வழுக்கையை சரிப்படுத்த சில வழிமுறைகள்!

வழுக்கை விழுதல் என்பது தற்போது ஆண்களுக்கு பெரும் பிரச்சனையாக முளைத்துள்ளது.

ஒரு காலத்தில் வழுக்கை பற்றி கவலையில்லாமல் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்தனர். தற்போது உலக அழகுக்கலை பற்றியும் அழகு சாதனப் பொருட்கள் பற்றியும், உடல் அழகை, முக அழகை, சிகை அலங்காரத்தை அருமையாக பேணிக் காப்பது எப்படி போன்ற சொல்லாடல்கள் பெருத்துவிட்டதால் வழுக்கை விழுதல் என்பது ஒரு கேலிக்குரியதாக மாறிவிட்டது.

மனித வாழ்வில் காலப் போக்கில் பல மாற்றங்கள் ஏற்படுவது போல்தான் வழுக்கை விழுவதும். முடி இருந்தால் அழகு, வழுக்கை விழுந்தால் அழகற்றது என்பதற்கு சாராம்சமான பின்னணி ஏதுமில்லை. இது பார்ப்பவர்களின் மனத்தளவில் ஏற்படும் ஒரு தேவையற்ற உணர்வே.
வழுக்கையை சரிப்படுத்த சில வழிமுறைகள்:
  • கூந்தல் மிக அதிகமாக உதிரும்போது, வெந்தயக்கீரையை அரைத்துத் தலையில் தடவிக் கொண்டு கொஞ்ச நேரம் கழித்துக் கூந்தலைத் தண்ணீரால் அலசினால் முடி உதிருவது நிற்கும்.

  • ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் ஒரு முட்டையை நன்கு கலக்கி அதை தலையில் தேய்த்துக்கொண்டு அரை மணிநேரம் ஊறவிடவும். பிறகு குளிர்ந்த இருந்த நீரில் தலையை நன்றாக அலசி ஷாம்பூ போட்டுக் குளிக்கவும். இதனால் தலைமுடிக்கு நல்ல ஊட்டம் கிடைப்பதுடன் கூந்தல் மிருதுவாகவும் ஆகும்.

  • தேநீர் வடிகட்டிய பின் மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்துவிட்டு தலையில் தேய்த்துக் குளித்தால் தலைமுடி பளபளப்படையும். 10-15 செம்பருத்தி இலைகளைப் பறித்து அம்மியில் வைத்து விழுதாக அரைத்து ஓரே ஒரு மேசைக் கரண்டி சீய்க்காய்த்தூளைக் கலந்து நீராடினால் தலைமுடி பளபளக்கும்.

  • இளநரை வராமல் தடுக்க மருதாணித் தைலம், அரைகீரைத் தைலம், பொன்னங்கண்ணி தைலம், கரிசாலங்கண்ணி தைலம், செய்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தரும்.

  • கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறு துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வர வழுக்கை மறையும்
முடி உதிர்வது மற்றும் நரை போக்க:
  1. வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

  2. வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

  3. சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
    போதும் இளநரை மாயமாகிவிடும்.

  4. சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

  5. கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.
என்ன செலவானாலும் வழுக்கை தற்போது ஒரு மிகப்பெரிய பிரச்சனையல்ல, எனினும் உணவு முறை, கவலைப்படாமல் இருத்தல், நல்ல தூக்கம் இதோடு உங்கள் முடி ஆரோக்யத்தை அவ்வவ்போது பரிசோதனை செய்ய சரும நோய் நிபுணரை அணுகுதல் போன்றவற்றால் வழுக்கையிலிருந்து தப்பிக்கலாம்.
வழுக்கை நீங்கி முடி வளர ...

அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



3 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எனக்கு இப்பத்தான் ஆரம்பிக்கிறது...

உஷாரா இருக்க வேண்டியதுதான் போல...

Kolipaiyan said...

வருகைக்கு நன்றி! கவிதை வீதி....உஷார்...!!!

விழித்துக்கொள் said...

padhivu nandru
nandri surendran
surendranath1973@gmail.com

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top