வெற்றிப்பட நாயகன் - விஜய் சேதுபதி

வெற்றிப்பட நாயகன்

2012-ல் சத்தமில்லாமல் நுழைந்து வெற்றிப்படங்களில் நடித்து தனது பெயரை ஆணித்தரமாக பதிய வைத்த நாயகன் விஜய் சேதுபதி. அது என்னவோ விஜய் என்று பெயர் வைத்தாலே ஜெயம் தான் போல.

விஜய் சேதுபதி, பல நல்ல நல்ல கதையம்சம் கொண்ட குறும்படங்களில் நடித்தவர். இவர் நடித்த குறும்படங்களில் சில துரு, பெட்டி கேஸ் ஆகியவை. இந்த நடிப்பும் இவருக்கு நல்ல அடித்தளத்தை உருவாகியது.

அறிமுகம்

தேசிய விருது பெற்ற தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நாயகனாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி.கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்று நடிகனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். முதல் படத்தில் நாயகன், பின்பு ஒரு சாதாரண கதாப்பாத்திரத்தில் நடித்தார், அடுத்த படத்தில் வில்லன் மீண்டும் இரண்டு படங்களில் நாயகன் என்று வித்தியாசத்தை காட்டும் நடிகன்.


2012ல் வெளிவந்த சுந்தரபாண்டியன், பிட்சா, நடவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களில் நடித்து படமும் வெற்றி பெற்றதால் குறைந்த பட்ஜெட்டில் படமெடுப்பவர்களை கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்துள்ளார் விஜய் சேதுபதியின். மேலும் இந்த வெற்றிகள் புதுமுக இயக்குனர்களையும் ஊக்கப்படுதியிருக்கிறது. அதன் பலனாக கை மேல் படங்கள்.இதையடுத்து 2013ல் கைவசம் உள்ள படங்கள் புதுமுக இயக்குனர் நளன் இயக்கத்தில் "சூது கவ்வும்", புதுமுக இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் "பண்ணையாரும் பத்மினியும்" மற்றும் புதுமுக இயக்குனர் கே.பாலகிருஷ்ணன் இயக்கத்தில் "ரம்மி".

பண்ணையாரும் பத்மினியும்

மேஜிக்பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர். கணேஷ் தயாரிக்கும் படம் பண்ணை யாரும் பத்மினியும். இதில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். ஜெயப்பிரகாஷ் மற்றும் முன்னணி நடிகர், நடிகைகள் பலர் நடிக்கின்றனர்.

நாயகி தேர்வு நடக்கிறது. இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.டி. அருண்குமார் இயக்குகிறார். இவர் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். யதார்த்தமான கிராமத்து கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது.

பண்ணையார் ஒருவர் கார் வாங்குகிறார். ஆனால் அவருக்கு அதை ஓட்ட தெரியாது. எனவே டிராக்டர் ஓட்டும் முருகேசனை அழைத்து டிரைவராக வைத்துக் கொள்கிறார். அவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களே கதை. காமெடி, படமாக தயாராகிறது.

சென்டிமென்ட் இருக்கும். இந்த படத்தில் பத்மினி கார் ஒன்று முக்கிய கேரக்டரில் வருகிறது. இவ்வகை கார்களை வைத்து ஊர்வலம் நடத்துவது வழக்கம். இந்த படம் வந்த பிறகு பத்மினி கார் வைத்திருப்பவர்கள் பேசப்படுவர்.

இசை: ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு: கோகுல் பெனாஸ். எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத்.


ரம்மி

ரம்மி தமிழ்தானா? இந்தப் படத்தை முந்தையப் படங்களைப் போலவே அறிமுக இயக்குனர் ஒருவர்தான் இயக்குகிறார். பெயர் பாலகிருஷ்ணன் கே. முந்தையப் படங்களுக்கு மாறாக இதுவொரு கிராமத்து சப்ஜெக்ட். பிரேம்குமார் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

விமல் களவாணி என்ற ஒரே படத்தில் உச்சாணிக்கு சென்றது போல் சேதுபதியின் கேரியர் அவ்வளவாக சூடு பிடிக்கவில்லை. அவரது பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்கள் ஸ்கிரிப்ட் ஓரியண்ட் என்பதால் இருக்கலாம்.

ரம்மியும் ஸ்கிரிப்டுக்கு முக்கியத்துவம் தந்து உருவாக்கப்படுகிறது. டி.இமான் இசையமைக்கிறார்.

வெற்றி மீது வெற்றி குவிந்து வரும் விஜய் சேதுபதிக்கு 2013ம் வருடம் ஒரு வெற்றி வருடமாக அமைய வாழ்த்துக்கள்!.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top