இன்று மாலை, காப்பி குடிக்க நண்பர்களுடன் காரபக்கம் அரவிந்த் தியேடர் அருகில் உள்ள உடுப்பி ஹோட்டல் வந்தேன். வரும் வழியில் ரோட்டின் ஓரத்தில் நிறைய பேர் வேலை செய்துகொண்டிருந்தார்கள். ஒரே கும்பல்.
என்னவென்று அருகில் சென்று பார்த்தா கட் அவுட் மற்றும் பேனர் கட்டும் வேளையில் விஜயின் ரசிகர்கள்.
நார்மலாவே, அந்த தியேடரில் காத்து(?) வாங்கும். எதாவது புது படம் ரிலீஸ் ஆனா கொஞ்சம் கூட்டம் இருக்கும். இன்று மாலை, ஒரே இளைனர் பட்டாளம் தான். எதோ தங்கள் வீட்டு கல்யாண வைபோகம் போலவும், கோவில் திருவிழா போல ஒரே அமர்களம் தான். எங்கும் ஒரே அலங்கார அமைப்பு. தியேடர் முன் பக்கம் முழுவது மூடு அளவு பேனரும் கட் அவுட்டும்.
ஒரு சிலர், தங்கள் உயிரை பணயம் வைத்து சரியான பாதுகாப்பு இல்லாமல் தியேடர் உச்சிவரை சென்று தோரணம் கட்டிகொண்டிருன்தனர்.
எதாவது அசம்பாவிதம் நடந்தால், யாரவது உதவிக்கு வருவார்களா..? இதற்கு அந்த தியேடர் நிர்வாகம் தான் பொறுப்பு எடுத்து கொள்ளுமா ? இல்லை அந்த விஜய் தான் உதவிக்கு வருவாரா? இல்லை உடன் இருந்து ஜால்டிரா போடும் கும்பல் தான் வருவார்களா? என் இந்த ஆர்பாட்டம்? இதனால் அவர்கள் அடையும் நன்மை தான் என்ன? யோசிப்பார்களா?
கிரிகெட் ஜுரம் அப்பபோ வருவது போல இப்போ சில நாட்களாக வேட்டைக்காரன் ஜுரம் ஆரம்பம் ஆகிவிட்டது. விஜயை ஒரு வழியாக பேசி, வறுத்து எடுத்தவர்கள் அடங்கும் முன்னரே இவரது படம் நாளை வெளியாகிறது. சொல்லவா வேணும் நான் வலையுலக நண்பர்களுக்கு. இனி அடுத்த சில வாரங்களுக்கு வேட்டைக்காரன் தான் ஊறுகாய்.
இதையெல்லாம் ஒரு பதிவா போட இவன் வந்துதானே என்று நீங்கள் நினைப்பது புரியுது. என்ன செய்ய?. கண்ணில் பட்ட இந்த அவலங்களை சகித்து கொள்ள முடியவில்லை. நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் ஒரு வோட்டு போடுங்க. நன்றி. மீண்டும் வருக!!!
8 comments:
ஒன்னும் சொல்றதுகில்ல!
Varey woooh. Yen intha aarpatam...
அடுத்த சில வாரங்களுக்கு வேட்டைக்காரன் தான் ஊறுகாய் - Superb!
அவலங்களை சகித்து கொள்ள முடியவில்லை
I agreed your point Jothiji.
கொடிகட்டும் நண்பர்கள் அவர்கள் வீ்ட்டில் துணிகாய வைக்க கொடிகயிறு கட்ட சொல்லுங்கள்....உடல் வணங்காது...ஆனால் நடிகர்களுக்கென்றால்....
நமது நாட்டின் சாபக்கேடு....
வாழ்கவளமுடன்,
வேலன்.
Vijay Rocks
நன்று.
Post a Comment