பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்னும் மாறாதது மனிதனின் அரக்க குணம் தான். அறிவியலோடு சேர்ந்து அதுவும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் சுருங்கக் கூறினால் அறிவியலின் துணை கொண்டு அது பரிணாம வளர்ச்சியையும் அடைந்துள்ளது என்றே தோன்றுகிறது. சந்தேகம் இருந்தால் I spit on your grave படத்தை ஒரு முறை பார்த்து விடுங்கள்.
I SPIT ON YOUR GRAVE படம் ஒரு ரீமேக் படம். படம் த்ரில்லர் அல்லது ஹாரர் வகையை சேர்ந்தது. அதனால் மென்மையான, மிகவும் இளகிய மனம் படைத்தவர்கள் தவிர்ப்பது நல்லது. 1978-ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படம் மீண்டும் 2010-ல் புதிதாக எடுக்கப்பட்டு வெளியாகியது.
அந்த சமயத்தில், அந்த வீட்டில் தண்ணீர் குழாய் பழுதடைந்து விடுகிறது. அதை சரிசெய்ய மேட்டீவ்ஸ் என்கிற குழந்தைத்தனமான முக அமைப்பு கொண்ட இளைஞன் வருகிறான். அவன் சிறிது நேரத்தில் போராடி குழாயை சரி செய்கிறான். அவனை கவனித்துக் கொண்டிருந்த ஹில்ஸ் சந்தோசத்தில் அவனுக்கு முத்தம் தந்து விடுகிறாள். மேட்டீவ்ஸும் கூச்சத்தில் பணம் வாங்காமலேயே ஓடி விடுகிறான்.
அந்தப் பகுதியில் அவனுக்கு மூன்று நண்பர்கள் உண்டு. ஜானி, ஸ்டேன்லி மற்றும் ஆண்டி. அவர்கள் மூவரும் விளையாட்டாக துஷ்ட காரியங்களை நிகழ்த்துபவர்கள். அவர்கள்தான் ஹில்ஸ் தனிமையில் இருக்கும் பொழுது, அவளை மறைந்திருந்து படம் பிடித்து அவளுக்குத் தொல்லை தருபவர்கள். அவர்களிடம் மேட்டீவ்ஸ், ஹில்ஸின் முத்தத்தைப் பற்றிக் கூறவும் அவளை அடைய சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் ஜானிக்கு அவள் மேல் கோபம் பொங்குகிறது.
அன்று இரவு நால்வரும் அவளின் வீட்டை சுற்றி வளைக்கிறார்கள். ஆரம்பித்தில் அவளை பயமுறுத்த வேண்டும் என்று தான் அவர்கள் அவளை நெருங்குகின்றனர். ஆனால், அவளின் தனிமையும், அப்பாவித்தனமும், என்ன செய்துவிட முடியும் ? பெண் தானே? என்கிற இருமாப்பும் அவர்களை மிருகமாக்கி, அவர்கள் தின்னும் இறைச்சியாய் அவளை கொடுமைப்படுத்த ஆரம்பிக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் கொடுமை எல்லை மீறுகிறது. மேட்டீவ்சை அவளோடு பலவந்தமாக உடலுறவு கொள்ளச் செய்கிறார்கள். ஸ்டேன்லி அதனை படமெடுக்கிறான்.
கிடைத்த ஒரு சிறு சந்தர்ப்பத்தில் அவர்களிடமிருந்து தப்பிச் செல்கிறாள். ஒரு காவல் துறை அதிகாரியை வழியில் சந்தித்து முறையிடுகிறாள். அவர் அந்தப் பகுதியின் ஷெரீஃப் ஸ்டார்ச். அவர் அவளுக்கு உதவ முன்வருகிறார்.
அவளது மர வீட்டை ஸ்டார்ச் சோதனையிடுகிறார். அங்கே ஒரு சிகரெட் துண்டினைக் கண்டெடுக்கிறார் ஸ்டார்ச், ஹில்ஸிடம் அதைப் பற்றி விசாரிக்கிறார். உண்மையில் அந்த சிகரெட் துண்டு அவளுடையதுதான். அவள் நால்வரில் ஒருவர் விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்று தான் சந்தேகிப்பதாகக் கூறுகிறாள்.
அந்த நால்வரையும் அந்த வீட்டுக்குள் அழைக்கிறார். விசாரிக்கிறார். பிறகு தான் தெரிகிறது இந்த ஸ்டார்ச்சும் அவர்களில் ஒருவன் எப்பது. மீண்டும் அடுத்த கொடுமை அவளுக்கும் ஆரம்மிகிறது.
ஹில்ஸை காட்டுக்குள் இழுத்துச் சென்று அடித்து நிர்வாணப்படுத்துகிறார்கள். மயக்கத்தில் ஹில்ஸ் தாகமாக இருப்பதாக முணகுகிறாள். அவளின் தலை மயிறைப் பிடித்து சேற்று நீரில் அவளின் முகத்தை அமுக்கி குடிக்க வைத்து விட்டு கற்பழிக்கிறார்கள்.
சிலமணி நேரம் கழித்து ஹில்ஸ் கண் விழிக்கிறாள். எழுந்து நடக்க முடியாமல் நடக்கிறாள் ஆடைகள் எதுவுமின்றி. ஸ்டார்ச் அவளைக் கொன்றுவிடும் நோக்கத்துடன் தனது துப்பாக்கியால் குறி பார்க்கிறார். ஹில்ஸ் பாலத்தின் மேலிருந்து இரு கைகளையும் விரித்து ஆற்றுக்குள் தன் உடலைச் செலுத்தி மறைகிறாள்.
அவளின் மறைவு அவர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அவளின் பிணம் கரை ஒதுங்கும் முன் அதனைக் கண்டுபிடித்து யார் கண்ணிலும் படாமல் எரித்து விட வேண்டும் என்று ஸ்டார்ச் நால்வருக்கும் எச்சரிக்கிறார். ஹில்ஸ் தங்கி இருந்ததற்கான தடயங்களை அழித்து விடுகிறார்கள்.
சில நாட்களில் மேட்டீவ்ஸ் காணாமல் போகிறான். ஜானியின் வீட்டு வாசலில் இரவில் குருவி இறந்து கிடக்கிறது. அப்புறப்படுத்தி விட்டு மீண்டும் உள்ளே சென்றால், மீண்டும் வாசலில் குருவி கிடக்கிறது. இது போல சில நிகழ்வுகள் அந்த ஐந்துபேருக்கும் நடக்கிறது.
மெல்ல மெல்ல தன் பழிவாங்கும் படலம் தொடக்குகிறாள். கொடுரமாக கற்பழித்தவர்களை எப்படி பழி வாங்குகின்றாள் என்பதே மீதிக்கதை.
படத்தின் டைரக்டர் ஒரு மிகச் சிறந்த கற்பனைவாதி என்பதை படத்தில் அந்த பெண் கொலை செய்ய வித்தியாசமான வழிகளை கையாள்வதில் தெரிகிறது!
படத்தில் கற்பழிக்க பட்ட பெண் கொடுக்கும் தண்டனைகள் மிகவும் குரூரம். ஆனால் இந்த தண்டனைகள் பார்க்கும் போது நீங்கள் ரசிப்பீர்கள் காரணம். கற்பழிக்கபட்ட பெண்கள் இந்த படத்தை பார்த்தால் முக்கியமாக பிற்பகுதியை பார்த்தால் மிகவும் சந்தோஷம் அடைவார்கள்.
அழுத்தமான காட்சிகள் மற்றும் எதிர்பாராத திகில் திருப்பங்களால் மனம் கனமாவதை உணர முடிகிறது.
கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
I Spit on Your Grave - ஒரு முறை பார்க்கலாம். இது ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks to nammapakkam & jackie sekar who's blog inspired me to see this movie.
I SPIT ON YOUR GRAVE படம் ஒரு ரீமேக் படம். படம் த்ரில்லர் அல்லது ஹாரர் வகையை சேர்ந்தது. அதனால் மென்மையான, மிகவும் இளகிய மனம் படைத்தவர்கள் தவிர்ப்பது நல்லது. 1978-ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படம் மீண்டும் 2010-ல் புதிதாக எடுக்கப்பட்டு வெளியாகியது.
படத்தோட கதை என்னனா ...
ஜெனீஃபர் ஹில்ஸ் ஒரு நாவலாசிரியை. தான் அடுத்து எழுதப் போகும் கதைக்காக தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்குகிறாள். அந்த வீடு இருக்கும் பகுதி, நகரத்திலிருந்து சற்றே தனிமையானது. காடு என்றும் சொல்லலாம். அந்த தனிமையான இடத்தில், தான் மட்டும் தனியாக இல்லை என்று அவள் உணருகிறாள்.அந்த சமயத்தில், அந்த வீட்டில் தண்ணீர் குழாய் பழுதடைந்து விடுகிறது. அதை சரிசெய்ய மேட்டீவ்ஸ் என்கிற குழந்தைத்தனமான முக அமைப்பு கொண்ட இளைஞன் வருகிறான். அவன் சிறிது நேரத்தில் போராடி குழாயை சரி செய்கிறான். அவனை கவனித்துக் கொண்டிருந்த ஹில்ஸ் சந்தோசத்தில் அவனுக்கு முத்தம் தந்து விடுகிறாள். மேட்டீவ்ஸும் கூச்சத்தில் பணம் வாங்காமலேயே ஓடி விடுகிறான்.
அந்தப் பகுதியில் அவனுக்கு மூன்று நண்பர்கள் உண்டு. ஜானி, ஸ்டேன்லி மற்றும் ஆண்டி. அவர்கள் மூவரும் விளையாட்டாக துஷ்ட காரியங்களை நிகழ்த்துபவர்கள். அவர்கள்தான் ஹில்ஸ் தனிமையில் இருக்கும் பொழுது, அவளை மறைந்திருந்து படம் பிடித்து அவளுக்குத் தொல்லை தருபவர்கள். அவர்களிடம் மேட்டீவ்ஸ், ஹில்ஸின் முத்தத்தைப் பற்றிக் கூறவும் அவளை அடைய சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் ஜானிக்கு அவள் மேல் கோபம் பொங்குகிறது.
அன்று இரவு நால்வரும் அவளின் வீட்டை சுற்றி வளைக்கிறார்கள். ஆரம்பித்தில் அவளை பயமுறுத்த வேண்டும் என்று தான் அவர்கள் அவளை நெருங்குகின்றனர். ஆனால், அவளின் தனிமையும், அப்பாவித்தனமும், என்ன செய்துவிட முடியும் ? பெண் தானே? என்கிற இருமாப்பும் அவர்களை மிருகமாக்கி, அவர்கள் தின்னும் இறைச்சியாய் அவளை கொடுமைப்படுத்த ஆரம்பிக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் கொடுமை எல்லை மீறுகிறது. மேட்டீவ்சை அவளோடு பலவந்தமாக உடலுறவு கொள்ளச் செய்கிறார்கள். ஸ்டேன்லி அதனை படமெடுக்கிறான்.
கிடைத்த ஒரு சிறு சந்தர்ப்பத்தில் அவர்களிடமிருந்து தப்பிச் செல்கிறாள். ஒரு காவல் துறை அதிகாரியை வழியில் சந்தித்து முறையிடுகிறாள். அவர் அந்தப் பகுதியின் ஷெரீஃப் ஸ்டார்ச். அவர் அவளுக்கு உதவ முன்வருகிறார்.
அவளது மர வீட்டை ஸ்டார்ச் சோதனையிடுகிறார். அங்கே ஒரு சிகரெட் துண்டினைக் கண்டெடுக்கிறார் ஸ்டார்ச், ஹில்ஸிடம் அதைப் பற்றி விசாரிக்கிறார். உண்மையில் அந்த சிகரெட் துண்டு அவளுடையதுதான். அவள் நால்வரில் ஒருவர் விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்று தான் சந்தேகிப்பதாகக் கூறுகிறாள்.
அந்த நால்வரையும் அந்த வீட்டுக்குள் அழைக்கிறார். விசாரிக்கிறார். பிறகு தான் தெரிகிறது இந்த ஸ்டார்ச்சும் அவர்களில் ஒருவன் எப்பது. மீண்டும் அடுத்த கொடுமை அவளுக்கும் ஆரம்மிகிறது.
ஹில்ஸை காட்டுக்குள் இழுத்துச் சென்று அடித்து நிர்வாணப்படுத்துகிறார்கள். மயக்கத்தில் ஹில்ஸ் தாகமாக இருப்பதாக முணகுகிறாள். அவளின் தலை மயிறைப் பிடித்து சேற்று நீரில் அவளின் முகத்தை அமுக்கி குடிக்க வைத்து விட்டு கற்பழிக்கிறார்கள்.
சிலமணி நேரம் கழித்து ஹில்ஸ் கண் விழிக்கிறாள். எழுந்து நடக்க முடியாமல் நடக்கிறாள் ஆடைகள் எதுவுமின்றி. ஸ்டார்ச் அவளைக் கொன்றுவிடும் நோக்கத்துடன் தனது துப்பாக்கியால் குறி பார்க்கிறார். ஹில்ஸ் பாலத்தின் மேலிருந்து இரு கைகளையும் விரித்து ஆற்றுக்குள் தன் உடலைச் செலுத்தி மறைகிறாள்.
அவளின் மறைவு அவர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அவளின் பிணம் கரை ஒதுங்கும் முன் அதனைக் கண்டுபிடித்து யார் கண்ணிலும் படாமல் எரித்து விட வேண்டும் என்று ஸ்டார்ச் நால்வருக்கும் எச்சரிக்கிறார். ஹில்ஸ் தங்கி இருந்ததற்கான தடயங்களை அழித்து விடுகிறார்கள்.
சில நாட்களில் மேட்டீவ்ஸ் காணாமல் போகிறான். ஜானியின் வீட்டு வாசலில் இரவில் குருவி இறந்து கிடக்கிறது. அப்புறப்படுத்தி விட்டு மீண்டும் உள்ளே சென்றால், மீண்டும் வாசலில் குருவி கிடக்கிறது. இது போல சில நிகழ்வுகள் அந்த ஐந்துபேருக்கும் நடக்கிறது.
மெல்ல மெல்ல தன் பழிவாங்கும் படலம் தொடக்குகிறாள். கொடுரமாக கற்பழித்தவர்களை எப்படி பழி வாங்குகின்றாள் என்பதே மீதிக்கதை.
படத்துல எனக்கு பிடித்த சில ....
ஜெனீஃபர் ஹில்ஸாக சாரா பட்லரின் நடிப்பு. பரிதாபத்தை வரவழைக்கிறது. மிகவும் துணிச்சலான பெண். மற்றவர்கள் பழி வாங்கப்படும் போது நமக்கு உண்மையிலேயே அருவருப்பு தட்டவில்லை. அது தவறுக்கான தண்டனையாக மட்டுமே கருதப் படுவதால்.படத்தின் டைரக்டர் ஒரு மிகச் சிறந்த கற்பனைவாதி என்பதை படத்தில் அந்த பெண் கொலை செய்ய வித்தியாசமான வழிகளை கையாள்வதில் தெரிகிறது!
தனியாக மாட்டிக் கொண்ட பெண்ணிடம் தவறாக நடந்துக் கொள்ளும் நமது ஆண் வர்க்கத்திற்கு இந்த படம் ஒரு அபாய மணி. தனிமையும், தப்பு செய்ய ஒரு சந்தர்ப்பமும் கிடைக்காதவரை நீங்களும் நானும் உத்தமர்கள்தான்.படத்தின் முதல் பாதியை பார்க்கும் வரை, ஹில்ஸுக்கு நிகழ்ந்த கொடூரத்தை விட உலகில் மோசமானது எதுவும் இல்லை என்று தோன்றும். ஆனால், பிற்பாதியில் அவர்கள் நால்வரின் சாவு, கொடூரத்தின் உச்சம்.
படத்தில் கற்பழிக்க பட்ட பெண் கொடுக்கும் தண்டனைகள் மிகவும் குரூரம். ஆனால் இந்த தண்டனைகள் பார்க்கும் போது நீங்கள் ரசிப்பீர்கள் காரணம். கற்பழிக்கபட்ட பெண்கள் இந்த படத்தை பார்த்தால் முக்கியமாக பிற்பகுதியை பார்த்தால் மிகவும் சந்தோஷம் அடைவார்கள்.
அழுத்தமான காட்சிகள் மற்றும் எதிர்பாராத திகில் திருப்பங்களால் மனம் கனமாவதை உணர முடிகிறது.
கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
I Spit on Your Grave - ஒரு முறை பார்க்கலாம். இது ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks to nammapakkam & jackie sekar who's blog inspired me to see this movie.
1 comments:
அருமையான விமர்சனம்.
நான் டிவிடி வாங்கி பார்க்க தொடங்கையில் கற்பலிப்பு சீன் வந்தால் மேற்கொண்டு வீட்டில் பார்க்க முடியாமல் வைத்து விட்டேன்.
தனியாக இருக்க வேண்டும்.
Post a Comment