டேவிட் (2013) - விமர்சனம்

விக்ரம், ஜீவா, தபு, லாரா தத்தா, இஷா ஷர்வானி, நாசர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் "டேவிட்". பட‌த்தை ‌பிஜா‌ய் ந‌ம்‌பியா‌ர் இய‌க்‌கியு‌ள்ளா‌ர்.

விக்ரம், ஜீவா இருவரும் முதன்முதலாக இணைந்து நடித்துள்ளனர். தமிழ் படங்களில் பல கதாநாயகர்கள் இணைந்து நடித்து வருவது வரவேற்கத்தக்கது. படத்தோட எதிர்பார்ப்பு மிக அதிகமா இருந்தது. படத்த பார்த்த பின்னாடி .... வெயிட் ... வெயிட்!


படத்தோட கதை என்னனா ...

ஒரே பெயர் கொண்ட இரண்டு பேருடைய வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான் டேவிட் படத்தின் கதை.

1999-ம் ஆண்டு மும்பையில் கித்தாரிஸ்டாக இருக்கும் ஜீவா, தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது வெளிநாடு டூர் சென்று தனது திறமையை நிரூபிக்கவேண்டும் என்ற லட்சியத்துடன் சுற்றி வருகிறார். அவருடைய அன்பான அப்பாவாக நாசர். இவர் எப்போதும் ஏசுவின் நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருக்கிறார்.

இவர் எல்லோரையும் மதம் மாற்றுகிறார் என்று உள்ளூர் எம்.எல்.ஏ., தனது சுயவிளம்பரத்துக்காக, தன்னுடைய ஆட்களுடன் வந்து நாசரை அடித்து துவம்சம் செய்கிறார். தனது, தந்தையை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்க துடிக்கும் ஜீவா, தனது லட்சியத்தில் வெற்றியடைந்தாரா? அல்லது அவர்களை பழிவாங்கினாரா? என்பதே மீதிக்கதை


இன்னொரு பக்கம், 2010-ம் ஆண்டு கோவாவில் மீனவனாக வருகிறார் விக்ரம். தன்னுடைய மனைவி வேறொருவனிடம் ஓடிவிட்டாள் என்ற ஏக்கத்தில் முழுநேர குடிகாரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்கி, புத்திமதி சொல்லும் பெண் தோழியாக தபு.

அந்த ஊரில் பெரிய செல்வந்தரின் மகளான இஷா ஷெர்வானியை பார்த்தவுடனேயே இவருக்குள் ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது. ஆனால், அவளை தன்னுடைய நண்பன் கல்யாணம் செய்துகொள்ளப் போகும் சேதி பின்னர் தெரிய வருகிறது. இருந்தும், அவளை திருமணம் முடிக்கவேண்டும் என்று முழு முயற்சியில் இறங்குகிறார். இறுதியில், இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததா? என்பதே மீதிக்கதை.

பாத்திரப்படைப்புகள்

1. ஜீவா
மும்பையில் கித்தாரிஸ்டாக வரும் ஜீவா படு ஸ்மார்ட். சண்டைக்காட்சியில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதில் கெட்டிக்காரர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஆனால், எந்நேரமும் வில்லன்களிடம் சென்று சண்டை போட்டு, இவர் அடிவாங்கி வருவது சலிப்பையே ஏற்படுத்துகிறது.

ஜீவாவுக்கு எப்படியாச்சும் ஒரு ஹிட் கொடுத்திட முடியாதாங்கிற ஏக்கத்துல கண்ட கண்ட கதைங்கள நடிச்சு இன்னும் பாதாளத்துக்கு போறாரு. ரொம்ப மோசம்.

2. விக்ரம்
கோவாவில் மீனவனாக வரும் விக்ரம், சதா எந்நேரமும் குடித்துக் கொண்டே இருக்கிறார். டாஸ்மாக் கடைக்கு விளம்பர தூதரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், முந்தைய படங்களைவிட இப்படத்தில் கொஞ்சம் இளமையாக இருக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் வேறு. அடுத்தவன் காதலிக்கு ரூட் விடும் கதாபாத்திரத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார்? என்று தெரியவில்லை. விக்ரம்க்கு வயசு ஆகிடிச்சு. கதை தேர்வுல ரொம்பவே கோட்டை விடுறாரு.

3. லாராதத்தா
கணவனை இழந்து, குழந்தையுடன் வசிக்கும் பெண்ணாக லாராதத்தா. அழகு பதுமையாய் காட்சியளிக்கும் இவர், தன்னுடைய கதாபாத்திரத்தை நிறைவாய் செய்திருக்கிறார். படத்தில் கொஞ்சம் நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்.

4. இஷா ஷெர்வானி
அழகாய் ஜொலிக்கிறார். இவரது கண்களே நிறைய வார்த்தைகள் பேசுகிறது. கோடையின் இதமாக இருக்கிறது இஷாவின் அழகு. ஆனால், இவரது கதாபாத்திரத்தை படத்தில் ஊமையாக்கிவிட்டதுதான் வருத்தத்தை அளிக்கிறது.


5. இயக்குனர் பிஜாய் நம்பியார்
இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காத்திருந்தது. ஆனால், அதை நிறைவேற்ற சற்று தடுமாறியிருக்கிறார். இரண்டு வெவ்வேறான காலகட்டங்களில் பயணிக்கும் இரண்டு கதாபாத்திரங்களையும் கிளைமாக்ஸில் இணைத்து கதைக்கு ஒரு ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார். அந்த இடத்தில் மட்டும் இயக்குனர் பளிச்சிடுகிறார். மற்றபடி, திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார். ஜீவாவின் கதாபாத்திரம் மும்பையில் வாழ்வதாக இருந்தாலும், அக்காவம், தம்பியும் சேர்ந்து சிகரெட் பிடிக்கும் காட்சிகளை இயக்குனர் தவிர்த்து இருக்கலாம்.

ரொம்ப நல்லா இருக்குனு சொல்ல முடியாது. அதுக்காக ரொம்ப மோசம்னு சொல்ல முடியாது, பரவாஇல்லை படத்தின் மேகிங் நல்ல இருக்கு. விக்ரம், ஜீவா என இரண்டு பெரும் ஹீரோக்கள் கிடைத்தும், இயக்குநர் பிஜாய் நம்பியார் தரமான தமிழ்படம் எடுக்க முன்வராதது வருத்தம்! காட்சிகளில் வலிமை இல்லை, வசனங்களில் வலிமை இல்லை.


6. இசையமைப்பாளர்கள்
அனிருத், பிரசாந்த் பிள்ளை, மார்டன் மாபியா, மாட்டி பென்னி, ரெமோ என அரை டஜன் இசையமைப்பாளர்கள் தனித்தனி ட்யூனில் இசையமைத்திருப்பது டேவிட் படத்தை ஏதோ துண்டு துண்டு விளம்பர படங்களை சேர்த்து பார்த்த திருப்தியையே தருகிறது.

7. ஒளிப்பதிவு
படத்தோட பெரிய பலம் ரத்னவேலு, வினோத் ஆகியோரின் ஒளிப்பதிவுதான். இருவரும் இப்படத்திற்காக ரொம்பவும் உழைத்திருக்கிறார்கள். கண்ணில் ஒற்றிக் கொள்கிற ஒளிப்பதிவை தவிர படத்தில் வேறு எதையும் உருப்படியாக சொல்லவே முடியவில்லை.

8. நாசர்
நாசருக்கு வலுவான கதாபாத்திரம் இல்லையென்றாலும், அவருடைய பணியை நிறைவாக செய்திருக்கிறார்.

கோழி இடும் முட்டைகள் : 1.5 / 5
டேவிட் - எனக்கு பிடிக்கவில்லை. நீங்கள் விரும்பினால் ஒருமுறை பார்க்கலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். ஒரே ஒரு வோட்டு ப்ளீஸ். நன்றி!!!
Thanks : Maalaimalar news paper




0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top