மொரு மொரு மீல் மேக்கர் பக்கோடா

மீல் மேக்கர் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். மீல் மேக்கர் புரதச்சத்து மிகுந்தது என்பதால் அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதைக் கொண்டு ருசியான மீல் மேக்கர் பக்கோடா தயார் செய்யலாம்.
Tips :-

மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதிலும் குணப்படுத்துவதிலும் சோயா மொச்சை முதலிடத்தில் இருக்கிறது. இத்துடன் மூன்று மடங்கு வேகத்தில் இதய நோய்களைத் தடுக்கிறது சோயா. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்டுகள் மிகவும் சக்திவாய்ந்தவை.

தினமும் மூன்று மீல் மேக்கர் உருண்டைகள் உணவில் இடம் பெறுவது நல்லது.

தேவையான பொருட்கள் :-

  • மீல் மேக்கர் - 20 உருண்டைகள்,

  • கடலைப் பருப்பு - ஒரு கப்,

  • சின்ன வெங்காயம் - 10,

  • பச்சை மிளகாய் - 2,

  • தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி,

  • மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி,

  • பிரெட் ஸ்லைஸ் - 3,

  • எலுமிச்சை சாறு - ஒரு மேஜைக்கரண்டி,

  • இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி,

  • பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி,

  • கொத்துமல்லித் தழை - சிறிதளவு,

  • எண்ணெய் - தேவையான அளவு,

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை :-

  • மீல் மேக்கரை கொதி நீரில் போட்டு, ஐந்து நிமிடம் கழித்து அதை பிழிந்து, பின் பச்சை தண்ணீரில் அலசி, மிக்சியில் அடித்து உதிர்க்கவும்.

  • கடலை பருப்பை ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.

  • வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயம், தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு விழுதை லேசாக வதக்கவும்.

  • பிறகு, மீல் மேக்கர், கடலைப் பருப்பு, உப்பு, பிரெட் ஸ்லைஸ், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி, மிக்சியில் அரைக்கவும்.

  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அரைத்த கலவையை கிள்ளிப் போட சூடான, சுவையான மீல் மேக்கர் பக்கோடா ரெடி.
Note : பொரிக்கும்போது அதிக தீயில் பொரிக்க வேண்டாம். மேல்பாகம் சிவந்து விடும். ஆனால் உள்வரை வேகாது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



3 comments:

ADITYAGOVINDAN said...

endha

ADITYAGOVINDAN said...

cly; MNuhf;fpakhf ,Uf;f lhf;luplk; NghfNt Njitapy;iy
mg;gbg;gl;l rpj;ju; %ypif ufrpak; vy;yhtpjkd Neha;fSk; cq;fs; cliy neUq;fhJ
fhR ntWk; 100 &gha; jhd;

Kolipaiyan said...

Welcome ADITYAGOVINDAN

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top