உண்ணக்காய் செய்வது எப்படி ?

இன்று நாம் பார்க்க இருப்பது கேரளா மாநில இனிப்பு வகை. இனிப்பு பதார்த்தம் கேரளாவில் மிக பிரபலமானநேந்திர வாழைப்பழத்தை கொண்டு செய்யப்படும் மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் உண்ணக்காய் தான்.

சரி.. சரி இனி உண்ணக்காய் செய்வது எப்படி ? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :-

நடுத்தரமாக பழுத்த நேந்திரங்காய் - அரை கிலோ
தேங்காய்ப்பூ - 1 கப்
முந்திரி - 25 கிராம்
திராட்சை - 25 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - பொரித்தெடுக்கும் அளவுக்கு.

செய்முறை:-

  • நேந்திரங்காயை இரண்டாக வெட்டி குக்கரில் போட்டு, கால் கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் அளவுக்கு வேகவைத்து மாவாக மசித்துக் கொள்ளுங்கள்.

  • வாணலியில் நெய் விட்டு தேங்காய்ப்பூ, முந்திரி, திராட்சை, சர்க்கரை, ஏலக்காய் போட்டு வறுத்துக் கொள்ளுங்கள்.

  • உதிர்த்து வைத்துள்ள நேந்திரங்காயில் லேசாக நெய் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திக்கட்டையில் தேய்த்து கொள்ளவும்.

  • இதன் நடுவில் வறுத்த கலவையை வைத்து கொழுக்கட்டையைப் போல பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

  • ருசியான உண்ணக்காய் ரெடி! ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top