அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
இனிப்பு என்பது அறுசுவைகளிலுள் ஒன்று. வித விதமான இனிப்பு வகைகளை இங்கே உங்களுக்கு தொகுத்து வழக்குவதில் மிக்க மகிழ்ச்சியே !இன்று பார்க்க இருக்கும் இனிப்பு - ஆப்பிளை கொண்டு செய்யப்படும் ஒரு வித்தியாசமான சமையல் ஆப்பிள் ஃபிர்ணி....
என்னென்ன தேவை?
- பாசுமதி அரிசி - 3 டேபிள்ஸ்பூன்,
- பால் - 3 கப்,
- ஆப்பிள் - 1,
- சர்க்கரை - 1 கப்.
எப்படிச் செய்வது?
- பாசுமதி அரிசியை 10 நிமிடங்கள் ஊற வைத்து, பால் விட்டு மிக நைசாக அரைக்கவும்.
- ஆப்பிளை தோல் சீவி, சிறு துண்டுகளாக வெட்டவும். மேலே அலங்கரிக்க கொஞ்சம் தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதியை அரைக்கவும். (நைசாக அரைக்க வேண்டாம்).
- அடி கனமான பாத்திரத்தில் பாசுமதி அரிசி விழுது, பால், அரைத்த ஆப்பிள் விழுது, சர்க்கரை சேர்த்துக் கொதித்ததும் இறக்கவும்.
- ஆப்பிள் துண்டுகளை மேலாகச் சேர்த்துப் பரிமாறவும்.
Special Thanks to Dinakaran news paper.
2 comments:
சுவையான இனிப்புப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
Thanks Sister :) I wish you the same. Happy New Year!!!!
Post a Comment