எளிமையான முறையில் மிகவும் சுவையான வெள்ளரி ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
தேவையானப் பொருட்கள்:-
- வெள்ளரிக்காய் (துருவியது) - 1 கப்
- பால் – ஒரு கப்
- தேன் – 2 டீஸ்பூன்
- நறுக்கிய பாதாம் - 1 கப்
- பாதாம் விழுது – ஒரு டீஸ்பூன்
- குளிர்ந்த தண்ணீர் – அரை கப்.
செய்முறை:-
- வெள்ளரிக்காய்த் துருவலில் இருக்கும் தண்ணீரை நன்கு பிழிந்து, வடிகட்டி, எடுத்துக் கொள்ளவும்.
- இந்தச் சாறுடன், பாதாம் விழுது, பால், தேன் கலந்து, நன்கு அடித்துக் கொண்டு ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும்.
- நறுக்கிய பாதாமால் அலங்கரித்துப் பரிமாறவும்.
- மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் இந்த வெள்ளரி ஷேக்! ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
0 comments:
Post a Comment