ராஜமௌலியின் அடுத்த மிரட்டல் 'பாஜூ பாலி'

சினிமா நடிகர்கள் பற்றியும், நடிகைகள் பற்றியும் கொண்டாடும் மீடியாக்கள் இன்றைக்கு கொண்டாடுவது இயக்குநரை. எஸ்.எஸ்.ஆர் என்று அன்போடு அழைக்கப்படும் S.S.ராஜமௌலி இன்றைக்கு தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாது தென்னிந்திய திரை உலகத்தின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர்.

இவ‌ரின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று ஒவ்வொரு ஹீரோவும் ஏங்குகிறார்கள். ஈ-யை வைத்து மெகா ஹிட் கொடுத்தவர் நம்மை வைத்து அட்லீஸ்ட் ஹிட் தரமாட்டாரா என்ற நம்பிக்கை.ஜூனியர் N.T.R ஐ வைத்து ஸ்டூடன்ட் நம்பர் 1 இயக்கியது தொடங்கி சாதாரண யை கதைக் கருவாக வைத்து மிரட்டியது வரை ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டினார்கள். நான் ஈ படம் பார்த்துவிட்டு யார் இந்த ராஜமௌலி என்று யோசித்த ரசிகர்கள் ராஜமௌலி என்றால் பணி ராட்சஷன் என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள். அப்படித்தான் செல்லமாய் அவர் அழைக்கப்படுகிறார். எந்த செயலானாலும் கடுமையாய் உழைத்து வெற்றியை ருசித்தபின்னர்தான் வேறு வேலையைப் பார்ப்பாராம்

நான் ஈ வெளிவந்ததும் கூடவே சில ஈ-‌களும் வந்தன. முதல் ஈ ராஜமௌலியின் அடுத்தப்பட ஹீரோ ர‌ஜினி என்றது. இரண்டாவது ஈ-யின் சாய்ஸ் அ‌‌‌ஜீத். ஆனால் அவைகள் போலி ஈ-கள் என்று ராஜமௌலி தெ‌ளிவுப்படுத்தியிருக்கிறார். இவ‌ரின் அடுத்தப்பட ஹீரோ பிரபாஸ்.

அடுத்த படத்தோட பேரு என்னப்பா .... ?

100 கோடியில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் விஸ்வரூபம் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட இந்தியாவின் அனைத்து பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்களிலும் சாதனை படைத்து வருகிறது! அதேபோல வெளிநாடுகளிலும் விஸ்வரூபம் முதல் இரண்டு வார முடிவில் நல்ல லாபம் ஈட்டிக் கொடுத்திருக்கிறது!

விஸ்வரூபத்துக்கு முன்பு அனைத்து இந்தியா முழுவதும் கலக்கிய மற்றொரு படம் ‘நான் ஈ’ இந்தியா முழுவதும் 125 கோடி வசூல் செய்தது இந்தப் படம். நான் ஈக்குப் பிறகு கொஞ்சம் கூட ஓய்வு எடுத்துக் கொள்ளாத ராஜாமௌலி தனது அடுத்த படத்தை 50 கோடியில் பட்ஜெட்டில் தொடங்கிவிட்டார்!


பாஜூ பாலி

ஆறடி உயரம் கொண்ட பிரபாஸ் முதன்மைக் கதாநாயகனாகவும், இவருக்கு நிகரான நெட்டை ஹீரோக்களான ராணாவும், கோபிச்சந்தும் வில்லன்களாகவும் நடிக்கிறார்கள். படத்துக்கு ‘பாஜூ பாலி’ என தலைப்பு வைத்திருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஆந்திராவையே கலக்கிக் கொண்டிருக்கிறது!

காரணம்... பாஹூ பாலி கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபாஸ், மலைபோல் குவிந்து கிடக்கும் மண்டை ஓடுகளின் மீது போரில் வென்ற செருக்குடன் நிர்க்கும் காட்சி, இந்திய சினிமாவுகே புதிதாக இருக்கிறது!

படத்தின் கதை ... ?

இந்தப் படத்தின் கதை இராமயணக் காலத்தில் வாழ்ந்ததாக கூறப்படும், இந்திரனுக்கும் அருணாவுக்கும் பிறந்த மாவீரன் பாலியின் கதையா, அல்லது ஜைன மத்தின் தீர்த்தங்கரர்களில் ஒருவராக இந்தியாவில் வழிபடப்படப்படும் ரிஷப தேவரின் மகன் ‘பஹூ பாலி’ யின் வாழ்க்கைக் கதையா என்பது பற்றி இதுவரை வாய்திறக்கவில்லை ராஜாமௌலி.தனக்கு நெருக்கமான ஊடக நண்பர்களிடம் மட்டும் படத்தின் ஒருவரிக்தையை சொல்லியிருகிறாராம். அதன்படி ‘ இரண்டு பெரிய தேசங்களின் இளம் ராஜாக்களாக இருக்கும் பிரபாஸ், ராணா இருவரும், மற்றொரு நாட்டின் இளவரசியான அனுஷ்காவுக்கா சண்டையிட்டு பல ஆயிரம் ஊயிர்களை பலிகொள்வதுதான் கதை’ என்று கூறியிருக்கிறார்.

எப்படியோ சிக்கனமான பட்ஜெட்டில் மிகபிரமாண்டமான கற்பனை கலந்த வரலாற்றுப் படங்களை எடுப்பதில் ராஜமௌலியின் ராஜங்கமே தனிதான்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!1 comments:

கோவை நேரம் said...

அறிமுகமே...அசத்தலாக இருக்கு...படம் வரட்டும்...

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top