Showing posts with label திரைபடங்கள். Show all posts
Showing posts with label திரைபடங்கள். Show all posts

600 படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்த நடிகர் பிரேம் நசீர்


பல தமிழ்ப் படங்களில் நடித்த மலையாள நடிகர் பிரேம் நசீர். மொத்தம் 600 படங்களில் கதாநாயகனாக நடித்து சாதனை படைத்தார். இது அகில உலகிலும் யாரும் செய்யாத சாதனை என்று, "கின்னஸ்" புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

அறிமுகம்

மலையாளப் பட உலகில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் நடிகர் பிரேம் நசீர். பிரேம் நசீர் தனது உணர்ச்சி பூர்வ நடிப்பால் ரசிகர்கள் உள்ளத்தை கவர்ந்தவர். தமிழ்ப் படங்களிலும் நடித்து பிரபலமானவர். தமிழில் 30 படங்களிலும், 600-க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களிலும் பிரேம் நசீர் நடித்தார்.

கின்னஸ் சாதனை

600 படங்களில் கதாநாயகனாக நடித்த முதல் நடிகர் என்ற முறையில் பிரேம் நசீர் "கின்னஸ்" சாதனை படைத்தார்.

பிரேம்நசீர், A.K.வேலன் தயாரித்த "தைப்பிறந்தால் வழி பிறக்கும்" என்ற படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகில் அறிமுகமானார். S.S.ராஜேந்திரனுடன் பிரேம் நசீர், ராஜசுலோசனா, N.M.ராஜம் நடித்தார்கள். இது 100 நாள் வெற்றிப்படம்.

அந்த படத்தைத் தொடர்ந்து பிரேம்நசீர்- சவுகார் ஜானகி நடித்த "நல்ல இடத்து சம்பந்தம்" பிரேம்நசீர்- பண்டரிபாய் நடித்த "நான் வளர்த்த தங்கை" மற்றும் "பெரிய கோவில்" படங்கள் வெளிவந்தன.

1959, 1960-ம் ஆண்டுகளிலும் பிரேம் நசீர் நான்கு, ஐந்து தமிழ்ப் படங்களில் தோன்றினார். அதில் குறிப்பிடத்தக்கவைகளில் ஒன்று S.S.ராஜேந்திரனுடன் மீண்டும் சேர்ந்து நடித்த "கல்யாணிக்கு கல்யாணம்" என்ற படமாகும்.

மேலும் தேவிகா, பாலாஜியுடன் இணைந்து நடித்த "சகோதரி", நடிகை ராகினிக்கு ஜோடியாக நடித்த "இருமனம் கலந்தால் திருமணம்", நடிகவேள் M.R.ராதாவுடன் நடித்த "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" ஆகிய படங்களும் வெளிவந்தன.


பிரேம் நசீர் கதாநாயகனாக நடித்த மற்றொரு சிறந்த படம் "வண்ணக்கிளி" என்று சொல்லலாம். மாடர்ன் தியேட்டர்ஸ் T.R.சுந்தரம் இந்தப் படத்தை தயாரித்தார். T.R.ரகுநாத் டைரக்ட் செய்தார். பிரேம் நசீருடன் T.R.ராமச்சந்திரன், R.S.மனோகர் மற்றும் P.S.சரோஜா, மைனாவதி, முத்துலட்சுமி, M.சரோஜா, C.S.சரசுவதி ஆகியோரும் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற "அடிக்கிற கைதான் அணைக்கும்" என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன்...

மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய பிரேம் நசீர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் சில படங்களில் சேர்ந்து நடித்தார். "பாலும் பழமும்", "முரடன் முத்து" ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்கள்.

1964-க்குப் பிறகு மலையாள பட உலகில் அதிக வாய்ப்புகள் குவிந்ததால் பிரேம் நசீர் தமிழ்ப்பட நடிப்பை குறைத்துக் கொண்டார். சென்னை நகரில் அவர் அதிகம் தங்கி இருப்பதையே வாடிக்கையாக கொண்டிருந்தார்.

அரசியல் கட்சி தொடக்கினார்

M.G.R, N.T.ராமராவ் திரை உலகில் இருந்து அரசியலில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டினார்கள். அவர்களை பின்பற்றி மலையாள ரசிகர்களிடம் பிரபலமாக விளங்கிய பிரேம் நசீரும் அரசியல் கட்சி தொடங்கினார். ஆனால் கேரளத்து மக்கள் அவரை ஒரு சிறந்த நடிகர் என்ற கண்ணோட்டத்தில்தான் பார்த்தார்களே தவிர அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பிரேம் நசீரின் அரசியல் பிரவேசம் வெற்றி பெறவில்லை.

உடல்நலக் குறைவு - மரணம்

பிரேம் நசீருக்கு 1988-ம் ஆண்டு டிசம்பரில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் சிகிச்சையால் அவரை காப்பாற்ற இயலாமல் போயிற்று. 16-1-1989 அதிகாலை அவர் மரணம் அடைந்தார்.

அவரது மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் உடன் இருந்தனர். பிரேம் நசீர் உடலுக்கு தமிழ்த்திரை உலக நடிகர்- நடிகைகள், பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு அவரது உடல் விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

சகாப்தம் முடிவு

காங்கிரஸ் தலைவர் A.K.அந்தோணி, மந்திரிகள் பாலகிருஷ்ணன், நீலயோகிதாசன் நாடார், நடிகர் மம்முட்டி ஆகியோர் மரியாதை செலுத்தினர். அதன்பிறகு பிரேம் நசீர் உடல் சொந்த ஊரான சிறையின் கீழு என்ற இடத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மலையாள பட உலகின் ஒரு சகாப்தம் முடிவடைந்தது.

பிரதமர் ராஜீவ் காந்தி இரங்கல்

நடிகர் பிரேம் நசீர் மறைவுக்கு பிரதமர் ராஜீவ் காந்தி இரங்கல் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட செய்தியில், "பிரேம் நசீர் திரை உலகில் நீண்ட காலமாக புகழ் பெற்று விளங்கிய சிறந்த நடிகர். மனித உணர்ச்சிகளை நடிப்பின் மூலம் நயம்பட வெளிப்படுத்தியவர். அவர் மறைவினால் தேசம் ஒரு சிறந்த நடிகரை இழந்து விட்டது. நாட்டு மக்கள் தங்கள் இதயம் கவர்ந்த ஒருவரை இழந்துவிட்டார்கள்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, திரைப்பட தயாரிப்பாளர்கள் பலரும் அனுதாப செய்தி வெளியிட்டு இருந்தார்கள்.

கேரளா திரையுலகினர் இன்றளவும் இவரது படங்களிலிருந்து எதாவது ஒரு தகவலை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



2012-இல் எனக்குப்பிடித்த 10 படங்கள்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!


2012-இல் வெளிவந்த  தமிழ் திரைப்படங்களில் எனக்குப்பிடித்த 10 படங்கள்.
1. துப்பாக்கி - விஜயின் கலக்கல் நடிப்பில் அசத்திய படம். எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றிய படம். பாடல்கள் தான் குறை.


2. நடுவுல கொஞ்சம் கக்கத்த காணோம் - குறித்த கதா பத்திரம் - நிறைவான நடிப்பு. என் குடுபத்தார் அனைவரும் விரும்பி அடிகடி பார்த்த படம் இது. படம் முழுவது சிரிப்பு தான். கூடவே கொஞ்சம் மிரட்டல்.


3. நான் ஈ - அசால்ட்ட மிகபெரிய வெற்றி பெற்ற படம். குழந்தை முதல் பெரியவர் வரை திரைக்கு வந்து பார்க்க வைத்த படம். சுதிப்பின் மிரட்டல் நடிப்பு + ஈ இன் பழிவாங்கல் அனைவரையும் ரசிக்கவைத்தது.


4. சுந்தரபுருஷன் - குடுப்பதுடன் பார்த்த படம். பெண்களை கவரகூடியவகையில் திரைகதை. கலகலப்பா போகும் கதையில் இறுதியில் பல திருப்பங்கள். பாடல்கள் மிரபெரிய பலம்.


5. பீட்சா - இப்படியும் படம் எடுக்கலாம் என்று பெரிய இயக்குனர்களுக்கு சவால் விட்ட படம். படம் முழுவது நம்மையறியாமல் கதையுடனே பயணிப்பது இதன் சிறப்பு. அருமையான சஸ்பென்ஸ்  படம்.

6. கலகலப்பு - சுந்தர் சி சொல்லி அடித்த காமடி படையல். சந்தானம் ஒரு ஹீரோ போல இதில் தொலித்திருப்பார். வயிறு குலுங்க சிரிக்க இந்த படம் 100% கியாரண்டி . 


7. கும்கி - பட குழுவினரின் உழைப்பு தெரிந்துகொள்ள இந்த படம் ஒரு சாம்பிள். இயற்கையின் அழகாய் + அழகான இசையுடன் பார்க்கும்போது வரும் மனமகிழ்ச்சியே தனிதான். வித்தியாசமான கதை காலத்தில் சொல்லி அடித்த வெற்றி படம்.


8. ஒரு கல் ஒரு கண்ணாடி - உதயநிதி கதாநாயனாக அறிமுகமான படம். சந்தானம்  தான் இதில் ஹீரோ. முழு நீள காமெடி படம். பாடல்கள் பெரிய பலம்.


9. நான் - விஜய் அன்டனி கதாநாயனாக அறிமுகமான படம். நல்ல சஸ்பென்ஸ்  படம். வித்தியாசமான திரைகதை.

10. வழக்கு என்ன : 18/9 - பாலாஜி சக்திவேல் தன்னை மீண்டும் ஒரு நல்ல படைப்பாளி என்று நிருபித்த படம். பலருக்கும் இந்த படம் பிடிக்காமல் போனது ஏன்னு தெரியல. ஆனால் எனக்கும் ரொம்ப படித்த படம்.


இந்த படங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்தை இங்கே சொல்லிட்டு போங்க. மீண்டும் உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Special Thanks to Ranker.com.



காசேதான் கடவுளடா (1972)

முழுநீள நகைச்சுவைத் திரைப்படங்களை அவ்வளவு எளிதில் நம்மால் மறக்க முடியாது. 1972 ஆண்டு வெளிவந்த "காசேதான் கடவுளடா". எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத படம்.


AVM நிறுவனம் தயாரித்த ஒரு முழு நீள நகைச்சுவையுடன் ஒரு நல்ல மெசேஜைத் தந்த படம் "காசேதான் கடவுளடா'. பணம் சேர்ப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, அதைப் பாதுகாப்பதிலேயே கவனமாக இருந்தால்,சொந்தக்காரர்களே அதை அபகரிக்க முயலுவார்கள் என்ற கருத்தை சொல்லும் படம். இல்லை இல்லை பாடம்.

இதில் "நவரசத்திலகம்" முத்துராமன், லக்ஷ்மி, "தேங்காய்" சீனிவாசன், சுருளிராஜன், "ஆச்சி" மனோரமா, "வெண்ணிற ஆடை" மூர்த்தி, எம்.ஆர்.ஆர்.வாசு, ஸ்ரீகாந்த், "டைபிஸ்ட்" கோபு, "பக்கோடா" காதர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை வசனத்தை எழுதிய கோபு, டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றிருந்தார். இசையமைப்பு மெல்லிசைமன்னர்" M.S.விஸ்வநாதன் அவர்கள்.

படத்துக்கு கதை வசனம் எழுதி துவக்கம் முதல் இறுதி வரை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் விதமாக இயக்கி இருந்தார் கோபு. யாரையும் நம்பாத பணக்காரப் பெண்மணியாக மனோரமா, அவரது கணவராக வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா கணவரின் மூத்த தாரத்து மகனாக முத்துராமன், அவரது உறவினராக ஸ்ரீகாந்த், அந்த வீட்டுக்கு வேலை தேடி வரும் பெண்ணாக லட்சுமி, முத்துராமனுக்கு தனது பைத்தியக்காரப் பெண்ணை மணமுடிக்க வந்து வீட்டில் டேரா அடிக்கும் எம்.ஆர்.ஆர்.வாசு, அவரது பைத்தியக்காரப் பெண்ணாக ரமாபிரபா ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர்.


கோடி, கோடியாகப் பணம் இருந்தும் மூக்குப் பொடிக்காக கண்டவர்களிடமும் 25 பைசா கேட்கும் பாத்திரத்தில் மூர்த்தியும், பணம் கிடைக்காத காரணத்தால் பாதாள அறையில் இருக்கும் பணத்தை அபகரிக்க முத்துராமனும், ஸ்ரீகாந்தும் போடும் திட்டங்களும், அதை நிறைவேற்ற டீக்கடைக்காரர் தேங்காய் சீனிவாசனை சாமியார் வேடத்தில் வீட்டுக்கு வரவழைத்து அவர்கள் அடிக்கும் லூட்டியும் சிரித்து, சிரித்து வயிற்றை வலிக்கச் செய்யும் நகைச்சுவையாகும்.

மெட்ராஸ் பாஷை பேசும் தேங்காய் சீனிவாசன், சாமியார் பாஷை பேசத் திணறுவதும், முத்துராமனும், ஸ்ரீகாந்தும் அதை எடுத்துக் கொடுப்பதும் சிறந்த காமெடி. மேலும் டைப்பிஸ்ட் கோபு, எஸ்.ராமாராவ், சுருளிராஜன், சசிகுமார், ஜெய்குமாரி எனப் பலரும் சிறப்பாக நடித்திருந்தனர்.


நடனமாட வைக்கும் பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவற்றுக்கு இனிமையான, அருமையான இசையை வடித்தார்.
"மெல்லப் பேசுங்கள் பிறர் கேட்கக்கூடாது
சொல்லித்தாருங்கள் யாரும் பார்க்கக்கூடாது'

"ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
வாயுலிங்கமே மகாதேவா பஞ்சலிங்கமே மகாதேவா'

"இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா'

"ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரையில் காசேதான் கடவுளடா
அடிபட்டு மிதிபட்டு தெரிஞ்சுக் கிட்டேன்டா காசேதான் கடவுளடா'
- ஆகிய இந்த அருமையான பாடல்களைப் படமாக்கியிருந்த விதம் அனைவரையும் கவர்ந்தது.

பெரிய நடிகர்கள் இல்லாமல் நகைச்சுவையை மட்டும் பிரதானமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட "காசேதான் கடவுளடா' படத்துக்கு ரசிகர்களின் பேராதரவு கிட்டத் தவறவில்லை. இப்போது பார்த்தாலும் தொய்வு இன்றி ரசித்து சிரிக்கவைக்கும் படம் "காசேதான் கடவுளடா'.

படத்தில் லட்சுமி ரொம்பவும் வெள்ளந்தியாகச் சொன்ன ஜோக்.

தே.சீனிவாசன்: "மங்களம்! மங்களம்!"

லட்சுமி: "சுவாமி ஏன் அடிக்கடி 'மங்களம் மங்களம்' என்று சொல்கிறார்?"

வெ.ஆ.மூர்த்தி & முத்துராமன்:"அதாவது மங்களம் உண்டாகட்டும் என்று சுவாமி சொல்கிறார்".

லட்சுமி: "அடுத்தவீட்டு மங்களம் ஏற்கனவே உண்டாகிட்டதாச் சொன்னாங்களே?"


தேங்காய் சீனிவாசனை எடுத்துக்கொண்டால் உடனே ஞாபகம் வருவது காசேதான் கடவுளடா படம்தான். முத்துராமனுடன் இவர் சாமியார் கெட்டப்பில் அடிக்கும் லூட்டிகள் அருமையானவை. 'அதே.. அதே..' என இவர் ஒவ்வொரு காட்சிக்கு சொல்வதும் அதிரடி சிரிப்பு.

தேங்காய் ரோலுக்கு முன் முத்துராமன் ரோலே சிறியதுதான்.

இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற "ஜம்புலிங்கமே ஜடாதரா.." என்ற பாடலைப் எங்கவாது பார்க்க நேரும்போது அடக்க முடியாத சிரிப்பு வந்துவிடும். வாலியின் கவிவண்ணத்தில் பாடல் அவ்வளவு சிரிப்பு.

க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க... கலாட்டா அதிகமாகிக்கொண்டே போக, அனைவரும் நகைச்சுவையில் புரட்டி எடுத்தார்கள். வயிறுவலிக்க சிரித்துப்பார்த்த படமான இதுவும் என் ஃபேவரைட்.

கட்டாயம் இந்தத் திரைப்படத்தை முழுமையாக பாருங்கள். சிரிப்புக்கு 100% உத்திரவாதம் உண்டு.!!!

Thanks : பா.காசிவிஸ்வநாதன்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



தமிழக "ஜேம்ஸ்பாண்ட்" ஜெய்சங்கர்

தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட் :

மேல்நாட்டு "ஜேம்ஸ்பாண்ட் 007" பாணி படங்களில் சிறப்பாக நடித்ததால், "தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட்" என்று அழைக்கப்பட்டவர் நடிகர் ஜெய்சங்கர். குறுகிய காலத்தில் 300-க்கு மேற்பட்ட படங்களில் நடித்தார்.

சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் பெயரை முன்சேர்த்து ஜெய்சங்கர் என்று அழைக்கப்பட்டார்.

முதல் அறிமுகம் :

சென்னையைச் சேர்ந்த ஜெய்சங்கர், விவேகானந்தா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது கல்லூரி யூனியன் செயலாளராக இருந்தார். அப்போது கல்லூரியில் கலை நிகழ்ச்சி, கரகாட்டம் போன்றவைகளுக்கு ஏற்பாடு செய்து திறம்பட நடத்தினார்.

பின்னர் முதன் முதலாக 'மேக்-அப்' போட்டு "காதலுக்கு மருந்து" என்ற நாடகத்தின் மூலம் மேடை ஏறினார். இது எழும்பூர் மியூசியம் தியேட்டரில் நடைபெற்றது.

முதல் வெற்றி திரைப்படம் - இரவும் பகலும் :

அந்த காலகட்டத்தில் டைரக்டர் ஜோசப் தளியத் தன்னுடைய புதிய படத்திற்காக புது முகங்களை தேடிக்கொண்டிருந்தார். இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பா. இவரை (ஜெய்சங்கர்) தளியத்திடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர் எடுத்த எடுப்பிலேயே ஜெய்சங்கருக்கு கதாநாயகன் வேடம் கொடுத்தார். "இரவும் பகலும்" என்ற படத்தின் மூலம் ஜெய்சங்கர் திரை உலகில் அறிமுகம் ஆனார். இந்தப் படம் 1965-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளிவந்தது.
ஜெய்சங்கர் ஜோடி வசந்தா. முதல் படமே ஜெய்சங்கருக்கு பெயர் சொல்லும்படி அமைந்தது.

இரவும் பகலும் படத்தை தொடர்ந்து "நீ", "எங்க வீட்டுப் பெண்", "பஞ்சவர்ணக்கிளி" (இதில் ஜெய்சங்கர் இரு வேடங்களில் நடித்தார்). "குழந்தையும் தெய்வமும்" ஆகிய படங்கள் வெளிவந்தன.

ஜெயலிதாவுடன் நடித்த ஜெய்சங்கர் :

"நீ" படத்தில் ஜெயலலிதாவும், "குழந்தையும் தெய்வமும்" படத்தில் ஜமுனாவும் கதாநாயகிகள். ஏவி.எம். நிறுவனம் தயாரித்த "குழந்தையும் தெய்வமும்" 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படம்.

திரை உலகில் காலடி எடுத்து வைத்த முதல் ஆண்டிலேயே ஜெய்சங்கருக்கு அதிர்ஷ்ட சக்கரம் சுழல ஆரம்பித்தது. மேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜேம்ஸ்பாண்ட் படங்களின் பாணியில், 1966-ல் "மாடர்ன் தியேட்டர்ஸ்" தயாரித்த "இரு வல்லவர்கள்", "வல்லவன் ஒருவன்" ஆகிய படங்களில் ஜெய்சங்கர் சிறப்பாக நடித்தார். அதனால், தமிழ்நாட்டு ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்பட்டார்.

இதே ஆண்டில், "காதல் படுத்தும் பாடு", "கவுரி கல்யாணம்", "நாம் மூவர்", "யார் நீ" (பி.எஸ்.வீரப்பா தயாரித்தது) ஆகிய படங்களிலும் ஜெய்சங்கர் நடித்தார்.

அதற்கு அடுத்த ஆண்டில், ஜெய்சங்கர் நடித்து 9 படங்கள் வெளிவந்தன. "காதலித்தால் போதுமா", "சபாஷ் தம்பி", "நான் யார் தெரியுமா?", "பட்டணத்தில் பூதம்", "பவானி", "பெண்ணே நீ வாழ்க", "பேசும் தெய்வம்", "பொன்னான வாழ்வு", "முகூர்த்த நாள்" ஆகியவை அவை.

ஜெய்சங்கருடன் கே.ஆர்.விஜயா இணைந்து நடித்த "பட்டணத்தில் பூதம்" பெரிய வெற்றி படமாகும். ஜாவர் சீதாராமன் இப்படத்திற்கு வசனம் எழுதியதுடன் "பூதம்" வேடத்திலும் தோன்றினார்.
1968-ம் ஆண்டில் "அன்புவழி", "உயிரா மானமா", "சிரித்த முகம்", "டீச்சரம்மா", "தெய்வீக உறவு", "நீலகிரி எக்ஸ்பிரஸ்", "நேர்வழி", "பால்மனம்", "புத்திசாலிகள்", "பொம்மலாட்டம்", "முத்துசிப்பி", "ஜீவனாம்சம்" ஆகிய 12 படங்கள் ஜெய்சங்கர் நடித்து வெளிவந்தன.

15 படங்களில் நடித்து சாதனை :

தொடர்ந்து சில ஆண்டுகள் வருடத்துக்கு முக்கால் டஜன் படங்களை தந்த ஜெய்சங்கர் 1972-ம் ஆண்டில் மட்டும் 15 படங்களில் நடித்து சாதனை படைத்தார். குறுகிய காலத்திலேயே நூறு படங்களை கடந்தார்.

சிவாஜிகணேசனுடன் ஜெய்சங்கர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். எம்.ஜி.ஆருடனும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மலர்ந்தது. ஆனால் அந்த படம் வளரவில்லை.

இவரது சமகால நடிகர்களான முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோருடனும் இவர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

நூறு படங்களுக்கும் மேல் தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்த ஜெய்சங்கர் பிறகு வில்லன் வேடத்தையும் ஏற்று அதனை சிறப்பாக செய்தார்.

வெள்ளிக்கிழமை நாயகர் :

ஜெய்சங்கர் சண்டைப் படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், குடும்பக்கதைகளிலும் அதிகம் நடித்து பெயர் வாங்கினார். பல திரைப்படங்களில் துப்பறிபவராகவும், காவலராகவும் வேடம் ஏற்று நடித்ததால் இவரை தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் எனவும் தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் எனவும் ரசிகர்கள் அழைத்தனர்.

இவர் பற்பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால், இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததன் காரணமாக இவர் 'Friday hero' (வெள்ளிக்கிழமை நாயகர்) எனவும் அழைக்கப்பட்டார்.

முதல் வில்லன் வேடம் :

அந்த வேடத்தில் தோன்றிய முதல் படம் "முரட்டுக்காளை". குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த "முரட்டுக்காளை", "பாயும்புலி", "துடிக்கும் கரங்கள்" போன்ற படங்களில் ஜெய்சங்கர் வில்லன் வேடம் ஏற்றார்.

குணசித்திர வேடம் :

ஏராளமான படங்களில் குணசித்திர வேடங்களை ஏற்றும் நடித்தார். மொத்தத்தில் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் ஜெய்சங்கர்.

உடல் நலம் குறைவு :

62-ஆம் வயதில் நடிகர் ஜெய்சங்கர் 2000-ம் ஆண்டு மே மாதம் குவைத் சென்றிருந்தார். அங்கு அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். உடல் நலம் தேறி ஒரு வாரத்தில் வீடு திரும்பினார்.

நடிகர் மறைவு :

மீண்டும் அவருக்கு ரத்த அழுத்தம் குறையவே நினைவு இழந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜெய்சங்கர் 3-6-2000 அன்று இரவு மரணம் அடைந்தார்.
முதல்- அமைச்சர் கருணாநிதி, த.மா.கா. தலைவர் மூப்பனார், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், குமரி அனந்தன், திருநாவுக்கரசர், நடிகர்கள் சிவாஜிகணேசன், கமலஹாசன், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், சிவகுமார், நெப்போலியன் உள்பட நடிகர், நடிகைகள், பட அதிபர்கள் ஜெய்சங்கர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

ஜெய்சங்கர் உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

ஜெய்சங்கர் குடுப்பம் :

ஜெய்சங்கரின் மனைவி பெயர் கீதா. சஞ்சய், விஜய் என்ற 2 மகன்கள். சங்கீதா என்ற மகள். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

Thanks : Maalaimalar
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



2011 ம் ஆண்டு வெளிவந்த திரை படங்கள்!

கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிக படங்கள் திரைக்கு வந்தன. எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாள டப்பிங் படங்களையும் சேர்த்து 190 படங்கள் ரிலீசாகி இருக்கின்றன. இவற்றில் கவனம் ஈர்த்த படங்கள் மிகச் சொற்பமே.

இங்கு வெளியாகியிருக்கும் படங்கள், தர வரிசையிலோ அல்லது ரிலீஸ் தேதியை அடிப்படையாகக் கொண்டதோ அல்ல.

நேரடி தமிழ் படங்கள் :-


1) தமிழ் தேசம்
 2) சிறுத்தை
 3) ஆடுகளம்
 4) சொல்லித்தரவா
 5) இளைஞன்
 6) காவலன்
 7) பதினாறு
 8) பழகியதே பிரிவதற்கா
 9) வாடா போடா நண்பர்கள்
10) யுத்தம் செய்
11) தூங்கா நகரம்
12) கருவறைப் பூக்கள்
13) வர்மம்
14) பயணம்
15) இது காதல் உதிரும் பருவம்
16) நந்தி
17) தம்பிக்கோட்டை
18) காதலர் குடியிருப்பு
19) ஆடுபுலி
20) மார்கழி 16
21) தப்பு
22) சீடன்
23) ஆரானின் காவல்
24) சிங்கம் புலி
25) பவானி
26) அய்யன்
27) ஐவர்
28) அவர்களும் இவர்களும்
29) மின்சாரம்
30) முத்துக்கு முத்தாக
31) லத்திகா
32) குமரா
33) சட்டப்படி குற்றம்
34) குள்ளநரி கூட்டம்
35) சிங்கையில் குருஷேத்திரம்
36) படைசூழ
37) அப்பாவி
38) இதயத்தில் ஒருவன்
39) தென்காசி பக்கத்துல
40) நஞ்சுபுரம்
41) பொன்னர் சங்கர்
42) தேவதாசியின் கதை
43) விகடகவி
44) கோ
45) காதல் மெய்ப்பட
46) வானம்
47) பூவா தலையா
48) பாசக்கார நண்பர்கள்
49) எங்கேயும் காதல்
50) நர்த்தகி
51) சங்கரன் கோவில்
52) அழகர்சாமியின் குதிரை
53) கண்டேன்
54) மைதானம்
55) சுட்டும் விழி சுடரே
56) சபாஷ் சரியான போட்டி
57) எத்தன்
58) ஒரு சந்திப்பில்
59) ஆண்மை தவறேல்
60) சாந்தி அப்புறம் நித்யா
61) ஒத்தையடி வீரன்
62) ஆரண்ய காண்டம்
63) அவன் இவன்
64) பிள்ளையார் தெரு கடைசி வீடு
65) இருளில் நான்
66) நூற்றெண்பது
67) அநாகரீகம்
68) உதயன்
69) திருட்டு புருஷன்
70) சின்னஞ்சிறுசுகள்
71) தேநீர் விடுதி
72) வேங்கை
73) தெய்வத்திருமகள்
74) காஞ்சனா
75) மார்கண்டேயன்
76) வெப்பம்
77) கருங்காலி
78) போடிநாயக்கனூர் கணேசன்
79) போட்டா போட்டி
80) ராமநாதபுரம்
81) டூ
82) சுசி அப்படித்தான்
83) ரௌத்திரம்
84) உயர் திரு 420
85) சகாக்கள்
86) கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை
87) வெங்காயம்
88) முதல் இடம்
89) மிட்டாய்
90) உன்னை கண் தேடுதே
91) புலிவேஷம்
92) யுவன் யுவதி
93) காசேதான் கடவுளடா
94) மதிகெட்டான் சாலை
95) எங்கேயும் எப்போதும்
96) வந்தான் வென்றான்
97) ஆயிரம் விளக்கு
98) வாகை சூட வா
99) வேலூர் மாவட்டம்
100) வர்ணம்
101) ரா ரா
102) சதுரங்கம்
103) முரண்
104) காதல் அல்ல அதையும் தாண்டி
105) உயிரின் எடை 21 அயிரி
106) கீழத்தெரு கிச்சா
107) 7ஆம் அறிவு
108) வேலாயுதம்
109) காதல் கொண்ட மனசு
110) ஆயுதப் போராட்டம்
111) திகட்டாத காதல்
112) தம்பி வெட்டோத்தி சுந்தரம்
113) நான் சிவனாகிறேன்
114) கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்
115) வித்தகன்
116) மருதவேலு
117) மயக்கம் என்ன
118) பாலை
119) ஒத்திகை
120) போராளி
121) குருசாமி
122) வெண்மணி
123) ஒஸ்தி
124) மம்பட்டியான்
125) உச்சிதனை முகர்ந்தால்
126) மௌனகுரு
127) ராஜபாட்டை
128) மங்காத்தா

மலையாளம் டூ தமிழ்

1) அன்வர்
2) தாரம்
3) அன்புள்ள கமல்
4) இது ஒரு காதல் கதை

தெலுங்கு டூ தமிழ்

1) ஊடல்
2) ராக்கி
3) ஓம் சக்தி
4) கவர்ச்சி பந்தயம்
5) காமேஸ்வரி
6) மாவீரன்
7) வம்பு
8) சிங்க கோட்டை
9) பத்ரா
10) 8ம் நம்பர் வீடு
11) டேஞ்சர்

ஆங்கிலம் டூ தமிழ்

1) அசுர வேகம் (ஸ்பீட் 2012)
2) பிளேடு ஆப் தி ரோஸ்
3) சீசர் ஆப் தி வேலஸ் (சூனியக்காரி)
4) மெக்கானிக்
5) டிரைவ் ஆங்கிள்
6) ஆயிரம் பூச்சிகள்
7) டிஸ்ட்ரிக்-9
8) 2011
9) வஜ்ர வீரன் ஓங்பேக்-3
10) டைட்டானிக்-3
11) உலோக மனிதன்
12) பாஸ்ட் அன்ட் பியூரியஸ்
13) பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்ஸ்
14) புயல் வீரன்( தி ஸ்டோர்ம் வாரியர்ஸ்)
15) லிட்டில் பிக் சோல்ஜர்
16) எக்ஸ்மேன் பர்ஸ்ட் கிளாஸ்
17) கிரீன் வார்னர்ஸ் மகா சக்திமான்
18) டிரான்ஸ்பார்மர்-3
19) ஹாரிபாட்டர்-7
20) கவ்பாய் ஏலியன்ஸ்
21) ரைஸ் ஆப் தி ஏப்ஸ்
22) மரண வேட்டை
23) சுட்டி உளவாளிகள்
24) ஏலியன்ஸ் வெர்சஸ் அவதார்
25) வேங்கையின் வேட்டை
26) மிட் நைட் மர்டர்
27) மூன்று மாவீரர்கள்
28) ரியல் ஸ்டீல்
29) சூப்பர்-8
30) பிளிட்ஸ்
31) அழிக்க முடியாதவர்கள்
32) ராஜநாகம்
33) மிஷன் இம்பாஸிபிள்
34) வேதாளம்-2
35) வாரியர்
36) தி கிரீன் ஹார்ட்

இந்தி டூ தமிழ்

1) மின்சார காதலி
2) அவன் அவள் அது
3) தோர்
4) அரங்கேற்ற நாள்
5) லவ் டாட் காம்
6) இது காதல்  கதை அல்ல
7) இளவரசி
8) டிவைன் லவ்வர்ஸ்
9) ஆசான்
10) ரா ஒன்
11) தி டர்ட்டி பிக்சர்ஸ்
12) டான் 2

Thanks : http://www.dinakaran.com
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



Related Posts with Thumbnails
 
back to top