உலக சாதனை முறியடித்தார் சேவாக்!
இந்தூரில் நடத்த மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் 200 ரன்களை கடந்த 2 வீரராகவும், அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் முதல் வீரராகவும் இந்திய வீரர் ஷேவாக் சாதனை படைத்துள்ளார். ஷேவாக் 219 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகினார்.சிக்ஸர் மழை!!!
அணித் தலைவராக களம் இறங்கி ரன்களைக் குவித்த சேவாக், 149 பந்துகளில் 25 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடித்து 219 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
சச்சினின் உலக சாதனையை முறியடித்தார் சேவாக்!
முன்னதாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்திருந்தார். ஒருநாள் போட்டியில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரான சச்சினின் 200* ரன்கள். வீரேந்திர சேவாக் அந்த சாதனையை முறியடித்துள்ளார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த சச்சினின் 200 ரன்கள் என்ற சாதனை முறியடித்தார் ஷேவாக்.
இந்திய அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர்
இந்திய அணி 400 ரன்களைக் கடப்பது இது நான்காவது முறையாகும். ஒரு நாள் அரங்கில் இந்திய அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட்களை இழந்து 418 ரன்களை எடுத்திருந்தது.
சேவாக் ருத்ர தாண்டவம்!!!!
இன்று போட்டி நடப்பதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த சேவாக், தனது அதிரடி ஆட்டத்தை காட்ட நேரம் வந்துவிட்டது என்று கூறினார். அதே போல், இன்றைய ஆட்டத்தில் அவர் ருத்ர தாண்டவம் ஆடினார். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சேவாக்கிற்கு எந்த பக்கம் பந்துவீசுவது என்று தெரியாமல் திணறினர். Well done Sehwag!!!!உலக சாதனை முறியடித்த சேவாக்கிற்கு இந்த கிரிக்கெட் ரசிகனின் வாழ்த்துக்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
3 comments:
சேவாக் சாதனை செய்ததும் ஒருபுரம் இருந்தாலும் சச்சின் சாதனை முறியடிக்கப்பட்டது வேதனையாக இருக்கிறது...
உலக சாதனை முறியடித்த சேவாக்கிற்கு வாழ்த்துக்கள்!!!
@இராஜராஜேஸ்வரி & Philosophy Prabhakaran :
வருகைக்கு நன்றி!
Post a Comment