புரட்டாசி தேங்காய் பால் சாதம்

புரட்டாசி மாதம் வார வாரம் சனிக்கிழமைகளில் ஒரே பூஜையும் அன்னதானம் தொடர்ந்து 4 அல்லது 5 வாரம் நடக்கும். அதில் ஒரு வித்தியாசமான பிரசாதம் புரட்டாசி தேங்காய் பால் சாதம் தந்து உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் குசிபடுத்துங்கள்.

தே‌ங்காயை வறு‌த்து அதனுட‌ன் சாத‌த்தை கொ‌ட்டி ‌கிளறுவது எ‌ளிதானதுதா‌ன். ஆனா‌ல் தே‌ங்கா‌ய் பா‌‌லிலேயே சாத‌த்தை வேகவை‌த்து செ‌ய்யு‌ம் தே‌ங்கா‌ய் பா‌ல் சாத‌த்‌தி‌ன் சுவையை ஒரு முறை பா‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் ‌மீ‌ண்டு‌ம் ‌மீ‌ண்டு‌ம் கே‌ட்கு‌‌ம்.

இனி புரட்டாசி தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :-
சீராக சம்பா அரிசி - 2 கப்
தேங்காய் துருவல் - தேவைகேற்ப

பிரியாணி இலை - 1
பட்டை - 1
கிராம்பு -2

ஏலக்காய் - 2
முந்திரி - 10
திராட்சை - 10

நெய் - தேவைகேற்ப
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
செய்முறை:-
 1. அரிசிய கழுவி நிமிடம் ஊறவைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

 2. குக்கரில் கொஞ்சம் நெய்விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை, பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.

 3. இதனுடன் தேங்காய்ப்பால் கப் சேர்த்து கொதிக்க விடவும்.

 4. பிறகு அரிசி சேர்த்து தேவையான அளவு உப்பு, சர்க்கரை கலந்து குறைந்த தீயில் வேகவைத்து எடுக்கவும்.

 5. இதில் வதக்கிய தேங்காய் துருவல் தூவி பரிமாறவும். புரட்டாசி சனிக்கிழமை அன்று பிரசாதமாப் படிக்கலாம்.
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!சருமத்தை அழகாக்கும் உணவுகள்

செயற்கையாக தயாரிக்கப்பட்ட கிரீம்களைக் கொண்டுதான் சருமத்தை அழகாக்க வேண்டும் என்பது இல்லை. இயற்கையில் கிடைக்கும் உணவு வகைகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தாலே சருமத்தை அழகாக வைத்துக்கொள்ளலாம். எப்படி என்கிறீர்களா ?

அதற்கு சில டிப்ஸ் :

கீரைகளில் இல்லாத சத்துக்களே கிடையாது. உடலின் வெளி அழகுக்கும், உள் ஆரோக்கியத்துக்கு அது மிகவும் முக்கியமாகிறது. அதனால் எல்லா வகை கீரைகளையும் ஒரு பிடி பிடிக்கலாம்.

குறிப்பாக, வெந்தயக்கீரை, பசலைக்கீரை, முருங்கை கீரைகளில் அதிகமாக இரும்பு மற்றும் துத்தநாகச் சத்து இருக்கிறது.

இந்த கீரைகளுடன் விட்டமின் – சி சத்துள்ள உணவுகளை சேர்த்து சாப்பிடும்போது இன்னும் அதிகமான சத்துக்கள் கிடைக்கும்.

இதன் முலம் கண்களில் கருவளையம் ஏற்படுவதை தவிர்க்கலாம். முகத்தில் பருக்கள் வருவதும் குறையும். அதிகமாக வறண்ட சருமம் கொண்டவர்கள், உணவில் கொழுப்புச்சத்து நிறைந்த ஆலீவ் ஆயில், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், நெய் உணவுகளை உடல் நலனுக்கு ஏற்ற வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் தக்காளியில் 'ஆண்டி ஆக்ஸிடெண்ட்'களான வைட்டமின் – ஏ மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. உணவில் தக்காளியை அடிக்கடி சேர்த்து வந்தால் தோல் மினுமினுப்பாவதுடன், சருமம் கருப்பாவதையும் தடுக்கலாம்.

முதுமை தோற்றம் தவிர்க்க : -
சிலருக்கு இளமையிலேயே முதுமை தோற்றம் வந்து விடுகிறது. இதை தவிர்க்க விரும்புபவர்கள், ஒரு கைபிடியளவு 'ஸ்ட்ராபெர்ரி' பழங்களையோ அல்லது 3 நெல்லிக்காயையோ தொடர்ந்து சாப்பிடவும். இதன் முலம் இளமை அழகுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். இளமை அழகையும் தக்க வைத்துக்கொள்ளலாம்.
தோல் பளபளப்பாக :-
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி,
பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும்
இருக்கும்.
தோல் சுருக்கம் நீங்க :-
தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
தோல் சொர சொரப்பு நீங்க :-
சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் தேன் கலந்து வாரம் ஒரு முறை உடல்
முழுவதும் பூசினால் தோல் சொர சொரப்பு தானாகப் போகும்.
கூடுதல் செய்தி :

தாடி 'முடி' தான் வேகமாக வளரக்கூடிய முடியாகும். இந்த முடியை 'ஷேவிங்' செய்யாமல் விட்டு விட்டால் 30 அடி நீளம் வரை வளருமாம்.

தினமும் குளிக்கும்போதும், தலை சீவும்போதும் மனிதன் சராசரியாக 40 முடிகளை இழக்கிறான்.தோல் குறித்த அபூர்வ செய்திகள் - Must Read


மனித தோல் பற்றிய சில சுவையான 5 செய்திகள்...
 1. நமது உடலிலேயே மிகப்பெரிய உறுப்பு தோல் தான்.

 2. மனிதத் தோலின் ஒவொரு அங்குலத்திலும் 20 அடி நீள அளவில் ரத்த குழாய்கள் இருக்கும்.

 3. மனித தோலில் உள்ள நரம்புகளை ஒன்றாக சேர்த்தால் அவை சுமார் 45 மைல் தூரம் வரை இருக்குமாம். அதாவது 72 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாக இருக்குமாம்.

 4. நமது உடலில் உள்ள தோல் மொத்தம் 2 மீட்டர் அளவு கொண்டதாம்.

 5. மனிதனுடைய தோல் செல்கள் ஒவொரு மாதமும் பழைய செல்களை இழந்து புதிதாக
  உருவாகிறது. ஒருமணி நேரத்தில் மனிதன் தினமும் 6,00,000 நுண் தோல் பொருட்களை இழக்கிறான். இவ்வாறு இழக்கும் ஒருவர் வாழ் நாளில் 102 பவுண்ட் எடையை இழந்து விடுகிறான்.
தோல் வங்கி :-
பணம் சேமிக்க மட்டும்தான் வங்கி என்று நினைக்கிறீர்களா?. இல்லை, அறிவியல் யுகத்தில் மனித உறுப்புகளும் வங்கிப்படுத்தப்பட்டு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ரத்தவங்கி அனேக இடங்களில் இயங்குகிறது.

ஆனால் தோல் வங்கி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?... இது விலங்குகளின் தோல் விற்பனை செ‌ய்யு‌ம் சந்தை அல்ல. மனித தோல் சேமிப்பு வங்கி.

தோல் உடலை பாதுகாக்கும் கவசம் போன்றது. அதன் முக்கியத்துவம் உணர்ந்துதான் தோல் சேமித்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்தகைய வங்கி இந்தியாவில் மும்பையில் மட்டுமே இயங்குகிறது.

நெருப்புக் காயம் பட்டவர்களும், விபரீத விபத்துகளால் தோல் சேதம் அடைபவர்களும் இங்கிருந்து தோலை பெற்று பயன் அடையலாம்.
உறு‌ப்பு தான‌ம் த‌ற்போது இ‌ந்‌தியா‌வி‌ல் அ‌திக ‌வி‌ழி‌ப்புண‌ர்வை அடை‌ந்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், இனி வரும் காலங்களில் மனித உறுப்பு சேமிப்பு வங்கிகளும் பெருகி மனித சமுதாயத்தை கா‌க்க வ‌ழி வ‌கு‌க்கு‌ம் எ‌ன்று ந‌ம்பலா‌ம்.
Thanks : 1x.comசுவர்ணலதா - ஈடு இணையற்ற பாடகி

கேட்ட உடன் தெரிந்துகொள்ளக் கூடிய வித்யாசமான குரலுக்கு சொந்தக்காரர் சுவர்ணலதா. அவரை பற்றிய சில தகவல்கள்.

அறிமுகம் :
1973 -இல் கேரளா மாநிலம் பாலகோடில் பிறந்தவர். இவரது தந்தை கே.சி.செருக்குட்டி ஹார்மோனியம் வாசிப்பவர், பாடகர். தாய் கல்யாணியும் இசையில் நாட்டமுடையவர். சுவர்ணலதா சிறு வயதிலேயே ஆர்மோனியம், கீ போர்டு வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர்.

1982 ல் வெளிவந்த நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் இசைஞானி இளையராஜாவால் "சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா" என்ற பாரதியாரின் பாடலைப் பாடவைத்து அறிமுகபடுத்தப்பட்டவர்.

P.சுசிலா அம்மாவுக்கு அடுத்தபடி ஜீவனுள்ள குரல் ஸ்வர்ணலதா என்பது என் கருத்து. ரொம்ப அமைதியானவர்.


பாடிய மொழிகள் :

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உருது மற்றும் படகா மொழிகளில் பாடிய பெருமை இவரை சாரும். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், உச்சரிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது இவரிடம்.

இளையராஜா, ரஹ்மான், தேவா, சிற்பி, பரத்வாஜ், வித்யாசாகர் & ஹாரிஸ் ஜெயராஜ் என்று முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையமைப்பில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

முதல் ஹிட் பாடல் :

"கேப்டன் பிரபாகரன்" படத்தில் இவர் பாடிய "ஆட்டமா தேரோட்டமா" பாடல் தான் இவரை பிரபலபடுத்தியதென்றால் மிகையாகாது.விருதுகள் :

"சின்னத்தம்பி" படத்தின் "போவோமா ஊர்கோலத்திற்காக" தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை பெற்று தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் பல படங்களுக்கு பாடும் வாய்ப்பை பெற்றுவந்தார்.

"கருத்தம்மா" படத்தில் இடம்பெற்ற "போறாளே பொன்னுத்தாயி" பாடலுக்குகாக தேசிய விருது பெற்று தொடர்ந்து ரஹ்மானின் இசையில் பாடும் வாய்ப்பை பெற்றுவந்தார். ஆஸ்த்தான பாடகி என்று சொல்லுமளவிற்கு அவரின் இசையில் தொடர்ந்து பல படங்களில் பாடியிருக்கிறார்.பிடித்த பாடல்கள் :
இளையராஜாவின் இசையில் சத்ரியன் என்ற படத்தில் "மாலையில் யாரோ மனதோடு பேச" என்ற பாடல் மூலம் தனது அருமையான குரல் வளத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பட்டித் தொட்டிகளிலெல்லாம் முழங்கியது தளபதி படத்தில் இவர் பாடிய 'அடி ராக்கம்மா கையத்தட்டு'. தேவர் மகனில் இடம்பெற்ற 'மணமகளே, மருமகளே' என்ற அருமையான பாடலுக்கு சொந்தமானவரும் சுவர்ணலதாவே என்பது குறிப்பிடத்தக்கது.

அலைபாயுதே படத்தில் பாடிய 'எவனோ ஒருவன்", பாம்பே திரைப்படத்தில் பாடிய குச்சி குச்சி ராக்கம்மா, ஜென்டில்மேன் படத்தில் பாடிய 'உசிலம் பட்டி பெண்குட்டி' காதலன் படத்தில் முகாபலா முகாபலா ஆகிய பாடல்கள் தமிழ் நாட்டில் அடிரடி ஹிட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஆதங்கம் :

ஆரம்பத்தில் பயன்படுத்திக் கொண்டதைப் போல் பின்னாட்களில் இளையராஜா & ரஹ்மான் இவரை முழுமையாக பயன்படுத்தவில்லை என்ற குறை என்னை போற்ற பலருக்கும் ஒரு ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது.

காற்றில் கலந்த பாடகி :

இன்று (12-SEP-2010) மரணம் தழுவிய செய்தியை கேட்ட போது மனம் நம்ப மறுத்தது. அவர் நம்மை விட்டு சென்றாலும் அவரது குரல் என்றும் காற்றில் வாசித்துக்கொண்டு தான் இருக்கிறது. இருக்கும்.

'பிரியாத வரம் வேண்டும்' படத்தில் 'விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணமிது...' அவர் பாடிய பாடலே நினைவுக்கு வருகிறது.

அவரது ஆத்மா இசை இறைவனடி சாந்தியடையட்டும்.Related Posts with Thumbnails
 
back to top