தொப்பை குறைய எளிய பயிற்சி...

முதலில் விரிப்பின் மீது கால்கள் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து வைத்து நீட்டிப் படுத்துக் கொள்ளவும். கால்களுக்குப் பக்கத்தில் கைகள் இரண்டையும் தரையில் ஒட்டி வைக்கவும். பிறகு சுவாசத்தை உள்ளே இழுத்துக் கொண்டே இடுப்பிலிருந்து நெஞ்சுப் பகுதியை தரைலிருந்து தூக்கவும்.

அதே நேரத்தில், கால்களையும் மெதுவாக தரைப்பகுதிலிருந்து தூக்கவும் ஆனால், கால்கள் மடங்கக் கூடாது. புட்டப்பகுதி மட்டும் தரையில் இருக்க வேண்டும். இந்த நிலையில், தரையில் வைத்திருக்கிருந்த கைகளை மேலே தூக்கி தரைக்குக் கிடைமட்டத்தில் கால்களை ஒட்டி நீட்டவும்.

பிறகு மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, கால்களையும், முதுகையும் இறக்கி வைத்து விட்டு மறுபடியும் இப்பயிற்சியை செய்யவும். இப்படி புதியவர்கள் பத்து முறையும் பயிற்சிகள் பழகிய பிறகு 25 முறையும் செய்யலாம் வயிறு காலியாக இருக்கவேண்டும் சாப்பிட்டு விட்டு செய்யக்கூடாது.

காலை எழுந்ததும் காலைக் கடனை முடித்துவிட்டு வெறும் வயிற்றில் செய்வது சரியான முறை. மலம் சிறுநீரை தேக்கி வைத்துக் கொண்டு இப்பயிற்சியை செய்யக் கூடாது.

இப்பயிற்சியினால் ஏற்படும் பலன்கள்......

இப்பயிற்சியினால் வயிற்று உறுப்புகள் நன்கு இறுக்கமடைகின்றன. கால்களும் தொடைகளும் பலம் பெறும். தசை நார்கள் துவண்டு மென்மையாகும். வயிற்றுக்கு இந்த பயிற்சியின் மூலம் நல்ல இரத்த ஓட்டம் ஏற்ப்பட்டு.

அதனால் உண்ட உணவு நான்கு ஜிரணமாகிறது. வயிறு நசுக்கப்படுவதால் வயிற்றுக்குள் இருக்கும் கழிவுப் பொருட்கள் அவ்வப்போது வெளித்தப்படுகிறது. இதனால் வயிற்றுக்குள் புழு பூச்சிஉருவாகது. இப்பயிற்சி செய்வோருக்கு தொந்தி உருவாகாது. ஏற்கனவே தொந்தி இருந்தாலும் அது கரைந்து விடும்.

பெண்கள் இந்தப் பயிற்சியை செய்தால் வயிற்றிலுள்ள கொழுப்பு குறையும். இடுப்பு சிறுக்கும். முதுகில் தேவையில்லாத சதைகள் குறையும். பெண்கள் உடலை இளமையோடு வைத்திருக்க இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால் போதுமானது.

வாயுக் கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றைப் போக்குவதற்கான சிறந்த பயிற்சி இது. சிறு குடலுக்கு பக்கவாட்டில் நான்கு அழுத்தம் கொடுப்பதால், ஜீரண சக்தி அதிகரிக்கிறது. சிறுநீரகங்கள் நன்கு செயல்பட உதவுகிறது. தொப்பையை குறைத்து , வயிற்றுப் பகுதி தசைகளை உறுதியாக்குகிறது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : maalaimalar.com0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top