எனக்கு பிடித்த கமல் பாடிய 10 பாடல்கள்.

தமிழ் படத்துல சொந்த குரலில் பேசி நடிப்பதே சற்று கடினமான விஷயமா இருக்கு. இந்த நிலையில், ஹீரோவே சொந்த குரலில் பாடினால் எப்படி இருக்கும் ?! அவ்வாறு சொந்த குரலில் பாடும் (இப்போதைய) பல தமிழ் நடிகர்களில் முதன்மையானவர் கமலஹாசன்.


நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது பரிசோதனை முயற்சிகளை அவர் தொடர்ந்து செய்துகொண்டுவருகிறவர். அந்த முயற்சியில் தான் சொந்த குரலில் பாடல்களை பாடுவது என்பது. அதில் மிகபெரிய வெற்றியையும் பெரியவர் இவர்.

பல பாடல்களை தனது சொந்த குரலில் பாடியிருந்தாலும் எனக்கு பிடித்து சிறந்த பத்து பாடல்கள் + காணொளியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியே.



1. சிகப்பு ரோஜாக்கள் (1978)
நெகடிவ் ரோல்
பெரிய மூக்கு கண்ணாடி
பெல்பாட்டம் பேன்ட்
பூனை
ரோஜா செடி
பிடித்த பாடல் : நினைவோ ஒரு பறவை


அழகான காதல் பாடலில் இவரது குரலும் மிக இனிமையாக இருக்கும். கோரஸில் வரும் அந்த குரலும் நம்மை வசிகரிக்கும்.



2. விக்ரம் (1986) -
எழுத்தாளர் சுஜாதா
எலிகுகை
அறிவியல் சார்ந்த கிரைம்
தகடு தகடு
டிம்பிள் கபாடிய

பிடித்த பாடல் : கண்ணே தொட்டுக்கவா


அந்த காலகட்டத்தில் SPB அளவுக்கு பாடிய பாடல் இது. ரொம்ப இளமை ததும்பும் குரலில் இந்த காதல் டுயட் பாடல் ரொம்ப பிடிக்கும்.



3. அபூர்வ சகோதரர்கள் (1989) -
இரட்டை வேடம்
அப்பு கமல்
சார் நீங்க எங்கோயோ போயிடீங்க
பாடலில் கிராபிக்ஸ் முகம்
நாகேஷ் வில்லனாக நடித்து
கெளதமி

பிடித்த பாடல் : ராஜா கைய வச்சா



பாஸ்ட் பீட் சாங். சும்மா பட்டையை கிளப்பும் பாடல் இது. காரையும் பெண்ணையும் ஒப்பிட்டு வரும் வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். வாலி சார்....நீங்க இன்றும் என்றும் வாலிப கவினனே.



4. மைக்கேல் மதன காமராஜன் (1990) -
நான்கு விதமான குரல் + நடிப்பு + உடல் மொழி
காமேஸ்வரா
பீம் பாய் பீம் பாய்
வரதகுட்டி நான் இந்த சமையல்கட்டு
திருபு திருபு

பிடித்த பாடல் : சுந்தரி நீயும்



மெலடி பாடல். கேட்க கேட்க என்ன சுகமா இருக்கும்!



5. தேவர் மகன் (1992) -
சிவாஜி சார்
'பங்க'+ அந்த மீசையும்.
குடும்ப பகை

பிடித்த பாடல் : இஞ்சி இடுப்பழகி



தாளம் போடா வைக்கும் ஜோடி பாடல். வார்த்தை உச்சரிப்புகள் அவ்வளவு தெளிவு.



6. சதிலீலாவதி (1995)
கோவை சரளா
சக்திவேல் கவுண்டர் கமலஹாசன் + காமெடி

பிடித்த பாடல் : மாறுகோ மாறுகோ



மூடு வரவைக்கும் பாடல். என்னமா தலைவரு பாடியிருபாரு! அட அட... கிக் ஏறுதே பாடலை கேட்கும் போதே....



7. ஹேராம் (2000)
முத்த காட்சி
சாருக்கான்
காந்தி தத்தா
சரித்திர கால பின்னணி
நீண்ட தலைமுடியுடன் கூடிய கமலின் போடோ

பிடித்த பாடல் : நீ பார்த்த



பியானோவின் இசையோடு கமலின் இனிய குரல் கரையும் இடமெல்லாம் மிக இனிமை.



8. அன்பே சிவம் (2003) - இது வரை நான் பார்த்த படங்களில் என் மனதிலிருந்து நீங்காத இடம் பிடித்த திரைப்படம் "அன்பே சிவம்". தமிழ் திரையுலகில் இந்த படம் தவிர்க்க முடியாதவை. இந்த படத்தை பிடிக்காதவர் யார் இருக்க முடியும்?
யாரும் தொட தயங்கக் கூடிய ஒரு கதை
வித்தியாசமான தையல் முகம்
மாதவனின் காமெடி

பிடித்த பாடல் : யார் யார் சிவம்



இதுவும் ஒரு வகை மெலடி பாடல். பாடலை கேட்ட கேட்ட நம்மையறியாமல் ஒருவித அமைதியான நிலைக்கு வரவைக்கும். இந்த பாடலை பற்றி இன்னும் இறைய சொல்லலாம். எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்.



9. விருமாண்டி (2004)
தூக்குத் தண்டனை
சட்ட மீறல்கள்
திரைகதையை இரண்டு விதமாக சொல்ல்வது
சண்டியர்
ஜல்லிக்கட்டு

பிடித்த பாடல் : உன்னை விட



ஸ்ரேயா கோசலுடன் பாடியிரும் ஒரு காதல் மெலடி பாடல். கவிதையாய் படம் பிடித்திருப்பார்கள்.



10. வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் (2004) - ஆம் ஆண்டு வெளிவந்த சரண் இயக்கத்தில் வெளிவந்த கலகலப்பான காமெடி படம். ஒரு ரவுடி டாக்டரானா என்னவாகும்? படத்த பாருங்க வாய்விட்டு சிரியுங்கள்.
கிரேசி மோகன்
கட்டிபுடி வைத்தியம்
பாப்பு
ரவுடி vs டாக்டர்

பிடித்த பாடல் : கலக்கப் போவது யாரு



குஷியான பாடல். நாம்மையும் ஆடவைபார் இந்த பாடலில். அவ்வளவு புத்துணர்ச்சி இருக்கும் இவரது குரலில்.



இவர் பாடிய பெரும்பாலும் படக்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா தான்.
எனக்கு பிடித்த இந்த பாடல்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



11 comments:

Unknown said...

each songs are all time fav songs me also.....

Kolipaiyan said...

@akila

thanks akila.

புகழேந்தி said...

கண்ணே தொட்டுக்கவா - ஆரம்ப வரிகள் மட்டுமே கமல் பாடியவை. "வனிதாமணி" என்று பாடலை ஆரம்பிப்பது S.P.B.

Kaliraj said...

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி - ஹரிஹரன்.

Unknown said...

super songs..

காரிகன் said...

கமல் பாடும் பாடல்களில் பெரியதாக எதுவும் ஈடுபாடு இல்லாவிட்டாலும் கூட நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த லிஸ்டில் இல்லாத இரண்டு பாடல்களை நான் சிபாரிசு செய்ய விரும்புகிறேன். ஒன்று எல்லோருக்கும் பரிச்சயமான நாயகனின் தென் பாண்டி சீமையிலே, இரண்டாவது இப்போது பலருக்கு தெரிந்திருக்காத பன்னீர் புஷ்பங்களே என்கிற அருமையான பாடல். இது அவள் அப்படித்தான் படத்தில் இடம் பெற்றது. இசை இளையராஜா,

Kolipaiyan said...

நீங்கள் சொல்ல்வது உண்மை தான் நண்பரே. இந்த இரண்டு பாடல்களும் விடுபட்டவைதான்.

Raj said...

ponmanai from the movie o mane mane!

Super song

Raj said...

Muthe Muthamma from Ullasam

Unknown said...

நல்ல பாடலான கம்பன் ஏமாந்தான் missing இதில்

Unknown said...

Kamal is perfect.. Doubt.. Kathal mannan

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top