கும்கி - விமர்சனம்


மைனா படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபுசாலமன் இயக்கியிருக்கும் படம் 'கும்கி'. மைனா மூலம் நம் மனங்களை ஆக்ரமித்த சாலமன் மீண்டும் ஒரு வித்தியாசமான படைப்பாய் கும்கியை கொடுத்திருக்கிறார்.

வித்தியாசமான பின்னணி, தமிழ் சினிமால இது வரை சொல்லப்படாத கதைன்னு இந்த படத்தை தாராளமா சொல்லலாம். இயக்குனர் பிரபு சாலமன், சொல்ல வந்தற விஷயத்தை தெளிவா சொல்லியிருக்காரு.


கும்கி யானை என்ன இது?

பிற அடங்காத / காட்டு யானைகளை ஆற்றுப்படுத்தும் பயிற்சி பெற்ற யானை / காட்டுக்குள் இருந்து ஊர்ப்பக்கம் வருகிற யானைகளை விரட்டியடிக்கப் பழக்கப்பட்ட யானை க்கு கும்கினு பேரு


சரி சரி படத்தோட கதை என்ன ....

ஆதிகாடு என்றொரு தமிழக-கேரள, எல்லையில் இருக்கும் ஒரு அழகான மலை கிராமம். பாட்டன், முப்பாட்டன் என பாரம்பரியமும்,கட்டுப்பாடும் மிகுந்த அந்த கிராமத்தில் 20 குடும்பங்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். பயிர்கள் அறுவடைக்கு வரும் நேரத்தில் 'கொம்பன்' எனப்படும் அதிபயங்கர காட்டு யானை பயிர்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல் அங்கு வாழ்பவர்களையும் மிதித்து கொல்கிறது.

காட்டு யானையை விரட்டாத அரசாங்கம் ஆதிகாடு வாசிகளை புலம்பெயர சொல்கிறது.அதனை மறுக்கும் ஊர் மக்கள் கொம்பனை விரட்ட எங்களுக்கு தெரியும் உங்கள் வேலையை பாருங்கள்.. என சவால் விடுகிறார்கள்.

கொம்பனை அழிக்க கும்கி யானை ஒன்றை வரவழைக்க ஊர்மக்கள் முடிவு செய்கிறார்கள். யானை வியாபாரிக்கும், கும்கி யானை பாகனுக்கும் இடையே ஏற்பட்ட குளறுபடியால் கோயில் யானை வைத்திருக்கும் நம்ம ஹீரோ பொம்மன், கும்கி யானைபாகனாக இரண்டு நாள் மட்டும் நடிக்க சம்மதிக்கிறார்.

இரண்டு நாள் ஆதிகாட்டு வாசத்தில் ஊர் தலைவர் மகளான அல்லியை பார்த்த மாத்திரத்தில் காதலிக்கிறார் நம்ம ஹீரோ. காதல் மயக்கத்தில் நிஜத்தை மறந்து கும்கி யானை பாகனாகவே தன் நடிப்பை தொடர்கிறார் நாயகன் பொம்மன்.

தேங்காய் உடைத்தாலே மிரண்டு ஓடும் கோயில் யானை மாணிக்கம், நாசகார காட்டுயானை கொம்பனை எப்படி வீழ்த்தப்போகிறது?

மற்ற ஊர்க்காரங்களுக்கு பொண்ணு கொடுக்கவும் மாட்டோம், எடுக்கவும் மாட்டோம்னு பரம்பரை பரம்பரையா கட்டுபாட்டோட வாழ்ந்துவரும் ஆதிகாட்டில்... அதே ஊர் தலைவரின் மகளான அல்லியை நாயகன் பொம்மனால் மணக்க முடிந்ததா என்பதே மீதமுள்ள கதை.

எனக்கு பிடித்த சில....


ஒளிப்பதிவாளர் M.சுகுமார்

படத்தின் நிஜமான ஹீரோ ஒளிப்பதிவாளர் M.சுகுமார். பிரமாதம் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமும் அந்த அருவி காட்சிதான். ஆதிக்காடு கிராமத்தை பார்த்த பிறகு, அந்த மலை கிராமம் எங்கே என்று பலரும் சுகுமாரை கேட்டுத் துளைக்கக் கூடும்.

சுகுமாரின் ஒளிப்பதிவில் அருவிகள் ஒவ்வொன்றும் அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட அருவிகள் இருக்கிறதா! என்று நமது புருவத்தை உயர்த்தும் அளவுக்கு கேமரா வைக்க முடியாத இடங்களில் எல்லாம் கேமராவை வைத்து படம்பிடித்திருக்கிறார் சுகுமார்.

மலை உச்சியில் எடுத்த காட்சிகளில் எல்லாம் சுகுமாரு எங்கதான் கேமரா வெச்சாரு? அது அவருக்கே தெரிந்த வெளிச்சம்.

இந்த படத்தையெல்லாம் 3-டி யில் காட்ட மாட்டாங்களா என்ற ஏக்கத்தை தருகிறது சுகுமாரின் ஒளிப்பதிவு. அடர்ந்த காட்டிலும் அருவிகளின் உச்சத்திலும் அசராமல் துள்ளித்திரிய விட்டிருக்கிறார் படம் பார்க்கிற அத்தனை பேரையும்.


லட்சுமி மேனன்

கிராமத்து பேரழகியாக லட்சுமிமேனன். ஓராயிரம் ஆக்ஸ்போர்டு டிக்‌ஷனரியை ஒளித்து வைத்திருக்கிறது அவரது கண்கள். சட் சட்டென சிறகடித்து உணர்ச்சிகளை கொட்டுகிற வித்தையால் டயலாக்குகளுக்கு வேலை இல்லாமல் செய்கிறார்.

வந்திருப்பது நிஜ கும்கி அல்ல. அதை பராமரிப்பவன் தன் மீதுள்ள காதலால் உயிரையே கொடுக்க துணிந்தவன் என்பதெல்லாம் புரிந்தபின் லட்சுமி காட்டும் எக்ஸ்பிரஷன்களை பார்த்து ரசிக்க இன்னொரு முறை கூட தியேட்டருக்கு போகலாம்.

அம்மணியின் கண்கள், உதடுகள் ஏக இம்சை செய்கின்றன.

விக்ரம் பிரபு

விக்ரம் பிரபுவுக்கு இது முதல் படம். அந்தத் தடுமாற்றம் கொஞ்சம் தெரிந்தாலும், பல காட்சிகளில் சிவாஜி குடும்ப வாரிசு என்ற அடையாளம் மறைந்து, பொம்மனாகவே அவர் தெரிவதை மறுப்பதற்கில்லை.

சிவா‌ஜியின் பேரன் நடித்த படம் என்பதால் அந்த‌ப் பெ‌ரிய குடும்பத்துக்கு இது முக்கியமான படம். ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயம். படத்தின் கதையில் கோட்டைவிட்டாலும் லொகேஷனும், சுகுமா‌ரின் ஒளிப்பதிவும் படத்தை காப்பாற்றியிருக்கிறது.


தம்பிராமையா

'தேசிய விருது' பெற்ற நடிகர் தம்பி ராமையா 'கொத்தமல்லி' என்னும் கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். ராமையாவின் காமெடியும், அவருக்கு அடிக்கடி கவுண்ட்டர் கொடுக்கும் 'உண்டியல்' அஸ்வினும் அடிக்கடி சிரிப்பலையை ஏற்படுத்துகின்றனர்.

குணச்சித்திரம், நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்திற்கு இப்போதைக்கு இவரை விட்டால் வேறு ஆள் இல்லை.

D.இமான்

டி.இமானின் இசையில் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட். படத்தின் பின்னணி இசையையும் பிரமாதமாக அமைத்திருக்கும் இமான், பாடல் காட்சியின் போது ரசிகர்களை எழுந்திருக்க விடாமல் செய்திருக்கிறார். பாடல்களுக்காகவும், அதை படமாக்கிய விதத்துக்காகவும் இப்படத்தை மேலும் ஒரு முறை பார்க்கலாம்.

ஒன்னும் புரியலை..., ஐயய்யய்யோ ஆனந்தமே..., சொல்லிட்டாளே... அருமையான மெலோடிஸ்! சொய் சொய்... பாடலுக்கு ரசிகர்கள் எழுந்து நின்று ஆடுகிறார்கள்.


பிரபு சாலமன்

பிரபு சாலமனின் 'மைனா' படத்தில் பளிச்சிட்ட அதே அபார உழைப்பு இந்தப் படத்திலும் பளிச்சிடுகிறது. கதையை மட்டுமே நம்பாமல், களத்தையும் நம்பும் பிரபு சாலமன், அதற்காக மெனக்கெட்டு இப்படத்தின் மூலம் பல அழகான காட்சிகளை நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார்.



ஒரு புதிய வெற்றிகரமான முயற்சி இது கண்டிப்பாக holloywood படங்களுக்கு இணயாக இருகும்படி எடுக்க பட்டிருகிறது CG கிராபிக்ஸ் அசத்திஇருந்தால் கண்டிப்பாக ஹாலிவுட் இணையாக வந்திருக்கும் !!!

கிளைமாசில் ஓன்று அந்த யானை இறந்த அதிர்ச்சியால் ஹீரோவும் இறப்பது போல காட்டியிருக்கலாம் அல்லது மலைஜாதி தலைவன் தன் மகளை ஹீரோவின் நிலையை நினைத்து திருமணம் செய்து கொடுத்திருக்கலாம். ரெண்டுமே நடக்கவில்லை. :(

ஒரு அருமையான படம் இது போல் ஒரு படம் இனி வராது. எல்லோரும் கிளைமாக்ஸ் பற்றித்தான் கூறினார்கள். இப்படி அமைத்தது தான் சிறப்பு. இல்லை என்றால் மற்ற படங்கள் போல் இருந்திருக்கும். இவ்வளவு (வித்தியாசமான) சிறப்பாகவும் ஒரு படம் பண்ண முடியாது.

கும்கி - நல்ல படம் பார்த்த மகிழ்ச்சி! நிச்சயம் குழந்தைகளுடன் பார்க்க கூடிய குடும்ப படம் !
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Tamilleader.



4 comments:

Manikandan said...

விமர்சனத்தில ஒரு negative point கூட சொல்லாத நீங்க ஒரு விக்ரமன் !!

RANJITHFLEX said...

NALLA VIMARSANAM

Unknown said...

ippave parkanum pola thonudhu

Anonymous said...

Thanks

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top