இது என்ன கவிதைகள் !?

இரண்டு நாட்களுக்கு முன்பு சில கவிதை தொகுப்புகளை படிக்க நேர்த்தது. பல கவிதைகள் படித்தாலும் சில மற்றும் மனதில் ஏதே செய்வது போல இருந்தது. கடவுளை மையமாக வைத்து பல கவிதைகளை படித்துள்ளேன். அதில் எனக்கு மிகவும் பிடித்த சில உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியே.

திரு பி.மணிகண்டன் அவர்கள் எழுதிய "முரண்" என்ற தலைப்பில் வெளியான ஒரு சிறு கவிதை என்னை வெகுவாக கவர்ந்தது. இதோ...
முரண்டு பிடிக்கும் ஆட்டை
அடிக்க முயன்ற
என்னைத்
தடுத்தவாறு சொன்னால்
அம்மா
"அடிக்காதே பா
அது
கருப்புசாமிக்கு நேர்ந்துவிட்டது"
திரு எம்.மாரியப்பன் எழுதிய ஒரு கவிதை "நடைபாதை ஓவியன்". நடைபாதையில் அன்றாடம் நாம் காணும் சில மரிதர்களின் நிலை பாடை இவ்வளவு அழகாக சொல்லமுடியாது.
கோவர்த்தன மலையை
குடையென ஆக்கி
மக்களைக் காக்கும்
கண்ணனை
வயிற்று பசியுடன்
வரைந்து முடித்து
நிமிர்ந்து பார்க்க
வந்தது மழை
குடையுடன்
கடவுள்
அழிந்து கொண்டிருந்தார்.

திரு மாசிலா விநாயகமூர்த்தி எழுதிய ஒரு கவிதையில் எனக்கு மிகவும் பிடித்தது "பக்தி". நம்மையே கேள்வி கேட்டும் இந்த கவிதை...
நவக்கிரகங்களை வழிபடுகையில்
சுற்றுகளை எண்ணுவதிலேயே
சுற்றிக்கொண்டிருகிறது மனது
எதை வேண்டி
எதை பெறுவது?
திரு புன்னை சேது அவர்கள் எழுதிய "மாற்றங்கள்" என்ற தலைப்பில் ஒரு கவிதை படித்தேன். பல சிந்தனைகள் மனதில் கேள்விகளாக... இதோ அந்த கவிதை உங்களுக்காக....
பிரகாரம் நுழைந்தவுடன்
கனியாகி விடுகிறது
எலுமிச்சை...
தீர்த்தமாகி விடுகிறது
தண்ணீர்...
பிரசாதமாகி விடுகிறது
திருநீறும் பொட்டும்...
எந்த மாற்றம்மின்றி
வெளியேறுகிறான்
பக்தன்.
குறிப்பு : இங்கே வெளியான கமல் - கடவுள் கவிதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படியானு நீங்க கேட்பது தெரியுது. என்ன செய்ய.... !?

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு ஒரு வோட்டு போடுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



7 comments:

பூங்குன்றன்.வே said...

//நவக்கிரகங்களை வழிபடுகையில்
சுற்றுகளை எண்ணுவதிலேயே
சுற்றிக்கொண்டிருகிறது மனது
எதை வேண்டி
எதை பெறுவது?//

எனக்கு பிடித்திருக்கிறது இந்த கவிதை.நல்லா இருக்கு தொகுப்பு.

Kolipaiyan said...

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிகள் பூங்குன்றன்!

தமிழ் said...

அருமையான வரிகள்
பகிர்வுக்கு நன்றி நண்பரே

Kannan said...

Nice it is!

Anonymous said...

எந்த மாற்றம்மின்றி
வெளியேறுகிறான்
பக்தன்.
- அருமை நண்பரே. பகிர்வுக்கு நன்றி!

butterfly Surya said...

அருமை...

பகிர்விற்கு நன்றி..

Kolipaiyan said...

Thanks for your visit Mr. Butterfly.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top