சுவையாக வெந்தயக்கீரை ரசம் வைப்பது எப்படி ?

வெந்தயக்கீரை ரசம் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். சமைக்க தேவையான பொருட்களையும், செய்முறை விளக்கத்தையும் எளிமையான முறையில்... நீங்களும் செய்து பாருங்கள்.

வெந்தயக் கீரை ரசம் பசியை தூண்டும், தொண்டை புண்ணை நீக்கும் மருத்துவ குணம் கொண்டது


தேவையானப் பொருட்கள்:-

 • வெந்தயக்கீரை - ஒரு சிறு கட்டு
 • தக்காளி - ஒன்று
 • புளி - நெல்லிக்காய் அளவு
 • மிளகு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
 • பூண்டு - 4 பல்
 • காய்ந்த மிளகாய் - 3
 • மஞ்சள்தூள், பெருங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

 • ஒரு பாத்திரத்தில் தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு, புளிக்கரைசல் சேர்த்துக் கரைத்து கொதிக்க விடவும்.
 • வேறொரு பாத்திரத்தில் சுத்தம் செய்த வெந்தயக்கீரை போட்டு கீரை மூழ்கும் வரை நீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொதிக்கும் ரசத்துடன் சேர்த்துக் கலக்கவும்.
 • மிளகு - சீரகத்தூள் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
 • ரசத்தை கொதிக்க விடக் கூடாது. நுரைத்து வந்தவுடனேயே இறக்கி பரிமாறலாம்.
 • வெந்தயக் கீரை ரசம் பசியை தூண்டும், தொண்டை புண்ணை நீக்கும் மருத்துவ குணம் கொண்டது.
ரசத்தின் பயன்கள் என்ன ? - வைரமுத்து

மிளகு - சுவை அரும்புகள் தூண்டுவது. புரதத்தை உடைத்துச் செரிக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் கொண்டது.

சீரகம் - செரிமானத்திற்கான வயிற்றுச்சுவர்களைச் சரிசெய்வது. மனிதத் தேவைக்கான மெக்னீஷியம் கொண்டது.

பூண்டு - கிருமிகளின் முதல் எதிரி. கொழுப்புகளை உடைப்பது. பக்கவாதம் தடுப்பது. ரத்த அழுத்தம் சீர் செய்யும் செலினியம், கால்சியம், பொட்டாசியம் கொண்டது.

கடுகு - எட்டு மடங்கு உமிழ்நீர் சுரக்க வைப்பது. நல்ல கொழுப்பு உடையது.

மிளகாய் - வைட்டமின் A & C இரண்டும் கொண்டது. ரத்த ஓட்டம் அதிகரிப்பது. ஆண் குறியில் புற்றுநோய் தடுப்பது.

புளி - வயிற்றுக் கோளாறு சரி செய்து, இருதயம் வலிமை செய்வது.

மல்லித் தழை - இரும்புச் சத்து மிக்கது. எலும்புத் தேய்மானம் தடுப்பது.

கறிவேப்பிலை - தோல் தொற்று தடுப்பது. சிறுநீரக வலி நிவாரணியாய்ச் செயல்படுவது. தாதுக்களும் நார்ச்சத்துக்களும் மிக்கது.
Source : Maalaimalar News Paper & Tvrk site.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!2 comments:

Thava Kumaran said...

சமையல் குறிப்போடு வைரமுத்துவின் ஆரோக்கிய குறிப்பும் மிக்க நன்று..முயற்சி செய்து பார்ப்போம்.நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

nice

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top