ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் - மலை மலை.
கதை :
பழனிக்குப் பக்கத்து ஊரில் வாழும் பாசமான அண்ணன்-தம்பி நம்ப அருண் விஜய்யும், பிரபுவும். இவர்களின் ஊருக்கு சென்னையிலிருந்து வருகிற நம்ப ஹீரோயின் வேதிகா பார்த்ததும் காதல். ஆனால் வெளியே சொல்லிகொள்ளவில்லை இருவரும். அண்ணனுக்கு பெண் தேடுகிறார் தேடுகிறார், அருண். திருவிழா கம்பு சண்டையில் கஸ்தூரி-யை பார்கிறார் பிரபு. இவரையே திருமண பெண்பார்க்க அழைத்து செல்கிறார் அருண்.
வேதிகாவைத் தேடி சென்னைக்கு வருகிற அருண் ஒரு கூரியர் கம்பனியில் டிரைவராகிறார். பிரகாஷ்ராஜை தற்செயலாக சென்னை வந்ததும் சந்திக்கிறார். போலீஸ் இவரை என்கவுண்டர் செய்ய கார்த்திரும் நிலையில், M.L.A கனவோடு பிரகாஷ்ராஜ் நடத்தும் ஊர்வலத்தில், தெரியாமல் அவரை அடித்து விடுகிறார் அருண். M.L.A சீட் பறிபோன அவமானத்தில் பிரகாஷ் ராஜ் கொலைவெறியோடு அலைகிறார்.
தம்பியை தேடி சென்னை வரும் பிரபு தற்செயலாக கோவிலில் பிரகாஷ் ராஜை சந்திக்கிறார். பிறகு தான் தெரிகிறது இருவரும் சின்ன வயது தோழர்கள் என்று. அருண்-பிரபு உறவு வில்லனுக்கு தெரியவில்லை. அதே போல பிரபு-வில்லன் உறவு ஹீரோவுக்கு தெரியவில்லை.
வில்லன்-ஹீரோ என்ன ஆனார்கள், பிரபு-கஸ்தூரி, அருண்-வேதிகா திருமணம் என்ன ஆனது என்பது தான் மீதி கதை.
இந்த கதை ஒன்றும் புதிது அல்ல. ஏற்கெனவே பலமுறை பார்த்த அதே காதல், மோதல், சென்டிமென்ட், சுபம் கதை தான். ஆனால் சொன்ன விதம், படமாக்கப்பட்ட விதம் விறு விறுப்பு.
படத்தில் எனக்கு பிடித்த,பிடிக்காத சில...
மலை மலை - மசாலா படம்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.

- சந்தாம் - கஞ்சா கருப்பு - ஆர்த்தி - மனோகர் கூட்டணி சிரிப்பால் நம் வயிற்றை பதம் பார்கிறார்கள்.
- ஹீரோ அருண், இந்த படத்தில் சண்டை காட்சிகளில் பட்டையை கிளப்புகிறார்.
- டான்ஸ் - சும்மா பின்னி எடுத்துள்ளார். முன்பு பார்த்த அருணை இதில் பார்க்க முடியாது. நன்றாக உழைத்துள்ளார். பலன் உண்டு.
- பிரபு - கதைகேற்ற நடிப்பை காட்டியுள்ளார். மனுஷன் இதே மாதி இன்னும் எத்தனை படங்களில் தான் நடிப்பாரோ தெரியல?. அவரது மீசையை பார்க்கும்போது அவர் சந்திரமுகியில் சொன்ன வசனம் தான் நினைவுக்கு வந்தது. "என்ன கொடும சார் இது ...!" பெரிய திரையில் பாதி இவரே நிற்கிறார். அவளவு பெரிய உடம்பு. சும்மா புசு புசுனு பார்க்க பயங்கரமா இருக்கிறார்.
- கேமிரா சும்மா புகுந்து விளையாடியுள்ளது
- வேதிகா - அதிகம் நடிப்புக்கு வாய்ப்பு இல்லாத இந்த கதையில் அழகா, ஆடி பாடி நடித்துள்ளார்.
- மணிசர்மாவின் பாடல்கள் - சுமார் ரகம்.
- பிரகாஷ் ராஜ் - அதே வில்லன் வேஷம் + கூட கொஞ்சம் அடிஆட்கள் + ஒரு துப்பாக்கி + கார். பார்க்க அலுப்பு தட்டுகிறது.
- சண்டைக் காட்சிகளில் சைக்கிளில் ஜீப்பைத் துரத்துவதும், வெறுங்காலோடு ஓடி பல மாடி கட்டிடங்களைத் தாவுவதும், பறந்து பறந்து எதிரிகளை தும்சம் செய்வது என ஒரு தெலுகு படம் பார்த்த உணர்வை தருகிறார். குருவி படத்தை நினைவுக்கு வந்தது.
மலை மலை - மசாலா படம்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.
8 comments:
நல்ல விமர்சனம் நண்பா....
நம்ம சிந்தனை செய் விமர்சனம் படிச்சியா?
நன்றி நண்பா...
ஆனாலும் தியேட்டரில் படம் பார்க்கமுடியாது போலிருக்கே?
பிரபாகர்.
for sinthani sei comment....
the movie is gud experiment... if u have free time go and watch sinthanai sei...
abi, you are rocking!!!
இன்று விமர்சனம் தேடினேன் கிடைக்கவில்லை எனவே எதிர்பார்ப்பு இன்றி படத்துக்கு போனேன் ... எனக்கு பிடிச்சி இருந்தது காரணம் படம் போனதே தெரியவில்லை போர் அடிக்கவில்லை. ஆனா ரொம்ப சூப்பர் இல்லை தெரிந்த கதை என்றாலும் அருன்க்கு தான் போனேன் தொடர்ந்து முயற்சி செய்யும் மனம். படத்தில் அவரது உழைப்பு குறிப்பா கம்பு சுத்துவது, டான்ஸ் மற்றும் சண்டையில் பிச்சுடாரு ... சந்தானம் பிரபுவை கூட கலாச்சி காமெடி செய்துட்டாரு ;)
Thats the true Suresh. Arun performance is too good.
Normally all Arun Vijay's film are good.
But i'm surprising, y he couldn't cum to da top position??
Nice review!!! welldone
Post a Comment