கடல் (2013) - விமர்சனம்

ராவணன் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் கடல். கார்த்திக் மகன் கவுதமும், ராதா மகள் துளசியும் அறிமுகமாகியுள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜூனும், அரவிந்தசாமியும் நடித்துள்ளனர்.

இந்தப் படம் முதல் நாளே பெரும் தோல்விப் படமாக அறிவிக்கப்பட்டது. அப்படி என்ன தான் கொடுமையா மணிரத்தினம் படம் எடுத்திருப்பார் என்று சென்று பார்த்தேன். படம் எப்படின்னு தானே கேட்கிறீங்க.... வெயிட் ப்ளீஸ்!

படத்தோட கதை என்னனா ...

அர்ஜுனும், அரவிந்த்சாமியும், பாதிரியார் ஆவதற்கு படிக்கிறார்கள். அரவிந்த்சாமி நல்லவர். அர்ஜுன் தீமைகள் செய்பவர். இருவருக்கும் பகை. அர்ஜுன் அங்கிருந்து வெளியேற அரவிந்த்சாமி காரணமாகிறார். ‘நான் சாத்தானின் அவதாரம். உன்னை நல்லவனாக வாழ விடமாட்டேன்’ என்று சபதமிட்டுச் செல்கிறார் அர்ஜுன்.

பல வருடங்களுக்கு பிறகு அரவிந்த்சாமி ஒரு மீனவ கிராமத்துக்கு பாதிரியாராகச் செல்கிறார். அர்ஜுன் கடத்தல் தாதாவாகிறார். பாலியல் தொழிலாளி மகனாக பிறந்து ரவுடியாகும் கவுதமை திருத்துகிறார் அரவிந்த்சாமி. அதே கவுதமை அர்ஜுன் தாதாவாக்குகிறார். இவர்கள் போட்டியில் யார் வென்றார்கள் என்பது கதை.

படத்தில் என்னை கவர்ந்த சில நட்சத்திரங்கள்

1. கவுதம்
கவுதம் ‘அலைகள் ஓய்வதில்லை’ கார்த்திக்கை நினைவு படுத்துகிறார். நடிப்பு, நடனம், சண்டை கைகூடி வருகிறது. துளசி மீது காதல் வளர்வதையும், அவளைப் பற்றி தெரிந்த பின் அதுவே கருணையாக மாறுவதையும் அழகாக வெளிப்படுத்துகிறார். துளசி, அம்மா மாதிரி இல்லாவிட்டாலும் அந்த குழந்தை சிரிப்பில் தனது அத்தனை மைனசையும் சரிக்கட்டிவிடுகிறார். ‘இது பாவம் செய்த கை’ என்று கவுதம் சொல்ல, ‘இனிமே செய்யாதே’ என்று அவர் கையை துடைத்துவிடும் காட்சியிலும், இடுப்பை ஆட்டி நடக்கும் பெண்களை, ‘அவங்க நல்லா டான்ஸ் ஆடுறாங்கல்ல’ என்கிற காட்சியிலும் அப்படியே குழந்தையாகிறார்.

2. அர்ஜுன் vs அரவிந்த்சாமி
கதை அர்ஜுன், அரவிந்த்சாமியை சுற்றிதான் என்பதால் இருவருமே வெளுத்து கட்டுகிறார்கள் நடிப்பில். நெஞ்சில் வஞ்சமும், கண்களில் கொலை வெறியுமாக அர்ஜுன், ஆளே மாறி நிற்கிறார். தன் மகளை கொல்ல முடியாமல் தடுமாறும் காட்சியிலும், கயிற்றில் தொங்கியபடி, ‘என்னை நீ கொன்னாலும் நான்தான் ஜெயிப்பேன்’ என்று அவர் கர்ஜிக்கும் காட்சியிலும் மிரட்டுகிறார். அரவிந்த்சாமி இன்னும் அதே அழகோடு இருக்கிறார். கருணையும், அன்பும் மிக்க பாதிரியாராக வாழ்ந்திருக்கிறா

3. இயக்குனர் மணிரத்னம்
இயக்குனர் மணிரத்னம் படங்களிலேயே சற்று வித்தியாசமான படமாக இப்படம் வெளிவந்திருக்கிறது. வட்டார வழக்கு மொழியை படம் முழுவதும் நேர்த்தியாக கையாண்டு, கடைசிவரை கொண்டுபோய் கரை சேர்த்திருக்கிறார். ஆனால், இவருடைய படங்களுக்கே உரித்தான ஒரு வரி வசனங்கள், நெஞ்சைத் தொடும் காட்சிகள் இப்படத்தில் மிஸ்ஸிங். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நேரடியாக படம் எடுத்ததால், கொஞ்சம் திணறியிருக்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.


4. ராஜீவ் மேனன்
ராஜீவ் மேனன் ஒளிப்பதிவுதான் இப்படத்தின் ஹைலைட். படத்தின் கதையோடு நம்மை ஒன்ற வைப்பது இவரது ஒளிப்பதிவுதான். மீனவ கிராமம், பாழடைந்த ஆலயம் என எல்லாவற்றையும் தன் கேமரா கண்களால் அழகாக காட்டியிருக்கிறார். இப்படத்திற்கு இவரது ஒளிப்பதிவு பலம் சேர்த்திருக்கிறதென்றால் அது மிகையல்ல.

5. ஏ.ஆர்.ரகுமான்
ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஏற்கெனவே பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக இருந்தன. ஆனால், அதை எப்படி காட்சிப்படுத்தப் போகிறார்கள் என்ற சந்தேகம் இருந்தது. அதை ஓரளவுக்கு நிறைவு செய்திருக்கிறார்கள்.
குறிப்பாக, ‘மூங்கில் தோட்டம்’, ‘ஏலே கீச்சான்’ ஆகிய பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் சூப்பர்.

கோழி இடும் முட்டைகள் : 2.5 / 5
கடல் - திணறல் பயணம் !
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Maalaimalar News papar



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top