கமல் இயக்கும் ஹாலிவூட் படம் - ஆல் ஆர் கின்

"லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்" தயாரிப்பாளர் பேரிஆஸ்பனுடன்கமல் இணையும் ஹாலிவுட் படத்திற்கு "ஆல் ஆர் கின்" (All are Kin) என்று பெயர் வைத்துள்ளனர்.


தடைகள் பலவற்றை கடந்து கமலின் பிரமாண்ட படைப்பாற்றலில் உருவான விஸ்வரூபம் படம் சமீபத்தில் ரிலீஸாகி அனைத்து தரப்பினர் இடையே பாராட்டுதல்களை பெற்றதோடு வசூலையும் வாரி குவித்து வருகிறது. முன்னதாக இப்படம் வெளிவருவதற்கு முன்பே வெளிநாட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பனிடம், விஸ்வரூபம் படத்தை திரையிட்டு காட்டினார் கமல்.

கமலின் படைப்பாற்றலை பார்த்து வியந்து போன ஆஸ்பன், தனக்கு ஒரு படம் இயக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி கமலும் நிச்சயம் படம் இயக்குவதாகவும், இதுதனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றும் கூறியிருந்தார்.


தற்போது விஸ்வரூபம் படத்தை தொடர்ந்து விஸ்வரூபம் பார்ட்- 2 வையும் இந்தாண்டுக்குள் வெளியிட கமல் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் இப்படத்தை முடித்தபின்னர் பேரி ஆஸ்பன் படத்தை இயக்குவதாக சமீபத்தில் கமல் கூறியிருந்தார்.

இந்நிலையில் பேரி ஆஸ்பன் தயாரிப்பில் கமல் இயக்க இருக்கும் படத்திற்கு ஆல் ஆர் கின் என்று பெயர் வைத்துள்ளனர். "ஆல் ஆர் கின்" என்றால் "யாவரும் கேளீர்" என்று அர்த்தமாம். இந்திய கலாச்சாரத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. விஸ்வரூபம்-2 முடிந்த பிறகு உடனே ஆர் ஆர் கின் படத்தை தொடங்க இருக்கிறார் கமல்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Source : Dinamalar.com
1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தகவலுக்கு நன்றி...

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top