கோ - திரைப்பட விமர்சனம்

'கனா கண்டேன்', 'அயன்' படங்களைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் மூன்றாவது படம் 'கோ'.
சட்டத் துறை, ஆட்சித்துறை, நீதித் துறை இவைகள்தான் ஒரு தேசத்தின் மூன்று முக்கிய தூண்கள். இதில் எந்த துறை தவறு செய்தாலும் அதைத் தட்டிக்கேட்கும் அதிகாரம் கொண்ட நான்காவது துறைதான் பத்திரிகைத் துறை. அதனால்தான் இத்துறையை தேசத்தின் நான்காவது தூண் (Fourth pillor of the state) என்பார்கள்.
இந்த நான்காவது தூணை மையப்படுத்தி பத்திரிகையாளர்களின் வாழ்வையும், சவால்களையும் எடுத்துக்காட்டியிருக்கும் முன்னாள் பத்திரிகையாளரும், இன்றைய இயக்குனருமான கே.வி.ஆனந்த் அவர்களுக்கு முதலில் ஒரு சபாஷ் போட வேண்டும்.


படத்தோட கதை என்னானா...

முகமூடி அணிந்த சிலர் வங்கி ஒன்றைக்கொள்ளையடிக்கிறார்கள். அதைவிரட்டி புகைப்படம் எடுத்து கொள்ளையடித்தவர்களில் சிலர் பிடிபடக்காரணமாக இருக்கிறார் ஜீவா.இந்தகாட்சியுடன் துவங்குகிற படத்தில் தொடர்ந்து விறுவிறுப்பு.

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பாகுபாடில்லாமல் வாசகர்களுக்கு உண்மையாக இருக்க முயலும் நாளிதழ் அலுவலகம், அங்கு நேரடியாக வந்து மிரட்டும் எதிர்க்கட்சித் தலைவர்.

இந்த அரசியல் போட்டிக்கிடையில் நியாயமான மக்கள் குரலாக இளைஞர்கள் தலைமையில் முன்னேறத்துடித்துக்கொண்டிருக்கும் இளம்தலைவராக அஜ்மல், தேர்தலில் விளையாடும் பணம், வன்முறைக்கு மத்தியில் வெடிகுண்டு வெடித்துப் பல உயிர்கள் பறிபோய் அந்த அனுதாப இடைவெளியில் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப்பிடிக்கிற அஜ்மல் உண்மையில் யார் என்பதை இறுதிக்காட்சியில் சஸ்பென்சாகச் சொல்கிறார்கள்.


எனக்கு பிடித்த சில...

படம் பார்க்கும் போது ஏதோ நாவலை படித்த ஒரு பீலிங்!

எந்நேரமும் பரபரப்பான காரெக்டரில் ஜீவா பொருத்தமாக இருக்கிறார்.

ரேணுகாவாக வரும் கார்த்திகா, பெண் பத்திரிகையாளர் வேடத்தில் அசத்தியிருக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். கார்த்திகாவுக்கு இது முதல் படமென்பதால் ஓகே.


சரோ எனும் சரோஜாவாக வரும் ஃபியா முத்திரை பதிக்கிறார். ஃபியாவுக்கு அழகுக் காரெக்டர். ஜீவா கார்த்திகாவைக் காதலிப்பதை அறியும் ஹோட்டல் சீனில் கலக்கி விடுகிறார். படத்தில் காமெடி இல்லாத குறையைத் தீர்ப்பது ஃபியா தான். செம ஜாலிப் பட்டாசு! ஆனால் அரசியல் பிடியில் அவர் இறந்துபோவது தனி சோகம்.

வசந்தன் பெருமாளாக வரும் அஜ்மல் நிறைவான நடிப்பு. ஊழல் மிகுந்த அரசியலை எதிர்க்கும் இளைஞராக வருகிறார்.

கோட்டா சீனிவாசராவ், பிரகாஷ்ராஜ்-க்கு நடிக்க அவ்வளவாக வாய்ப்பு இல்லை. பிரகாஷ் ராஜ் ஆட்களுக்கும் நடக்கும் கார், பைக் சேஸ் சீன்கள் ஆங்கில படத்துக்கு இணையான விறுவிறுப்பு.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் 6 பாடல்கள்கள். 'அமளி துமளி' பாடலை மிகவும் வித்யாசமான வெளிநாட்டு லொக்கேசன்களில் படம் ஆக்கி உள்ளனர். இதமான பாட்டுக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சைனாவின் அழகான இயற்கை லோகேஷன்கள்!

‘வெண்பனியே’ பாடல் தேவையில்லாத இடை சொருகல். கதையின் வேகத்தை அது பாதிக்கிறது.

கிளைமாக்ஸ் சண்டை காட்சியின் நீளத்தை சற்று குறைத்து இருக்கலாம்.
ஒரு நேர்மையான பத்திரிகை, துணிச்சலான அதன் எடிட்டர், ஒரு போட்டோகிராஃபர், இரண்டு பெண் நிருபர்கள் ஆகியோருடன் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லராக களைகட்டுகிறது "கோ".

‘கோ’ வை ஒரு முறை பார்க்கலாம்


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



பிறந்த நாள் வாழ்த்துக்கள் சச்சின் !!!

கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் 38-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

நாட்டின் முக்கிய தலைர்களும், பிரபலங்களும் சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நானும் அவரது ரசிகனாய் உங்களுடன் சேர்ந்து அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

ஹாப்பி பர்த்டே சச்சின்!!!

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். கடந்த 1973 ம் ஆண்டு ஏப்ரல், 24-ம் தேதி மும்பையில் பிறந்தார்.

1989 ம் ஆண்டு அணியில் அறிமுகமான இவர், 22 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெற்றி நடை போடுகிறார்.

பிறந்த நாள் அதுவுமாக தன்னுடையக் குடும்பத்தாரிடமிருந்து வந்த வாழ்த்துக்களை எண்ணி பூரித்துப் போகிறார் சச்சின். குறிப்பாக மனைவி அஞ்சலி மீதும் மகள் சாரா மீதும் சச்சின் காட்டும் அன்பு அலாதியானது. மனைவி சொல்லே மந்திரம் என்கிறார் சச்சின். அவளில்லையேல் அணுவும் அசையாது என்றும் சொல்கிறார் (ஆஹா என்ன அன்பு, எத்தனை அன்பு!).


நிகழ்ச்சி ஒன்றில் குடும்பத்துடன் கலந்துகொண்ட சச்சின். மனைவி அஞ்சலி, மகன் அர்ஜூன், மகள் சாரா ஆகியோருடன் அமர்ந்திருந்த சச்சினை மேடைக்கு அழைத்தனர். மேடையில் ஏறி மைக் பிடித்த சச்சின், முன்வரிசையில் தனக்கு முன்னே அமர்ந்திருந்த மனைவி அஞ்சலியைப் பார்த்து சிரித்தபடியே,
”வெற்றிகரமான ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள். ஆனால், என்னைப் பொருத்த வரை, அவள் பின்னால் இல்லை எனக்கு முன்னால் இருக்கிறாள்” என்றாரே பார்க்கலாம்.

மனைவி குறித்த சச்சினின் இந்தப் பேச்சு அங்கு கூடியிருந்த அனைவரையும் வாய்விட்டு சிரிக்க வைத்ததுடன் சிந்திக்கவும் வைத்தது.

அதேசமயம் சச்சின் தன்னுடைய வெற்றியின் பின்னால் மனைவி மட்டுல்லாமல் மற்றும் இரண்டு பெண்களுக்கு இடமுண்டு என்றார்.



அவன் இவன் - இசை விமர்சனம்

"நந்தா"-வுக்குப் பிறகு பாலாவும் யுவன் சங்கர் ராஜா உடன் பாடலாசிரியர் முத்துக்குமார் இணைந்து பணிபுரிந்திருக்கும் நகைச்சுவை கலந்த படம் "அவன் இவன்". இதில் விஷால் திருநங்கையாகவும் விஷாலின் சகோதராக ஆர்யாவும் இணைந்து நடித்துள்ளார்கள்.

ஒரு அண்ணன் தனது தம்பி ஆரவாணி என தெரியும் பட்சத்தில் எப்படி தன் தம்பியுடன் சகோதரத்தன்மையை பேணுவான் என்பதைத்தான் பாலா தனது ஸ்டைலில் காண்பித்திருக்கிறாராம் இந்த "அவன் இவன்" திரைப்படத்தின் மூலமாக.
புதிய பரிமாணம் என்றதும் மேற்கத்தைய இசை இல்லாமல் நம்மவூர் கிராமிய இசை கருவிகளை கொண்டு சும்மா பட்டையை கிளபியிருகிறார் யுவன். இப்படி ஒரு வித்தியாசமான இசையை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கிரேட்!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

1. அவனும் சரியில்ல இவனும் சரியில்ல
எவன்தான் நான் இப்போ பாடபோறான்...
என தொடங்கும் இந்த பாடலை

T.L. மகாராஜா & சத்யன் இருவரும் போட்டிப்போட்டு பாடும் பாடல் இது. மெதுவாக ஆரமித்து சும்மா பட்டையை கிளப்பும் நம் கிராமத்து மனம் வீசும் ஒரு கும்மக்குத்து பாடல். இந்த பாடலில் இடம் பெரும் இசைக்கருவிகள் பழம்பெரும் கிராமங்களில் மட்டும் கேட்டகூடியவைகள். பாடல் வரிகள் அனைவரையும் கவரும்.


2. ஹே அடி ஏ
டியா டியா டோலே...
என தொடங்கும் இந்த பாடலை

சுசித்ரா பாடியுள்ளார். பாடல் வரிகள் இல்லாமல் வெறும் ஒரு சில வார்த்தைகளை கொண்டு வடிவமைக்கப் பட்ட பாடல்.

தார, தப்பட்ட, நாதஸ்வரம், சலங்கை, சண்ட மேல இசையும் உடுக்கை ஓசையுடன் கலந்து வரும் இந்த பாடல் சும்மா மிரட்டியுள்ளது. பலரது செல்போன்களில் இந்த பாடல் ரிங்-டன்னாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.



3. ஒரு மலை ஓரம் அங்கு கொஞ்ச மேகம்
அந்த அடிவாரம் ஒரு வீடு...
என தொடங்கும் இந்த பாடலை

விஜய் யேசுதாஸ், பேபி பிரியங்கா, பேபி ஸ்ரீனிஷா & பேபி நித்யஸ்ரீ இணைந்து பாடிய ஒரு
சுகமான மெலடி பாடல் இது. கிட்டார் மெல்லிசையுடன் புல்லாங்குழலும் கரைவது கேட்க கேட்க சுகம்.


4. முதல் முறை என் வாழ்வில்
மரணத்தை பார்கிறேன்...
என தொடங்கும் இந்த பாடலை

விஜய் பிரகாஷ் பாடியுள்ளார். ஒரு சிறு சோகப்பாடல். இந்த பாடலை காட்சிகளும் காணும் போது இதன் சிறப்பு இன்னும் கூடும் என்பதில் ஐயமில்லை.



5. காட்டு சிரிக்கியே காட்டு சிரிக்கியே
காத்து கெடக்கரன் வாடி...
என தொடங்கும் இந்த பாடலை

ஹரிசரண் பாடியுள்ளார். இது ஒரு ரொமாண்டிக் பாடல். இந்த பாடல் இரண்டு பாடல்களை நம் நினைவுக்கு கொண்டுவரும்.
1. காட்டுசிருக்கி பாடல்
2. கண்ணுக்குள் நூறு நிலவா பாடல்
எங்கள்வூர் திருவிழாவில் வாசிக்கப்படும் சில இசை கருவிகளின் இசையை இந்த பாடல்களில் கேட்டதும் என்னக்குள் ஒரு வித சிலிர்ப்புவந்ததை மறுக்கமுடியாது.

கோவா, பையா, நான் மகான் அல்ல, பாஸ்(எ)பாஸ்கரன் என்றவாறு தொடர்ந்து
வெற்றிப்பயணத்தில் சென்று கொண்டிருக்கும் யுவனின் அடுத்த படைப்பாக அமைய இருப்பது தான் "அவன் இவன்".

எனக்கு ரொம்ப பிடித்த பாடல் : அவனும் சரியில்ல இவனும் சரியில்ல

நல்ல இசையை நாம் ரசிப்பதுடன் நில்லாமல் பிறருக்கும் அறிமுகம் செய்வது நன்று.
கிராமியமணத்துடன் வெளிவந்த பருத்திவீரன் திரைப்படப் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது ஞாபகம் இருக்கலாம். அந்த வரிசையில் மேலும் ஒரு படம் இந்த
"அவன் இவன்" - கிராமத்து இசை திருவிழா!!!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



இலவசம் - ஒரு பக்கக் கதை

கோபு அரசாங்க ஊழியன். அது தீபாவளி நேரம் என்பதால் தங்கள் வேலை விசயமாக அவனிடம் வந்தவர்கள் எல்லாம், அவன் கேட்காமலேயே தங்களால் முடிந்ததைக் கொடுத்து, அவன் மனதில் இடம் பிடிக்கப் பார்த்தனர்.

கோபு, லஞ்சம் வாங்குபவனல்ல. "இந்த வேலையை முடிக்க இவ்வளவு தா" என பேரம் பேசும் அடாவடிக்காரனும் இல்லை. அவனிடம் வருகிற வேலைகளை நேர்மையாகவே செய்து கொடுப்பான். ஆனால், யாராவது பிரியமாய் ஏதாவது கொடுத்தால், அதை வேண்டாம் என மறுக்கவும் மனம் வராது. சில சமயங்களில் "வேண்டாம்" என மறுத்துவிட நினைப்பான். ஆனால், பணத்தைக் கண்டதும் ஏனோ அவன் ஊமையாகி விடுவான்.


ஒருநாள் மாலை நேரம். அவன் அலுவலகம் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மூதாட்டி ஒருவர் பாலிதீன் குப்பைகளைக் கிளறி அட்டை, பேப்பர், இரும்பு, தகரம் எனத் தேடித் கொண்டிருப்பதைக் கண்டான். அவரது வயதான தோற்றமும், கசங்கி நைந்து போயிருந்த ஆடையும், சுருக்கம் விழுந்த தேகமும் கோபுவுக்குள் பரிதாபத்தை உண்டாக்கின.

பாவம், இந்த தள்ளாத வயதில் ஓய்வு எடுக்க வழியில்லாமல் இவரைப் போல் எத்தனையோ பெரியவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என நினைத்து மனம் வருந்தினான்.

இந்த அம்மாளுக்கு ஏதாவது உதவ வேண்டும் எண்ணியவன், "அம்மா இந்தாங்க..." என பத்து ரூபாய்த்தாள் ஒன்றை அவர் முன் நீட்டினான்.

அதைக்கண்ட மூதாட்டி,"எதுக்குப்பா?" என்றார்.

"சும்மா வைச்சுக்கோங்க" என்றான். காசு கொடுத்தால் சந்தோசமாய் வாங்கிக் கொள்வதை விட்டுவிட்டு, இந்த மூதாட்டி கேள்வி கேட்கிறாரே என நினைத்தபடியே ரூபாயை நீட்டிக் கொண்டிருந்தான்.

"இல்லைப்பா... நான் சாகிறவரை யார்கிட்டேயும் கையேந்த மாட்டேன்னு உறுதியா இருக்கேன்" என்றார்.

"இது பிச்சை இல்லம்மா, பிரியமா தர்றேன்" என்றான் வியப்புடன்.

"அப்படீன்னா, எனக்கு உன் பிரியமே போதும் தம்பி. காசு வேண்டாம். யார்கிட்டயும் எதற்காகவும் இனாம் வாங்க மாட்டேன். பிரியமா கொடுத்தாலும், இனாம் இனாம் தானேப்பா..." என உறுதியாய் மறுத்து விட்டு, குப்பைமேட்டை கிளறத் தொடங்கினார் மூதாட்டி.

கோபு அசந்து போனான். அந்த அம்மாள் சொன்ன வார்த்தைகள் சுருக்கென தைத்தன. இவனுக்குப் போதுமான சம்பளம் வந்த போதும், பிறர் பிரியமாய்த் தருவதை வேண்டாம் என மறுக்க மனம் வராமல் வாங்கிக் கொள்கிறான். ஆனால், இந்த மூதாட்டியோ...?!

அடுத்தநாள், தன்னைத்தேடி வந்த இனாம்களை புன்னகையுடன் வாங்க மறுத்து, "இது என் கடமை" என்றான் கோபு. அன்று பார்த்து லஞ்ச ஒழிப்புத்துறை திடீரென வந்துவிட, அவன் அதிர்ஷ்டவசமாய்த் தப்பித்தான். "பிரியமாய்க் கொடுத்தாலும் இனாம் இனாம்தானே" என்ற பாட்டியின் வார்த்தைகள் அவன் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருந்தன.

- ரமணி

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



ரசித்து பார்க்க வேண்டிய கார்டூன்ஸ்!

இந்த படங்களை கிளிக் செய்து பெரிதாக ரசித்து பாருங்கள்....






என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!


நிச்சயம் பார்க்க வேண்டிய வீடியோ

இந்திய பாரம் பாரிய நடனமான பாரத நாட்டியத்தில் பலவித புதுமைகளை புகுத்தி அசாத்திய ஒரு கண்ணொளி காட்சியை இங்கே கொடுத்துள்ளேன். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். இதனை உங்கள் குழந்தைகளுக்கு போட்டு காட்டுங்கள். நிச்சயம் அவர்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த வீடியோவை நாணும்போது பரதநாட்டியத்தின் மீது ஒரு மரியாதை வருவதை தவிர்க்க முடியாது.



நிச்சயம் பெருமை படுகிறேன். இந்த நிகச்சியில் பங்குபெற்ற நடன கலை குழந்தைகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top