயக்குநர் Giuseppe Tornatore

ஒரு 13 வயதுப் பையனின் பார்வையிலேயே படத்தை நகர்த்தியது, பலரும் பேசத் தயங்கும் பால்ய கால பாலியல் பிரச்சினையை தைரியமாக முன் வைத்தது என சொல்லி சிக்ஸர் அடிக்கிறார் இயக்குனர்.

ஒரு சீரியசான கதையை நகைச்சுவையாகக் கொண்டு செல்ல Renato-வின் பாலுணர்வு காட்சிகள் உதவுகின்றன. 13 வயதுப் பையனின் கற்பனைகளும் செயல்பாடுகளும் எவ்வித ஒளிவுமறைவுமின்றி காட்சிப்படுத்தப் படுகின்றன. காம உணர்ச்சியின் உச்சத்திற்கே பார்வையாளனைக் கொண்டு செல்ல Renato பாத்திரம் உதவுகின்றது.

படத்தின் வசனங்கள் பல நம் மனதைத் தொடுபவை. தனித்து வாழும் அவளைப் பற்றி வாய் கூசாது பேசும் ஆண்களும், அவளை அவமானப்படுத்தும் பெண்களும்... மறக்க முடியவில்லை.

அதுவே இறுதிக்காட்சியில் காமம் கழன்று பேரன்பு மட்டுமே மிஞ்சும் Renato-வின் நிலைக்கு நம்மையும் கொண்டு செல்கிறது.


மெலீனாவாக Monica Bellucci

Monica Bellucci இத்தாலிய செக்ஸ் பாம். இயக்குநர் Giuseppe Tornatore இந்தக் கதைக் கருவுடன் பேரழகி மெலீனா பாத்திரத்திற்கு பொருத்தமான நடிகை கிடைக்காமல் பலநாட்கள் திரிந்தவர். எப்போது மோனிகாவை சந்தித்தாரோ, அந்த நிமிடமே அவர் முடிவு செய்தார் இவரே மெலீனா என. அதன்பிறகே திரைக்கதை டெவலப் செய்யப்பட்டது.

அழகு என்பது சாதாரணமானது. கம்பீரமான அழகு என்பது அவ்வளவு எளிதில் வாய்க்கப்படுவதில்லை. ஆரம்பக்காட்சிகளில் மோனிகாவைப் பார்க்கும் எவரும் கம்பீர அழகை உணர்ந்து கொள்வர். இந்தப் படத்தைப் பார்த்தபின் பலநாட்களுக்கு மோனிகா நம் மனதை விட்டு நீங்கவில்லை. நீங்களும் அதயே சொல்வீர்கள்!

Renato-வாக GIUSEPPE SULFARO

முதல் படமான மெலீனாவில் நடித்த போது 14 வயது. இயல்பான நடிப்பு. நடித்தார் என்பதை விட வாழ்ந்தார் என்றும் சொல்லலாம்.

படம் முழுவது சிறுவன் ரெனாட்டோ தன்னை ஒரு வளர்ந்த மனிதனாக காட்டிக்கொள்ள முயற்சிக்கும் பிரயத்தனங்கள் சுவாரஸ்யமானவை.

மெலீனா ஊராரிடம் அடி வாங்கும் சீன்..அப்பப்பா, அந்தப் பையனை விட நாம் அதிகம் பதறுவோம். அதே சீனை ‘பள்ளிக்கூடத்தில்’ தங்கர்பச்சான் கேவலமாக எடுத்திருப்பார். ஒளிப்பதிவும் இசையும் படத்தோடு பணிப்பது கூடுதல் சிறப்பு.

கோழி இடும் முட்டைகள் : 4 / 5
மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அற்புதமான கலைப்படைப்பு. வெளியான நேரத்தில் கடும் எதிர்ப்பைச் சந்தித்து. காரணம், பதின்ம வயதுப் பையனின் பாலியல் காட்சிகள் தான். அந்த எதிர்ப்பு ஓரளவு நியாயம் ஆனதே. எனவே மனமுதிர்ச்சி இல்லாதோர் இப்படத்தைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

மெலீனா - நெஞ்சைத் தொட்ட படம்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks to Umajee & Sengovi who's blog inspired me to see this movie.உண்ணக்காய் செய்வது எப்படி ?

இன்று நாம் பார்க்க இருப்பது கேரளா மாநில இனிப்பு வகை. இனிப்பு பதார்த்தம் கேரளாவில் மிக பிரபலமானநேந்திர வாழைப்பழத்தை கொண்டு செய்யப்படும் மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் உண்ணக்காய் தான்.

சரி.. சரி இனி உண்ணக்காய் செய்வது எப்படி ? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :-

நடுத்தரமாக பழுத்த நேந்திரங்காய் - அரை கிலோ
தேங்காய்ப்பூ - 1 கப்
முந்திரி - 25 கிராம்
திராட்சை - 25 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - பொரித்தெடுக்கும் அளவுக்கு.

செய்முறை:-

  • நேந்திரங்காயை இரண்டாக வெட்டி குக்கரில் போட்டு, கால் கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் அளவுக்கு வேகவைத்து மாவாக மசித்துக் கொள்ளுங்கள்.

  • வாணலியில் நெய் விட்டு தேங்காய்ப்பூ, முந்திரி, திராட்சை, சர்க்கரை, ஏலக்காய் போட்டு வறுத்துக் கொள்ளுங்கள்.

  • உதிர்த்து வைத்துள்ள நேந்திரங்காயில் லேசாக நெய் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திக்கட்டையில் தேய்த்து கொள்ளவும்.

  • இதன் நடுவில் வறுத்த கலவையை வைத்து கொழுக்கட்டையைப் போல பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

  • ருசியான உண்ணக்காய் ரெடி! ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!கமல் இயக்கும் ஹாலிவூட் படம் - ஆல் ஆர் கின்

"லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்" தயாரிப்பாளர் பேரிஆஸ்பனுடன்கமல் இணையும் ஹாலிவுட் படத்திற்கு "ஆல் ஆர் கின்" (All are Kin) என்று பெயர் வைத்துள்ளனர்.


தடைகள் பலவற்றை கடந்து கமலின் பிரமாண்ட படைப்பாற்றலில் உருவான விஸ்வரூபம் படம் சமீபத்தில் ரிலீஸாகி அனைத்து தரப்பினர் இடையே பாராட்டுதல்களை பெற்றதோடு வசூலையும் வாரி குவித்து வருகிறது. முன்னதாக இப்படம் வெளிவருவதற்கு முன்பே வெளிநாட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பனிடம், விஸ்வரூபம் படத்தை திரையிட்டு காட்டினார் கமல்.

கமலின் படைப்பாற்றலை பார்த்து வியந்து போன ஆஸ்பன், தனக்கு ஒரு படம் இயக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி கமலும் நிச்சயம் படம் இயக்குவதாகவும், இதுதனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றும் கூறியிருந்தார்.


தற்போது விஸ்வரூபம் படத்தை தொடர்ந்து விஸ்வரூபம் பார்ட்- 2 வையும் இந்தாண்டுக்குள் வெளியிட கமல் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் இப்படத்தை முடித்தபின்னர் பேரி ஆஸ்பன் படத்தை இயக்குவதாக சமீபத்தில் கமல் கூறியிருந்தார்.

இந்நிலையில் பேரி ஆஸ்பன் தயாரிப்பில் கமல் இயக்க இருக்கும் படத்திற்கு ஆல் ஆர் கின் என்று பெயர் வைத்துள்ளனர். "ஆல் ஆர் கின்" என்றால் "யாவரும் கேளீர்" என்று அர்த்தமாம். இந்திய கலாச்சாரத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. விஸ்வரூபம்-2 முடிந்த பிறகு உடனே ஆர் ஆர் கின் படத்தை தொடங்க இருக்கிறார் கமல்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Source : Dinamalar.com
உலகிலேயே மிகவும் இளம் வயது ஆசிரியை!

உலகிலேயே மிகவும் இளம் வயது யோகா ஆசிரியை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் உ.பியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஸ்ருதி பாண்டே.

உ.பி. மாநிலம் ஜன்சி நகரைச் சேர்ந்த இந்த குட்டி யோகா ஆசிரியை, உலகிலேயே மிகவும் இளம் வயது யோகா ஆசிரியை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவருக்கு யோகா சொல்லிக் கொடுத்த மாஸ்டர் ஹரி சேத்தன். இவருக்கு வயது 67 என்பது குறிப்பிடத்தக்கது.


ஜன்சி நகரில் உள்ள பிரமானந்த் சரஸ்தி தாம் என்ற ஆசிரமத்தில் தினசரி காலை 5.30 மணிக்கு தனது யோகா வகுப்பை தொடங்கி சொல்லிக் கொடுக்கிறார் இந்த குட்டி ஆசிரியை.

கடந்த 2 வருடங்களாக யோகா சொல்லிக் கொடுத்து வருகிறார் ஸ்ருதி. அதாவது தனது 4 வயது முதலே அவர் யோகா ஆசிரியையாக மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆசிரமத்தை ஹரி சேத்தன் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தார். அன்று முதல் இன்று வரை இவ்வளவு இளம் வயதில் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு யோகாவில் கரை கண்டது ஸ்ருதி மட்டும்தான் என்கிறார் ஹரி பெருமையுடன்.

வர்த்தகப் பிரமுகர்கள், ஆசிரியர்கள், இல்லத்தரசிகள், பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் என கிட்டத்தட்ட 30 பேர் புடை சூழ வெள்ளை நிற கால்சட்டை, சிவப்பு நிற டி சர்ட் அணிந்து அழகாக யோகா சொல்லிக் கொடுக்கிறார் ஸ்ருதி.


இதுகுறித்து ஸ்ருதி கூறுகையில், நான் சொல்லித் தருவதை மற்றவர்கள் கேட்டு நடப்பது பெருமையாக இருக்கிறது. என்னை விட வயதில் பல மடங்குப் பெரியவர்கள் நான் சொல்வதை ஆர்வத்துடன் கேட்கும்போது உண்மையாகவே எனக்கு ஆசிரியை என்ற உணர்வு வருகிறது. எனது சகோதரர் யோகா செய்வார்.அதைப் பார்த்துதான் எனக்கும் ஆர்வம் வந்தது. பின்னர் நானாகவே செய்ய ஆரம்பித்தேன். ஆனால் அதில் சிரமம் இருந்தாதல் என்னை எனது பெற்றோர் யோகா வகுப்புக்கு அனுப்பி கற்கச் செய்தனர் என்கிறார் ஸ்ருதி.

ஸ்ருதியின் சகோதரர் ஹர்ஷ் குமாருக்கு இப்போது 11 வயதாகிறது. இவர் ஏற்கனவே 5 வயதில் யோகாவின் 84 நிலைகளையும் கற்று லிம்கா சாதனை படைத்தவர் ஆவார். இருப்பினும் யோகா ஆசிரியராக செயல்படும் எண்ணம் இவரிடம் இல்லை. ஆனால் தனது தங்கையின் திறமையை வெகுவாக பாராட்டுகிறார் ஹர்ஷ்.

கற்க வந்த 6 மாதத்திலேயே சிறப்பான பயிற்சி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் ஸ்ருதி என்று கூறும் ஹர்ஷ், ஸ்ருதிக்கு இயல்பிலேயே யோகா கை கூடி வந்தது என்றும் பாராட்டுகிறார்.

ஸ்ருதியின் ரசிகர்களில் ஒருவர் ஸ்வாமி பானு. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவருக்கு வயது 90 என்பது குறிப்பிடத்தக்கது.


உலகின் மிக வயதான யோகா ஆசிரியையாக 91 வயதுள்ள பாட்டி ஒருவர் இடம்பிடித்துள்ளார்.1920 ஆம் ஆண்டு பிறந்த Bernice Mary என்ற பாட்டியே மேற்படி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.இவர் அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர். தன்னுடைய நீண்ட ஆயுளுக்கு முக்கிய காரணம் யோகா தான் என அடித்துக் கூறுகிறார் பாட்டி.யோகா எல்லோரும் கற்றுக்கொள்ளக் கூடிய எளிதான கலை என்கிறார் இவர்.

Congrats Bernice!

மறக்காமல் நீங்களும் சற்று நேரம் யோகா பண்ணுங்கோ!
நலமுடன் வாழ வாழ்த்துக்கள் !!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!IMDBயில் சாதனை படைத்தது விஸ்வரூபம் !!!

சர்வதேச அளவில் சினிமா விவரங்கள் தரும் இணையதளமான IMDBயில் கமலின் விஸ்வரூபம் படம் அதிக புள்ளிகள் பெற்று சாதனை புரிந்துள்ளது.


கமல் படங்களில் அதிக பரபரப்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளான படம் விஸ்வரூபம்தான் என்பது அனைவரும் அறிந்த விடயமாகிவிட்டது.
தமிழ், இந்தி என இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் இணையத்திலும் விஸ்வரூபம் புதிய சாதனை செய்துள்ளது. இதுவரை எந்த தமிழ்ப் படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு 10க்கு 9.5 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்துக்கு இதுவரை 12800க்கும் அதிகமான வாசகர்கள் வாக்களித்துள்ளனர். இதுவும் ஒரு புதிய சாதனைதான்.

ஒருவேளை இந்த எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டினால், உலக அளவில் புகழ்பெற்ற 250 படங்களின் பட்டியலில் கமல்ஹாஸனின் விஸ்வரூபமும் இடம்பெற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.


3-ஆம் வார இறுதியில் ஒரு ஆங்கிலப் படத்தின் சராசரி வசூலை விட அதிகமாக விஸ்வரூபம் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வசூல் விபரங்கள் கீழே :

விஸ்வரூபம் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.35 கோடிகள்
விஸ்வரூபம் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 9..10 கோடிகள்
விஸ்வரூபம் மூன்றாம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.56 கோடிகள்
விஸ்வரூபம் நான்காம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 6.23 கோடிகள்
விஸ்வரூபம் 5-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.10 கோடிகள்
விஸ்வரூபம் 6-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.65 கோடிகள்
விஸ்வரூபம் 7-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.28 கோடிகள்
விஸ்வரூபம் 8-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.05 கோடிகள்
விஸ்வரூபம் 9-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.35 கோடிகள்
விஸ்வரூபம் 10-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.70 கோடிகள்
விஸ்வரூபம் 11-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.10 கோடிகள்
விஸ்வரூபம் 12-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.23 கோடிகள்
விஸ்வரூபம் 13-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 5.90 கோடிகள்
விஸ்வரூபம் 14-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.36 கோடிகள்
விஸ்வரூபம் 15-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 9.15 கோடிகள்
விஸ்வரூபம் 16-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 9.28 கோடிகள்
விஸ்வரூபம் 17-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 9.02 கோடிகள்

17-ஆம் நாள் வசூல் 134.58 கோடிகள்.

சமீபத்திய எந்த தமிழ்ப் படமும் இங்கு இவ்வளவு பெரிய வசூலை பெற்றதில்லை. தமிழ்நாடு தவிர பிற இடங்களில் படம் நல்ல வரவேற்ப்பும் வசூலும் ஆகிறது என்கிற தகவல் கமலுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.

தமிழகத்தில் திரையிடப்பட்டு நான்கு நாட்கள் கடந்தும் பல்வேறு தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்காமல் உள்ளன. ரசிகர்களின் கூட்டம் காரணமாக சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிடப்படுகின்றன.

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி உள்ளதால் வடமாநில ரசிகர்கள் ஆவலுடன் வந்து ‘விஸ்வரூப’த்தை கண்டுகளிக்கிறார்கள். இதனால் வட மாநிலங்களில் ‘விஸ்வரூபம்’ படத்துக்கு தொடக்கத்திலேயே வெற்றி கிடைத்துள்ளது.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘விஸ்வரூபம்’ வெளிநாடுகளிலும் எதிர்பார்த்ததைவிட கூடுதல் வசூலை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

ஹாட் நியூஸ்

விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டில் வெளியாக வாய்ப்புள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

‘விஸ்வரூபம்’ படத்தின் 2-ம் பாகம் விரைவில் தயாராகிறது. இப்படத்துக்கு ‘மூ’ என தலைப்பு வைத்துள்ளனர். கமலஹாசனே இயக்கி நடிக்கிறார். இதில் கமல் மூன்று வேடங்களில் வருகிறார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : www.superwoods.com & dinakaran news paperRelated Posts with Thumbnails
 
back to top