ஆப்பிள் பழம் தினம் ஒன்று சாப்பிடுங்கள். "மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை என்பது ஆன்றோர் வாக்கு". An Apple a day keeps the doctor away. ஆப்பிள் கொண்டு செய்யப்படும் பணியாரம், ஆப்பிள் சாலட்கள், ஆப்பிள் சாறு போன்றவற்றையும் உண்ணலாம். அந்த வரிசையில், ஆப்பிலை வைத்து பக்கோடா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இதோ... அசத்தலான, அருமையான ஆப்பிள் பக்கோடா எப்படி செய்வது என்று பார்ப்போம்...
இதோ... அசத்தலான, அருமையான ஆப்பிள் பக்கோடா எப்படி செய்வது என்று பார்ப்போம்...
தேவையான பொருட்கள் :-
- ஆப்பிள் - 1
- கடலைமாவு - 1/2 கப்
- அரிசி மாவு - 1/4 கப்
- உப்பு - தேவையானவை
- எண்ணைய் - தேவையானவை
செய்முறை :-
- ஆப்பிளை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
- துருவிய ஆப்பிள்,கடலைமாவு,அரிசிமாவு,உப்பு நான்கையும் ஒன்றாக கலந்து பிசைந்து கொள்ளவும்.
- தண்ணீர் வேண்டாம்.ஆப்பிளில் இருக்கும் ஈரத்தன்மையே போதுமானது.
- கடாயில் எண்ணைய் வைத்து பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு பகோடாக்களாக
- போட்டு பொன்னிறமாக வ்ந்ததும் எடுக்கவும்.
- இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சிற்றுண்டி.
1. தேவையான அளவு ஆப்பிள் பழத்தை எடுத்து இட்லி வேகவைப்பது போல் நீராவியில் வேக வைத்து எடுத்துக்கொண்டு தேவையான அளவு தேன் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மூளைக்கு சக்தியளிக்கும். மூளையில் சோர்வு இருக்காது.இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
2. திருமண வயதை எட்டிய நிலையில் உள்ள ஆண்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இந்திரியச் சுரப்பு கூடும்.
3.வறட்டு இருமல் உள்ளவர்கள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இருமல் தீரும். சரியான உடல் வளர்ச்சியும், சதைப் பிடிப்பும் இல்லாதவர்களும் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டால் ஒல்லியான உடல் சீராகப் பருமன் அடைவார்கள்.
2 comments:
எளிமையா இருக்கு வாழ்த்துக்கள்
வருகைக்கு நன்றி நண்பரே!
Post a Comment