முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை இன்று நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் 1908ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பிறந்தவர் உக்கிரபாண்டி முத்துராமலிங்கத் தேவர்.

மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான முத்துராமலிங்கத் தேவர், அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவராக இருந்தவர். தேசியவாதி, அரசியலையும், ஆன்மீகத்தையும் தனது இரு கண்களாக பாவித்தவர். பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவராக இரு்நதவர். மூன்று முறை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மிகப் பெரும் நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தவர் தேவர். உக்கிரபாண்டித் தேவர், இந்திராணி தம்பதிக்கு ஒரே மகன். இவருக்கு ஜானகி என்ற சகோதரியும் இருந்தார்.

தேவர் பிறந்த சில காலத்திலேயே அவரது தாயார் மரணமடைந்தார். அவரது சித்தியும் அடுத்த ஆண்டு மரணமடைந்தார்.

1910ம் ஆண்டு முதல் தனது பாட்டி பார்வதியம்மாள் பராமரிப்பில் கள்ளுப்பட்டி கிராமத்தில் வளர்ந்தார் தேவர். தேவரின் தந்தைக்கு மிகவும் நெருங்கிய நண்பரான குழந்தைச்சாமி பிள்ளை, முத்துராமலிங்கத் தேவரை வளர்த்ததில் முக்கியப் பங்கு வகித்தார். பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தார். கமுதியில் உள்ள அமெரிக்கன் மிஷனரி பள்ளியில் படித்தார் தேவர். பின்னர் மதுரை திருப்பரங்குன்றம் பசுமலை உயர் நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் மதுரை யூனியன் கிறிஸ்டியன் உயர் நிலைப் பள்ளியில் படித்தார்.

இருப்பினும் 1924ம் ஆண்டு பிளேக் நோய் தாக்கியதால் பள்ளி இறுதியாண்டுத் தேர்வை எழுத முடியாமல் போனது. இந்த நிலையில் பசும்பொன் கிராமத்தில் தனது பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதால் அங்கு திரும்பினார் முத்துராமலிங்கத் தேவர். 1927ம் ஆண்டு அந்த வழக்கு தேவருக்கு சாதகமாக முடிந்தது.

அந்த சமயத்தில் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் குற்ற பரம்பரைச் சட்டம் அமலில் இருந்து வந்தது. இது தேவரை பெரும் வேதனை அடையச் செய்தது. இந்த நிலையில் அவர் அரசியலில் குதித்தார். இந்த சட்டத்தை நீக்குவதற்காக அவர் ஆதரவு திரட்டத் தொடங்கினார். கிராமம் கிராமமாக சென்று கூட்டங்களை நடத்தினார்.

இந்த நிலையில் 1929ம் ஆண்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 19 கிராமங்களைச் சேர்ந்த மறவர் சமுதாயத்தினரை இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வந்தனர். இதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தினார் தேவர். இந்த சட்டத்திற்கு மறவர் சமுதாயத்தினர் யாரும் அடிபணிய வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அவர்களும் போராட்டத்தில் குதிக்க அந்த சட்டத்தை பகுதியாக விலக்கிக் கொண்டது அப்போதைய சென்னை மாகாண அரசு.

தேவரின் தொடர் முயற்சிகளால் 2000 கிராமங்கள் இந்த சட்டத்தின் கீழ் இருந்த நிலை மாறி 341 ஆக குறைந்தது.

தனித்துப் போராடினால் வெற்றி பெற முடியாது, காங்கிரஸுடன் இணைந்து போராடுவது என தீர்மானித்தார் தேவர். இதையடுத்து 1936ம் ஆண்டு அவர் பர்மாவிலிருந்து திரும்பியதும், தென் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார்.

இந்த சமயத்தில் நடந்த மாவட்ட போர்டு தேர்தலில், முதுகுளத்தோர் தொகுதியில் போட்டியிட்டு நீதிக் கட்சி வேட்பாளரை வீழ்த்தினார். இதுதான் அவர் அரசியலில் பெற்ற முதல் வெற்றி.

1937ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார் தேவர். இதில் பெரும் வெற்றி பெற்றார். ராமநாதபுரம் மன்னரை இந்தத் தேர்தலில் தோற்கடித்தார் தேவர்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் ஆட்சி வந்ததால், குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கும் என நம்பினார் தேவர். ஆனால் முதல்வராகப் பதவியேற்ற ராஜாஜி அதை நிறைவேற்றத் தவறினார்.

இந்த நிலையில், 1946ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு போட்டியின்றி வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலுக்குப் பின்னர் குற்றப் பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்டது.

1955ம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார் பார்வர்ட் பிளாக். தனது மரணம் வரை அவரே இந்தப் பொறுப்பில் இருந்தார்.

1963ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி தனது 55வது பிறந்த நாளின்போது மரணமடைந்தார் தேவர்.

அவரது பிறந்த நாளும், இறந்த நாளும் ஒரே நாளில் வருவதால் அதை குருபூஜையாக முக்குலத்தோர் இனத்தவர் அனுசரித்து பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

நன்றி : Thatstamil

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் ஒரு வோட்டு போடுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!8 comments:

மகிழ்நன் said...

கடுமையாக அந்த மக்களுக்காக போராடிய அந்த நபரை பற்றி இப்படியும் செய்திகள் வந்திருக்கின்றனவே..........

குற்றப்பரம்பரையா? சூத்திரப்பரம்பரையா?

http://thozharperiyar.blogspot.com/2009/12/blog-post_23.html

Kolipaiyan said...

மகிழ்நன், நன்றிமறந்த உலகம் இது. என்ன செய்ய...

மகிழ்நன் said...

ஆமாம், அப்படி என்னதான் அந்த மக்களுக்காக போராடினார்...........

முதுகுளத்தூர் கலவரத்திற்கு இவருக்கும் தொடர்பு தினகரனின் நூலில் வெளிவந்து அம்பலப்பட்டு நிற்கிறதே?

Kiruthikan Kumarasamy said...

ஒரு அக்மார்க் சாதிவெறியருக்கு குருபூசையும் மசிரும்

ram said...

Yes, He is a man fought for nation, and religion.
He respects nation and religion as his two eyes, no where we are seeing such kind of great man now a days. Really we missed him. Every Indian's and Hindu's must respect him and Nethaji Subhash Chandrabose.

Kolipaiyan said...

Thanks for your visit Ram.

அப்பாவி இந்தியன் said...

இவர் செய்த ஒரே நல்ல செயல் குற்றபரம்பரை சட்டத்தை ஒழித்ததுதான். அதுனாலதான் இவருக்கு இந்த குரு பூஜை எல்லாம். இவர் ஒரு நல்ல ஜாதீய தலைவர். இவர் வாழ்ந்த காலகட்டத்தில் ஜாதி வெறி உச்சத்தில் இருந்தது, அதற்க்காக இவர் செய்தது என்ன? சாதிவெறியை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்ததுதான் மிச்சம்,இவர் விதைத்த ஜாதி வெறி இன்னும் தென் மாவட்டங்களில் அடங்கவில்லை... இவர் ஜாதியீய ஆதிக்க சக்திகளை(ஜாதிகளை) இணைத்ததில்தான் இவர்பெரும் பங்கு வகிக்கிறார்... சம்மந்தமே இல்லாத மூன்று ஜாதிகளை இணைத்த பெருமை இவருக்கே சேரும்... எனவே அந்த மூன்று ஜாதியினரும் குறிப்பாக கள்ளர் இன மக்கள் இவருக்கு இவருக்கு குரு பூஜை செய்வதில் தப்பில்லை... ஒரு ஜாதீய தலைவருக்கு தேசியத்தலைவர் என்ற பட்டம் ரொம்ப அதிகம்... தமிழ்நாடு அரசு ஜாதியை தண்ணீர் விட்டு வளர்த்து வருகிறது. பகத்சிங் விழாவிற்கு வராத நம்மூர் அரசியல்வாதி நாய்கள், ஒரு ஜாதி தலைவர் விழாவிற்கு மூன்று நாள் அரசு விழாவாம். ஜாதி தீயை வளர்க்கும் இந்த செயல் இது எதில் போய் முடியுமா? கடவுளுக்கே வெளிச்சம்... விழித்துகொள்வார்களா மக்கள்...

MANASAALI said...

இந்தாள் குரு பூஜை அன்னைக்கு அதாவது அக்டோபர் 30 அன்று. மதுரையே கதி கலங்கி நிற்கும். ஒரு கடையும் இருக்ககாது. அது தீபாவளிக்கு முன்னாடி வந்து விட்டது என்றால். ஜோராக இருக்க வேண்டிய தீபாவளி வியாபாரம் ஒன்னும் இல்லாம போய் விடும். யாராவது கடையை திறந்தால் இவர் வழி வந்த ரௌடிகள் அந்த கடையை துவம்சம் செய்து விடுவார்கள். இவர்கள் வீரர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். அடிப்படையில் இவர்கள் கோழைகள். யாராவது அடி வாங்கி விட்டால் படையை திரட்டி வருவார்கள். அடித்தவன் மொத்தமாக வந்தவர்களிடம் அடி வாங்குவான். தனியாக அடி வாங்கி தாக்கு பிடிக்க முடியாத அந்த கோழை தேவன் பின்னால் சொல்வான் “எப்படி எங்க வெய்ட்”

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top