நான் அவன் இல்லை 2 - திரை விமர்சனம்

நேற்று பார்க்க இருந்த 'நான் அவன் இல்லை 2' படத்த இன்னைக்கு தான் பார்த்தேன். இந்த படத்தையும் விட்டு வைக்க மாட்டியாடானு நீங்க கேக்கிறது புரியுது. என்ன செய்யா....? ஒரு டைம் பாஸ்சு தான் ஹி..ஹி...ஹீ.

படத்தோட கதை என்னனா ...

நான் அவன் இல்லை முதல் பாகத்தின் சில காட்சிகளோடு தொடங்குது படம். இரண்டாம் பாகம் படம் ஆரம்பிக்கும் போதே ஒரு பெண் சாமியார் (ரக்ஷனா) பேட்டி கொடுக்கிறாள். அவள் கையில் நம்ப ஹீரோ(ஜீவன்) படம்.

பத்திரிக்கையில் வெளியான பெண்சாமியாரின் பேட்டி + ஹீரோ போட்டோவை பார்த்த மூன்று பெண்கள் அவளை தேடிவரும் போது அவர்கள் வாழ்வில் நடந்தவைகளை பிளாஷ்பேக்கு கொண்டு விளக்குகிறார் டைரக்டர் செல்வா.

* ஹேமமாலினி - தனக்கு வரப்போகும் கணவன் நாய்க்குட்டி மாதிரி தன் காலைச் சுற்றிக் கிடக்க வேண்டும் என விரும்பும் பெண். அவளை ஈசியாக ஏமாற்றுகிறார் நம்ப ஹீரோ.

* ஸ்வேதா மேனன் - கல்யாணம் ஆன ஆண்களை மயக்கி கட்டிலுக்கு வரவழைத்து, அவனிடம் இருக்கும் பணம் மற்றும் வைரங்களை அபகரிக்கும் பெண். இவளையும் நம்ப ஹீரோ...அதே தான்.

* லட்சுமி ராய் - சினிமா நடிகை. இவளுக்கு உலகத்தின் அத்தனை நாடுகளிலும் தனக்கு சொத்து இருக்க வேண்டும் என்ற ஆசை. இவளை நம்ப ஹீரோ பெரிய பணக்கார் போன்று நடித்து ....

இவர்களது கதையை கேட்ட பெண் சாமியாரும் தன் பங்குக்கு ஒரு பிளாஷ்பேக் சொல்கிறாள்.

* ரக்ஷனா - திருட்டு கேஸ், வழிப்பறி, வைரங்களைக் கொள்ளையடிக்கும் பெண். இவளிடம் நம்ப ஹீரோ, பாடலாசிரியர் வாலி வேஷம் + 'மார்பாலஜி' செய்து .... (நம்ப ஹீரோவுக்கு மச்சம் தான்) அதே தான்.

இவர்களை ஏமாற்றும் ஹீரோ என்ன செய்கிறார் ? அதுக்குனே ஐந்தாவதாக ஒரு பெண் இருகாங்க. அவங்க தான் நம்ப சங்கீதா.

* சங்கீதா - கணவனை இழந்த இலங்கை வாழ் தமிழர். இவளுக்கு நம்ப ஹீரோவுக்கும் இடையில் நடப்பது தான் கதையின் உயிர் நாடி. அதனை படத்த பார்த்து தெரிஞ்சுக்குங்க.

படத்துல எனக்கு பிடித்த சில ..
 • நான்கு நாயகிகளும் குறைவில்லாமல் கவர்ச்சி காட்டியிருக்கிறார்கள். ஐந்தாவது நாயகியாக வரும் சங்கீதாவுக்கு பெரிதாக வேலையில்லை. சென்சார் பல இடங்களில் தூங்கி விட்டார்கள் போல தெரிகிறது. செம கவர்ச்சிடா சாமி.
 • மயில்சாமி - கிடைக்கிற 'கேப்'பிலெல்லாம் புகுந்து விளையாடுகிறார் மனிதர். குறிப்பாக ரக்ஷனாவை ஏமாற்ற ஜீவன் வாலியாகவும், மயில் அவருக்கு சிஷ்யராகவும் வரும் காட்சிகளில் தேயேடரே அதிர்கிறது. சபாஸ் மயில்!
 • படம் முழுவது ஜீவன் வந்தாலும் சொல்லிக்கிற மாதிரி எதுவும் இல்லை. இவரின் கிளைமாக்ஸ் காட்சிகளில் பேராயர் உடையில் நம்மை பதம் பார்க்கிறார்.
 • செல்வாவின் திரைக்கதை சொதப்பல். இதில் பாடல் காட்சிள் + இயற்கை வெகு அருமை.
 • வெளிநாடுகளில் போலீஸ் + சட்டம் போன்ற சமாச்சாரங்கள் இருப்பதற்கான அறிகுறியே இந்தப் படத்தில் இல்லை.
 • இமானின் பின்னணி இசை பற்றி நான் என்ன சொல்ல? அட போங்கப்பா. மனுஷன் கையில கிடச்ச வாத்தியத்தை எல்லாம் வாசித்திருக்கார். ஒரே இரைசல்.
குறிப்பு: இந்த பாகமே கதை இல்லாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பி எடுத்த இந்த டீம் அடுத்த பாகம் பற்றி ஒரு குறிப்பும் இந்த படத்துல காட்டுறாங்க. ஜாக்கிரதை!

நான் அவனில்லை 2 - 'கவர்ச்சி' டைம் பா(ம்)ஸ்.

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு ஒரு வோட்டு போடுங்க. நன்றி. மீண்டும் வருக!!!"Before I Self Destruct:" - திரைபட விமர்சனம்.

நேற்று இரவு, படம் பார்க்க போக இருந்தோம். வேலை முடியாததால், வீட்டில் வங்கி வைத்த ஹாலிவுட் படம் பார்கலாமுனு பார்த்த படம் தான் இந்த "Before I Self Destruct" படத்த பார்த்தேன். இதே பெயரில் விரைவில் ஒரு ஆங்கில இசை ஆல்பமும் வெளிவர இருக்கிறது. இத்தனை இயக்கியவர் "50 Cent".


படத்தோட கதை என்னனா ...

கிளாரேன்ஸ் ஒரு கூடைபந்து வீரர். இவனுக்கு, விளையாட்டுதான் உயிர் மூச்சு. கால் முட்டி வலி காரணமாக விளையடமுடியாமல் போகிறது.

விளையாட முடியாமல் ரொம்பவே தவிக்கும் இவன் வேலைக்கு சேருகிறான். நிலைக்க முடியவில்லை. இவனுக்கு உதவியாக இருப்பது - இவனது தாய். இவனுக்கு ஒரு தம்பி. பெயர் சொக்கா (Elijah Williams). படிப்பில் படு சுட்டி.

ஒருநாள், இவனது தாய் படுகொலை செய்யப்பட, வெகுண்டு எழும் ஹீரோ கொலை செய்தவனை (டினி) பழிவாங்குகிறான். இந்நிலையில், சின்-ஐ சந்திக்கிறான். இவன் தான் டினி -ஐ அனுப்பியவன். தவறுதலாக தன் தாய் கொல்லப்பட்டதும் தெரிந்து, பிறகு அவனிமே வேலைக்கு சேருகிறான். டினி இருந்த இடத்தில் இப்போ நம்ப ஹீரோ. பணம் பஞ்சமில்லை. வாழ்க்கையை அனுபவிக்கிறான். கொலைக்கு மேல் கொலை செய்கிறான் பணத்திற்காக.

இடையில் (?), நாயகியை சந்திக்கிறான், ஒரு கிளப்பில். அவளுடன் சந்தோசமாக (?) இருக்கிறான். இவளின் பாசம் தம்பியின் படிப்பு என் வாழ்க்கை போகும் வழியில், நாயகியின் முன்னால் காதலன் வர- கதையில் திருப்பம். மீதி நடந்தது என்ன ? என்று முடிச்ச, டிவிடி வாங்கி பாருங்க.
படத்துல எனக்கு பிடித்த/பிடிக்காத சில ..
 • சொக்கவாக நடித்திருக்கும் சிறுவன் சும்மா நடிப்பில் பின்னுகிறான். ரொம்ப அசால்டா நடித்துள்ளான். சபாஸ்!
 • கதையின் ஜீவன் நம்ப ஹீரோ. நல்ல நடிப்பு.
 • கதையும் அதன் காலமும் நகரங்களின் வீதிகளில் நடப்பதும் அதன் அழகை மிக அருமையாக படம் பிடித்த கேமெராமேன் பாராட்ட படவேண்டியவர்.
 • ஹீரோயின் ஒருத்தியை அறிமுக படுத்தி - ஒரு கிளுகிளுப்பான காட்சியை வச்சு இளவயசு பசங்கள ஒரு வழி பண்ணிட்டார் இயக்குனர்.
 • படத்தில் அங்கங்கே ஒலிக்கும் "Before I Self Destruct" இசை ஆல்பம் - அருமை!!!
 • ஹீரோ பேசறது ஒன்னும் விளங்கவில்லை. ரொம்ப கூர்மையா கேட்டால் மட்டுமே அவன் பேசுவது கேட்கிறது.
 • இசை ஆல்பம் + ஹீரோ (Curtis Jackson) என பல அவதாரம் அடுத்திருக்கார் இந்த படத்துல.
வாழ்க்கையில் ஒருவன் தவறான பாதையில் நடக்கும் போது அவனுக்கும் நிகழும் சம்பவங்களும் முடிவுகளும் தவறாக அமையும் என்ற தத்துவத்தை சொல்லும் படம்.

Before I Self Destruct: ஒருமுறை பார்க்கலாம்.

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு ஒரு வோட்டு போடுங்க. நன்றி. மீண்டும் வருக!!!ஐயப்பன் வரலாறும் 'பள்ளிக்கட்டு' பாடல் வரியும்


இது சபரி மலை சீசன். சபரிமலை ஐயப்பன் வரலாறு பற்றி நாமும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே...

ஐயப்பன் வரலாறு :

கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார். அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர் தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற, சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணுவுக்கும்)ஐயப்பன் பிறந்தார்.

குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும். தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம் உண்டல்லவா? பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர்.

வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும் தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டான். "ஆண்டாவா! என் குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா" என மகிழ்ந்து அந்தகுழந்தையை அரண்மனை கொண்டு சென்றான்.

அரசியும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். குழந்தையை கண்ட அனைவரும் சொக்கிப் போனார்கள். ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு 'மணிகண்டன்' என்று பெயரிடலாம் என்று முடிவு செய்து மணிகண்டன் என பெயரிட்டு அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும் குழந்தை பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர்.

ஆனால் எங்குமே நல் மனதைக் கெடுக்கும் புல்லுருவிகள் இருக்குமல்லவா? ஐயப்பன் உங்களுக்கு பிறந்த மகன் அல்ல. ஆனால் அவனையே தலைப்பிள்ளை போல் சீராட்டி வளர்க்கிறீர்கள். அதனால் அடுத்த மன்னனாக அவன் வரவே வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க வேறுயாரோ எப்படி அரசனாவது என அரசியின் மனதில் நஞ்சைக் கலந்தனர் சிலர்.

தீயபோதனைகளால் அரசியும் மனம் மாறினாள். தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். அரசவை வைத்தியரை 'புலிப்பால்' குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள்.

ஐயப்பன் அறிய மாட்டானா உண்மையை!?. தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான். வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுத்தாள். வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷியை. அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலியாக புடை சூழ புலிமேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன்.

புலிமேல் வந்த மணிகண்டனைக் கண்டு பதறிப் போனாள் அரசி. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினாள். ஐயப்பனும் அவ்வாறே செய்து அருளினார்.

மேலும் தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன்.

இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக் கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது.
ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு மூறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதைசெய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்டபோது அந்தஅங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றேஎழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.
இப்போது எங்கு பார்த்தாலும் ஐய்யப்பன் பக்தி பாடல்கள். எனக்கு கி.வீரமணி அவர்கள் பாடிய "பள்ளிக்கட்டு சபரி மலைக்கு" என்ற பாடல் மிகவும் பிடிக்கும்.
Show <--- இங்கே அந்த பாடல் வரிகளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியே.

Thanks : Thatstamil
நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு ஒரு வோட்டு போடுங்க. நன்றி. மீண்டும் வருக!!!2022 - திரை விமர்சனம்

நேற்று இரவு பார்த்த 2022 படத்த பத்தி தான் இங்கே பேச வந்திருக்கேன். நிறைய நண்பர்கள் 2012 படத்த பத்தி சொல்லிடதால ...நான் இந்த 2022 படத்த பத்தி பதிவு போட்டுடேன்.

படத்தோட கதை என்னனா ...

பாங்காக் நாட்டில் அறிவியல் வல்லுனர்கள் மற்றும் ஆராயட்சியாளர்கள் மூலம் அறியும் சுனாமி ஆய்வுகளை வெளியிட்டு மக்களை முன் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வலியுறுத்த....சுனாமி வரவில்லை. இதே போல மூன்று முறை ... எதுவும் நிகழவில்லை.

இதனால், அறிவியல் ஆராச்சியாளர்கள் திறமை அற்றவர்கள் என்முடிவு செய்கின்றனர் அந்நாட்டு குடிமக்களும் அரசாங்க உயர்அதிகாரிகளும் ஆனால், அவர்களது தகவல்களை மக்கள் மீதும், நாட்டின் மீது மிகுந்த மாரியாதை கொண்ட (?) பிரதம மந்திரி மட்டும் நம்புகிறார்.
(இவரு தான் பிரதமரா நடிசவரு...)

அவர் எப்போதும் வானிலை வல்லுனர்கள் மீதும் அவர்களது ஆய்வுகள் மீதும் எப்போதும் நம்பிக்கை கொண்டவர். மேலும், வானிலை எச்சரிக்கை தகவல்கள் எப்போதும் பொய்யாவதில்லை என்று அவர் நம்புகிறவர்.

அந்நாட்டு அரசியல் தலைவர்கள், இவரை முட்டாள் என்றும், தவறான முடிவுகளால் நாட்டு மக்களையும் அவர்களது பொன்னான நேரத்தையும் வீண் அடிப்பதோடு தேவையில்லாத பயத்தை உண்டுபண்ணுகிறார் என்று சொல்லி அடுத்த பிரதம மந்திரியை தேர்வு செய்ய தாயாராகிரார்கள்.
(கடல்ல ஆராச்சி செய்யற நம்ப படத்தோட நாயகி இவங்க தான் ...)

இந்நிலையில், கடல், காடு, மலை பகுதியில் ஆராட்சி செய்து - தலைமை வானிலை ஆய்வகத்திலிருந்து ஒரு தகவல் - அடுத்த மூணு நாளில் பாங்காக் முழுவது பாதிக்கும் வகையில் ஒரு பெரிய சுனாமி வரும் என்று முன் எச்சரிக்கை செய்கிறது.

வழக்கம் போல நாட்டு மக்கள் அந்த தகவலை உதாசீனம் படுத்த... பிரதமர் மட்டும் சில முன் எச்சரிக்கை நடவடிக்கையில் இறங்குகிறார். மூன்றாவது நாளில்... நடந்தது என்ன ...? என்று பெரிய திரையில் தயவு செய்து பார்க்காதீர்கள்.... என்னை போல....!

(மலை + காடுகளில் ஆராய்ச்சி செய்யும் ஹீரோ இவரு தாங்க ...)

படத்துல எனக்கு பிடித்த/பிடிக்காத சில ..
 • பிரதமர் இந்த படத்துல சும்மா ஆத்து ஆத்துன்னு சொற்பொழிவு பண்ணுகிறார். தாங்க முடியல. சும்மா விஜயகாந்து கணக்கா சுனாமியின் போது இவர் செய்கிற சாகசம்....யப்பா முடியல.
 • புத்தர் வந்து கடைசியா சுனாமியில் இருந்து காப்பாத்துற காட்சியில் - என் கை கால் முடிகள் நட்டுகிச்சு போங்க... முடியல சாமி
 • காடு, மலை பகுதியில் ஆராச்சி செய்யும் அந்த ஹீரோ + அவனுடன் வரும் சிம்பன்சி குரங்கும் அதன் சேட்டைகளும் ரசனை.
 • குப்பத்து காரன் ஒருவனின் வீரமும் அவனது நடிப்பும் - அழகு
 • பழைய கார்டூன் படங்களை போன்ற கிராபிக் காட்சிகள் - வேஸ்டு
 • இசையும் + கடல் காட்சிகளும் ஒரே போர்.
வேற ஒன்னும் சொல்ல மாதிரி படத்துல இல்லைங்கோ... பெரிய மொக்கை படம் இது. இதுக்கு போயி இவளவு பெரிய போஸ்டானு கேக்கிறது புரியுது. என்னங்க பண்றது என்னை மாதிரி வேற யாரும் இத பாத்துட வேண்டுனு தான் சொல்லறேன்.

படத்தில் போது என் பின்னால் இருந்தவர்களில் ....
கோரை பாய் வாங்க வைத்த பணத்துல இப்படியாடா ஒரு படம் அமையனும் ... இச்சே-னு இருவரின் புலம்பல்.
தியேடர் கேட்டை இண்டர்வல் அப்ப தான் திறப்பானாம் - அதுவரை இந்த அருவியை பார்க்கலாம் டா
அறை பிளேட்டு பிரியாணி தின்னிருக்கலாம் போச்சே ... 40 ரூபாய்
2022 - பெரிய மொக்கை படம்.

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு ஒரு வோட்டு போடுங்க. நன்றி. மீண்டும் வருக!!!அறிவுமதி கவிதைகள் - 'வலி'

கவிதை எழுத்தாளர் அறிவுமதி அவர்களின் கவிதை தொகுப்பை படித்தேன், நேற்று இரவு. 'வலி' என்ற தலைப்பில் ஈழத் தமிழர்களின் உள்ள குமுறலையும் அவர்களது நிலைபாடுகளையும் தனது கவிதை வாயிலாக அவர் சொல்லும் போதே நமது மனது சேர்த்து வலிக்கத்தான் செய்கிறது.

புலம்பெயர்ந்த மக்களின் ஒட்டு மொத்த குரலாக - ஆயிரம் கதைகளை சொல்லும் இவரது கவிதை இங்கே...
முகாமிக்கு
அருகில் உள்ள
பள்ளியிலிருந்து
கேட்கிறது
"யாதும் ஊரே
யாவரும் கேளிர்"

வறுமை, இன்றைய ஈழ தமிழர்களின் நிலை, அவர்களது வாழ்வாதாரம் பற்றி நிலைப்பாடுகளை கவினர் இப்படி சொல்லுகிறார் தனது கவிதையில்...
படகில் ஏறினோம்
படகுகளை
விற்று!

*

இராமேஷ்வரத்தில்
எல்லோரும்
குளித்துக்
கரையேறுகிறார்கள்!
நாங்கள்
குதித்து
கரையேறுகிறோம்!
உயிருடன் இருக்கும் போது தான் காசு, பணம், வீடு என் அலையும் மனிதர்களுக்கு இவாறு சொல்கிறார்.
பிறந்த குழந்தையின்
நெற்றியில்
வைக்கிறாள்...
பிடி மண்ணாய்
கொண்டுவந்த
தாய் மண்!
தினம் தினம் மரண செய்திகளை படிக்கும் நமக்கே தாங்கிகொள்ளமுடியவில்லையே ... தம் குடுப்பத்தை இழந்த- ஈழ தமிழர்கள் நிலையை அவர்கள் நிலையிலிருந்து பார்த்தால் தான் புரியும், உண்மை நிலையும் அதன் வலி தெரியும்.
இலங்கை
வானொலியிலிருந்து
நீங்கள் பிறந்த நாள் வாழ்த்து
கேட்கிறீங்கள்!
நாங்கள்
மரண அறிவித்தல்
கேட்கிறோம் !

நன்றி : அறிவுமதி

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு ஒரு வோட்டு போடுங்க. நன்றி. மீண்டும் வருக!!!1 மணி நேர சம்பளம் ரூ.82,000 வாங்கும் சிறுவன்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவர் செரியனா அலியாஸ். இவரது மகன் ஆதி புத்ர அப்துல் கனி. வயது 10. செரியானா 2 நிறுவனங்களைத் தொடங்கி ஆதி என்ற பெயரில் விட்டமின் மாத்திரைகளை விற்பனை செய்து வருகிறார்.

அப்துல் கனி, 3ம் வகுப்பு வரை படித்தான். ஆனால், தனது பாடத் திட்டத்துக்கு மீறி, இயற்பியல், வேதியியல், கணிதம், புவியியல், உயிரியல் ஆகிய பிரிவுகளில் அடுக்கடுக்கான அறிவை வெளிப்படுத்தினான். இன்டர்நெட்டில் புகுந்து எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தான்.அறிவுத் தேடலுக்கு இடையே, அன்னையின் பிசினசையும் கவனித்துக் கொள்ளத் தொடங்கினான்.

இப்போது 2 நிறுவனங்களின் செயல்பாட்டையும் ஏறக்குறைய தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளான் அப்துல் கனி. அதனால், அந்த கம்பெனிகளின் தலைமைச் செயல் அதிகாரி என அவனை அழைக்கின்றனர்.

பல பாடப் பிரிவுகளில் அவனுக்கு உள்ள அபார ஞானத்தை அறிந்த மலேசிய கல்லூரிகள், அவனை பகுதி நேர விரிவுரையாளராக அழைக்கின்றன.அம்மாவின் கம்பெனி நிர்வாகத்தைக் கவனிப்பதுடன், கல்லூரிகளில் விரிவுரை ஆற்றுவது, இன்டர்நெட்டில் மூழ்குவது என இருக்கிறான் அப்துல் கனி. ஒரு மணி நேர விரிவுரைக்கு ரூ.82,300 ஊதியம் பெறுகிறான்.

நம்ப வருமானம் வருசத்துக்கு ரூ.80,000 கூட கிடைக்களைனு நீங்க சொல்லறது புரியுது. அட விடுங்க பாஸ்.... இருக்கிறதை வைத்து சிறப்பா வாழ்வோம்!

நன்றி : தினகரன்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் ஒரு வோட்டு போடுங்க. நன்றி. மீண்டும் வருக!!!Related Posts with Thumbnails
 
back to top